Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 11

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 11

வீட்டை பார்த்து விட்டு அவ்யுக்த் & பாமிலி காரில் திரும்பி கொண்டிருந்தார்கள். அவ்யுக்த் தன்னுடைய காரில் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு அவர்கள் வந்த காரை எடுத்து போகுமாறு டிரைவரிடம் சொல்லிவிட்டான்.அதனால் அவர்கள் தனியே பேசுவதற்கு எந்த தடங்கலும் இல்லாமல் பேசிக்கொண்டு சென்றனர்.


“அவ்யுக்த் வீடு ரொம்ப நல்லா இருக்குப்பா” என்றாள் கௌசி.

“கௌசி ,எனக்கும் வீடு பிடிச்சிருக்கு” என்றார் வேணு.

“என்னம்மா பர்ஸ்ட் வீடே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டிங்க?ஆச்சர்யமா இருக்குமா.”

“டேய், நீ சும்மா இருடா, வீடு நல்லா இருந்தா பிடிக்கத்தான செய்யும்.”

“ஹா..ஹா..! அது சரிதான் மா.”

“அவ்யுக்த் ராகவன் சார் கிட்ட எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாமா?”

“ம்ம் சரிப்பா, உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஓகே தான் பா,
எனக்கு அந்த வீட்டை பத்தி பேப்பர்ல பார்த்ததுமே வாங்கனும்னு தோணிச்சுப்பா.”

“எனக்கும் அந்த அட் ரொம்ப பிடிச்சது டா அவ்யுக்த்,” உனக்கு தெரியுமா அந்த அட் அப்புறம் அந்த வீட்ல இருந்த பெய்ன்டிங்ஸ் எல்லாமே அவங்க பொண்ணு பண்ணினதாம்? எவ்ளோ அழகா இருந்துச்சு இல்ல? அந்த பொண்ண பார்க்க முடியலன்னு எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் டா.” என்றாள் கௌசி.

“அய்யோ! அம்மா ,அந்த ராகவன் சாரையே தேவலன்னு ஆக்குறீங்க ,நேத்து நான் தெரியாத்தனமா பேப்பர் அட் பத்தி ஆரம்பிச்சுட்டேன் ..அவ்ளோ தான் உடனே தன்னோட பொண்ண பத்தி ஆஹா!ஓஹோ!ன்னு பேசிட்டே இருந்தார் .. இப்போ நீங்களுமா?”

“டேய் உனக்கு என்னை கிண்டல் பண்ணலைன்னா சாப்பாடே இறங்காது.”

“ஹா...ஹா... !அம்மா “

“டேய் இப்படி சிரிச்சது போதும் ,நான் உனக்கு கொடுத்த த்ரீ மந்த்ஸ் டைம்ல ஒன் மந்த் டைம் முடிஞ்சுடுச்சுடா ,எப்போ பொண்ண கண்ணுல காட்டறதா உத்தேசம்?”

“அம்மா உங்க கிட்ட வாய கொடுத்து மாட்டிகிட்டேனா?”இன்னும் டூ மந்த்ஸ் டைம் இருக்கு இல்ல மா பார்க்கலாம்.”

“ஆமா இப்படியே சொல்லிட்டே இரு ,இங்க பாரு டா டூ மந்த்ஸ்க்கு மேல ஒரு நாள் கூட வெயிட் பண்ண மாட்டேன்..நானே பொண்ண பார்த்து கூட்டிட்டு வந்துடுவேன் சரியா?”

"கௌசி ,அவன் மனசுக்கு பிடிச்சா தான் மா கல்யாணம் சரியா?”

“நீங்க இப்படி அவனுக்கு சப்போர்ட் பண்றதுனால தான் என் பேச்சையே கேட்கமாடேங்கிரான்.”என்றாள் சலிப்புடன்.

“அம்மா ப்ளீஸ் மா நான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொல்றேன்?”

“ம்ம் ஆமாம் டா ,எப்ப தான் அவளை பார்ப்பியோ?நானும் உன் கிட்ட சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேண்டா .”

“விடு கௌசி அவனுக்கு குரு பலன் வந்துடுச்சு ..சீக்கிரம் அவ மனசுக்கு பிடிச்சவளை பார்ப்பான்.”

அப்பா இப்படி சொன்னவுடன் சம்பந்தமே இல்லாமல் அவன் மனதில் நேத்து பார்த்த அட் டும் இன்று பார்த்த பெய்டின்ங்க்சும் வந்து போயின. இவ்வாறு வந்ததும் சற்று அதிர்ந்த அவ்யுக்த்,”அப்பா ஏதோ சொன்னா எனக்கு ஏதோ ஞாபகம் வருது நீ சரியில்லை டா அவ்யுக்த்.“ என்று மனதில் சொல்லியவாறே தலையை ஆட்டிக்கொண்டான்.



அவ்யுக்த் வீடு பார்க்க வரும் போது சாஹித்யாவால் அங்கே இருக்க முடியவில்லை.சஹியின் பக்கத்து வீட்டு பெண்ணிற்கு திடீரென்று டெலிவரி பெய்ன் எடுத்தது.அந்த பெண்ணின் அப்பாவும் கணவரும் தொழில் விஷயமாக ஊருக்கு சென்றிருந்தனர்.அதனால் அந்த பெண்ணின் அம்மா துணைக்கு சாஹித்யாவை அழைத்து சென்றுவிட்டார்.ஹாஸ்பிடலிலிருந்து தன் தந்தையை அழைத்தாள் சாஹித்யா.

