Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 2

Advertisement

அடேங்கப்பா மணிராதா இவ்ளோ வில்லியா இருக்காளே. பாவம் சிவகாமி கமலி
 
சிவாகமியோ சும்மா இருக்காது “அண்ணி இப்போதானே வனா பேர்ல ஒரு இடம் வாங்கினீங்க... கொஞ்ச நாள் போகட்டுமே நிதானமா செய்யலாமே..” என்று சொல்ல, இதோ இதோ நான் பேச சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்று ஆடியே தீர்த்துவிட்டார் மணிராதா.

‘நான் என்னவோ செய்றேன்.. உனக்கென்ன.. நீ வந்த வேலை மட்டும் பாரு.. நானும் என் தம்பியும் பேசினா நீ ஏன் நடுவில வர...’ என்று இன்னளவு இல்லை..

சிவகாமியும் சரி மகுடேஸ்வரனும் சரி, அதிர்ந்து பார்க்க, வீட்டுப் பெரியவர்களோ “நீ இனிமே அவ விசயத்துல தலையிடாத..” என்றுவிட, அன்று மணிராதா விசயத்தில் வாய் மூடியவர் தான் சிவகாமி இன்று வரைக்கும் எதுவும் பேசினார் இல்லை.

அதற்கு காரணம் அன்றும் இன்றும் என்றுமே மகுடேஸ்வரன் தான். அவர் ஒருவர் மீது வைத்த நேசமும் நம்பிக்கையுமே, இன்றளவும் கூட சிவகாமியை வாய் மூடி இருக்க செய்துவிட்டது தன் வாழ்வையே வேறொருத்தி கையில் மணிராதா தூக்கிக் கொடுக்கையில் கூட, சிவகாமி அமைதியாய் தான் இருந்தார்.

அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்னைகள்.. ஒவ்வொரு விசயத்திற்கும் மணிராதா சிவகாமியை காரணம் சொல்ல, இப்படி அப்படியென்று மகுடேஸ்வரன் சிவகாமி திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் சென்றுவிட, குழந்தைகள் எதுவுமில்லை எனவும், அடுத்து அது ஒரு பேச்சாய் இருந்தது.

இப்போது எத்தனை மருத்துவ வசதிகள், ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்பு அதெல்லாம் இருந்ததுவா?? இருந்திருக்கும் ஆனால் அத்தனை பரிச்சயம் இல்லையே.. ஆக சிவகாமி கலங்கி நிற்கும் நிலை.

மகுடேஸ்வரன் இதை பெரிதாய் எண்ணவில்லை. ஆனால் சிவகாமியால் அப்படியிருக்க முடியவில்லை. உடலில் குறைகள் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் குழந்தை இல்லையே என்ற எண்ணத்தில், மணிராதா இன்னமும் கொஞ்சம் நெய் விட்டார்.

சிவகாமி காது படவே “இத்தனை பெரிய குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேணாமா???” என்று ஆரம்பிக்க,

சரியாய் அதே நேரம் மணிராதா மற்றும் மகுடேஸ்வரனின் அம்மா இறைவனடி சேர, மணிராதாவின் கை அங்கே ஓங்கியது. அப்பாவும் உடல்நல கேட்டில் விழுந்துவிட, வீட்டில் இருந்த அந்த மகிழ்ச்சியான செழிப்பான சூழல் இல்லை. வசதிகள் இருந்தும் சந்தோசமில்லை.

மகுடேஸ்வரனோ “அக்கா எங்களுக்கு குழந்தையே இல்லைன்னாலும் பரவாயில்லை.. இப்போ என்ன உன் பசங்க இல்லையா..” என்று அவர்கள் மீது பாசம் காட்ட,

கோவர்த்தனை விட, வனமாலி இந்த அத்தை மாமாவோடு அதிகம் ஓட்டினான். வந்தனாவோ யார் பேசினாலும், கொஞ்சினாலும் ஒட்டிக்கொள்ளும் ரகம். சிவகாமி இவர்களை என்னதான் சொந்த பிள்ளைகளாக நடத்தினாலும், அதிலும் ஒரு குற்றம் குறை என்று வர, தங்கள் அப்பாவின் உடல்நிலையை மணிராதா தனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொண்டார்.

“அப்பா... தம்பிக்கு இன்னொரு கல்யாணம் செய்யலாம்...” என்று ஆரம்பித்து, மெது மெதுவே அதுவே சரியான முடிவு என்பதாய் அவரை உணரவைத்து,

பின் மகுடேஸ்வரனை அழைத்து இருவரும் பேச, மகுடேஸ்வரன் ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்விசயம் அறிந்த சிவகாமியோ திகைத்த கண்ணீர் விழிகளோடு நிற்க, சிவகாமி பிறந்த வீட்டினரோ, அதெப்படி இதெப்படி என்று கிட்டத்தட்ட ஒருமாத கால அளவு பஞ்சாயத்துக்கள் ஓடியது. மகுடேஸ்வரன் உறுதியாய் மறுத்துவிட, அடுத்த மூளை சலவை சிவகாமியிடம்.

‘வாக்கப்பட்டு வந்த குடும்பத்து மேல அக்கறை இருக்கா??’

‘இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வேணாமா..??’

‘இவ்வளோ சுயநலமா??’

‘பாவம் அப்பா.. கடைசி நேரத்துல பேரன் பேத்தி பாக்க வேணாமா??’

‘என் தம்பி மனசுக்குள்ளயே போட்டு மறுகுறானே...’

என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் சொல்ல சொல்ல, அடுத்த ஓராண்டில் சிவகாமி தன்னை மனதளவில் தயார்படுத்திக்கொண்டார், மகுடேஸ்வரனுக்கு தன் சம்மதத்தோடு இன்னொரு திருமணம் செய்ய.

