Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 7

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Hi ladies and girliess.. :love: :love: :love: :love: :love: :love: :love: :love: .thanksssssssssss alot....hope you are enjoying the tale.

share your viewsssssss..:love::love::love::love::love:

ராஜாவோட இயல்பு அப்படி தான்....காதல்...அது இயற்கை...மழை போல்...தென்றல் போல்....ஏன் சொல்றன்னு எபில படிங்க friendss...


here comes the next update
---------------------------------------------------------------------

காதல் 7

அந்த காலை நேரத்தில் டைமண்ட் டவர்ஸ் அதற்குரிய இயல்பான சுறுசுறுப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. மதுவோ படபடப்பாக காணப்பட்டாள். அதைக் கண்ட ஹம்சா,

“என்னாச்சு டி.. ஏன் உன் முகம் ஒரு மாறியா இருக்கு…?” எனக் கேட்க,

தனது மன உணர்வுகள் வெளியில் தெரியும்படியா இருக்கிறது என நொந்தவள் அதை மறைக்க முயன்றபடியே ,

“எனக்கென்ன..நான் நல்லாதானே இருக்கேன்….” என்றவாறே கணினி திரையில் பார்வையைப் பதித்து தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.

மதுரவசனி நேற்று இரவு நந்தனிடம் பேசியப் பின் மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அவனது குரல் நெருக்கத்தில் கேட்டாற் போல் கேட்டதில் பதறியவள் அலைபேசியை அணைத்துத் தூக்கிப் போட்டாள்.

அவனது கேள்வியின் அர்த்தம் புரியாத அளவு அவள் சிறுபெண் இல்லையே..! எந்த விதத்தில் தான் அவனுக்கு உரிமைக் கொடுத்தோம் என்று அவளுக்கு என்ன யோசித்தும் புரியவில்லை.ஆனால் இதை இனி தொடர விடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தாள். ஹம்சாவிடம் இதைப் பற்றி அவள் மூச்சு விடவில்லை. நந்தனின் மனம் புரிந்த நொடி முதல் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதுவும் அவனது குரல் நெஞ்சை உருக்கும் வகையில்..!!

அப்பப்பா…. காதோரம் இன்னும் ஒலிக்கிறதே..!

இப்படி மதுவின் யோசனை ஓடிக் கொண்டிருக்க, தீபனிடமிருந்து அழைப்பு வர அவனறைக்குள் சென்றாள்.

“மது… உங்க போனை ஆன் பண்ணுங்க…” என தீபன் சொல்ல

“நா…நான் ஏன் ஆன் பண்ணனும்…. என் போன்…. என்னிஷ்டம்…… எப்ப ஆன் பண்ணனும்.. ஆஃப் பண்ணனும்னு எனக்குத் தெரியும்…” என அவளுக்கிருந்தப் பதற்றத்தில் படபடவென பொரிய,

தீபனோ, ‘டேய் அண்ணா….. நீ ஒரு இம்சை அரசன்னா… உனக்கு வாய்ச்சது ஒரு இம்சை அரசிடா…. கடவுளே..’ என நொந்தவன்

“ஓகே மது…. இப்போ எங்கிட்ட சொன்னதையெல்லாம் உங்களுக்கு என் அண்ணன் போன் பண்ணுவான் அவன்ட்ட சொல்லிடுங்க… ஓகேவா…?” என அவளோ பயத்தோடு அவனை பார்த்தாள்.

‘நந்தன்….!! ஐயோ… அவனுக்குப் பயந்து தானே நான் போனை ஆஃப் செஞ்சேன்.. இப்படிப் படுத்துறானே.. கடவுளே’ என நினைத்தவள் அப்படியே யோசனையாக நிற்க,

அந்த அறையில் உள்ள தொலைப்பேசி அடிக்க, அதை காதில் வைத்த தீபன் , “நான் சொல்லிட்டேன்……இரு….” என்றவன் அதை மதுவிடம் நீட்ட, அவளும் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டாள்.

அந்த பக்கம் ஆழ்ந்து ஒலித்தது,

“மதும்மா……..” என்ற நந்தனின் குரல்.

உள்ளம் எல்லாம் பதற்றம் மேலோங்க, இதழ்கள் சிறைப்பட்டிருக்க வார்த்தை வராமல் தடுமாறினாள் மதுரவசனி.

