Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 24

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
இன்றே அடுத்த பதிவும்!!
அதே போல் நாளைக்கு காலையில "இறுதி அத்தியாயம்", மாலை "எபிலாக் (இறுதியுரை)"
எல்லாரும் நிறைய கமெண்ட்ஸ் போடுறீங்க! ஒன்னுவிடாம எல்லாத்தையும் படிப்பேன்! பதில் போட தான் நேரம் கூடி வரல, அதுக்காக கோச்சுகிட்டு யாரும் கமென்ட் போடாம இருக்க கூடாது... ப்ளீச்!!!!!!

அத்தியாயம் 24

“அப்பா.... அப்...பா... அ..ப்..பா.......” என்ற ரிஷியின் தொடர் அழைப்புகள் யாவும் அவர் காதில் விழுந்தது போலவே இல்லை.

இத்தனை காலமும் தன்னை பெற்றவர்கள் இருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டிருந்த அவன் மனது ‘தான் அநாதை’ என்ற செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் திக்பிரம்மை பிடித்ததை போல, அப்படியே நின்று போனது.

ஓங்கிய கத்தியோடு ரிஷியிடம் சென்ற, விஸ்வநாதனை தடுக்க முடியாமல் மற்றவர் தவிக்க, சிறிதும் இரக்கமின்றி அமர்ந்திருந்தார் லக்ஷ்மி.

“எல்லாரும் கருகி தானே சாக போறீங்க? நான் குத்துனா போஸ்ட் மார்டம்ல தெரிஞ்சுடும்மா என்ன?” என அவர் மூர்த்தியிடம் கேட்க, “அதெல்லாம் யோசிக்காதீங்க.... எல்லாம் நான் சரிகட்டிக்குறேன்...” என அவன் சொன்னதும் ரிஷியின் பின்னந்தலையை தன் இடக்கையால் அழுத்தி பிடித்து, தன் வலக்கையில் இருந்த கத்தியால் அவன் வயிறை குறிபார்த்த நேரம், வேகமாய் பறந்து வந்த உருட்டுகட்டை விஸ்வநாதன் வலக்கையை பதம் பார்த்தது.

“ஸ்ஆஆ...” என்றபடி தன் கையிலிருந்த கத்தியை நழுவ விட்டார் விஸ்வநாதன்.

அனைவரும் அந்த கட்டை வந்த திசை நோக்கி திரும்ப, அங்கு கட்டப்பட்டிருந்த தன் கைகளை தரையில் ஊன்றிக்கொண்டு, சிரமப்பட்டு எழுந்து நின்றுகொண்டிருந்தான் ராம்.

அவனை கண்டதும் ஆத்திரம் மேலெழ, “டேய் என்னடா? என்கிட்ட அடிவாங்கி ரொம்ப நாள் ஆச்சுன்னு துளிர் விட்டு போச்சா??” என கேட்டபடி, அவன் வீசிய கட்டையை எடுத்துக்கொண்டு அவனிடம் விரைந்தார் விஸ்வநாதன்.

“எல்லாத்துக்கும் நீதான்டா காரணம்... நீ முன்னையே செத்துருக்கணும்...” என சொல்லிக்கொண்டு ராமை அடித்தார் விஸ்வநாதன்.

“மாமா... அவன் பாவம் மாமா. அவனை ஒன்னும் பண்ணாதீங்க...” என ராம் கெஞ்ச, “பைத்தியத்துக்கு கூட பாசமா? ஹஹா முதல்ல உன் பொண்டாட்டியை காப்பாத்துற வழியை பாருடா...பைத்தியக்காரா..” என சொன்னபடி அவர் மீண்டும் தாக்க, அடிகளை மறுக்காமல் வாங்கிக்கொண்டும், “என்னை அடிச்சுகோங்க மாமா. ரிஷி பாவம். நீங்கதானே அவனை வளர்த்தீங்க... ஒன்னும் செய்யாதீங்க...” என மன்றாடினான் ராம்.

“அவனை வளர்த்ததே அவன் பேருல இருக்க பங்குக்கு தான்... எங்க அவன் உங்களோட சேர்ந்து, இருக்குறதும் போய்டுமோன்னுதான் அக்கறையா இருக்க மாறி பார்த்துகிட்டோம்... அவனுக்கு பதினெட்டு ஆனதும் அவனை கொல்லறதுன்னு நாங்க முன்னாடியே பேசி வச்சுட்டோம்... ஆனா அதுக்குள்ள ப்ளான் மாறிடுச்சு” என அவனுக்கு பதில் சொன்னார் லக்ஷ்மி.

