Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 6 2

Advertisement

Admin

Admin
Member




“சந்தானத்தின் பேச்சை கேட்ட சகுந்தலா “ என்னப்பா சொல்லுகிறாய் அப்போ இங்க இருக்கும் ஒட்டலை யாரு பார்த்துப்பா ? என்று கூறினார்.அதற்கு அவர் ஒட்டலை விற்ற விஷயத்தை கூற

“என்னப்பா சொல்லுகிறாய்”

“ஆமாம்மா! நான் ஒட்டலை விற்றுவிட்டேன். நம்ம ஒட்டலை இவர் தான் வாங்கியிருக்கிறார்”. என்று பிரதாப்பை அறிமுகபடுத்தினார். பிரதாப் சகுந்தலாவை வணங்கினார்.

பிரதாப் பின் தானே பேச்சை ஆராம்பித்தார்.”என் பெயர் பிரதாப் நான் பல தொழில்களை செய்கிறேன். என் சொந்த ஊர் டெல்லி என்றவுடன்,” சகுந்தலா தன் பையன் கேசவமூர்த்தியை பார்த்தார். கேசவமூர்த்தி அவர் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்தார். இவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றத்தை கண்டும் காணமல் தன் பேச்சை தொடர்ந்தார்.

“நான் உங்கள் பேத்தியை பெண் கேட்டு வந்திருக்கிறேன்.” என்று நேரிடையாகவே கேட்டான்.பிரதாப்பின் தோற்றமும்,வசதியும்,நேரிடையாக பெண்கேட்ட துணிச்சலும் சகுந்தலாவுக்கு பிடித்து விட்டது.என்றாலும் எதோ ஒன்று அவரை தடுத்தது.

ஆனால் தன் மகன் என்ன சொல்வான் என்று தெரிய வில்லையே ,என்ற யோசனையில் இருக்கும் போதே சந்தானம் பிரதாப்புக்கு ஆதரவாக “என்னை நம்பி தாருங்கள் எனக்கு பிரதாப்பை நீண்ட வருடமாக தெரியும் “என்று பொய் உரைத்தார்.

ஆம் சந்தானத்துக்கு பிரதாப்பை நீண்ட வருடமாக எல்லாம் தெரியாது.இந்த ஒட்டலை விலை பேசியதில் இருந்துதான் தெரியும். ஆனால் பிரதாப்புக்கு எப்படியாவது பத்மினியை திருமணம் செய்திவிட வேண்டும் என்ற காரணத்திற்க்காக பொய் உரைத்தார்.

கேசவமூர்த்தி பின் மெதுவாக “நீ சொல்றது சரி சந்தானம் ஆனால் நான் இதுவரையும் பத்தூ திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. அதுவும் இல்லாமல் நான் என் பெண்ணுக்கிட்டே இதுப்பற்றி பேசவேண்டும்”, என்று கூறி பிரதாப்பை தயக்கத்துடன் பார்த்தார்.

கேசவமூர்த்தியின் தயக்கத்தை பார்த்து அவர் இன்னும் ஏதோ சொல்லுவதற்க்கு தயங்குவதை அறிந்துக் கொண்ட பிரதாப் “கேசவமூர்த்தி சார் நீங்க எங்கிட்ட ஏதோ சொல்வதற்க்கு தயங்குவது மாதிரி இருக்கு எது இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க நான் தவறா நினைக்க மாட்டேன்.”என்று உறுதி கூறினான்.

பிரதாப்பின் கேள்வியில் கேசவமூர்த்தி மனதுக்குள் பாராட்டிக் கொண்டார்.பராவாயில்லை மற்றவர்களின் முகபாவத்தை வைத்தே அவர்களின் மனநிலை அறிந்துக் கொள்கிறார் கெட்டிகாரார் தான் என்று. இந்த கெட்டிக்காரத்தனம் தான் இந்த வயதில் இவ்வளவு உயரத்தை எட்டி உள்ளார் என்று மனதில் பாராட்டிக் கொண்டார்.

பின் மெல்ல தயங்கியவாரே பிரதாப்பிடம் நான் சொல்வதை நீங்க தவறா நினைக்க கூடாது” என்று கூறி பிரதாப்பின் வயிற்றில் புளியை கரைத்தார்.

