Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 6.....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 6:



"என்ன சொல்றீங்க சம்பந்தம்? எங்க வெச்சு ஆக்சிடெண்ட்? என் மகன் பிழைப்பானா மாட்டானா சொல்லுங்க" என்று கதறி விட்டார். அவரது கதறலைக் கேட்டு ஏதோ விபரீதம் எனப் புரிந்து கொண்ட ராஜேஸ்வரியும் கதறலானார்.



"சார் நீங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்க! எதையும் சொல்ற நிலையில இல்லை" என்று ஃபோனை வைத்து விட்டார் மேனேஜர்.



எப்படி வீட்டைப் பூட்டினோம்? எப்போது காரில் அமர்ந்தோம் என்பது கூடத் தெரியாமல் விரைந்தனர் ராஜலிங்கமும் ராஜேஸ்வரியும். ஆஸ்பத்தியில் உடலில் ஒரு பாகம் விடமால் கட்டுப் போட்டு முகத்தை மறைத்த ஆக்சிஜன் மாஸ்க்கோடு ஐ சி யூவில் இருந்த மகனைக் கண்ணீரால் நனைத்தார்கள் இருவரும்.



"தம்பி மேல தப்பே இல்லைங்க! ரோட்டோரமா காரை நிறுத்திட்டு சிகரெட் வாங்க போயிருக்காரு. அப்ப கண்ணு மண்ணு தெரியாம வந்த லாரி அப்படியே அடிச்சுத் தூக்கிடிச்சு! லாரி டிரைவர் நல்லா குடிச்சிருந்தான் போல. ஆனா ஓடிப்போகாம உடனே ஆஸ்பத்திரியில கொண்டு போயிச் சேர்த்திருக்கான்" என்றார் சம்பந்தம்.



"என் மகன் பிழைப்பானா டாக்டர்?" என்று வார்த்தைகளை கண்ணீரில் நனைத்துக் கேட்டாள் தாய்.



"இப்போதைக்கு எங்களால எதுவும் சொல்ல முடியாதும்மா! ஹெட் இஞ்சுரி. அதாவது தலையில் பலமா அடிப்பட்டிருக்கு. மூளைக்குள்ள ரத்தம் உறைஞ்சிருக்கா இல்லையான்னு தெரியல்ல! அப்படி இருந்தா உடனே ஆப்பரேஷன் செஞ்சா தான் உங்க மகனைக் காப்பாத்த முடியும். ஆனா ஆப்பரேஷனை தாங்குற நிலையில உங்க மகனோட இதயமும் மற்ற பாகங்களும் இல்லை. எங்களால் ஆனா எல்லா முயற்சியையும் செஞ்சுக்கிட்டு இருக்கோம். பார்க்கலாம்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டனர்.



அழ ஆரம்பித்த மனைவியைத் தேற்ற முடியாமல் தானும் கண் கலங்க ஆரம்பித்தார் ராஜலிங்கம். என்ன சம்பாதித்து என்ன செய்ய? என் மகன் இப்போது சாகக் கிடக்கிறான். அவனை யார் காப்பாற்றுவார்கள். கடவுளே! நான் செய்த தவறென்ன? திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் கழித்துப் பிறந்த அருமை மகன். அவனை எங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடு. அதற்குப் பதில் என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். கண் மூடி இறைவனிடம் வேண்டுதல் விடுத்தபடி இருந்தார். சட்டென ஒரு அமைதி நிலவியது அங்கு. ஊதுபத்தி சாம்பிராணி வாசம் மூக்கில் ஏறியது. பயத்துடன் கண் விழித்த ராஜலிங்கத்தின் எதிரில் அவர் நின்றிருந்தார்.



