Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 14:

சக்திக்காக பாதி ஊரே கொந்தளித்தது.எப்படி எங்க சக்தியைப் பார்த்து யாருன்னே தெரியாது என்று அவர் சொல்லலாம்...?என ஊரே அல்லோலப் பட....மகாலிங்கம் அனைத்தையும் தடுத்து விட்டார்.

“இது என் பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சனை...அதனால நானே பார்த்துக்கறேன்...தயவு செஞ்சு யாரும் இதை பெரிசு பண்ண வேண்டாம்..!” என்று அவர் கேட்டுக் கொள்ள..கொஞ்சம் அமைதியாகினர் ஊர் மக்கள்.

“ஒருவேளை...அந்த அஜய் சொல்றது தான் உண்மையா இருக்குமோ என்னவோ..?” என்று மகாலிங்கத்திற்கு எதிரானவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் பேச...அதையெல்லாம் மௌனமாக கடந்தார் லிங்கம்.

அவருக்கு..சக்தியின் வாழ்வை நேர் செய்வது தான் அப்போதைய முக்கிய கடமையாகப் பட்டது.அதானால் தானோ என்னவோ... அனைத்தையும் எளிதாக கடக்க முடிந்தது அவரால்.அப்பொழுதும் கூட... அவர் சக்தியை கட்டாயப்படுத்தவில்லை.எல்லாமே அவள் விருப்பம் என்று அவள் போக்கிற்கு விட்டு விட்டார்.

சக்திதான் என்ன செய்வதென்று தெரியாமல்...அறைக்குள்ளேயே முடங்கியிருந்தாள். அடுத்து என்ன செய்வதென்ற யோசனை அவள் சிந்தனையில் ஓடிக் கொண்டிருக்க.... அஜய்யின் தாய் பேசிய பேச்சுக்கள்...நாராசூரமாய் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஒருவன் தன் வாழ்க்கையில் விளையாடி விட்டு போயிருக்கிறான்.. அதோடு இல்லாமல்...பொதுவிலும் தன்னை அசிங்கப் படுத்தியிருக்கிறான்....அவன் அம்மா என்னவோ..நான்..அவனுக்காக அலைவதைப் போல பேசியிருக்காங்க...! இவ்வளவு நடந்தும் அவன் பக்கத்தில் இருந்து எந்த ஒரு மன்னிப்பும் வரலை..

“என்ன நினச்சுட்டு இருக்கான் அவன்...கிராமத்துல பொறந்தவளுக்கு ஒன்னும் தெரியாதுன்னா..?இல்லை ஒண்ணுமே பண்ண முடியாதுன்னா..?” என்று எண்ணியவள்..

“அவ்வளவு சீக்கிரம் உன்னை நான் நிம்மதியா இருக்க விட்டுடுவேனா.. .நீ என்னை இவ்வளவு கேவலப்படுத்திட்டு..வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா சுத்துவ..? நான் மட்டும் சிலுவை சுமக்குனுமா....?” என்று எண்ணியவள்...
“இந்த சக்தி யாருன்னு உனக்கு தெரிய வேண்டாம்...?ஏண்டா இவகிட்ட வச்சுகிட்டோம்ன்னு நீயும்,உங்க அம்மாவும் கதற வேண்டாம்...நடக்கும்... கண்டிப்பா நடக்கும்..நடத்திக் காட்டுவேன் நான்..!” என்று தனக்குள்ளாகவே சபதம் எடுத்துக் கொண்டாள்.

ஆவதும் பெண்ணாலே..!அழிவதும் பெண்ணாலே..! என்று சும்மாவா சொன்னார்கள்...பெண் ஆக்கும் சக்தியாவும் இருப்பாள்..அளிக்கும் காளியாவும் இருப்பாள் என்பது சக்தியின் விஷயத்தில் உறுதியாகிப் போனது.

இவள் சபதத்தை அறியாத அஜய்..அங்கு இவனை நினைத்து வருந்திக் கொண்டிருந்தான்.

பாப்பம்மாவின் அருகில் சென்ற சக்தி...”பாட்டி நாம சென்னைக்கு கிளம்பலாம்..!” என்றாள் மொட்டையாக.

