Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.13

Advertisement

ஜெய் ஸ்ரீ ராம்

அத்தியாயம் -13

மெல்ல மெல்ல வீட்டின் அணைத்து பொறுப்புகளும் சிவன்யா வசம் ஆனது , அவளின் நாள் ஐந்து மணிக்கு ஆரம்பித்து ,இரவு பதினோரு மணிக்கு தான் முடியும்,முன்பு படிப்பதற்கு எழுந்தவள் ,இப்போது வேலை செய்வதற்கு எழுகிறாள் அவ்வளவு தான் வித்தியாசம் .நாள் முழுவதும் உழைத்து களைத்து படுக்கையில் விழுபவளுக்கு ,

சர்வாவை பற்றி கனவு காண எல்லாம் நேரம் இருக்கவே இருக்காது ,விழிகளை மூடினால் ,அடுத்த நொடியே உறங்கி போய்விடுவாள்.

இப்போதைக்கு அவளின் உற்ற தோழி அவளின் கைபேசி தான் ,கோலம் போட,சமையல் செய்ய,ஏன் இட்லிக்கு அரிசி ஊறவைக்க, என்று அனைத்திற்கும் விடை, அவளுக்கு அங்கு தானே கிடைக்கிறது.

சமையல் என்ற ஒன்றை இது வரை செய்ததில்லை தான் ,இப்போது மூன்று வேளையும் அவள் தான் செய்கிறாள்.வேணியின் மக்கள் உணவு விஷயத்தில் சற்று வக்கணையாக எதிர்பார்ப்பவர்கள் தான் ,

காலை டிபனுக்கு சாம்பார் மட்டும் என்றால் இறங்காது நிச்சயம் சட்னி வேண்டும்,பொங்கலுக்கு வடை வேண்டும் ,வாரம் ஒரு முறை அசைவம் வேண்டும் இரண்டு அல்லது மூன்று முறை வேக வைத்த முட்டை அல்லது ஆம்லெட் வேண்டும்.

சாதரண தோசை இறங்காது ,நெய் ,ஆனியன் ,முட்டை ,பொடி ,என்று வித விதமான தோசைகள் வேண்டும் .அதிலும் சர்வாவிற்கு சப்பாத்தியும், தோசையும் கல்லில் இருந்து நேராக தட்டிற்கு வரவேண்டும், அதற்காக ஹாட்கேஸில் இருந்தால் உன்ன மாட்டானா என்றால்,உண்ணுவான் ,

ஒன்று அல்லது இரண்டோடு எழுந்து விடுவான் . அது இந்த அம்மாவிற்கு தாங்காது,நாள் முழுவதும் வேலைகளின் இடையில் புலம்பி கொண்டிருப்பாள்.

தினமும் இவளே செய்வதால் நன்றாக இருக்கிறதா..... இல்லை ,உண்மையில் சிவாவிற்கு சமைக்க வந்து விட்டதா ,என்று அவளுக்கே தெரியவில்லை ,அவளின் கைப்பக்குவம் அருமையாக இருந்தது ,

"சூப்பர் ரசம் குட்டி ,ரசம் ஒன்னை மட்டும் பக்குவமா வைக்க கத்துக்கிட்டா போதும் குட்டி , மத்த சமையல் எல்லாம் ரொம்ப சுலபம், "என்றிருந்தார் வேணி ஒரு தரம்.

சங்கரும் அவ்வப்பொழுது "நல்லா இருக்குடா" என்று பாராட்டுவார் ,சதா எல்லாம் சமையல் மேடையில் சாய்ந்து அங்கேயே சப்பு கொட்டி, இவளுக்கும் ஊட்டி விட்டு கொண்டு சாப்பிடுபவன் , புகழ்ந்து தள்ளி விடுவான்.

இந்த கல்லுளிமன்னன் தான் ஒன்றும் கூற மாட்டான் ,அவள் வைப்பதை உண்டுவிட்டு எழுந்து கொள்வான்,அவன் உண்ட தட்டை கழுவுவான் அவ்வளவு தான். அவன் சிவாவிற்கு செய்யும் மிக பெரிய உதவி ,

சதா அப்படி இல்லை .வெங்காயம் ,தக்காளி நறுக்க வேண்டுமா,சப்பாத்தி தேய்த்து தர வேண்டுமா, என்று அவன் வீட்டில் இருந்தால் முடிந்த அளவு உதவி செய்வான். பொருட்கள் வாங்கி வருவான் ,சில நேரங்களில் சிவா வீடு பெருக்கி விட்டால், மாப் கூட போடுவான்.

