Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 112

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தங்களுடைய வீட்டிற்கு வந்ததும், தான் பயிற்சி அளிக்கும் பெண்கள், தனது நிச்சயத்திற்கு வரப் போகிறார்கள் என்பதால், அவர்களுக்குப் பரிசுப் பொருளாகத் தருவதற்கான மெழுகுவர்த்திகளை அப்போதிருந்தே செய்யத் தொடங்கி விட்டாள் ருத்ராக்ஷி.

ஒரே மாதிரியான வடிவமைப்புகளைக் கொண்டிராமல், வெவ்வேறு விதமான வடிவமைப்புகள், நிறங்கள் மற்றும் வாசனைகளைக் கொண்ட மெழுகுவர்த்திகளைச் செய்யத் திட்டமிட்டு வேலையைச் செய்ய ஆரம்பித்தாள்.

அதற்குரிய பொருட்களை எல்லாம் எப்பொழுதோ தங்கையின் அறையில் கொண்டு வந்து சேர்ந்திருந்தான் காஷ்மீரன்.

இங்கு வந்ததில் இருந்து, தாங்கள் மூவரும் வேலைக்குப் போவது அவளுக்குப் பிடித்தமில்லை என்றால் சொல்லி விடுமாறு அவளிடம் கேட்டதும்,”அப்படியெல்லாம் நான் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன். நீங்க மூனு பேரும் அவங்கவங்க வேலைக்குப் போயிட்டு வாங்க. நானும் அதுக்குள்ளே எல்லா கேன்டில்ஸ்ஸையும் செஞ்சு முடிச்சிடுவேன்” என்று அவர்களுக்கு அனுமதி அளித்து அனுப்பி வைத்தாள் ருத்ராக்ஷி.

அவர்களும் மகிழ்ச்சியாக தங்களது வேலைக்குச் சென்று விட்டு மாலை விரைவாகவே வீட்டிற்கு வந்து விடுவார்கள்.

அவர்களில், ஒரு படி மேலே போய், தனது நாத்தனாருக்கு உதவியாக இருக்கத் தொடங்கி விட்டாள் மஹாபத்ரா.

அவளுக்கும் ஒரு சிலதை சொல்லிக் கொடுத்துக் கொண்டே மெழுகுவர்த்திகளைச் செய்வது ருத்ராக்ஷியின் அன்றாட வேலைகளில் ஒன்றாகி விட்டது.

அவ்வப்போது, கனகரூபிணியும், பிரியரஞ்சனும் அவர்களது நலனை விசாரித்துக் கொள்வார்கள்.

“எனக்கும், எங்கம்மாவுக்கும் இதில் ஏதாவது ஒன்னு தருவியா?” என்று தன்னிடம் வினவிய அண்ணியைப் புன்னகையுடன் பார்த்து விட்டு,

“உங்க ரெண்டு பேருக்கும் நான் கண்டிப்பாக செஞ்சுத் தருவேன் அண்ணி. அது ரொம்பவே ஸ்பெஷலாகத் தான் இருக்கும்” என்று அவளுக்கு உறுதி அளித்தாள் ருத்ராக்ஷி.

“தாங்க்ஸ் ம்மா” என்றவாறே, குதூகலத்துடன் அவள் சொன்ன வேலையைச் செய்தாள் மஹாபத்ரா.

தனது நிச்சயத்தார்த்தம் நெருங்கும் தருவாயில் இருக்கும் போது, தன் அறையில் தனித்திருந்தவளோ,

மனதிற்குள்,’ம்மா! நீங்க என்னைத் தப்பாக நினைச்சிட மாட்டீங்களே?’ என்று கேட்டுக் கொண்டிருந்தாள் ருத்ராக்ஷி.

ஏனெனில், நீலாம்பரியின் நினைவுகள் தன்னை வருத்துகிறது என்ற காரணத்தால் தான் இந்த வாழ்க்கையை விட்டும், ஊரை விட்டும் சென்றிருந்தாள் ருத்ராக்ஷி.

ஆனால், தன் அன்னையை வெறுத்து ஒதுக்கிச் சென்று விட்டோமோ? என்ற ஐயம் அவளுக்கே வந்து விட்டிருந்தது.

அதனால் தான், இவ்வாறு ஒரு கேள்வியை பல வருடங்களுக்கு முன்பு இறந்து போன தன் அன்னையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

அவர் எவ்வாறு பதில் சொல்ல முடியும்? ஆனாலும், தனக்குள் அந்தக் கேள்வி எழும்பி விட்டதே? எனவே, அதற்கானப் பதிலைக் கேட்டுத் தெரிந்து கொள்ள தன் தந்தையை நாடிச் சென்று,

“ப்பா!” என்றழைத்ததும், அவளது குரலில் தெரிந்த மாற்றத்தால் திடுக்கிட்டுப் போனவரோ,”என்னாச்சு ம்மா?” என்று அவளிடம் கனிவாய் வினவினார் சந்திரதேவ்.