முதலில் புரியாமல் முழித்தவர்...சிறிது யோசனைக்கு பிறகு தெளிவு அடைந்தவராய்..”என்ன சக்தி...உடனே நாம எப்படி போக முடியும்..?” என்றார்.

“ஏன் பஸ்ல தான்...” என்றவள்...என்ன நினைத்தாளோ...”இல்லை கார்ல போகலாம்..!” என்றாள்.

“கொஞ்சம் அமைதியா இரு சக்தி....அவங்க வந்து கூட்டிட்டு போறது தான் முறை..” என்று அவர் சொல்ல..

“அவங்க இந்த ஜென்மத்துக்கு வர மாட்டாங்க..அதே சமயம்..என் கழுத்தில் தாலியும் இல்லை..அதனால் சம்பிரதாயம் எல்லாம் நாம எதிர்பார்க்க முடியாது...நாமளே கிளம்பலாம்..அப்பாகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணுங்க.. நான் போய் கிளம்ப தேவையானதை எடுத்து வைக்கிறேன்..!” என்று தீர்க்கமாய் பேசி விட்டு செல்லும் சக்தியை அவரால் அடக்க முடியவில்லை.
அவர் மகாலிங்கத்திடம் விஷயத்தை சொல்ல....

“எப்படிம்மா...? அவங்க வீட்டு அட்ரஸ் கூட நமக்கு தெரியாது..எந்த தைரியத்தில் நாம அங்க போய் நிக்க முடியும்...அவர் வந்து ஏதாவது பேசினால் சரி..ஆனா அப்படியும் வர மாதிரி தெரியலை...வேணுமின்னா பெரிய ஆளு பத்து பேரைக் கூட்டிட்டு போயி பஞ்சாயத்து பேசுவோமா..?” என்று தான் ஒரு கிராமத்தை சேர்ந்தவன் என்பதை தவறாமல் நிரூபித்தார் லிங்கம்.

“அதுக்கு அவசியம் இல்லைப்பா..!” என்றாள் சக்தி அங்கு வந்தவள்.

“ஏன்மா..நாம எப்படி அங்க..?” என்றார்.

“அப்பா..உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்குள்ள..இல்லை நம்ம பொண்ணு அதிகம் படிக்காதவ..அங்க போயி என்ன பண்ணுவான்னு யோசிக்கிறிங்களா..?” என்றாள்.

“அப்படியில்லை சக்தி..” என்று அவர் இழுக்க...

“சக்தி..! அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.இப்ப அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணனுமா..?” என்றார் பாட்டி.

“நீ சும்மா இரு பாட்டி..அதுக்கு தான் கார்ல போகலாம்ன்னு சொல்றேன்..!” என்றாள்.

எப்போதும்..எதற்கும் பிடிவாதம் பிடிக்காத மகள்...இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறாள் என்றால்...ஏதாவது முக்கியமான காரணமாக இருக்கும் என்று உணர்ந்த மகாலிங்கம்.... அவள் சொன்னதுக்கு சரி சொல்ல..அவளை யோசனையுடன் பார்த்தார் பாட்டி.

“சக்தி...அங்க போயி...எந்த வம்பும் பண்ணாம...அவன் கூட சேர்ந்து வாழ தயார்ன்னா மட்டும் தான் அங்க போகணும்...மத்த படி உன் மனசில் வேற இல்லையே..?” என்றார் குறிப்பாக.

பாட்டியின் புத்தி சாதூர்யத்தை கண்டு வியந்த சக்தி...

“கவலைப்படாதிங்க பாட்டி...! நான் என்னைக்கும் அப்பாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மாட்டேன்..!” என்றாள் பழக்க தோஷத்தில்.

“அப்போ...இப்ப எற்படுத்துனது..?” என்று பாட்டி பட்டென்று கேட்க....அந்த கேள்வியில் தலையைக் குனிந்தாள் சக்தி.அந்த தலைகுனிவு கூட ஒரு நிமிடம் தான்.