“நீ என்கிட்ட அடிவாங்கியே சாவுடா... அப்போதான் என் ஆத்திரம் அடங்கும்....” என அவர் கை ஓங்க, அந்த கை அப்படியே அந்தரத்தில் நின்றது. ஓங்கிய கையை தன் கட்டப்பட்ட இரு கை கொண்டு பிடித்திருந்தான் ராம்.

அதில் அவர் கோவம் பன்மடங்காகிட, “ஏய் பைத்தியக்காரா!! என்னையே தடுக்குறியா நீ?” என ஆக்ரோஷத்துடன் தன் மறுக்கையால் ராமின் கழுத்தை நெறித்தார் விஸ்வநாதன்.

ரிஷியை எண்ணி தவித்த மூவருக்கும் இப்போது ராமின் நிலைக்கண்டு பதற்றம் அதிகமானது. மைதிலி ஒரு புறம் அலற்றிக்கொண்டிருக்க, WWE பார்பதை போல ஜாலி ஆக பார்த்துக்கொண்டிருந்தார் லக்ஷ்மி. ரிஷியிடம் எந்த மாறுதலும் இன்றி வெறித்த பார்வையுடனே இருந்தான்.

நொடிக்கு நொடி அவர் பிடி ராமின் கழுத்தில் இறுக்கமாக, கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கழுத்திருந்த அவர் கையை தட்டிவிட்டு, அவர் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டான் ராம். அவன் தள்ளியதில் கீழே விழுந்தவருக்கு சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை. தன் கையிலிருந்த கத்தி எப்போது அவன் கைகட்டை அவிழ்தது, தான் எப்படி கீழே விழுந்தோம் என்பது புரியவே நிமிடம் பிடித்தது.

புரிந்தவுடன் நிமிர்ந்து அவர் ராமை பார்க்க, தன் இரு கைகளையும் பின்னங்கழுத்தில் வைத்து கழுத்தை முன்னும் பின்னும் ஆட்டி சொடுக்கெடுத்துகொண்டிருந்தான் ராம்.

அவன் தள்ளிவிட்டதில் கோவம் உச்சத்தை தொட, “ஏய்ய்ய்ய்ய்.... உன்ன.....” என கத்தியபடி எழுந்துக்கொள்ள எத்தனித்தவர் மீது, கீழே கிடந்த கட்டையை காலால் தட்டி எடுத்து வேகத்துடன் அவர் மீது வீசினான் ராம்.

எதிர்பாராத அவன் தாக்குதலில் திடுக்கிட்டவர், ஏற்பட்ட வலியிலும், அவனை முறைக்க முயல, தன் கீழுதட்டை பற்களால் கடித்துக்கொண்டு உதட்டோர ரத்தத்தை சுண்டிவிட்டபடி முகம் சிவக்க நின்றிருந்தான் ராம்.

அவன் நின்ற நிமிர்வும், அவன் பார்வையும் அவருக்கு எதையோ உணர்த்த, மனதில் மெலிதாய் குளிர் பரவியது.

பக்கவாட்டில் திரும்பி அவன் சின்னதாய் தலையசைக்க, அதுவரை தங்களை இழுத்துபிடித்துக்கொண்டு நின்ற வரதன், மூர்த்தியை ஒரே இழுப்பில் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து அவர்கள் காலின் கீழே முட்டிபோட வைத்தனர் சந்தோஷும், கௌதமும். சொல்லி வைத்ததை போல, அவ்விருவரும் ஒரேபோல் செய்ய, “யூ டூ?” என ஒருவரை ஒருவர் கேள்வியாய் பார்த்துக்கொண்டனர்.

மைதிலிக்கு சற்று முன் நடந்ததெல்லாம் கண்முன் மின்னல் வெட்டியதை போல கணத்தில் முடிய, விரிந்த உதடுகளுடன் அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

விஸ்வநாதனை முறைத்தபடி, கீழே கிடந்த கத்தியை எடுத்து அவரிடம் இருந்து பார்வையை திருப்பாமலே மைதிலியை நோக்கி சென்றான் ராம்.