தமிழ் நாட்டின் மிகப்பெரிய ஆஸ்பத்திரி அது. ஐசியூ இருக்கும் இடமே தனியாக 7ஆவது மாடியில் இருந்தது. அதன் வெளியே காரிடார் போல மிகப்பெரிய இடம் இருந்தது. ஐசியூவினுள் இருக்கும் பேஷண்டைப் பார்க்கும் உறவினர்கள் அந்த வெராண்டாவில் அமர்ந்து கொள்ளலாம். சுற்றிலும் கண்ணாடிக் கதவுகளும் ஜன்னல்களும் மட்டும் தான். லிஃப்ட் வழியாகத்தான் வர வேண்டும் மாடிப்படிகளை எமெர்ஜென்சி போது தான் திறப்பார்கள். அந்த சூழலில் இப்படி திடீரென ஒருவர் எதிரில் நின்றது பயத்தையும் தடுமாற்றத்தையும் கொடுத்தது ராஜலிங்கத்துக்கு.



"என்னப்பா மகன் ஆபத்தான கட்டத்துல இருக்கானோ?"



மிகச் சரியாக கேள்வி கேட்டவரை கூர்ந்து நோக்கினார் ராஜலிங்கம்.



கழுத்தில் சிவப்பாக ஏதோ ஒரு மாலை. பச்சை வண்ண மேல் துண்டு அவரது மார்பை மறைத்தது. இடுப்பில் ஜரிகைக் கரை போட்ட வேட்டி. நெற்றியில் திருநீறும் குங்குமம் பெரிதாக ஜொலித்தன. கைகளில் கால்களில் ஏதேதோ கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. சரி ஏதோ சாமியார் போல இருக்கிறது. என நினைத்துக்கொண்டார். ராஜலிங்கம் இருந்த நிலையில் யாராவது தன் மகனைப் பிழைக்க வைக்க மாட்டார்களா? என ஏங்கினார். எதிரில் நின்றிருந்தவர் கால்களில் விழுந்தார்.



"சாமி! நீங்க யாரு! எப்படி இங்க வந்தீங்க? என் மகனைப் பத்தி எப்படித் தெரியும்?" என்றார்.



"இப்ப நான் உன் கேள்விகளுக்கு பதில் சொல்லவா இல்லை உன் மகனைக் காப்பாற்றவா?" என்றார் அந்த சாமியார் சிரித்தபடி.



"தெரியாமக் கேட்டுட்டேன் மன்னிச்சுக்குங்க! உங்களைப் பார்த்தா எனக்குள்ள பயம் வருது. நீங்க பெரிய மகான்னு நினைக்கிறேன். டாக்டர்கள் கை விரிச்சுட்டாங்க சாமி! என் மகன் ரொம்ப சின்ன வயசு. இன்னும் கல்யாணம் கூட ஆகல்ல! அவனைக் காப்பாத்துங்க சாமி. எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்" என்றார்.



"அப்ப உன் பணத்தாலேயே அவனைக் காப்பாத்திக்க வேண்டியது தானே? எதுக்கு கடவுள் கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க?" என்றார் வெடுக்கென.



தடாலெனக் காலில் விழுந்தார் ராஜலிங்கம்.



"ஐயையோ! சாமி தப்பு தப்பு! என்னை மன்னிச்சிடுங்க! என் மகனை பிழைக்க வைங்க சாமி! நான் தவறா பேசினதை மன்னிச்சிருங்க" என்று கெஞ்சினார்.



"உன் பணத்திமிரை எங்கிட்ட காட்டாதே! நான் நெனச்சா கூடை கூடையா தங்கத்தை இங்க வர வைக்க முடியும் பார்க்கறியா?" என்று சொல்லி விட்டு ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தார். அவர் மந்திரம் சொல்லச் சொல்ல அந்த ஆஸ்பத்திரியில் பெரிய பெரிய கூடைகள் நிறைய தங்கக்கட்டிகள் தோன்றின. அந்த மின் வெளிச்சத்தில் அவை தக தகவென மின்னின. தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்தார் ராஜலிங்கம். அந்த சாமியார் விசுக்கென கை காட்ட அவை மறைந்தன.



"என்ன பார்த்தியா?" என்றார் அவர்.



கன்னத்தில் போட்டுக்கொண்டார் ராஜலிங்கம்.



"சாமி! தெய்வம் போல வந்திருக்கீங்க! உங்களால மட்டும் தான் என் மகனைக் காப்பாத்த முடியும். தயவு பண்ணுங்க" என்று கிட்டத்தட்ட பிச்சை கேட்கும் லெவலுக்கு இறங்கினார்.



"நான் அதுக்குத்தான் வந்திருக்கேன். ஆனா எனக்கு நீ ஒரு சத்தியம் செஞ்சு தரணும். அப்பத்தான் உன் மகனைக் காப்பாத்துவேன்"



"சொல்லுங்க சாமி! இப்பவே செய்யறேன்"



"உன் மகன் பிழைச்சு எழுந்த பிறகு நான் என்ன சொன்னாலும் கேக்கணும். என் பேச்சை தட்ட மாட்டேன்னு சத்தியம் பண்ணு" என்றார்.



தயக்கம் வந்தது அவருக்கு. அவரது தயக்கத்துக்கான காரணம் புரிந்தது போல சிரித்தார் சாமியார்.



"உன் மகன் உசிரையோ உன் பொண்டாட்டி உசுரையோ நான் கேக்கல்ல! ஏன் உன் உயிர் கூட எனக்கு வேண்டாம். ஆனா நான் சொல்றதே நீ செய்வேன்னு எனக்கு சத்தியம் செஞ்சு குடு. அதை உன்னால மீற முடியாது அப்படி மீறுனா என்ன ஆகும்னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமா என்ன?" என்றார். அவரது தோற்றம் பேச்சின் தொனி இவை அடிவயிற்றில் கலக்கத்தைத் தோற்றுவித்தன. என்றாலும் மகன் பிழைப்பது முக்கியம் என நினைத்து அப்படியே சத்தியம் செய்தார் ராஜலிங்கம்.



ராஜலிங்கத்தையும் அழைத்துக்கொண்டு ஐசியூவிற்குள் நுழைந்தார். அங்கிருந்த நர்ஸ் கண்ணே விழ்க்க்கவில்லை.



"இவளை நான் என் மந்திரத்தால கட்டிட்டேன். நம்ம வேலை முடியறவரை இவ எழுந்துக்க மாட்டா" என்று ஒரு தகவலையும் சொன்னார். பேசாமல் மௌனமாக பார்த்தபடி இருந்தார் ராஜலிங்கம். நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா? என்ற அடிப்படை சந்தேகமே வந்து விட்டது அவருக்கு. உள்ளே வந்த சாமியார் தன் கையிலிருந்த செம்பிலிருந்து மந்திரம் உச்சரித்து அந்த நீரை அருணின் மேல் தெளித்தார். அது வரை அசைவே இல்லாமல் இருந்த உடல் அசைந்தது. கண்களை மூடி ஒரு ஓரமாக அமர்ந்து மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்கினார். நேரம் ஆக ஆக அவரது முகம் சிவப்பாக மாறிக்கொண்டே வந்தது. அருணின் நிலையிலோ எந்த மாற்றமும் இல்லை. சுமார் அரை மணி நேரம் அப்படியே மந்திரம் உச்சரித்தபடியே அமர்ந்திருந்த சாமியார் கண் விழித்துக் கை நீட்ட ஏதோ ஒரு வேர் அவரது கரங்களில் விழுந்தது.



கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த வேரை அப்படியே எடுத்து கைகளில் பிழிந்து சாறெடுத்தார். காய்ந்த குச்சி மாதிரி இருந்த அந்த வேரிலிருந்து பச்சையான திரவம் வடிய ஆரம்பித்தது. அதை அப்படியே ஏந்தி அருணின் தலையில் இருந்த கட்டுக்களின் மேல் தடவினார். சிறிது திரவத்தை உள்ளேயும் புகட்டினார். ஹக் என்ற ஒரு சத்தம் வந்தது அருணிடமிருந்து. பதறிப் போய்க் கத்த முயன்ற ராஜலிங்கத்தைக் கண்களாலேயே அடக்கினார் சாமியார். இப்போது அருணின் தலைக்கட்டின் மீது கைகளை வைத்தும் இதயம் கைகள் கால்கள் என பல பகுதிகளிலும் கைகளை வைத்து மந்திரங்களை உச்சரித்தார். சுமார் ஒரு மணி நேரம் சென்ற பிறகு ராஜலிங்கத்தையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.



