Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) டீசர்

Advertisement

praveenraj

Well-known member
Member
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

அலங்காரத் தோரணைகள் மிளிர கண்கவரும் வண்ண விளக்குகள் பலூன்கள் முதலியவற்றால் அந்த மண்டபம் பிரமாண்டமாகக் காட்சியளித்தது. அகன்று விரிந்து ஒரு குட்டி மாளிகை போலே ஒளிர்ந்த வராஹி திருமண மண்டபத்திற்குள் ஒரு விலையுயர்ந்த லம்போரஃஹினி கார் நுழைந்தது. காரை பற்றிய விவரம் ஏதும் அறியாதவர்களைக் கூட ஒரு கணம் நின்று திரும்பிப் பார்க்க வைக்கும் அம்சம் கொண்டது அந்த கார். அந்த காரை காட்டிலும் அதைச் செலுத்தியவன் இன்னும் வசீகரிக்கக்கூடியவன் தான். ஆனால் அந்த வசீகரம் இன்று எள்ளளவும் அவன் முகத்தில் இல்லை. அதை அவனுக்குப் பின் அமர்ந்து வந்த பவித்ராவும் நன்கு அறிவார் தான்.

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படியே விட்டுப் பிடிப்பது என்று யோசித்தவர் நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து அவனை இங்கே வரவழைத்து விட்டார். வண்டி நின்று நொடிகள் பல கடந்தும் இறங்காமல் இருக்கும் அன்னையைக் கண்டவன்,

"மண்டபம் வந்திடுச்சு..." என்று யாருக்கோ சொல்வதைப்போல மொழிந்தான்.

"நீ இறங்கு நாங்க இறங்குறோம்..." என்று குமாரசாமி சொல்லவும் அவன் முகம் கோவத்தில் சிவக்க, அவர்களுக்கு பதில் சொல்ல எண்ணி திரும்பும் முன் பின்னாலிருந்து ஒலித்த இன்னொரு காரின் ஹாரன் அவனை முன்னே செல்லுமாறு உணர்த்த,

"வண்டிங்க வரிசையா வந்துட்டு இருக்கு. ப்ளீஸ் இறங்குங்க..." என்று கோபத்தையும் அதிருப்தியையும் ஒருசேர அடக்கி அவன் சொல்ல,

"பார்க்கிங்ல நிறுத்து நாம அங்க இருந்தே உள்ள போகலாம்..." என்ற பவித்ராவின் வார்த்தைகள் தங்களுடன் அவனும் உள்ளே வந்தே தீர வேண்டும் என்பதை வெளிப்படையாகவே நவிரனுக்கு உணர்த்தியது. அதற்குள் அந்த மண்டபத்தின் வாட்ச் மேன் மற்றும் மணமகனின் செக்ரெட்டரி ஆகியோர் இவர்களை நோக்கி வருவதை அறிந்தவன் ஏதும் பேசாமல் பார்க்கிங் லாட்டில் வண்டியை அமத்தியவன் வேண்டா வெறுப்பாகவே கீழே இறங்கினான்.

கீழே இறங்கிய பவித்ரா குமாரசாமியிடம்,"உங்க பையனை ஒழுங்கா உள்ள கூட்டிட்டு வாங்க. நான் முன்ன போறேன்" என்று எஸ்கேப் ஆக,

"நல்லாயிருக்கே! சிரிச்சுப் பேசும் போது மட்டும் அவன் உன் பையன். அதுவே சிடுசிடுன்னு பேசுனா அவன் என் பையனா?" என்று குமாரசாமி தன்னுடைய வழக்கமான நகைச்சுவைக் கலந்த நடையில் புலம்ப பொதுவாக இந்நேரம் இயல்பாக பவித்ராவின் உதடுகளில் குடியேறக்கூடிய குறுஞ்சிரிப்பு இம்முறையும் மிஸ் ஆனதில் குமாரசாமிக்கு தான் உள்ளுக்குள் பெரும் வருத்தம் குடிகொண்டது.

"நீ போ பவிம்மா நாங்க பின்னாடியே வரோம்..." என்பதற்குள் அங்கிருந்த சில பெண்மணிகள் தங்கள் ஆஸ்தான எழுத்தாளரைக் கண்ட பிரமிப்பு மற்றும் குதூகலத்தில் பவித்ராவை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

"மேம், அடுத்த புக் எப்போ வரும்? ஏன் இப்போல்லாம் முன்ன மாதிரி அதிகம் எழுதுறதில்லை நீங்க?" என்று உரிமையாகவே கேட்ட ஒரு வாசகிக்கு என்ன பதில் சொல்வார் பவித்ரா.

"உங்க ரைட்டிங்கை ரொம்ப மிஸ் பண்றோம் மேம். புக் வராட்டி கூடப் பரவாயில்ல ஏன் இப்போல்லாம் நீங்க உங்க பிளாக் சைட்ல கூட பெருசா எழுதுறதில்லை?" என்று கேள்வியின் தோற்றம் மாறினாலும் அதன் உள்ளடக்கம் ஒன்றாகவே இருந்தது.