“மது… ப்ளீஸ்டா….. நான் உங்கிட்ட பேசனும்.. ஏன் போனை எடுக்கவே மாட்ற…... உனக்காகப் பாரு நான் இவனுக்கெல்லாம் போன் செய்ய வேண்டியதா இருக்கு…. ப்ளீஸ் மது.. நான் உன் ஆபிஸ் வாசல்ல கார்ல வெயிட் பண்றேன்… கீழ இறங்கி வா……. உங்கிட்ட நான் மனசு விட்டு பேசனும்டா…” என அவன் மென்மையாய் சொல்ல

“உங்ககிட்ட பேச எனக்கு என்ன இருக்கு… சார்… ப்ளீஸ்…. என்னைத் தொல்லை பண்ணாதீங்க……” எனக் கெஞ்ச

“மது… நான் உன்னைப் பார்க்கனும்…. கீழ வா…..” என அவன் அழுத்தமாய் உரைக்க

“என்னால கீழ வர முடியாது…….”

“மது….” என்றவனின் குரலில் கோபம் எட்டிப்பார்க்க

அதை மதுரவசனி சட்டை செய்யவில்லை. அவளது இயல்பு மீண்டு

“என்ன மது…? இதே உங்க வீட்டுப் பொண்ணா இருந்தா… இப்படி தான் கூப்பிடுவீங்களா… என்ன பேசனும்னாலும் நான் இருக்க இடத்துக்கு வந்து பேசுங்க… என்னால கீழ வர முடியாது.. தட்ஸ் இட்…..” எனக் கடுப்பாக உரைக்க

தீபனோ, “ஆஹா… அந்த முரட்டுக்காளைக்கு மூக்காணங்கயிறு மாட்ட சரியான ஆளு இவங்க தான்… அண்ணியாரே.. கலக்குங்க…” எனச் சொல்லிக் கொண்டான் மனதில்.

நந்தனுக்குக் கோபம் இருந்தப் போதிலும் அவளது கூற்றில் இருந்த நியாயம் உணர்ந்தவன்,
“சரி மது…. ஐ வில் கம்… அப்” என்றவன் அன்று போல் பிரத்யேக வழி மூலம் அவர்களது பெர்சனல் அறைக்குள் சென்றான்.

“மது… மேல நம்ம ரூம் இருக்கு….உங்களுக்குத் தெரியுமே…… அந்த ரூம் தான்…” என்று சொல்ல இவள் தலையசைத்து சென்றாள்.

அங்குச் சென்று பார்த்தால் வழக்கத்துக்கு மாறாய் நந்தன் மிஸ்டர்.கூலாக அமர்த்தலாய்க் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான்.

அவனுக்கு நேர்மாறாய் மதுரவசனியோ, “என்ன… என்ன…. நினைச்சிட்டு இருக்கீங்க…. பார்த்தா எப்படி தெரியுது……. நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்னு நினைச்சீங்களா… வான்னா வரனும்.. போன்னா போகனுமா…….. அதுக்கெல்லாம் வேற ஆளப் பாருங்க……..கீழ வா வான்னு சொல்றீங்க…….. ஒரு ஆம்பள கூடத் தனியா நான் பேசினா…… என்னை எல்லாரும் என்ன நினைப்பாங்க………. இனிமே இப்படி எதாவது செஞ்சா…. அவ்வளவுதான்………. எங்க பெரியப்பாட்ட போட்டுக்கொடுத்துடுவேன்…. ஜாக்கிரதை ஆமா…” எனப் பொரிந்து தள்ள

அவன் இன்னும் கூல் கேப்டனாக இருக்க, மதுவுக்குக் கோபம் அதிகரிக்க அங்கிருந்த சோபாவின் குஷனை அவன் மீது அடித்தாள்.

அதை லாவகமாக கேட்ச் செய்தவன், “உஷ்…………… அப்பா…………. என்ன சூடு….” என்றபடியே ரிமோட்டை எடுத்து ஏசி குளிரை அதிகப்படுத்தினான்.

“மது மை ஸ்வீட் மது…………. பேசி முடிச்சிட்டியா.. நான் கூட நீ ரொம்ப சாதுன்னு நினைச்சா… நீ என்ன இவ்வளவு ஹாட்டா…. இருக்க…” என அவளைப் பார்க்க, அவளோ கண்கள் சிவக்க அவனை முறைக்க

“அய்யோ…. அம்மாடி… அப்படில்லாம் நான் தப்பான அர்த்தத்துல சொல்லல மது… கூல் கூல்…. அக்சுவலி… எனக்கு இந்த மதுவை ரொம்பப் பிடிச்சிருக்கு… இந்த ராஜாவுக்கு ஏத்த ராணி.. ஆட்டம் இனி நல்லா இருக்குமில்ல…” என்று கண்ணடித்தவனின் செய்கையில் மங்கையவள் உள்ளம் தாறு மாறாய் தப்பித் துடித்தது.

