Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NEW CONTEST ANNOUNCEMENT - PHASE II

Advertisement

Admin

Admin
Member
கனவு பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2023 – Phase II

எழுத்தாளர்கள் பேர் சொல்லி எழுதற போட்டி ங்க பிரண்ட்ஸ்...

ரூல்ஸ் அதே அதே...

1) போட்டியின் தீம் – லவ் அண்ட் லவ் ஒன்லி , காதல் மட்டுமேங்க , காதலின் கதைகள், ஆனால் ஆரோக்யமான அழகான காதல்... அதுக்கிடையில கொஞ்சமா நீங்க என்ன வேணா புகுத்திக்கோங்க லைக் காமெடி , கிரைம் , த்ரில்லர் , பாமிலி டிராமா இன்னும் எனக்குத் தோணாத எதுவும் உங்களுக்கு தோணினாலும் ஓகே.

2) காதல் காதலர்களுக்குள் மட்டுமில்லை, கணவன் மனைவிக்குள்ளும் எழுதலாம்.

3) ஆனாலும் ப்ரைம் ப்ளாட் ஆர் தீம் காதல் மட்டுமே! அதாகப்பட்டது வாசகர்கள் கதை படித்து முடிக்கும் போது, அது ஒரு காதல் கதையாக மட்டுமே மனதில் நிற்க வேண்டும்.

4) சிந்தனைகள் நிச்சயம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும், ரொமான்ஸ் இருக்கலாம், ஆனால் விரசமில்லாமல் முகம் சுளிக்க வைக்காமல் இருக்க வேண்டும்.

5) வாசகர்களின் வரவேற்பே முக்கியம்... எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை பேர் கருத்து பதிவு செய்கிறார்கள்... இதுவும் கணக்கில் கொள்ளப்படும்..... ஆனால் இது மட்டுமே கணக்காகாது.

6) நிச்சயம் வோட்டிங் உண்டு, நடுவர்களோ அல்லது நடுவரோ உண்டு...

7) கதை தளத்தில் பதிவிடும் காலம் இந்த முறை நான்கு மாதங்கள்.

8) பரிசுன்னு சொல்றதை விட பரிசுகள் தான் சரியா இருக்கும்.. ஆம்! முதல் பரிசு ரெண்டாம் பரிசு இப்படி கிடையாது, ஏழு பேருக்கு பரிசு, அவர்களின் கதைகள் புத்தகங்களாய் வரும் இன் மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன். ( புத்தகம் பிரசுகரமாகிய பிறகு புத்தகப் பதிப்பின் ஊக்கத் தொகை வழங்கப்படும் )

9) நமது பதிப்பக எழுத்தாளர்களுக்கு போட்டியில் அனுமதி உண்டு ஆனால் புத்தகப் பதிப்பில் அனுமதி இல்லை.. ஏனென்றால் எப்படியும் அவர்கள் கதை நமது பதிப்பகத்தில் புத்தகமாய் வரும், அதனால் மட்டுமே. ஆனால் நமது பதிப்பகம் அல்லாமல் நமது தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் நிச்சயம் பங்கு கொள்ளலாம். இல்லை நானும் பங்கு கொள்வேன் என்று நமது பதிப்பக எழுத்தாளர்கள் விரும்பினால் அவர்களது ஒரு ஹோஸ்ட் பெர்ஃபார்மன்சாய் மட்டுமே இருக்கும்... போட்டியில் இருக்கும்... முடிவில் பெயரும் வெளியிடுவோம் ஆனால், புத்தகப் பதிப்பின் இந்த ஏழு பேரில் இருக்க மாட்டீர்கள்)

10) இந்த ஏழு பேர்ன்றது அவங்களோட பெஸ்ட் பெர்ஃபார்மன்ன்ஸ் ஸா இருக்கணும், ஒரு வேளை நமக்கு பெரிதாக எழுத எழுத்தாளர்கள் இல்லாமல் ஏழு பேர் மட்டுமே ரேசில் ஓடினால் நிச்சயம் அந்த ஏழு பேருடையதும் வராது. எது சிறந்ததோ அது மட்டுமே!

11) கதை இங்கே மட்டுமே முதல் முறை பதிவிட்டிருக்க வேண்டும். புது கதையாய் இருக்க வேண்டும். இங்கு பதிவிடும் கதை வேறு எங்கும் எழுதியிருந்தாலோ பதிவிட்டு இருந்தாலோ அவை கணக்கில் எடுத்துகொள்ளப் பட மாட்டாது.

12) ஒரு வேளை எங்களுக்கு போட்டியில் பங்கு பெற விருப்பம். ஆனால் வேறு இடத்தில் வெளியிட எங்கள் பதிப்பாளர்கள் அனுமதி அளிப்பது சிரமம் என்று நினைப்பவர்கள், போட்டியில் பங்குகொள்ளலாம். வெற்றி பெற்றால் வெற்றி பெற்றவர் வரிசையில் இடம் பெறுவீர்கள் சான்றிதழும் வழங்கப்படும்.