“ஹலோ அப்பா, என்ன ஆச்சு வீடு முடிஞ்சுடுமா?”

“ம்ம் முடிஞ்சுடும் போல தான் இருக்கு மா பார்க்கலாம்,லலிதா எப்டி இருக்கா கொழந்த எப்படி இருக்கு?

“ம்ம் ரெண்டு பேரும் நல்லா இருக்காங்கப்பா,நல்லவேளை கரெக்ட் டைம் க்கு ஹாஸ்பிடல் வந்துட்டோம்.”

“அது சரி தான் மா, “அப்புறம் இன்னிக்கு வீடு பார்க்கவந்தவங்க உன்னோட பெய்ன்டிங்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னங்கடா,”

“ஓ! சரிப்பா, ஏன் பா வந்தவங்களுக்கு பேர் ஒண்ணும் இல்லையோ?”

“போக்கிரி , அவ்யுக்த் சொல்யுசன்ஸ் ஓனர் அவ்யுக்தும் அவர் அப்பா அம்மாவும் வந்தாங்கடா,”

“ஓ!அப்பா அந்த கம்பெனில தான் பா நம்ம நளினாவுக்கு ஜாப் கிடைச்சிருக்கு.”

“நல்ல விஷயம் டா, வீடு முடிஞ்சா நல்லது தான் டா சீக்கிரம் பிஸ்னஸ் ஆரம்பிச்சுடுவேன்.”

“ம்ம், பார்க்கலாம் பா ,பாய் பா” என்று போனை ஆப் செய்து விட்டு உடனே நளினாவுக்கு டயல் செய்தாள்.

நளினா போனை எடுத்ததும்,”என்னடி ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சுதா?”

“ஹே சஹி, உனக்கு நாளைக்கு இருக்குடி “என்றாள் சிரித்துக்கொண்டே.

“சஹி,நானே உனக்கு கால் பண்ணனும்ன்னு நினைச்சேன்டி, வீடு எல்லாம் முடிஞ்சிதா?”

“ம்ம் பார்த்துட்டு போய் இருக்காங்க பட் இன்னும் பைநலைஸ் ஆகல,” ஹே!நளின் ,உன் கம்பெனி ஓனர் தான்டி வீட பார்க்க வந்தாங்கடி.”

“ஹே அவ்யுக்த் அண்ணாவா வீடு பார்க்க வந்தாங்க?”

“என்னது அண்ணாவா? எப்போதிலிருந்து அவர் உனக்கு அண்ணா ஆனார்?”

“சஹி, பரத்தும் அண்ணாவும் க்ளோஸ் பிரண்ட்ஸ் ,பரத்க்கு அண்ணா நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கார்டி .”என்று சொல்லும்போதே நளினாவுடைய குரல் தழுதழுத்தது.

“நளின், என்னாச்சு?”

பரத் அவளிடம் பகிர்ந்துக்கொண்டதை சஹியிடம் பகிர்ந்துக்கொண்டாள் நளினா.

“ஓ! பரத்குள்ள இவ்ளோ வருத்தம் இருக்கா? அவ்யுக்த் கிரேட் தான்டி “

“ம்ம் ஆமாம்டி “சரிடி நாளைக்கு பார்க்கலாம் பாய் சஹி”

போனை ஆப் செய்ததும் அவளுடைய மனம் அவ்யுக்த் பற்றி சிந்திக்க தொடங்கியது. “நிஜமா பரத் இந்த அளவுக்கு உயர்ந்து நிக்கறதுக்கு அவ்யுக்த் தான் காரணம். குடும்பத்தினுடைய புறக்கணிப்பு நிச்சயம் பரத்தை தீய வழிகளுக்கு தான் கொண்டு சேர்த்திருக்கும். அவ்யுக்தின் அன்பு மற்றும் கண்டிப்பு தான் இவனை நல்ல மனிதனாக மாற்றி இருக்கிறது. பரத்தும் அதை நன்றாக உணர்ந்திருக்கிறார். நளினா நிச்சயம் அவர்கள் நட்பை நீடிக்க செய்வாள் ,ஆனால் அவ்யுக்தின் மனைவி நளினாவின் நட்பை ஏற்பாளா?இதை பத்தி நாம் நளினாவிடம் பேசணும்.” .இது மாதிரி எண்ணிக்கொண்டே தூங்கிவிட்டாள் சாஹித்யா.

தூங்கும் முன்னர் அவ்யுக்தை பற்றி எண்ணியதாலோ என்னமோ அவள் கனவிலும் அதே மாதிரி எண்ணங்கள் வந்தது ,அவ்யுக்தின் மனைவியை பற்றி எண்ணும்போதுஅவளுடைய உருவமும் கனவில் தோன்றியது.அந்த உருவத்தை பார்த்தவுடன் பதறி அடித்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தாள் சாஹித்யா.

ஏன் என்றால் அவ்யுக்தின் மனைவியாக சாஹித்யா தான் இருந்தாள்.
 
Top