Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu 7.1

Advertisement

Admin

Admin
Member
தடையில்லை நதியே பாய்ந்தோடு


நதியோட்டம் – 7


தனக்கே தெரியாமல் தன்னை வீடியோ எடுத்ததுமில்லாமல் அதை காட்டி மிரட்டி தன்னை இப்படி படுத்திக்கொண்டிருக்கும் ஹர்ஷூவை என்ன செய்தால் தகும் என்பது போல முறைத்துக்கொண்டிருந்தான் நிஷாந்த்.


பின்னே அவன் பயந்து தானே ஆகனும். செல்வத்திற்கு சினிமா என்றால் சுத்தமாக பிடிக்காது. அவரது மகன் ஒரு நடிகையின் படத்தை அறை முழுவதும் ஒட்டிக்கொண்டு புலம்புவது தெரிந்தால் விட்டுவிடுவாரா? விலாசித்தள்ளிவிடுவாறே.

அதற்கு பயந்தே தனக்கு பிடித்தமான நடிகையான நஸ்ரியாவின் படங்களை அவருக்கு தெரியாமல் ஒளித்து வைப்பதும், இரவில் படங்களை சுவற்றில் ஒட்டவைத்து ரசிப்பதுமாக இருந்தான். அப்படி ஒரு பித்து நஸ்ரியா மேல்.

ஹர்ஷூவை பார்த்து பெரிதாக கோபமூச்சு விட, “என்னடா ஓவரா முறைக்கிற?... இப்டி புஸு புஸுன்னு மூச்சு விட்டா, நான் நீ நஸூ நஸூன்னு சொன்னதை வீடியோ எடுத்த என் மொபைல்ல இருக்கிற படத்தை ரிலீஸ் பண்ண சித்தப்பாக்கிட்ட போய்டுவேன். எப்படி உனக்கு வசதி?...” என்றவளை செய்வதறியாமல் பார்த்து அப்பாவியாக் முழிக்க,

“இப்போ சாருக்கு எந்தவிதமான அப்ஜெக்ஷனும் இருக்காதுன்னு நினைக்கேன். அப்டித்தானே நிஷூ?...”

“மண்ணாங்கட்டி. உன்னை கட்டிக்கிட்டு அந்த மனுஷன் என்னபாடு படபோறாரோ? முதல் நாளே இப்டி சுவர் ஏறி குதிச்சு வீட்டை விட்டு வெளியேறி வந்திருக்கன்னு தெரிஞ்சா அவர் உன்னை பத்தி, நம்மைப்பத்தி, நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாரு? கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா?...” என்று குதிக்க,

“ஆமா பெரிய குடும்பம், டுபாக்கூர் குடும்பம்னு நினைப்பாராக்கும்? அட போடா, கௌரவ் தான் என்னை ஏற்கனவே கத்தியோட அவரோட ரூம்ல பார்த்துட்டாரே. அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாரு. அப்டியே எதாச்சும் நினச்சாலும் அவரை பேசியே நம்ம கூட ஜாயினடிச்சு விட்டுடலாம். என்ன நான் சொல்றது?...” என அந்த நேரத்தில் டீல் கூறிவிட்டு அவனுக்கு எடுத்துகொடுப்பது போல வாயை விட்டாள் ஹர்ஷூ.

“ஏண்டா நானே பர்ஸ்ட் நைட் விட்டுட்டு, நம்ம கொள்கைக்காக அத்தனை தடைகளையும் தாண்டி வந்திருக்கேன். அப்டி பார்த்தா இன்னைக்கு சித்தப்பா கண்ணுல நான் தான் மாட்டக்கூடாது. தெரியும்ல. நீ என்னடான்னா இப்டி பயந்துட்டு நிக்கிற? உனக்கு அந்த மைதாமாவு ஆறுமுகமே தேவலாம் போல?...” என்று அவனை கிண்டலடித்தவளை பார்த்து சட்டென மூளையில் யோசனை பளிச்சிட சிரித்தவன்,

