Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 18

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் – 18

நிக்கித்தா… பிறந்தது முதல் மிகவும் சுட்டியாக இருப்பவள். எந்நேரமும் அன்னையின் மடியில் வசிப்பவள்! ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ‘சரியான அம்மா பையித்தியம்’.

குழந்தைகள் இருவரும் உறங்கும் வேளைகளை தவிர, நிக்கித்தாவை கவனிப்பதற்கும் அவள் அண்ணனை கவனிப்பதற்குமே அன்பரசிக்கு நேரம் சரியாக இருந்தது. கணவனின் பாரா முகத்தை தன் குழந்தைகளின் முகத்தை பார்த்து மறக்க முயன்றாள், அன்பு. ஆனால், காலம் செல்லச் செல்ல அவர்களின் பிரச்சனை வளர்ந்ததே தவிர குறையவில்லை! நிக்கித்தாவின் பத்தாவது மாதத்தில் தான் அன்பரசிக்கும் அவள் கணவனுக்கும் பெரிய பிளவு ஏற்பட்டது.

அன்று அவளுக்கு ஒருவர் கால் செய்து சென்னையின் புறநகர் பகுதி ஒன்றில், ஆதரவற்று இருக்கும் குழந்தைகளை பற்றி கூறிவிட்டு, அவர்களை காப்பாற்றவும் இவளை கேட்டுக் கொண்டார். இவளும் இது விஷயமாக பேச சிஸ்டர் சவீதாவையும் ஜெயந்தி அக்காவையும் காண வெளியே கிளம்பினாள்.

அப்போது பார்த்து உறங்கிக் கொண்டிருந்த நிலேஷ் எழுந்து விட, இவளால் கிளம்ப முடியாதுப் போயிற்று. அன்பின் கழுத்தை கட்டிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுவளானான் குழந்தை.

இவளும் வேறு வழி இன்றி அவனையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்து, அவனுக்கு உடை மாற்றினாள். அவளுடன் வெளியே செல்லப் போகிறோம் என அறிந்த குழந்தையின் அழுகை ஸ்விட்ச் போட்டது போல நின்று விட, லட்சுமி அவனின் கன்னத்தை கிள்ளி விட்டு கொஞ்சினார்.

“வெளிய போறோம்னு தெரிஞ்சவுடனே எப்படி அழுறத நிறுத்திட்டான் பாரு!! வாலு… சீக்கிரமா திரும்பி வந்துருமா. நிக்கி குட்டி எழுந்துருவா… சரியா?”

“நீங்க சொல்லனுமா மா… சீக்கிரமா வந்துருவேன்! பாட்டிக்கு டாடா சொல்லு நிலு. ‘பை’ சொல்லு… வரேன்மா.”

அன்னை கூறியபடியே கைகளை ஆட்டி, ‘டாடா’ என சிரித்தான் நிலேஷ். தன் கண்ணே பட்டு விடும் என பயந்து, அவர்கள் செல்வதை பார்த்துவிட்டு உள்ளே தன் பேத்தியை காணச் சென்றார் லட்சுமி.

அன்பரசியும் ஆசிரமம் செல்லும் வரை ஒழுங்காக பையனை பார்த்துக் கொண்டாள். நிலேஷும் அரிதாக இவ்விடங்களுக்கு வருவதால் ஒரே குஷியாக குதித்துக் கொண்டு வந்தான் வழி முழுவதும்.

ஆசிரமம் சென்றதும் தான் தெரிந்தது, சவீதா சிஸ்டர் பக்கத்தில் இருக்கும் ஒரு உடல் உறுப்பு தானம் மையத்திற்கு சென்றிருப்பது. சரியென இவளும் அங்கே விரைந்தாள். அங்கே போனதும், நிலேஷ் இவள் கைகளில் அடங்காமல் துள்ளியபடி இருக்க அவனை அங்கே இறக்கிவிட்டு பேசினாள் சிஸ்டரிடம்.

அது வரை தான் அவளுக்கு ஞாபகம் இருந்தது…. சிறிது நேரம் சிஸ்டருடன் பேசிவிட்டு திரும்பினால் அவள் செல்வனை காணவில்லை!! கப்பென்று இதயம் ஒரு நிமிடம் அடைத்தது அன்புக்கு. ஆனாலும் மனம் தளறாமல், ‘நிலு நிலுக்குட்டி’ என அவனை அழைத்துக் கொண்டு சுற்றிலும் தேடினாள்.

