Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 24

Advertisement

? ? ? ? ? super Super Super pa... Kalakal episode... ராம் ku eppo நியாபகம் thirumbuchi... Semma punishment எல்லாருக்கும் Super.... ராம் friend nu ஒருத்தர் vanthaare ? ? ? semma enna rhyming rhyming... Muthili kita இருக்கு ram ku... Innaki thappichitaan maataamaya poovaan... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
சிலநொடிகள் தன்னை சமன்படுத்தியபடி, “சந்தோஷ், மெயின் ஆப் பண்ணிட்டு, போன் பண்ணு” என்றான். நடப்பதை எல்லாம் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த மைதிலி, “எல்லாமே ப்ரீபிளான்டா நடக்குதுல்ல? நீ இப்போ குணமான மாதிரி எனக்கு தோனல! எதையுமே தெரிஞ்சுக்கமா இருந்துருக்கேன். உன்மேல ரொம்ப கோவமா இருக்கேன் ராம்.. யூ சீட்டடு மீ....” என வருத்தமாய் சொன்னாள் மையு.



அவளிடம் வெறும் புன்னகையை மட்டும் அவன் வீச, முகத்தை திருப்பிகொண்டாள் மையு.



“உன்னோட பெரிய வீக்னெஸ் நாந்தான் பேபி... இவ்ளோ நாள் நிதானமா இருந்த நீ எனக்கு ஒரு ஆபத்துன்னு வரப்போ சராசரி பொண்ண கலங்கி நின்ன.... நான் பார்த்தேன்...” என்றான் ராம். அவன் கைகளை இருக்க பற்றியபடி அவனின் தோள் சாய, அந்த நிலையை கெடுக்கவே அங்கு வந்தார் லக்ஷ்மி.



“ராம் தம்பி, கொஞ்சம் யோசிச்சு பாரு, இந்த அத்தே உன்னை சின்ன வயசுல இருந்து எப்படி எல்லாம் வளர்த்தேன்? உனக்கு அம்மா இல்லாத குறையே தெரியாம வச்சுருந்தேனே!! இடைப்பட்ட காலத்துல என் புருஷன்னு சொல்லிக்கிட்டு வந்த இந்த நாதாரி தான் என் மனச கெடுத்துடுச்சு... இல்லனா நான் ரொம்ப நல்லவ ராம். ரிஷிக்கு இனி ஒரு நல்லா அம்மாவா, நம்ம... இல்ல இல்ல உங்க வீட்ல ஒரு வேலைக்காரியா இருந்துட்டு போறேனே!!” என அவனை தாஜா செய்ய முயன்றார் லக்ஷ்மி.



ஒரு பெருமூச்சுடன் அவரை ஏறிட்டவன், “நீங்க சொல்றதும் சரிதான் அத்தே... இருந்தாலும் நீங்க பண்ணதெல்லாம் தப்பு தானே? என் அம்மாவை கொன்னுட்டீங்களே!” என்றான்.



“அதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன் தம்பி..” என அவசர உறுதி கொடுத்தார் லக்ஷ்மி.



“ஹ்ம்ம்.... என்ன இருந்தாலும் நீங்க என்னோட அத்தே... அதுக்காக தண்டனை குடுக்காமலும் இருக்க முடில...” என பலமாய் யோசித்தவனின் முகத்தையே நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் லக்ஷ்மி.



“சரிங்க அத்தே!! உங்களுக்கு ஈசியா தரேன்... இந்த மாடி இருக்குல்ல? அதை ஒரு நிமிஷத்துல இருபது முறை ஏறி இறங்கணும்... சரியா செஞ்சுட்டா விட்டுடுறேன்...” என அவன் சொன்னதும் குஷியாகிவிட, “ப்பூ... இவ்ளோதானா? ஒரே ஓட்டமா முடிச்சுடுறேன்...” என சொல்லிவிட்டு புடவையை இழுத்து சொருவிக்கொண்டு படிக்கட்டுகளை நோக்கி சென்றார் லக்ஷ்மி.



செல்லும் அவரையே வெறித்த ராமை கண்ட மைதிலி, “ராம்? வேணாம் ராம்... விட்டுடலாம்...” என்றாள்.



அவளை கொஞ்சமும் பொருட்படுத்தாது, அங்கு ஓரமாய் கிடந்த ஜல்லிகற்க்களை கையில் அள்ளினான் ராம்.