“ரொம்ப பெருமை தான் உனக்கு. அந்த ஆறுமுகம் கூடவா கோர்த்துவிடற?... நீ என்னை காட்டிகொடுத்தா இன்னைக்கு மாட்ட போவது நீ தான். ஏனா இன்னைக்கு உனக்கு தான் முக்கியமான நாள்? இரு நானே அப்பாவை கூப்பிடறேன். என்னைக்காவது தெரியிறது இன்னைக்கே தெரியட்டுமே? ஆனா இன்னைக்கு அப்பாவோட கண்ணுக்கு இதெல்லாம் தெரியாது. நீ இந்நேரம் வந்திருக்கிறது மட்டும் தான் புரியும். மேடம் உங்க வசதி எப்படி?...” என வெள்ளெலி என்னய்யா கலாய்க்கிற என்பது போல திருப்பிக்கொடுத்தான்.

இப்போது ஹர்ஷூவின் பாடுதான் திண்டாட்டமானது. நிஷாந்த் சொல்வது போல செல்வம் தன்னைத்தான் பேசுவார் என்பதை புரிந்து இப்போது அமைதியாக நிஷாந்தை முறைத்து,

“அந்த கௌரவ்வோட சேர்ந்து தானே உனக்கு இவ்வளோ தைரியம் வந்திருச்சு. இரு இதுக்கும் சேர்த்து அவனை வச்சுக்கறேன்...” என பல்லை கடித்துக்கொண்டே கூற,

“தாராளமா வச்சுக்க. அவர் உனக்கு மட்டும் தானே?...” எனவும் காலையில் ஷக்தியிடமும் இதேபோல கூறி அதற்கு அவன் அளித்த பதிலும் நியாபக அடுக்கில் வலம் வந்து முன்னெழுந்து நிற்க அதில் அவளின் முகத்தில் குறுஞ்சிரிப்பு தவழ ஆரம்பித்தது.

அவளது முகமாற்றத்தை பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டவன் அதை வெளிக்காண்பிக்காமல், “வீட்டுக்கு போலாமா?...” எனவும்,

“இன்னைக்கு போனா போகுதுன்னு உன்னை விடறேன். இன்னொரு நாள் நீ மாட்டாமலா போய்டுவ. அன்னைக்கு பார்த்துக்கறேன் உன்னை...” என கெத்தை விடாமல் மெயிண்டன் செய்ய தலையில் அடித்துக்கொண்டான் நிஷாந்த்.

“வந்து தொலை...” என எங்கே மனம் மாறிவிடுவாளோ என அஞ்சி அவளை உடனடியாக இழுத்துக்கொண்டு கீழே இறங்கினான் அதே பைப் வழியாகவே.

“இவளோட சேர்ந்து எப்போ பார்த்தாலும் நானும் இப்டியே பைப் ஏறியே வந்து போறேன். பழக்க தோஷம் இந்த பாடுபடுத்துதே?...” என் புலம்பிக்கொண்டே பின் கேட்டை திறந்து வெளியில் வர அங்கே உள்ள கல்லின் மீது கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஷக்தியை பார்த்து பேயறைந்தது போல ஆனான்.

ஆனால் ஹர்ஷிவ்தாவோ ஒருநொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு சின்ன ஷாக் மட்டுமே அவள் கண்ணில் தோன்றி மறைந்தது. மற்றபடி அவள் இயல்பாகவே தான் இருந்தாள்.

மன்னிப்பை வேண்டும் பாவனையில் ஷக்தியிடம் தயங்கியபடியே, “சாரி அத்தான். நானே இதை எதிர்பார்க்கலை. நீங்க தப்பா...” என மேலும் தொடர இருந்த நிஷாந்தை மறித்து,

“நீ ஏண்டா சாரிலாம் கேட்க?... அவரோட பொண்டாட்டி நான் அர்த்தராத்திரில எழுந்து போறேன். கொஞ்சம் கூட கவலையே இல்லாம வாயை பிளந்துட்டு குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்காரு. கொஞ்சமாச்சும் என் மேல அக்கறை இருக்கா இவருக்கு? இங்க வந்து பெருசா போஸ் கொடுத்துட்டு உட்கார்ந்திருக்காரு...” என படபடவென பேச அவளை தடுக்காமல் பார்வையிட மட்டுமே செய்தான் ஷக்தி.

