♥️♥️♥️♥️ மயூரநாதம் ♥️♥️♥️♥️ 💞💞💞 விமர்சனம் 💞💞💞

Advertisement

Ram priya

Well-known member
Member
IMG_20240909_121824.jpg

எழுத்தாளருக்கு: லவ் & லவ் ஒன்லி போட்டி கதையில் காதலை மையமாகக் கொண்டு எழுதத் தொடங்கிய கதையின் மையக் கருவாக நாயகன் நாயகியின் ஆத்மார்த்தமான காதலுக்கு ஊடாக பெண்ணாசை கொண்ட ஒருவனின் பழி உணர்ச்சி காரணமாக நாயகன் நாயகியின் காதல் வாழ்வில் நேர்ந்தது என்ன என்பதை கதாசிரியர் தன் அருமையான எழுத்து நடையில் சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்புடன் தந்துள்ளார் 😍😍😍

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖


மாளவிகா: நம் கதையின் நாயகி நீலகண்டன் _ மீனாட்சி அவர்களுக்கு இளைய மகளாகப் பிறந்து அக்கா சியாமளா உடன் வளர்ந்து ஏழிசையை தன் நாவில் வைத்துள்ள வித்தகி 🎤🎤☺️☺️ மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளையும் சமஸ்கிருத பாடல்களை மட்டுமே பாடி வரும் ☺️☺️☺️வழி வழியாக அரசவை இசை கலைஞர்களின் குடும்ப வாரிசு மட்டுமல்லாமல் ஆண் வாரிசு இல்லாத தந்தை நீலகண்டனின் செல்ல மகளும் அவருடைய இசை வாரிசும் ஆவாள் 🥰🥰🥰🥰🥰


♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

மகாதேவன்: நம் கதையின் நாயகன் தம்பி இரண்டு தங்கைகளுடன் தலை மகனாகப் பிறந்து தந்தை இல்லாத குடும்பத்தை தன் தோளில் சுமப்பவன் 😍😍😍
குடும்பத்தின் ஏழ்மை காரணமாக பள்ளி கல்வி கை சேராவிடினும் அனுபவக் கல்வியை வரமாகப் பெற்றவன் 🤩🤩🤩 அறுசுவையில் வித்தகன் 🤩🤩 நாதஸ்வர கலைஞன் ☺️☺️ இசை ஞானம் உள்ளவன் ☺️☺️ கண் பார்த்தால் கை செய்யும் என்பதற்கிணங்க பல வித்தைகளில் கை தேர்ந்த அஷ்டாவதானி ஆவான் 😳😳😳

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟


கண்மனி: நம் நாயகி மாளவிகாவின் உயிர் தோழி 😍😍😍 நீலகண்டனின் சிஷ்யை ☺️☺️ இசை ஞானத்தை ஒன்றாக கற்றுத் தேர்ந்தவர்கள் ☺️☺️ இரட்டையர்களாக பிறக்க வில்லை மற்றபடி அத்தனையிலும் ஒற்றுமை உள்ளவர்கள் 🥰🥰🥰 நாயகனும் நாயகியும் சந்திப்பிற்கு காரணமானவள் 😍😍😍😍நம் கதையின் இரண்டாம் நாயகி ஆவாள் 🥰🥰🥰

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜


ஆதித்ய ராவணன்: அரசியல்வாதி மயில் ராவணனுக்கு மகனாகப் பிறந்து தமக்கை சுவாதி தங்கை யமுனா உடன் பிறந்தவன் ☺️☺️ பிறப்பிலேயே பணம் படைத்தவனாக பிறந்து கூடாத நட்பால் கூடாத பழக்கங்களுக்கு ஆளானவன் ☹️☹️☹️☹️ கெட்டவனாக வளர்ந்து நல்லவனாக மாறி மீண்டும் கெட்டவனாக மாறியவன் 😥😥😥
பெண்ணாசையால் தன் அழிவைத் தானே எழுதி கொண்டவன் 😱😱😱😱
கண்மணியின் நாயகன் ஆவான் ♥️♥️♥️♥️