“ஓகே மது.. கொஞ்ச கொஞ்சமே கொஞ்சம்… நேரம் நான் சொல்றதை கேளு…….. உன்னை கீழ வான்னு சொன்னது தப்புதான்……. எனக்கு புரிஞ்சது.. ஆனா உன்னைப் பார்க்காம இருக்க முடியல… அதனால தான்…. ஒரு நாள் தான் ஆச்சு உன்னை நான் பார்த்து…. ஆனா இனி ஒரு நாளும் உன்னைப் பார்க்காம இருக்க முடியாது மதும்மா… ஐ அம் ஷ்யூர்……… ப்ளீஸ் குறுக்க பேசாத…..” என்று அவளை தடுத்தவன் மேலும் தொடர்ந்தான்.

“என்னோட இத்தனை வருச வாழ்க்கைக்கான அர்த்தம் நீ தான் மது….. ஒருத்தங்களுக்கு உலகத்தில நாம முக்கியமானவங்களா இருக்கோங்க்ற நினைப்பு இருக்கே மது…. நீ நம்ப மாட்ட…… அப்படி அப்படி…… ஒரு சந்தோசம்.. நம்ம பிறப்புக்கே அர்த்தம் தந்த மாதிரி….. நீ எனக்கு அப்படி ஒரு நிம்மதியைத் தந்த மது… ப்ளீஸ் மது.. எப்போ எப்படின்னு தெரில…… நீ……… நீ எனக்குள்ள…. இல்ல… இல்ல…. நான் நான் உனக்குள்ள தொலைஞ்சு போயிட்டேன்……… மது……… நீ எனக்கு வேணும் மது…. வாழ்க்கை முழுசுக்கும்… என்னோட நிம்மதி உங்கிட்ட இருக்கு மது… நீ மட்டும் என் லைஃப்ல இருந்தா போதும் மது…. எனக்கு எதுவுமே தேவையில்ல…….. நேத்து தான் நான் ரொம்ப வருசம் கழிச்சு நிம்மதியா தூங்கினேன் மது….” என்றான் உணர்வுப் பூர்வமாய்.

“ப்ளீஸ் நந்தன்… இதெல்லாம் செட் ஆகாது… நீங்க காவிரி தண்ணியை எதிர்ப்பார்க்கற எங்க டெல்டா ஆளுங்க மாதிரி காத்திட்டே கனவுக் கண்டுட்டே இருக்கனும்……. வேண்டாம்… என் நினைப்பே உங்களுக்கு வேண்டாம்…. உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்காதீங்க…. என் பேச்சை கேளுங்க……” என மதுரவசனி அவனின் எண்ணங்களுக்கு மட்டுமல்லாது அவளது எண்ணங்களுக்கு அணைப் போட முயல,

“கேட்கிறேன் மது… ஆனா நீ என் மனைவியான பின்னாடி தான்……… நான் மட்டுமா கஷ்டப்படுவேன் மது… அப்படியே நான் கஷ்டப்பட்டா உனக்கு என்ன….? சொல்லு…சொல்லு…” என அவன் அவளருகே வந்து ஆவேசமாகக் கேட்க

“இப்போ பேச போறியா இல்லயா நீ…….. ஸ்பீக் அவுட்……” என அவனுக்கு எப்போதும் வரும் அதீத கோபத்தோடுக் கேட்க

அவனுக்குக் கொஞ்சமும் குறையாத சூட்டோடு, “சும்மா…. ஒரு நாள்ல உங்களுக்கு காதல் முளைச்சிடுமா….. சின்னப்புள்ளத்தனமா இல்லயா உங்களுக்கு……? விட்டுக்கொடுக்காத விட்டுப்போகாதான்னு…. டயலாக் அடிக்கிறீங்க……..? நேத்துப் பார்த்தப் பொண்ணுக்கிட்ட இப்படி தான் பட்டுனு பேசுவீங்களா….?” எனக் காட்டமாய்க் கேட்க

“அப்போ.. என்னை வேற என்ன செய்ய சொல்ற நீ….? பத்து நாள் ஹலோ சொல்லி ஒரு மாசம் கழிச்சு ப்ர்ண்ட்ஸ்ன்னு கை நீட்டி அப்புறமா ஒரு ஆறு மாசமோ ஒரு வருசமோ பின்னாடி சுத்தி வந்து பொக்கே டெட்டி பியர் எல்லாம் கொடுத்து லவ் சொல்லனுமா……. சொல்லு….. என்னால அதெல்லாம் முடியாது மது…. எனக்கு உன்னை விட முடியாதுன்னு தோணின செகண்ட்லேர்ந்து உங்கிட்ட என் மனசை சொல்லனும்னு தான் நான் காத்திட்டு இருக்கேன்….”