படக்கென்று நிமிர்ந்தவள்....’அந்த தலைகுனிவு நிச்சயமா என்னால் இல்லை பாட்டி..! எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்...” என்றாள் நிமிர்வாய்.

“பாதிப்பு உனக்கு தானே..!” என்றார்.

“தப்பு செஞ்ச அவனே அவ்வளவு தைரியமா இருக்கும் போது...எனக்கு என்ன பாதிப்பு வர போகுது....” என்றாள் தீவிரமாய்.

“நாமளா போனா..நமக்கு அங்க மரியாதை இருக்குமா..?” என்றார்.

“கண்டிப்பா இருக்காது..! அதையெல்லாம் பார்த்தா கதைக்கு ஆகுமா..?” என்றாள்.

அதற்கு அங்கு வந்த மருதாணி...விஷயத்தைக் கேள்விப்பட்டு நம்ப முடியாமல் சக்தியைப் பார்க்க...

“என்ன..?” என்பதைப் போல பார்த்தாள் சக்தி.

“இல்லை அஜய் சாருக்கு...தண்டனை..அது இதுன்னு பேசுன..? இப்ப என்னடான்னா..எல்லாம் தலைகீழா நடக்குது..!” என்று காதைக் கடிக்க...

“என் கூட வாழ்றதே அவனுக்கு ஒரு தண்டனை தான..?” என்றாள் இறுமாப்பாய்.

“சக்தி..!” என்று அவள் அதிர...

“ஆமாடி...!இந்த பட்டிக் காடு..,இந்த படிப்பு இல்லாதவ...,அவனை கைக்குள்ள போடா நினச்சவ...இன்னமும் அவங்க சொன்ன எல்லாமே நான் தான..அப்ப என் கூட சேர்ந்து வாழ்வதைத் தவிர அவனுக்கு ஒரு பெரிய தண்டனை இருக்க போகுதா என்ன..?” என்றாள்.

“எனக்கென்னமோ..சரியா படலைடி...!” என்றாள்.

“அதெல்லாம் சரியா வரும்...நீ மட்டும் எனக்கு ஒன்னு பண்ணணும்டி..” என்றாள்.

“சொல்லுடி...!” என்றாள் ஆதரவாய்.

“அப்பாவை..நீ..நீதான் பார்த்துக்கணும்..அப்படியே பாட்டியையும்...” என்றாள் அரைமனதாய்.
அவர்களை விட்டு பிரிய நேரும் என்பதால் தான்....அவள் வெளியில் இருந்து வந்த மாப்பிள்ளைகளை எல்லாம் வேண்டாம் என்றாள்.

ஆனால் விதி அவளை நெடும் தூர பயணத்திற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறது.

“ஏய்..என்னடி..? அய்யாவை நான் பார்த்துக்க மாட்டேனா..? கல்யாணமே ஆனாலும்...இந்தா இருக்கு பக்கத்து ஊரு...அங்க தான் போகப் போறேன்..அதனால் நான் பார்த்துக்கறேன்.. கவலைப் படாதடி... அதுமட்டுமில்லாம...குப்பாயி அக்கா...பாட்டி எல்லாரும் இருக்காங்க தானே..!” என்றாள் மருதாணி அவள் கவலை போக்கும் பொருட்டு.

“சக்தி...நானும் உன்கூட கொஞ்ச நாள் அங்க தான் இருப்பேன்..!” என்று பாட்டி சொல்ல..அவரின் குரலில் நிமிர்ந்தாள் சக்தி.

“என்ன சொல்ற பாட்டி..! அதெல்லாம் வேண்டாம்..நான் பார்த்துக்கறேன்..!” என்றாள்.

“என்ன நீ பார்த்துக்குவ..? கழுத்துல தாலியும் இல்லை..அங்க போனா என்ன நடக்கும்ன்னும் தெரியலை....அப்படி இருக்கும் போது..உன்னை விட்டுட்டு நான் எப்படி இங்க நிம்மதியா இருக்க முடியும்...பேசாம இரு..!” என்று பாட்டி அதட்ட...

