Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 16

நாட்கள் கடந்திருந்தது. அவரவர் வாழ்வு என்று ஒருப்பக்கம் செல்ல, பமீலா போய் இந்திராவோடு இருந்துகொண்டாள். இங்கே வரவே மாட்டேன் என்று அப்படியொரு பிடிவாதம்.. வனமாலியோ ‘அவளை தனியே விடாதே..’ என்று கோவர்த்தனை அங்கே அனுப்ப, அது இன்னமும் ஒரு வம்பை கிளப்பியது..

“எங்களை மொத்தமா அனுப்பிட்டு.. இங்க உங்க ராஜ்ஜியம் செய்யலாம்னு எண்ணமா??” என்று பமீலா பேச்சினை ஆரம்பித்தாள்.

வனமாலியோ மறுவீடு சென்றுவந்தவன், கமலியை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் செல்ல எண்ணினான். ஆரம்பத்தில் அப்படியான எண்ணமில்லை.. ஆனால் அவனுக்கு மனதில் மிக மிக அழுத்தம் கூடிப்போனது.. வீட்டில் இருக்கும் சூழலே அதற்கு காரணம்.

அவன் மட்டும் எங்கும் தனியாய் போக முடியாதல்லவா, ஆக கமலியிடம் கேட்டான் “கொடைக்காணல் போலாமா??!!” என்று..

அவளுக்கு இந்த திருமணமே திடீர் ஏற்பாடு தானே, இந்தமாதிரி ஊர் செல்வது எல்லாம் மனதில் எண்ணமே இல்லை.. இப்போது வனமாலி கேட்கவும் அவள் ஆச்சர்யமாய் பார்க்க,

“ஓய்.. என்ன?? நீதானே சொன்ன சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும்னு..” என்றான் கிண்டலாய்..

“ஹா... அதுக்கு...???!!” என்றவளுக்கு முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை..

“அதான் வா ஜாலியா போயிட்டு வரலாம்..”

“இன்னும் ஒரு மாசத்துல வந்தனா கல்யாணம்.. ஏகப்பட்ட வேலை இருக்குன்னு நேத்து சொன்னீங்களே...” என்றவளுக்கும் “போலாமா??!!” என்ற எண்ணம் துளிர்விட்டது.

“அது நேத்து.. இது இன்னிக்கு.. போலாம் .. இங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு.. அதுமில்லாம எல்லாமே ஒரு பார்மாலிட்டிக்கு நடந்தது போல தான் இருந்தது.. நமக்கே நமக்குன்னு எதுவுமில்லை..” என்றதும் கமலி பதில் சொல்லாது அமைதியாய் இருந்தாள்..

அச்சகத்திற்கு தான் வந்திருந்தான் அவளைக் காண.. ஆம் அவளின் அன்றாடம் தொடங்கியிருந்தது. மறுவீடு சென்றுவந்த மறுநாளே எப்போதும் போல் அச்சகம் கிளம்பிவிட்டாள்.

வந்தனா “இப்போவேவா...” என்று கேட்க, “வேறென்ன செய்ய??” என்றாள் இவளும்..

இப்போதெல்லாம் மணிராதா வீட்டில் பார்வையாளர் மட்டுமே. எதற்கும் ஏன் எதற்கு என்று கேட்பதில்லை.. தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு என்ன செய்ய என்ற நிலையில் இருந்தார். ஆனாலும் நடப்பது எல்லாத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.

வனமாலியோ, அவனின் வேலைகளை எப்போதும் போல் ஆரம்பித்து இருக்க, கமலியும் அச்சகம் கிளம்ப, வீட்டினில் மகளோடு இருக்கும் நிலை.. அதுவும் அவளின் திருமண வேலைகள் வேறு இருக்க, இப்போது அனைத்துக்கும் வனமாலியை எதிர்நோக்கும் நிலை.

