Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 15.2

Advertisement

Part 2

அவனது அதிகாரமான பேச்சில் சிலிர்த்துக்கொண்டவள், “என்னால இதுக்கு கட்டுப்பட முடியாது கௌரவ். அதே போல எப்பாடுபட்டாவது இந்த கல்யாணத்தை நிறுத்தியே தீருவேன். இதுன்னு இல்லை, இதுபோல் கல்யாணங்கள் நடக்காம என்னால முடிஞ்ச வரைக்கும் போராடுவேன்...” அவனிடம் மூச்சு வாங்க மல்லுக்கு நின்றவள்,

“அந்த பொறுக்கி ராஸ்கல் பத்தி எல்லாம் தெரிஞ்சும் நீங்க இப்படி பேசறது கொஞ்சமும் சரியில்லை கௌரவ். எனக்கு ஹெல்ப் பண்ணலைனாலும் பரவாயில்லை. என்னை தடுக்காம இருங்க. அது போதும்...”

திரும்ப திரும்ப ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்கிறாளே என ஆயாசம் கொண்டவன் கொஞ்சம் தணிந்து பேச ஆரம்பித்தான்.
“ஹர்ஷூ சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாத. என் பேச்சை கொஞ்சமாவது கேளுடா. நான் நம்மளோட நல்லதுக்குதான் சொல்றேன்...” மன்றாடும் குரலில் கேட்டவனை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல்,

“அப்போ மீனுக்குட்டி வாழ்க்கை எப்படி போனாலும் உனக்கு கவலை இல்லையா கௌரவ்? நீ எவ்வளோ சுயநலம் பிடிச்சவன். உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை கௌரவ்...” அவனின் பேச்சை கேட்காமல் அவனையே குற்றம் சொல்ல அதில் வெகுண்டவன்,

“ஆமா நான் செல்ஃபிஷ் தான். இதுல எனக்கு எந்த அவமானவும் அசிங்கமும் வந்திடபோவதில்லை. யார் எப்படி போனா எனக்கென்ன? அந்த மீனு எனக்கு யாரு? அவளை பத்தி நான் கவலைப்பட? எனக்கு என் குடும்பம் முக்கியம். என்னோட குடும்பம்னு சொன்னது நான் என்னோட வொய்ப் நீ, நமக்கு பிறக்கபோகும் குழந்தைங்க. அவ்வளோதான். புரிஞ்சதா?...”

இப்படி வெடிப்பான் என்று எதிர்பார்க்காத ஹர்ஷூவும் தன் பங்கிற்கு பேச ஆரம்பித்தாள்.

“நீ என்ன சொன்னாலும் இதிலிருந்து நான் பின்வாங்க போவதில்லை கௌரவ். நீன்னு இல்லை யாருக்காவும் நான் ஒரு அடி கூட பின்னாடி எடுத்துவைக்க மாட்டேன். நீ என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ. என்னோட முடிவிலிருந்து நான் மாறப்போறது இல்லை...”
அவளது பேச்சு கிளப்பிய ஆத்திரத்தில் கைக்கு அகப்பட்ட அவளது மொபைலை தூக்கி எறிந்தேவிட்டான். அந்த வேகத்தில் சுவற்றில் பட்டு போன் சுக்குநூறாக சிதறிப்போனது.

அப்போதும் அடக்கமுடியாத கோவத்தோடு ஹர்ஷூவை பார்த்தால் அவள் அவனது கோவத்தை பொருட்படுத்தாமல் “நீ என்னவென்றாலும் செய்துகொள்.. எனக்கொன்றுமில்லை...” என்பதை போல அவள் முடிவில் ஸ்திரமாக இருப்பதை கண்டு அவனையறியாமல் வார்த்தையை விட்டான்.

“எங்கப்பாக்கிட்ட சொன்னேன் ஹர்ஷூ. எந்த ஒரு சூழ்நிலையிலையும் நீ என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்காக வருத்தபடவிடாம உன்னை நல்லா பார்த்துப்பேன்னு...”

அவனது இந்த வார்த்தை ஹர்ஷூவிற்கு அப்படி ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்றாலும் இப்போது எதற்காக இதை சொல்கிறானென்று குழம்பி நின்றாள்.

