Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 17

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. ஆனாலும் கமலி வாய் திறக்கவில்லை. வனமாலியோடு பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டாள். அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவள் இருப்பதில்லை. இரவில் அவன் வரும் நேரம் ஒன்று உறங்கிப் போகிறாள் இல்லையோ வேலை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறாள்.

வந்தனா மறுநாளே கேட்டாள் ‘கொடைக்காணல் போகலையா...’ என்று,

சாப்பிடும்போது தான் கேட்டாள், மணிராதாவும் அங்கேதான் இருந்தார், அவரும் ‘அதானே..’ என்று பார்க்க,

கமலியோ பதிலே சொல்லவில்லை. வனமாலியோ அவனின் அம்மாவை பார்த்தவன், பின் வந்தனாவிடம் “அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல்..” என்றான் கடுப்பாய்..

“ஏன்?? என்னாச்சு?? நேத்து தானே கமலி சொன்னா..” என்று வந்தனா கமலியைப் பார்க்க,

கமலியோ “போகலை வந்தனா..” என்றவள் “நாளைக்கு புதன் கிழமை உங்க இன்விடேசன் வந்திடும்..” என்றுமட்டும் பொதுவாய் சொல்லிவிட்டு அச்சகம் கிளம்பிட,

‘என்னாச்சு இவளுக்கு..’ என்றுதான் பார்த்தாள் வந்தனா..

இத்தனை நாள் நன்றாகத்தானே பேசுவாள். பொதுவாய் மணிராதாவிற்கும் கமலிக்கும் எந்த பேச்சுமே இருக்காது. உன்னை நான் கண்டுகொள்ளவில்லை என்கிற ரீதியில் தான் இருவருமே இருப்பர். வீட்டினரும் இருவரையுமே மாற்ற முயற்சிக்கவில்லை. மாற்றம் என்பது தானாகவே வரவேண்டும்.

ஆக, சரி பமீலா தான் முரண்டு பிடித்து இப்படி அனைவரையும் படுத்துகிறாள் என்று பார்த்தால், இப்போது கமலி முகம் தூக்கி இருப்பது என்னவோ போல் இருந்தது.

வனமாலியோ ‘நான் இப்போ எதுவும் பேசலை..’ என்பதுபோல் இருக்க,

வந்தனாவோ சரி இருவருக்கும் என்னவோ பிரச்சனை போல, சரியானதும் கிளம்புவர் என்று எண்ணியிருந்த அடுத்து வந்த நாட்களும் அப்படியே தான் இருந்தனர். சிவகாமியும் மகளிடம் கேட்டார் தான்.

‘என்ன அவ்வளோ சந்தோசமா வந்து சொல்லிட்டு போன..’ என்று.

கமலி நிஜமாகவே அப்போது சந்தோசமாகத்தானே இருந்தாள், வீட்டிற்கு வந்தும்கூட மகிழ்வுடன் தானே அனைத்தும் எடுத்துவைத்தாள். ஆனால் அவளும் நினைக்காத ஒரு விஷயம் நடக்கவும்தான் இப்படி பழைய படி தன்னை தன்னுள்ளே இறுக்கிக்கொண்டாள்.

ஆம், பழையபடி யாரோடும் அளவோடு வைத்துகொள்ள, வனமாலியோடு முற்றிலும் அனைத்தையும் தவிர்த்தாள். பேசுவது பார்ப்பது என்று அனைத்தையும்..

சிவகாமியிடம் கூட “கல்யாண வேலை இருக்கே..” என்றுவிட்டாள்.

மறந்தும் கூட தன் மனதில் இருக்கும் காரணத்தை சொல்லவில்லை. முன் எப்படியோ இப்போதும் வனமாலியை அவளின் அம்மாவிடம் சொல்லும் எண்ணம் வரவில்லை.. அதன் காரணம் அப்போதும் புரியவில்லை. ஆனால் இப்போது புரிந்தது. கணவன் என்றாலும், அதற்கு முன்னேயே எதோ ஒரு வகையில் அவனின்பால் அவளுக்கு இருந்த சலனம் என்று.

இல்லை என்று மறுத்தாலும் நம் மனதிற்கு அவ்வுண்மை தெரியுமே.. ஆனால் இப்போதோ திருமணத்திற்கு பின்னே கமலி அதனை தனக்கு தானே ஒத்துக்கொண்டாள்.