வனமாலியோ எது எப்படி இருந்தாலும் தனக்கான பொறுப்பில் இருந்து நழுவாது அனைத்தும் செய்தாலும், கடைசியில் தன் வாழ்விற்கு என்று என்ன செய்துகொண்டான் என்று பார்த்தால் எதுவுமே இல்லை. கமலியை திருமணம் செய்தது தவிர. அப்படியிருக்க அவளைக் கூட்டிக்கொண்டு எங்கேனும் செல்ல வேண்டும் போல் இருக்க, தயங்காது வந்து கேட்டேவிட்டான்.

“என்ன கமலி...”

“ம்ம்ம் யோசிக்கிறேன்...”

“என்னது??”

“இல்ல இப்போ கிளம்பினா யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா??”

“யார் என்ன சொல்லப் போறா.. ஜஸ்ட் த்ரீ டேஸ் தான்..”

“ம்ம்ம் சரி..” என்றாள் கொஞ்சம் தயங்கியே..

“உனக்கு இன்டரஸ்ட் இல்லைன்னா வேணாம்..” என்றவன், அவளைப் பார்க்க,

“வேணாம் சொன்னாலும் கம்ப்பல் பண்ணி கூட்டிட்டு போகணும்..” என்றாள் சிரித்து.

‘அடிப்பாவி..’ என்று பார்த்தவன் “நீதானே சொன்ன, உன்னை எதுக்கும் கம்ப்பல் செய்யக் கூடாதுன்னு..” என்று கேட்க,

“அது அப்போ.. இது இப்போ..” என்று அவனைப் போலவே சொல்லி கமலி சத்தமாய் சிரிக்க, “சரிதான் போ..” என்றவனும் அவளோடு இணைந்து சிரிக்க,

“அப்போ போலாம் தானே..” என்றான் இவனும் விடாது..

“போலாம் போலாம்..” என்றவள் “நான் இப்போ போய் அம்மாவை பார்த்துட்டு அப்படியே வீட்டுக்கு வந்திடட்டுமா..??” என்றாள் அவனைப் பார்த்து..

“ஹேய்.. இதுக்கேன் என்னை கேட்கிற??”

“கேட்காம போனா, அங்க அம்மா கேட்பாங்க... அப்புறம் உங்களை கேட்பாங்க.. இப்போ கேட்டா.. என்னை கேட்டான்னு நீங்க சொல்லிடுவீங்கதானே...” என்றபடி எழுந்தவளைப் பார்த்தவன்,

“சரியான ஆளுதான் நீ...” என்று சொல்லிக்கொண்டு அவனும் எழ, அவன் எழுவான் என்று தெரியாது அவனைக் கடக்கப் போனவள், கடைசியில் அவனை முட்டி நிற்க,

“ஏய் பார்த்து நில்லு கமலி..” என்று அவளை வனமாலி பிடித்து நிறுத்த,

“நான் பார்த்துதான் வந்தேன்..” என்று தலையை தெய்த்துக்கொண்டவள், “நீங்களும் பார்த்திருக்கணும்..” என,

“நான் பார்த்துட்டு தான் இருக்கேன்..” என்றான் கொஞ்சம் அமைதியான குரலில்..

இத்தனை நேரம் கொஞ்சம் சத்தமாகவே பேசியவன், இப்போது குரலை தழைக்க, அவனைப் பார்த்தவளுக்கு, வனமாலியின் பார்வை மாற்றம் புரிய, “கிளம்புங்க...” என்றாள் மெதுவாய்..

“நீயும் வா..” என்று அவளின் கரங்களைப் பற்ற,

“ஷ்...!!!! என்ன இது..” என்று விழிகளை விரித்தவளுக்கு பேச்சு வரவில்லை..

இப்படி செய்யவேண்டும் என்று அவனும் எதுவும் செய்யவில்லை, அவளுக்கும் இப்படி நிற்க வேண்டும் என்று நிற்கவில்லை.. எல்லாம் தானாகவே நடந்தது. ஒரு ரசவாதம்.. அவர்களுக்குள்.. முன்பே அடிமனதில் ஒருவித ஈர்ப்பு இருந்திருக்கவேண்டும்..

