Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thondral Vidhi

Advertisement

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
206தோன்றல் விதி!!!---------

3."சூரியன் கிழக்கே தோன்றுகிறது".
2."இந்த ஆள நான் எங்கயோ பார்த்துருக்கேன்னு தோணுது "
1.”அவளை நான் காதலிக்கிறேன்னு தோணுது மச்சி".

2015:
மேல்சொன்ன இந்த மூன்று விஷயத்துக்குமே ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லையென்றாலும்,இந்த மூன்றுமே "தோன்றல்" எனும் வினையை அடிப்படையாக கொண்டது.ஆனாலும் வித்தியாசம் மிகமிக அதிகம் .

1) முதலாவது, நாம் தினமும் பார்த்த, பார்க்கிற, நாம் கண்களுக்கு தோன்றும் சூரிய உதயம் .

2) இரண்டாவது, நாம் நிஜக்கண்களால் எப்போதோ பார்த்த ஒன்றை மனக்கண்(intuitive eyes) வழியாக ஞாபகபடுத்தி மீண்டும் தோன்ற வைத்தல்.

3) மூன்றாவது- ஆமா, அதென்ன காதலிக்கிறேன்னு தோணுது ? Simple, இந்த விஷயம் இன்னும் நடக்கவே இல்லை. இருந்தாலும் குறிப்பிட்ட அந்த பெண்ணோடு நாம் இருப்பது போலவும், இருந்தால் அதி மகிழ்ச்சி என்பது போலவும், intuitive eyes நமக்கு ஒரு "virtual screen shot" எடுத்து காட்டுகிறது.visual reality இல்லாத அந்த screen shot-இல் தோன்றும் காட்சியே, "தோணுது மச்சி" என்பதன் பின்புல அர்த்தம் .

தோன்றலின் பரிணாம கட்டங்களை பாருங்களேன்.

1995:
உலகத்துலேயே உயரமான கட்டிடம் எதுன்னு சொல்லுங்க பாப்போம்?னு 9th std-ல எங்க english வாத்தியார் PR கேட்டப்போ 1995 கணக்குப்படி Empire state ,Eiffel tower(paris)னு ஆளாளுக்கு ஆரம்பிச்சு,அது கடைசியா Taipei towerல வந்து நின்னுச்சு .
அவரு சிரிச்சுகிட்டே சொன்னாரு, அந்த Taipei tower பக்கத்துலயே, அத விட உயரமான building-ல இருந்து அத நான் பாக்குறேன். அப்போ உயரமான கட்டிடம் எது?
சத்தியமா எவனுக்கும் வெளங்கல-
பின் அவரே சொன்னார்
அப்படி ஒரு building வருமானு எனக்கு தெரியாது. ஆனா அப்படி பாக்குறதா கற்பனை பண்ண தோன்ற என்னோட intuituionதான் உலகத்துலேயே உயரமான கட்டிடம்னு சொன்னார்.

ஜோக்கடிக்கிறாரு மனுஷன்னு அப்படியே மறந்துட்டோம் எல்லோரும்.

2019:
சரியா 20 வருஷம் கழிச்சு Taipei towers-அ விடவும் மிக உயரமான Burj khalifa Tower (துபாய்) வரைக்கும் எத்தனையோ கட்டடங்கள் இன்னிக்கு வந்தாச்சு. ஆனா அதுக்கெல்லாம் காரணம் PR சார் சொன்ன மாதிரி எவனோ ஒரு மனுஷனுக்குள்ள இருக்க"தோன்றல்" conceptதானு மட்டும் புரிஞ்சுது.(All architectural wonders-ஒரு சின்ன தோன்றலின் விளைவே!)

