Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 12

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 12

பதறி எழுந்த சாஹித்யா மணியை பார்த்தாள்,அது விடிகாலை நான்கு என்று காட்டிக்கொண்டிருந்தது. விடிகாலையில் கண்ட கனவு பலிக்கும்னு அவள் அம்மா சொன்னது திடீரென்று ஞாபகம் வந்தது.உடனே தலையை குலுக்கிகொண்டு மனதி,”அடியே! சஹி வர வர உனக்கு விவஸ்தையே இல்லாம போச்சு,அவன் யாரு என்னன்னு தெரியாது,கல்யாணம் ஆச்சான்னும் தெரியாது ..இதுல சாதரணமா கண்ட கனவு பலிக்கும்னு நினைப்பு வேற ..” என்று தன்னை தானே திட்டிக்கொண்டு உடனே படுக்கையை விட்டு எழுந்தாள். எழுந்து ஹாஸ்பிடல் வெராண்டாவில் நடந்துக்கொடுத்தாள்.

அவள் அருகே வந்த நர்ஸ் ,”என்ன மேடம் ,தூங்கலியா?” என்றாள்.

“இல்லை சிஸ்டர் முழிப்பு வந்துடுச்சு ,அதான் எழுந்து வந்துட்டேன்.. நீங்க உங்க ட்யூட்டிய ஆரம்பிச்சா?” என்று அவளுடன் பேச ஆரம்பித்தாள் சாஹித்யா.

தான் கண்ட கனவை மறக்கும் பொருட்டு தான் நர்சுடன் பேச ஆரம்பித்தாள் சாஹித்யா.நர்சின் ட்யூட்டி நேரம் ,படிப்பு ,பாமிலி என்று எல்லாமே பேசியதில் கிட்டத்தட்ட அந்த கனவிலிருந்து வெளியே வந்தாள் சஹி.

காலம் எதற்கும் நிற்காமல் உருண்டோடியது.அவ்யுக்த் சாஹித்யாவின் வீட்டை வாங்கினான் ஆனால் ஒரு முறை கூட சஹியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சஹியின் அப்பா பிஸ்னஸ் தொடங்க ஆயித்தம் ஆகி கொண்டிருந்தார். சாஹித்யா பரத்தின் கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தாள்.

நளினாவும் அவ்யுக்த் கம்பனிக்கு சென்று வந்தாள். பரத் நளினா காதலும் வளர்ந்துக்கொண்டிருந்தது.

சாஹித்யாக்கு தன் கனவை பற்றி அடிக்கடி யோசனை வந்தது, ஆனால் அதை பற்றி யாரிடமும் பேச தோன்றவில்லை..

அவ்யுக்த் தனக்கு பிடித்தவளை தேட வேண்டும் என்று யோசிக்கும் போதெல்லாம் அவனுக்கு பேப்பரில் வந்த அட்டும் வீட்டில் பார்த்த பெய்ன்ட்ங்சும் வந்துக்கொண்டே இருந்தன. அதனால் அந்த நினைவையே வரவிடாமல் தன் தொழிலில் கவனம் செய்ய ஆரம்பித்தான்.

இதனிடையே அவ்யுக்தின் அம்மா அவனுக்கு கொடுத்த மூன்று மாத கெடுவும் முடிந்து இருந்தது.

“டேய் அவ்யுக்த், இன்னிக்கு தான ராகவன் சார் வீட்ட காலி பண்றேன்னு சொல்லி இருக்கார்?”

“ம்ம் ஆமாம் மா”

“அந்த பெய்ன்டிங்ஸ் எல்லாம் அங்கேயே இருக்கட்டும்ன்னு சொல்லிடாங்கடா ,உனக்கு தெரியுமா?”

“இல்லைமா எனக்கு தெரியாது , நீங்க கேட்டிங்களா?”

“டேய், நான் படம் எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னேன் அவ்ளோ தான் டா,இப்போ இவங்க போக போற வீடு சின்னதாம்.. அங்க மாட்ட இடம் இல்லையாம்,உங்களுக்கு பிடிச்சிருக்கே இது எல்லாம் இங்கயே இருக்கட்டுமா?ன்னு கேட்டாங்க..நானும் சரின்னு சொல்லிட்டேன் டா.”

“ம்ம் சரிம்மா, இன்னிக்கு எனக்கு ஆபீஸ்லே இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு நீயும் அப்பாவுமே போய் கீ வாங்கிட்டு வந்துடுங்க ,”என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீட்டு தொலைபேசி அழைத்தது.