வீட்டு வேலைகளை சமாளிக்கும் சிவாவால் அத்தையை தான் சமாளிக்க முடியவில்லை ,ஒரே இடத்தில அமர்ந்திருப்பதால் ஓயாமல் புலம்பி கொட்டுவார். சமயங்களில் சிவாவை கூட திட்டுவார்,

இப்படியே நாட்கள் நகர ,மெல்ல அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. பார்வை ஓரளவு சீராகி இருந்தது ,கை அசைக்க முடிந்தது ,ஆனால் தூக்க முடியவில்லை ,அசைக்க முடியாத காலை ஓரளவு அசைத்தவர் .மெல்ல அடியெடுத்து வைக்க ஆரம்பித்திருந்தார்.

நாட்கள்,மாதங்களாகி அதன் போக்கில் நகர ,சர்வா கேம்பஸில் தேர்வாகியிருந்தான். ஆறு மாதம் சென்னையில் ட்ரைனிங். அதன் பிறகு விருப்பம் இருந்தால் பணி கோவையில் ,இல்லை எனில் சென்னையிலேயே இருந்து கொள்ளலாம்.

சம்பளம் சற்று குறைவு தான், ஆனால் அவன் ப்ரெஷர்{fresher}இன்னும் படிப்பை கூட முடிக்கவில்லை,கேம்பஸில் செலக்ட் ஆனதால் ,நிர்வாகம் தேர்வை மட்டும் வந்து எழுதிவிட்டு செல்ல அனுமதி அளித்திருந்தது.

அவனை பாராமல் ஆறு மாதத்தை எப்படி ஓட்ட போகிறோம் என்று சிவா கண்ணோரம் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்க ,சென்னை கிளம்பி சென்ற நாள் அன்று சர்வாவின் முகத்தில் அப்படி ஒரு அதீத மகிழ்ச்சி,

சதாவே! "இது வேலை கிடைச்சதால் மட்டும் வந்த சந்தோஷம் மாதிரி இல்லையே! அந்த ஒட்டடை குச்சி பக்கத்துல இருக்க போறோம்ன்ற சந்தோஷமோ ,"என்று கலாய்க்க ,அதற்கும் சர்வாவிடம் ஒரு மாய புன்னகை ,

'ஒரு நாள், ஒரு நாள்.... என்னை பார்த்து சிரிச்சிருப்பியா, போடாங்' என்று சிவா தான் நொந்து போனாள்,

வேணி இப்போது தாங்கி தாங்கி நடக்க ஆரம்பித்திருந்தார்.மகனுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி அன்னமலையாரை வணங்க வைத்து அனுப்பிவைத்தார்.மகனும் தாய் தந்தை இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆசீர்வாதம் வாங்கி சென்றான் .

"டேய்! அண்ணா ...நானும் ஒரு நாள் வேலைக்கு போவேன் ,ஆசீர்வாதம் வாங்குவேன்" என்று இங்கு சதாவும் உறுதி மொழி எடுத்து கொண்டிருந்தான்.

மாதங்கள் ஓட சதாவும் பெங்களூரில் இன்டென்ஷிப் சென்றவன் ,அது முடிந்து அங்கேயே பணியில் அமர்ந்து கொண்டான்.சர்வா சென்றதை தாங்கி கொண்டவளால் சதா சென்றதை தாங்க முடியவில்லை ,அழுது தீர்த்தாள் ,

மாதங்கள் நகர்ந்தது தனிமை விரட்டியது பெண்ணை ,மேலும் மேலும் கைபேசியில் மூழ்கி போனாள் .அவ்வப்பொழுது அவன் இன்ஸ்டாவில் போடும் புகைப்படங்களை பார்ப்பாள் ,அதில் சில நிஷாவோடு எடுத்து கொண்டதும் இருக்கும் .

அடுத்த வருடம் கல்வியாண்டு தொடங்கியதும் சர்வா வந்தான். அவன் படித்த காலேஜில் இன்ஜினீயரிங் சேர்த்து விடுவதாக சொல்லி ,அந்த நேரம் வீட்டில் இவனும் அவளும் மட்டுமே ,மாமனும் ,அத்தையும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.



