ரேவதி....அவரின் காதல் தோல்வியை அதனால் ஏற்பட்ட வலி மிகுந்த வாழ்வை பிரபாவிற்கு கடத்தாமல் அவளின் மனதில் பயத்தை விதைக்காமல் நம்பிக்கை தரும் வகையில்... வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தும் விதமாக....!!!
காதலில் விழுவது பெரிதல்ல பிரச்சினை வந்தால் வீழ்ந்து விடாமல்....கொண்ட காதலில் உறுதியாக நின்று ஜெயிப்பது தான் பெரிது என்று உணர்த்தும் வகையில் அமைந்த அவரின் பேச்சு மிக அருமை
அவர் கூட சேர்ந்து செத்து போய் இருப்பேன் இது ரேவதியோட நியாயம் எங்க இருந்தாலும் அவ உயிரோடு நல்ல படியாக இருக்கணும் இது செல்வத்தோட நியாயம்
அவரவர் இடத்தில் அவங்க அவங்க நியாயம்
ரேவதி வரக் கூடிய பிரச்சினையும் அதுக்கு எந்த அளவுக்கு மன தைரியத்தோடும் உறுதியோடும் போராடணும் என்று சொல்லிட்டாங்க இனி பிரபா விக்ரம் தான் போராட தயாராகணும்
கொஞ்ச நாள் ஊருக்குள்ள இரண்டு பேரும் அடங்கி இருந்தால் என்ன இப்போ இரண்டு வீட்டு பக்கமும் ஒருத்தருக்கு தெரிஞ்சிடுச்சு
செல்வம் ரேவதிக்கு உங்க மாமனார் செஞ்ச கொடுமைக்கு விக்ரம் காதலை சேர்த்து வைச்சு பதிலடி கொடுங்க
ரேவதிக்கு இவன் கார்மெண்ட்ஸ்ல வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று சொன்னானே அது என்ன ஆச்சு
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.