Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 1

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ஹாய் ஃப்ரண்ட்ஸ். மறுபடியும் நானே!

முந்தைய கதைக்கு நீங்க தந்த ஆதரவுக்கு ரொம்ப தாங்க்ஸ். அதே மாதிரி, இந்தக் கதையையும் படிச்சு, சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நம்புறேன். இந்தக் கதையோட யூடிஸ், சின்னதா தான் வரும்... ஏன்னா, எனக்கு காலேஜில் ஹெவி வொர்க் ஆக இருக்கு. யூடியும் டிலே பண்ணாமல் தரனும், முடிஞ்சளவுக்கு சீக்கிரம் அப்டேட் கொடுக்கனும். அதனால் தான், குட்டி யூடிஸாக வரும்... இன்னும் டைமிங் ஃபிக்ஸ் பண்ணலை. அடுத்தடுத்த யூடி டைப் பண்ணிப் போஸ்ட் பண்ற வேகத்தை வைச்சு நானே டைமிங் சொல்றேன் இப்போதைக்கு முடிஞ்சளவுக்கு சீக்கிரம் போஸ்ட் பண்றேன். தாங்க்யூ சோ மச் ❤️

🌸🌸🌸

அவனது முழு உயரத்திற்கும் ஈடாக, அறையில் பதிக்கப்பட்டிருந்த நிலைக் கண்ணாடியில் தன் வதனத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் காஷ்மீரன்.

அவனது விழிகளில் இருக்கும் தீட்சண்யம் மட்டுமே போதும், எதிராளியை நிலைகுலையச் செய்து விட முடியும்!

கேசத்தை மிருதுவாக கோதிக் கொண்டவனோ, தான் அணிந்திருந்தக் கோட், சூட்டில் சிறு தூசியோ, அதன் மடிப்போ கலையாமல், இருப்பதைக் கண்டதும் தான், அனைத்தும் நேர்த்தியாக இருக்கிறது என்ற மெச்சுதலுடன் கீழிறங்கி வந்தான் காஷ்மீரன்.

அங்கே அவனுக்கு இணையான மிடுக்குடனும், கம்பீரத்துடனும் அமர்ந்திருந்தார் காஷ்மீரனின் தந்தை சந்திரதேவ்.

"காஷ்மீரா!" என அவனது நடையைத் தன் குரலால் நிறுத்தினார் அவர்.

"யெஸ் டாட்" என்றவாறு அவரிடம் வந்தான் மகன்.

"ஆல் குட்? கம்பெனியில் ஏதாவது குளறுபடியா என்ன?"என்று அவனிடம் நிதானமாக கூறினார் சந்திரதேவ்.

"இல்லையே ப்பா! நான் இருக்கும் போது அங்கே அப்படி நடக்க விட்டுடுவேனா?" என்று மிடுக்காக கூறினான் காஷ்மீரன்.

"தட்ஸ் குட்! எனக்கும் இன்ஃபர்மேஷன்ஸ் வந்துட்டு தான் இருக்கு. உன்னோட திறமையை முழுசாக வெளிப்படுத்திட்டு இருக்கிற! கங்கிராட்ஸ்!" என்று உளமாரப் பாராட்டினார் அவனது தந்தை.

"தாங்க்ஸ் டாட். நான் ஆஃப்ஸூக்குப் போயிட்டு வர்றேன்" என்று அவரிடம் கூறி விட்டு, அலுவலகத்திற்கு விரைந்தான் காஷ்மீரன்.

போகும் மகனையே பெருமிதமாகப் பார்த்தார் சந்திரதேவ்.

கார்ப் பயணம் முடிய இன்னும் சில மணித்துளிகளே உள்ளது. அதற்குள் அவனுடைய பூர்வீகம் மற்றும் தற்போதைய நிலையைப் பற்றிப் பார்த்து முடித்து விடுவோம்.

காஷ்மீரன்! பெரிய மல்டி மில்லியனர் சந்திரதேவ் மற்றும் நீலாம்பரியின் ஆண் வாரிசு.அவர்களுக்குப் பெண் வாரிசும் இருக்கிறாள். அவளைப் பற்றிப் பின்வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்வோம்.

‌இப்பொழுது ஆண் மகவைப் பற்றிய தகவல்களை மட்டும் அறிவோம்.

தங்களால் முடிந்த வரை, மகனுக்காக அனைத்தையும், விலைக்கு வாங்கிக் கொடுத்தார்கள் சந்திரதேவ் மற்றும் நீலாம்பரி.

