Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 20

Advertisement

நான் பெரும்பாலும் silent reader தான். தேவி மனோகரன் அவர்களின் கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். இயல்பான கதைகளம், கவிதை நடைனு நல்லா இருக்கும்.

ஆனா இந்த கதைய பொறுத்தவரைக்கும் எனக்கு சில மாற்று கருத்து இருக்கு.எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதான்னு தெரியல. என் மனசுலபட்டத சொல்றேன்.

இந்த கதையில வானதி கேரக்டர் கொஞ்சம் hypocriticக்கா இருக்க மாதிரி இருக்கு. என்ன தான் அவுங்க சொத்து எதுவும் வேண்டாம்னு நினைச்சாலும், வானதிக்கு அவுங்க பிறந்த வீட்டுல இருக்கிற privilege ரொம்பவே அதிகம். மதியழகி வானதி இடத்துல இருந்து, வானதி அர்ச்சனா இடத்துல இருந்தா ஒருவேளை இது புரியலாம்.

அர்ச்சனா தேவையில்லாம குழப்பிக்கிற கேரக்டர் தான். ஆனா, அவுங்கள இன்னும் டென்ஷன் பண்ற மாதிரி தான் மாதவன், வானதி, பாக்கியம் மூணு பேருமே பண்றாங்க. பொண்ணுக்கு வீட்டை கொடுக்கணும் நினைச்சு வானதி இல்லம்னு பேரு வச்சிட்டு, அதை மருமக கண்டுக்காம அதே வீட்டுல இருக்கணும்னா எப்படி?

இளங்கோ CFO ஆனதுல இருந்து அவருக்கு குடும்பத்துக்கு செலவு பண்ண நேரமில்லாம போனதால தம்பதிகளுக்குள்ள பிரச்சனை. அதுனால ஸ்டெர்ஸ் இருக்காங்க வானதி. ஆனா, அவுங்க பொருளாதார நிலைமைய பார்த்து அர்ச்சனாவுக்கு பொறாமை அப்படினு வருது கதையில. வானதி தனியாளா குடும்பத்த சமாளிக்க முடியாம தள்ளாடுறாங்கனு, பாக்கியம் டின்னர் முதற்கொண்டு கட்டிக்கொடுத்து அனுப்பினா, வானதி இல்லத்துல வாழ்ற அர்ச்சனாவுக்கு டென்ஷன் ஆக தானே செய்யும். ஒரு விதத்துல இளங்கோ நிம்மதியா வேலையில கான்சண்ட்ரேட் பண்ண, வானதிக்கு அம்மா வீட்டுல கொடுக்கிற சப்போர்ட் தானே காரணம்.

இளங்கோ நடுராத்திரி மூணு மணிக்கு ஊர்ல இருந்து வந்தாலும், அண்ணா நீ தான் பிக் அப் பண்ணிட்டு வரணும்னு உரிமையா வானதி மாதவன்கிட்ட கேட்கிறாங்க. இளங்கோவே கேப்ல வரேன்னு சொன்னாலும், அண்ணன் தான் போகணும்னு சொல்றது நியாயமா? இத்தனைக்கும் அண்ணனுக்கும் அண்ணிக்கும் இவுங்க விஷயத்துல ஏற்கனவே முட்டிக்கிட்டு இருக்கு. இப்படி தினசரி வாழ்க்கையில வானதி எடுத்துக்கிறது privelege இல்லையா? இப்படி அம்மா வீட்டுக்கு பக்கத்துல குடித்தனம் வர்ற நாத்தானர்கள் டிமாண்ட் ஏராளம். ஒருகட்டத்துக்கு மேல கல்யாணத்துக்கு அப்புறமும் அவுங்க அந்த வீட்டு பொண்ணாவே இருக்க நினைக்கிறது தான் பிரச்சனை கொண்டு வருது.

தாமரை செய்யுற சில நுணுக்கமான ஓரவஞ்சனையில வானதிக்கு மனகஷ்டம்னா, வானதி குடும்பத்துக்காக பாக்கியமும், மாதவனும் எந்நேரமும் at your serviceனு இருக்கிறது அர்ச்சனாவுக்கும் கஷ்டம் தானே? இதுல அவுங்க குழந்தைய வேற இழந்ததா வருது. Postpartum depression விட அது கொடுமையில்லயா? இந்த விஷயத்துல மாதவன் அவுங்களுக்கு துணையா இருக்கனும்னு எதிர்பார்க்க தானே செய்வாங்க. இதுல அவுங்க மனஉளைச்சல தேவையில்லாத கவலைனு அவுங்களே வேற அடிக்கடி சொல்றாங்க!!