இல்லையெனில் இருவருமே திருமணம் வரைக்கும் எல்லாம் வந்திருக்கவே மாட்டார்கள்.. ஆயிரம் பிரச்னைகள் தங்களை சுற்றி இருந்தாலும் கூட, இருவருக்குமான இடையில் இருக்கும் உறவு என்பது ஆரோக்கியமாகவே இருந்தது. இதோ இப்போது அது அவர்களையும் அறியாது அடுத்தொரு நிலைக்கு செல்ல தயாராய் இருக்க,

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒருவித ஆர்வம் காட்டி இருவருமே அப்படியே நின்றிருக்க,

“அம்மா வீட்டுக்கு போகணும் சொன்ன??” என்றான் வனமாலி ஒரு புன்முறுவல் காட்டி..

“ம்ம்ம்... நீங்கதான் பிடிச்சிருக்கீங்க..” என்றவள் “இப்படியே சிரிங்க..” என,

“ஏன் இப்படி சிரிச்சா நல்லா இல்லையா..” என்றான் வாய் விட்டு சிரித்து..

“ம்ம்ஹும் இதைவிட அதுதான் ..” என்றவள் பேச்சு போகும் திசை உணர்ந்து, தாங்கள் இருக்கும் இடமும் உணர்ந்து,

“சரி சரி கிளம்பலாம்... வந்து எல்லாம் பேக் செய்யணும்.. த்ரீ டேஸ் தானே...” என்றபடி அவள் நடக்க,

“ம்மா ஆமா..” என்று அவனும் வர, இருவரும் அவரவர் காரில் ஏறி வெவ்வேறு திசை செல்ல, கமலி தான் சந்தோசமாய் இருப்பதாய் உணர்ந்தாள்.

இதழில் வந்து ஒரு புன்னகை ஒட்டிக்கொள்ள, சந்தோசமாகவே சிவகாமியைப் பார்க்கப் போனாள். அதே புன்னகையோடு வனமாலியும், தன் முகத்தினை கார் கண்ணாடியில் பார்த்துக்கொண்டவன், ஸ்டியரிங்கில் இரு விரல்களால் தட்டியபடி அடித்தபடி காரினை செலுத்த, அவனுக்கு நரசிம்மன் அழைப்பு விடுத்தார்.
 
மனதில் இருந்த உற்சாகம் வேறெதுவும் நினைக்க வைக்காது சந்தோசமாகவே வனமாலி “ஹலோ மாமா...” என்று சொல்ல,

“என்ன வனா எப்படி இருக்கீங்க எல்லாம்??” என்றார் அவரும்..

“எல்லாரும் ரொம்ப சௌக்கியம் மாமா...”

“சந்தோசம்பா.. அப்புறம் என்ன முடிவு பண்ணிருக்கீங்க நீயும் கமலியும்.” என்று அவர் கேட்ட பின்னே தான் நியாபகம் வந்தது அந்த காகித ஆலை விசயமாக கமலியிடம் பேசவேண்டும் என்று.

“நான் பேசிட்டு சொல்றேனே மாமா..”

“ஓ..!! அப்போ இதை பேசவேயில்லயா..” என்றவர் சிரித்தபடி “சீக்கிரம் ஒரு நல்ல பதிலா சொல்லுங்கப்பா..” என்றுவிட்டு வைக்க, வனமாலி மனதில் வேறொரு யோசனையும் இருந்தது அப்போது.

சரி கொடைக்கானல் போகையில் கமலியிடம் கேப்போம் என்று அவர்களின் தியேட்டர் செல்ல, கமலியோ அங்கே சிவகாமியிடம் “ம்மா நாளைக்கு கொடைக்கானல் போறோம்..” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.

