Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singa penne-2

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
மாணவர் சங்க
தலைமையில் இருந்தான் ..சொந்த ஊர் மகாராஷ்ட்ரா வாக இருந்த போதிலும் சென்னைத் தமிழிலில் பிளந்து கட்டுவான் ....எப்பொழுதும் கல்லூரி வளாகதிற்குள் நான்கு பரிவாரங்களுடன் தான் திரிவான் .புருஷோத்
ஆறடிக்கும் மேல் ..சில பேராசிரியர்கள் கூட அவனை அண்ணாந்து பார்த்துதான் பேசவேண்டியிருக்கும் ...வைஷாலியோ ஐந்தடிக்கும் குறைவு .அதனால் சாதாரணமாக புருஷோத்தை கடந்து போகையில் பொறாமை காரணமாக அவனை வெறுப்பாள்.’’சில பேரு படிக்கிறதாலே காலேஜுக்கு ஒட்டடைக் குச்சி வாங்கற செலவு மிச்சம் ..கையை உசத்தியே ஒட்டடை அடிச்சு தந்திடுவாங்க ..இல்லப்பா...’’என்பாள்
தன்னுடன் வரும் தோழிகளிடம் சிறிது சத்தமாக ...சில காலங்களுக்குப் பிறகு புருஷோத்தும் பதிலடி கொடுக்கத் துவங்கினான் ...’’ஏண்டா ..காலேஜ் மானேஜ்மெண்ட் ஸ்கூல் எதுவும் தொடங்கியிருக்கா ...அங்கங்க அரை டிக்கட்டா சுத்துதுங்க ..’’என்று கண் சிமிட்டி கத்தி விட்டுப்போவான்
...கண்ணில் நீர் திரண்டு விடும் வைஷாலிக்கு
.!நானா வளர மாட்டேனேன்கிறேன் ...எல்லாம் மேலே ஒருவன் இருக்கிறானே அவன் பார்த்த பார்வை .அவன் மட்டும் என் கையில் மாட்டினால் தெரியும் சேதி ..!என்று பொறுமுவாள் மனதிற்குள் .வீட்டில் திடீரென்று ஐம்பது எண்ணிக்கை ஸிகிப்பீங்க் போடும் மகளை ஆச்சரியமாகப் பார்த்தாள் வைஷாலியின் அம்மா ...
‘’ஏண்டி .ஸ்கூல் படிக்கிறப்பல்லாம் தலை தலையா அடிச்சுக்கிட்டேன் ..ஸிகிப்பீங்க் போடுடி கொஞ்சம் ஹயிட் கொடுக்கும் ..இப்படி குள்ளத்தாரா மாதிரியே இருந்துடப் போறே அப்பிடினு ...கேட்க மாட்டேனுட்டே ...இப்ப காலம் போன காலத்துல தங்கு தங்குன்னு குதிக்கிறே ..! இருபது வயசு முடிஞ்சிருச்சில ..இனி வளர்த்தி கிடையாது ..மொட்டை மாடிக்குத்தான் சேதம் ....என்று தன் போக்கில் புலம்புவாள்
..அம்மா சொல்கிறாள் என்பதற் ககவெல்லாம் ஸிகிப்பீங்க் போடமுடியுமா என்ன ...?
எதையும் சொல்லவேண்டியவர்கள் சொன்னால்தானே பலன் உண்டு .அது தெரியுமா அப்பாவி அம்மாவிற்கு
...ஒரு மாதத்தில் வைஷாலி ஸிகிப்பீங்க் போடுவதில் கில்லாடியானது தான் மிச்சம் .ஹைட்டாவது ..வெயிட்டாவது ...ஒன்றையும் காணோம் ,,கிடக்கிறது கழுதை ..வளர்ந்தவர்கள் எல்லாம் என்ன சாதித்து விட்டார்கள் என்று மனதை சமாதானம் செய்து கொண்டாள் வைஷாலி