அதே மாதிரி பாக்கியத்தோட நிலைமையும் சிரமம் தான். அவுங்க மகளுக்கு மட்டும் செஞ்சிட்டு, மருமகளை கண்டுக்காமவிட்டா பிரச்சனையாகும்னு மொத்த பொறுப்பையும் எடுத்துக்கிறாங்க. ஊர்ல பெரும்பாலான அம்மாக்களுக்கு இது தான் நிலைமை. கிருஷ்ணமூர்த்தியின் பிரிவினால வானதி எந்த அளவுக்கு மனசுடைஞ்சு போனாங்களோ அதை விட அதிகமா பாக்கியம் தானே துவண்டு போயிருப்பாங்க. அப்பவும் தான் depressionல இருந்ததால குழந்தைய அம்மாகிட்ட விட்டுட்டு ஆபிஸ் போனாங்க வானதின்னு ஆரம்பத்துல வருது. அப்புறம் சமீபத்துல வந்த எபிசோட்ல அதுவே மாறி அவுங்க அம்மாதான் அவுங்கள ஆபிஸ் போக சொன்னாங்கனு வருது.

வானதி தன்னோட அப்பா மாதிரி இளங்கோவுக்கு அந்த வயசுல பிரச்சனை வருமோனு உள்ளுக்குள்ள ரொம்ப அழுத்தத்துல இருக்கிறதா அர்ச்சனா சொல்றாங்க. ஆனா, முதல்ல Heredity பிரச்சனைல அவுங்க மாதவனை நினைச்சுல வருத்தப்படனும்னு யோசிச்சா அதே மாதிரி அவுங்க அடுத்த எபிசோட்ல கவலைப்படுறாங்க. அப்ப அவுங்க கவலை ஒருவிதத்துல சரி தானே!

அர்ச்சனாவோட பணத்தாசை தப்பு தான். ஆனா, அது ஆசைனு சொல்றத விட ஒருவித இன்செக்யூரிட்டி தான் என்பது என் கருத்து. புகுந்த வீட்டுக்கு வர்ற ஒவ்வொரு பொண்ணுக்கு இருக்க இன்செக்யூரிட்டி. அதை மாதவன் தான் கவனிச்சு சரி பண்ணணும். வெறும் வீடு மட்டும் கொடுத்தா போதாது. என்னைக்கும் பொண்டாட்டிக்கு தான் என் லைஃப்ல முதன்மை இடம்னு இளங்கோ மாதிரி தெளிவா இருக்கணும் என்பது என் கருத்து.

அப்புறம் கதையில இருக்க ரொமான்ஸ். வானதி இளங்கோ காதல் ஜோடி. அந்த ரொமான்ஸ் இப்ப வரைக்கும் குறையாம இருக்காங்க. நல்லது. ஆனா அவுங்க நெருக்கத்தை பார்த்து தாமரை, அர்ச்சனா, இன்னைக்கு பேசுன நிகிதா வரைக்கும் அதிசயப்படுறாங்க. சில சமயம் பொறாமைப்படுறாங்க, இன்னும் சொல்ல போனா முகத்துக்கு நேரா co sister நிகிதாவே புகழ்ற அளவுக்கு அவுங்க சூப்பர் தம்பதினு வர்றத அவ்வளவா ஏத்துக்க முடியல. அப்படி நிஜ வாழ்க்கையில யாரும் சொல்வாங்களானு தெரியல. அவுங்கள எல்லாம் விட இவுங்க லைஃப் பெட்டரா இருக்குனு வலிய சொல்ற மாதிரி இருக்கு.

இது எல்லாமே என் தனிப்பட்ட கருத்து. புள்ள ரொம்ப குமுறுதே ஒருவேளை சொந்த வாழ்க்கையில பட்ட அடியோனு கேட்காதீங்க, நான் ஒரு அக்மார்க் சிங்கிள்.

எனக்கு பிடிச்ச எழுத்தாளர் கதை. ரொம்ப மூழ்கி படிச்சதாலயோ என்னவோ, எல்லா கேரக்டர் மனநிலையையும் யோசிக்க தோணுது. தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க. பொறுமையா இந்த கமெண்டை படித்ததற்கு நன்றி.
 
Nice ud 🤩🤩🤩
இளங்கோ....15 நிமிடமாக பின்னாடி திரும்பி பார்க்கும் படி... என்ன இருக்கு அவன் பின்னாடி...???!!! இதில் 13 வருஷம் பின்னாடி போறளவுக்கு ஒரு லெட்டர் வேறு அவன் முன்னாடி...!!!! 🥺🥺🥺
 
Top