“என் மனசை மறைச்சு முகமூடிப் போடவெல்லாம் முடியாது மது….. பட்டுன்னு தான் நான் பேசுவேன்… உங்கிட்ட எனக்குத் தோணின ஃபீலீங்க்ஸை மறைச்சிட்டு எதுக்கு நான் நடிக்கனும்… சொல்லு... உன்னைப் பிடிச்சிருக்கு… எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணனும்... அதான் என்னோட எண்ணம்…… இப்போ என்ன ரோஸ் கொடுத்து ப்ரோபோஸ் செஞ்சா ஒத்துப்பியா நீ….” எனச் சொன்னவன் டக்கென அங்கிருந்த பூஜாடியிலிருந்து ஒரு ரோஜாவை எடுத்து நீட்டினான்.

அதைக் கண்டவள் அவனின் திடிர் செய்கையில் அதிர்ந்தப் போதிலும் அவனை அந்த கோலத்தில் கண்டு இதழ்க்கடையில் ரகசியப் புன்னகை உதித்தது. அதை அவளது கண்ணனும் கண்டுக் கொண்டான்.

“என்ன சிரிப்பு மேடம்… சிங்கரா இருக்கான்… சிங்கிள் ரோஸுக்கு வழியில்லாம… இங்கேயிருந்து எடுத்துக் கொடுக்கிறானேன்னு தானே நினைச்ச..” என அவன் தனக்கே உரிய ப்ரேத்யேகமான புன்னகையோடு கேட்க, பேதையவள் தடுமாறித்தான் போனாள்.

அவளது புன்னகை இன்னும் விரிய, “மது ப்ளீஸ் சிரிக்காதடி…” என அவன் சிரிக்க

இப்போது மது முறைக்க, “இல்ல… சும்மாவே நீ அழகு… சிரிச்சா ரொம்ப அழகா…. அதான்.. சிரிக்கிற உன்னை சிறைப்பிடிக்கனும்னு ஆசை வருது மது…”

“நீங்க சிங்கரா இல்ல கவிஞரா…?” என அவள் புருவம் உயர்த்திக் கேட்க,

“அய்யோ மது…. நான் சிங்கர் தான்….. கவிஞர்லாம் இல்லடா…” என அவனும் புன்னகைக்க

“அதான் நானும் சொல்ல வந்தேன்…… நீங்க சிங்கர்.. நான் உங்க ரசிகை….. அதை தாண்டி நமக்குள்ள ஒன்னுமில்ல..” என சீரியசாகச் சொல்ல

நந்தனின் முகம் இவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை மறைந்து இறுகிப்போய் விட்டது. அவனின் பெருமூச்சுகள் அவன் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த நினைப்பதை உணர்த்தியது.

“லுக் மது….. இவ்வளவு நேரம் நான் பேசுனது நமக்கானது தான்… இதுவரைக்கும் எந்த பொண்ணுக்கிட்டையும் நான் இப்படி பேசினது இல்ல…… அண்ட் பாடுறது என்னோட தொழில்… உனக்குப் பிடிக்கலன்னா நான் அதை விட்டுடுறேன் மது… எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது… நான் இருக்க துறையில அதுக்கான வாய்ப்புகள் இருந்தும் கூட எனக்கு அதுல பெரிசா நாட்டமில்ல…… ஆனா மதுவையே தொடாத நான் ஆசைப்படுற ஒரே மது நீதான்….. எந்த நொடியில நீ என்னை விட்டுக்கொடுக்கலயோ அந்த நொடி நீ எனக்குள்ள ஆழமா வந்துட்ட மது… ப்ளீஸ்…….. உனக்கு என்ன ப்ரச்சனைன்னு சொல்லு மது……”

“ஆனா என்னை நீ விட்டுப்போயிட்டா எனக்கு எதுவுமே இல்ல……. அதை புரிஞ்சிக்கோ…” என அழுத்தமாகச் சொல்ல,
 
அவளோ கலங்கிய விழிகளோடு நின்றிருந்தாள். இருந்தும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ,



“இதெல்லாம் சரி வராது….. சொன்னா கேளுங்களேன் ப்ளீஸ்……. என் குடும்பத்துக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்….. இது நான் மட்டும் சம்மந்தப்பட்ட விசயம் இல்ல நந்தன்…..” என்று சொன்னவளின் அருகில் வந்தவன்,



அவளது தோள்ப்பற்றி “மது… அப்போ உனக்கு உங்க வீட்டை நினைச்சுத்தான பயம்…. நான் வந்து உன் வீட்ல பேசினா பயமில்ல தானே…… அவங்க ஓகே சொன்னா உனக்கு சம்மதம் தானே..” என அவசரமாய்க் கேட்க



“ம்ம்….” என அவளும் தலையாட்டினாள்



அவளை விட்டவன் கட்டிலில் தொப்பென விழுந்தான். “ஷப்பா… இவ்வளவு நேரம் நான் கத்திட்டு இருந்தேனே… மடையா… என் வீட்ல வந்து பேசுடா… எனக்கு ஓகேன்னு சொல்றதுக்கு என்னடி உனக்கு…?” எனக் கேட்க



“என்ன ஓவர் கான்ஃபிடன்ஸா உங்களுக்கு… எங்க வீட்ல அவ்வளவு ஈசியா ஒத்துக்க மாட்டாங்க….” என்றாள் மதுரவசனி தனது வீட்டினரை அறிந்தவளாய்.



