
எழுத்தாளருக்கு: லவ் & லவ் ஒன்லி போட்டி கதையில் காதலை மையமாகக் கொண்டு எழுதத் தொடங்கிய கதையின் மையக் கருவாக நாயகன் நாயகியின் ஆத்மார்த்தமான காதலுக்கு ஊடாக பெண்ணாசை கொண்ட ஒருவனின் பழி உணர்ச்சி காரணமாக நாயகன் நாயகியின் காதல் வாழ்வில் நேர்ந்தது என்ன என்பதை கதாசிரியர் தன் அருமையான எழுத்து நடையில் சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்புடன் தந்துள்ளார்
மாளவிகா: நம் கதையின் நாயகி நீலகண்டன் _ மீனாட்சி அவர்களுக்கு இளைய மகளாகப் பிறந்து அக்கா சியாமளா உடன் வளர்ந்து ஏழிசையை தன் நாவில் வைத்துள்ள வித்தகி
மகாதேவன்: நம் கதையின் நாயகன் தம்பி இரண்டு தங்கைகளுடன் தலை மகனாகப் பிறந்து தந்தை இல்லாத குடும்பத்தை தன் தோளில் சுமப்பவன்
குடும்பத்தின் ஏழ்மை காரணமாக பள்ளி கல்வி கை சேராவிடினும் அனுபவக் கல்வியை வரமாகப் பெற்றவன்
கண்மனி: நம் நாயகி மாளவிகாவின் உயிர் தோழி
ஆதித்ய ராவணன்: அரசியல்வாதி மயில் ராவணனுக்கு மகனாகப் பிறந்து தமக்கை சுவாதி தங்கை யமுனா உடன் பிறந்தவன்
பெண்ணாசையால் தன் அழிவைத் தானே எழுதி கொண்டவன்
கண்மணியின் நாயகன் ஆவான்
மகாதேவன் _ மயூரி (மாளவிகா)
இரண்டு துருவங்கள் எப்படி ஒன்றினைந்து
தந்தையின் கோபத்திற்கு ஆளாவோம் என்று தெரிந்தே மேடையில் தமிழ் பாடலை பாட தைரியம் அளித்தது மனம் கவர்ந்தவனின் வார்த்தைகளும் அவனின் தூய்மையான காதலும்
தந்தையை எதிர்த்து ஆனால் அவரின் விருப்பத்தோடும் அக்கா கணவர் நந்தாவின் துணையோடும் வீட்டை விட்டு வெளியேறி தன் காதல் தேவனைக் கரம் பிடிக்கிறாள் மாளவிகா
தன் மனம் கவர்ந்தவளின் கனவான வாரணம் ஆயிரம் சூழ திருமணம் நடக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றும் பொருட்டு கேரளாவில் ஆணைக்கொட்டா என்ற இடத்தில் 100 யானைகள் சூழ தன் குடும்பத்தார் மற்றும் தங்களின் நலன் விரும்பிகள் ஆசியுடன் அவனின் மயூரியை திருமண பந்தத்தில் கரம் பிடிக்கிறான் நாயகன் மகாதேவன்


தந்தை நீலகண்டனின் மகள் மீதான பாசத்தை என்னவென்று சொல்ல

தேவன் _ மயூரியின் மகிழ்ச்சியான காதல் வாழ்விற்கு பரிசாக இரட்டை பிள்ளைகளின் வரவு
விதியின் விளையாட்டில் இருந்து யார் தான் தப்புவார்கள்
ஆம்....தேவா _ மயூரியின் வாழ்விலும் ஆதித்யா ரூபத்தில் விதி விளையாட தொடங்கியது
நல்லவர்களை ஆதியின் பழியுணர்ச்சியால் என்ன செய்து விட முடியும்
ஆதித்யா.....சூழ்ச்சி செய்து மாளவிகாவின் மகிழ்ச்சியை குலைக்க நினைத்தவன் தான் தன் அடாத செயலால் வாழ்வை இழந்து மனைவி கண்மணியின் காதலை இழந்து இறுதியாக விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில்
ஆதிக்காக....
இசை என்றால் ஏழிசையும் சேர்ந்தால் தான் மனதிற்கு இனிமை தரும்
காதல், பாசம், நேசம், நட்பு, அக்கறை, அரவணைப்பு இன்னும் எத்தனை உணர்வுகள் உண்டோ அத்தனையும் தன் கவிதையான எழுத்து நடையில்
@Kavi Mariappan
பாராட்டுக்களும்
அருமையான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா
Last edited:
