Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 17

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 17

மலர்விழியிடம் பேசியதிலிருந்து அன்பரசியின் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம், அவளின் கல்விக் கடன்! ஆம், திருமணத்துக்கு முன் ஜீவா அதை கட்டும் போதே சிறிது தயக்கம் காட்டியவள், இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போது மிகவும் அவமானமாக உணர்ந்தாள்.

தன்னையே தூக்கிப் போட்டவன் தன்னுடைய கடனை மட்டும் கட்டியது, ஏதோ அவன் தயவில் இவள் வாழ்வதை போல உணர வைத்தது. இதற்கு முன்னும் இதை பற்றி யோசித்திருக்கிறாள் தான்…

ஆனால், அப்போது எல்லாம் உறுத்தாத அளவு, இப்போது உறுத்தியதிற்க்கு காரணம் – ஜீவாவின் இரண்டாம் திருமணம்! ஆம், அவன் அன்று கூறியது நிஜம் என்றே நம்பினாள் அன்பு. ஒரு வேளை, நிஜமாக இல்லாவிடினும் அவனின் பணத்தை திருப்பி தருவதே தன் சுய மரியாதைக்கு அழகு என்று கருதினாள்.

கணக்கு போட்டு பார்த்தால், அவளிடம் உள்ள பணம் அவனுக்கு திருப்பி கொடுக்க வேண்டியதில் பாதியே இருந்தது. மீதிக்கு என்ன செய்வது என்று யோசித்த போது தான் வினோத் அவளிடம் எதையோ கேட்க மொபைலில் அழைத்தான்.

அவனிடம் அப்போவே பணத்தை கேட்டாள். “வினோ எனக்கு கொஞ்சம் காசு வேணும். ஏன், எதுக்குனு அப்புறமா சொல்றேன். பட், இப்போ வேணும்!! கண்டிப்பா திரும்ப கொடுத்துருவேன்…. நீ..”

“ஹே என்ன பணம் வேணும் அவ்வளோ தான?? இப்போ கார்ல வந்துட்டு இருக்கேன். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா டிரான்ஸ்பர் பண்ணிடறேன். தேவையில்லாம திரும்ப குடுக்கறத பத்தியெல்லாம் பேசாத! சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன் லூசு. வீட்டுக்கு வந்ததும் பேசலாம். வெச்சுடறேன்.”

கைப்பேசியை காதிலிருந்து எடுத்த அன்பரசியின் கண்கள் பனித்திருந்தது. போதும், இந்த ஒரு ஜென்மத்துக்கு இவனை போல் ஒரு நண்பனே போதும்! இவன், மலர், தன் குழந்தைகள், பிறகு இவனுக்கு பிறக்கும் குழந்தைகள் இவர்கள் புடை சூழ தான் வாழ்ந்தாலே போதும்!

மனதின் ஓரத்தில் ஜீவா வந்து கண்சிமிட்டினான். வேண்டாம், அவன் சவகாசமே வேண்டாம்! எனக்கு குழந்தைங்க மட்டுமே போதும், என மனதினுள் மீண்டும் உறுப்போட்டாள்.

தன் குழந்தைகள்… அவர்களை தான் தன்னிடமிருந்து பிரித்துவிட்டானே கிராதகன்!! தன்னை அவன் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறிந்ததை கூட ஒரு வகையில் மன்னித்துவிடலாம். ஆனால், இரண்டு பிள்ளைகளையும் தன்னிடமிருந்து அவன் பிரித்ததை மன்னிக்கவே முடியாது!! கண்டிப்பாக முடியாது!!

உள்ளம் எங்கும் ரணமாக வலிக்க, அந்த கொடுமையான நினைவுகள் கண் முன் தோண்றின. இல்லை மீண்டும் மீண்டும் இதை பற்றியே எண்ணுவதில் பலனில்லை. அவனிடம் பணத்தை நாளையே குடுக்க வேண்டும்.

அதன் பின் தான் அன்பு ஜீவாவிற்க்கு கால் செய்தது… இவளோ இந்த மனநிலையில் இருக்க, ஜீவாவோ முற்றிலும் வேறான மனநிலையில் இருந்தான்.