அவர் அப்படிக் கேட்டதும், எதுவும் கூறாமல் அவரிடம் சென்று தந்தையின் தோள்களில் புதைந்து கொண்டாள் ருத்ராக்ஷி.

அதில் பதறிப் போன அவளது தந்தையோ,”என்னடா ம்மா ஆச்சு? ஏதாவது சொன்னால் தானே தெரியும்?” என்று அவளது சிகையைக் கோதி விட்டுக் கொண்டே கேட்டார் சந்திரதேவ்.

“நான் கேட்கிறதுக்கு நீங்க கண்டிப்பாகப் பதில் சொல்வீங்களா ப்பா?” என்று அவரிடம் பாவமாக வினவினாள் அவரது மகள்.

“ஏன்டா ம்மா? அப்படி என்னக் கேட்கப் போற?” என்று கேட்டவரோ, தனது பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டார்.

உடனே தன் மனதிலிருந்ததை அட்சரம் பிசகாமல் அவரிடம் கூறி விட்டுப் பதிலிற்காக காத்திருந்தாள் ருத்ராக்ஷி.

உடனே நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட அவளது தந்தையானவரோ,”எதுக்கு ம்மா இப்படி கேட்கிற? யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று அவளிடம் வினவவும்,

“ம்ஹூம்! இல்லை ப்பா. எனக்குத் தான் இது தோனுச்சு. அதான், உங்ககிட்ட கேட்டுத் தெளிவாகிக்க வந்தேன்” என்று அவருக்கு விளக்கிக் கூறினாள்.

“நீ உங்க அம்மா இருந்த வீட்டில் இருக்கப் பிடிக்கலைன்னு இந்த ஊரை விட்டுப் போகலையே? இங்கே இருந்தால் அவங்களோட நினைவுகள் வந்துட்டே இருக்கும். அதனால், அவங்களை ரொம்ப மிஸ் பண்ணுவன்னு தானே கிளம்பிப் போன? அப்படியிருக்கும் போது, தன்னோட சொந்த ரத்தத்தைப் பத்தி உன்னோட அம்மா எப்படி தப்பாக நினைப்பாங்க?” என்றார் சந்திரதேவ்.

அவர் கூறியது, அவளுக்கு நம்பத் தகுந்தப் பதிலாகத் தான் இருந்தது.

ஆனாலும்,”அப்போ அப்படி போயிட்டு இப்போ மட்டும் என்னோட கல்யாணத்துக்காக இங்கே வந்து தங்குறது தப்பு தானே ப்பா? அதுக்கு என்னை அம்மா மன்னிப்பாங்களா?” என்று மேலும் ஒரு கேள்வியைக் கேட்ட மகளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்து விட்டு,”அது எப்படி தப்பாகும் டா?” என்று மகளிடம் கேட்டார் சந்திரதேவ்.

“எனக்கு அப்படி தோனுதே ப்பா?” என்று தன்னிடம் பரிதாபமாக கேட்டவளை, வேதனை மிகுந்தப் பார்வையுடன் ஏறிட்டு,”ஏன் உனக்கு இப்படியெல்லாம் தோனுது ம்மா? இன்னும் கொஞ்ச நாளில் உன்னோட நிச்சயம் நடக்கப் போகுது. அதுக்குள்ளே இப்படி குழப்பமாக இருக்கியே?” என்று அவளிடம் விசாரிக்கவும்,

“தெரியலை ப்பா. இப்போ எல்லாம் அம்மாவோட ஞாபகம் வர்றதை விடக் குற்ற உணர்ச்சி தான் எனக்கு அதிகமாக வருது” என்று அவரிடம் சொன்னாள் ருத்ராக்ஷி.

“ஒன்னும் இல்லைடா. அது ஏன்னு நான் சொல்லவா?” என்று மகளிடம் கேட்க,

“சொல்லுங்க ப்பா” என்றாள் அவரது மகள்.

“அந்த ஊருக்கப் போனதுக்கு அப்பறம் நீ எப்பவும் இங்கே வந்தால் உடனே கிளம்பி போய்டுவ! நீ இந்த வீட்டில் அதிக நாள் இருந்ததே காஷ்மீரனோட கல்யாணத்தப்போ தான்! ஆனால், உன் கல்யாணம்ன்னு வரும் போது நீ இங்கே நிறைய நாள் இருக்க வேண்டி வந்திருக்கு. அது உனக்குப் புதுசா இருக்கு. அதான் டா! அதைத் தவிர வேற ஒன்னுமே இல்லை” என்று கூறி அவளைச் சமாதானம் செய்தார் சந்திரதேவ்.