இந்த ஒரு வருடமாய், அவனின் காதுகளில்,"தண்ட செலவு ,இவள் படிக்கலைன்னு யாரு அழுதா," என்ற வார்த்தைகள் ஓயாமல் ஒளித்து கொண்டிருக்க,அவரின் முன்னே இவளை படிக்க வைத்துவிட வேண்டும். என்கிற வைராக்கியம் அவனுக்கு

இங்கு அம்மிணிக்கோ மீண்டும் படிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை ,இனி சேர்ந்தாலும் எந்த அளவு படிப்போம் என்றும் தெரியவில்லை.அதுவும் தினம் கோவை சென்று திரும்புவது, கல்லூரி பேருந்து என்றாலும் ,வீட்டு வேலைகளை பார்த்து விட்டு சென்று வருவது கடினம் .

இன்னும் வேணி முழுமையாக குணம் ஆக வில்லை அல்லவா ,திரும்ப இது போல் வர வாய்ப்பிருக்கிறது என்றிருந்தனர் மருத்துவர்கள் ,அவரை விட்டு செல்லவும் பயமாக இருந்த்தது ,ஆனால் அவளுக்கு தெரியும், அவள் படிக்க மாட்டேன் என்றால் ,சர்வா ருத்ர தாண்டவம் ஆடி விடுவான் என்று

அதனால் யோசித்தவள் ,"இங்கு பக்கத்திலேயே இருக்கும், ஆர்ட்ஸ் காலேஜில் ஏதாவது கோர்ஸ் சேர்ந்து கொள்கிறேன்" என்றுவிட்டாள்.

"செலவு பத்தி யோசிக்காத ,படி "என்று அவன் வற்புறுத்த ,

"ப்ளீஸ் ,அது எல்லாம் கஷ்டம் ,எனக்கு படிக்கிறதே ஒரு வருசமா டச் விட்டு போயிடுச்சு,வராதுன்னு தெரிஞ்சும். ஏன் தலையை குடுத்துட்டு ,அறியர்ன்னு அலையனும்,ஆர்ட்ஸ் படிக்கிறேனே!"என்று தர்க்கம் புரிந்து கொண்டிருந்தாள்,

அவளின் கெபாசிட்டி அவளுக்கு தெரியும்.படிப்பில் கொஞ்சம் மந்தம் தான் , பள்ளி படிப்பு எப்படியோ மனப்பாடம் செய்து ஒப்பித்தாகிற்று ,இனி அப்படி செய்யா முடியாதே !

அதோடு முன்பு அவனின் மேல் ஈர்ப்பு இருந்தாலும் ,மனம் தெளிவாக இருந்தது கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே ,

இப்போது அப்படி இல்லை,அவளின் எண்ணங்கள் அவளை எங்கே கொண்டு செல்கிறது என்று அவளே அறியால் ,'அவனை மறந்து,தன்னால் ஒரு வாழ்வு வாழ முடியுமா , சாதாரண ஒரு வருட பிரிவையே தாங்க முடியவில்லை ,தனது கண்ணின் முன்னே ,வேறு ஒருத்தியோடு அவன் வாழ்வதை தாங்க முடியுமா,என ஏதேதோ எண்ணங்கள் அவளை சுழற்றி அடிக்க,



குழம்பிய குட்டையாக இருக்கிறாள் அவள் ,'ஏதேனும் ஒரு டிகிரியை படித்து விட்டு பிறகு பிஎட் படித்து கொள்ளலாம்,'என்ற எண்ணம்இப்போது அவளுக்கு, இதற்கும் அவன் திட்டுவான், என்று தெரியும் இருப்பினும் சொல்லிவிட்டிருந்தாள்.



அவள் நினைத்து போன்று சர்வா அவளை திட்டவில்லை ,"உனக்கு நெறய படிக்கணும் வேலைக்கு போகணும்னு ஆசை இல்லையா," என்றான் ,

"இப்போதைக்கு இல்லை" என்று அவள் சொல்லவும் ,

அவளின் விழிகளை ஓரிரு நிமிடங்கள் கூர்ந்து பார்த்தவன் ,தலையை அழுத்தி பிடித்து கொண்டான் ,நெற்றி பொட்டை நீவியபடி.குறுக்கும் நெடுக்கும் நடந்து வீட்டை அளந்தான் ,

பிறகு "காபி கொண்டுவா" என்றுவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டான் .