“பாட்டி உன் பிரண்டு...அந்த கிழவியைப் பார்க்காம எப்படி இருப்ப...? அதுமில்லாம..இங்க போட்டது போட்டபடி இருக்கு...இன்னும் இருபது நாள்ல..அறுவடை பண்ணனும்..அதையெல்லாம் நீ இருந்தா தான் பார்க்க முடியும்..” என்று சக்தி நிலைமையை விளக்கி சொல்ல...

“அதெல்லாம் உன் அப்பன் வந்து பார்த்துக்கட்டும்.. என் பிரண்டை நான் அப்பறம் வந்து பார்த்துக்கறேன்...உன்னைத் தவிர எங்களுக்கு எதுவும் பெருசு இல்ல..” என்று பாட்டி பேச்சை முடித்துக் கொண்டு செல்ல...

“என்னமோ செய்யுங்க...! கிளம்புங்க..!” என்று சொல்ல...

“நாளைக்கு தான...பேசாம போயி படு..!” என்று பாட்டி சொல்ல..

“பாட்டி நாம இப்பவே கிளம்புறோம்..அப்ப தான் காலையில அங்க போக முடியும்...” என்றாள்.

“ஏன் சக்தி..உனக்கு மண்டை கிண்ட கழண்டு கிச்சா...இருட்டிடுச்சு...விடிஞ்ச பிறகு போகலாம்..” என்று பாட்டி சொல்ல...

“நான் அப்பாகிட்ட சொல்லிட்டேன்...இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வந்துடும்..நாம போறோம்..!” என்றபடி அவள் அறைக்குள் சென்று விட..

“இந்த புள்ளைக்கு எங்க இருந்து வந்தது இவ்வளவு பிடிவாதம்...?” என்று பாட்டி புலம்ப...

“விடுங்க பாட்டி..சக்தியைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா...? எல்லாம் நல்லபடியாவே நடக்கும்...!” என்று சொல்ல...
உள்ளே சென்ற சக்தியோ....பலவித யோசனையில் இருந்தாள்.

அவன் வீட்டு முகவரி தெரியா விட்டாலும்....அவன் இருக்கும் ஏரியாவை... டிவியில் விடாமல் காட்டிக்
கொண்டிருந்ததில்..அதனை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

வாழ்க்கைக்கு அடிப்படை நம்பிக்கை..அடுத்து காதல்...அதற்கு அடுத்து தான் பாசம்,பிணைப்பு எல்லாம்..ஆனால் இதில் ஒன்று கூட அவளிடம் இல்லை.

எந்த தைரியத்தில் அவள் சென்னை செல்ல முடிவு எடுத்தால் என்று சக்திக்கே தெரியவில்லை.அவனை பழிவாங்குவதாய் நினைத்து...தன் வாழ்வில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்வாளா..? இல்லை மலரை அள்ளி போட்டுக் கொள்வாளா..? என்பதை யாரும் அறிய முடியவில்லை.

பிறந்ததில் இருந்து சுற்றி வந்த ஊர்...சுதந்திரமாய் சுற்றி திரிந்த வயல்கள்...தோப்புகள்... தனிக்காட்டு ராணியாய்..அந்த வீட்டிற்கே செல்லமாய் வளைய வந்தவள்....

முன்ன பின்ன..பெயருக்கு கூட சென்னை சென்றதில்லை..அவ்வளவு பெரிய ஊர்...முற்றிலும் தனக்கு பிடிக்காத சூழ்நிலை...பிடிக்காத மனிதர்கள்....இவைகளுக்கு இடையில் எந்த நம்பிக்கையில்..வாழ்வைத் தீர்மானித்தாள் என்று தெரியவில்லை.

அஜய்யின் மேல்...மனதின் ஓரத்தில்...அவளுக்கு இருந்த..ஏதோ ஒரு சிறு நம்பிக்கைதான்.. இதையெல்லாம் செய்யத் தூண்டுகிறது என்று சொன்னால்....அதை சக்தி நிச்சயமாய் ஒப்புக் கொள்ள மாட்டாள். நாம் காணும் கனவு வாழ்க்கைக்கும்,நிஜத்தில் நமக்கு அமையும் வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்யாசம்..