சிவகாமி வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும், அவரோடு வீட்டிலேயே தங்கி, வீட்டு வேலைகள் பார்க்கவென்று ஒரு பெண்மணியை கமலி ஏற்பாடு செய்திருக்க,

சிவகாமியோ “தேவி, கமலிக்கு டீ போட்டு கொண்டு வா...” என்று சொல்ல,

“ம்ம்மா நான் என்ன விருந்தாளியா..” என்றாள் இவளும்.

“அப்படியில்லை.. ஆனா அம்மா வீட்ல கிடைக்கிற கவனிப்பு எங்கயும் கிடைக்காது..” என்றவர், “ம்ம் என்ன திடீர்னு கொடைக்கானல்..” என்றார் ஒன்றும் தெரியாதவர் போல்.

மனதிற்குள்ளே சந்தோசம் தான். பரவாயில்லை கமலியும் வனமாலியும் மனமொத்து வாழ்வது, அவருக்கு நிம்மதி கொடுத்தது. எங்கே எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அவருள்ளும் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்க, அதெல்லாம் எதுவுமில்லை எனும்விதமாய் கமலியும் வனமாலியும் இருப்பது அந்த தாய்க்கு தான் எடுத்த முடிவு சரியே என்ற முடிவிற்கு வர வைத்தது..

சிவகாமி கேட்ட கேள்வி கேட்டு, சிரித்தபடி டீயினை கமலி பருகியவள் “கொடைக்கானல்ல கொஞ்சத்தை வாங்கிட்டு வரலாம்னு போறோம்..” என்று கிண்டலாகவே சொல்ல,

பல வருடங்கள் கழித்து தன் மகளின் இயல்பான கல கலப்பு குணம் வெளி வருவதாய் இருந்தது சிவகாமிக்கு..

“ஓஹோ..!!! சரி நல்லா வாங்கிட்டு வாங்க..” என்றவர், “வீட்ல வேற எதுவுமில்லையே..” என,

“ம்ம்ஹும்.. எல்லாமே கப் சிப்.. முக்கியமா அவரோட அம்மா..” என்று கமலி சிரிக்க, இப்போது சிவகாமி முறைத்தார்..

“ம்மா நிஜமா அத்தைன்னு சொல்ல டக்குனு வரலை...”

“ஹ்ம்ம் நீ எப்போதான் திருந்தப் போறியோ..”

“நான் என்ன தப்பு பண்ணேன் திருந்த..”

“இதோ ஆரம்பிச்சிட்டியா.. இங்கபார் அதான் இனிமே உன்னோட குடும்பம்.. அதை மனசில வை..” என்று சிவகாமி முகம் திருப்ப,

“ம்ம் எல்லாம் தெரியும்..” என்றவள் “தாத்தா அந்த உயில் விஷயம் சொன்னாரா?” என்றாள் கொஞ்சம் முகத்தினை மாற்றி..

“ம்ம் ம்ம்.. சொன்னார்.. ஆனா அதைப்பத்தி பேச விரும்பலை.. நீங்க கொடைக்காணல் போயிட்டு வாங்க பேசிக்கலாம்..” என, அதன் பின் அம்மா மகள் பேச்சு நீண்டு, சிறிது நேரம் கழித்தே கமலி கிளம்ப, சிவகாமி மனதினில் இப்போது அந்த உயில் பற்றிய சிந்தனை..

கமலி வீட்டிற்கு வந்தாலோ, மணிராதா மட்டுமே இருந்தார். இன்னும் வனமாலி வந்திருக்கவில்லை. வந்தனா அங்கே எங்கேயும் கண்ணில் படுமாறு இல்லை. இதுவரைக்கும் மாமியார் மருமகள் என்று இருவரும் பேசியதேயில்லை.. அப்படியிருக்க இன்று இப்போது தனித்து இருக்க,

கமலி வந்தவளோ “வந்தனா...” என்று சொல்லியபடி அவளைத் தேட, மணிராதா ஒன்றுமே சொல்லாது அவளையே பார்த்துகொண்டு இருந்தார்.