‘ஆமா.. இப்போ என்ன பிடிச்சிருக்கு..’ என்று.

மணிராதாவின் மகனாய் காணாது வனமாலி என்ற தனி மனிதானாய் அவனை நிரம்பவே பிடித்தது. அதிலும் கோவர்த்தனை அழைத்து ‘இப்போ நீ பமீலாவோட இருக்கணும்..’ என்று சொல்கையில், இவன் எந்நிலையிலும் என்னை விட்டுக்கொடுத்திட மாட்டான் என்ற எண்ணம் அவளுள் ஊர்ஜிதமே ஆனது..

ஆனால் அந்தோ பரிதாபம், வனமாலி கமலி இருவருக்கும் இடையில் இருந்த அந்த அழகான உணர்வை மணிராதாவின் வார்தைகள் இருந்த இடம் தெரியாமல் துடைத்து எறிந்துவிட, வனமாலி என்ன செய்வது என்று திகைக்க, கமலியோ மீண்டும் தனக்குள்ளே சுருங்கிப்போனாள்..

வனமாலியும் எத்தனை எடுத்து சொல்லிப் பார்த்தான், ம்ம்ஹும் கமலி கேட்பதாகவே இல்லை.

“எனக்கு அவங்களை சம்மதிக்க வைக்க வேற வழி தெரியலை கமலி..” என்று வனமாலி தொய்ந்து போய் சொல்ல,

“ஏன்.. அவ்வளோ அவசரம் ஏன்.. ஒரே வாரத்துல கல்யாணம் செய்யனுங்கற அளவுக்கு.. அவ்வளோ சீக்கிரம் உங்கம்மா செஞ்ச பாவத்தை கழுவ நினைசீங்களா...” என்று முறைத்து கேட்க,

“கமலி..!!!” கத்தியேவிட்டான் வனமாலி.

அவனுக்கு அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.. தங்களை சுற்றி யாருமில்லை என்றெண்ணியே இருவரும் பேசியது இப்படி. ஆனால் வீட்டினில் இருந்த வந்தனாவின் கண்களில் இது பட்டுவிட,

‘ஐயோ இதென்ன பேச்சு..’ என்று அவளும் கொஞ்சம் திகைத்துத்தான் போனாள்.

கமலியோ “என் முன்னாடியே வராதீங்க... உங்கள கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்னோட பொறுப்பு என்னன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க.. சோ அதை நான் சரியா செய்வேன்..” என்றுவிட்டு கிளம்பிட,

வனமாலி தோய்ந்து போய் அங்கே இருந்த இருக்கையில் அமர, வந்தனா வேகமாய் வந்தவள் “என்னண்ணா?? என்னதான் நடக்குது..” என்றாள் சங்கடமாய்..

வந்தனாவை ஒரு அடிப்பட்ட பார்வை பார்க்க, எப்போதுமே வனமாலி முகத்தில் தோன்றியிராதா இப்படியான ஒரு பாவனையில் வந்தனா இன்னும் திடுக்கிட்டுப் போனாள்.

“என்னண்ணா...??!!!”

“ம்ம்ச் ஒண்ணுமில்ல வந்தனா...” என்றவனிடம் “என்னண்ணா பொண்டாட்டி வரவும் தங்க்சிக்கிட்ட எதுவும் ஷேர் பண்ணக்கூடாதா??” என்று வந்தனா கிண்டலாய் கேட்டாலும் அவள் முகத்தில் தெரிந்த வருத்தம் கண்டு,

“ஹேய்.. அதெல்லாம் இல்லை..” என்றவன், நடந்தவைகளை சுருக்கமாய் சொல்ல,

“கடவுளே இந்த அம்மாவை என்னன்னு சொல்றது..” என்று தலையில் கை வைத்துக்கொண்டாள்.

“அம்மாவும் அப்போ பர்பஸா சொல்லலை.. பட் அப்படியே பேசிட்டாங்க..”

“ம்ம்ம் கமலிக்கு இதை கேட்கிறப்போ எப்படியிருக்கும்..”