“ம்ம். சரிப்பா” என்றவளுடைய மனம் சற்றே அமைதி அடைந்தது.

அவரது தோளிலேயே சிறிது நேரத்திற்குச் சாய்ந்து கொண்டாள் ருத்ராக்ஷி.

அந்த நேரத்தில், அங்கே வந்த காஷ்மீரனும், மஹாபத்ராவும்,”என்ன ரெண்டு பேரும் எமோஷனல் ஆக இருக்கிற மாதிரி தெரியுதே!” என்று அவர்கள் இருவரிடமும் வினவினர்.

அவர்கள் கேட்டதும், கொஞ்ச நேரத்திற்கு முன்பாக, தானும், தந்தையும் பேசிக் கொண்ட அனைத்தையும் அவர்களிடம் மறைக்காமல் பகிர்ந்து கொண்டாள் ருத்ராக்ஷி.

இனிமேல் அந்தக் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் எதையும் மறைத்து வைத்துப் பேச வேண்டாம் என்ற உறுதியில் தான், தன் அண்ணன் மற்றும் அண்ணியிடம் இதைச் சொன்னாள்.

அவர்களும் கூட, அவளுக்குத் தேவையான புத்திமதிகளைச் சரியாக வழங்கி விட்டனர்.

அதன் பிறகான நாட்களில்,“பியூட்டீஷியன் கிட்டே பேசிடலாமா?” என்று தன் நாத்தனாரிடம் கேட்டாள் மஹாபத்ரா.

தன்னுடைய திருமணத்தின் போதே முகம் மற்றும் இதர அலங்காரங்களை ஒதுக்கி விட்டாளே! இப்போதும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விடுவாள் என்ற ஐயத்தினால் தான், அவளிடம் இப்படி வினவி இருந்தாள்.

“அது வந்து…” என்று ஆரம்பித்தவளை, இடைமறித்து,”நீ எந்த அலங்காரமும் வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு எனக்குப் பக்குன்னு இருக்கப் போய்த் தான், நானே உங்கிட்ட இதைக் கேட்டுட்டேன். இனிமேலும், எதுவும் வேண்டாம்னு சொல்லிடாதே!” என்று அவளிடம் கெஞ்சினாள் மஹாபத்ரா.

“அண்ணி!” என்று சினுங்கத் தொடங்கியவளைக் கையமர்த்தி விட்டு,”மூச்! நீ எதுவும் பேசக் கூடாது! இதில் உனக்கு ஏதாவது ஐடியா இருந்தால் கேட்கலாம்ன்னு தான் வந்தேன். ஆனால் உனக்கு ஆர்வமே இல்லைன்னுக் கன்ஃபார்ம் ஆகிடுச்சு. சோ, இதையெல்லாம் நானே பார்க்கிறேன். நீ எனக்காக எதுக்கும் நோ சொல்லாம் இருந்தால் போதும்” என்று அவளிடம் தீர்க்கமாக உரைத்து விட்டுப் போய் விட்டாள் அவளது அண்ணி.

தனது தங்கையின் நிச்சயத்திற்காக அத்தனையையும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டு இருந்த தன்னுடைய மனைவியைப் பார்த்துப் பெருமை அடைந்து,

அதற்கு நன்றி தெரிவிக்கும் சாக்கில், அவ்வப்போது அவளைத் தன் காதலால் திக்குமுக்காட வைத்து விட்டான் காஷ்மீரன்.

அதோ, இதோவென்று அனைவரும் எதிர்பார்த்திருந்த ருத்ராக்ஷி மற்றும் ஸ்வரூபனின் நிச்சய வைபவம் நடைபெறுவதற்கான நாளும் நெருங்கி விட்டிருந்தது.

- தொடரும்

நாளை யூடி
போட முடியாத சூழ்நிலை ஃப்ரண்ட்ஸ். திங்கட்கிழமையில் இருந்து தினமும் தவறாமல் அப்டேட் வந்துரும்.
 
அடடா நிச்சயதார்த்தத்துக்கு இடைவெளியாமா🤷‍♀️ கண்டிப்பாக நிச்சயதார்த்தத்த மெனுவ சொல்லீருங்க. Function க்கு வரமுடியலைனாலும். பந்தியில் வச்சது மாதிரி சமைத்து சாப்பிடுவோம்.🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
 
அடடா நிச்சயதார்த்தத்துக்கு இடைவெளியாமா🤷‍♀️ கண்டிப்பாக நிச்சயதார்த்தத்த மெனுவ சொல்லீருங்க. Function க்கு வரமுடியலைனாலும். பந்தியில் வச்சது மாதிரி சமைத்து சாப்பிடுவோம்.🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
Nalaiku kandipa solidre sis. Thank you so much ❤️
 
Top