அப்போ எங்க English வாத்தியாருக்கு இருந்த தோன்றல் உணர்வு ESPயா? No சான்ஸ்!!.ESP என்பது supernatural அமானுஷ்யங்களுக்கு உட்பட்ட வேறு. வேணும்னா "தோன்றல்" உணர்வை "Diluted ESP"னு சொல்லலாம். (அழகிய தமிழ் மகன்/வை ராஜா வை திரைப்படங்கள் பார்க்கவும்) ஆனா அந்த"Diluted ESP"alias"தோன்றல்" conceptதான் கண்டிப்பா இங்க எல்லா உருவாக்கத்துக்கும் அடிப்படை,ஆரம்பம், முக்கியம் எல்லாமே...

உதாரணம்:
1.கீழ விழுந்த ஆப்பிள் பழத்தை எடுத்து தின்னாம அது ஏன் கீழ்நோக்கி விழுதுனு தோணினதுதான் Gravity ஆச்சு.
2."என்னைய நீ அடிச்சா, கண்டிப்பா நான் உன்ன திருப்பி அடிப்பேன்"னு சின்னப்புள்ளத்தனமா நியூட்டனுக்கு தோணுனதுதான்”Newton 3rd law.”

இந்த தோன்றல் அப்படிங்கறது science-க்கு அப்பாற்பட்டது இல்ல,ஆதாரப்புள்ளியே அதுதான்னு உணர்ந்த Albert Einstien தன்னோட கண்டுபிடிப்புகளின் அனுபவத்துல சொன்ன மிகப்பெரிய விஷயமே, Knowledge(கற்றல்)எல்லாம் ஜுஜுபி, Imagination (தோன்றல்)தான் மனுஷனுக்கு தேவையான ஆகச்சிறந்த ஒன்று என்பதுதான். படைப்பாளிகளை பொறுத்த வரை எல்லாமே Constructive தோன்றலா இருக்கணும்னு அவசியமே இல்ல, விளையாட்டுத்தனமான தோன்றலுக்கும் எப்பவுமே மதிப்பு உண்டு! .

விஞ்ஞானம் எல்லா வகையான தோன்றலையும் positive-ஆக பார்க்குது. ஆனா அஞ்ஞானம் அப்படி இல்ல. மனசோ மனுசனோ, தோன்றுவதெல்லாம் சுத்தமானதா இருக்கணும்கறது அதனோட concept.
உதாரணம்-
“தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று!”
அப்போ தோன்றல் விஞ்ஞானம்,அஞ்ஞானம் மட்டும் சம்பந்தப்பட்டதா? மெய்ஞானத்துக்கும் பகுத்தறிவுக்கும் இல்லையா?

ஏன் இல்ல ?

எதையும் ஏன் எதற்குன்னு கேள்வி கேக்கனும்னு சொன்ன பெரியாருக்கே, கடவுள் இல்லைன்னு தோன்றினதாலதான் அப்படி கேக்க தோனுச்சாம்!
So,தோன்றல் இங்க எல்லாத்துக்குமே பொதுவானது. பூர்வீகமானது.

அதுசரி, உலகின் மிக சிறந்த தோன்றல் எது தெரியுமா?
இங்க ஒரு சிசு உருவாகுறதுல இருந்து, இந்த உலகமே உருவாகுற வரை எல்லாத்தையும் முன்னாடியே கணிச்சு பார்த்து வெச்சுட்ட இறைவனின்/இயற்கையின் தோன்றல் (முக்கண்)-அதற்கொரு Salute!

கருத்தோன்றல் -
காதல் தோன்றல் -
உருத்தோன்றல் -
உலகம் தோன்றல்-
இவையாவும்-முன்
இறைவன்கண் தோன்றியதால்- பின்
இன்றிங்கே தோன்றியதுவே!!
-------------------
 
எனக்கு கூட உங்களை காணுமேன்னு தோணிச்சு.;):p
Such a wonderful write up AR:love:
Keep it up...
 
Actually I have a doubt is ESP real..
அப்படி நடக்கிற வாய்ப்பு உண்டா?
Like in that movies?
Explain in short
 
அருமையான பதிவு. தோன்றல் இதை எண்ணங்கள் இப்படியும் செல்லலாம். ESP வேறு.
 
Top