Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 2

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்-----2

வீட்டுக்கு வந்த வள்ளியம்மா பாயில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு இருந்த தன் பேத்தியை பார்த்ததும் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு அவள் அருகில் சென்று “என்ன தாமரை படுத்துட்ட உடும்பு சரியில்லையா….?” என்று பதட்டத்துடன் கேட்ட கேள்விக்கு வாயால் பதில் அளிக்காது தலையை மட்டும் இல்லை என்று அசைக்க.

“அப்புறம் ஏன் படுத்துட்ட ஒரு காபி தண்ணியாவது வைச்சி குடிக்கலாம் இல்லையா….?” என்று கேட்டது தான் தாமதம் கவிழ்ந்து இருந்த முகத்தை நேராக திருப்பிய நம் கதையின் நாயகி தாமரை செல்வி “ஆயா நீங்க சொன்ன இரண்டாவது தான் குடிக்க முடியும். அது தான் தண்ணி .

முதல் சொன்ன காபி குடிக்கிறதுக்கு பால் வேண்டும். சரி டிக்கெஷனாவது குடிக்கலாம் என்று பார்த்தா கூட காபி தூள் வேண்டும். இல்லை என்றால் எதுவும் இல்லாமல் காபி வைக்கும் கலையாவது நீங்க கத்து கொடுத்து இருக்கனும். எதுவும் இல்லாமல் நான் எங்கே காபி வைத்து குடிப்பது.” என்று தன் பசியின் சீற்றத்தில் தன் ஆயாவை வறுத்து எடுத்தாள் தாமரை செல்வி.

தன் பேத்தி பசியால் தான் இப்படி பேசுகிறாள் என்று தெரிந்துக் கொண்ட அந்த மூதாட்டி “கோசிக்காதே கண்ணு இதோ தம்பி வீட்டில் இருந்து உனக்கு பிடித்த ஆப்பமும் கால் பாயவும் கொண்டு வந்து இருக்கேன் பாரு. வெரசா போய் முக கழுவிட்டு வா.” என்று சொன்னவர்.

ஒரு தட்டை எடுத்து அதில் மூன்று ஆப்பத்தையும் இரண்டு துண்டு காலோடு பாயவையும் ஊத்தி வைக்க. பசியின் தாக்கத்தில் பாட்டி சொல்லுக்கு எதிர் பேச்சி பேசாது எழுந்து முகம் கழுவிக் கொண்டு இரண்டு ஆப்பத்தை உள்ளே விட்ட பிறகு தான் குரலே வெளியே வந்தது.

மூன்றாவது ஆப்பத்தை பிச்சி வாயில் போட்டுக் கொண்டே “ஆயா உண்மையை சொல்லு. அங்கே சமையல் செய்றது அந்த அய்யாக்கு பிடித்த மாதிரி செய்யிறிங்களா….? இல்லை எனக்கு பிடிக்கும் என்று செய்யிறிங்களா….?” என்று கேள்விக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தவள் கைய் கழுவ எழ.

“ வர வர உனக்கு திமிர் ஜாஸ்தி தாண்டி ஆயிட்டு வருது. நான் ஏன்டி உனக்கு பிடிச்சா மாதிரி செய்ய போறேன். மகராசன் அவருக்கு பிடிச்சா மாதிரி தான் செய்வேன்.” என்று சொன்னவர் தனக்கும் இரண்டு ஆப்பத்தை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடும் பாட்டியை பார்த்தவள்.

“என்ன ஆயா நீங்க இன்னுமா சாப்பிடலை….?”

“சாப்பிட்டேன் கண்ணு. ஆனா இதை சாப்பிடலை.தம்பி சாப்பிடும் போது பக்கத்தில் சத்யாவும் இருந்தானா….தம்பி தான் யாரு இருந்தாலும் சாப்பிட சொல்லி தானே அவரும் சாப்பிடுவார்.அதனாலே அந்த தம்பிக்கு வைச்சிட்டு பார்த்தா அளவு குறைவா இருந்தது. அது தான் நீ சாப்பிட்ட பிறகு மிச்சம் இருந்தா சாப்பிடலாமுன்னு இருந்துட்டேன்.” என்று சொல்லும் பாட்டியை கட்டிக் கொண்டவள்.