.மேலும் வளர்ந்தவர்களை விடவும் குள்ளமாக இருப்பவற்கே மூளை அதிகம் என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்து ஆறுதலைத் தந்தது ..பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ என்பதைப் போல காலில் ஹீல்ஸ் வைத்த செருப்பு வாங்கி மாட்டிக்கொண்டாள் ..ஒரு வழியாய் உயரப்ப்ரச்சினை ஓய்ந்தது .
...அடுத்து துயரமாய் வந்து சேர்ந்தது –இன்டர் காலேஜ் ஃபெஸ்டிவல் மிலன் ...மூன்று நாள் விழாவில் வைஷாலி ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் போட்டியில் பங்கெடுத்தாள்
..அதற்காக ஒரு வாரம் மெனக்கெட்டாள் ...வாரப்பத்திரிகைகளின் பள பள அட்டைகளை ரிப்பன் போல வெட்டி ,சுருட்டி ஒட்டி ஈஸ்டர் பாஸ்கெட் தயாரித்தாள் ...அதனுள் ,முட்டை ஓடுகளில் செய்த பொம்மைகளை பெயிண்ட் அடித்து வைத்துவிட்டு சுற்றிலும் தாள் பூக்கள் ,பஞ்சு ஆகியவற்றை பரப்பி வைத்தாள் ..
..பைசா செலவில்லாமல் அட்டகாசமான அலங்காரப்பொருள் தயாராய் ஆயிற்று ..தன்னுடைய தயாரிப்பை டேபிளில் வைத்துவிட்டு ,பின்னால் நின்று கொண்டாள் .வரிசையாய் பார்வையிட்டுக் கொண்டே வந்த மாணவர்கள் ,தங்களுக்குள் கமெண்ட் அடித்து சிரித்துக்கொண்டார்கள் ..வைஷாலியின் கைவினைக் கலை அவர்களை நிறுத்தி வைத்துவிட்டது. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை ....
‘’ஷோ ரூம் லேர்ந்து வாங்கிட்டு வந்து ஷோக்கா வச்சிட்டியா ?’’
‘’ம ‘’என்று முறைத்து விட்டு ‘’நம்மளை மாதிரியே எல்லாரையும் நினைக்கக் கூடாது ‘’என்று உறுமினாள் வைஷாலி

‘’டேய் ,,இவ சொல்றது உண்மையா ?’’

‘’இல்லடா..நாம வேற மாதிரியில்ல படிச்சோம் ?’’

‘’ஆமா ..உன்னைப்போல பிறரையும் நேசி ன்னு தான் நமக்கு சொல்லிக் கொடுக்திருக்காங்க ...பாப்பா வேற மாதிரி சொல்லுது ‘’-புருஷோத்
‘’ஒரு வேளை பாப்பா அப்பிடி படிச்சுருக்கோமோடா ‘’என்றான் பக்கத்து வாத்தியம் ...
‘’அண்ணாக்களா ,,,கச்சேரியே முடிச்சிட்டு இடத்தை காலி பண்ணுங்க ,,காத்து வரட்டும் ‘’’என்று விரட்டினாள் வைஷாலி ..கூட்டம் நமுட்டுச்சிரிப்புடன் நகர்ந்த்தது ,,

‘’என்னடா ..அண்ணாண்ணு சொல்லி டோட்டலா காலி பண்ணிட்டா ‘’’’என்றான் ஒருவன் ..
‘’பின்னே ...ஒரேயடியா அவளை வாருனா ...அப்பீடி த்தான் சொல்வா ‘’

‘’ஆமாண்டா ..நல்லாப் பண்ணியிருந்தா ‘’
‘’வாங்கடா! அவளை ஒட்டும்போது கூடப் பாட்டு பாடிட்டு இப்ப ஆளாளுக்கு என்னையக் காய்ச்சறீங்க ‘’-புருஷோத்

‘’ஓகே ஓகே ...இதெல்லாம் காலேஜ் லைஃப்ல சகஜம் மச்சான் ...அடுத்த பிகரை ...சர்ரி ..டேபிளைப் பாரு ....’’மீண்டும் சத்தமாய் சிரிப்பு ....
அந்த பருவம் அப்பிடி ,,,நான்கு நண்பர்கள் உடனிருந்து விட்டால் ,நாட்டையே வசப்படுத்தி விடலாம் என்ற மாயை மனநிலை ...பனிப்பொழிவு பச்சை இலையின் மீது படர்வது போல ,மென்மையான காற்றாய் ,வாழ்வைக்கடக்கும் பருவம் ..காற்று அடைத்த பலூனாய் வெறும் வானில் வீசி வீசிப் பறக்கும் அந்த காலகட்டம் மனிதனுக்கு மீண்டும் திரும்புவதே யில்லை என்பதே நிதர்சனம் ...

அன்று கல்லூரிப் பேருந்தை தவறவிட்டதால் .மின்சார ரயிலைப் பிடித்து ..கல்லூரிக்கு வர சிறிது தாமத மாகிவிட்டது வைஷாலிக்கு .....கல்லூரி வாசலிலேயே நான்கு வானரங்கள் வரவேற்றன -புருஷோத் தலைமையில் .....
‘’ஹேய் ..உன் பேரு வைஷாலி தானே ?’’