ஒரு பத்து நிமிடம் கழித்து, மனதில் பயம் கொப்பளிக்க ஆரம்பித்தது! எங்கே போயிருப்பான்?? ஒன்றரை வயதிலிருந்தே ஓட்டமும் ஆட்டமுமாக இருந்தான் நிலேஷ். இப்போது அவனுக்கு ஒண்ணே முக்கால் ஆகிறது, வயது. வெளியே ஓடிவிட்டானோ??

என்ன செய்வது?? அதற்குள் அங்கே இருந்தவர்கள் விஷயம் அறிந்து தேட தொடங்கினர். அரை மணி நேரம் தேடியும் குழந்தையை காணவில்லை என்றதும் கை கால்கள் உதறல் எடுக்க, மடிந்து அழ ஆரம்பித்தாள் அன்பு.

சிஸ்டர் அவளின் மொபைலை எடுத்து உடனே ஜீவாவை அழைத்து, விஷயத்தை கூறினார். ஜீவா அடுத்த பதினைந்தே நிமிடத்தில் அங்கே விரைந்தான்.

அவனை பார்த்ததும் அவனிடம் ஓடிச் சென்று, “ஜீவா இங்க தான் இருந்தான்… எங்க போனானே தெரியலை! எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜீவா…” என்று உளற ஆரம்பித்தாள் அன்பரசி.

அவளை முறைத்துவிட்டு தோளை பிடித்து ஒதுக்கி விட்டு, சிஸ்டரிடம் கேள்விகளை கேட்டு பையனை அவனும் தேட ஆரம்பித்தான். அவன் தேடலிலும் பலனில்லை என்றவுடன் போலீஸ் ஸ்டேஷன் விரைந்தான்.

அன்பரசியும் அவன் கூட வருகிறேன் என கூறவும் வெளியே ஒன்றும் கூறமுடியாமல், அவளையும் உடன் அழைத்துச் சென்றான். அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் விரையவும் அங்கே அவர்களின் செல்ல மகனை பற்றி அங்க அடையாளங்களை கூறிவிட்டு, பதறும் நெஞ்சத்தோடு வீடு திரும்பினர்.

வீட்டில் ஏற்கனவே அனைத்தும் அறிந்திருந்த லட்சுமியும், ராகவனும் இவர்கள் வந்ததும் ஆவலாக குழந்தையை பார்க்க ஓடி வந்தனர். ஆனால் லட்சுமியை பார்த்ததும், அன்பு ஓடி வந்து கட்டிக் கொண்டு அழவும், இன்னும் அவர்களின் பேரன் வரவில்லை என புரிந்துக் கொண்டனர்.

“அழாதமா… பையன் கண்டிப்பா கிடைச்சுடுவான்! நீ அழுதா எங்களுக்கும் ரொம்ப பயமா வருதுமா…”

லட்சுமி கூறிய எதுவும் அன்புவின் காதுகளில் விழவில்லை. கோபமும், பதற்றமும், பாசமும் முட்டி மோத அறையில் நடை பயின்றுக் கொண்டிருந்த ஜீவாவை பார்க்கையில் அவளின் நெஞ்சம் துடிப்பதை ஒரு நிமிடம் நின்று, பின் வேகமெடுத்தது.

இவள் பார்ப்பதை கவனித்தவன் மேலும் பொறுக்காமல், அன்புவிடம் சென்று அவளை பற்றி எழுப்பி, “பாவி, எல்லாமே உன்னால தான்டி!! பையன இப்படி தொலைச்சுட்டு வந்து இருக்க…. எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்?? குழந்தையை ஒழுங்கா பார்த்துக்கோன்னு?? இப்போ பாரு… இதுக்காக உன்னை எப்போவுமே மன்னிக்க மாட்டேன்!”

ஜீவா திட்ட திட்ட அன்புவின் மனது துவண்டு விட, பேசும் சக்தியற்று ஓவேன அழ துவங்கினாள். அப்போது விட்டின் அலைப்பேசி தன் ஓசையை எழுப்ப, அவளை உதறிவிட்டு அதை எடுக்க ஓடினான் ஜீவா.