சக்தி கண்ட கனவு வேறு....அவள் பெற்ற வாழ்க்கை வேறு...... சம்பிரதாயங்களில் வாழ்க்கைப் பூட்டபடலாம்...!ஆனால் சம்பிரதாயங்களால்.. மனதினை பூட்ட முடியுமா..?கிடைத்ததை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் தான் இங்கு ஏராளம்.அந்த வகையில் சக்தியும் அப்படித்தான்.

என்ன ஒரு வித்யாசம்..எல்லா பெண்களும் கனவில் மட்டும் நினைக்கும் சில விஷயங்கள்..அவளுக்கு நிஜத்தில் கிடைத்திருக்கிறது. ஆனால் அதன் அருமை அவளுக்கு எப்போது தெரியும் என்றால்..அதற்கு விடை தெரியாது.
விடை தெரியாத பல கேள்விகளுடன் பயணிப்பது தானே வாழ்க்கை. முன்கூட்டியே விடை தெரிந்த வினாக்களின் சுவாரஸ்யம் குறைந்து விடுமே..?

இப்படி பல சிந்தனைகள்...மனதில் ஓடிக் கொண்டிருக்க...தன்னுடைய பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் சக்தி.
அதிகம்...தாவணி அணிந்ததால்..அவளிடம் சேலைகள் கொஞ்சமே இருந்தது.அதை அனைத்தையும் அவள் எடுத்து வைத்துக் கொண்டிருக்க..அவளை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் மருதாணி.

ஏதோ மறுவீடு முடித்து..கணவன் வீடு செல்வதைப் போல..வெகு சகஜமாய் அவள் கிளம்பிக் கொண்டிருந்தது தான்...அவளுக்கு ஆச்சர்யம்...ஆனால் அதை எண்ணி.அவளுக்கு மகிழ்ச்சியே..!

சிறிது நேரத்தில் காரும் வந்துவிட...கிளம்பினர் மூவரும்.டிரைவர் அவர்களுக்கு தெரிந்தவராக இருக்க..நான்கு பேராக கிளம்பினர். காரினுள் பலத்த அமைதி நிலவியது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனையில் இருக்க....சக்திக்கோ..மிகுந்த பாரமாய் இருந்தது.

“கடைசியில் அவனைத் தேடி நாம போக வேண்டிய நிலைமை வந்துடுச்சே..” என்று நினைத்தவளுக்கு ஏனோ கடுப்பாய் வந்தது.

“அவனா வரமாட்டேன்னு சொன்னான்...நீ பிடிவாதம் பிடிச்சதுக்கு அவன் என்ன பண்ணுவான்..?” என்று மனசாட்சி கிண்டல் அடிக்க...அதை அடக்கினாள்.

கத்தரி பூ வண்ண சேலையில்....ஓவியம் போல் இருந்தவளைப் பார்த்து...பாப்பம்மாவிற்கு மனதிற்குள் பெருமை பிடிபடவில்லை.
“என்ன இருந்தாலும்...அழகுல என் பேத்தியை அடிச்சுக்க முடியாது...!” என்று பெருமை கொண்டார்.

ஆனால் இதை எல்லாம் அறியாத அஜய்யோ...அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். வெகுநேரம்...அவளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தவன்.. அப்படியே தூங்கிவிட்டான். கொஞ்ச நேரத்திலேயே...பாட்டிக்கு கால்வலி எடுக்க....அவரின் முகம் பார்த்தவள் அதை அறிந்து கொண்டாள்.

“இதுக்குதான் உன்னைய வேண்டாம்ன்னு சொன்னேன்..! எங்க கேட்குற..? அந்த பக்கம் தள்ளி..அப்படியே சாஞ்சு...காலைத் தூக்கி என் மடில வச்சுக்க பாட்டி..” என்றாள்.

“அட..அதெல்லாம் ஒண்ணுமில்லை...!இந்த கால்வலி எனக்கு என்ன புதுசா...நீ உன் புருஷன் கூட சந்தோஷமா இருந்தாலே...எனக்கு உடம்புக்கு ஒரு நோவும் வராது..” என்றார் சமயம் பார்த்து.