சிலர் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக புத்தகத்தை எடுக்க செல்ல பலரோ அவருடன் செல்பிக்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுடன் செல்பி எடுத்து ஆட்டோகிராஃப் போட்டுக்கொண்டிருந்த பவித்ராவுக்கு சட்டென்று ஒன்று நினைவுக்கு வர வேகமாக பின்னே திரும்பியவரின் கண்கள் அங்கு நின்ற நவிரனைக் கண்டு மகிழ்ச்சியா ஏமாற்றமா என்று வரையறுக்க முடியாத ஒரு பாவனை செலுத்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.

**************

அந்தக் குளிரூட்டப்பட்ட அறையில் வெல்வெட்டால் போர்த்தப் பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமைதியாய் அமர்ந்தான் நவிரன். அவன் மனம் அமைதியிழந்து தவித்தது. ஒரு வித பதற்றம் மற்றும் இறுக்கம் அவனைச் சுற்றி வளைக்க ஏனோ நொடியில் அவனது சீரான சுவாசம் தடைப்பட எழுந்தவன் அங்கிருந்த கதவைத் திறந்து வெளியேறினான். உள்ளே சென்ற பவித்ராவையும் குமாரசாமியையும் சொந்தங்கள் உற்றார் உறவினர்கள் சூழ்ந்துகொள்ள இரண்டு வயது சிறுவனின் தாயைப் போல் நிமிடத்திற்கு ஒரு முறை திரும்பி திரும்பி நவிரனையே பார்த்துக்கொண்டிருந்தார் பவித்ரா. சட்டென திரும்பியவருக்கு நவிரன் வெளியேறியது தெரியவர அந்தக் கூட்டத்தை தன் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு அவனைத் தேடி பின்னோடினார் பவித்ரா. ஓடினார் என்பதற்கு வலு சேர்க்கும் விதமாகவே அவரது நடையும் இருக்க அந்தக் கதவைத் திறந்ததும் தான் அவர் சுவாசம் சீரானது. தூரத்தில் ஓடியாடிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளை ஒரு தூணில் சாய்ந்தவாறு ரசித்துக்கொண்டிருந்தான். நவிரனுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை இஷ்டம். அவனே ஆறு வயது சிறுவனாக இருந்த பொழுது மூன்று வயதான அவன் சித்திப்பெண்ணுக்கு உணவு ஊட்டியவனாயிற்றே!

இனி மகனைப் பற்றிய கவலை இல்லை என்று திரும்பியவர் அந்தக் கதவை வெளியிலிருந்து அவர் இழுக்கவும் அதே சமயம் உள்ளிருந்து திறக்கப்பட்ட கதவின் த்ரஸ்ட்டில்(thrust- உந்துதல், திடீரென்று தள்ளுதல். physics தான்?) நிலைத்தடுமாறியவள் தன்னுடைய கையிலிருந்த ஐஸ் க்ரீமை எதிரே நின்ற பவித்ராவின் சேலையில் கொட்டிவிட்டாள்.

நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும் தருணம் இல்லை...

வெளியெல்லாம் காதலால் நிறைப்பாள்?

இந்தக் கதையைப் பொறுத்த வரை ஒரு ஃபீல் குட் ஃபேமிலி லவ் ஸ்டோரி தான். என்ன ஒன்னு இதுல சில உச்சகட்ட சோகமான காட்சிகளும் இருக்கும். ஆனா அந்த துக்கத்தை கூட எப்படியாவது தூக்கமா மாடுலேட் பண்ணி கொடுக்க முயற்சிக்கிறேன்?? இந்தக் கதையில ஒரு ஸ்பெஷல் வெச்சிருக்கேன். அது என்னனா நான் எழுதணும்னு நெனச்சு ஆனா வாய்ப்பு அமையாத கதைகளை எல்லாம் நம்ம பவித்ரா குமாரசாமியின் கதைகளா அங்கங்கே வரும். அதாவது பிரவீன் எழுதும் கதையில் பவித்ராவும் கதை எழுதுவார். சமயங்களில் பவித்ராவின் கதையிலும் மதுமிதா என்னும் எழுத்தாளர் வருவார். கனவுக்குள்ள கனவுக்குள்ள கனவு இன்செப்சன் மாதிரி கதைக்குள்ள கதைக்குள்ள கதை. இது என் நீண்ட நாள் ட்ரீம். அந்த வகையில இது எனக்கு ஸ்பெஷல். சீக்கிரம் வரும் மக்களே! சந்திக்கிறேன்.
 
❣️❣️❣️உங்க கனவு கைக்கூட வாழ்த்துகள் praveen ✌️✌️✌️ஆவலுடன்.

நல்லாருந்த அம்மா பையணை பிரிச்சு விட்டீங்களே ???
 
Nirmala vandhachu ???
 
Top