“ஏன் கௌரவ் என்னை பாதுகாக்கனும்ன்ற அக்கறை உனக்கு கொஞ்சமாச்சும் இருக்கா?... இப்டித்தான் என்னை தனியா விட்டுட்டு எனக்கென்னனு நீ இருப்பியா?. ஹஸ்பண்ட் அப்டின்ற கடமையில இருந்து தவறிட்ட. உன்னோட உரிமையை எந்த சூழ்நிலையிலையும் தவறவிடலாமா? எல்லாத்தையும் கரெக்டா செஞ்சாதானே அது புருஷலட்சணம்...” என தன் மேல் தவறே இல்லை என்பது போல பேசவும்,

“ஹர்ஷூ. அவர் உன்னோட ஹஸ்பண்ட். கொஞ்சம் மரியாதையா பேசு...” என அரட்டிய நிஷாந்திடம்,

“உன் வேலையை பாரு. அதான் என்னோட ஹஸ்பண்ட்ன்னு சொல்லிட்டேல. எங்களுக்குள்ள எப்டி வேணும்னாலும் பேசிப்போம். நீ பின்னால போடா...” என்றவள் தன் கணவனின் புறம் திரும்பி,

“ஆங், எங்க விட்டேன். ஹ்ம். நான் இங்க வந்திருக்கேன்னு தெரிஞ்சு வந்த நீ முதல்லையே என் கூட வந்திருந்தா இவனை நான் ஏன் போய் எழுப்ப போறேன்? எங்கப்பா உன்னை போய் நம்பி நீ என்னை நல்லா பார்த்துப்பனு நினச்சு என்னை உனக்கு கட்டிவச்சு பெரிய தப்புப்பண்ணிட்டார்...” என மண்டையில் தட்டிக்கொண்டே கூறி முடிக்கவும்,

“பேசி முடிச்சிட்டியா? வா போகலாம்...” என அமைதியாக எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேச,

“ம்ம் போலாம், போலாம். டேய் வாடா...” என நிஷாந்தையும் அழைக்க அவன் எதற்கு என்பது போல பார்த்த ஷக்தி,

“நீ போய் தூங்கு நிஷாந்த். நாங்க போய்க்கறோம். நீ வா...” என நிஷாந்தை அனுப்பிவிட்டு ஹர்ஷூவோடு வீட்டை நோக்கி நடந்தான்.

“கௌரவ்...” என மெல்லிய குரலில் அவனை அழைக்க,

“ம்ம். சொல்லு...” அவளின் புறம் திரும்பாமலே வினவினான்.

“எதுக்கு நிஷூ வீட்டுக்கு எதுக்கு போனேன்னு கேட்கவே இல்லையே நீ...”

“ஏன் கேட்கனும்?...”

“நீ என்னோட ஹஸ்பண்ட். அப்போ நீ கேட்கத்தானே செய்யனும்...”

“ம்ம் கேட்கலாம்...” என முடித்துக்கொண்டவன் வீட்டை நெருங்கியதும் மெல்ல கேட்டை இரண்டுமுறை தட்டி தான் யாரென்று கூற அந்த சத்தத்தில் வாட்ச்மேன் கதவை திறந்துவிடவும் உள்ளே நுழைந்த நொடி வேகமாக பின்பக்கம் ஓடினாள் ஹர்ஷூ.

அவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவன் கிசுகிசுப்பான குரலில், “ஏய், இப்போ எதுக்கு அந்த பக்கம் போற? வா வாசல் இந்த பக்கம் இருக்கு...” எனவும்,

“ப்ச் விடுங்க கௌரவ், அந்த சு – ன ப – ன பார்த்தா தொலைஞ்சேன். அதனால பைப்ல போறது தான் சேஃப். வா போகலாம்...” என அவனையும் இழுக்க ஷக்தி முழித்தான்.

அவனது தயக்கத்திலேயே அவனை கண்டுகொண்டவள், “ஹேய் உனக்கு பைப் ஏற தெரியாதா?...” என கொஞ்சம் சத்தமாகவே சிரிக்க ஆரம்பித்தாள் ஹர்ஷூ.