ஆம் கேசவமூர்த்தி தயங்ககும் போதே எங்கே பெண் கொடுக்க மாட்டாரரோ என்று பயந்தான். அவனின் இந்த பயமே அவனுக்கு இத்திருமணம் எவ்வளவு அவசியம் என்பதை அவனுக்கு உணர்த்தியது.

பிரதாப் தயங்கியவாறே கேசவமூர்த்தியிடம் “ஏது இருந்தாலும் சொல்லுங்க” என்று சொல்லும் போதே அவன் பேச்சில் ஒரு நடுக்கம் ஏற்ப்பட்டது. அவனின் குரலைக் கேட்ட அசோக் தன் நண்பனின் குரலா? என்று அவனுக்கு சந்தேகம் ஏற்ப்படும் படியிருந்தது.

கேசவமூர்த்தி மெல்ல தன் மனதில் உள்ளதை சொல்ல தொடங்கினார்.”உங்க வயது என்ன என்று நான் தெரிஞ்சிக்கலாமா….?என்ற அவர் கேள்வியில் பொட்டில் அடித்தது போல் இருந்தது. அப்போது தான் அவனுக்கு உரைத்தது தனக்கும் பத்மினிக்கும் உள்ள வயது வித்தியாசம். இதை இது வரை அவன் சிறிதும் யோசித்தது இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

அவனை யோசிக்க விட்டது இல்லை அவனை சுற்றியிருக்கும் பெண்கள்.எப்போதும் அவனை புகழ்ந்து அவனை ஒரு பிரின்ஸாகவே உணர்த்தினார்கள். ஏன் சென்னை வரும் வரைகூட தன்னை நிராகரிக்க காரணம் ஏதுமில்லை என்றே நினைத்திருந்தான். ஏன் ஒருப்படி மேல்போய் தன்னை மாப்பிள்ளையாய் அடைவதற்கு அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூட கருதியிருந்தான்.

அவனின் திமிரை முதலில் பத்மினி அடக்கினாள். ஆம் அவள் ஒட்டலில் தன்னை பாராதது அவன் ஈகோக்கு விழுந்த அடியாகவே அவன் கருதினான்.இப்போது கேசவமூர்த்தி தனக்கு பெண் கொடுப்பதற்க்கு யோசிப்பது அவன் கற்பனை பண்ணிக்கூட பாராதது.

.அவனுக்கு தெரியவில்லை ஒரு பெண் கொடுக்கும் போது எவ்வளவு பார்த்து விசாரித்து கொடுக்க வேண்டும் என்பதை அவன் பழகிய வட்டாராம் அப்படிப்பட்டது! அவன் என்ன செய்வான் பாவம்.

பிரதாப் இவ்வாறு யோசிக்கும் போதே சகுந்தலா இடை புகுந்தார் “கேசவா வயது என்ன வயது எனக்கும் உங்க அப்பாவுக்கும் பன்னிரண்டு வயது வித்தியாசம் நாங்க இரண்டு பேரும் சந்தோஷமா இல்லையா”? சொல்லு வயது வித்தியாசம் எல்லாம் ஒரு பொருட்டேயில்லே மனது ஒத்து போச்சினா போதும் என்று தன்னை அறியாமலேயே பிரதாப்புக்கு ஆதரவாக கூறினார்.

அவர் கூறியவுடன் தான் நாம் என்ன? பிரதாப்புக்கா பேசுகிறோம். இது தான் இன்னாருக்கு இன்னார் என்பதோ? பின் என்ன தனக்கு விருப்பம் இல்லாமலேயே பிரதாப்புக்கு ஆதரவாக தன் கருத்தினை கூறினார்.

பின் கேசவமூர்த்தி “நீங்க சொல்வதும் சரிம்மா” என்று அவர் கருத்தை ஆமோதித்தார்.பின் இன்னும் ஒரு பிரச்சினை என்று இழுத்த போது பொருமையின் சிகரம் நம் அசோக்குக்கே கோபம் வந்ததுன்னா பார்த்துக்குங்களே! அசோக் கோபத்துடன் கேசவமூர்த்தியிடம் திரும்பி…

“நாங்களே வலிய வந்து பெண் கேட்பதால் நீங்க இவரை சாதாரணமாக நினைத்து விட்டிர்கள் போல் அவனுக்கு பெண் கொடுக்க நான் நீயின்னு போட்டி போட்டுட்டு இருக்காங்க உங்க மகளை பார்த்ததும் இவனுக்கு பிடிச்சதினாலே தான் நாங்களே எங்க நிலையில் இருந்து இறங்கி வந்து பெண் கேட்கிறோம்” என்று கோபத்துடன் கூறி முடித்தான்.