“ரொம்ப ஹர்ட் ஆகிட்டா வந்தனா.. அவ அப்படி வருந்தி பேசி நான் பார்த்ததில்லை அதான் சங்கடமா இருக்கு..” என்றவன்,

“விடு... சிலது எல்லாம் தானா சரியாகணும்...” என்றவனும் தியேட்டர் கிளம்பிட,

“நான் பேசவா???” என்றாள் பின்னோடு வந்து,

“வேணாம்.. எல்லாமே சட்டுன்னு நடக்காது..” என்றவன் சென்றுவிட, அப்போது தான் மணிராதா வீட்டிற்குள் வந்தார்.

அங்கே இந்திராவையும் பமீலாவையும் பார்க்கச் சென்றிருந்தவர், வர, வனமாலி அவரைத் தாண்டி ஒன்றும் பேசாது கிளம்பிச் செல்ல,

“என்னாச்சு இவனுக்கு??!!” என்றார் மகளிடம்..
 
“இன்னும் என்னாகனும்??”

“என்ன வந்தனா..??” என்றவர் கமலி இருக்கிறாளா என்று ஒருமுறை பார்க்க, அவள் இல்லை எனவும்,

“எங்க போயிட்டா அவ?? அதுக்குள்ள கிளம்பியாச்சா?? என்ன தான் பழக்கமோ.. நானும் பார்த்துட்டு இருக்கேன் அவனை கண்டுக்காம இருக்கா..” என்று மணிராதா நடந்தது எதுவும் தெரியாது பேச,

“ம்மா செய்றது எல்லாம் செஞ்சிட்டு இதென்ன பேச்சு??” என்றாள் வந்தனா கொஞ்சம் கோபமாவே..

“ஏய் நான் என்ன செஞ்சேன்...”

“என்ன செய்யலை...??” என்றவள் “என்ன இப்போ என்ன ப்ளான் போட்டுட்டு வர..” என,

“இங்க பார் வந்தனா.. நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்.. எனக்கு இப்போ உன்னோட கல்யாணம் நல்லபடியா இருக்கணும் உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கனும் அதுமட்டும் தான்..” என்று அவரும் சொல்ல,

“அப்போ அண்ணன் வாழ்க்கை எப்படி போனாலும் உனக்கு எதுவுமில்லை..” என்ற மகளை முறைத்தார்.

“என்ன பாக்குற..” என்றவள், அவர் செய்ததையும் அதற்கு கமலியி பிரதிபலிப்பையும் சொல்லி இருவரின் பிணக்கையும் சொல்ல,

‘ஓ...!!!!’ என்றவர் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை..

“என்னம்மா அமைதியாகிட்ட..??”

“நான் ஒன்னும் இல்லாததை சொல்லலை.. நடந்ததை தானே சொன்னேன்.. அதை அவ தப்பா எடுத்தா நான் என்ன செய்ய??” என்று மிடுக்காய் மொழிந்தவர்,

“அவளும் அவ அம்மா மாதிரிதானே இருப்பா..” என,

“ம்மா போதும் நிறுத்து..” என்று கத்திவிட்டாள் வந்தனா..

“இப்படிதானே பேசாதன்னு சொல்றேன்.. இங்க பார் நல்லா கேட்டுக்கோ நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது.. இந்த சொத்து பிரச்சனை உயில் பிரச்சனை எல்லாம் என் கல்யாணத்துகுள்ள நீ பேசி முடிக்கிற.. ஆளாளுக்கு முகம் தூக்கிட்டு ஒவ்வொரு இடத்துல இருக்கிறது நல்லவா இருக்கு.. இப்படியே போச்சுன்னா கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் நான் இங்க வர மாட்டேன்..”

“வந்தனா...!!!”

“சும்மா கத்தாதம்மா.. அண்ணன் எவ்வளோதான் செய்யும். எவ்வளோதான் பாக்கும்... ஏன் அது சந்தோசமா இருந்தா தப்பா?? உனக்கு அது பொறுக்கலையா.. நீ பண்ண எல்லாத்துக்கும் இப்போ அண்ணன் தான் அவஸ்தைப்படுது”

“போதும் நிறுத்து டி.. நான் ஒன்னும் வேணும்னே சொல்லலை.. கல்யாண வேலை வச்சிட்டு இப்போ ஏன் கொடைக்காணல் போகணும்னு தான் ஆரம்பிச்சேன்.. சும்மா சும்மா என்னையே சொல்றீங்க எல்லாம்.. அந்த பமீலா என்னடான்னா அப்படி பேசுறா.. இப்போ நீயும் இப்படி பேசற..” என்று மணிராதா கத்த,

‘நீ திருந்தவே மாட்ட..’ என்று வந்தனா பார்த்துவிட்டு அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்..