இப்போதும் அவள் செய்தது சரியேன ஒத்துக் கொள்ள தயாராக இல்லை அவன். ஆனால், அவள் செய்த தப்பிற்க்கு மலர் கூறியது போல், மிகப் பெறிய தண்டனை கொடுத்தது போல் மனது வலித்தது.

வாழ்க்கையில் முதன் முதலாக எப்படி அன்பரசியிடம் பேசுவது என குழப்பதில் ஆழ்ந்தான் ஜீவா. சரி முதலில் அவள் எதற்காக தன்னை பார்க்க நினைக்கிறாள் என பார்ப்போம். பிறகு, அதை ஒற்றியே தன்னுடைய மனது மாற்றத்தையும் கூறுவோம் என முடிவெடுத்தான்.

இருவரும் அடுத்த நாளிற்காக ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

****************************************************************************************************அடுத்த நாள் ஐந்து மணிக்கு பஸ்ஸில் அன்பரசி பீச் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள். நினைவேல்லாம் வினோத்திடம் இரவு வீடு வந்ததும் பேசியதிலேயே நின்றது.

“இப்போ என்கிட்ட எதுவும் கேக்காத வினோத். எனக்கு நாளைக்கு ஒருத்தர் கிட்ட குடுக்கறதுக்கு பணம் வேணும். நீ வேணாம்னு சொன்னாலும், முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா இந்த பணத்த திருப்பி கொடுத்தறேன்.”

“எப்போலந்து லவ்ஸ் உன் பணம், என் பணம்னு பிரிச்சு யோசிக்க ஆரம்பிச்ச?? ஹ்ம்ம்ம் திருப்பிக் குடுக்கறத பத்தியெல்லாம் பேசுற??” வினோத்தின் வலி மிகுந்த குரலில், அன்பரசி உடனியாக விளக்கம் அளித்தாள்.

“அப்படி இல்ல வினோ. இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு கல்யாணம் ஆகிடும். மலர் பத்தி நான் தப்பா சொல்லல…. பட், என்ன தான் பிரேன்ட்ஸா இருந்தாலும், உனக்குனு இனிமே குடும்பம் வந்துடும்டா. செலவு ஜாஸ்தி ஆகும்.

கல்யாணம்னு ஒண்ணு ஆகிட்டா முதல்ல நிக்குறது பொன்டாட்டி, குழந்தைங்க தான். அதுக்கப்புறம் தான் எல்லாமே… இத மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ! அதனால தான் திரும்ப தந்துடறேன்னு சொல்றேன். புரிஞ்சுதா?”

அன்பரசி மனதளவில் பாதிப்புடன் பேசுவது அவனுக்கு புரிந்ததால், எதுவும் சொல்லாமல் தலையாட்டினான் வினோத்.

அதை நினைவு கூர்ந்த வேளையில் தான், பலத்த காற்று வீச அவளின் சுடிதாரின் துப்பட்டா பறந்தது. நிகழ் காலத்துக்கு வந்த அன்பரசி பீச் வந்து விட்டதை அறிந்து, பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டாள்.

இறங்கிய நிமிடம் ஜீவாவுக்கு அலைப்பேசியில் அழைக்க, அவனோ தாங்கள் எப்போதும் சந்திக்கும் இடத்தில் இருப்பதாக தெரிவித்தான். இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை, என்ற முனகலுடன் அவன் கூறிய இடத்துக்கு விரைந்தாள் அன்பு.

ஜீவாவோ அந்த இடத்தின் மகிமையை மனதில் நிலைநிறுத்தினான். இதே இடத்தில் தான் தன்னுடைய காதலை சொன்னது! இதே இடத்தில் தான் அவர்கள் திருமணம் ஆவதிற்கு முன்னும், ஆனதுக்கு பின்னும் பல முறை வந்தது. இதே இடத்தில் தான் அவளை போன முறை சந்தித்து வெறுப்பேற்றி காயப்படுத்தியது.