அவளது அரவம் கேட்டு யாரும் விழித்துக்கொண்டால் எப்படி சமாளிக்க என எண்ணி அவளை தன்னோடு அணைத்து வாயை தன் கரங்களால் மூடியவன்,

“சத்தம் போடாம என்னோட வா, இல்லைனா கையால உன் வாயை அடைக்கமாட்டேன். என்னோட இதழ்கள் தான் அடைக்கும்...” என்று ஒன்றை புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க அதை விழிவிரித்து பார்த்தவள் அவனது கையை விலக்கி,

“கௌரவ் நான் கூட உன்னை என்னவோன்னு நினச்சேன். சும்மா பின்னுற போ. ஹ்ம். உனக்காக நீ இவ்வளோ கெஞ்சி கேட்டதுக்காக நான் சத்தம் போடாம உன்னோட வாசல் வழியாவே வரேன். ஆனா அது சுத்த போர் தெரியுமா?...” என தனக்குள் எழுந்த படபடப்பை அவனுக்கு காண்பிக்காத வண்ணம் வளவளத்துகொண்டே அவனோடு செல்ல ஷக்தியின் நிலைதான் பரிதாபமாக போய்விட்டது.

“நிஜமாவே இவளுக்கு ஒரு பீலிங்கும் இல்லையா? கொஞ்சம் கூட ஜெர்க் ஆகவே இல்லையே?...” என தனக்குள் குழம்பிக்கொண்டிருந்தவன் அவளின் முகத்தை பார்க்க அதில் திடீரென பூத்த சிறுசிறு வியர்வைத்துளிகள்.

அதிலேயே அவளது உணர்வுகளை புரிந்துகொண்டவன், “ஓஹ், மேடம் சமாளிக்கிறாங்களா?, ம்ம் நீ ரூம்க்கு வா பேசிக்கறேன்...” என புன்முறுவலோடு தங்களின் அறைநோக்கி சென்றான் தன் நாயகியோடு.

அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டதும் திரும்பி பார்த்தால் அங்கே தனக்கு முன்னே தன் மனையாள் பெட்டை நிரப்பிக்கொண்டு படுத்துவிட்டிருந்தாள். பார்த்தவனது முகத்தில் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அதை அடக்கியவன் அவளருகில் படுத்து தன் வலக்கரத்தை அவள் மேல் படரவிட்டு,

“ஹர்ஷூ, நான் என்னோட ஹஸ்பண்ட் அப்டின்ற உரிமையை கேட்கலாமா?...” என கேலி கொப்பளித்த குரலில் கேட்கவும் அவளது மேனி இறுக்கத்தை கூட்டியது.

அவளது உடலில் மாற்றம் ஏற்பட்டு அதன் விரைப்பை உணர்ந்தவன் தன் புறம் அவளை திருப்பி, “தேனு, என்னாச்சுடா?...” என கவலையோடு கேட்டான்.

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் அதுவரை இருந்த ஒளி மறைந்து இருள் படர்ந்திருந்தது. இதுவரை தான் பார்த்த ஹர்ஷிவ்தாவா இவள் என எண்ணும் அளவிற்கு அப்படி ஒரு மரத்தத்தன்மை அவளின் முகத்தில் குழுமி இருந்தது.

“சும்மா உன்னை சீண்டுறதுக்கு தாண்டா அப்டி செஞ்சேன். நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத. உனக்குள்ள உள்ள ஏதோ ஒரு பாதிப்பு உன்னை இயல்பா இருக்க விடமாட்டிக்கிறதே?. அதை என்னனு நான் கேட்க மாட்டேன். எனக்கிட்ட எப்போ சொல்லனும்னு நினைக்கறையோ அன்னைக்கு நீ சொல்லு. ஆனா அதுக்காக உன்னைவிட்டு தள்ளி நின்னு வேஷம் போட என்னால முடியாது. ஐ மீன் சும்மா டச் கூட பண்ணாம என்னாலைன்னு இல்லை யாராலையுமே முடியாது. ஓகே...”

“நீ எதை நினைச்சும் பீல் பணனதே? இந்த ஹர்ஷிவ்தா எனக்கு யாரோ போல தெரியுறா. நீ நீயா இரு போதும்...” என கூறி புன்னகையோடு அவளது நாசியை பிடித்து ஆட்டினான் ஷக்தி.
 
Top