'இது என்ன அவங்க வைஃபை டெலிவரிக்கு அனுப்பிட்டு ,வெளியே வெய்ட் பன்ற மாதிரி ஒரு எக்சிபிரசன்,' என எண்ணியவாறே ,காபி கலந்து வந்து அவனிடம் நீட்ட அது அத்தனை அருமையாக,மனதிற்கு இதமாக இருந்தது ,

'நீ இதுக்கு தாண்டி லாயக்கு ,'என்ற எண்ணம் மனதில் எழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை ,என்ன ஒன்று முன்னர் என்றால் எரிச்சலோடு நினைத்து இருப்பான். இன்று புன்னகையோடு நினைத்து விட்டு ,

சோபாவில் தலையை சாய்த்து கண்மூடியவன் ,பக்கத்தில் இருக்கும் ஆர்ட்ஸ் காலேஜின் பெயரை சொல்லி,"bca ஜாயின் பண்ணிக்கோ ,அது முடிஞ்சதும் mca பண்ணிக்கலாம்."இலகுவாய் அவன் சொல்ல ,

"அச்சோ அஞ்சு வருசம் படிக்கணும் ,அதுக்கு நான் என்ஜினீயரிங் பண்ணிட்றேன்" இவள் அந்தர் பல்டி அடிக்க ,

விழி திறந்து அவளை பார்த்தவன்,"அது படிச்சாலும் mba படிக்க வைப்பேன்" சற்று கடினமாக கூற ,வேறு வழியில்லாமல்" bca ஓகே "என்று விட்டாள்.

அடுத்து வந்த நாட்களில் காலேஜ் அட்மிசன் போட்டவன், இவளின் சங்கிலியையும் மீட்டு அவளிடமே ஒப்படைத்தான் ,மேல் வேலைக்கும் ,சமையல் வேலைக்கும் ஆள் வைக்குமாறு தாயிடம்,பணம் கொடுத்து விட்டு சென்னை சென்று விட்டான்.

சிவாவும் கல்லுரி சென்று வந்தாள் , சர்வா மொத்தமாக இங்கு வர மேலும் ஆறு மாதங்கள் ஆனது ,வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கையில் அவனின் எண்ணங்கள் பெரிதாய்அவளை அலைக்கழிக்கவில்லை ,

இப்போது ரணமாய் கொன்று தின்றது பெண்ணவளை,இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் தான் சர்வா கோவைக்கு மாற்றல் வாங்கி கொண்டு வந்தான்.சதா மாதத்திற்கு ஒரு முறையாவது வார இறுதிகளில் வந்து செல்வான் ,

இவன் அதுவும் கிடையாது தீபாவளி ,பொங்கல் ,பிறகு வேணி ஓயாமல் நச்சரித்ததால் ஒரு முறை,என்று ஆக மொத்தம் மூன்று முறை தான் வந்து சென்றான் ,

அவனை வீட்டில் பார்த்த பிறகு தான் சிவாவின் பசலை நோய்நீங்கி இருந்தது,சதா இருந்திருந்தால் ஏதேனும் வம்பிழுத்து பேச வைத்திருப்பான் , இப்போது இவர்கள் மட்டும் தானே ,அதனால் பெரிதாக அவனிடம் பேசுவது எல்லாம் கிடையாது ,

அவன் சும்மாவே அமைதி இப்போது மட்டும் என்ன பேசிவிட போகிறான்,இவனின் வேலை நேரம் பத்திலிருந்து இரவு எட்டுமணிவரை,இங்கிருந்து தான் கோவை சென்று வருவான் ,காலை எழுந்து ஜிம் சென்று வருபவன் ,குளித்து முடித்து சிவா கிளம்பும் சமயம் தான் உணவு உண்ண வருவான் ,

சிறிது நேரம் தாயோடு பேசிவிட்டு ,உணவு உண்டு அவனும் கிளம்புவான் ,இரவு தாமதமாக தான் வருவான் ,சில நேரங்களில் அங்கயே கேண்டீனில் உண்டு வருவான் பல நேரங்களில் வீட்டில் உண்ணுவான்.

மாலை ஏழுமணிக்கு சமையல் கார அக்கா செய்து விட்டு போகும் உணவு ,இவன் வரும் பொழுது ,நன்றாக இருக்காது .ஆனால் யாரிடமும் அதை அவன் சொன்னதில்லை ,மதியம் உணவு கொண்டு போக மாட்டான் ,

அதே போல இரவும் வெளியில் உண்ணுகிறான் போலும் ,என்று சிவாவும் கண்டு கொள்ளவில்லை .

