Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 10

Advertisement

நீ ரொம்ப ஜாஸ்தியா கேள்வி கேட்டுட்ட... அதனால no answers for you?
இன்னக்கா தபாய்க்குற... தோ பாருங்க கம்முன்னு 2 கேள்விக்கு answer வரணும் இல்ல மறுபடியும் meme போட்டு தட்டி தூக்க வேண்டி வரும் ஆமா என்னமே நக்கலா???
 
இன்னக்கா தபாய்க்குற... தோ பாருங்க கம்முன்னு 2 கேள்விக்கு answer வரணும் இல்ல மறுபடியும் meme போட்டு தட்டி தூக்க வேண்டி வரும் ஆமா என்னமே நக்கலா???
ஒரு கேள்வி கேளுன்னா இவ்ளோ கேள்வி கேட்டு வச்சுருக்க.. இதை நீ மெசென்ஜர் ல கேட்டா கூட டப்பு டப்பு ன்னு சொல்லுவேன்.. இங்க டைப்பிக்கவே கஷ்டமா இக்கீது?
 
அவருக்கு எப்படி இருந்தா நமக்கென்ன... நம்ம ஜாலியா இருப்போம்????
உன்னைய கட்டிகிட்ட அப்புறமும் அவர் வாழ்க்கையில ஜாலியை எல்லாம் எதிர் பார்க்கலாமா?? ??
 
வீட்ல என் குரல் மட்டும் தான் கேட்டுட்டே இருக்கும்... கொஞ்சம் லொட லொட கேஸு???
உன் குரல் மட்டுமா கேக்குது.. சில நேரம் கையும் நீளுது... ??
 
@Manju Murugan
Hello sis...
Answers:

முன்னொரு காலத்துல நான் ரொம்ப தீவிரமா கதைகளை தேடித்தேடி பைத்தியமா படிச்சுட்டு இருந்தேன்... அப்போ எனக்கு online stories பத்தின எந்த ஐடியாவும் இல்ல... லைப்ரரில போய் இருந்த நாவல்ஸ் எல்லாமே படிச்சு முடிச்சுட்டு வேற இருக்கான்னு நான் வெறிக்கொண்டு கேட்டுப்போ லைப்ரரி அக்கா சொன்னாங்க, 'இதுக்கு மேல கதை வேணுன்னா நீயா தான் சொந்தமா எழுதனும்ன்னு'

எனக்கு பேக்ரவுண்ட்ல 'ஒரு நாயகன் உதயமாகிறான்' பாட்டெல்லாம் கேட்க எப்படி எழுதுறது என்ன எழுதுறது ன்னு நான் திங்கிங் பண்ணிட்டு இருந்தப்போ தான் என் கண்ணுல சிக்குச்சு "wattpad"

உடனே அதுக்குள்ள நுழைஞ்சு கதையை ஆரம்பிச்சுட்டேன்... நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு அங்க... இப்படிதான் நான் ரைட்டர் ஆனேன்...

மத்தபடி இன்ஸ்பிரேஷன்னு எல்லாம் எதுவும் இல்லை...

ரொம்ப பிடிச்ச ரைட்டர்ஸ் நிறைய பேரு இருக்காங்க இப்போ... but நான் புக்ஸ் மட்டுமே படிச்சுட்டு இருந்தப்போ 'சீதாலட்சுமி மேம்' அண்ட் infaa அக்கா கதைகள் ரொம்ப விரும்பி படிச்சேன்...

பிடிச்ச கதை நிறைய இருக்கு... கேட்டதும் நியாபகம் வரது "பாயும் ஒளி நீ எனக்கு" by ப்ரேமலதா பாலசுப்ரமணியம்

முதன் முதல்ல யாரு review போட்டதுன்னு நியாபகம் இல்ல? மன்னிச்சூ... but என்னோட ரெண்டாவது கதைக்கு தான் முதல் review கிடைச்சுது...
செல்வராணி அக்கா, புவிமணி அக்கா, மலர் அக்கா இன்னும் நிறைய பேரு கதை நல்லா இருக்குன்னு பாராட்டினாங்க....

அப்றம் எனக்கு ரொம்ப பிடிச்ச என்னோட கதைன்னா அது என் ரெண்டாவது நாவல் "கரைகிறேன் உனது கண்ணசைவில்"... bcz என் எழுதுத்துக்கு பாராட்டு வாங்கி தந்து என்னை ரொம்ப சந்தோசப்படுத்திய முதல் கதை... சோ always special...

யப்பா... கை வலிக்குது... ud type பண்ண முடியுமா ன்னு தெரிலையே???
 
Top