“ஆனா இப்போ சொல்றேன். உன்னோட இந்த அடமென்ட்டான ஆக்ட்டிவிட்டீஸ் நான் உன்னை காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்போன்னு என்னையே வருத்தபட வச்சிடும்னு எனக்கு தோணுது...”

ஹர்ஷூவிற்கு தான் கேட்டது உண்மைதானா என நம்பமுடியாத திகைப்பில் இருந்தாள். ஷக்தியின் இந்த பேச்சு அவளை உயிரோடு சிதையிலிட்டு கொளுத்தியது போன்ற ஒரு வலியை கொடுத்தது.

“இதற்கு நீ என்னை கொன்றே போட்டிருக்கலாம்...” என துடித்துக்கொண்டிருந்தாள்.
உயிரோடு கொள்ளும் அந்த வார்த்தைகளை சொன்னவன் ஒரு நொடியும் தாமதிக்காமல் அவளை நிமிர்ந்து பார்க்க திராணியற்று அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

அவனுக்கு தெரியும் இவனது பேச்சில் அவளது மனம் ரணப்பட்டு போயிருக்கும் என்று. இவன் மீதான காதலை அவள் உணரவில்லை என்றாலும் இவனுக்கு உணர்த்தினாள் தானே. அவளது ஒவ்வொரு செய்கையும் பேச்சும் பார்வைகளும் என ஒவ்வொன்றிலும் காதல் ததும்பி வழிந்தது தானே.

தான் கொஞ்சம் விட்டுபிடித்தால் தான் அவளும் இறங்கி வருவாள் என நினைத்தான். அதற்கு மேல் அவனை யோசிக்கவிடாமல் மொபைலில் வில்லியம்ஸின் அழைப்பு வர கொஞ்சம் பதட்டத்தோடு அதை எடுத்து பேசினான்.

முக்கியமான விஷயமில்லாவிட்டால் அவரே இப்படி நேரடியாக அழைக்கமாட்டார் என ஷக்திக்கு தெரியும். இப்போது அப்படி ஒரு முக்கியமான வேலைக்காகத்தான் அவர் அழைத்தது.

நாளை மதியம் முக்கியமான கிளைன்ட் மீட்டிங் திடீரென முடிவாகி இருப்பதாகவும், அது சம்பந்தப்பட்ட தகவலை மெயிலில் அனுப்பியிருப்பதாகவும், அதற்கு தேவையான டீட்டயில்ஸ் அனைத்தையும் தயார் செய்து எடுத்துவருமாறும் பணித்துவிட்டு வைத்துவிட்டார்.

அதற்கு மேல் சொந்த கவலைகளை நினைக்கவிடாமல் வேலை அவனை தழுவிக்கொண்டது. இரவில் வெகுநேரம் கண்விழித்து பார்த்தவன் ஒரு மணிக்குமேல் முடியாமல் பக்கத்து அறையிலேயே உறங்கிவிட்டவன் அதிகாலையில் எழுந்து புறப்பட தயாரானான்.
தன்னறைக்கு வந்தவன் படுக்கையில் ஒரு ஓரத்தில் தன்னை சுருக்கிக்கொண்டு படுத்திருந்த ஹர்ஷூவின் தோற்றம் அவனை பெரிதும் பாதித்தது. இரவு நிச்சயம் இவளும் வெகுநேரம் தூங்கியிருக்கமாட்டாள் என்பது அவனுக்கும் நிச்சயமே.

இரவு தான் பேசியது அதிகப்படி தான் என மனம் எடுத்துரைத்தாலும் ஹர்ஷூ பேசியதற்கு வேறு எப்படி பதிலளித்திருக்க முடியும் என அவனுக்கு புரியவில்லை. அந்த வார்த்தையை தான் சொல்லியிருக்க கூடாது. தான் பேசியதும் அடுத்து ஒரு வார்த்தை கூட அவளிடமிருந்து எழவில்லையே என வருத்தம் கொண்டவன் உறங்கிக்கொண்டிருக்கும் அவளின் அருகில் சென்று நின்றவன்,

“சாரிடா ஹர்ஷூ. நைட்லாம் நீ சரியா தூங்கலைன்னு தெரியும். ஆனாலும் உன்னை எப்படி கட்டுப்படுத்தன்னு எனக்கு தெரியாமல் தான் வார்த்தைகளை விட்டேன். ஆனா அந்த வார்த்தை உன்னை பாதிச்சத்தை விட உன்னை காயப்படுத்திட்டேன்ற வலி எனக்கு தான் அதிகமா இருக்குது...” தனக்குள்ளேயே பேசிக்கொண்டவன் அறையை விட்டு மனமே இல்லாமல் வெளியேறினான்.