“நம்பிக்கை தான்….” என நந்தன் சொல்ல



“என்னது உங்களுக்கு நம்பிக்கையா…? என்னையே நான் நம்ப மாட்டேன்… யாரையும் நம்ப மாட்டேன்னு சொன்னவர் தான நீங்க..?”



அவளது கேள்வியில் ஒரு நொடி திகைத்தவன், நிதானமாய் அவளின் அருகில் வர, கன்னியவளின் கண்களும் கண்ணனின் கண்களும் கனெக்டாகி கவிதை வாசிக்க, நந்தனின் குரல் நெகிழ்வாய் காதலாய் மதுவின் காதில் ஒலித்தது



“இந்த முறை நான் நம்புறது யாரையோ இல்ல… என்னோட மதுவை.. யார் வேணும்னாலும் பொய்யாகலாம்….. நான் கூடப் பொய்யாகலாம்… ஆனா என் மது பொய்யாக மாட்டா… என்னை எந்த சூழ் நிலையிலும் அவ விட்டுக்கொடுக்க மாட்டா..”



அவனது குரலில், காதல் வழிந்த வார்த்தைகளில் முற்றிலுமாகத் தன்னிலை மறந்தாள் மதுரவசனி. தடைகள் எல்லாம் உடைந்துப் போனது அவனது சொல்லில்.



அழுகையை அடக்க மாட்டாமல் அவள் மடங்கி அமர்ந்து விசும்ப,



“மது.. என்னாச்சுடா…. சொல்லும்மா….” என அவனும் அவளுக்கு அருகில் மண்டியிட்டு அவளை அணைத்தவாறே கேட்க ,



அவனோடு துஞ்சியவள் “ஏன் நந்தன்.. என்னை இப்படி நம்புறிங்க. உங்க நம்பிக்கையைக் காப்பாத்த முடியலன்னா… என்னால வாழவே முடியாது….”



“மது.. சில சொல் நம்மள உயிரோட கொன்னுடும்…. சில சொல் நமக்கு உயிர்கொடுக்கும்மா…. அப்படிப் பட்ட வார்த்தையை தான் அன்னிக்கு நீ சொன்ன……. உன்னை என்னால விட முடியாதுடா…. உனக்கும் என்னைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்டா…”



“பிடிக்கும் தான்…. ஆனா….. காதல்… தெரில… அதுக்கு விளக்கமெல்லாம் சொல்லத் தெரில… பட்..… உங்கள விட என்னோட மனசு அன்னிக்கு ஒப்பல… அதே நேரம் எங்க வீட்டை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது….” என்றாள் தன்னிலையை விளக்கி.



யார் மயக்கினார்கள் என்று அறியாமல் தெரியாமல் இருவருமே ஒருவரிடம் ஒருவர் மயங்கினர். அந்த மயக்கத்தை விரும்பினர்.



மதுரவசனியின் மனது எந்த நொடி நந்தனிடம் சரணடைந்தது என அவளுக்குத் தெரியவில்லை. காதலிக்கக் கூடாது என்று நினைத்தவள் தான். ஆனால் காற்றைப் போல் காதலுக்கும் வேலியில்லையல்லவா…?



“மதும்மா.. இங்க பாருடா….. நான் வந்து உன் வீட்ல பேசுறேன்… அப்படியும் அவங்க ஒத்துக்கலன்னா… உன்னை தூக்கிடுவேன்… உன்னை விட மாட்டேன்….” என அவன் சீரியசாக சொல்ல,



“என்னது… தூக்குவீங்களா…. எப்படி…?” எனப் பதற்றமாய்க் கேட்க



“இப்படி…” என்றவன் அவளை அசால்டாகத் தூக்க,



“ஐயோ விடுங்க..ப்ளீஸ்….” எனக் கத்தினாள் அவள்.



அவளை கட்டிலில் விட்டவன் அவளது கலங்கிய விழிகளையும் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரையும் கண்டவன், “என்னாச்சு மது…. பயப்படாத…. அப்படி தூக்கிட மாட்டேன்…… உன் வீட்டுல பேசி தான் கல்யாணம்.. ஆனா… அப்படி ஒத்துவரலன்னா.. கண்டிப்பா தூக்கிடுவேன்…” எனச் சொல்ல



முன்பாதி சொன்னதுக்கு நேர்மாறாய் பின்பாதியை சொல்ல,பயத்தில் அவளது கண்ணீர் இன்னும் அதிகரித்தது.