ஆனால், அவர்கள் மகனுடைய ஐந்தாவது வயதிலும், மகளுடைய இரண்டாவது வயதிலும் நீலாம்பரிக்கு உடல்நிலை குறைபட்டுப் போய், இறந்து விட்டார்.

அதற்குப் பிறகுத் தனக்குள் சுருங்கிக் கொண்ட காஷ்மீரன், பெற்றோர் தனக்களித்தப் பணக்கார வாழ்க்கையைத் தானே வடிவமைத்துக் கொள்ள நினைத்து, வெறி பிடித்தவனைப் போல உழைத்து, இந்த உயரத்திற்கு வந்திருக்கிறான்.

அவனுக்கு இளையவளாகப் பிறந்தவளோ, வேறொரு இடத்தில், தன் வாழ்க்கையைக், கழித்துக் கொண்டு இருக்கிறாள்.

காஷ்மீரனின் மகிழுந்து, அவனுடைய அலுவலகத்திற்குப் போய் நின்றது.

அவனுக்கு வணக்கம் வைத்தவர்களைப் பார்த்து, தலையசைப்புடன் விலகி தன் பிரத்தியேக அலுவலக அறைக்குள் சென்றான்.

"ஸ்டாக்ஸ் கரெக்ட் ஆக இருக்கான்னுச் செக் பண்ணுங்க! இந்தப் பிஸினஸில் ப்ராடெக்ட் ஓட தரம் ரொம்ப முக்கியம்!" என்று வந்தவுடனேயே, தன் காரியதரிசி மற்றும் அந்த அலுவலகத்தில், முக்கியப் பதவிகளில் வகிப்பவர்களை வரவழைத்து உத்தரவிட்டுக் கொண்டு இருந்தான் காஷ்மீரன்.

அதைப் பவ்யமாக ஏற்றுக் கொண்டவர்கள், கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாக வேலையைப் பார்க்கச் சென்றனர்.

இந்தளவிற்குக் கெடுபிடி வைத்து, அவர்களை வேலை வாங்கக் காரணம். அவனுடைய நிறுவனங்களில் தயாரிக்கும் பொருள் தான்!

ஆமாம்! காஷ்மீரனுடைய தொழில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்,பிறந்தக் குழந்தைகளுக்குத் தேவையான, அனைத்து விதமான, பொருட்கள், சத்தானப் பவுடர்கள் மட்டுமில்லாமல், ஆண், பெண் இருபாலருக்கான உடைகளும் கூட, விதவிதமாகத் தயாரிக்கும் பிரபலமான நிறுவனம் ஆகும்.

உள்நாட்டிற்கு மட்டுமல்லாமல், வெளி நாடுகளுக்கும் அவனுடைய ஊழியர்கள் தயாரிக்கும் பொருட்கள் தான், பெரும்பான்மையாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.அதில், கிடைக்கும் பணத்தின் மதிப்பு மிக அதிகம். அதனாலேயே, தங்களது தயாரிப்பின் தரத்தை, எப்போதும் கீழிறங்க விட்டு விட மாட்டான்.

அவனுக்கு இருக்கும் ஐந்து நிறுவனங்களில், முதல் மூன்றும், அவனது தந்தையின் இத்தனை வருட உழைப்பால் உருவாகி இருக்க, மற்ற இரண்டும், காஷ்மீரனுடைய அயராத உழைப்பாலும், வியாபாரத் திறமையாலும் உருவாகி இருந்தது.

ஒரே இரவில் இரண்டு கம்பெனிகளை உருவாக்கும் அளவிற்கு அவன் ஒன்றும் மந்திரவாதி அல்ல! ஒவ்வொரு நாளும், அதற்கானத் திட்டத்தைத் தீட்டி, பொருட்களின் தரத்தை நிலைநாட்டி, சில நேரங்களில் சறுக்கினாலும், அதிலிருந்து மீண்டு வந்து, இப்படியான இரண்டு நிறுவனங்களை உருவாக்கி உள்ளான் காஷ்மீரன்.

"நம்மக் கம்பெனியோட வெப்சைட்டைத் தினமும் விசிட் பண்ணுங்க. அதில், ரெகுலராக ஆர்டர்ஸ் வந்துக்கிட்டே இருக்கு. ரொம்ப டிராஃபிக் இருக்கும். டெவலப்பர்ஸ் கிட்ட சொல்லி, தேவையில்லாததை எல்லாம் அகைன் கிளியர் பண்ணுங்க" என்றான்.