யோசித்துப் பார்த்தால் இந்த கடற்கரை தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பங்காற்றியது போல் உணர்ந்தான் ஜீவா. திரும்பி அவள் வருகிறாளா என பார்க்க, அவனை ஏமாற்றாமல் அன்பரசி வந்துக் கொண்டிருந்தாள்.

அந்த எளிய சுடிதாரில் மாலை வேலையில் அவளை பார்த்ததும், வெகு நாள் கழித்து அவன் மனம் தளும்பியது!! அன்பரசிக்கு அந்த மாதிரி எதுவும் தோணவில்லை போலும்.

அவனிடம் வந்து நின்றாள், அவன் எழுந்துக் கொள்வான் என்ற எண்ணத்துடன். அவள் அமருவாள் என அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அண்ணாந்து! அன்பரசியாவது அமருவதாவது??

வேறு வழியில்லாமல், ஜீவா தான் அவளை உட்காரச் சொன்னான். “உட்காரு அன்பு, எதுக்கு நின்னுட்டே இருக்க??”

“உங்ககிட்ட உட்காந்து பேச நான் வரலை… எனக்கு டைம் ஆகுது. சீக்கிரம் போகனும்.”

அவனையே உற்று நோக்கி அவள் கூறியதை கேட்டு, மணலை தட்டிக் கொண்டு எழுந்தான் ஜீவா. “சரி சொல்லு, எதுக்கு கூப்பிட்ட??”

ஜீவாவின் கேள்விக்கு எதிரொளியாய் தன் கைப்பையில் இருந்து அன்பரசி தன் பரஸ்ஸை எடுத்தாள். அதிலிருந்து ஒரு செக்கை எடுத்து அவள் ஜீவாவிடம் நீட்டவும் ஒன்றும் புரியாமல் அதை வாங்கி பார்த்தான் அவன்.

அதை வாங்கிய பிறகே அது நாங்கு லட்சத்திற்கான காசோலை என தெரிந்து, அவன் புருவங்கள் நெரிந்தது… எதற்கு இப்போது தனக்கு இதை கொடுக்கிறாள் என புரியாமல் அவளை உற்று நோக்கி, “என்னதிது?? எதுக்கு இப்போ இத என்கிட்ட கொடுக்குற??” என்று வினவினான்.

அவன் கண்களை ஆழமாக ஊடுறுவி அன்பரசி விஷயத்தை கண்ணாடி போல போட்டுடைத்தாள். “கல்யாணத்துக்கு முன்னாடி என்னோட லோனை நீங்க தான கட்டுனீங்க??

டைவோர்ஸ் வாங்குனப்பவே இத திருப்பி குடுக்கனும் தான் நினைச்சேன். பட், பணம் சேர்க்க கொஞ்ச வருஷம் ஆச்சு! சாரி, லேட் ஆகிடுச்சு… எப்போ நீங்க இன்னோரு கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்களோ, உடனே குடுத்துடனும்னு முடிவு பண்ணிட்டேன்.

பேங்க் இன்டேரஸ்ட் போட்டு தான் நாலு லட்சம் செக் எழுதுனேன். இது போதும்ல?? ஹ்ம்ம்…”

அவள் பேசப் பேச அமைதியான புதிய ஜீவா போய், பழைய ருத்தரவ மூர்த்தி புகுந்து கொண்டான். அன்பு பேசி முடித்ததும் கண்களை சில நொடிகள் மூடித் திறந்து, அவளை கோபமாக உறித்து விழித்தான் ஜீவா.

“இப்போ எதுக்கு பழைய லோன் பத்தியெல்லாம் இழுக்கற?? தேவையில்லாம புதுசா பிரச்சனை பண்ணாத அன்பு. அவ்வளவு தான் சொல்லுவேன்… முதல்ல இத வாங்கு!”

“இல்ல… திருப்பி நான் கண்டிப்பா வாங்க மாட்டேன்! எனக்கு யாரோட பணத்துலையும் வாழனும்னு அவசியமில்ல…”

“நீ ஒண்ணும் என்னோட காசுல வாழல… அத ஃபரஸ்ட் புரிஞ்சிக்கோ! இப்போ இத வாங்கப் போறீயா இல்லயா??”