13) பரிசு தொகையும் உண்டு. புத்தகம் அவர்கள் எப்போதும் பதிப்பிக்கும் பதிப்பகத்தில் போட்டுக் கொள்ளலாம் இங்கே தான் பதிப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

14) தளத்தின் தீர்ப்பே இறுதியானது!

15) ஒரு போட்டிக்கு ஒருவர் ஒரு கதை தான் எழுத முடியும்

16) போட்டியின் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

17) நாங்கள் போட்டியை செம்மையாக, நேர்மையாக நடத்துவோம் என்ற எண்ணமிருப்பவர்கள் எங்களோடு இணைந்தால் போதுமானது...

18) தள பாகுபாடு எல்லாம் இல்லை, யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்... Anybody can join us and everybody can join us.

19) எழுத்தாளரின் விருப்பம் இருந்தால் கதைகள் தளத்தில் இருக்கலாம் இல்லை அதனை நீக்கி கொள்ளலாம்.. ஆனால் போட்டியின் முடிவுகள் வெளிவந்த பிறகு, ஒரு மாத காலம் தளத்தில் இருக்க வேண்டும். பின் அவர் விருப்பம் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் எடுத்து விடலாம்.

20) முடிவுகள் ஏப்ரல் இறுதிக்குள் நிச்சயம் வெளியிட்டு விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

26) எழுத்தாளர்கள் அவரவர் எழுதும் பெயர் கொண்டு இந்த முறை எழுதவேண்டும்.

27) போட்டி ஆரம்பிக்கும் நாள் : 20.09.2023

போட்டியில் உங்களை நவம்பர் மாதம் இறுதி வரை பதிவு செய்து கொள்ளலாம் : THE LAST DATE TO REGISTER IN THE CONTEST : 31.11.2023.

போட்டி முடியும் நாள் : 20.01.2024

(நிச்சயம் நாட்கள் நீட்டிக்கப் பட மாட்டாது...)

கதை முப்பத்தி ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு குறையாமலும் ஐம்பதாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்...

மீண்டும் சொல்கிறோம்: இவை காதலின் கதைகள், லவ் அண்ட் லவ் ஒன்லி, ரொமான்ஸ் இருக்கலாம், விரசமில்லாமல் இருக்க வேண்டும். ஒன்றிரண்டு எழுத்துப் பிழை வாக்கியப் பிழை பொறுத்துப் போகலாம். ஆனால் அதிகமாக இருந்தால் நிச்சயம் அந்த கதை எத்தனை பெரிய வரவேற்பை பெற்றாலும் பரிசு கிடையாது, தமிழன்னைக்கு நம்மாலான ஒரு சிறு செயல்.

அதனால் அத்தியாயம் பதிவிடும் முன் எழுத்துப் பிழையில்லாமல் இருப்பதில், வாக்கியம் முற்றுப் பெறுவதில், டயலாக் கொடேஷன் குள் இருப்பதில், வார்த்தைகள் அதன் அர்த்தத்தை சரியாக கொடுப்பதில் கவனம் தேவை.

போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள்

கதை பெயர் , உங்களின் பெயர் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்

[email protected]

Disclaimer: பங்கு பெரும் அனைவரும் எனக்கு நண்பர்களே! ஆனால் அதற்கும் போட்டிக்கும் சற்றும் சம்மந்தம் கிடையாது. போட்டி சற்றும் பாகுபாடு இன்றி, எனது நண்பர்கள், நமது தளம், என்று எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாமல் அவர்களின் கதைகளின் வரவேற்பை கொண்டே வெற்றி வாய்ப்புகள் இருக்கும்.

முன்பு நடந்த போட்டியில் நான் சொன்னது தான். நமக்கு நாம் எழுதும் கதைகள் சூப்பர் எப்போதும் சூப்பராய் தான் தோன்றும். ஆனால் வாசகர்களின் வரவேற்ப்பு என்பது எப்படி இருக்கும் என்றே சொல்ல முடியாது. சில படங்கள் அருமையாய் இருக்கும் ஓடாது மக்களை ஈர்க்காது. சில படங்கள் சுமாராய் தான் இருக்கும் ஆனால் மக்களின் வரவேற்பை அவ்வளவு பெரும்.

இந்த போட்டி ஒரு ஆரோக்யமான போட்டி. எந்த சண்டை சச்சரவிற்கும் காழ்புணற்சிக்கும் இங்கே இடம் கிடையாது. இங்கே யாருக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப் பட மாட்டாது. எல்லோரும் சரி சமமானவர்களே!

இது எழுத்தாளர்களோடு வாசகர்கள் கை கோர்க்கும் உங்கள் திருவிழா!

கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை!


“லவ் அண்ட் லவ் ஒன்லி – காதலின் கதைகள்”
 
Last edited:
Top