அவளுக்கு ஈடாய் கீழேஅமர்ந்து அவள் முகம் பார்க்க, அவள் அவனையே ஆஅஆவென பார்த்துக்கொண்டிருப்பது தெரிய, அவள் கைகால்களில் இருந்த கயிறை கத்தியால் அறுத்துவிட்டபடி, “ஆர் யூ ஓகே பேபி...?” என விரிந்த அவள் உதடுகளை தன் ஒற்றை விரலால் மூடிவிட்டு சிரித்தபடி கண்சிமிட்டினான் ராம்.

“ராம்?? ராம்? உனக்கு சரியாகிடுச்சா? எப்படி ராம்?” என ஆச்சர்யம் தாளாமல் அவனை தொட்டு தொட்டு பார்க்க, “சரி ஆகிட்டேன் பேபி. என் மாமன் என்னை அடிச்ச அதிர்ச்சில சரிஆகிட்டேன்...” என அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.

“அப்போ என்னை உனக்கு எப்படி தெரியுது? நான் யாருன்னு உனக்கு எப்படி தெரியும்?” என மைதிலி அந்த நேரத்திலும் கேள்வி எழுப்ப, “ஆஹா.. பொண்டாட்டி கொஞ்சம் அறிவா இருந்தா கஷ்டம் தான் போலயே...!” என போலியாய் நொந்தான் ராம்.

“டேய் என்கிட்ட மட்டும் தானேடா இந்தமாறி பண்ணுனு சொல்லிருந்த, இப்போ எப்படிடா சந்தோஷும் இதேமாறி பண்றான்...?” என கெளதம் மூக்கு விடைக்க கேட்டான்.

“அப்போ கௌதம்க்கும் முன்னாடியே சொல்லிடீங்களா ராம்?” என தன் பங்கிற்கு கேட்டான் சந்தோஷ். ‘இப்போ இது அவசியமா?’ என பதிலின்றி ராம் முறைக்க வாயை மூடிக்கொண்டனர் இருவரும்.

கிடைத்த நேரத்தில் ராமை தாக்க எழுந்து வந்த விஸ்வநாதனை லாவகமாய் தடுத்தபடி, மைதிலிக்கு கரம் தந்து எழுப்பினான் ராம். அவளை அங்கிருந்த சுழலும் நாற்காலியில் அமர்த்திவிட்டு, “மாமா? உங்க ராம் தான் மாமா... நீங்க செல்லமா கூப்புடுற உங்க பைத்தியக்கார ராம்... ஏன் மாமா இப்படி பின்னாடியே போறீங்க? என்னை பார்த்து பயமா? வாங்க மாமா... அட வாடாஆஆஆ...” இறுதியில் இளக்கம் மறைய உக்கிரமாய் கத்தினான் ராம்.

நடப்பதைஎல்லாம் பார்த்த லக்ஷ்மி, அங்கிருந்து வெளியேற முயல, சந்தோஷிடம் இருவரையும் ஒப்படைத்துவிட்டு லக்ஷ்மி பின்னோடு சென்றான் கெளதம்..

தன் புடவை முந்தானையை தலையில் போர்த்திக்கொண்டு வாசலில் நின்று அங்கும் இங்கும் எட்டிப்பார்க்க, கௌதமும் பின்னால் நின்று அவரை போலவே செய்தான். யாரும் இல்லை என உறுதியான பின் நெஞ்சில் கைவைத்து நிம்மதி மூச்சு விட்டவர், “என்ன தெரிகிறது?” என்ற குரலில் எதேட்சையாய் பின்னால் திரும்ப, அவர் முகத்திற்கு வெகுஅருகில் இருந்த கெளதம் முகத்தை பார்த்து அலறினார்.

“எங்க? எங்க ஓடபார்க்குற? செய்றதெல்லாம் செஞ்சுட்டு உனக்கு ஓட்டமா கேக்குது ஓட்டம்?” என சொல்லிக்கொண்டே வார்த்தைக்கு ஒரு கொட்டு என தொடர்ந்து கொட்டிக்கொண்டே அவரை உள்ளுக்குள் இழுத்துவந்தான் கெளதம்.

உள்ளே நுழைந்த கெளதம் அங்கிருந்த சூழல் கண்டு திகைத்தான். வரதனும் மூர்த்தியும் போட்டிருந்த மடிப்பு கலையாத சட்டை இப்போது கந்தலாகி இருக்க, தரையோடு தரையாய் கிடந்தனர். சந்தோஷ் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.