ஒரு நிமிடத்தில் இருபது முறை ஏறி இறங்க வேண்டும் என்ற முனைப்பில் வயதையும் மறந்து அவர் படிக்கட்டுகளில் துள்ளி ஓடிக்கொண்டிருக்க, படிக்கட்டுகளின் உச்சத்திற்கு சென்று, போன வேகத்தில் அவர் இறங்க எத்தனிக்க, அந்நேரம் சரியாய் தன் கைகளில் இருந்த கற்களை தூக்கி வீசினான் ராம் படிக்கட்டுகளில்.



வேகமாய் இறங்கிய அவர் காலில் கற்கள் பட, நிலைதடுமாறியவர் சிமெண்ட் பூசப்படாத அப்படிக்கட்டுகளில் உருண்டு விழத்தொடங்கினார்.



அவர் அவ்வாறு விழுவதை கண்ட ராமிற்கு, நிறைமாத கர்பிணியாய் தன் அன்னை அன்று விழுந்தது காட்சியாய் தோன்றியது.



விழுந்த வேகத்தில் அவர் இடுப்பு பகுதி பலமாகவும், தலையில் சிறிதும் அடிபட, மயங்கி சரிந்தார்.



சுற்றிலும் பார்த்த ராமிற்கு, மனது வலித்தது. விஸ்வநாதன் வலியில் அலட்ற, லக்ஷ்மி, மூர்த்தி, வரதன் அங்கங்கே மயக்கத்தில் கிடந்தனர். நானா இப்படி? செய்தது சரிதானா இல்லையா? என தெரியாமல் வேதனையில் முகம் சுருங்கியது.



“ஹே என்னடா...” என கெளதம் அவன் தோள் தொட்டதும், “தப்பு பண்ணிட்டேனாடா?” என மனம் சுணங்கினான் ராம்.



“உன் மனசாட்சிபடி செஞ்சுருக்க, இதுல சரி தப்புன்னு ஒன்னும் இல்லை. திருந்துன ஜென்மமா இருந்தா கூட பரவல்ல... இதுங்க பிறவி குணம் எப்பவும் போகாது... இப்போ நீ மன்னிச்சு விட்டுருந்தாலும் அடுத்து நம்மள எப்படி கொல்லலாம்ன்னுதான் திட்டம் போடுங்க. விடுடா...” என கெளதம் சமாதானம் செய்துகொண்டிருந்த போது, அந்த இடத்தின் பின்பக்கமாக புதியதாய் போட்டிருந்த இரும்பு ஷட்டரின் பூட்டு துப்பாக்கி குண்டால் உடைப்பட, சட்டென திறந்தது.



அந்த நடுநிசி நேரத்தில் திடிரென கேட்ட அச்சத்தம் தூக்கிவாரி போட, சத்தம் வந்த இடத்தை பார்த்தனர். அங்கு கிளம்பிய தூசி புகைக்கு நடுவே இடப்பக்க வானை வெறித்தபடி, அந்த இரவு நேரத்திலும் கூலர்ஸ் போட்டுக்கொண்டு இடுப்பில் ஸ்டைலாய் கைவைத்துக்கொண்டு நின்றான் ஒருவன்.



அவனை கண்டு ராம் ‘இவனா’ என அமைதியாய் சென்று அமர்ந்துவிட, மைதிலி குழப்பத்துடனும், கெளதம் எரிச்சலுடனும் இருந்தனர்.



அப்போது முன்பக்கத்திலிருந்து உள்ளே வந்த சந்தோஷ், அந்த புதியவனை நோக்கி, “நீங்க இப்டி வந்துடீங்களா? நான் வெளில தேடிட்டு இருந்தேன்” என்றான்.



ஒன்றும் புரியாத கெளதம், “யாருடா இது புது கோமாளி?” என்றான் சந்தோஷிடம்.



“உஸ்ஸ்.. அப்படீல்லாம் பேசக்கூடாது....” என சொல்லிவிட்டு ராமிடம், “எல்லாம் ரெடி ராம்..” என்றான்.



வந்த புதியவனோ நிற்கும் போஸில் இருந்து மாறாமல் அப்படியே இருக்க, “யோவ்..!! முன்வாசல், சைடுவாசல்ன்னு எல்லாம் தொறந்து தானே இருக்கு. பின்ன என்ன இதுக்கு நீ இருந்த ஒரு ஷட்டர்ரையும் உடச்சுட்டு வர??” என என அவனை நோக்கி கத்தினான், கோவமாய்.



