Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 8

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 8
"என்ன சதா..குட் மார்னிங் சொன்ன பதிலுக்கு சொல்லணும்னு தெரியாதா..எதுக்கு என்ன வெறிக்க வெறிக்க பாத்துகிட்டு இருக்க",என்றான் அதே புன்னகையுடன்.

"நீங்க யாரு",என்று தெரியாத முகத்துடன் கேட்டாள்.

"தருண்",பதிலை சொன்னாள் தாரா.

தாராவை திரும்பி பார்த்தவள்.உனக்கு தெரிந்தவரா என்பது போல் பார்த்துவைத்தள்.

அதற்குள் அங்கு வந்த கோதை பாட்டி "தருண்..வாடா வாடா..எப்படி இருக்க..ஆளே மாரிட்ட.."என்று சொல்லிக்கொண்டே அவனை அணைத்துக்கொண்டர்.

"நா சூப்பரா இருக்கேன் கோதை.. நீயும் தான் சரோஜாதேவி மாறி அதே அழகோட இருக்க",என்று அவர் கன்னத்தை கிள்ளினான்.

"போடா போக்கிரி",என்று மெல்லிய புன்னகையுடன் அவன் தோளை தட்டினார்.

"சரி இரு..நாமா அப்பறம் பேசிக்கலாம்.. சதா பாவம்..ஒரே கன்பூஷன்ல இருக்காங்க..", என்று அவள் பக்கம் திரும்பினான்.

"ஹாய் எல்லோ ரோஸ்..நா தருண்..வைஷுவோட அண்ணன்..அமெரிக்கால ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்..சாப்ட்வேர் என்ஜினீயர்..என்னோட அப்பாவும் நானும் ஒரு கம்பெனி அங்க ரன் பண்ணிட்டு இருக்கோம்", என்று தன்னை அறிமுக படுத்திக்கொண்டான்.

அதை கேட்டதும் சம்யுக்தாவின் முகம் தெளிவடைந்தது.ஒரு மென்முறுவளுடன் அவனை பார்த்தாள்.

"உன்ன பத்தி எப்படி தெரியும்னு பாக்கறியா..எல்லான் கோதை அப்டேட் தான்.."என்று சொல்லி சிரித்தான்.

"சம்யுக்தா எங்கம்மா கெளம்பிட்டா.. "என்று கோதை கேட்டார்.

"கோவிலுக்கு போலான்னு கெளம்புனேன் பாட்டி ", என்றாள்.

"அப்படியா...அப்போ இங்க பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.அங்க போய்ட்டு வாம்மா", என்றார்.

"சரிங்க பாட்டி..தாரா சொன்னா "..

"ஹேய் எல்லோ ரோஸ்.. அப்போ ஒரு 15 மினிட்ஸ் வெயிட் பண்ணு..நானும் பிரஷ் ஆயிட்டு வரேன் ", என்றான்.

"ரொம்ப வருஷம் அப்புறம் வந்து இருக்க..முதல்ல கோவிலுக்கு போறது நல்லது தான்..போய் சீக்கிரமா குளிச்சிட்டு வா..சம்யுக்தா உனக்கும் வழி தெரியாது தான.. இவனோட போய்ட்டுவாம", என்றார் கோதை.சம்யுக்தவும் சரி என்றாள்.

இதை அனைத்தும் பார்த்துக்கொண்டு இருந்த கண்ணன் இவர்கள் அருகில் வர தருண் கிளப்புவதற்கு உள்ள செல்ல இருந்தவன் இவனை பார்த்ததும் "ஹாய் மச்சான்..எப்படி இருக்கீங்க..சாரி கொஞ்சம் வேலை இருக்கு..அப்பறம் பேசலாம்",என்று அவன் பதிலுக்கு கூடா காத்திராமல் சென்றுவிட்டான்.

கோதை பாட்டியை முறைத்துகொண்டே வந்தவன் சம்யுக்தா எதையோ நினைத்து சிரிப்பதை பார்த்து நின்றுவிட்டான்.இவன் முறைப்பதை பார்த்த பாட்டி அங்கே இருந்தால் நம்மை பார்வையிலே எரித்து விடுவான் என்று ஓடிவிட்டார்.

"என்ன நெனச்சி சிரிச்சிட்டு இருக்க சதா ", என்று வினவினாள் தாரா.