மைதிலி ரிஷியின் அருகில் இருந்து அவனை சமன்படுத்த முயல, அதற்க்கு பலனாய் அவன் அழுதபடி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். ரிஷி உணர்வுகளை வெளிப்படுத்தியதே சற்று நிம்மதி தர, லக்ஷ்மியை இழுத்துக்கொண்டு கூடத்தின் நடுவில் வந்தான்.

அங்கு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்த சந்தோஷிடம், “ஏன்டா ஒருத்தன் வாசல் வரைக்கும் போய்ட்டு வரதுக்குள்ள இப்படியாடா செஞ்சுவைப்பீங்க? இப்போ நான் யாரடா அடிப்பேன்?” என கெளதம் முறைக்க, “அதான் கையோட ஒன்னு வச்சுருக்கியே, அதை அடி...” என லக்ஷ்மியை சுட்டிக்காட்டிவிட்டு, “நானே அடிக்குறதுக்கு வேற எதுவும் கிடைக்குமான்னு தேடிட்டு இருக்கேன். போடா அந்த பக்கம்..” என்றான் சந்தோஷ் தேடலை தொடர்ந்தபடி.

கெளதம் வேகமாய் லக்ஷ்மியிடம் திரும்ப, “தம்பி தம்பி, வயசானவ தம்பி, அடியெல்லாம் இந்த உடம்பு தாங்காது. விட்டுடுங்க தம்பி, நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுக்குறேன்...” என வார்த்தைக்கு ஒரு ‘தம்பி’ போட்டு அவர் கெஞ்ச, “நீதானே சொன்ன? இவனையும் நாலு சாத்து சாத்துங்கன்னு... அதுக்கே உன்னை ஏதாது பண்ணனுமே...!!” என்றான் கெளதம்..

“ஆஆஆஆஆ” என விஸ்வநாதன் அடித்தொண்டையில் இருந்து கத்த, அனைவரின் கவனமும் அங்கு சென்றது.

நாற்காலியில் கால்மேல் கால் போட்டு ஸ்டைல்லாக அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த ராம் முன் கீழே அமர்ந்திருந்த விஸ்வநாதன் கதற, காரணம் புரியாமல் அவர்கள் அருகே சென்றனர்.

“சொல்லுன்னு சொன்னேன்...” என ராம் நிதானமாய் கேட்க, “அ.....தா...ஆஆஆஆ.... மரி....ஆஆஆஆ....” என உச்சச்தானியில் அவர் அலற, அருகே சென்று பார்த்த மைதிலி அதிர்ந்தாள். அவர் உள்ளங்கை நாற்காலியின் ஒரு காலிற்கு கீழிருக்க, ராம் ஆட ஆட, கை நசுங்குவதில் வலி தாங்காமல் துடித்தார் விஸ்வநாதன்.

“ராம்? என்ன பண்ற ராம்? நீயும் அவங்களை மாறி பிகேவ் பண்ணாத... போலீஸ் கிட்ட ஹேன்ட்ஓவர் பண்ணிடலாம். விடு ராம்..” என்றாள் மைதிலி.

“பேபிமா... எனக்காக ஒன்னு செய்வியா?” என சிரித்துகொண்டு கேட்டான் ராம், தன் ஆட்டத்தை நிறுத்தாமலே.

ராம் குணமானதிலேயே அவள் மனம் பெரிதும் அமைதிபெற்றிருக்க, அவன் எதற்கு கேட்கிறான் என யோசிக்காமலே, “கண்டிப்பா ராம்” என்றாள்.

“என் பக்கத்துல இருக்க சேர்ல வந்து உட்காரு வா...” என அவளை அழைத்து அமர்திக்கொண்டபின், “இங்க என்ன நடந்தாலும் நான் சொல்றவரைக்கும் இந்த இடத்தை விட்டு எழுந்துக்க கூடாது... சரியா?” என்றான் ராம்.

“ஆனா?” என அவள் தொடங்க, அவள் உதட்டின் மீது விரல் வைத்து “மூச்! நான் சொல்றவரைக்கும் எழுந்துக்க கூடாது. டாட்.” என சொல்லிவிட்டு விஸ்வநாதனை பார்த்தான் ராம்.

“சொல்லுன்னு சொல்லி எவ்ளோ நேரம் ஆகுது?” என அவன் குரல் ஓங்க, வலியை தாங்கியபடி, “சொகுசா... இருக்க..லாம்... மரி..மரியாதை... கிடைக்கும்... சந்த...ஆஆஆ... சந்தோசமா இருக்கலாம்....” என வலியில் அலறிக்கொண்டு திக்கி திக்கி சொல்லிமுடித்தார் விஸ்வநாதன்.