“பாருங்க பாட்டி நான் படிப்பு முடிச்சிட்ட பிறகு நீங்க எங்கேயும் வேலைக்கு போக கூடாது. உங்களை ராணி மாதிரி வைச்சிப்பேன். உங்களுக்கு எது எது பிடிக்குமோ அது தான் வீட்டில் செய்யனும். அதுவும் இல்லாமல் நீங்க சாப்பிட்ட மிச்சதா தான் மத்தவங்க சாப்பிடனும்.” என்று சொல்லும் பேத்தியை உச்சி முகர்ந்து கட்டிக் கொண்டவர்.

“நீ சொன்னதே போதும் கண்ணு. எனக்கு என்ன குறைச்சல் நான் இப்போவும் ராணி மாதிரி தான் இருக்கேன். தம்பி வீட்டில் நான் சமைப்பது தான் சமையல் எல்லாம் என் இஷ்டம் தான்.நான் என் உசுரு போகும் வரை தம்பிக்கு என் கையாலே சமைச்சி போடுவேன்.

அப்புறம் என்ன சொன்னே படிச்சிட்டு சம்பாதிக்க போறியா...அந்த கதையே வேண்டாம். இந்த படிப்பே தம்பி சொல்லுச்சேன்னு தான் படிக்க வைக்கிறேன்.” என்று சொல்லும் பாட்டியை பார்த்து கோபத்துடன்.

“ ஆயா இந்த பி.எஸ்.சி நர்ஸ்ஸிங் படிச்சா இஸியா வேலை கிடைக்கும் என்று தானே இந்த படிப்பு எடுத்து படிக்கிறேன். இப்போ இப்படி சொன்னா எப்படி ஆயா.” என்று சொன்னவள்.

பின் ஏதோ நியாபகம் வந்தவளாய் “உங்க கிட்டே என்ன பேச்சி நான் அய்யா கிட்டயே பேசிக்கிறேன்.அவர் ஆஸ்பிட்டலிலேயே வேலையையும் ஏற்பாடு செஞ்சிக்கிறேன்.” என்று சொன்னவள்.

படிக்க நிறைய இருப்பதால் பாட்டியுடன் தன் பேச்சை முடித்தவள் தன் பாட புத்தகத்தை எடுத்து படிக்க ஆராம்பித்தாள். வள்ளியம்மா மனதுக்குள் இவள் ஆதித்யா தம்பியை போஸ்டரில் பார்த்ததோடு சரி இவளாவது தம்பிக் கிட்ட போய் பேசி வேலை வாங்க போவுது என்று நினைத்தவர் உடம்பு கொஞ்சம் அசதியாக இருக்க மூலையில் இருந்த பாயில் படுத்துக் கொண்டார்.

மறு நாள்காலை எப்போது போல் வெள்ளனவே எழுந்த வள்ளியம்மா ஆதித்யா வீட்டில் எடுத்து வந்த பாத்திரத்தை கழுவி கவுத்து வைத்தவர். நேற்று தன் பேத்தி சொன்ன வீட்டில் எதுவும் இல்லை என்ற பேச்சி நினைவில் தன் பேத்தியை பார்த்தவர் அவள் இன்னும் எழாமல் இழுத்து போத்தி படுத்துக் கொண்டு இருப்பதை பார்த்து வெளிபக்கமாய் இழுத்து சாத்தி வெளியில் பூட்டு போட்டு கொண்டு பால் சர்க்கரை காபி தூள் வாங்க கடை வீதிக்கு சென்றார்.

என்ன தான் ஆதித்யா என் வீட்டில் வேலை செய்யும் வீட்டு பெண்ணை யார் என்ன செய்ய முடியும் என்று சொன்னாலும் அவர் இவ்வளவு ஜாக்கிரதையாக இருப்பதற்க்கு காரணம் அவள் பேத்தியின் கொள்ளை அழகு தான்.