அவனின் வண்டி சாவி கொத்தோடு ,வீட்டு சாவியும் இருப்பதால் ,அவனுக்காக யாரும் காத்திருப்பதில்லை ,உண்டு உறங்க சென்றுவிடுவர்,சிவாவும் அவனின் எண்ணங்கள் அதிகம் இருந்தால் ,அவன் வரும் வரை படுக்கையில் படுத்தவாறே விழித்திருப்பாள் ,

அவன் உள்நுழைவதை அறையின் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு படுத்து கொள்வாள் . சில நாட்கள் அவனை பாராமல் உறங்கிவிடுவதும் உண்டு ,





அப்படி தான் ஒரு நாள் அசதியில் உறங்கி இருந்தாள் ,சர்வா வந்தவன்.மேசையில் இருந்தது பிடிக்காமல் போய்விட ,அலட்டி கொள்ளவே இல்லை. சிவாவின் கதவை தட்டி,"பசிக்குது" என்றான் ,

"ஹான்" என்றவள் ,தூக்க கலக்கத்திலேயே,சட்னி அரைத்து தோசை ஊற்றி கொடுத்த பிறகு உண்டு உறங்க சென்றான் .

அடுத்து வந்த இரண்டு நாட்கள் இதுவே தொடர ,பிறகு இவளே காத்திருந்து,சமையல் கார அக்கா செய்துவிட்டு போன சாம்பார் அல்லது குருமா என எது இருக்கிறதோ !அதோடு சேர்த்து இவன் கேட்பதை சூடாக செய்து கொடுத்து, அவன் உண்டு சென்ற பிறகே தூங்க வருவாள் .

ஆக அந்த நேரம் தான்,எந்த இடையூறும் இன்றி, சிவா அவனை வஞ்சனை இன்றி ரசிக்கும் நேரம், ஆனால் இப்பொழுது அந்த நேரங்களை கூட குறுஞ்செய்தி மூலம் நிசா எடுத்து கொள்கிறாள்.

ஒற்றை கையில் அலைபேசி இருக்க ,மற்றையதில் உணவை அள்ளியவன் தட்டில் என்ன இருக்கிறது, என்று கூட பாராமல் வாயில் வைக்கவும் ,'இவங்களுக்காக நான் நைட் பத்துமணிக்கு அடுப்படில நின்னுட்டு இருந்தால்,அவ கூட கொஞ்சிகிட்டு இருக்காறே!' என்று சிவாவிற்கு தான் ஆத்திரம் கண்டு கடங்காமல் வந்தது.

வந்து என்ன செய்ய ஒன்னும் பண்ண முடியாத...... நிலை தானே! அவளது, எப்போதும் போல இதையும், அமைதியாக கடக்க ஆரம்பித்தாள் .

வேகமாக நடக்க முடியாவிட்டாலும் வேணி இப்போது சாதாரணமாக நடக்கிறார், கையை தூக்க முடிகிறது ,ஆனால் பொருட்களை பற்றி பிடிக்க முடிவதில்லை,வார்த்தைகள் தெளிவாக வருகிறது ,

அவரின் புலம்பல்கள் ஓய்ந்திருந்தது,மீண்டும் அண்ணியும் ,நாத்தியும் ,கோவில் , கடை தெரு என சென்று வர ஆரம்பித்திருந்தனர்.

வார இறுதி ஒன்றில் ,சதாவும் வீட்டில் இருந்த இரவு நேரம் ,வேணியும் அங்கே தான் இருந்தார் .சர்வா "நம்ம இடத்துல வீடு கட்டலாம்னு இருக்கேன்பா , என்னோட பிரண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் பன்றான் ,பிளான் சொல்லிட்டா ஒரு வருசத்துல ,பக்காவா பண்ணி கொடுத்துடுவான்," என்க

சங்கரிடம் சில நொடிகள் அமைதி ,பிறகு" அதுக்கு முன்னாடி சிவாக்கும் , பார்கவிக்கும் சேர்த்து ,இருபது லட்சம் கொடுத்துடுங்க ,"என்று சங்கர் கூறவும்.அங்கு குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு நிசப்தம்.