“ஏன் அழற….” என அவன் கேட்க



“இப்படில்லாம் எங்கிட்ட நடந்துக்காதிங்க…. எனக்குக் கஷ்டமா இருக்கு….” என்றாள் உண்மையாய். அவளது வளர்ப்பில் ஆண்களோடு தொட்டுப் பேசும் பழக்கமெல்லாம் கிடையாது. தந்தையானாலும் சரி தமையனானாலும் சரி தள்ளி நின்று மரியாதையாகத் தான் பேச வேண்டும்.



அப்படியிருக்க மனம் விரும்பியவனாக இருந்த போதும் அந்நிய ஆடவனின் தொடுகையை அவளால் ரசிக்க முடியவில்லை. அதைப் புரிந்தும் அவனும், “சரிம்மா… சாரி.. ஏதோ…. நீ சொன்ன நான் செஞ்சேன்… ஆனா கண்டிப்பா…… நம்ம கல்யாணம் நடக்கும்…” என்றான் தீர்மானமாய்.



“ஏன் நந்தன் இப்படி பண்றீங்க.. இதனால தான் நான் என் மனசை மறைச்சிட்டு இருந்தேன்…. இப்படி பிடிவாதமா இருக்காதீங்க….. எனக்குப் பயமா இருக்கு….. எனக்கு என் குடும்பமும் முக்கியம்… நீங்களும் முக்கியம்….” என வாதாட



“டென்ஷன் ஆகாத நீ…. ஒரு மாசம் எனக்கு யூ.எஸ் டிரிப் இருக்கு… அது முடிஞ்ச அடுத்த நாளே உன்னை வந்து… தூக்…… இல்ல.... பார்த்து வீட்ல பேசிடுறேன்.. போதுமா…. ஆர் யூ ஓகே..வித் திஸ்…..” என அவன் மென்மையாகக் கேட்க



“ம்ம்….. அப்படி வீட்ல ஒத்துக்கலன்னா………” என அவள் இழுக்க



“கால்ல விழுந்தாவது ஒத்துக்க வைக்கனும்..” என அவன் சொல்ல மதுரவசனிக்கோ அதிர்ச்சி. தன்னிடம் மன்னிப்புக் கூடக் கேட்காதவனா இன்று தனக்காக இப்படியெல்லாம் பேசுவது என நினைத்தவள் ,



“நீங்களா…?” எனக் கேட்க அவனோ இவள் நினைப்பை பொய்யாக்கும் வண்ணம்



“வாட் ? நானா…? குட் ஜோக் மது… நீதான் விழனும்…. நான் ஏன் அவங்க கால்ல விழனும்….. உனக்குத் தான அவங்க சம்மதம் வேணும்… எனக்குத் தேவையில்ல…. உன் சம்மதம் போதும்…… நீ வாயால கூடச் சொல்ல வேண்டாம்…. உன் கண்ணே சொல்லிடும்… நான் உடனே தூக்கிடுவேன்.. தட்ஸ் ஆல்…” என்றான் வெகு கூலாக.



மதுவுக்குப் புரிந்தது. ‘இவன் தன்னிலையிலிருந்து இறங்கவே மாட்டான்…’ என



அவளது அதிர்ந்த முகத்தை நோக்கியவன், அவளருகே வந்து கைபிடித்து, “மது…. ஒரு மாசம் மட்டும் பொறுத்துக்கோடா…. அதுக்குப்புறம்.. உன் ராஜா வந்து உன்னை தூக்கிட்டுப் போயிடுறேன்….” எனக் கண்சிமிட்ட,



“தூக்குவீங்க…தூக்குவீங்க….” என அவனது நெஞ்சில் குத்தினாள் மதுரவசனி.



***********************************************************************************************************



“மது அக்காவுக்கு இந்த ஜூஸை கொண்டு போய் கொடுடா..” எனச் சுலோச்சனா சொல்ல



“சரிங்க பெரியம்மா…” என்றபடியே ஜூஸை வாங்கிக் கொண்டு மது தனது அக்கா மஹாலஷ்மியிடம் கொடுக்க சென்றாள். மஹாவின் வளைக்காப்புக்காக மதுரவசனி தஞ்சை வந்திருந்தாள்.



