❤️❤️ ஊர் பேசும் ஓவிய சிலையே ♥️♥️ 💖💖💖விமர்சனம் 💖💖💖

Advertisement

Ram priya

Well-known member
Member
IMG_20240831_014431.jpg

எழுத்தாளருக்கு: லவ் & லவ் ஒன்லி போட்டி கதையில் காதலை மையமாகக் கொண்டு எழுதத் தொடங்கிய கதையின் மையக் கருவாக நாயகன் நாயகியின் பரிசுத்தமான காதலுக்கு ஊடாக குடும்பத்தினருக்குள் நடக்கும் சிக்கல்களையும் 😟😟😟😟 உறவுகளின் மேன்மையையும் 😍😍😍 சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளையும் 😰😰😰 என்று twist & turns அதிகம் நிறைந்த கதைகளத்தை கதாசிரியர் கையாண்ட விதம் மிக அருமை 😳😳😳 👌👌👌

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟


ஐரிஸ் மயூரி: நம் கதையின் நாயகி சிறு வயதிலேயே பெற்றவளை இழந்து தந்தை யார் என்றே தெரியாமல் அன்னையின் தந்தை ஒஸ்கர் தாத்தாவிடம் வளர்ந்தவள் ☹️☹️☹️ பிறந்த ஊரில் உயிருக்கு பாதுகாப்பில்லாமல் வெளிநாட்டில் (ஸ்பெயின்) வளர்க்க பட்டவள் 😨😨😨😨 வசதிக்கு, பணத்திற்கு, ஆடம்பர வாழ்க்கைக்கு பஞ்சமில்லை ஆனால் அக்கறை காட்ட, அன்பு செலுத்த, அரவணைக்க உறவுகளுக்கு பஞ்சமாகி போனவள் 😰😰😰 அன்புக்கு ஏங்கும் குழந்தை அவள் ☹️☹️☹️☹️தன் வாழ்க்கையில் அவளே அறியாத பல ரகசியங்களை அவளுள் ஒளித்து வைத்திருப்பவள் 😧😧😧
அறியாத வயதிலேயே நாயகனிடம் (தேவசேனாபதி) மனதை பறிக்கொடுத்தவள் ♥️♥️❤️❤️💕💕💓💓😍😍😍🥰🥰🥰🥰

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟


தேவசேனாபதி: நம் கதையின் நாயகன் பாட்டி கோசலை, பெற்றோர் கந்தசாமி _ பவுனும்மாள், சித்தப்பா செந்தில் _ கனகா அவர்களின் மகள்கள் கார்திகா மற்றும் வேல்விழி, அத்தை தெய்வானை _ ராஜேந்திரன் அவர்களின் மகள்கள் பூஜா மற்றும் பூர்விகா என்று குடும்பத்தின் ஒற்றை தலை மகனாகப் பிறந்தவன் ☺️😊
காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை குடும்பத்திற்காக துறந்து 😨😨😨குடும்ப தொழிலை ஏற்று நடத்தும் நல்லவன் ☺️☺️☺️


எத்தனை விசேஷ குணங்கள் உண்டோ அத்தனைக்கும் உரித்தானவன் 😍😍😍
நாயகிக்கு (மயூரி) சற்றும் குறையாமல் தனக்குள்ளே பல ரகசியங்களை வைத்திருப்பவன் அவனின் வாழ்க்கைக்குள் அவனே அறியாத பல ரகசியங்களை கொண்டுள்ளவன் 😱😱😱
சிறு வயதிலேயே நாயகியின் மனதை பறித்து தன் மனதை அவளிடம் பறிகொடுத்தவன் ❤️❤️❤️❤️

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟


கதைக்களம் நிறைய ரகசியங்களையும், திருப்பங்களையும் கொண்டவை என்னென்ன என்று பார்கலாமா....!!!! 🤩🤩🤩

1. நாயகன் நாயகியின் திருமணத்திற்கு யாரிடம் இருந்து எதிர்ப்பு வராது என்று நினைத்தோமோ அவர்களிடம் இருந்து.,.. தன் ராசா (பேரன்) மீது உயிரையே வைத்திருக்கும் கோசலை பாட்டி மற்றும் பேத்தியை வளர்ந்து ஆளாக்கிய ஒஸ்கர் தாத்தா...😧😧😧😧
நடந்தது என்ன ???!!! 😟😟😟😟

2. மயூரியின் தந்தை அவளின் தாய்க்கு விருப்பம் இல்லாமல் அவளை பலவந்தபடுத்தியவன் 😱😱😱 உயிரோடு இல்லை என்று நினைத்த மயூரியின் தாய் மிராண்டா உயிரோடு இருக்க பெற்ற மகளை வெறுத்து ஒதுக்கி வேறொரு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்... நடந்தது என்ன.....???!!!☹️☹️☹️☹️

3. கூட்டுக் குடும்பமாக இருந்த தேவாவின் சித்தப்பா குடும்பம் மனைவி மகளாள் நடந்த குடும்ப அரசியல் முன்னிட்டு தனிக் குடித்தனம் போகின்றனர்... நடந்தது என்ன.....?!!! ☹️☹️☹️☹️