அவன் அப்படி கேட்டதும் அங்கிருந்து அடி மேல் அடி வைத்து பொறுமையாய் உள்ளே நுழைந்தவனின் முழு உருவமும் அப்போது தான் தெளிவாய் தெரிய வாயை மூடிக்கொண்டான் கௌதம். காக்கி சீருடையில் தோள்பட்டையில் இரண்டு நட்சத்திரங்களை தாங்கி நிற்பனை இனி எதிர்த்து பேச முடியுமா?



அவர்கள் முன் வந்து நின்ற புதியவன், கூலர்ஸ்சை கழட்டிவிட்டு, “அவங்க ஆட்டையபோட்டது ராம் சொத்து; போலீஸ் இப்படி வந்தாதான் கெத்து...” என்றான் ராகமாய்.



அவன் திடீர் அடுக்குமொழியில், “ஹான்?” என முழித்தனர்.



அவர்களை பொருட்படுத்தாது, “திருச்சில இருக்கு கல்லணை; இங்க என்னதாண்டா பிரச்சனை?” என்றான் மீண்டும்.



‘ட்ராமா போலீஸ்சோ?’ என நினைத்து, சந்தோஷும் கௌதமும் நிற்க, அவர்கள் பதில் சொல்லாததை கண்டு, கண்ணை சுழற்றியவன், ராம் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அங்கே சென்றான் ஆர்வமாய்.



“கீழ கடக்குது நைஃப்பு(knife); இதுதானா உன்னோட வைஃப்பு....” என்றான்.



மைதிலி விளங்காத பாவத்துடன் ராமை பார்க்க, “பயப்படாத!! இவன் என் ஸ்கூல் பிரண்டு. இப்போ அசிஸ்டென்ட் கமிஷனர்ரா இருக்கான். விஸ்வநாதனை பார்க்க நீ ஹாஸ்பிடல் போனபோ சந்தோஷ, இவனை பார்த்து நம்ம ப்ரோப்ளம் எல்லாத்தையும் சொல்லி, நான் கேக்குறப்போ ஹெல்ப் பண்ணனும்னு சொல்ல சொன்னேன். இப்போ இவனை நாந்தான் போன் செஞ்சு வர வச்சேன்...! அண்ட் அவனுக்கு எதுவா இருந்தாலும் அதை பஞ்ச்-சா சொல்லிதான் பழக்கம்!” என அவன் சொன்னதும் ராமை முறைத்தாள் மைதிலி.



“நம்ம பேசி தீர்க்க வேண்டியது நிறைய இருக்கு...” என ஒரு மார்க்கமாய் சொன்னவள், “இதெல்லாம் முதல்ல முடி..” என்றதோடு திரும்பிக்கொண்டாள்.



“மச்சி அன்னைக்கு நான் போன்ல சொன்னது தான்டா... இவங்களுக்கு எதிரா எல்லா ஆதாரமும் டாகுமென்ட்டா இருக்கு... நாளைக்கு சந்தோஷ் ஸ்டேஷனுக்கு வந்து கொடுப்பான். அப்பறம் இவங்க வாய்வழி வாக்குமூலம் வேணும்ன்னு கேட்டியே...? ஒரு நிமிஷம் இரு...” என சொல்லிவிட்டு, “மையு பேபி....? உன் செயின் கலட்டி குடு...” என்றான்.



“இது பாமிலி செயின் தானே!! இது எதுக்கு??” என்றாள் மைதிலி.



“செயின் டாலர்ல ஸ்பை காம் வச்சுருக்கேன். இவ்ளோ நேரம் நடந்ததெல்லாம் ரெகார்ட் ஆகிருக்கும். ப்ரூப் கொடுக்கணும்ல? அதுக்கு தான் கேக்குறேன்...” என்றான் ராம்.



“அடப்பாவி!!! இது எப்போ?” என வாயை பிளந்தான் கெளதம்.



ராமை முந்திக்கொண்டு, “டீக்கடைல இருக்கும் போண்டா..; இந்த ஐடியாவ கொடுத்தது நான்டா..” என்றான் புதியவன்.



“உன் பிரண்ட்ஸ் எல்லாருமே லூசு தானா?” என ராமின் காது கடித்தாள் மைதிலி.



“ஆஆஆ....!!” என பொறுமையின்றி கெளதம் கத்த, “உன்னையே மிஞ்ச ஒருத்தன் வந்துட்டாண்டா....” என சொல்லிவிட்டு வாய்பொத்தி சிரித்தான் சந்தோஷ்.