‘எங்க போனா..’ என்றபடி சுற்றி சுற்றி பார்த்தவள், மணிராதாவைப் பார்க்க, அவரோ வேகமாய் பார்வையை திருப்பிக்கொண்டார்.

‘ஓ..!!! தனியா சிக்கிருக்காங்களா..’ என்று நினைத்தவள், வேண்டுமென்றே அங்கே இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு வந்தனாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

“எங்க வந்தனா இருக்கீங்க..??”

...

“ஓ.. சரி சரி.. இல்லை.. நாளைக்கு கொடைக்கானல் போலாம்னு உங்க அண்ணன் சொல்றார்..” என்றபடி கமலி மணிராதாவைப் பார்க்க, அவரோ ‘இதென்ன புதுசா..’ என்று பார்த்தார்..

...

“ஹே..!! அதெல்லாம் இல்லப்பா..” என்று சிரித்தவள் “சரி வீட்டுக்கு வாங்க..” என்றுவிட்டு வைத்துவிட, மணிராதாவிற்கு தலையும் புரியாது காலும் புரியாது ஒருநிலையில் இருக்க முடியவில்லை.

கமலி நிஜம் சொல்கிறாளா போய் சொல்கிறாளா என்று தெரியாது, வேறு யாரிடம் கேட்பது என்றும் விளங்காது, ஒருவித இம்சையில் அமர்ந்திருக்க, நல்லவேளை வனமாலியே வந்து சேர்ந்துவிட்டான் அங்கே. அம்மாவும் மனைவியும் அமைதியாய் ஆளுக்கு ஒருப்பக்கம் அமர்ந்திருக்க,

இருவரையும் ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி வந்தமர, மணிராதாவோ “வனா இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு.. பத்திரிக்கை எல்லாம் வைக்கணும்.. பத்திரிக்கை எப்போ வருமாம் ..” என்றார் மகனிடம்.

அவனோ கமலியைப் பார்க்க, கமலியோ இது எனக்கான கேள்வி இல்லை என்று அவளின் போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருக்க, “கமலி..” எஎன்றான் வனமாலி..

“ ம்ம்.. என்னங்க..“ என்று அப்போதுதான் பார்ப்பதுபோல் பார்க்க,

“இன்விடேஷன் என்னாச்சு..?”

“அங்கதானே வந்தீங்க.. அப்போவே கேட்டிருந்தா எடுத்தே காட்டிருப்பேனே..” என,

‘என்னது வனமாலி அங்கே போய்ட்டு வந்தானா.. பின்ன எதுக்கு தனி தனிய வர்றாங்க..’ என்ற குழப்பம் மணிராதா மனதில்..

“நான் கேட்கலைன்னா என்ன நீயே காட்டியிருக்கலாமே..”

“புதன் கிழமை நல்ல நாள் அன்னிக்கு வீட்டுக்கு எடுத்துட்டு வரலாம்னு இருந்தேன்.. அப்பிடியே முரளி அண்ணா வீட்லயும் கொடுத்துடலாம் இல்லையா..” என்றவள், “சரி நான் போய் பேக் பண்றேன்..” என்றுவிட்டு எழ,

மணிராதாவோ “வனா.. நாளைக்கு நம்ம மதுரைக்கு போகணும்.. வந்தனாக்கு மீனாட்சி அம்மன் கோவில்ல ஒரு நேர்ச்சி இருக்கு..” என்றார்..

கமலி அறைக்கு போகத் திரும்பியவள், மணிராதா சொன்னதை கேட்டு, திரும்பிப் பார்க்க, வனமாலியோ “என்னம்மா திடீர்னு..” என்று கேட்க, கமலியோ அவனைப் பார்த்து லேசாய் சிரித்துவிட்டு போனாள்.

‘இவ எதுக்கு சிரிக்கிறா..’ என்று யோசிக்க, அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது மணிராதா தெரிந்தே கேட்கிறார் என்று..

“ம்மா...” என்று அவரைப் பார்க்க,

அவரோ “நாளைக்கு போய்தான் ஆகணும் டா..” என்றார்..