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰


மகாதேவன் _ மயூரி (மாளவிகா) 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
இரண்டு துருவங்கள் எப்படி ஒன்றினைந்து ♥️♥️ இரு வேறு கரையில் இருப்பவர்களை எது ஒன்றினைத்தது ♥️♥️ வேறு எத காதல் ❤️❤️❤️ ஆம் காதல் என்ற அற்புதமான உணர்வு தான் இருவருக்கும் இடையே இருந்த அத்தனை வேற்றுமை களையும் கலைந்து இரு மனங்களையும் ஒன்று சேர்த்தது 🥰🥰🥰

தந்தையின் கோபத்திற்கு ஆளாவோம் என்று தெரிந்தே மேடையில் தமிழ் பாடலை பாட தைரியம் அளித்தது மனம் கவர்ந்தவனின் வார்த்தைகளும் அவனின் தூய்மையான காதலும் 😍😍😍😍

தந்தையை எதிர்த்து ஆனால் அவரின் விருப்பத்தோடும் அக்கா கணவர் நந்தாவின் துணையோடும் வீட்டை விட்டு வெளியேறி தன் காதல் தேவனைக் கரம் பிடிக்கிறாள் மாளவிகா 💖💖💖

தன் மனம் கவர்ந்தவளின் கனவான வாரணம் ஆயிரம் சூழ திருமணம் நடக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றும் பொருட்டு கேரளாவில் ஆணைக்கொட்டா என்ற இடத்தில் 100 யானைகள் சூழ தன் குடும்பத்தார் மற்றும் தங்களின் நலன் விரும்பிகள் ஆசியுடன் அவனின் மயூரியை திருமண பந்தத்தில் கரம் பிடிக்கிறான் நாயகன் மகாதேவன் 💝💝💝💝

The-Great-Elephant-March.jpg


dff1d854c78bc9c5ffa5ec5ae2a6217b.jpg

💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌

தந்தை நீலகண்டனின் மகள் மீதான பாசத்தை என்னவென்று சொல்ல 😲😲😲😲 மகள் தன்னை விட வேறொருவனை முக்கியம் என்று நினைத்து விட்டால் என்ற வேதனை இருந்தாலும் தன் ஆசை மகள் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என்ற அந்த தகப்பனின் பாசம் எத்தகையது என்றால் தங்கள் குடும்பத்தில் வம்சாவளியாக வாசிக்க மட்டுமல்ல வணங்கவும் செய்த வீணையை ஒப்படைக்கும் அளவிற்கு 🥰🥰🥰 மகள் மீதான நீலகண்டனின் பாசம் நம் மனங்களை நெகிழச் செய்வதாய் 😍😍😍

IMG_20240905_195201.jpg

தேவன் _ மயூரியின் மகிழ்ச்சியான காதல் வாழ்விற்கு பரிசாக இரட்டை பிள்ளைகளின் வரவு 🥰🥰🥰 தன் மனதிற்கு இனியவளை இசையரசி ஆகவும் அவளின் கனவுகளை நிறைவேற்ற துணை நிற்பதோடல்லாமல் அவளுக்கு வசதியான வாழ்கையை பரிசளிக்க வேண்டும் என்பதற்காக தன் தொழிலிலும் நண்பன் ஆதித்யாவின் துணையோடு முன்னேற்றம் காண்கிறான் மகாதேவன் 😍😍😍


விதியின் விளையாட்டில் இருந்து யார் தான் தப்புவார்கள் ☹️☹️☹️ வாழ்க்கை ஒரே சீராக செல்ல விதி தான் விட்டு விடுமா என்ன....???!!!

