Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

பாரதிப்பிரியன்
Reaction score
866

Profile posts Latest activity Postings About

  • என்னுடைய கண்ணாடிப் பூக்கள் தொடரின் 5ம் இதழ் இந்த தளத்திலும், வேடந்தாங்கல் தொடர், மல்லிகா மணிவண்ணன் தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. வாசித்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றியுடன் பாரதிப்பிரியன்
    அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம் -6

    1. அகக் களி- மன சந்தோஷம்
    2. அகசியம் - வேடிக்கை
    3. அகதி - வேலமரம், திக்கற்றவன்
    4. அகத்திணை - மனதில் நிகழும் இன்ப ஒழுக்கம்.
    5. அகப்பற்று - நான் என்னும் சுயநல எண்ணம்
    6.அகப்பா - மதிலும், மதிலை சுற்றியிருக்கும் அகழியும்.
    7. அகம்மியம்- அணுகக்கூடாதது, அறியக்கூடாதது.
    8. அகர் நிசம் - பகலும் இரவும்
    9. அகலம்- குறுக்கில் விரிவானது, பெருமை
    10. அகவல் - கூவுதல், அழைத்தல்

    இனிய காலை வணக்கம் ???
    அனைவருக்கும் வணக்கம்.
    என்னுடைய கண்ணாடிப் பூக்கள் தொடரின் இதழ் 5 பதிப்பித்து உள்ளேன். ஒரு காதல் கதையின் நேரலை உங்கள் பார்வைக்கு... வாசித்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி
    அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம் - 5

    1. ஆட்டுக்குட்டியின் பெயர்- குட்டன், பறழ்
    2. வரையாட்டின் பெயர்- சரபன், கேளையாடு
    3. கலைமான் - கரும் இரலை, புல்வாய்
    4. கேணி - கிணறு
    5. வெஞ்சினம் - அடங்காத கோபம், பொறாமை கொண்ட கோபம்
    இனிய காலை வணக்கம்
    அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம் -4
    1. மானின் பெயர்கள்- அரிணம்
    2. கழுதையின் பெயர்- காளவாய்
    3. பெண்ணின் பருவங்கள்- அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண்.
    4. மந்தகாசம் - அலட்சிய சிரிப்பு
    5. ஐவகை நிலங்கள்- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
    6. அஞ்ஞானம் - அறிவின்மை
    7. உய்வு - நிறைவு அடைதல்.
    8. பேரொளி - மிகவும் பிரகாசமான ஒளி
    அனைவருக்கும் வணக்கம், கிரேக்க மணிமகுடம், வரலாற்றுத் தொடரின் 13ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். உங்கள் அனைவரின் ஆதரவை வேண்டுகின்றேன். மிக்க நன்றி
    அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம் -3

    1. சமிக்கை - சிக்னல் காட்டுவது
    2. கிளி- வன்னி, தத்தை, கிள்ளை
    3. பொற்கை - குளம்
    4. அக்கை - அக்கா, சகோதரி
    5. குதிரை - பரி, அரி, குரகதம்
    6. பூமி- புவி, பூவுலகம், பூலோகம், அண்டம், உயிர்க்கோளம்
    7. கொற்கை - பாண்டியரின் துறைமுகம். இன்றைய தூத்துக்குடி
    8. ஈரெட்டு பருவம் - பதினாறு வயது
    9. நவம் - ஒன்பது என்ற எண்
    10. சோதரன் - உடன்பிறந்தவன், சகோதரன்.

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ???
    அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம் - 2
    1. பசு - கூலம், கோ, குடம், சுரபி
    2. பசு ஈன்ற கன்று- வற்சலை
    3. எருது - பாறல், சே, பெற்றம், பூணி
    4. செம்மறி ஆடு- துருவை, கொறி
    5. அரசன் - கோ, மன்னன், வேந்தன்,
    6. முக்கனிகள்- மா, பலா, வாழை
    7. அம்பறாத்தூணி - அம்புகள் வைக்கும் கூடு
    8. மீன் விழி - கயல்விழி
    9. பழுத்த - கனிந்த
    10. காடு- வனம், கானகம், வனாந்திரம்

    இனிய காலை வணக்கங்கள்???
    அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம் 1.

    1. களவரம் - புறா
    2. குரைமுகன் - நாய்
    3. புரவி- குதிரை
    4. சிம்மம்- பெண் சிங்கம்
    5. அரிமா- ஆண் சிங்கம்
    6. களிறு, மந்தகம் - யானை
    7. நாவாய், மரக்கலன் - கப்பல்
    8. மதி, திங்கள், சந்திரன் - நிலா
    9. பகலவன், விடிவெள்ளி, ஞாயிறு, கதிரவன், செங்கதிரோன் - சூரியன்
    10. பிரவாகம் - பொங்கி வழிதல்

    இனிய காலை வணக்கம்
    S
    Senmozhi
    சரி
    A
    AnuRadhaRaviSankarRam
    சிம்மம் - பெண் சிங்கம் ... என்பது இதுவரை அறியாத தகவல் ...நன்றி
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    பிரவாகம் என்பது பொங்கிவழிதல் என்று அகராதி விளக்குகிறது. அதே வேளையில் வெற்றி சகோதரர் கூறியபடி, இடத்திற்கு ஏற்ப நிரம்பி வழிதலாகவும் கொள்ளலாம். உதாரணமாக, பொன்னி நதி குடகில் இருந்து பொங்கி பிரவாகித்தாள், என்றால் பொன்னி ஆறு குடகு மலையில் இருந்து பொங்கி பெருகி வழிந்தாள் என்று எடுத்துக் கொள்ளுதல். புரிகின்றதா சகோ, சகி
  • Loading…
  • Loading…
  • Loading…
Top