“ஏய் நில்லு டி..” என்று மணிராதா சொல்லியும் அவள் நிற்கவில்லை.

அவருக்கோ அப்படியொரு கோபம் இப்போது.. ‘ச்சே எல்லாம் சேர்ந்து என்னையே சொல்லுதுங்க..’ என்று கடிந்தவருக்கு பமீலாவின் வார்த்தைகளும் நினைவில் வந்து தொல்லை செய்தது..

“உங்களுக்கு அவங்களை பிடிக்கலை அதனால ஒதுக்கி வச்சீங்க சரி.. ஆனா நானும் என் அம்மாவும் என்ன செஞ்சோம்.. இன்னிக்கு உங்க பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு மட்டும் எல்லாத்தையும் அனுசரிச்சு போக முடியுதோ..” என்று கேட்டேவிட்டாள்..

மத்தளத்திற்கு இரு பக்கம் அடி. மணிராதாவிற்கோ அனைத்துப் பக்கமும் அடி. கோவர்த்தனோ அவரோடு முகம் கொடுத்தே பேசுவதில்லை. வனமாலியும் இப்போது அப்படித்தான்.. வந்தனா இதோ இப்படி சொல்லி சென்றுவிட்டாள்.. எப்போதும் இவரின் பின்னேயே இருக்கும் இந்திராவும் பமீலாவும் இப்போது என்னென்னவோ பேசுகிறார்கள்.. கமலியோ நீயெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல் இருக்கிறாள்.. சிவகாமியோ எப்போதுமே அப்படித்தான்..

ஆகமொத்தம் மணிராதாவிற்கு இப்போது சிந்தித்துப் பார்க்கையில் தான் தான் அனைவரில் இருந்தும் ஒதுங்கி தனித்து நிற்ப்பதாய் தோன்றியது. அன்று தான் சிவகாமிக்கு செய்த எல்லாமே எதோ ஒரு வகையில் இப்போது தன்னை அப்படி நிற்க வைக்கிறது என்றும் உணர்த்தியது.

ஆனாலும் அவரின் அந்த வீம்பான குணம்.. மாறுமா என்ன?? மனம் உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டும் எண்ணம் வருமா என்ன??
 
‘நான் என்ன செஞ்சிட்டேன்..’ என்று இன்னமும் அதே பிடியில் நின்றார்..

நரசிம்மனோ வனமாலிக்கு திரும்ப அழைக்க, அவன் அப்போது பார்த்து வந்த அழைப்பை ஏற்காது வேறு வேலையாய் இருக்க, இப்போது அவரோ கமலிக்கு அழைத்தார்.

“சொல்லுங்க சித்தப்பா..” என்ற கமலிக்கு அவர் எதற்கு அழைத்திருப்பார் என்று புரிந்தது..

“வனாக்கிட்ட அன்னிக்கு பேசினேன் ம்மா.. உனக்கிட்ட சொன்னானா..” என்று அவர் கேட்டதும் இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘இவர் எப்போ பேசிருப்பார்..’ என்றெண்ணியவள் “ஆ.. அது அது வந்து சொன்னார் சித்தப்பா..” என்று தயங்கி இழுக்க,

“நல்லதும்மா என்ன முடிவு பண்ணிருக்கீங்க..??” என்றார் அவரும்..

கமலிக்கோ என்ன பதில் சொல்வது என்பதே தெரியவில்லை. வனமாலியிடம் இவர் என்ன கேட்டார் என்பதே தெரியாதபோது இவள் என்ன பதில் சொல்லிட முடியும்.

“அது... அவரே சொல்றேன் சொன்னாரே சித்தப்பா.. வந்தனா மேரேஜ் வொர்க்ல பிசி.. அதான்..” என்றவள் மேற்கொண்டு அவர் பேச இடம் கொடாமல் “நான் அவரை கால் பண்ண சொல்றேன்...” என்றதும் “சரிம்மா ..” என்று அவரும் வைத்துவிட, அடுத்தநொடி வனமாலிக்குத்தான் அழைத்தாள்.