"உன் மகன் பிழச்சி எழுந்துருவான். கவலைப்படாதே" என்றார்.



"அவன் எழுந்து உக்காரலியே சாமி?" என்றார் கவலையாக.



"சிந்தனையே இல்லாமப் பேசுறியே நீ? உடனே எழுந்திருச்சு உக்காந்தா டாக்டருங்களுக்கு சந்தேகம் வராதா? இன்னும் ஒரு மணி நேரத்துல டாக்டரே உங்கிட்ட பேசுவாரு பாரு. அப்ப நீ என்னை நெனச்சுக்கிட்டாப் போதும்"



"சரி சாமி! நான் உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது?" என்றார் நம்பிக்கையே இல்லாமல்.



"உன் மகன் பிழைச்சு எழுந்த மூணாவது மாசத்துல இந்த விலாசத்துல என்னை வந்து பாரு! இதுலயே என் ஃபோன் நம்பரும் இருக்கு. " என்று நகர ஆரம்பித்தார்.



"சாமி! எப்படி சாமி! என் மகன் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சது?"



"நான் வேற ஒரு வேலையா இந்த ஊருக்கு வந்தேன். அப்ப உன் மகனைப் பார்த்தேன். அவன் உயிருக்கு சீக்கிரமாவே கெடுதல் வரப்போறதை என் சக்தியால தெரிஞ்சுக்கிட்டு அவனை காப்பாத்தப் போனேன். ஆனா அதுக்குள்ள விதி முந்திக்கிச்சு. அவனால எனக்கு ஒரு வேலை ஆகணும். அதான் நானே வந்தேன்" என்றார்.



அவர் பேசுவது முழுக்க முழுக்க ஏதோ மர்மமாக பொடி வைத்துப் பேசுவது போல இருக்க திகைத்து நின்றார் ராஜலிங்கம். அடுத்த ஒரு மணி நேரத்தில் அருணை செக்கப் செய்ய வந்த டாக்டர்களின் புருவங்கள் தலை உச்சிக்கே போய் விட்டன.

"எங்களால நம்பவே முடியல்ல மிஸ்டர் ராஜலிங்கம். தலைக்காயம் சுத்தமா இல்ல! அதோட தலையில ரத்தம் உறையவே இல்ல. இதயம் நுரையீரல்னு எல்லாமே நல்லா வேலை செய்து. கால்ல எலும்புகள் மாத்திரம் தான் சேரணும். இன்னும் ஒரு வாரத்துல நீங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடலாம்" என்றார் சீஃப் டாக்டர். சாமியார் கொடுத்த விபூதியை பூசி விட்டு மனதால் அவரை வணங்கினார் ராஜலிங்கம்.



சொல்லி முடித்து விட்டு மகனையும் மனைவியையும் ஏறிட்டார்.



"அப்பா! ஏதோ ஒரு சாமியார் என்னென்னவோ செஞ்சு என்னைக் காப்பாத்தினதா சொல்றீங்க! சரி அதை நானும் நம்புறேன்னே வெச்சிப்போம். ஆனா அவரு எதுக்கு இந்தப் பொண்ணை தான் நான் கல்யாணம் செய்துக்கணும்னு சொல்றாரு?" என்றான்.



அவனது கேள்விக்கான பதிலை ராஜலிங்கம் யோசிக்கு முன் ராஜேஸ்வரி குறுக்கிட்டாள். அவளது பதிலைக் கேட்டு அயர்ந்து போனார்கள் தந்தையும் மகனும்.
 
Top