4. அத்தை மகள் பூஜா தேவா மீது விருப்பம் கொள்ள அதனை தேவா மறுத்து விட அவளின் தந்தை ராஜேந்திரன் மற்றும் பெரியப்பா ராஜப்பன் மூலம் முடிந்த வரன் டாக்டர் நிர்மல் 😟😟 அவனின் மருத்துவமனையில் நாம் கனவிலும் நினைக்காத மனதை கலங்க வைத்த அநியாயம் 😱😱 அதனை அறிந்த நம் நாயகன் நிர்மலையும் அவனின் தந்தையையும் சட்டத்தின் பிடியில் பிடித்துக் கொடுக்கிறான் 😧😧😧😧 நடந்தது என்ன......????!!!! 😱😱😱

5. தேவசேனாபதி கிரைம் பிரான்ச் ஆபிசர் என்பதும் அதனை ஏன் தன் குடும்பத்திடம் மறைத்தான்... நடந்தது என்ன....???!!!! 😳😳😳😳

6. தேவசேனாபதியின் பெற்றோர் என நினைதிருந்தவர்கள் அவனை பெற்றவர்கள் அல்ல அவனை வளர்த்தவர்கள் என்பதும் தேவா அவர்களிடம் எப்படி வந்தான் 😧😧😧 அவனை பெற்றவர்கள் யார்.... 😨😨😨😨நடந்தது என்ன.....????!!!!

7. தேவாவின் பெற்றோர் காவல்துறை அதிகாரியான வீரராகவன் _ ராஜலட்சுமி காதல் திருமணம் புரிந்தவர்கள் 😍😍😍 அதனை பிடிக்காத தேவாவின் தாய்மாமன் ராஜப்பன் தேவாவின் தந்தையை கொன்று விட தாய் ராஜலட்சுமி முத்து என்பவரை மறுமணம் செய்து கொண்டு மகள் ராகவியுடன் மாமியார் மற்றும் மாமனார் வீரய்யா உடன் புகுந்த வீட்டில் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகிறார் 🥰🥰🥰 நடந்தது என்ன....???!!!!

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟


இத்தனை திருப்பங்களுக்கு இடையே நாயகன் தன்
மனம் கவர்ந்தவளை ❤️❤️❤️
இதயத்தில் நிறைந்தவளை ❤️❤️
நேசத்தினால் தன் நெஞ்சில் நிறைந்தவளை ❤️❤️❤️

தன் காதலியான மயூரியை யாருக்காவும் எத்தகைய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் எவருக்கும் விட்டுக்கொடுக்காமல் திருமண பந்தத்தில் கரம் பிடிக்கிறான் நாயகன் தேவசேனாபதி 💓💓💕💕💞💞💖💖♥️♥️💗💗💝💝🥰🥰

நடந்த அத்தனை சம்பவங்களின் ரகசிய முடிச்சுகளை நாயகனைக் கொண்டு கதாசிரியர் அவிழ்க்கும் விதம் மிக அருமை 😳😳😳 👌👌👌

பச்சை கண் அழகியின் மீது தேவசேனாபதி கொண்ட காதல்... ஆளுமை நிறைந்த காதல் ❤️❤️❤️
ரசனை மிகுந்த காதல் ❤️❤️❤️

தன்னை ரட்சிக்க வந்த தேவா மீது மயூரி கொண்ட காதல்....
அழுத்தமான காதல் ❤️♥️♥️
அழகான காதல் ♥️♥️♥️
தன் தேவைகள் அத்தனைக்கும் அவன் ஒருவனே வேண்டும் என்ற அடமான காதல் ❤️❤️❤️


இருவரின் பரிசுத்தமான காதலுக்கு கிடைத்த வரமாக கடவுள் தந்த பரிசாக மூன்று குழந்தைகளின் வரவு அவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு சான்றாக 🥰🥰🥰🥰

கெட்ட எண்ணம் கொண்டவர்கள் சுயநலத்தின் பிம்பமாக உள்ளவர்கள் நல்லவர்களை விட்டு தள்ளியே நிற்க வேண்டும் என்பதனை எடுத்துக் கூறிய கதை 🤩🤩🤩

நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையை நிரூபித்த கதை 🤩🤩🤩

நல் உள்ளம் கொண்ட உண்மையான உறவுகள் ஒன்றுக் கூடினால் உற்சாகம் பொங்கும் 🥰🥰🥰 உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்கும் என்று உணர்த்திய கதை 🤩🤩🤩

கடினமான கதைக்களத்தை எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்புடன் கொண்டு சென்று சுவாரஸ்யமாக முடித்த கதாசிரியர் @oviya silaye அவர்களுக்கு வாசகர்களின் பாராட்டுகளும் 😍😍😍 வாழ்த்துக்களும் 😍😍😍 நன்றிகளும் 🙏🙏🙏

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
 
Last edited:
பாட்டி தூக்கம் வராமல் நடு ராத்திரியில் கலர் அடிச்சு விளையாண்டு இருக்கீங்க 😃 😄 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 ஆனாலும் உங்க ஓவியம் ரொம்ப அழகா வந்திடுச்சு 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
 
பாட்டி தூக்கம் வராமல் நடு ராத்திரியில் கலர் அடிச்சு விளையாண்டு இருக்கீங்க 😃 😄 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 ஆனாலும் உங்க ஓவியம் ரொம்ப அழகா வந்திடுச்சு 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
வாய்!!! வாய்!!! ஓவர் வாய்!!!
மிக்க நன்றி பேத்தி 🙏🙏😍😍😍🥰🥰❤️❤️😘😘😘
 

Advertisement

Advertisement

Back
Top