‘என்ன நினைச்சிட்டு இருக்கான்...’ என்ற எண்ணத்தில் தான் அழைத்தாள், அவனோ அப்போதும் எடுக்காது போக, சிறிது நேரத்தில் அவனே அழைத்துவிட்டான்.

“சொல்லு கமலி..” என, கொஞ்சம்கூட அவனின் குரலில் எவ்வித உணர்வுகளும் வெளிப்படவில்லை.

“நரசிம்மன் சித்தப்பா கால் பண்ணார்..” என்றுமட்டும் இவள் மொட்டையாக சொல்ல,

“ஓ..!!” என்றவன் “உனக்கு வேணும்னா நீ பேப்பர் மில் வாங்கிக்கோ..” என்றான் ஒரு வெற்று குரலில்.

என்னதான் அவன்மீது கோபம் இருந்தாலும், கமலிக்கு வனமாலியின் இந்த உணர்வற்ற தன்மை என்னவோ செய்தது நிஜம். அதிலும் அவன் நீ வங்கிக்கோ என்று சொன்னது ரொம்பவும் என்னவோ செய்ய, “என்ன விட்டு கொடுக்கிறதா நினைப்பா??!!” என்றாள் கொஞ்சம் கடுப்பாகவே..

“நான் அப்படி சொல்லலை.. எனக்கு இப்போ எதுவும் வாங்கனும்னு ஆசை இல்லை கமலி.. உனக்கு வேணும்னா நீ வாங்கிக்கோ.. அவ்வளோதான்...”

“ஓ..!!!”

“வேறெதுவும் சொல்லணுமா???”

‘என்னடா இது.. நான் சொல்ல வேண்டியதை இவன் சொல்றான்..’ என்று எண்ணியவள் “எனக்கும் வேணாம்.. நீங்க சொல்லி ஒன்னும் நான் வாங்கவேண்டியது இல்லை. எனக்கு இன்ட்ரெஸ்ட் போச்சு..” என்றாள் அவளும் இவனைப் போலவே..

“ஓகே கமலி.. உன் விருப்பம்..” என்றவன் போனை வைத்துவிட, இவளோ ‘என்னாச்சு இவருக்கு..’ என்றுதான் பார்த்தாள்.

‘பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ இப்படி இருந்தா என்ன அர்த்தம்..’ என்று யோசித்தவள் திரும்ப அவனுக்கு அழைக்க, “என்ன கமலி..” என்றான் ஒருவித தொய்ந்து போன குரலில்.. அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது அவனின் குரலில் இருந்த பேதம்..

‘என்னவோ சரியில்லை...’ என்று மனது சொன்னாலும் வேறெதுவும் பேசாது “எங்க இருக்கீங்க??” என்றாள்.

“ம்ம்ச் எதுக்கு கால் பண்ண??”

“பேசிட்டு இருக்கபோ வைச்சா என்னர்த்தம்.. கோவமா இருக்கவேண்டியது நான்.. நீங்கயில்லை..” என்றவள் “என்ன குடிச்சிருக்கீங்களா???” என்றாள் பட்டென்று.

அவனுக்கு அப்படியான பழக்கங்கள் எதுவுமில்லை என்று தெரியும். ஆனாலும் அவனின் குரலில் தெரிந்த பேதம் அவளை அப்படி கேட்க வைக்க, அவனோ “ம்ம்ம் அதான் செய்யணும்.. ரொம்ப ஒருமாதிரி இருக்கு..” என்றுவிட்டு திரும்ப வைத்துவிட்டான்..

கமலிக்கு ஒன்றுமே புரியவில்லை. எதுவும் விளங்கவில்லை.. அவன் பேசியது சொன்னது எதுவும். அவளை சமாதானம் செய்ய முயல்கிறான் தான். ஆனாலும் இது அவளுக்கு எப்படியோ இருக்க, கோவர்த்தனக்கு அழைத்து “என்னாச்சு அவருக்கு...” என்றாள் மொட்டையாக..

அவனோ “அது... எல்லாம் ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்..” என்றான் அவனுமே கொஞ்சம் ஒருமாதிரி.