அவள் அழகை பார்த்தால் அவள் குப்பத்து பெண் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நிறம் மாநிறத்துக்கு மேல் என்று சொல்லலாம். ஆனால் அந்த முக வெட்டு குண்டு முகமும் சிரித்தால் கன்னத்தில் விழும் குழியும் பார்ப்பவரை திரும்பவும் ஒரு தடவை பார்க்க தூண்டும்.

தாமரையின் அம்மா தேவகியும் அழகு தான். அந்த அழகால் வந்த பிரச்சனையின் பயத்தால் தான் தன் பேத்தியை பொத்தி பொத்தி பாது காக்கிறாள். ஆம் தாமரையின் அம்மா தேவகி வேறு இனத்தை சேர்ந்தவள். தினம் செல்லும் வழியில் வள்ளியம்மாவின் மகன் சின்ன பாண்டி இருக்க . பார்த்த இருவருக்கும் கால போக்கில் காதம் மலர்ந்தது.

அதை தேவகி வீட்டில் ஏற்காமல் போக சின்ன பாண்டியன் தேவகியை தன் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டான். வள்ளியம்மா தான் ஒரு கோயிலில் வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களும் மகிழ்ச்சியாக தான் குடும்பம் நடத்தினார்கள்.

அதற்க்கு சாட்சியாக பத்தே மாதத்தில் தாமரையை பெத்தெடுத்து வள்ளியம்மாவை பாட்டியுமாக்கி விட்டார்கள். தாமரைக்கு இரண்டு வயது இருக்கும் போது வள்ளியம்மா வீட்டு போர்ஷனில் பேச்சிலர் நான்கு பேர் குடிவந்தனர்.

அன்று ஆராம்பமானது தேவகியின் வாழ்க்கையில் பிரச்சனை. தேவகி வரும் போதும் போகும் போதும் அந்த நாள்வரும் ஏதாவது சொல்லி கிண்டல் செய்து கொண்டே இருந்தனர்.தேவகி அதை காதிலேயே வாங்காமல் சென்றதோடு அதை கணவனின் காதிலும் போட்டு வைக்கவில்லை.

ஏன் என்றால் சின்ன பாண்டி கொஞ்சம் முரட்டு சுபாவம் உடையவன். இதை பற்றி தான் ஏதாவது சொல்ல போய் கோபம் வந்து அவர்களை அடித்து விட போகிறார் என்ற பயத்தில் தான் தேவகி தன் கணவனிடம் மறைத்தாள்.

ஒரு நாள் தன் கணவன் வேலைக்கும் மாமியார் கடைக்கும் சென்ற பிறகு குளிப்பதற்க்காக கிணற்றில் தண்ணி எடுத்துக் கொண்டு பாத் ரூமில் வைத்து விட்டு பார்த்தால் சோப்பை எடுக்க மறந்து விட்டது அப்போது தான் நியாபகத்துக்கு வந்தது.

அதை எடுக்க தன் போர்ஷனுக்கு சென்ற சமையம் அந்த நால்வரும் பாத் ரூமில் ஒளிந்துக் கொண்டனர். அந்த பாத்ரூம் அனைவரும் பயன் படுத்தும் காமனானது.தேவகி சோப்பை எடுத்துக் கொண்டு வந்து பாத் ரூமை மூட போகும் சமையம் தான் அவர்களை பார்த்தாள்.

அவள் கத்த வாய் திறப்பதற்க்குள் ஒருவன் அவள் வாயை அடைத்தான் என்றால் மற்றொருவன் பாத் ரூமின் கதவை அடைத்து விட்டான். பின் நிகழ்ந்தது எதுவும் எழுத்தில் சொல்ல முடியாததாக தான் நடந்தது.

இருவரின் காம விளையாட்டிலேயே மயக்க நிலைக்கு சென்றவளை விடாது மற்ற இருவரும் தன் தேவையை அவளிடம் பெற்ற பிறகு தான் அவளை விட்டு வெளியேறினார்கள். அந்த நிகழ்வில் அவள் மயக்க நிலைக்கு சென்று அந்த பாத் ரூமிலேயே விழுந்து கிடந்தாள்.