கூடத்தில் அமர்ந்து உலர்ந்த துணிகளை மடித்து கொண்டிருந்த சிவன்யா , விடயம் அவர்களை பற்றியது என்பதால் , இவர்கள் மனம் புண்படும் படி ஏதுனும் கூறிவிட்டாள். தன்னால் தாங்க இயலாது. என்று துணிகளை அப்படியே விட்டு விட்டு ,

கையில் போனை எடுத்து கொண்டவள் ,"ஹலோ" என்று யாரிடமோ பேசுவது போல வீட்டை விட்டே வெளியில் சென்று விட்டாள்.

முதலில் ஆரம்பித்தது வேணி தான் ," நீங்க ஏன் இப்படி சொல்றிங்கன்னு புரியுது , அதுக்காக இவ்ளோ பணம் குடுக்க முடியாது ,பசங்க ஒண்றரை வருஷமா, வயித்த கட்டி ,வாய கட்டி.... சம்பாரிச்சிருக்காங்க,"

"அதை எடுத்து எப்படி கொடுக்க சொல்றிங்க ,அதுவும் குட்டிக்கு மட்டும்னா கூட பரவாயில்லை, நமக்காக அவள் எவ்ளவோ பண்ணிருக்கா ,இன்னோருத்திக்கும் சேர்த்து இல்லை குடுக்கணும். வேணும்னா பொதுவுல ஆளுக்கு அஞ்சு லட்சம் குடுத்துடலாம்,குட்டி கல்யாணத்துல குட்டிக்கு மட்டும் ஒன்னு ரெண்டு லட்சம் சேர்த்து குடுத்துடலாம் " என்க

மகன்களும் தாயை ஆமோதிப்பது போல அமைதியாகவே இருக்க ,'உன்னை பத்தி எனக்கு தெளிவா தெரியும்' என நினைத்த சங்கர் ,மனைவியை வெறுமையாக பார்த்து விட்டு ,

"சிவா உனக்கு உதவி பண்ணதுக்காக,உன்னோட நகைல இருந்து வேணும்னா எடுத்து கொடு ,நான் என்னோட தங்கச்சி பொண்ணுங்களுக்கு குடுக்க சொல்றேன்."என்றவர்

மகன்கள் புறம் திரும்பி ,"எங்க அப்பாவோட சொத்து வித்த பணம் முழுசும் நானும் உங்க சித்தப்பனும் தான் பிரிச்சி எடுத்துகிட்டோம் ,எங்க அம்மா வோட நகை எல்லாம் உங்க அத்தைக்கு தான் ,அவ இல்லாததால அவளோட பொண்ணுங்களுக்கு ,"

"உங்க பாட்டி ,அத்தை ரெண்டு பேரோடதும் சேர்த்து மொத்தம் ஐம்பது சவரன் ,நாம இடம் வாங்க பணம் பத்தலைன்னு, எல்லா நகையையும் வாங்கி நான் வித்துட்டேன்,"

"வாங்கின நிலம் ஐம்பது சென்ட் ,அதாவது அரை ஏக்கர் ,அன்னைக்கு இருந்ததை விட அதோட மதிப்பு இப்போ பல மடங்கு அதிகம் ஆகிருக்கு ,இப்போ கிட்ட தட்ட இரண்டு கோடி போகும் ,"

"நீங்க பிள்ளைங்களுக்கு அம்பது சவரன் போடணும்னு நான் சொல்லலை ,ஆளுக்கு இருபது சவரன் போடுங்க ,அப்படி இல்லையா, ஆளுக்கு பத்து லட்சம் கொடுங்க ,"

"அதுவும் முடியாதுன்னா நிலத்தை பிரிச்சிடலாம் ,அவங்களுக்கு இருபது சென்ட் உங்களுக்கு இருபது ,எனக்கும் உங்க அம்மைக்கும் பத்து ,எது வசதின்னு யோசிச்சு சொல்லுங்க ,"

"எந்த முடிவா இருந்தாலும் ,அவங்களோட பங்குன்னு சந்தோசமா ,நிறைவா கொடுங்க ,மனம் குமுறி ,சாபம் குடுக்குறமாதிரி கொடுக்காதீங்க,இனியாவது புருஷன்,பிள்ளைகுட்டின்னு ,அந்த பிள்ளைங்க சந்தோசமா வாழட்டும்." என்று கறாராக கூறிவிட்டவர்.