தனது நிறுவனங்களின், வலைதளங்களை எல்லாம், ஒரு பிரபலமான வலைதள மேம்பாட்டு நிறுவனம் ஒன்றுடன் தான் ஒப்பந்தம் போட்டு வைத்திருந்தான் காஷ்மீரன்.

"அவங்களுக்கு ஏற்கனவே‌ இன்ஃபார்ம் பண்ணிட்டேன் சார். கிளியர் பண்ணிட்டு இருக்காங்களாம். நமக்கு ஃபைனல் அப்டேட் கொடுக்கிறேன்னு சொல்லிட்டாங்க" என்றான் அவனுடைய பிரத்தியேக காரியதரிசி.

"அதைக் கொடுத்ததும், எனக்கு உடனே மெசேஜ் பண்ணுங்க"

"ஓகே சார்" என்றவனை, வெளியே அனுப்பி விட்டு, வேலையைப் பார்த்தான் காஷ்மீரன்.

🌸🌸🌸

"இந்தப் புக்கோட டீடெயில்ஸ் வேணுமா மேடம்?" என்றபடி, ஒரு புத்தகத்தைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தப் பெண்மணியிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

"ஆங்! ஆமாம் மா. நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்ப் படிக்கனும். இதைப் பத்திச் சின்னக் குறிப்பு தான் தெரியும். விரிவாகச் சொல்ல முடியுமா?" என்றார்.

"அதை என் பொறுப்பில் தான் கொடுத்து இருக்காங்க மேடம்" என்று அவரிடமிருந்து வாங்கியப் புத்தகத்தின் தலைப்பில் இருந்து, அதை எழுதிய ஆசிரியருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் அனைத்து தகவல்களையும் மடமடவென அவருக்குப் புரியும் படி எளிமையான முறையில் விவரித்துச் சொன்னாள் ருத்ராக்ஷி.

அப்பெண்மணி மிக ஆர்வமாக அவளது விளக்கத்தைக் கேட்டு முடித்து விட்டு, "நல்லா எளிமையாகச் சொன்ன ம்மா! இதை நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்ப் படிக்கிறேன்" என்று கூறியவர், அந்தப் புத்தகத்தை, தனது டோக்கனைக் கொடுத்து, நூலகரிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டு சென்றார் அந்தப் பெண்.

"வர்றது நாலு பேர் தான், இருந்தாலும் உன்னோட வேலையில் நீ காட்டுறப் பொறுப்பைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆகனும் மா" என்றார் அந்த நூலகத்தின் நிர்வாகி துரைமுருகன்.

"எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிக்கும் சார். அதனால் தான் இவ்ளோ ஈடுபாடு வந்திருக்கு" என்று குறுநகையுடன் பதில் சொன்னாள்.

நூலகத்தில் இருந்த மற்ற வேலைகளையும் செய்து விட்டு வீட்டிற்கு நடந்தாள் ருத்ராக்ஷி.

- தொடரும்

 
புதுக்கதைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

ஹீரோ ஹீரோயின் பெயர் எல்லாம் வித்தியாசமா வைக்குறீங்க 🤗🤗🤗🤗🤗

காஷ்மீரன் ருத்ராஷி 🤩🤩🤩🤩🤩

காஷ்மீரன் உலகம் முழுக்க தொழில் செய்ற பெரிய பிஸ்னஸ் மேன் 😄😄😄
ருத்ராஷி ஆளே வராத நூலகத்தில் வேலை பார்க்கிறா 😝😝😝😝

இவங்க இரண்டு பேரும் எப்படி சந்திக்க போறாங்க 🧐🧐🧐🧐🧐
 
புதுக்கதைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

ஹீரோ ஹீரோயின் பெயர் எல்லாம் வித்தியாசமா வைக்குறீங்க 🤗🤗🤗🤗🤗

காஷ்மீரன் ருத்ராஷி 🤩🤩🤩🤩🤩

காஷ்மீரன் உலகம் முழுக்க தொழில் செய்ற பெரிய பிஸ்னஸ் மேன் 😄😄😄
ருத்ராஷி ஆளே வராத நூலகத்தில் வேலை பார்க்கிறா 😝😝😝😝

இவங்க இரண்டு பேரும் எப்படி சந்திக்க போறாங்க 🧐🧐🧐🧐🧐
அப்படி அவசரப்பட்டு முடிவு பண்ணிடாதீங்க சிஸ். அவங்களுக்குள்ளே என்ன உறவுமுறைன்னு அடுத்த யூடியில் சொல்றேன்... தாங்க்யூ சோ மச் ❤️
 
Top