கமலியோ வனமாலிக்குத்தான் என்னவோ ஏதோவென்று பதறி “அச்சோ..” என்று எழுந்துவிட, “இல்ல,, பமீலா...” என்றான் கோவர்த்தன்..

மனதில் ஒரு சிறு ஆசுவாதம் தோன்றினாலும், அவளுக்கு என்னானது என்ற கேள்வி வர “அவளுக்கு என்ன??” என்றாள்..

“ம்ம்ச் ஒரு சின்ன சண்டை.. பேசிட்டு இருக்கவோ கையை கட் பண்ணிட்டா...”

“என்னது..??!!”

“ஹ்ம்ம் ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்..”

“எந்த ஹாஸ்பிட்டல்...” என்று கேட்டவள், அவன் சொன்னதும் அடுத்த நொடி வேறெதுவும் யோசிக்காது கிளம்பிவிட்டாள்.. மனதில் அந்தநொடி வேறெதுவுமே தோன்றவில்லை. பமீலா.. சரியான முட்டாள் என்பதை தவிர..

‘ச்ச்சே என்ன பொண்ணு இவ..’ என்ற கோபம் இருந்தாலும், என்னவோ முன்னிருந்த அந்த வெறுப்பு என்பதும், ‘அவளுக்கு என்ன ஆனா எனக்கென்ன..’ என்ற எண்ணமும் இப்போதில்லை.. அது அன்றே, மாறிப்போனது. பமீலாவின் கண்களில் இவளைப் பார்த்ததும் முதலில் தோன்றி மறையும் அந்த பயம்,

பின் அதுவே கோபமாக மாறி, அவளையும் மீறி என்ன பேசுகிறோம் என்பதையும் உணராது கத்த வைக்கும் நிலை. இதெல்லாம் கமலிக்கு இப்போது தான் புரிந்தது. ஆக அவள் மனதில் என்னவோ ஒன்று ஆரம்பத்தில் இருந்தே போட்டு உறுத்திக்கொண்டு இருந்திருக்கிறது, இன்றென்னவோ அது ஒரு சிறு விசயத்தில் வெளிவந்து இப்படி செய்திருக்கிறாள் என்றே தோன்றியது கமலிக்கு.

அவள் மருத்துவமனை செல்லும்போதே, சிவகாமி அழைத்து “நீ எங்க இருக்க??” என்று கேட்க,

“ஹாஸ்பிட்டல் போறேன் மா..” என்றுசொல்லி விஷயம் சொல்ல,

“நல்லது நானும் அதுக்குதான் கூப்பிட்டேன்.. நீ போ நானும் வர்றேன்..” என்றவர் வைத்துவிட்டார்..

பிடித்தமோ இல்லையோ சில உறவுகளை, நாம் உறவுகள் என்று ஏற்காவிடினும், இல்லை நம்மை யாரும் ஏற்காவிடினும் கூட, இப்படியான சில தருணங்களில் சந்திக்க வேண்டியும் இருக்கிறது, சகித்துக்கொண்டு போகவேண்டியாதாகவும் இருக்கிறது.

கமலி மருத்துவமனை செல்ல, அங்கேயோ அனைவரும் இருக்க, இவள் வந்ததுமே அனைவருக்குமே ஆச்சர்யம்தான். கோவர்த்தன் கூட சொன்னான் ‘கமலி வருகிறாள்..’ என்று. ஆனால் மணிராதாவோ ‘அவ எங்க வரப்போறா..’ என்ற எண்ணத்தில் இருக்க, வனமாலி மனதளவில் மிக மிக காயம் பட்டுப் போனான்.

ஒரு விதத்தில் பமீலாவின் இந்த செயலுக்கு அவனும் காரணம்.. ஏற்கனவே கமலியின் மனதை நோகடிதுவிட்டேன் என்றிய வலி, இப்போது இதுவும் சேர்ந்து அவனுக்கு தன்னிலை மறந்து போனால் என்ன என்ற நிலையில் இருந்தான். கமலி கேட்கையில் அதனால் அப்படி சொல்ல, கமலியோ இங்கே வந்ததும்

கோவர்த்தனிடம் “டாக்டர் என்ன சொன்னாங்க.?” என்று கேட்க, “இன்னும் வெளிய வரலை..” என்றான் அவன்.