“இப்போ சொல்லு... பணம் வேணுமா? உயிர் வேணுமா?” என்றான் ராம்.

“உயிர் தான்.. உயிர் தான்...” என வேகமாய் சொன்னார் விஸ்வநாதன்.

“பணம் தான் முக்கியம் உனக்கு.. அப்புறம் உயிர் எதுக்கு? உயிரை விட பணம் தானே முக்கியம்?” என்றான் ராம்.

“இல்லை... இல்லை...... உயிர் தான் முக்கியம்...ஆஆஆ” வலிதாங்காமல் கத்தினார் விஸ்வநாதன்.

“அப்பறம் ஏன்டா என் அப்பா அம்மாவ கொன்ன? இந்த சின்ன வலியே உனக்கு தாங்கலையே! உயிர் போறப்போ என் அப்பா, அம்மா எவ்ளோ துடிச்சுருப்பாங்க...?” என கோவமாய் சொன்னபடி அவன் காலை தரையில் ஊன்ற, நாற்காலியின் அழுத்தம் மேலும் கூடி அவர் கையை நைய செய்த்தது.

ராமின் இந்த கோவத்தை எதிர்பார்க்காத மைதிலி, “ராம்... போதும் ராம்.. எனக்கு இவங்க மேல பயங்கர கோவம் இருக்கு. அதுக்காக இவங்களை நம்ம தண்டிக்குறது எந்த விதத்துல நியாயம்... அப்போ அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கபோது?” என சமாதானபடுத்த முயன்றாள்.

“என்ன பேசுற மைதிலி?” என கண்கள் சிவக்க கத்தினான் ராம். தன்னுடன் இதுவரை விளையாட்டாய் சுற்றி திருந்த ராம் தானா இது! என பயந்தே போனாள் மைதிலி.

“சாவு ஒரு மனுஷனுக்கு இயற்கையா வரணும். இப்படி திட்டம் போட்டு உயிர் எடுக்குறது எப்படி நியாயம் ஆகும்? இன்னைக்கு நான் என்னோட அப்பா அம்மா யாரும் இல்லமா இருக்க காரணமே இவங்க தானே? என்னை பைத்தியக்காரனாக்கி ரெண்டு வருஷம் ஒரு அடிமையா வச்சுருந்துருக்காங்க. என் வாழ்க்கைல வந்த உன்னையும் இப்போ கொல்லணும்ன்னு நினைக்குறாங்க... அதெல்லாம் விட, தன்னை இத்தனை வருஷம் அப்பா அம்மான்னு கூப்பிட்ட பையனை கூட காசுக்காக கொல்ல துணியுறாங்க... அவனை பாரு மைதிலி...!!! எப்படி உடைஞ்சு போய் இருக்கான்னு....” என ரிஷியை காட்டினான் ராம்.

ராம் சொல்வது அனைத்தும் உண்மை என்றபோதிலும் அவர்களை ராம் தண்டிப்பதை மைதிலி விரும்பவில்லை. வாழ்கை ஆரம்பிக்கும்போதே வழக்கு விசாரணை என வீணே அவனை அலைய வைப்பதில் உடன்பாடின்றி, “ராம்? இவங்களை ஏதாது பண்ணுனா, போலீஸ்க்கு பதில் சொல்லணும் ராம். நமக்காக தான் சொல்றேன்...” என கெஞ்சிய மைதிலியை வெற்றுப்பார்வை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான் ராம்.

“நீ சொல்ல வரது புரியுது மையு... ஆனா இவங்களை என்னால இப்படியே விட முடியாது... இவங்க உயிருக்கு என்னால எந்த பிரச்னையும் வராது. அவ்ளோதான்..” என முடித்துகொண்டான்.

“டேய்.. தங்கச்சி சொல்றதும் சரிதானே டா... இதுங்களுக்காக நீ உன்னோட வாழ்க்கைய ஏன் கெடுத்துக்கணும்?” என கெளதம் கேட்க, தன்னை சுற்றி நின்றவர்களை ஒருமுறை பார்த்தான் ராம்.

ஓரமாய் நின்ற ரிஷியிடம் “நீ சொல்லு ரிஷி... என்ன பண்ணட்டும்?” என்றான் ராம்.