பின் அவன் கோபம் அவனுக்கு தன் நண்பன் யாரிடமும் இது போல் தழைந்து போய் அவன் பார்த்ததே இல்லை அப்படி பட்டவன் அவரிடம் தழைந்து போவது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அதுவும் அவனுக்கு உரிமைப்பட்டது. முதலில் யாரோப் போல் மற்றவர்களின் மூலம் பெண் கேட்பதே தன் நண்பனுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை தன் நண்பன் தன்னிடம் கூறவில்லை என்றாலும் அவன் அறிவான்.

அசோக்கின் பேச்சிக்கு சந்தானமும் “ஆமா கேசவா டெல்லியில் அவர் கால் பதிக்காத தொழிலே இல்லை. எனக்கு அவரை பற்றி நன்கு தெரியும் என்று உரைத்தும், நீ இப்படி யோசிப்பது சரி இல்லை” என்று கூறினார்.

கேசவமூர்த்தி பதட்டத்துடன் “ நான் இவரை குறைத்து மதிப்பிட வில்லை நான் எதிர் பார்க்கும் தகுதிக்கு மேல் உள்ளார் என்பது தான் குறையே” என்றார்.

அவரின் பேச்சி சகுந்தலாவை தவிர மற்ற மூவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.சந்தானம் “என்ன கேசவா சொல்றே எங்களுக்கு ஒன்னும் புரியலையே புரியும் படிதான் சொல்லேன்” என்று சலிப்புடன் கூறினார்.

பின் அவரும் தான் என்ன செய்வார் அவரும் தான் ஒரு பெண்னுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர் தன் பெண்னுக்கு திருமணம் செய்து முடிப்பதற்குள் மாப்பிள்ளை வீட்டார் அவரின் பாதி தன் மானத்தை வாங்கிவிட்டார்கள். இதற்க்கும் தன் சம்மந்தி வீடு பிரதாப் வசதிக்கு கால் வசதி கூட இல்லாதவர்கள் அப்படி பட்டவர்களுக்கே அவர்கள் சொல்லும் பேச்சிக்கு எல்லாம் தலைபணிந்து போனார் .இங்க என்னன்னா பெண்ணை அழகா பெத்திட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இப்படியா எல்லாரையும் குழப்புவது அவர் வயத்தெரிச்சல் அவருக்கு ஒரு மனுஷனுக்கு பொறுமையும் ஒர் அளவுக்கு தானே இருக்க முடியும்.

சந்தானமாவது வாயை திறந்துகேட்டுவிட்டார். பிரதாப்புக்கு தன் கோபத்தை அடக்கி அதை தன் முகத்தில் காட்டாமல் இருப்பதற்க்கே பெரும் பாடாக இருந்தது.பேசாமல் பெண்ணை தூக்கிடலாமா, என்று கூட யோகிக்க ஆராம்பித்து விட்டான் என்றால் பாருங்களேன்.

பின் கேசவமூர்த்தி பிரதாப்பை பார்த்து “நான் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். என் பெண்ணுக்கு வீட்டோடு தான் மாப்பிள்ளை பார்க்கிறேன். எனக்கு இருப்பது ஒரே பெண் தான். அவளை விட்டு என்னால் இருக்க முடியாது. அது போல் தான் என் பெண்ணும் என்னை பிரிந்து இருக்க மாட்டாள்.அதனால் வசதி கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை நல்ல பைய்யனாவும், என் தொழிலை பார்த்துக் கொள்பவராகவும், இருக்க வேண்டும்”. என்று கூறிமுடித்தார்.

 
:love: :love: :love:

அடடா மாமனார் காலைவாரிட்டாரே........ அப்போ பொண்ணு???
பாட்டி என்ன முடிவு பண்ணியிருக்காங்க???
டெல்லி சொன்னதும் ஜெர்க் ஆனாங்க........ சந்தேகம் வந்துடுச்சா???

பொண்ணு கேக்குறப்போ டென்ஷன் ஆனால் வேலை நடக்காதுங்கப்போ பிரதாப் & அசோக்.....
அந்த time பாவமா பதவிசா இருந்தால் மட்டும் தான் மாமனாருக்கு பிடிக்கும்.....
பார்த்து பேசுங்கப்பா.......
 
Last edited:
Top