"தருண நெனச்சேன்".

"அவனை பற்றி என்ன ".

"ஹி இஸ் சோ நைஸ் ", என்றாள்.

இதை கேட்டதும் தாராவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அதற்கு மேல் கண்ணனால் அங்கே நிற்க முடியவில்லை.கோவமாக வெளியே சென்றுவிட்டான்.தாராவும் அமைதியாக உள்ள சென்றுவிட்டாள்.

தருண் கிளம்பி கீழே வந்தான்."எல்லோ ரோஸ் போலாமா", என்றான்..

"போலாம்..ஆனா இந்த எல்லோ ரோஸ் மட்டும் வேண்டாமே ப்ளீஸ் ", என்றாள் கெஞ்சலாக.

"ஏன் அது ரொம்ப ஸ்பெஷல் பர்சனுக்காக வச்சி இருக்கியா ", என்று அவன் இயல்பாக கேட்டதும் அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன் "ஓகே.. உனக்கு பிடிக்கலனா வேண்டாம்", என்றான்.

அவன் வருத்தப்படுவான் என்று அவள் "இருக்கட்டும் அப்படியே கூப்பிடு", என்று சொன்னாள்.

நடக்கும் தூரம் தான் கோவில் என்பதால் அவர்கள் நடந்தே சென்றனர்.வீட்டில் இருந்து கோவிலுக்கு செல்லும் வரை அவன் வாய் ஓயவே இல்லை.பேசிகொண்டே வந்தான்.கேட்டுகொண்டே வந்தவள் தன்னையும் மறந்து சிரித்தாள்.

"எதுக்கு சிரிக்கிற சதா".

"இல்ல நான் தான் ரொம்ப பேசுற ஆளுன்னு நெனச்சேன்..வல்லவனுக்கு வல்லவன் இருப்பான்னு இப்போ தான் பாக்கறேன்", என்றாள் சொல்லி சிரித்தாள்.

"ஓ..அப்போ நான் ரொம்ப பேசி அருகுறேனா", என்றான்.

"ச்ச ச்சா..அப்படி சொல்லல..எனக்கும் இப்படி இருந்த தான் பிடிக்கும்", என்றாள்.

"அப்போ நாம ரெண்டு பேரும் ஒரே போல இருக்கோம்னு சொல்லு", என்றான்.

"ஆமா ஆமா ".என்று தலையை ஆட்டினாள்.

கோவிலின் உள்ள செல்லும்போது தருண் போன் அடிக்க அதை எடுத்தவன் "ஒன் மினிட்"என்று சம்யுக்தாவிடம் சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளிநின்று பேசினான்.

அவன் பேசுவதை பார்த்துக்கொண்டு இருந்தவள் அவன் முகமாற்றத்தை பார்த்து ஏதோ சரி இல்லை என்று புரிந்துகொண்டாள்.

கோவமாக அவள் அருகில் வந்தவன் "சாரி சதா..இப்போ நான் வீட்டுக்கு போகனும்.. இல்லனா பெரிய பிராப்லம் ஆயிடும்..நீ பாத்து வந்துடுவா தான.. "என்று அவள் பதிலுக்காக காத்து நின்றான்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல.. நீங்க வீட்டுக்கு போங்க..", என்று அவனை அனுப்பினாள்.

அவன் சென்றதும் கோவில் உள்ளே சென்றாள்.பெருமாளை தரிசித்துவிட்டு கோவிலை சுற்றி வந்தாள்.அப்பொழுது அங்கே இருந்த கண்ணன் சிலையின் அழகில் மயங்கிதான் போனால்.அந்த கண்ணனின் அருகே சென்றவள் "என்னோட வாழ்க்கையில ஏன் இப்படி விளையாட்ற கண்ணா..நானும் மீராவ போல காத்துக்கிட்டே இருக்கணும்னு நீ ஆச படுறியா"என்று கண்களில் வழியும் நீரோடு அவன் காலடியில் தலை வைத்து பேசிக்கொண்டு இருந்தாள்.

"இங்க என்ன பண்ணிட்டு இருக்க ", என்று அவளை கேட்டான்.

இந்த குரல்.."ஐயோ இவனா..நாம அழுதுட்டு இருக்கிறத பாத்தா அவ்ளோதான்..கண்ண துடைச்சிக்கோ சம்யுக்தா", என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு கண்ணை துடைத்துவிட்டு அவனை பார்த்தாள்.