“ஆனா ராம், இதுல நீ செஞ்சது கூட ரெகார்ட் ஆகிருக்கும்ல?” என மைதிலி சந்தேகிக்க, “அட ஆமா பேபி...” என யோசித்தவன், “சரிடா.. நான் எல்லா ப்ரூப்-ம் நாளைக்கு காலைல ஸ்டேஷன் வந்து கம்ப்ளைன்ட் கொடுகுறப்போ சேர்த்து கொடுக்குறேன்...” என்றான் ராம்.



அதற்க்கு அவன் தலை ஆட்டிவிட்டு, “நைட்ல சாப்புடாத பரோட்டா..; என் வேலை முடிஞ்சுது வரட்டா!!” என்றான்.



“டேய் இவங்களை எல்லாம் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணுடா... நாங்க கிளம்புறோம்...” என்றான் ராம்.



“வீட்ல இருக்கும் டைன்னிங் டேபிள்... இவங்களை அள்ளிகிட்டு போவாங்க கான்ஸ்டபில்” என அவன் சொல்ல தொடங்கியதுமே, “ ராம்? போலாம் எந்திரி ராம்.... ப்ளீஸ் ப்ளீஸ்...” என்றாள் மைதிலி.



“ஹாஹா... டேய்.. எல்லாம் பார்த்துக்கோ. நான் சொன்னமாறி கேஸ் எழுது. காலைல ஸ்டேஷன் வரேன்... சரியா?” என்று ராம் கிளம்ப, மைதிலி எழுந்துக்கொள்லாமல் இருப்பதை கண்டு, புருவம் தூக்கினான் அவன்.



“நீ சொல்றவரைக்கும் எழுந்துக்க கூடாதுன்னு சொன்னியே ராம்?” என்றாள் அப்பாவியாய்.



“அடஅடஅட... இப்போ எழுந்துரிங்க பொண்டாட்டி.. போலாம்...!!!” என அவளை அழைத்துக்கொண்டு சென்றான் ராம்.



சென்றவன் ஒரு நொடி நின்று, தன் முன்னாள் சொந்தங்களை வலியுடன் பார்த்துவிட்டு, “சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ...” என்று சொல்லி நகர்ந்தான்.



அவர்கள் பின்னோடு சந்தோஷ் செல்ல, கெளதம் மட்டும் சற்று பின்தங்கி, விரைப்பாய் நின்ற அந்த புதியவனிடம், “இவ்ளோ வசனம் பேசுனியே!! உன் பேரு என்னனு சொன்னியா??” என்றான்.



“காதல் பட நடிகை சந்தியா; என்னோட பேரு.......” அவன் சொல்லிமுடிப்பதற்குள்



“யப்பா டேய்.. ஆள விடு... எனக்கே விபூதி அடிச்சுடுவ போல...” என கும்புடுபோட்டபடி தெறித்து ஓடினான் கெளதம்.



ரிஷி காரில் உறங்கி இருக்க, ராம் காரை ஓட்டிக்கொண்டு தங்கள் வீட்டிற்க்கு சென்றான்.



சூரியன் உதிக்க சில நிமிடங்களே எஞ்சி இருக்க, இருந்த களைப்பில் அறைக்கு கூட செல்லாது சோபாவிலேயே படுத்து உறங்கினர் சந்தோஷும் கௌதமும்.



“உன்கிட்ட பேசணும்.. ரூம்க்கு வா...” என மைதிலி சொல்ல, “ரிஷி தனியா இருப்பான்.. நம்ம நாளைக்கு பேசுவோம்... ஹீஹீ... நல்லா தூங்கு பேபி.....” என சொல்லிவிட்டு அவளிடம் மாட்டாமல் ரிஷி அறையில் அடைக்கலமானான் ராம்.



“நாளைக்கு மாட்டாமையா போவ!!! அப்போ இருக்கு... இவ்ளோ நாளா என்னை ஏமாத்தி....?? கூட்டு களவாணித்தனம் வேற...!!!” என மைதிலி நடு ஹாலில் நின்று கத்த, அவள் குரல் கேட்டாலும் அசையாது உறங்குவதை போல நடித்தனர் அனைவரும்.

-தொடரும்...
good and sensible ending
 
Wow superbbbb.
Ram ku yeppo gunam aachu?????
Nalaikaka mythili kooda nangalum waiting...
 
Top