அடுத்து அவளின் பார்வை இந்திரா பக்கம்தான் சென்றது, மணிராதாவிற்கும், வந்தனாவிற்கும் இடையில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தார். பார்க்க பாவமாய்தான் இருந்தது.

‘இவர் கொஞ்சம் திடமாய் இருந்திருக்கக் கூடாதா?? முதுகெலும்பில்லாது இப்போது மகளையும் இந்நிலையில் நிறுத்தி..’ என்றுதான் நினைத்தாள். அவர்களிடம் செல்ல, இந்திராவோ இவளைப் பார்த்து ஒருமுறை திகைக்க, அவரையே ஒருநொடி பார்த்தவள், “சரியாகிடுவா..” என்றுமட்டும் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தாள்.

வனமாலி எங்கேயும் காணவில்லை. கண்கள் ஒருமுறை அந்த இடத்தையே அலசி ஆராய்ந்தது. ஆனாலும் அவன் எங்கேயும் இல்லை. வந்தனாவோ அவளின் பார்வை கண்டு,

“அண்ணா அந்த சைட் போய் உக்காந்து இருக்காங்க..” என்று சொல்ல,

‘எல்லாம் இங்க இருக்கப்போ இவங்க ஏன் தனியா போனாங்க..’ என்றெண்ணியவளின் கால்கள், வனமாலியை தேடி செல்ல, அவனோ இவர்கள் எல்லாம் இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி, ஒரு ஓரத்தில் ஜன்னல் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்..

அன்று கமலி எப்படி சிவகாமியை அட்மிட் செய்திருந்த போது, ஜன்னலில் கன்னம் பதித்து அமர்ந்திருந்தாளோ இன்று வனமாலி அதேபோலவே அமர்ந்திருக்க, அவனின் முகத்தினில் அப்படியொரு வலி, வேதனை ஒருவித கசங்கிய உணர்வு.

இதுநாள் வரைக்கும் வனமாலியை இப்படியான ஒரு தோற்றத்தில் கமலி அவனை பார்த்ததில்லை.. மனதில் கோபங்கள் இருந்தாலும், அதெல்லாம் தாண்டி வனமாலியை அப்படி பார்க்கையில் கமலிக்கு மனது என்னவோ செய்தது. அவளையும் மீறி அவனருகே சென்று அமர்ந்தவள், அவனின் கரங்களைப் பிடித்து,

“என்னங்க ஆச்சு??” என்று கேட்க, அவளின் தொடுகையில் திரும்பியவன், பற்றியிருந்த அவளின் கரங்களை இன்னொரு கரத்தினால் இறுகப் பிடித்துக்கொண்டான்.

“என்னங்க..??!!” என்றவள் அவனின் முகத்தினைப் பார்க்க,

“எனக்கு தெரியலை கமலி.. எனக்கு சுத்தம்மா தெரியலை.. நான் என்ன செஞ்சா? இல்லை நான் எப்படி நடந்துக்கிட்டா எல்லாம் சரியாகும்னு.. எனக்கு சுத்தமா தெரியலை.. நானும் எல்லாருமே நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்.. என்னால முடிஞ்ச அளவு நியாயமா நடந்துக்கப் பாக்குறேன்.. ஆனா எல்லாமே தப்பா போகுதே..” என்றவன் கண்களோ அவளின் கண்களில் அவனின் வினாக்கான விடையை தேடியது..
 
Vanthuten.. ???

Yakka ennaka aachu intha pamila ponnuku.. enakum munnadiye thonichu enna thaan iva pirachanai nu.. ?? kamali thaan solve pannanum polave vera valiye ila..

Vana paavam kaa.. vaseegara vanamali nu per vachita pothuma vaseegarama vakka venaama.. ?

ore oru ud la thaan paiyan sirichaan matha ellathulayum tension and valiyoda thaan suthuraan.. next ud ku wait panuren morning enthichathum potrunga kaa.. ????
 
Last edited:
Oops. Pameela suicide is somewhat unexpected. Feeling bad for vanamali. He's trying to set everything right but everything goes wrong. Situations r not on his favour. But kamali's move towards vana at the end of ud is glimmer of hope.
 
Top