"பாத்தா தெரியல..சாமி கும்பிட்டுட்டு இருக்கேன்"என்றாள் சலிப்பாக.

"எனக்கு அப்படி தெரியல..பெரிய ஆள மரம் கிழ இந்த கண்ணனோட காலடியில படுத்து இருக்கியே ஒரு வேல மீராவா இருக்க போறியான்னு கேட்டேன் ", என்றான் குறுநகையுடன்.

"ஒருவேள நாம பேசுனதை கேட்டு இருப்பானோ ", என்று யோசித்தவள் இருக்காது என்னை வெறுப்பேற்ற கேட்கிறான் என்று சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

"எதுவா இருந்தா உங்களுக்கு என்ன..உங்க வேலைய பாத்துட்டு போங்க", என்றாள்.

"என்னோட வேலையைத்தான் பாத்துட்டு இருக்கேன் ", என்று கிண்டலாக அவளை பார்த்துகொண்டே சொன்னான்.

அதில் சினம் கொண்டவள் பிரகாரத்தை சுற்றி வந்து மீண்டும் கடவுளை வேண்டிவிட்டு வீட்டுக்கு கிளம்ப வெளிய வந்தாள்.

இவள் வருவதற்குள் அவன் தன் வண்டியை எடுத்து வந்து தயாராக நின்றான். அவனை கண்டுகொள்ளாமல் அவனை கடந்து சென்றாள் சம்யுக்தா. அதை பார்த்தவன் வண்டியில் இருந்து இறங்கி அவளை நெருங்கினான். அவள் வழியை மறித்து நின்றான்.

"நான் தான நின்னுட்டு இருக்கேன்ல..கண்டுக்காம போற ", என்றான் கோவமாக.

"நீங்க நின்னா எனக்கு என்ன..உங்கள கண்டுக்க என்ன இருக்கு", என்றாள்.

அவளை முறைத்தவன் "உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போக தான் நின்னுட்டு இருக்கேன்..அதுக்கு தான் வந்தேன்", என்றான் கோவத்தை அடக்கி.

"உங்ககிட்ட நான் கேட்டேனா..எதுக்கு வந்திங்க ", என்றாள் அலட்சியமாக.

"நானா வரல..தருண் சொன்னான் வந்தேன்..போகலாம் வா".

"உங்க கூட நான் வர மாட்டேன் ".

அதில் ரௌத்திரமாணவன் "இப்போ வரியா இல்லையா ", என்றான்.

அவள் துளியும் அலட்டிக்கொள்ளாமல் "வர முடியாது", என்றாள்.

அவள் கையை புடித்து இழுத்துகொண்டே வண்டியில் அமர சொன்னான்.அவன் பிடியின் இறுக்கத்தில் வலி கொண்டவள் தாங்காமல் கண்களில் இருந்து நீர் வந்தது.அதை உணர்ந்தும் வெளிக்காட்டாமல் அதே கோவத்தோடு "இப்போ என்கூட நீ வரல வீட்டுக்கு போய் தருண் கூட சண்டை போடவேண்டியதா இருக்கும்..உனக்கு சரினா போய்ட்டே இரு", என்றான்.

தனக்காக யோசித்து இவனை அனுப்பி இருக்கான் தருண்.எதற்கு பிரச்சனை என்று அவனுடன் வண்டியில் அமர்ந்தாள்.அவன் வண்டியை கிளப்பினான்.

அது காட்டு வழி சாலை.இருவரும் அமைதியாக வந்தனர்.சுற்றிலும் அடர்ந்த மரங்கள்.பகலில் பார்க்க அழகாக இருந்தது.இரவில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு அடர்த்தியான மறவரிசை...திடீரென சல சல வென நீரோசை கேட்டது..சிலென்ற காற்று வீச தன்னையும் மறந்து "அருவியாக இருக்குமோ", என்று தனக்குள் சொல்வதை போல் அவனுக்கு கேட்பதுபோல் சொல்லிவிட்டாள்.

உடனே அவன் மனம் இளகி உதட்டில் சிறு முறுவலுடன் "பக்கத்துல அருவி இருக்கு.. அதோட சத்தம் தான் கேட்குது", என்றான்.

