Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அதி. 29 (இறுதி)

Advertisement

Super story....
நன்றி சகோ... எல்லா அத்தியாயங்களிலும் கருத்திட்டு உற்சாகமூட்டினீர்கள்... நன்றி... :giggle::giggle::giggle::giggle::giggle::love::love::love::love::love:?????
 
ரொம்ப அருமையான நாவல்.... ஆரம்பிக்கும் போது இருந்து அந்த எதிர்பார்ப்பு முடிவுரை வரை அப்படியே இருந்துச்சு..... என்ன வேதாளம் கேள்வி கேட்டு விக்ரம் பதில் சொல்லுவார்னு நினைச்சேன்.... ஆன மாடர்ன் விக்ரம் கொஞ்சம் அரசியல் இயற்பியல் கலந்து வந்தார்....

இறுதியில் திக்சூரா வராவோட சிஷ்யன் ஆகிட்டார் சூப்பர்....

இனிமே பட்டனுக்கு வயது ஆகுமா இல்ல இன்னுமே அவர் இளமையையா தான் இருப்பாரா....

இப்போ ப்ரேசரண்ட்க்கு வந்த பிறகு பட்டி வேதாளம் விக்கிரம தேவி அருண் விஷாலி எல்லாம் எப்படி இருக்காங்க .... அவுங்களோட அந்த spl power என்ன ஆச்சுன்னு சொல்ல கூடாதா அண்ணா....

நன்றி சகோ...

சொல்லலாமே... செழியன் (பட்டி), வேதாளப் பட்டன், விக்ரம், தேவி, விஷாலி, அருண் இவங்களைலாம் வெச்சு சில சிறுகதைகள் எழுதனும்னு எனக்கு ஆசை... கண்டிப்பா முயற்சிக்கிறேன்... :giggle::giggle::giggle:???:love::love::love:
 
Experienced a different travelling in this story

நன்றி சகோ... அனைத்து பதிவுகளிலும் கருத்து தெரிவித்து என்னை ஊக்கமூட்டினீர்கள்... உங்கள் ஆதரவிற்கு நன்றி பல... :giggle::giggle::giggle::giggle::giggle::love::love::love::love:????
 
அருமையான பதிவு

நன்றி சகோ... எல்லாப் பதிவிலும் கருத்திட்டு ஊக்கமூட்டிய உங்கள் ஆதரவு விலைமதிப்பில்லாதது... :love::love::love::love::love::giggle::giggle::giggle::giggle:????
 
வணக்கம் மக்களே,

மீண்டும் விக்ரமாதித்யன் கதையின் கடைசி அத்தியாயம் இதோ:


இத்தோடு மூன்றாம் பாகமும், முழு நாவலும் முடிவடைகிறது!

(’எபிலாக்’னு எழுத எதுவுமில்லனு எனக்குத் தோனுது, அதனால எழுதப் போறது இல்ல!)

உங்க எல்லாக் கேள்விக்கும் விடைகள் கிடைச்சிருச்சானு பாருங்க... ஏதாச்சு விட்டுப் போயிருந்தா சொல்லுங்க... :giggle: :giggle: ? ?
------------

எனக்கு இது ஒரு பெரிய மைல்கல். பெரிய பயணம்.

சிறுகதையிலிருந்து புதினம் என்ற அமைப்பிற்கு என் மூளையைப் பழக்க நான் இத்தனை ஆண்டுகளாய் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்! இன்று அந்தத் தடையை உடைத்தாகிவிட்டது!

நான் முன்னுரையில் குறிப்பிட்டதைப் போல, இந்த மனத்தடையை உடைக்க, இக்கதையை ஒரு சோதனை முயற்சியாகத்தான் எழுதத் தொடங்கினேன்... சொதப்பினாலும் பரவாயில்லை, கதை என்று ஒன்றை எழுதுவோம் என்று தொடங்கி எழுதியது இது...

ஓரளவு நன்றாகவே வந்துள்ளது! குறிப்பாக முதல் பாகம் மிக நேர்த்தியாக அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன் (என் மனைவி அதிலேயே நிறைய குறைகளைச் சுட்டிக்காட்டுகிறார்!)

2ம், 3ம் பாகங்கள் அத்தனை நேர்த்தியாக அமையவில்லை என்றே நான் கருதுகிறேன்!

ஒரு நீண்ட நெடிய சிறுகதையின் ஓட்டத்திலேயே இது அமைந்துவிட்டதாய் நான் உணர்கிறேன்... எழுதி முடித்த பின்புதான் இன்னும் கொஞ்சம் திட்டமிடலோடு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது...

சாத்தியப்பட்ட பல விஷயங்களை நான் முழுதாகக் கையாளவில்லை...

மேலும் இரண்டொரு புதினங்கள் எழுதிவிட்டு, மீண்டும் இக்கதைக்கு வந்து இதனை மாற்றி எழுத வேண்டும் என்று தோன்றுகிறது... பார்ப்போம்...

எனக்கே இவ்வளவு குறைகள் தெரிகையில் வாசகர்களாகிய உங்களுக்கு இன்னும் அதிகமாய் தெரியும் என்பது எனக்குத் தெரியும்...

ஆனால், நீங்கள் அன்போடும் பண்போடும் அதையெல்லாம் கூறாமல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியும் ஊக்கமளித்தும் வந்துள்ளீர்கள்...

உங்கள் ஆதரவிற்கு ‘நன்றி’ என்று ஒரு சொல்லில் சொல்லிவிட்டுப் போய்விட இயலாது...