“போகலாம் இல்லைன்னு இல்லை.. நாளைக்கு நானும் கமலியும் கொடைக்காணல் போகால்ம்னு இருக்கோம்..”

“என்ன திடீர்னு கொடைக்கானல்.. தலைக்கு மேல இங்க கல்யாண வேலை இருக்கு..” என்று மணிராதா கடிய,

“யார் ம்மா இல்லைன்னு சொன்னா.. எல்லாமே சரியா சரியான நேரத்துல நடக்கும்..” என்றவன் “மூணு நாள்ல திரும்பிடுவோம்..” என்றும் பொறுமையாகவே சொன்னான்..
 
“என்னது மூணு நாளா?? என்ன வனா?? அவங்களும் அங்க போயிட்டாங்க.. நானும் வந்தனாவும் மட்டும் எப்படி இருப்போம்..” என்று வீம்புக்கே மணிராதா பேச்சினை வளர்க்க, அவனுக்கு எரிச்சலாகியது..

என்னடா இது இருந்திருந்து கிளம்பினால் இப்படியா என்று. உண்மைதான் வேலைகள் நிறைய இருக்கிறதுதான். ஆனால் அதெல்லாம் செய்து முடிக்கவும் நேரமிருக்கிறது. வனமாலி எல்லா ஏற்பாடுகளும் செய்தும் இருக்கிறான்தான். கோவர்த்தன் வேறு இருக்கிறானே.. ஒரு மூன்று நாளைக்கு அவன் சாமாளிக்க மாட்டானா என்றும் தோன்ற,

“ம்மா என்னம்மா நீ.. இதென்ன புது வீடா.. இல்லை புது ஊரா.. தனா கிட்ட சொன்னா வந்துட்டு போறான்.. அதுக்கென்ன..” என்று வனமாலியும் சொல்ல,

“என்னவோ நீ பண்ற எதுவுமே சரில்லை வனா.. என் மகன் எப்பவும் சரியா இருப்பான்னு நினைச்சேன்.. ஆனா நீ என்கிட்டே சொன்னது ஒண்ணு செய்றது ஒண்ணு..” என்றார் மணிராதா.

வனமாலியும் கடுப்புடனே “என்ன செஞ்சிட்டேன் இப்போ??” என்று சத்தம் கூட்ட,

“பின்ன என்னடா.. பெரிய இவனாட்டம் வந்து, சிவகாமி அத்தைக்கு நீங்க பாவம் பண்ணிட்டீங்க.. அதெல்லாம் சேர்த்து வஞ்சு இப்போ எங்களை ஆட்டுது.. அதுனால தான் கமலியை கல்யாணம் பண்றேன்னு அது இதுன்னு சொன்ன.. இப்போ தங்கச்சி கல்யாண வேலை அத்தனை இருக்கு, நீபாட்டுக்கு பொண்டாட்டிய கூட்டிட்டு ஊர் சுத்த போனா என்ன அர்த்தம்..” என்று மணிராதா வார்த்தைகளை விட,

“ம்மா...!!!!!” என்று வனமாலி சத்தமாய் கத்திட, இதெல்லாம் கமலிக்கு உள்ளேயும் கேட்டது..

ஊருக்கு செல்வதற்கு என்று பெட்டியில் துணிகளை அடுக்கிக்கொண்டு இருந்தவளுக்கு, இந்த பேச்செல்லாம் தன்னைப்போல் காதில் விழ, மணிராதா இறுதியாக சொன்னதில் அப்படியே கைவேலை நிற்க, அவளும் அதிர்ந்து போனாள்..