அன்பரசிக்கு கடத்தல் கும்பல், குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்களின் நிலையெல்லாம் அப்போது பார்த்து ஞாபகம் வந்தது!! நெஞ்சை அழுந்த பிடித்துக் கொண்டு, அவள் காத்திருக்க ஜீவா பேசிவிட்டு லட்சுமியிடம் திரும்பி, “பையன் கிடைச்சுட்டான்மா” என தெரிவித்தான்.

“போலீஸ் ஸ்டேஷன்ல ஒருத்தர் வந்து பையனை கூட்டிட்டு வந்திருக்காரு. நான் போய் கூட்டிட்டு வந்துடரேன்!” அடுத்த அரை மணி நேரத்தில் நிலேஷ் எந்தவித பாதிப்பும் இன்றி வீடு திரும்பினான் தன் தந்தையோடு.

நிலேஷ் அவர்கள் கணித்தது போலவே வெளி கேட் வழியாக சென்று, பலூன் விற்றுக் கொண்டிருந்தவனை பின் தொடர ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் தாயின் நினைவு வர, அங்கேயே அழ ஆரம்பித்திருக்கிறான்.

அவ்வழியே சென்றவர்களும் சில நிமிடங்களில் கவனிக்க, பையனை கேள்விகள் கேட்டால் பதிலின்றி வெறும் அழுகை மட்டுமே பெருக்கேடுத்தது. ஒரு மணி நேரம் இப்படி செல்ல, அதன்பின் அனைவரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒப்படைத்தனர்.

ஜீவா கூறியிருந்த அடையாங்களை வைத்து, போலீஸ் அவனுக்கு செய்தி தெரிவித்தது. நிலேஷை பார்த்ததும் அவனை கட்டிக் கொண்டு அன்பு அழ, அவளின் பையனும் அவளை விட்டு அகலவில்லை.

எல்லாம் சரியாகிவிட்டது என நிம்மதி பெருமூச்சு விட முடியாமல், ஜீவாவின் விலகலும் முகத்தை கூட பார்க்காத கோபமும், அவளை சோர்வுற செய்தது. இரவு உணவு முடிந்ததும், ஜீவாவிடம் சென்று “ஜீவா உங்க கோபம் புரியுது. இனிமே குழந்தைகள விட்டு எங்கயும் போக மாட்டேன்.

பிராமிஸ் ஜீவா… உங்களுக்கு கோபம் தான் எனக்கு தெரியும். பட், என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க… ப்ளீஸ் ஜீவா!!” அவன் கைகளை அவள் தொடும் முன் அது எடுத்துக் கொள்ளப்பட்டதிலேயே அவனின் முடிவை தெரிந்துக் கொண்டாள் அன்பு.

அதிர்ந்த முகத்துடன் செய்வதறியாது அவள் நிற்க, ஜீவா எரிச்சலுடன் அந்த இடத்திலிருந்து கிளம்பினான். அன்று மட்டுமல்ல அதன் பின் வந்த நாட்களில் ஜீவா அன்பரசியின் முகத்தை கூட பார்க்கவில்லை!!

குழந்தைக்கு என்ன ஆனதோ, எங்கு சென்றானோ என அவன் துடித்ததும் உள்ளுக்குள்ளேயே மருகியதும் அவனுக்கு மட்டுமே தெரியும். எக்காரணத்திற்காகவும் அந்த நிகழ்வை அவனால் மறக்க முடியவில்லை.

உள்ளுக்குள் சிறிது சிறிதாக அன்பரசி செத்துக் கொண்டிருக்க, லட்சுமியும் ராகவனும், குழந்தைகளுமே அவளின் ஆறுதலாகி போயினர். இரண்டு மாதங்கள் இப்படியே செல்ல, அவர்களின் இளவரசி நிக்கித்தாவிற்கு முதல் வருட பிறந்த நாள் வந்தது.

அந்த பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினாலும், அப்போதும் ஜீவா அன்பரசியிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!! ஒரு நிலைக்கு மேல் அவளுக்கும் ஈகோ முட்டிக் கொண்டு வந்ததில், மீண்டும் அவனிடம் பேசுவதை அல்லது பேச முயற்சிப்பதை நிறுத்திவிட்டாள்.

‘தெரியாம ஒரு தப்பு செஞ்சதுக்கா இவ்வளவு கோவம்?? அவனுக்காக வேலையை விட்டேன் முதல்ல. இப்போ ஆசிரமம், குழந்தைங்க எல்லாத்தையும் மறந்துட்டு வீட்டிலயே இருக்கவும் செய்யறேன்… இப்போவும் கோவம் போலனா என்ன பண்றது?’