அதை பார்க்க அவ்வளவு ஆசை இருந்தும் அவனிடம் கேட்க அவளுக்கு விருப்பம் இல்லை.அமைதியாக வந்தாள்.உடனே அவன் வண்டியை நிறுத்தி இறங்கினான்.அவளும் ஒன்றும் புரியாமல் இறங்கினாள்.என்ன என்பதைப்போல் அவனை பார்த்தாள்.

"என் பின்னாடியே வா ", என்றான்.

"முடியாது", என்றாள்.

"அருவிய பாக்கணும்னா வா..இல்லனா போயிட்டே இருப்பேன்", என்றான்.

அவள் அமைதியாக நிற்பதை பார்த்தவன் முன்னே செல்ல அவனை பின்தொடர்ந்து சென்றாள்...பத்து நிமிட நடை பயணம் முடிந்ததும் நின்றவன் அவளை அங்கே பார் என்பது போல் கண்ணை காட்டினான்.அவன் கண்களை தொடர்ந்தவளின் கண்கள் பிரம்மிப்பில் வியந்தது.அருவி அவ்வளவு அழகாக இருந்தது.

மேலே இருந்து அருவி நீர் கொட்ட கீழே ஆறாக பாய்ந்து ஓடிக்கொண்டு இருந்தது.இவர்கள் அருவியை ரசித்துக்கொண்டு இருக்கும் நேரம் அங்கே தருண் தன் தாயிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான்.

வீட்டிற்கு சென்ற தருணை பார்வதி ஒரு பிடி பிடித்திவிட்டார்.

"எவ்ளோ வருஷம் அப்பறம் வந்து இருக்க.. உனக்கு முதல்ல அம்மாவ பாக்கணும்னு தோணல...எவளோ ஒருத்தி கூட கோவிலுக்கு போய் இருக்க..யாரு அவ..அவ கூட லான் நீ பேசுறதே எனக்கு பிடிக்காது..அவ கூட ஜோடியா கிளம்பி கோவிலுக்கு வேற போய் இருக்க ", என்றார் சினமாக.

"மாம்..அதுல என்ன இருக்கு..அவளும் நம்ப வீட்டு பொண்ணு தான..எதுக்கு இப்படி பேசுறீங்க..இப்படிலான் ஒரு பொண்ண பேசுறது தப்பு மாம்",என்றான்.

"அவள பேசினா உனக்கு கோவ வருது.. என்ன இது தருண் ", என்றார்.

"மாம்..அப்படிலான் இல்ல..நா பொதுவா சொன்னேன்".

"உனக்கு அவளை பற்றி தெரியாது தருண்..இனிமே அவ கூட பேசாத..தெரியாம பண்ணிட்டேன்னு விடுறேன்".

"இப்போ தான் சொன்னேன்..நம்ப வீட்லயும் பொண்ணு இருக்கா..பாத்து பேசுங்க மாம் ",என்றான் அவனும் விடாமல்.

இதை எதுவும் அறியாமல் அருவியின் அழகில் மயங்கி நின்றிருந்தாள் சம்யுக்தா.அவளின் அழகில் மயங்கினான் கண்ணன்.

சம்யுக்தா அருவியின் கீழே சென்றாள்.அந்த குளிர்ந்த நீரில் அவள் நனைய ஆரம்பித்தாள்.உச்சிமுதல் பாதம்வரை சிலென்ற உணர்வு..கவலைகள் அனைத்தும் மறக்க செய்தது அந்த நீராடல். சுற்றம் மறந்து அவள் நிற்க உலகம் மறந்து நின்றான் கண்ணன் அவளின் மீது பார்வையை வைத்து.

அந்த அருவி நீர் அவளின் தலையை தொட்டு அடுத்து நெற்றி மூக்கு உதடு கழுத்து என்று சென்று கொண்டு இருக்க கண்ணனின் பார்வையும் நீரோடு செல்ல உதடு கழுத்து என்று பார்வையை செலுத்தியவன் உடனே சுதாரித்து தலையை சிலுப்பி திரும்பி நின்றான்.

தன் மனம் போகும் எண்ணத்தை நினைத்து அவனுக்கே வெட்கமாகி போனது..இது தவறு..ஒரு பெண்ணை இப்படி பார்க்கலாமா என்று தன்னையே திட்டிக்கொண்டு இருந்தான்.