அன்று நந்தனும் அவளும் பேசிய விசயத்தை அவள் ஹம்சாவிடமும் கூட பகிரவில்லை. ஒரு வாரம் ஓடி விட்டது. நந்தனின் வரவுக்காகக் காத்திருந்தாள். என்ன தான் சில விடயங்களில் அவளுக்கும் அவளது குடும்பத்துக்கும் ஒத்துவராவிட்டாலும் கூட இந்த காதல் விவகாரத்தில் அவளால் அவர்களை மீற முடியாது. மீறவும் அவள் நினைக்கவில்லை. ஆயிரங்காலத்து பயிராம் திருமணம் அது அவளது குடும்பத்தினரின் ஆசியோடு நடக்க வேண்டும். அதுதான் அவளது மிகப்பெரிய அவா. அதே நேரம் நந்தனின் குணத்தை எண்ணிப் பயமாய் இருந்தது. அவனது கரை காணாத காதல் புரிந்த போதிலும் அவனது பிடிவாதக் குணத்தை நினைத்தால் அவளுக்கு இப்போதும் உடல் சிலிர்த்தது. அவனும் அவன் கோபமும்…!!



மஹாவின் வளைகாப்பு முடிந்து விட்டப் போதிலும் வாரக்கடைசி என்பதால் மேலும் இரு தினங்கள் தங்கி விட்டு ஞாயிறன்றுப் போகச் சொன்னார்கள் அவளது வீட்டினர்.



கீழே அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் இருக்கும் மஹாவிடம் ஜூஸ் கொடுக்க சென்றவள் நடு வீட்டில் தொலைக்காட்சியில் நந்தனின் குரல் கேட்க அப்படியே அவன் பின்னணிப் பாடிய திரைப்பாடலைக் கேட்டபடியே மெய் மறந்து நின்றாள்.



யு.எஸ் போகும் முன் சொல்லிவிட்டுதான் சென்றான் நந்தன். இவள் போனெல்லாம் செய்யக்கூடாது என ஸ்டீரிக்டாக ஆர்டர் போட்டு விட்டாள். வந்தவுடன் திருமணம். அது வரை போனில் பேசும் வழக்கமெல்லாம் கூடாதென அவள் சொன்னதுக்கு அவனும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.



“ஏய்… என்னடி டீவி பார்த்துட்டே நிற்கிற… போய் ஜூஸைக் கொடு அவகிட்ட…….. டீவியை முதல்ல ஆஃப் செய்யனும்….” என்றவாறே அவளது தாய் பூம்பொழில் டீவியை ஆஃப் செய்யப் போக



“அய்யோ…அம்மா…” என அவள் அலற



“என்ன சத்தம்…….?” என்றபடியே வந்தார் மதுவின் பெரியப்பா ரவிச்சந்திரன்.



“ஒ..ஒன்னுமில்ல பெரியப்பா…… எனக்குப் பிடிச்சப் பாட்டு ஓடிட்டிருந்தது… அம்மா ஆஃப் பண்ண போனாங்க….. அதான்..” என மதுரவசனி பம்மி பம்மி சொல்ல



“படமும் பாட்டும் எங்க ஓடி போகுது… ஓடினாலும் திரும்பி பார்த்துக்க வேண்டியதுதானே….. போய் முதல்ல மஹாவுக்கு ஜூஸை கொடு… பொறுப்பே இல்ல… உனக்கு… விளையாட்டுத்தனம் தான் மது..” என அவர் கடிய ,



“ஆமா… ஆமா.. அவர் செல்லப்பொண்ணுக்கு ஜூஸு கொடுக்கலனதும்… கோவத்தைப் பாரு…..……” என முணுமுணுத்தவாறே மதுரவசனி செல்ல



“நீயும் என் செல்லப்பொண்ணு தான் டா ராஜாத்தி……” என்றார் ரவிச்சந்திரன்.



“நம்பிட்டேன்……பெரிப்பா….” என்றவாறே மது மஹாவுக்கு ஜூஸ் கொடுக்கச் சென்றாள்.



“என்ன அக்கா மாமா இந்த நேரம் வீட்டுக்கு வந்திருக்காரு……… நம்ம சோறு கூட ஆக்கலையே…” என மோகனா புலம்ப



“அதான் புரியல…” எனச் சுலோச்சனாவும் சொல்ல



“சுலோ…..சுலோ……சீக்கிரம் வா….” என ரவிச்சந்திரன் மனைவியை அழைக்க



ஹரிணியோ, “என்ன அத்தை…. சுலோன்னு பெயர் உள்ள உங்களை ஸ்பீடா வர சொல்றார் மாமா…” என மாமியாரை கிண்டலடித்தாள்.