இதுவே அன்பரசியின் எண்ணமாக அமைந்தது. நடுவில் வினோத் வேறு இவளுக்கு மண்டகபடி நடத்தினான். “நிலுவ பார்க்காம உனக்கு என்ன பேச்சு அப்படி? நல்ல காலம் ஒண்ணும் ஆகல… ஜீவா உன்கிட்ட கோவமா இருக்குறதுல தப்பேயில்ல.

எனக்கே கோவம் கோவமா வருது!!” அன்பின் ஒற்றை துளி கண்ணீரே அவன் திட்டுகளை நிறுத்தியது. “சரி விடு. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்! ஜீ, அந்த அளவுக்கு கோபக்காரன் இல்ல…” தன் தோழியின் தோளில் தட்டிக் கொடுத்து தேற்றிய அந்த நல்லவனுக்கும் ஜீவா எந்த அளவு கொம்பேரி மூக்கன் என்று தெரியவில்லை!

அது தெரிந்த வேளையில், அன்பரசி ஜீவாவிடமிருந்து முற்றிலுமாக பிரிய நேரிட்டது. அந்த கருப்பு நாட்களை எண்ணுகையில் ஜீவாவின் கண்களின் ஓரம் அவனை அறியாமல் நீர் கசிந்தது. ஒரு பெருமூச்சுடன் அன்று நடந்ததை நினைவு கூர்ந்தான் ஜீவா.

அன்று – லட்சுமியும் ராகவனும் அவர்களின் தூரத்து சொந்தம் ஒருவரின் வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தனர். திருமணம் காஞ்சிபுரத்தில் என்பதால் விடிகாலையிலேயே கிளம்பி, மாலையில் வீடு திரும்ப திட்டமிட்டு இருந்தனர்.

அவர்கள் சென்றதும் குழந்தைகள் எழும் முன் சமையலை முடித்தாள் அன்பு. வழக்கம் போல் ஜீவா ஆபீஸ் கிளம்பினான் அன்றும். மதியம் வரை எல்லாம் சரியாக தான் சென்றுக் கொண்டிருந்தது…

மதியம் சாப்பிடும் வேலை முடிந்தவுடன், குழந்தைகளை தூங்கச் செய்தாள் அன்பு. அவளும் அவர்களின் அருகில் அமர்ந்து புக் ஒன்றை புறட்டிக் கொண்டிருக்க, அப்போது கேட்டது அந்த சத்தம்!

ஜன்னல் வழியே என்னாகிற்று என்று பார்த்தால், பைக்கில் வந்த ஒருவன் காரின் மேல் மோதி விழுந்துக் கிடந்தான். உடனே பதறிப் போனவள், சத்தம் கேட்டு எழுந்த நிலேஷை ஒரு கையில் தூக்கிக் கொண்டு இன்னொரு கையில் ஒரு தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள்.

நிக்கித்தா நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று உறுதி செய்துவிட்டே போனாள். இவள் செல்லும் முன் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவி செய்ய, பைக்காரன் ஓர் அளவு தெளிந்தான். காரில் இருந்த முதியவருக்கு இவள் தண்ணீர் குடுத்து ஆசுவாசப் படுத்தினாள்.

அந்த சமயத்தில், திடீரென்று ஜீவாவின் கார் அந்த தெருமுனையை அடைந்ததுக் கண்டு வியப்புற பார்த்தாள் அன்பு.

ஒரு முக்கியமான பென்டிரைவ்வை வீட்டிலேயே விட்டுச் சென்றதால், வீடு வர வேண்டி இருந்தது ஜீவாவுக்கு. அவளிடம் பேசியபடி இருந்தால், அவளிடம் சொல்லி இருக்கலாம். எங்கே அதற்கும் அவன் பிடிவாதாமும் ஈகோவும் முற்று புள்ளி வைத்து விட்டதே!!

அவன் கார் உள்ளே நுழையவும், பின்னேயே அன்பரசி வரவும் சரியாக இருந்தது. “அப்பாபாபா” அவனை பார்த்ததும் தாவி ஓடி வந்த மகனை கைகளில் வாங்கியபடியே வாசல்படியில் கால்களை வைத்தான் ஜீவா.