அன்பு எதுவும் பேசாமல் கடலை வெறிக்கவும், சுறுசுறுவென கோபம் தலைக்கேற செக்கை சுக்கு நூறாக கிழித்தான் ஜீவா. அன்பரசி இப்போது கோபமாக அவனை பார்க்கவும், அவளை துச்சமாக பார்த்தபடி வார்த்தைகளை துப்பினான் ஜீவா.

அது தான் அவனுக்கு அவனே வைத்துக் கொண்ட ஆப்பு… “என்ன தான்டி நினைச்சுட்டு இருக்க உன்னோட மனசுல?? நீ பாட்டுக்கு எப்பவோ முடிஞ்சு போன விஷயத்துக்கு, இப்போ வந்து காசு குடுப்பியா??

எதுக்கு காசு குடுக்கற? நீ என்னோட வைப்புனு தான் கட்டுனேன்… அப்போ நீ குழந்தை பெத்துக்கட்டதுக்கு என்னோட வீட்டுல வேலை பார்த்ததுக்கேல்லாம் நான் திரும்ப காசு குடுத்தா சும்மா இருப்பியா…”

அவ்வளவு தான் அன்பரசிக்கு வந்ததே கோபம்! என்ன செய்கிறோம் என்று அறியாமல், பளார் என்று அவனை அறைந்தாள்!! அவள் தன்னை அடிப்பாள் என எதிர்பார்க்காத ஜீவாவோ திகைத்துப் போய், கன்னத்தை தாங்கியபடி இருந்தான்.

“ச்சீ… இவ்வளோ கேவலமா உன்னால பேச முடியுமா?? குழந்தை பெத்துக்கிட்டத போய்… காசு அது இதுனு சொல்லி!! பாவி, எப்படிடா உன்னால இப்படியெல்லாம் பேச முடியுது??”

கண்ணீர் மழை வெள்ளமெனப் பெருக்கெடுக்க ஜீவாவின் சட்டையை உலுக்கியபடி ஆத்திரத்துடன் அன்பரசி கத்த, என்ன செய்வது எப்படி அவளை சமாளிப்பது என புரியாமல், அப்படியே நின்றான் ஜீவா. “முதல்ல டிவோர்ஸ் குடுத்து, குழந்தைங்கள என்கிட்ட இருந்து பிரிச்சு என்னை சாவடிச்ச! இப்போ இப்படி கேவலமா பேசி என்னை உயிரோட கொன்னுட்ட… இன்னும் என்ன பண்ண இருக்க?? சொல்லுடா, சொல்லு….”

தன் தவறை அப்போது தான் ஜீவா உணர்ந்தான். “இல்ல ராணி… நான் அந்த அர்த்தத்துல சொல்லலைமா…”

“சே ராணி ராணிமானு என்னை கூப்பிடாத! அப்போ உன் மேல கொஞ்சமாவது லவ் இருந்துச்சு! இப்போ….. வேணாம், எனக்கு எதுவும் வேண்டாம்! இனிமே என்னோட மூஞ்சிலயே முழுக்காத…”

கண்களில் பொழிந்த கண்ணீரை துடைத்தபடியே திரும்பி நடக்கத் துவங்கினாள் அன்பு. அவள் பின்னாடியே ஓடி அவளை சமாதானப்படுத்த முயன்றான் ஜீவா. “அன்பு ப்ளீஸ், எதோ கோவத்துல அப்படி சொல்லிட்டேன்… சாரி ஆயிரம் வாட்டி சாரி!”

“என்னால அப்படியெல்லாம் உன்னை நினைச்சு கூட பார்க்க முடியாதுமா… தெரியாம பேசிட்டேன்! தப்பு தான்… மன்னிச்சுடு!”

“நான் இங்க உன்கிட்ட வேற பேச வந்தேன்… நீ இப்படி செக் எடுத்து நீட்டவும் எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சுமா…”

இந்த சமாதானங்கள் எதுவும் அன்பை இம்மியும் அசைக்கவில்லை! அவள் பாட்டுக்கு உணர்ச்சியற்ற முகத்துடன் நடக்க, ஒரு நிலை மேல் அவளை பின் தொடராமல் தோய்வாக கடற்கரையில் அமர்ந்தான் ஜீவா.