முதலில் சிவகாமி வீட்டினர் இதனை மறுத்தாலும், “நானே சொல்றேனே.... அவர் என்னை விட்டுடவா போறார்.. இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வேணாமா??” என்று அனைவரின் வாயை அடைத்தாலும், மகுடேஸ்வரனை சம்மதம் சொல்ல வைக்க அவரால் முடியவில்லை.

தினம் தினம் ஒரு களேபரம் தான் நடக்கும். கண்ணீர்.. அழுகை.. சண்டை.. கோபம்.. கெஞ்சல் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் நிகழ, பேரன் பேத்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மனிதரோ தன்னுடையே கடைசி நாட்களை எண்ணத் தொடங்க,

“மகுடா.. இதென்னா வழக்கத்துல இல்லாததா.. சிவகாமிதான் எப்பவுமே இங்க மூத்த மருமக.. இதுக்கப்புறம் அவளுக்கு குழந்தை பிறந்தா வேணாம் சொல்வோமா என்ன?? ஆனா.. உனக்கு வயசு கூடிட்டே போகுதா இல்லையா?? எனக்காக மகுடா... சம்மதம் சொல்லேன் டா..” என்று அந்த மனிதர் நடுங்கும் கரங்களோடு மகனின் கரத்தினை பற்றிக் கேட்க,

கண்ணில் மட்டுமே உயிரை தேக்கி வைத்திக்கும் அப்பாவின் பேச்சினை அந்த சூழலில் மகுடேஸ்வரனால் மீறவே முடியவில்லை.

விளைவு.. அடுத்த ஒரே வாரத்தை மகுடேஸ்வரன் – இந்திரா திருமணம் நடந்தேறியது. நடத்திக்காட்டினார் மணிராதா. இந்திரா இவர்களின் அளவுக்கு வரவே முடியாத குடும்பத்து பெண். அவர்களின் வறுமை ஒன்றையே பிடியாய் கொண்டு, தன் கணவர் பக்கத்து தூரத்து உறவை வீட்டிற்கு மருமகளாய் கொண்டு வந்துவிட்டார் மணிராதா.

சிவகாமியும் முதலில் அதே வீட்டிலேயே இருக்க, மகுடேஸ்வரனோ இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துப் போனார். இதைக் கண்ட மணிராதாவோ “ஏன் சிவகாமி.. அவங்களுக்கு ஒரு நல்லது நடக்குற வரைக்கும் நீ ஏன் வெளிய இருக்கக் கூடாது??” என்று கேட்க, மீண்டும் அடுத்த பூகம்பம் வெடித்தது..

இந்திராவோ, மணிராதாவின் கைப் பாவையாகவே ஆகிவிட, அதன் பின்னே சிறிதொரு நாளில், இவர்களின் அப்பாவும் இறந்துவிட, அனைத்தும் முடியவும், வீட்டு சூழல் உணர்ந்து சிவகாமியே,

“கொஞ்ச நாள் நான் தனியா இருக்கேனே...” என்று சொல்லி அதே தெருவில் கொஞ்சம் தள்ளியிருந்த, சிவகாமிக்கு அவர்களின் அப்பா வீட்டில் கொடுத்த வீட்டில் போய் இருந்துகொண்டார்.

மகுடேஸ்வரன் என்ன சொல்லியும் சிவகாமி கேட்கவில்லை. கோபமாகக் கூட பேசிவிட்டார். ஆனால் சிவகாமி மசியவேயில்லை. சிவகாமி அச்சகத்திற்கு அப்போது இருந்து சிவகாமி பொறுப்பேற்றுக்கொள்ள, அடுத்து இந்திரா கர்பமுற, அந்த அந்த குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்..

“நான் சொன்னேனே.... பார்த்தியா...” என்று மணிராதா இந்திராவையும் மகுடேஸ்வரனையும் கொண்டாடி தீர்க்க, அப்படித்தான் பிறந்தாள் பமீலா..

இனி சிவகாமி இங்கே வரவே முடியாது என்று மணிராதவும் சரி, இந்திராவும் சரி நினைத்துக்கொண்டு இருக்க, யாருமே எதிர்பார்க்காது நிகழ்ந்த நிகழ்வு தான் சிவகாமி கர்ப்பம் தரித்து.

மகுடேஸ்வரனோ மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.. சந்தோஷத்தில் அழுதுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இதுவோ அந்த பெரிய வீட்டில் இருந்த இரண்டு பெண்களும் பெரும் அடி.. மனதில் ஒரு பயம் கூட கொடுத்தது எனலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் சிவகாமி குழந்தையோடு இங்கே நுழையலாம் என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது.

ஆனால் சிவகாமி அன்றைக்கு பிறகு அந்த வீட்டிற்கு போகவுமில்லை. மகுடேஸ்வரன் எத்தனை முறை அழைத்தும், “வேணாங்க.. உங்களுக்குத் தான் சிரமம்...” என்று மறுத்தவர், பின் கடைசியாய் சென்றது மகுடேஸ்வரனின் மரணத்திற்கு தான்.

அதுவும் சென்ற ஆண்டு தான்.

இருபத்தி நான்கு வருடமாய் எந்த வீட்டின் வாசலை மிதிக்காது இருந்தாரோ, வெளியில் காட்டவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு வைராக்கியம் வைத்து இருந்தாரோ அதெல்லாம் தகர்த்து கமலியையும், சிவகாமியையும் அந்த வீட்டினுள் நுழைய செய்தது மகுடேஸ்வரனின் மரணம்..

யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு இது..
Nice Ep
 
Top