அதுவரை தான் அவனுக்கு நினைவு இருந்தது. வாசலில் கால் வைத்த நிமிடம் அவன் கண்ட காட்சி, அவன் ரத்தத்தை உறைய வைத்து கைகள் ஜில்லிட்டன! பின்னே, அவன் இளவரசி மூக்கில் ரத்தம் வர மாடிபடிகளின் முடிவில் நினைவற்று கிடந்தாளே??

அதை பார்த்ததும் ‘நிக்கி’ என அவன் ஓட, பின்னே வந்த அன்புக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை!! இவள் சென்றதுமே எழுந்த நிக்கித்தா, தன் பிஞ்சு நடை பயின்று மாடிப்படிகளின் முடிவில் கால் வைத்தது எப்படி அவளுக்கு தெரியும்??

சரியாக நடை இன்னும் வராததால், கால் ஸ்லிப்பாகி மாடியில் அவளின் உயிர் உருண்டோடியதை இவளிடம் யார் சொல்லுவார்?? இதையெல்லாம் கண்ணால் பார்க்காமல் போனாலும், மாடிப்படிகளில் நிக்கித்தா உருண்டு விழுந்திருப்பாள் என்பது புது பாத்திரத்தில் தெரியும் முகம் போல, அவளின் பெற்றவர்களுக்கு தென்னன்தெளிவாக விளங்கியது.

‘நிக்கி, நிக்கிமா நிக்கி குட்டி… அப்பாவ பாருடா’ எந்த கூப்பாடலும் அந்த குழந்தையை அசைக்கவில்லை! மூக்கில் ரத்தம் பார்த்ததும் அன்பரசி அழ ஆரம்பிக்க, அவளை உதறித் தள்ளி விட்டு, நிக்கித்தாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைந்தான் ஜீவா.

வீட்டில் வேலைக்காரர்களும் அன்று விடுப்பு எடுத்து இருந்ததால் தன் பர்ஸ், செல்போன் மட்டும் எடுத்துக் கொண்டு நிலேஷை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் அன்புவும் ஹாஸ்பெட்டலுக்கு பறந்தாள்.

வழிலேயே வினோத்தை கூப்பிடவும் மறக்கவில்லை…

பக்கத்தில் இருந்த ஒர் புகழ்பெற்ற மருத்துவமனையில் நிக்கித்தாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். வெளியே நின்றுக் கொண்டிருந்த ஜீவாவிற்கே கை கால்கள் வலுவிழந்து போக, அப்படியே உட்கார்ந்துவிட்டான்!

தன் சின்ன குட்டியின் மூக்கில் இருந்து வந்த உதிரத்தில் அவன் உதிரம் வெந்து தனிந்தது!! ‘ஐய்யோ நிக்கிக்கு ஒன்றும் ஆக கூடாதே கடவுளே’ என உள்ளுக்குள் பிராத்தனை ஓடிக் கொண்டிருக்க, மூளையோ அவன் பெற்றோர்களை கூப்பிடச் சொல்லியது.

அவர்களை அழைத்து ஹாஸ்பெட்டலின் பெயரைச் சொல்லி, உடனே வரும்படி கேட்டுக் கொண்டான். ராகவனும் என்னவோ ஏதோவென்று பதறி அடித்து காரில் புறப்பட்டார்.

அதற்குள் மருத்துவமனை வந்த வினோத்தும் அன்புவும், டாக்டர் வெளியே வர காத்திருந்தனர். வந்த டாக்டரோ தலையில் பெரிய குண்டே போட்டார். “குழந்தை அதிர்ச்சியல தான் மயக்கமாகிருக்கா. ஆனா, மூக்குலந்து ரத்தம் வந்து, கொஞ்சம் இன்டர்னல் ப்ளீடிங்கும் ஆகிருக்கு.

சோ, எல்லா டெஸ்டும் எடுத்துட்டு தான் முடிவா சொல்ல முடியும்! நைட் வரைக்கும் வெயிட் பண்ணனும்.”

அவர் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார். இதை கேட்ட அன்பு ஒரு பக்கம் அதிர்ச்சி தாங்காமல், அப்படியே நிற்க அவளை சுய நினைவுக்கு கொண்டு வரவைத்தது ஜீவாவின் கன்னத்து அடி!!!!


 
அருமையான பதிவு
இவ செய்தது தப்பு தான் குழந்தை விசயத்தில்
 

Advertisement

Top