இவன் மனதினுடன் போராடிக்கொண்டு இருக்கும் நேரம் சம்யுக்தா பதறி கத்தும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.

பாறையின் மீது நின்றிருந்தவள் வழுக்கி கீழே விழ போக உடனே அவளை தாங்கி இருந்தான் கண்ணன்.

அவளின் இடையில் தன் வலதுகையை குடுத்து தாங்கியவன் வலது கையால் அவளின் இடது கையை பிடித்தான்..அவளின் முகத்திற்கு அருகே இவன் முகம்..இப்பொழுது இருவரும் நனைந்தனர்.

சம்யுக்தா இருக்க கண்ணை மூடிக்கொண்டாள்...அவளை அருகில் பார்க்க பார்க்க அவனுள் நிகழ்ந்த வேதியியல் மாற்றத்தால் அவளின் வெற்றிடையில் தன் கையை இன்னும் அழுத்த பதித்தான்...அதில் உணர்வு பெற்றவள் கண்களை திறந்தாள்.அவளின் கண்களும் அவனின் கண்களும் ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ள அவனின் உதட்டில் இருந்து வழிந்த நீர் அவளின் கன்னத்தை தழுவி சென்றது.

அவனின் அருகாமை என்னமோ செய்ய முதலில் சுதாரித்தவள் வேகமாக அவனை விட்டு பிரிந்து நின்றாள்...அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது...அழுத்தி தலையை கோதிக்கொண்டான்.சம்யுக்தாவிற்கு சொல்லமுடியாத அளவு மன சங்கடம்...கீழ் உதட்டை கடித்துக்கொண்டு நின்று இருந்தாள்..கண்களின் நீர் பெருக்கெடுக்க ஒன்றும் செய்யமுடியாமல் தவித்தாள் தன் முட்டாள்தனத்தை எண்ணி.

அவளை திரும்பி பார்த்தவன் நனைந்து இருந்த உடை அவளின் உடலை அணைத்து இருக்க ஒரு உயிர் ஓவியம் போல் அவனுக்கு காட்சி அளித்தாள்.

இருவருக்குள்ளும் மௌனம்...அதை முதலில் கலைத்தவன் கண்ணன்...போகலாம் என்ற ஒற்றை சொல்லளோடு அவன் முன்னே செல்ல கண்ணீரோடு அவனை பின் தொடர்ந்தாள்.

இது போதாது என்று சம்யுக்தாவிற்காக அங்கே வாசலிலே காத்துகொண்டு இருந்தார் பார்வதி.

 
Last edited:
Banu mam..unghala romba mis panren..first time story ezhudhren..ungha comments dhan ena pin vaanghama ezhudha vaikudhu..ini negha ilama ena pannuven ?

Firends ennoda story yarachum padichinghana oru help pannugha..ennoda way of writing ok va..ila edhana change pannanuma..idha mattum sollungha..pls
 
Nice epi, unga katha nalla irruku.
Koviluku athikalai poratha last epi la irruku varum pol aruvi ya parkuranga appo night nu intha epi la irruku.
Epi romba gap vitta suvarasiyam korachu miss aagum.previous epi vaasithal than continuity kidaikum eppavum athupol vaasika mudiyathu illa appo suvarasiyama irrukkathu.mattra padi nalla irruku. Kathaya aanalum ithu nadaimurail saathiyama nu konjam yosithu scene kodutheengana awesome aagidum. Thathroobama irrukum pol adichuka ve mudiyathu. Avalav than super, super.
 
Nice epi, unga katha nalla irruku.
Koviluku athikalai poratha last epi la irruku varum pol aruvi ya parkuranga appo night nu intha epi la irruku.
Epi romba gap vitta suvarasiyam korachu miss aagum.previous epi vaasithal than continuity kidaikum eppavum athupol vaasika mudiyathu illa appo suvarasiyama irrukkathu.mattra padi nalla irruku. Kathaya aanalum ithu nadaimurail saathiyama nu konjam yosithu scene kodutheengana awesome aagidum. Thathroobama irrukum pol adichuka ve mudiyathu. Avalav than super, super.
No..mor dhan indha scenes lan nadakudhu..nite nu sonnadhu nenachi pathadhu andha forest area la..nadaimurayil saathiyamanu ena situation solringha..sonnighana change pannipen..konjam helpful ah irukum la..tnk u for ur valuable comments
 
Top