"நாளைக்கு காலைல முடிவை சொல்லுங்க ,இந்த வருசம் பார்கவிக்கு வரன் பாக்கலாம்னு சரவணன் சொல்லி இருக்கான் ,அதுக்குள்ள நான் எல்லாம் ரெடி பண்ணனும்" என்றுவிட்டு அறைக்குள் சென்று விட்டார் ,

இங்கு அம்மா மகன்கள் மூவரும் விழித்து கொண்டு அமர்ந்திருந்தனர் ,"நிலத்துல பங்கு குடுக்கவெல்லாம் வேண்டாம் ,அவரு சொன்ன மாதிரி பத்து லட்சம் குடுத்துடுங்கடா,நகை வாங்கி குடுத்தா ,இன்னும் அதிகம் ஆகும் ,என்று வேணி சொல்லி விட்டார்.

மகன்களும் வேறு வழியின்றி கையில் இருந்ததை எல்லாம் வழித்து போட்டு அடுத்த வாரத்தில் சரவணனை வரவைத்து, அவரின் முன்னே அக்கா ,தங்கை இருவரின் பேங்க் அக்கவுண்டில் பணத்தை போட்டு ,பாஸ் புத்தகத்தை கொடுத்து விட்டனர்.

அந்த பணத்தை வைத்து பெண்கள் நகை வாங்கியது போல தெரியவில்லை இருப்பினும்,பணத்தை என்ன செய்தீர்கள் என்று இவர்கள் கேட்டு கொள்ளவில்லை,

இப்படியே நாட்கள் நகர ,கணேசன் சங்கருக்கு அழைத்தவர் ,சர்வா ,நிசா திருமணத்தை உடனே வைத்து கொள்ளலாம் என்பது பற்றி பேசினார், வீட்டில் வயது பெண்ணை வைத்து கொண்டு பையனுக்கு செய்வதில் சங்கருக்கு தான் நெருடல்,

அதிலும் சர்வாவிற்கு இருபத்தைந்து தான் ஆகிறது, "இன்னும் மூன்று வருடம் செல்லட்டுமே ,சொந்த வீடு கட்டிவிட்டு திருமணம் வைத்து கொள்ளலாம் ,"என்று இவர் சொல்ல

"ஏற்கனவே எடுத்த முடிவு தானே, இதில் யோசிக்க ஒன்னும் இல்லை, மாப்பிள்ளை,நான் என்ன மூணாவது மனுசனா, சொந்த வீடு இருந்தா தான் பொண்ணு குடுப்பேன்னு சொல்ல ,கல்யாணம் முடியட்டும் மெதுவா கட்டிக்கலாம்"

"ஒரு நல்ல நாள் பாத்து பொண்ணு பாக்க வாங்க ,வேணிகிட்ட நான் பேசுறேன்" என்றதும். சங்கரும் மறுத்து பேசவில்லை,

வீட்டில் வந்து மனைவியிடம் அவர் சொல்ல ,அந்த வாரமே நாள் நன்றாக இருப்பதால் செல்லலாம் என்று வேணி சொல்ல ,வீடு விழாவிற்கு ஆயத்தமானது.அன்று இரவு மகன் வரும் வரை விழித்திருந்த வேணி ,அவனிடம் விஷயத்தை கூற,அவன் எந்த வித மாற்றமும் இன்றி சரி என தலை ஆட்டவும் ,

அவனுக்கு தோசை வைக்க வந்த சிவாவின் கண்ணீர் துளி , அவன் தட்டில் பட்டு தெறித்தது.அதையும்,சாம்பாரோடு சேர்த்து, தோசையில் தொட்டு விழுங்கிக்கொண்டு,கை கழுவி சென்று விட்டான்.சர்வேஸ்வரன் .............



சொல்லாத காதல் எல்லாம்

கல்லறை இல்லா சேரும்

நீ விட்டு போன தூரம்

எல்லாம் தீயா யாமோ



உன்னாலே உள்ளுக்குள்ளே

கண்ணீரோடு பேராட்டம்

ஆறாத உன் நினப்பு

என்னை கொல்லட்டும்









வருவாள் ...................




நாளைக்கு நான் லீவ் ,லைக் ,கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் .................















Nice ?
 
இந்த சர்வா மனசுல என்ன இருக்குன்னே புரியலையே..
 
சர்வா ஏன் இப்படி இருக்கான் அவன் மனசில் என்ன தான் இருக்கு
 
Top