‘அப்.. அப்போ...’ என்று அதிர்ந்தவளுக்கு, வனமாலி ஒவ்வொரு முறை அவளை சந்தித்ததும், பேசியதும், திருமணம் செய்யக் கேட்டது எல்லாம் நினைவில் வர, கடைசியாய், சிவகாமி கேட்டதுமே சரி என்றதும் இப்போது மணிராதா சொன்னதும் சேர்த்து அவளுள் இருந்த மகிழ்வை அடியோடு அழிக்க,

பல நாட்களுக்குப் பிறகு கமலியின் கண்கள் கலங்கிப்போய் சிவந்துப்போய் நிற்க, வனமாலி வெளியே என்ன பேசினான் என்றெல்லாம் கேட்கவில்லை, அவன் உள்ளே வந்து “கமலி..” என்று அவளின் தோள் தொட,

“தொடாதீங்க..” என்று தள்ளி நின்றாள்.

“கமலி...!!!” என்று வனமாலி அவளைப் பார்க்க, அவளின் கண்களில் அன்று வந்தனாவின் நிட்சயதன்று பார்த்தே அதே ஜொலிப்பும் சிவப்பும்..

‘க.. கமலி...’ என்று வனமாலியின் இதழ்கள் முணுமுணுக்க,

“எமாத்திட்டீங்கல்ல...” என்றாள் கமலி அடக்கப்பட்ட கோபத்தோடு..

“இல்ல கமலி.. நா...” என்று அவள் கைகளை உயர்த்தி “உங்கக்கிட்ட கொஞ்சம் கூட இதை நான் எதிர்ப்பார்க்கலை.. அப்போ உங்கம்மா செஞ்ச பாவத்தை கழுவத்தான் என்னை கல்யாணம் பண்ணீங்களா.. ச்சி.. இதுக்கு நீங்க என்னை கொன்னிருக்கலாம்..” என்று முகத்தை சுறுக்கியவள்,

“எல்லாத்தையும் விட இது எனக்கு ரொம்ப வலிக்குது..” என்றுசொல்லி அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.

“அச்சோ கமலி.. அப்.. அப்படியெல்லாம் இல்லை..”

“வேற எப்படி.. அதான் உங்கம்மாவே சொன்னாங்களே... சோ அதனால தான் அவங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க இல்லையா..” என்றவளின் கண்களில் அவளையும் அறியாது கண்ணீர் வழிய,

“ப்ளீஸ் கமலி.. அப்படியெல்லாம் இல்லை..” என்றான் ஒருவித கெஞ்சலுடன்..

இப்போதுதான் இருவருக்குள்ளும் அனைத்தும் சரியாகி, ஒருவித சந்தோசம் துளிர்விடுகிறது என்று அவன் எண்ணிக் களித்திருக்க, விதி அவனின் அம்மா ரூபத்திலேயே வந்து விளையாடும் என்று வனமாலி எண்ணவேயில்லை. ஆனால் மணிராதாவும் இதனை கமலி காதுபாடு சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை.

என்னவோ மகன் அந்த நேரத்தில், தங்களை விட்டு கிளம்புவது மனதிற்கு பிடித்தமில்லை, அதை சொல்லும் விதத்தில் சொல்லியிருக்கலாம் ஆனால் இப்படி சொதப்பி சொல்லிட, அது வனமாலி கமலி பிணைப்பிலும் சொதப்பலை கண்டது..

“வேற எப்படி?? ஹா வேற எப்படி சொல்லுங்க.. அப்போ உங்கம்மா சொன்னது பொய்யா.. இல்லை நான் கேட்டது பொய்யா..” என்று கமலி கேட்க, வனமாலியோ பதிலே சொல்லாது நின்றான்..

“சோ.. இது தான் ரீசன்ல??”

“கண்டிப்பா இல்லை கமலி.. ஆனா..”

“என்ன ஆனா..??!!”

“அம்மாவை சம்மதம் சொல்ல வைக்க எனக்கு அந்த நேரத்துல வேற காரணமும் தெரியலை..” என்றான் ஒப்புக்கொள்ளும் விதமாய்..

“ம்ம்...” என்று விரக்தியாய் சிரித்தவள் “நிஜமா வலிக்குது..” என்றுசொல்ல,

‘ஐயோ..’ என்றுதான் ஆனது வனமாலிக்கு..
 
super mam
 
Top