ஆனாலும், ‘நன்றி’ :giggle::giggle:??:love::love::love:

உங்களுக்குத் தோன்றும் குற்றங் குறைகளைத் தயங்காமல் எனக்குச் சொல்லுங்கள்...

பொதுவெளியிலேயே சொன்னாலும் எனக்குச் சரிதான்... நான் அதை ஏற்றுக்கொள்வேன்... அழமாட்டேன்... :giggle::LOL::LOL:

அல்லது, தனிப்பட்டும் சொல்லுங்கள்...

இது போட்டிக்கதை, எனவே, இக்கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் இதைப் பற்றி விமர்சனம் எழுதுங்கள்... கொஞ்சம் இலவச விளம்பரம் கொடுங்கள் (ஏற்கனவே பலர் கொடுத்துள்ளீர்கள்... அவர்களுக்கெல்லாம் நன்றியோ நன்றி!) :giggle::giggle::giggle:??

எருமைமாட்டைத் தார்க்குச்சியால் குத்தி நகரச் செய்வதைப் போல, என்னையும் மீம் என்னும் தார்க்குச்சியால் குத்தி (அவ்வப்போது மிரட்டி) இக்கதையை எழுத வைத்த அன்புத் தங்கைகள் @Kavyajaya & @பிரியா மோகன் இருவருக்கும் ஒரு தனி நன்றி...

எல்லாத் தளங்களிலும் எல்லோரின் பதிவிலும் முதல் ஆளாக வந்து விருப்பும், கருத்தும் போடும் @Banumathi jayaraman அம்மா அவர்களுக்கு ஒரு அன்பன பெரிய நன்றி (ஆமா, நீங்க சாப்பிடுறது, தூங்குறதுலாம் பண்ணுவீங்களா இல்லையா? எப்படி எல்லாத்தை ட்ராக் பண்றீங்க? பெரிய ஆச்சரியம் நீங்க!)

@Chitrasaraswathi64@gmail. @Vijayaranjani @Dharani @Krishnav @Kavitha @Kavichithra @Rabi @Raman @Senmozhi @ThangaMalar @மைதிலிமணிவண்ணன் @Marlimalkhan என்று பலரும் தொடர்ந்து ஆதரவளித்து, கருத்தும் விருப்பும் தெரிவித்து வந்தீர்கள்... (யாரையேனும் விட்டிருந்தால் உரிமையுடன் கோவித்துக்கொள்ளவும்! உங்களுக்கு நான் பட்டிருக்கும் நன்றிக்கடன் சொற்களில் அடங்காது!)

நீங்கள் எல்லோரும்தான் என் பூஸ்ட்... சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி... அனைவருக்கு என் அன்பு நன்றிகள், வணக்கங்கள்... லவ் யூஆல்...

உங்களின் பல கருத்துகளுக்கு நான் பதில் தரவில்லை... பொறுத்தருளிய உங்கள் பெரிய உள்ளங்களுக்கு ஒரு தனி நன்றி (பதில் சொல்வதானால் கதையின் சஸ்பென்ஸ் கெட்டுவிடும் என்பதால்தான் பதில் சொல்லவில்லையே தவிர, வேறு காரணம் இல்லை!)

Last but not the least, இப்படி ஒரு போட்டியை நடாத்தி, கதை எழுதும் வாய்ப்பும் ஊக்கமும் அளித்த இந்தத் தளத்திற்கும் இதன் நிறுவனர், நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி... :giggle: :giggle: ? ? (இதுக்கு எதாச்சு எக்ஸ்ட்ரா பாயிண்ட் போட்டுக் கொடுங்கப்பா! ஹிஹி! :LOL::LOL:) Jokes apart, இப்படியான வாய்ப்புகள் அடிக்கடி வாரா... சிறப்பான பரிசுத்தொகையுடன், நேர்த்தியான ஒரு போட்டியை நடத்துவது எளிதல்ல... உங்கள் உழைப்பிற்கும் ஈடுபாட்டிற்கும் நன்றி் பல... :giggle::giggle:??

நன்றி...

விரைவில் அடுத்த கதையோடு உங்களைச் சந்திக் கிறேன்...

அன்புடன்
வி @ விசயநரசிம்மன்
:giggle::giggle::giggle::giggle:?????:love::love::love::love::love::love::love:
Semma story.... Awesome, Tamil key pad Ella so I can't write lot....semma super after a long time I read semma story with nice flow..semma dialogue
 
Semma story.... Awesome, Tamil key pad Ella so I can't write lot....semma super after a long time I read semma story with nice flow..semma dialogue
நன்றி சகோ... உங்கள் கருத்தைப் படிக்க மகிழ்வாகவும் ஊக்கமூட்டுவதகாகவும் உள்ளது... :giggle: :giggle: :love: :love: :love: ? ? ?
 
Super bro....starting la irundhu nalla kondu ponenga....physics lesson nalla irundhuchu bro.... Meendum Vikramadhithyan mathiri Meendum Vijay bro Pala novelkal ezhuthanum.... ?
 
Spr story Pa....vikarmathitiyan vedhalam nu kelvi thaan paatu irukan.. aprm kutty kutty story than therium.. Ithula nenga sonna mathri ethulam unmai ethulam unga karpaninu pirika mudiyala.. antha alavu story moving spr a iruntathu...Nice..vidiya vidiya mulichu irunthu padichan..All the best.Intha story patha neenga try panna mathri illa..romba naal writer mathri thaan irunthahu...Keep going..?:love:
 
Top