Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே அறிமுகம்

Advertisement

Chithra V

Well-known member
Member

வணக்கம் தோழமைகளே, நான் பல கதைகள் எழுதியிருந்தாலும் இந்த தளத்திற்கு நான் புதிது. இதய வாசியே என்னும் கதை மூலமாக கனவுப்பட்டறை கதை தொழிற்சாலையில் நானும் கலந்து கொள்ள இருக்கிறேன். இந்த கதைக்கு உங்கள் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விரைவில் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன். இப்போது இந்த கதையிலிருந்து சிறு துளி உங்களுக்காக,​

சுற்றமும் நட்பும் தொட்டு ஆசிர்வதித்த மங்கலநாணை புரோகிதர் சக்திவாசனின் கையில் கொடுத்ததும், அதை வாங்கியவனோ அருகில் அமர்ந்திருந்த சிவமித்ராவை ஒருமுறை பார்க்க, அவளும் அப்போது அவனை பார்த்தவள், அவளையும் மீறி வேண்டாம் என்பது போல் அவனிடம் மறுப்பாய் தலையசைத்தாள்.​

தன் இதயத்தில் இவளோ நீங்கா இடம் பிடித்திருக்க, இவள் இதயத்தில் ஒரு ஓரத்தில் கூட தனக்கு என்றைக்கு இடம் கிடைக்காதா? என்று எப்போதும் தோன்றும் விடையறியா கேள்வியோடு கண்மூடி திறந்தவன், ஒரு பெருமூச்சை விட்டப்படி, அந்த சூழ்நிலையின் காரணமாக அவளது மறுப்பை பொருட்படுத்தாமல், புரோகிதர் மந்திரம் சொல்ல, கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்த, மங்கலநாணை அவள் கழுத்தில் சூடி மூன்று முடிச்சையும் அவனே இட்டு முடித்திருந்தான்.​

தனது மறுப்பையும் பொருட்படுத்தாமல் அவன் கட்டிய மங்கலநாண் தன் நெஞ்சில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்தவள், எதெல்லாம் அவள் வேண்டாமென்று நினைத்தாளோ அதையெல்லாம் அவள் வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்த்தது போல், இப்போது இவனையும் அவளின் வாழ்க்கை துணையாக மாற்றியிருக்கும் விதியின் விளையாட்டை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் சிவமித்ரா.​

எங்கோ வெறித்து கொண்டிருந்த அவளின் பார்வை அவளின் மனநிலையை அவனுக்கு உணர்த்த, இப்படி ஒரு சூழ்நிலையில் தன்னை கொண்டு வந்து நிறுத்திய விதியின் விளையாட்டை அவனாலும் தான் நம்ப முடியவில்லை. அவள் தன் வாழ்க்கை துணையாக கிடைத்ததற்கு முன்பாக இருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பான். ஆனால் இன்றைய மனநிலையில் அவனால் முழு மனதோடு அதற்கு மகிழ்ச்சியடையவும் முடியவில்லை.​

"இந்த குங்கமத்தை உங்க மனையாளுக்கு வச்சி விடுங்க," என்று புரோகிதர் சொல்லவும் தான் சக்திவாசன் நடப்பிற்கு வந்தவன், அந்த குங்கமத்தை கையில் வாங்கி, அவளது இடப் பக்கத்திலிருந்தவன், பின்பக்கம் கையை கொண்டு போய் வலப்புறம் இருந்து அவள் நெற்றியில் குங்குமத்தை இடவும், அப்போது தான் சிவமித்ராவும் நடப்பிற்கு வந்தாள். தன்னருகில் தெரிந்த அவன் முகத்தை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்த்தவளுக்கோ, முன்பு அவனை மறுக்க சொன்ன காரணம் இப்போது காணாமல் போயிருந்ததை அவளால் நன்கு உணர முடிந்தது. ஆனால் அதே காரணம் தான் அவன் மனதையும் நெறிஞ்சி முள்ளாய் குத்தி கொண்டிருக்கிறது என்பதை அவள் உணரும் நேரமும் வருமா?​

 
Last edited by a moderator:
வாங்க வாங்க ரைட்டர் ஜீ.😍😍😍😍. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐.

சக்தி சிவா கூட பயணம் பண்ண எனக்கும் சீட்டுல துண்டு போட்டு இடம் புடிங்கப்பா.😁😁😁😁
 
Top