ஆம்....தேவா _ மயூரியின் வாழ்விலும் ஆதித்யா ரூபத்தில் விதி விளையாட தொடங்கியது 😥😥😥 ஆதித்யா மாளவிகாவிற்கும் என்ன சம்பந்தம் ☹️☹️☹️ ஏன் அவன் தேவா_ மயூரியின் காதல் வாழ்வை தன் பழியுணர்ச்சியால் குலைக்க பார்க்கிறான்...??!!!அதில் அவர்கள் வீழ்ந்தார்களா அல்லது ஆதியின் சூழ்ச்சியை தன் மதியால் வென்றார்களா எனபதனை கதாசிரியர் மிக சுவாரஸ்யமாக கூறியுள்ளார் 👌👌👌👌😍😍😍

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

நல்லவர்களை ஆதியின் பழியுணர்ச்சியால் என்ன செய்து விட முடியும் 😧 😧 😧 அவனின் சூழ்ச்சியை தங்களின் பரிசுத்தமான காதலால் வென்று 😍😍 இரண்டு வருட பிரிவை தன் ராஜாவின் (மகாதேவன்) நினைவோடு அவன் ஆரம்பித்த தொழில் சாம்ராஜ்யத்தை சரிவில் இருந்து மீட்டு மீண்டு வந்த தன் காதல் நாயகனின் கையில் ஒப்படைக்க ராணியின் (மாளவிகா) தைரியத்தையும் தன்னம்பிக்கையும் துணிச்சலையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை 🥰🥰🥰

ஆதித்யா.....சூழ்ச்சி செய்து மாளவிகாவின் மகிழ்ச்சியை குலைக்க நினைத்தவன் தான் தன் அடாத செயலால் வாழ்வை இழந்து மனைவி கண்மணியின் காதலை இழந்து இறுதியாக விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில் 😟😟😟😟
ஆதிக்காக....👇👇👇👇



💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

இசை என்றால் ஏழிசையும் சேர்ந்தால் தான் மனதிற்கு இனிமை தரும் ☺️☺️☺️ சமையல் என்றால் அறுசுவையும் இணைந்தால் தான் உடலிற்கு ஆரோக்கியம் தரும் ☺️😊 அது போல தான் ஒரு கதை என்றால் அத்தனை உணர்வுகளும் ஒன்றினைந்தால் தான் முழுமை பெறும் 🥰🥰🥰🥰

காதல், பாசம், நேசம், நட்பு, அக்கறை, அரவணைப்பு இன்னும் எத்தனை உணர்வுகள் உண்டோ அத்தனையும் தன் கவிதையான எழுத்து நடையில் 😊😊😊 சாரல் மழை போன்ற குளுமையான எழுத்து நடையில் 😊😊😊 நம்மை வருடிச் செல்லும் சுகமான தென்றலை போன்ற எழுத்து நடையில் நம் மனங்களை இனிதே கொள்ளை கொள்கிறார் கதாசிரியர்
@Kavi Mariappan 🥳🥳🥳🥳அற்புதமான கதையை தந்து அதை சுபமாக முடித்து வைத்த எழுத்தாளருக்கு வாசகர்களின் வாழ்த்துக்களும் 👌👌👌👏👏👏👏

பாராட்டுக்களும் 👍👍👍👍

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 
Last edited:
நிச்சயமா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சிஸ்‌‌.. இன்பக்கண்ணீரால் நிறைந்து விடிந்த நாள் இது. உங்க வார்த்தைகள்ல கதையை திரும்ப ரீவைண்ட் பண்ண மாதிரி இருக்கு. இவ்வளவு அழகான ஒரு பாராட்டு இத்தனை நாள் காத்திருந்ததற்கு கிடைத்த மகத்தான பரிசு. கதையை ஆரம்பிச்ச நாள்ல இருந்து என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தியவங்கள்ல நீங்களும் ஒருவர்‌. அப்போவே என் ஒவ்வொரு அத்தியாயமும் உங்களோட வார்த்தைகளால் அழகாகும்‌.. தொடர்ந்து என்னோட பயணித்ததற்கும் என்னை பயணம் செய்ய வைத்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த பாட்டுக்கள் என் ஃபேவரைட். கதைக்கு தகுந்த படங்களோடு என் கதையின் கதாபாத்திரங்களான ராஜா ராணிக்கு ஒரு மணிமகுடம் இது‌.. மயூர நாதம் எப்படி என் வாழ்க்கையின் மைல் கல்லோ அது போல இந்த விமர்சனம் இருக்கும். எப்போ தொய்ந்து போனாலும் உதயா சிஸ் மற்றும் உங்கள் பாராட்டுக்கள் என்னை தொடர்ந்து எழுத வைத்தது. எப்போதும் என் மனதில் இந்த வார்த்தைகள் இருக்கும்.. நன்றி சிஸ்.. ❤️💞💗💕
 