போனை எடுத்து “ஹலோ!திஸ் இஸ் அவ்யுக்த்” என்றான்
சாஹித்யா தான் அழைத்திருந்தாள் ஆனால் அவளுக்கு பேசவே தோணவில்லை.

அவ்யுக்தின் குரலில் இருந்த கம்பீரம் அவளை பேசவிடாமல் செய்தது.இதுவரை அவனுடன் பேசும் சந்தர்ப்பம் அவளுக்கு கிட்டவில்லை.

அவனுக்கு மணமாகவில்லை என்று நளினாவிடம் பேசியதிலிருந்து அறிந்துக்கொண்டாள்.அதனால் இது என்ன மாதிரியான எண்ணம் என்று அறியாமலேயே அவனை பற்றிய கனவை ரசித்திருந்தாள். அந்த எண்ணம் சரியா?தவறா? என்று தெரியவில்லை ஆனால் அவளுக்கு ஏனோ அந்த எண்ணம் மிகவும் பிடித்து இருந்தது.

“ஹலோ! “ என்று ஹலோவிற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தான்.

அந்த அழுத்தத்தில் தன்னிலை மீண்ட சஹி, “எஸ் திஸ் இஸ் சாஹித்யா” என்றாள்.

சாஹித்யாவின் குரலை கேட்ட அவ்யுக்திருக்கு அவன் கண் முன்னாள் அவளுடைய பெய்ன்டிங்ஸ் வந்து போயின, இருந்தாலும் அதை குரலில் காண்பிக்காமல், “யாரு நீங்க என்ன வேணும் உங்களுக்கு ?” என்றான்.

அவனுடைய கேள்வியில் சிறிது ஏமாற்றம் அடைந்த சஹி, “நான் ராகவன் சார் பொண்ணு சாஹித்யா, கௌசி ஆன்டி இருக்காங்களா?” என்றாள்.

“ஓ! ஐ வில் கிவ் டு மை மாம் “என்று சொல்லிவிட்டு போனை அம்மாவிடம் கொடுத்துவிட்டு சற்று தள்ளி நின்றுகொண்டு தலையை கோதிவிட்டபடியே அம்மாவின் உரையாடலை கேட்டான்.

“சொல்லுமா, சாஹித்யா என்ன விஷயம்?”

“ம்ம் சரிம்மா,சரி நீ சொல்றதும் கரெக்ட் தான், அப்படியே செய் மா,”

“ம்ம் வாங்கமா வீட்லே தான் இருப்போம் “ என்று அம்மாவின் பேச்சை மட்டுமே கேட்ட அவ்யுக்திருக்கு சாஹித்யா என்ன சொல்லி இருப்பாள் என்று தோண ஆரம்பித்தது.

“ம்ம் சரிம்மா, கண்டிப்பா வாங்க பாய் மா.” என்றபடியே அம்மா போனை வைப்பது அவன் கண்ணில் பட்டது.

“அம்மா , என்ன விஷயம்மா என்ன சொல்றாங்க?”

“இல்லடா ,சஹியும் அவ அப்பாவும் ஈவ்னிங் வந்து நேர்லயே கீ கொடுக்கறாங்களாம் ,அதை சொல்லத்தான் சஹி இப்போ கால் பண்ணினாப்பா.”

“எப்போ வாரங்கம்மா?”

“ஈவ்னிங் பைவ் க்கு மேல வரோம்ன்னு சொன்னாடா, ஏண்டா கேக்கற?”

அம்மாவிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமலே ,”ராகவன் சார் கிட்ட கொஞ்சம் பிஸ்னெஸ் பத்தி பேசணும்” என்றான் அவ்யுத்.

“சரி டா முடிஞ்சா சீக்கிரம் வா, இல்லன்னா நீ அவர் கிட்ட போன்லே பேசிக்கோ.” என்ற கௌசி வேலை இருந்ததால் கிட்சன் உள்ளே சென்றார்.

அவர் உள்ளே சென்றதும் தன்னுடைய பிளாக்பெர்ரியில் ரிமைன்டர் செட் செய்து கொண்டான்.

முதன்முறையாக ஒரு பெண்ணை சந்திப்பதற்காக ரிமைன்டர் செட் செய்திருக்கோமே என்று அவனே வெட்கப்பட்டு, அதை ரிமூவ் செய்வதற்காக போனை எடுத்து பார்த்தான்.அதில் இருந்த பேரை பார்த்ததும் அதிர்ந்தான். அதில் “தியா மீட்டிங்” என்று எழுதிஇருந்தது.

அவனையும் அறியாமலே அவன் விரல்கள் “தியா” என்ற எழுத்துக்களை தடவி கொடுத்தது.
 
Top