முகம் பாறையாய் இறுகி போயிருந்த ரிஷி, “உன் இஷ்டம் ப்ரோ..” என்றான் வேதனை சூழ்ந்த முகத்தோடு.

ஆவலாய் ராமின் முகம் பார்த்துக்கொண்டிருந்த விஸ்வநாதனிடம் உதடு பிதுக்கினான் ராம்.

ராம் எழுந்து வரதன், மூர்த்தியிடம் செல்ல, இதுதான் நேரமென்று தரையில் தேய்த்தபடியே ரிஷியின் அருகில் சென்ற விஸ்வநாதன், “ரிஷி? ரிஷி? அப்பாவ பாருடா, தெரியாமா பண்ணிட்டேன்டா... அப்பாவ ஒன்னும் பண்ண வேணாம்னு சொல்லுடா...” என அவன் கால்களை பிடித்துக்கொண்டு கெஞ்ச, அவரை தள்ளிவிட்டுவிட்டு மைதிலியிடம் சென்று நின்றுக்கொண்டான் ரிஷி.

“இந்த டொக்கு பிளான்ன போட்டுகொடுத்தது நீதானே?” என சரியாய் ராம் வரதனிடம் கேட்க, அவன் பயத்தில் ‘ஆம்’ ‘இல்லை’ என மாற்றி மாற்றி தலையை ஆட்டினான்.

“என்ன விட கேவலமா பிளான் பண்ணுறியேடா..?! கொல்லணும்ன்னு வந்தவனுங்க கூட பத்து அடியாளை கூட்டிட்டு வர வேண்டியது தானே?” என கெளதம் வருத்தமாய் கேட்க, “செய்யுற வேலைக்கு சாட்சியாய் போய்டும்ன்னு, அக்கா தான் வேணான்னு சொன்னாங்க...” என வரதன் லக்ஷ்மியை காட்டவும், பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த லக்ஷ்மிக்கு உதறலே எடுத்தது.

ராம் அவரை முறைத்தானே தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை.

மீண்டும் விஸ்வநாதனிடம் சென்ற ராம், “எனக்கு ஷாக் கொடுத்த அன்னைக்கு என்ன சொன்னீங்க?” என்றான்.

மலங்க மலங்க யோசித்தவர், “தெரியலையே” என்றார்.

“ஆனா, எனக்கு நியாபகம் இருக்கே..!!! என்னை முடமாக்கி, பைத்தியமாக்கி, பக்கவாதம் வந்தாலும் பரவல்ல, அவன் என் தயவுல பிச்சை எடுத்து சாப்பிடனும்ன்னு தானே சொன்ன?” என வார்த்தைக்கு வார்த்தை நிறுத்தி நிதானமாய் கேட்க, “அது அப்போ... இப்போ நான் திருந்திட்டேன் என்னை மன்னிச்சுடு ராம்..” என்றார் அவர்.

“‘மன்னிப்பு’ தமிழ்ல..... நோ நோ உருதுல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை... ஹாஹா...” வேடிக்கையாய் பேச முயன்று விரக்தியாய் சிரித்தவன், “கெளதம் எப்படிடா?” என ராம் அவனிடம் கேட்க, “ச்சீ ப்பே” என்றான் அவன்.

அவனை பொருட்படுத்தாது, “பக்கவாதம் எப்படி வரும்ன்னு தெரியுமா?” என்றான் ராம் விஸ்வநாதனிடம். அவர் கண்களில் பயம் அப்பட்டமாய் தெரிய, அதை “நம்ம பேமிலி டாக்டர் கிட்ட கேட்போமா?” என சொல்லிவிட்டு மூர்த்தியை பார்த்தான் ராம்.

பயத்திலும் சந்தோஷ் அடித்த அடியிலும் சில நட்டுகள் கழன்டதை போல நின்றிருந்த மூர்த்தி அவர்கள் பேசுவது ஒன்றும் புரியாமல் விழித்தார்.

“இந்த ஆளு சரியா சொல்லமாட்டான்..! டேய் கெளதம்! நீ கூட நியூரோலோஜிஸ்ட் தானே!! பக்கவாதம் எப்படி வரும்ன்னு சொல்லு... மாமா தெரிஞ்சுக்கட்டும்..” என்றான் ராம்.

ஒரேஅடியாய் அடித்து கொன்றால் கூட இவ்வளவு பயம் வந்திருக்காது அவருக்கு. தன்னை என்ன செய்ய போகிறான் என தெரியாமல் அந்த பயத்திலேயே பாதி உயிர் சென்றதை போல ஆனது விஸ்வநாதனுக்கு.