விமர்சனம் அருமையோ அருமை 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

ஆனாலும் நான் மிஸ்டேக் கண்டு பிடிச்சுட்டேன் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ ஆதி தங்கச்சி பேரு யமுனா 😚😚😚😚
 
விமர்சனம் அருமையோ அருமை 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

ஆனாலும் நான் மிஸ்டேக் கண்டு பிடிச்சுட்டேன் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ ஆதி தங்கச்சி பேரு யமுனா 😚😚😚😚
நக்கீரனுக்கு ஒன்று விட்ட பேத்தி தான் நீங்க 🥰🥰🥰🥰

உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி சிஸ் 🙏🙏😍😍❤️❤️😘😘😘
 
நிச்சயமா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சிஸ்‌‌.. இன்பக்கண்ணீரால் நிறைந்து விடிந்த நாள் இது. உங்க வார்த்தைகள்ல கதையை திரும்ப ரீவைண்ட் பண்ண மாதிரி இருக்கு. இவ்வளவு அழகான ஒரு பாராட்டு இத்தனை நாள் காத்திருந்ததற்கு கிடைத்த மகத்தான பரிசு. கதையை ஆரம்பிச்ச நாள்ல இருந்து என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தியவங்கள்ல நீங்களும் ஒருவர்‌. அப்போவே என் ஒவ்வொரு அத்தியாயமும் உங்களோட வார்த்தைகளால் அழகாகும்‌.. தொடர்ந்து என்னோட பயணித்ததற்கும் என்னை பயணம் செய்ய வைத்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த பாட்டுக்கள் என் ஃபேவரைட். கதைக்கு தகுந்த படங்களோடு என் கதையின் கதாபாத்திரங்களான ராஜா ராணிக்கு ஒரு மணிமகுடம் இது‌.. மயூர நாதம் எப்படி என் வாழ்க்கையின் மைல் கல்லோ அது போல இந்த விமர்சனம் இருக்கும். எப்போ தொய்ந்து போனாலும் உதயா சிஸ் மற்றும் உங்கள் பாராட்டுக்கள் என்னை தொடர்ந்து எழுத வைத்தது. எப்போதும் என் மனதில் இந்த வார்த்தைகள் இருக்கும்.. நன்றி சிஸ்.. ❤️💞💗💕
உங்களுக்கு என் விமர்சனம் பிடிச்சது ரொம்ப சந்தோஷம் மா 😍😍🥰🥰🥰

6785ccfbe9de7e05917907904514b516.gif

விமர்சனத்தில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்க சிஸ் ♥️♥️ என்னை திருத்திக்கொள்ள உதவும் 😍😍
 
உங்களுக்கு என் விமர்சனம் பிடிச்சது ரொம்ப சந்தோஷம் மா 😍😍🥰🥰🥰

View attachment 10952

விமர்சனத்தில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்க சிஸ் ♥️♥️ என்னை திருத்திக்கொள்ள உதவும் 😍😍
இதுல குறை வேற சொல்வாங்களா சிஸ்‌.. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இவ்வளோ ஞாபகம் வச்சு நீங்க எல்லாத்தையும் குறிப்பிட்டு இருந்ததே பெரிய விஷயம்.‌‌ ❤️💞💗💕
 

Advertisement

Advertisement

Back
Top