கடை வீதிக்கு சென்று திரும்பிய வள்ளியம்மா குழந்தை அழுவதை பார்த்து எங்கே போனாள் இவள் என்று குழந்தையை தூக்கிக் கொண்டு பின் பக்கம் வந்து பார்க்க அங்கு பாத் ரூம் கதவின் மேல் தேவாகியின் உடை போட பட்டு இருப்பதை பார்த்து குளிக்கிறாள் என்று நினைத்தவர் குழந்தையை தட்டி கொடுத்து சமாதானம் படித்திக் கொண்டு இருந்தார்.

பின் கொஞ்சம் நேரம் சென்ற பிறகும் தேவகி பாத் ரூமை விட்டு வராததை பார்த்த வள்ளியம்மா அங்கு சென்று கதவை தட்ட கைய் வைக்கும் போது கதவு தானாக திறந்துக் கொள்ள என்ன என்று நினைவோடவே கதவை விரிய திறந்தவர் அங்கு அவர் பார்த்த காட்சியில் அப்படியே உறைந்து நின்று விட்டார்.

பின் நடந்தது எல்லாம் வள்ளியம்மா இப்போதும் நினைத்து பார்க்க விரும்பாதது.அக்கம் பக்கத்தவர் கூடி தேவகியை ஆஸ்பிட்டல் அழைத்து செல்ல. அங்கு பார்த்த டாக்டர் உயிர் பிரிந்து ஒரு மணி நேரம் கடந்து விட்டது என்று சொல்வதற்க்கும் விஷயம் கேள்வி பட்டு அப்போது தான் ஆஸ்பிட்டலுக்கு வந்த சின்ன பாண்டியன் காதில் அந்த மரண செய்தி விழுவதற்க்கும் சரியாக இருந்தது.

ஒரு நிமிடம் தான் சின்ன பாண்டி சிலையாக இருந்தான். பின் அந்த ஆஸ்பிட்டலை விட்டு வீட்டுக்கு வந்தவன் பாத் ரூமின் கதவை திறந்து பார்க்க அந்த இரும்பு கதவில் தன் ரத்தத்தால் தன்னை இந்த கதியாக்கியவனை குறிப்பிட்டு தான் அவள் இறந்து இருக்கிறாள்.

சும்மா கிண்டல் செய்வதை சொன்னாலே எங்கே அவர்களை அடித்து தன் கணவர் பிரச்சனையில் மாட்டி விடுவானோ என்று பயந்து சொல்லாமல் விட்ட தேவகி எதற்க்காக அவர்களின் பெயரை குறிப்பிட்டு இறந்தாள் என்பதை அந்த கணவன் எப்படி புரிந்துக் கொண்டனோ….

அவர்கள் நால்வரையும் அறிவாளாள் வெட்டி விட்டு தானும் தூக்கில் தொங்கி விட்டான். பின் கேசு அது இது என்று நடந்து முடியவே ஆறு மாதம் கடந்த நிலையில் அங்கு இருக்க முடியாமல் தான் வளியம்மா தன் பேத்தியோடு இப்போது இங்கு இருக்கும் இடத்தில் குடியேறினார்.

இந்த பகுதி கூட அவ்வளவு பாது காப்பு இல்லை என்று தெரிந்தும் கூட இங்கு வந்ததுக்கு காரணம் வாடகை தான். இவ்வளவு குறைந்த தொகையில் வேறு எங்கும் வாடகைக்கு வீடு கிடைக்காததால் தான் இங்கு குடியேறினார்.

இங்கு வந்த புதில் பேத்தியும் சிறு பெண்ணாக இருப்பதால் அதை பற்றி கவலை படவில்லை. அப்போது ஆதித்யா வீட்டு வேலைக்கு செல்ல வில்லை. ஒரு சேட்டு வீட்டில் தான் வேலை பார்த்து வந்தார்.