மொத்தமாக அவளின் மரியாதயை இழந்துவிட்டோம் என புரிந்தது அவனுக்கு. இதற்கு முன் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்த போதும், அவனை அன்பு ஒருமை நிலையிலோ அல்லது ‘டா’ போட்டோ கூப்பிட்டது இல்லை!

இன்று அவள் பேசியது அவன் மனதை முழுமையாக பிசைந்தது!!! எவ்வளவு கஷ்டப்பட்டிருதால் இந்த வேதனையான வார்த்தைகள் அவளிடமிருந்து வரும்?? ஜீவாவின் மனது இதை ஒட்டியே யோசித்ததில், அவன் மனது அவர்களின் பிரிவுக்கு காரணமான டிவோர்ஸ் ஏற்பட்ட இடத்துக்கு சென்றது.

கண்களை மூடி முழுமையாக அந்த நாட்களுக்கே மனதளவில் சென்றான் ஜீவா.

****************************************************************************************************

நிக்கித்தா பிறந்த புதிதில் அனைவரும் சந்தோஷமாக இருந்தனர் என்றே சொல்ல வேண்டும்! அதுவும் நிலேஷ் புதிது புதிதாக வார்த்தைகளை உதிக்க ஆரம்பித்தான் அப்போது. ‘அம்மா’, ‘அப்பா’, ’பாப்பா’, ‘தாத்தா’ என அவன் விளித்ததில் வீடே ஆனந்தத்தில் நிறைந்து போனது.

தன்னுடைய குடும்பத்துடன் ஐக்கியமாகி விட்ட நிலேஷை பற்றியும் தங்களுடைய காதலுக்கு பரிசாக கிடைத்த நிக்கித்தாவை பற்றியும் தான், ஜீவாவின் பேச்சு சுற்றி சுற்றி வரும்!

அன்பும் தன் பங்குக்கு அவர்கள் நாள் முழுக்க அடிக்கும் சேட்டைகளை அவனிடம் பகிர்வாள். ஒரு வகையில், அவர்களின் காதலை மீண்டும் மலர்ச் செய்த மாபெரும் வேலையை அவர்களின் குழந்தைகள் செய்தனர்.

ஆனால், அவர்களே பிரிவுக்கும் ஒரு வகையில் காரணமாகினர்… நிக்கித்தாவின் முதல் மூன்று மாதங்கள் மேற்கூறிய படியே செல்ல, அதன் பிறகு தான் விதி தன் கோர விளையாட்டை விளையாடியது.

நான்காம் மாதம் முதல், அன்பு கைப்பேசி மூலம் அவளின் ஆசிரமம் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். ஐந்தாம் மாதம் கோவிலுக்கு வாரம் ஒரு முறை போகும் போது, அவளுக்கு வேண்டிய இடங்களுக்கும் சென்று வந்தாள் அன்பு.

ரொம்ப நேரமேல்லாம் இல்லை… ஒரு அரை மணி நேரம் தான்! அதுவே அவளுடைய கணவனுக்கு மூக்கு, கண், காது எல்லாம் வேர்த்தது… எதை எதையோ கூறி சமாளித்தாள். அடுத்த இரண்டு மாதங்களில், நிக்கித்தாவும் நிலேஷும் தூங்கும் போது அவளின் வெளி வேலைகளை முடித்துக் கொண்டாள் அன்பின் அரசி! ஜீவாவும் பொறுத்தது போதும் என முடிவெடுத்து, பொங்கி எழுந்தான்.

அன்று அவள் வெளியே சென்று திரும்பவும், அவளை தங்களின் அறைக்குள் அழைத்துச் சென்று தன் கோபத்தை கொட்டினான். “அன்பு இந்த மாதிரி நீ வெளியே போயிட்டு வந்தா பாப்பாவையும் நிலு குட்டியையும் யாரு பார்த்துப்பா??”

“அவங்க தூங்கும் போது தான்பா நான் போறேன்! இல்லனா நான் போவனா… இத கேக்க தான் கூப்பிட்டீங்களா? வாங்க அம்மா கிட்ட போலாம்! குழந்தைங்க ரெண்டு பேரும் எனக்காக வெயிட்டிங்!!”