“இந்த பாட்டி வேற நேரம் காலம் இல்லாமல்...சந்துல..சைக்கிள் ஓட்டுது..அவன் கூட நான் சந்தோஷமா இருந்துட்டாலும்..என் வேலை முடுஞ்ச உடனே..நான் நம்ம ஊருக்கே வந்துடுவேன் பாட்டி..உங்களை எல்லாம் விட்டுட்டு நான் எப்படி இருப்பேன்..” என்று மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டாள்.வெளியில் சொன்னால்..அதற்கும் கிழவி பாடம் எடுக்கும்...என்று எண்ணினாள்போலும்.

காலை ஐந்து மணிக்கே..சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

“அண்ணா..உங்களுக்கு இங்க எல்லா ஏரியாவும் தெரியும் தானே..!” என்றாள்.

“தெரியும்மா...லாரில காய்கறி லோடு ஏத்திட்டு...நான் ரெகுலரா வந்து போவேன்...!” என்றார் அவர்.

அவள் அவன் இருக்கும் ஏரியாவின் பெயரை சொல்ல...அதனை நோக்கி வண்டியை விட்டார் அவர்.

ஆனால்..அவன் வீட்டை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை அவர்களுக்கு.நிறுத்தி யாரைக் கேட்டாலும்..அவர்களை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு சென்றனர்.

பின்னே...ஒரு வளர்ந்த ஹீரோவின் வீட்டைக் கேட்டால்..நம்மை என்ன நினைப்பார்கள்..?

ஒருவழியாக...அவர்கள்...அவன் வீட்டை கண்டுபிடித்து வர...மணி ஏழைத் தொட்டிருந்தது.

“ச்ச்ச...முதல்ல ஒரு நல்ல போன் வாங்கணும்....அது இருந்திருந்தா இவ்வளவு நேரம் அலைந்திருக்க தேவையில்லை..” என்று எண்ணிக் கொண்டாள் சக்தி.

அஜய்யின் வீட்டிற்கு கொஞ்சம் முன்னதாகவே காரை நிறுத்த.... காரினுள் இருந்து அவனுடைய வீட்டைப் பார்த்தாள் சக்தி.
நேரில் வீடு இன்னமும் பிரம்மாண்டமாகத் தெரிய..அந்த வீட்டின் பிரம்மாண்டத்தில்..சக்திக்கு உள்ளே உதறல் எடுக்கத்தான் செய்தது.

“சக்தி...இந்த வீடா..?” என்று பாட்டி கேட்க...

“ஆமாம் பாட்டி..!” என்றாள்.

“பரவாயில்லை சக்தி..வீட்டை நல்லா பெருசாதான் கட்டியிருக்காக..!” என்றார் பாட்டி வெகுளியாய்.
ஆனால் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...அந்த வீட்டின் அழகை விட..உள்ளே இருப்பவர்களின் அக அழகு மிகக் குறைவு என்று.

“இப்ப நாம எப்படி போறது..?” என்றார்.

“நாம போனாலே....தன்னால வழி விடனும்...அப்பறம் பாட்டி..அங்க என்ன நடந்தாலும்...நீ எதுவும் பேசக்கூடாது...!” என்று அவரை எச்சரித்தாள் அவள்.

“என்ன செய்ய போற..?” என்றார்.

“எனக்கே இன்னும் தெரியாது..! என்ன வேணும்ன்னாலும் நடக்கலாம்..இங்க அமைதியா இருந்தா..நம்ம தலையில மிளகாய் அரச்சிடுவாங்க...அதனால நம்ம வாய் மட்டும் தான் இப்போதைக்கு ஆய்தம்...வா..!” என்று அவருடன் கீழே இறங்கினாள்.
பெண்ணைப் பெற்ற தகப்பனாய்...லிங்கத்திற்கு...அந்த நிமிடம் உயிரே போவது போல் இருந்தது.

வேறு எந்த தகப்பனுக்கும்...என்னைப் போன்ற நிலைமை வரக் கூடாது என்று எண்ணிக் கொண்டார்.

வீட்டின் வாட்ச்மேன்..இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க.... இவர்களும்... வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.
நிலைமை கைமீறுமா...?
 
Top