“பக்கவாதமா? அது.... பக்கவாதம்ன்னா ஒரு கையும் ஒரு காலும் இழுத்துக்கும்.... இந்த மாறி...” என சொன்னது மட்டுமின்றி செய்துவேற காட்டினான் கெளதம்.

வாய் வரை வந்த சில நல்லா வார்த்தைகளை அவசராமாய் முழுங்கினான் ராம்.

“சத்தியமா நீ கம்பவுண்டர் வேலைக்கு கூட லாயக்கு இல்லடா....!!” என சந்தோஷ் கடுப்படிக்க, “நான் சொன்னது பொய்ன்னு சொல்றியா?” என கூற்றை மெய்பிக்க முயன்றான் கெளதம்.

“அவனுங்க கடக்குரானுங்க மாமா... உங்களுக்கு நானே சொல்றேன்..” என அவரை நெருங்கி அவரின் கையை பிடித்தான் ராம். அவர் பயத்தில் கையை உருவிக்கொள்ள, “பயபடாதீங்க மாமா... கைய குடுங்க... ஒன்னும் பண்ண மாட்டேன்.. குடுங்க...” என அவரின் கையை நீட்டி பிடித்தபடி,

அவர் தோள்பட்டையில் இருந்து சற்று கீழிறங்கிய அவர் கையின் பகுதியை பிடித்துகொண்டு, “இங்க பாருங்க மாமா... உங்க தோள்பட்டைல இருந்து நேரா முழங்கை வரைக்கும் போகுதுல இந்த நரம்புக்கு ‘ரேடியல் நெர்வ்’ன்னு பேரு... இந்த நரம்பு கட் ஆச்சுன்னா, உங்க புறங்கை கட்டைவிரல் நடுவிரல் இதெல்லாம் பத்திகிட்டு எரியுரமாறி இருக்கும்....” என சொல்லிவிட்டு அவர் முகத்தை பார்த்தான் ராம். பயத்தில் உறைந்து போயிருந்தார் விஸ்வநாதன்.

“அப்டியே கைமுட்டிக்கு கீழ இருந்து விரல் வரைக்கும் போகுதுல்ல, இதுக்கு ‘மீடியன் நெர்வ்’ன்னு பேரு... இந்த நரம்பு கட் ஆச்சுன்னா அவ்வ்வ்வ்ளோதான். கையை அசைக்கவே முடியாது... ம்ம்ம்..” என்றான் ராம்.

அவன் என்ன செய்ய போகிறானோ என்று மெல்லிய பதட்டத்துடன் அனைவரும் இருக்க, “இப்போ காலுக்கு வருவோம்..! உங்க தொடைக்கு கொஞ்சம் கீழ, இந்த இடம் இருக்குல்ல? இங்க இருக்க நரம்பு ‘சியாடிக் நெர்வ்’, அதேமாறி உங்க கால்முட்டிக்கு கொஞ்சம் கீழ இருக்குறது ‘டிபியல் நெர்வ்’” என சுட்டிக்காட்டியபடி சொன்னான் ராம்.

“இந்த ரெண்டு நரம்பு கட்டானா, காலை அசைக்கவே முடியாது...” என சொல்லிவிட்டு போலியாய் வருத்தபடுவதை போல உச்சுகொட்டினான் ராம், முன்பு விஸ்வநாதன் செய்தது போல.

“உங்க கால் பாதத்துக்கு மேல இருக்க ‘சூப்பர்பிசியல் பெரோனியல் நெர்வ்’ கட் ஆச்சுன்னா பாதத்தை கீழ ஊனவே முடியாது மாமா... இந்தமாறி ஏதாது ஒரு நெர்வ் கட் ஆச்சுன்னா சில மாசத்துல சரி பண்ணிடலாம். ஆனா நான் சொன்ன அத்தனை நரம்பும் கட் ஆச்சுன்னு வைங்க... சாப்ட்டர் க்ளோஸ்... பூட்ட கேஸ் ஆகிடுவ மாமா....”

விஸ்வநாதன் வார்த்தை வராமல் மூச்சிரைக்க அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, ராம் எதற்காக இதை சொல்கிறான் என புரிந்த மற்ற நரிகளுக்கு வயிறுக்குள் பயபந்து உருண்டது.