“அதை உங்க மாமாட்ட கேளு ஹரிணி…” எனப் பூம்பொழில் சொல்ல,



“அய்யோ… போங்கத்த… நான் ஏதோ சும்மா… கேட்டேன்…..” என அவள் பின்வாங்க,



“என்ன இது… ஸ்ரீராம் கார் சத்தம் கேட்குது………” என மோகனா சொல்ல



“அதானே என்ன இது….. எல்லாரும் இன்னிக்கு சீக்கிரம் வராங்க… என்ன விஷேசம்… சாப்பாடு ரெடியாக தன்னைக்குத்தான் இந்தாளுவோ வீட்டுக்கு வந்து நம்மளப் படுத்துவாங்க…” என மோகனா புலம்ப,



ஹரிணி நடுக்கூடத்தில் எட்டிப்பார்த்து, “அத்தை உங்க வீட்டு மாமாவும் வந்துட்டார். சின்ன மாமாவும் வந்துட்டார்… கூடவே ஆயுஷ் அப்பாவும்….” எனச் சொல்ல



‘என்னவாக இருக்கும்’ என்றெண்ணியபடியே அனைத்து மகளிரும் நடு வீட்டிற்கு வர,



மதுரவல்லியிடம் ஏதோ சொல்லி அழைத்து வந்தார் ரவிச்சந்திரன். பின் வீட்டில் உள்ள நபர்கள் அனைவரையும் பார்த்தவர் ,



“பரவாயில்ல….. சேதி கேக்கனும்னா… எல்லா பொம்பளைங்களும் ஒன்னு கூடிடுங்க…. அதுவும் நல்லதுக்காத்தான்…. நம்ம மதுவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு……. நம்ம ஆளுங்க தான்….. கும்பகோணம் பக்கம்……… நல்ல குடும்பம்… நல்லா விசாரிச்சிட்டேன்…….. இன்னிக்கு பெரிய கோவிலுக்கு வரங்களாம்….. அப்படியே நம்ம வீட்டுக்கும் வரதா சொன்னாங்க… சரி…. எல்லாரும் இருக்கோம்……. அப்படியேப் பார்த்துட்டு போகட்டும்……. ஜாதகமும் பொருந்திருக்கு…. பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்னு சொல்லிட்டேன்………..” என அவர் சொல்ல அனைவருக்கும் மகிழ்ச்சியென்றால் மதுவுக்கோ அதிர்ச்சி.



மதுவோ அதிர்ச்சி தாங்காது, “பெரியப்பா… எனக்கு.. இப்போ.. ஏன் கல்யாணம்….” என மறுத்துப் பேச



“மது….” என்று அதட்டினார் அவளது தந்தை சிவச்சந்திரன்.



“உனக்கு எப்போ கல்யாணம் செய்யனும்னு எங்களுக்குத் தெரியும்……. அமைதியா இரு…… நல்ல விசயம் பேசும்போது குறுக்க வந்திட்டு” என சுலோச்சனாவும் கடிய மதுரவசனியோ மனதில் பெரும்புயலடிக்க அமைதியாக நின்றாள்.



ரவிச்சந்திரன் மேலும் தொடர்ந்தார் “அந்திக்குத் தான் வரதா சொல்லியிருக்காவோ…. அதனால பேசியே பொழுதை ஓட்டாம சட்டு புட்டுன்னு எல்லா வேலையும் செஞ்சு முடிங்க…….. மதுவை போய் முதல்ல ரெடி பண்ணுங்க….. மதும்மா…. பயப்படாதடா….. அப்பா உனக்கு நல்லதுதான செய்வேன்…. ம்ம்…. நல்ல பையன் டா… நான் போட்டோ கூட பார்த்தேன்…. விசாரிச்சதல்லயும் நல்ல பையன்னு சொன்னாங்க….. போதாக்குறைக்கு நல்ல குடும்பம்டா…… மனசப் போட்டுக் குழப்பிக்காம போய் தயாராகுடா…… இந்தா…. பாருங்க… புள்ளையை அதட்டாம உருட்டாம…….. தயார் செய்யுங்க…….” எனக் குடும்பத்தினரிடம் உத்தரவிட்டார்.



மதுரவசனியின் மனம் ‘நந்தன் நந்தன்……’ என அரற்றியது. அவனுக்கு மட்டும் தெரிந்திருந்தால்… அய்யோ………? நினைக்கவே தேகம் நடு நடுங்கியது.



ஆட்டம் தொடரும்..!!!

@Umadeepak25 akka..come here
@Kavyajaya vaichikkoooo unaku two epiii ❤
 
Romba interesting a pokuthu.... seekirama next epi kudunga pa.... ammadi madhu ennama ithu ipadi pattunu ok sollita....konjam unexpected a irunthathu.... but veetula ellorayum epadi samalika pora.... kandipa nandhan ku therunja pbm ku panjame illa....but I think nandhan madhukaha evalavu thooram venumnalum nitchayama erangi povanu thonuthu.....
 
Top