கீழே புருஷோத்தமன் பேப்பர் படித்துக்கொண்டிருப்பதை பார்த்தவன், “என்ன டாட் நீங்களும் இவ்வளோ சீக்கிரமா எழுந்துட்டீங்க?...”
“என்னமோ சீக்கிரமா விழிப்பு வந்திடுச்சு ஷக்தி. தூக்கம் வரலைன்னு சீக்கிரமே எழுந்துட்டேன்...” என்றவர் அன்னம்மாவை அழைத்து ஷக்திக்கும் காபியை கொண்டுவரசொன்னார்.

“கொஞ்சம் நல்லா தூங்குங்க டாட். சரியான தூக்கமில்லைனா ஹெல்த் என்னாகும்?...” என பேசிக்கொண்டே அவரோடு அமர்ந்து காபியை குடித்துவிட்டு எழுந்த ஷக்தி,

“டாட் நான் ஆபிஸ் கிளம்பறேன். இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. அதனால் எனக்கு போன்கால் எதுவும் ட்ரை பண்ணவேண்டாம். நைட் ஆகிடும் நான் வர. ஹர்ஷூ நல்லா தூங்கறா. அவக்கிட்ட நீங்களே சொல்லிடுங்க...” என கூறி அதற்குமேல் நிற்காமல் விடைபெற்றவனிடம் தலையை மட்டுமே ஆட்டிவைக்க முடிந்தது புருஷோத்தமனால்.

நேற்று இரவு வீடு திரும்பிய பின் மகன், மருமகள் இருவரது முகமுமே சரியில்லை என நன்றாகவே அறிந்துகொண்டவர் மனம் கவலையில் ஆழ்ந்தது. இப்படியே யோசனையில் மூழ்கியிருக்க ஒருமணி நேரம் கடந்துவிட்டிருந்து.

அதன் பின் அன்னம்மாவை அழைத்தவர் ஹர்ஷூ எழுந்தாச்சா என பார்க்க சொல்லிவிட்டு தானும் குளித்து விட்டு கோவிலுக்கு கிளம்பலாம் என தன்னறை நோக்கி சென்றார்.

அவர் கிளம்பி வெளியில் வரவும் ஹர்ஷூ கீழே கிளம்பி வரவும் சரியாக இருந்தது. அவளின் தோற்றமே வெளியில் கிளம்பி இருக்கிறாள் என புரிந்தது. ஹர்ஷூவின் முகத்தில் தெரிந்த வேதனை இரவு ஷக்திக்கும் அவளுக்கும் இடையில் ஏதும் பிணக்கு ஏற்பட்டிருக்குமோ என ஐயப்படவைத்தது.

இருந்தாலும் தான் இதில் தலையிட வேண்டாம் என நினைத்து, “ஹர்ஷூ வெளில கிளம்பிட்டியாம்மா?...” என கேட்டவருக்கு ஆமாம் என்பது போன்ற தலையசைப்பை கொடுத்தவள் போய் வருகிறேன் என்றும் வாய்வாய்வார்த்தையாக கூறாமல் மீண்டும் ஒரு தலையசைப்பை காண்பித்துவிட்டு விடைபெற்றாள்.

அன்னம்மா கூட சாப்பிடாம கிளம்புதே பொண்ணு என சொன்னதற்கு, “ஹர்ஷூ முகமே சரியில்லை. அதான் நானும் எதுவும் கேட்கலை. வெளியில போய்ட்டு வரட்டும் அன்னம்மா. விடு எப்டியும் மத்யானம் வந்திடுவா...” என அவரை சமாதானம் செய்துவிட்டு கோவிலுக்கு செல்ல அன்னம்மாவும் பின்பக்கம் சுத்தம் செய்வதற்காக அங்கே சென்றுவிட்டார்.
Nice
 
Top