பின் அவர்கள் தன் குடும்பத்தோடு ராஜஸ்தான் செல்வதால் வள்ளியம்மாவை வேண்டாம் என்று சொல்லி விட வேறு வேலை தேடும் சமயம் தான் ஆதித்யா சமையல் வேலைக்கு ஆள் தேடுக்கிறான் என்று கேள்வி பட்டு இவர் போய் கேட்க. ஆதித்யாவும் இவருக்கே அந்த வேலையைட்யும் கொடுத்து விட.

இதோ இந்த பத்து வருடமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் குடும்பம் வண்டி ஒடிக் கொண்டு இருக்கிறது. வள்ளியம்மா பழைய நினைவோடவே கைடைக்கு சென்று வீட்டை திறந்து உள்ளே போனவரை படித்துக் கொண்டு இருந்த தாமரை “ஏய்யா வெளியே பூட்டு போட்டு போகதேன்னு எத்தனை தடவை உங்க கிட்ட சொல்றே….”

என்ற பேத்தியின் பேச்சை காதில் வாங்கதவராய் ஸ்டவ்வை பத்த வைத்து காபி போட்டவர் தனக்கு ஒரு கிளாஸ் எடுத்துக் கொண்டு மற்றொன்றில் தாமரைக்கு ஊத்தி அவளிடம் கொடுத்தவாரே “ நீ எத்தனை தடவை சொன்னாலும் நான் இது தான் செய்வேன்.” என்று திட்டவட்டமாக சொன்னவர்.

“ படித்தது போதும் சீக்கிரம் காலேஜிக்கு கிளம்பு.” என்று சொன்னவர்.தாமரை தயாராக எடுத்து வைத்த உடையை அவளிடம் கொடுத்து குளிக்க அனுப்பி வைத்தார். எப்போதும் தாமரை காலேஜ் சென்ற பிறகே வள்ளியம்மாவும் ஆதித்யா வீட்டுக்கு செல்வார்.

அது போலவே தாமரை காலேஜ் விட்டு வருவதற்க்குள் ஆதித்யாவுக்கு இரவு உணவை சமைத்து ஆட் பேக்கில் வைத்து விட்டு தனக்கும் எடுத்துக் கொண்டு சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விடுவார். நேற்று தான் கிளம்பும் சமயம் ஆதித்யா தலை வலியோடு வந்ததால் கொஞ்சம் தாமதமாகி விட்டது. இனி அப்படி தாமதிக்க கூடாது என்று நேற்றே முடிவு செய்து விட்டார்.

பேத்தி குளித்து விட்டு வந்த பிறகு “தாப்பா போட்டுக்கோ கண்ணு. நான் போய் உனக்கு இட்லி வாங்கியாந்துற்றேன்.” பேத்தியின் முறைப்பையும் பொருட்படுத்தாது சொன்னவர்.அந்த வீதியின் கடைசியில் விற்க்கும் இட்லி கடைக்கு சென்று வாங்கி தாமரைக்கு கொடுத்து விட்டு அவள் சைக்கிளில் காலேஜ் கிளம்பிய பிறகே தான் குளித்து விட்டு ஆதித்யா வீட்டுக்கு சென்றார்.

கடந்த பத்து வருடமாக இது தான் நடக்கிறது. தன் பேத்திக்கு காலையில் கடையில் இட்லி வாங்கி கொடுப்பவர் மதியத்துக்கு பள்ளிக்கூடம் செல்லும் வரை அங்கு தரும் உணவையே சாப்பிட சொன்னவர்.காலேஜ் வந்த பிறகு காசு கொடுத்து விட்டு காண்டினில் சாப்பிட சொல்லி விட்டார்.

வள்ளியம்மா மட்டும் மூன்று வேளையும் தன் சாப்பாட்டை ஆதித்யா வீட்டிலேயே முடித்துக் கொள்வார்.என்ன ஒன்று இரவு உணவை எடுத்து வந்து தன் பேத்தியோடு சாப்பிடுவார்.
 
Top