‘’யா’’

‘’கிளாசுக்குப் போகவேண்டாம் ...வெளியே நில்லு .காலேஜ்ல ப்ராப்ளம்”” ‘’நீங்கள்ளாம் இப்பிடி சேர்ந்து நின்னாலே ப்ராப்ளம் தானே ‘’என்றாள் வைஷாலி இளக்காரமாய்...
‘’ஹலோ ஹல்லல்லோ பிராப்ளெம் இருக்கறதுனால தான் நாங்க சேர்ந்து நீக்கறோம் .’’ என்றான் சீரியசாக புருஷோத் ..
‘’சரி விடுங்க !ஏதோ ஒண்ணு ...இப்ப என்னை ஏன் நிறுத்தி வச்சி டார்ச்சர் பண்றீங்க.?’’
‘’’அப்பிடி ஒண்ணும் எங்களுக்கு ஆசை இல்லை ...காலேஜ் மானேஜ்மெண்ட் நம்ம ஸ்டூடண்ட் ஒருத்தனை டார்ச்சர் பண்ணியிருக்கு ...அதை எதிர்த்து தான் நாம இன்னிக்கு உள்ளிருப்பு போராட்டம் பண்றோம் ...’’’

‘’எப்பவும் உள்ளதானே இருக்கோம் ,,புதுசா என்ன ‘’

‘’எப்பவும் உள்ளேயிருந்து படிப்போம் ..இன்னிக்கு போராடப் போறோம் ..அவ்வளவு தான் ‘’

‘’’காரணம் ? காரணம் தெரியணும் ப்ரோ ....சும்மா வெட்டி கோஷம் போடறதுக் கெல்லாம் நாந்தயார் இல்ல ..’’என்று உதார் விட்டாள வைஷாலி ‘’
‘’நம்ம காலேஜ் ஸ்டூடண்ட் முத்து ராஜா மேல.காலேஜ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கு ..அவன் ஒரு கஷ்ட்டப்பட்ட பையன் ‘’
‘’ஏன் ..கஷ்ட்டப்பட்ட பையன்னா ஒழுங்கா இருக்க வேண்டாமா ?’’

‘அப்பிடி இல்ல அவன் ஆர்வக்கோளாறுல ஆபீஸ் ரூமுக்குபோயி கள்ளச்சாவி போட்டு கொஸ்டின் பேப்பரை எடுத்து லீக் அவுட் பண்ணிட்டான..அதுக்காக அவனை கிளாஸ் ரூமுக்குள்ள விடாம சஸ்பெண்ட் பண்ணப்போறேன்னு மிரட்டியிருக்காங்க ‘’
‘’சந்தோஷப் படுங்க ப்ரோ ...நல்ல மானேஜ்மெண்ட் ..அதான் இத்தொட விட்டுருக்காங்க ...இல்ல இன்னேரம் முத்துராஜா ஜெயில் ராஜா ஆகியிருப்பான் ...’’
‘’நீ சொல்றதும் ஒரு வகையில் சரிதான் ...அதனாலதான் நாங்க யுனியன் சார்பா மன்னிப்பு கேட்டுட்டோம் .ஆனா இன்னும் முத்துராஜாவை கிளாசுக்குள்ள விடலை ..இன்னும் ஒரு வாரத்துல செமஸ்டெர் இருக்கில்ல...அவங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சா ஏடா கூடமாயிடும் ...அதான் இன்னிக்கு இந்த முடிவு ‘’

‘’ஓகே ,,உங்க நல்ல எண்ணத்துக்காக நானும் களத்துல குதிக்கிறேன் ..லெட் அஸ் ஸ்டார்ட் ..’’ என்று உற்சாக மானாள் வைஷூ ....முழக்கத்துடன் நடந்த இரண்டு மணி நேர போராட்டத்த்ற்கு வெற்றி கிடைத்தது ..கல்லூரி நிர்வாகம் மனமிறங்கியது ...வகுப்பறை கதவுகள் திறந்தன ..பெரும் சத்தத்துட்ன் வகுப்பறையை நிரப்பினார்கள் மாணவர்கள் ..அன்று மாலை அனைத்து மானவர்க்கும் அவர்களது ஒத்துழைபிற்க்காக சாக்லேட் வழங்கிய புருஷோத் .வைஷாலிக்கு அதை இரண்டாக தந்தான் ..’’பட் ,உன்னோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு ‘’ என்று சொல்லி சிரித்தான் ..வைஷாலியும் தோழிகளும் சேர்ந்து கொண்டார்கள் சிரிப்பில் ..அங்கே அவ்விடத்தில் புருஷோத்-வைஷாலி இடயே இருந்த மாயத்திரை விலகி மனங்கள் நெருங்கி வந்தன –அவர்களரியாமலே
 
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
Top