“அதான் கேக்கறேன் ஏன் குழந்தைங்கள வெயிட் பண்ண வைக்கற??”

“அவங்க நான் வீட்டுக்கு வரும் போது தான் எழுந்தாங்க ஜீவா. இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?? அவங்களே சும்மா இருக்காங்க… நீங்க தான் தேவையில்லாம…”

“ஆமா… நான் தான் தேவையில்லாம பேசறேன்… நீ சொல்றது மட்டும் தான் கரக்ட்! சே… எது சொன்னாலும் கேக்கக் கூடாதுனு இருந்தா நான் ஒண்ணும் பண்ண முடியாது! போ… பசங்க கிட்ட போ! உன்னை பார்க்கவே பிடிக்கல எனக்கு!”

முகத்தை அஷ்டக் கோணலாக வைத்துக் கொண்டு பெரும் கோவத்துடன் ஜீவா கத்த, அவனின் வெறுப்பை மேலும் சம்பாதிக்கும் தைரியமின்றி வெதும்பிய மனதுடனும், கன்றிய முகத்துடனும் அறையை விட்டு வெளியேறினாள் அன்பு.

ஆனால், முன் இது போன்று சண்டை போட்டப் போதேல்லாம் யாராவது இறங்கி வந்து மற்றொருவரை சமாதானப்படுத்தவர். இச்சமயம் இரண்டு பேரும் தான் செய்தது தான் சரி என வீம்புடன் இருந்ததால், வார்த்தை பரிமாற்றம் வெகுவாக குறைந்தது இருவரிடமும்.

ஒரு நிலை மேல் அன்பு தாங்க முடியாமல், அவனிடம் ‘சாரி’ கேட்டு கெஞ்சினாள். “ஜீவா ப்ளீஸ் எத்தனை நாள் தான் இப்படி பேசாம இருப்பீங்க? எல்லாத்தையும் மறந்துடலாம்.

முதல் மாதிரி பேசுங்க ஜீவா… என்னால முடியல…” ஜீவா தன் கைகளை பற்றிய அவளின் கைகளை அகற்றிவிட்டபடியே பதிலடி கொடுத்தான் அவளுக்கு. “என்னமோ நான் மட்டும் பேசாம இருந்த மாதிரி சொல்ற? நீயும் தான் பேசாம இருந்த ஞாபகம் வெச்சுக்கோ.

அப்புறம் இப்போ சாரி கேட்டாலும் நீ மாறப் போறதில்ல… அப்புறம் எதுக்கு… ப்ச்ச்ச், விடு அன்பு…”

ஜீவா அசால்டாக கூறிவிட்டு நகர, அன்பு திகைத்து போய் நின்றாள். அவனின் ‘ராணிமா’ என்ற அழைப்புக்கு ரொம்பவே ஏங்கிப் போனாள்!!

இவை அனைத்தும் ராகவனுக்கும், லட்சுமிக்கும் இலைமறை காயாக தெரியத்தான் செய்தது. என்ன தான் இருப்பினும், கணவன் மனைவி பிரச்சனையில் தலையிடுவது நல்லதல்ல என்று நினைத்து அமைதி காத்தனர்.

வினோத்தோ ஒரு பக்கம் ஹைதராபாத்துக்கும், பெங்களூருக்கும் விமானத்தில் பறந்தும், ரயிலில் ஓடியும் கொண்டிருந்தான். அவன் இருந்தாலாவது அவனிடம் இந்த விஷயத்தை பகிரலாம்.

அவனும் அன்றி அன்பு தான் தவித்து போனாள். இந்த சமயத்தில் தான் அவர்களின் செல்லச் சீமான், குட்டி ஜீவா என கொண்டாடப்பட்ட நிலேஷ் காணாமல் போனான்.

அதற்கு காரணமாக இருந்ததோ அவன் அன்னையின் அஜாக்கிரதை! இது ஜீவாவுக்கு தெரிய வந்த போது, நடந்ததை என்னவென்று சொல்ல???
 
மிகவும் அருமையான பதிவு,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:
Top