அதுவரை ராம் சொல்லுக்காக அமைதியாய் இருந்த மைதிலி, “ராம்? இதெல்லாம் வேணாம் ராம். ரிஸ்க் ஆகிடும்... அவங்க தான் மிருகத்தனமா நடந்துகிட்டாங்க... ஆனா நீ ஒரு டாக்டர். உயிரை காப்பாத்துறது தான் உன்னோட வேலை... அதவிட்டுட்டு நீயும் அவங்களை மாறி நடந்துக்குற?” என கேட்டாள் மைதிலி.

“நான் டாக்டர் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு சராசரி மனுஷன் மைதிலி. எல்லாருக்குள்ளேயும் தூங்கிட்டு இருக்க மிருகம் எனக்குள்ளேயும் தான் இருக்கும். கோவம், ஆசை, எதிர்பார்ப்பு, வஞ்சகம்ன்னு எல்லாமே எனக்குள்ளயும் இருக்கு. சரி இப்போ நீ சொல்லு... எனக்கு சரியாகாம இருந்து விஸ்வநாதன் என்னை ஏதாது பண்ணிருந்தா, நீ அப்போவும் இப்டிதான் சட்டம் போலீஸ்ன்னு சொல்லிட்டு இருப்பியா?” என அவளை கேட்க, அவன் கேட்டதை நினைத்து பார்க்க கூட நெஞ்சம் பதறியது மைதிலிக்கு.

அவள் தலை தன்போக்கில் ‘இல்லை’ என சொல்ல, “என் அப்பா அம்மாவை கொன்னுருக்காங்க. எனக்கு இருக்க ஆத்திரத்துக்கு எல்லாரையும் வெட்டி போடணும்ன்னு இருக்கு... இதுங்களை கொன்னு நம்ம லைப்ப கெடுத்துக்க வேணான்னு தான் உயிரோட ‘மட்டும்’ விடப்போறேன்..” என கோவமாய் பேசிவிட்டு திரும்பியவன் கண்களில் ரிஷி பட, ஒரு நொடி தயங்கினான்.

“ரிஷி...... உனக்கு.....” என அவன் தயக்கமாய் ஆரம்பிக்க, “உனக்கு கஷ்டமா இருந்தா நான் வெளில இருக்கேன் ப்ரோ. நீ முடிச்சுட்டு சொல்லு, வீட்டுக்கு போவோம்..” என்றான் உணர்ச்சிதுடைத்த முகத்துடன்.

வருத்தமான முறுவல் தோன்ற, விஸ்வநாதனிடம் திரும்பி, “இப்போ நான் சொன்னதெல்லாம் செய்ய போறேன். எனக்கும் சர்ஜெரி பண்ணி ரொம்ப நாள் ஆச்சு... எந்த அளவுக்கு நான் பிட்டா இருக்கேன்னு செக் பண்ணிக்குறேன்” என்றபடி தரையில் அனாதையாய் கிடந்த கத்தியை எடுத்தான் ராம்.

அவன் கத்தியை எடுத்ததில் விஸ்வநாதனை காட்டிலும் மற்றவர் அலற, “சைலன்ஸ்!!! இவரை முடிச்சுட்டு உங்களுக்கு வருவேன்.. லைன்ல நில்லுங்க” என்றான்.

அவன் அப்படி சொல்லிமுடித்ததும் மூர்த்தி வேகமாய் வந்து அவன் காலை பிடித்தார். “உனக்கு பண்ணதுக்கு எல்லாம் என்னை மன்னிச்சுடுபா... இந்த வயசுல இதெல்லாம் என் உடம்பு தாங்குமா? கொஞ்சம் கருணை காட்டுப்பா...” என அவர் கெஞ்ச, யோசிப்பதை போல நடித்த ராம், அந்த தளத்தின் மூலையில் இருந்த புகைந்து போன மெசின்னை காட்டி, “அந்த மெசினை சரி பண்ணிகுடுங்க... அது வொர்க் ஆச்சுன்னா உங்களை சும்மா விடுறேன்..” என்றான்.

அவன் காட்டியதை பார்த்துவிட்டு “ரிப்பேர் எல்லாம் எனக்கு எப்படிப்பா தெரியும்?” என அவர் பாவமாய் கேட்க, “அதானே!! சரி நீங்க போய் லைன்ல நில்லுங்க” என்றான்.

“ஹைஹ்யோ... வேணாம்பா.. நான் அந்த மெசின்ன சரி பண்றேன்...” என அவசரமாய் மொழிந்துவிட்டு அங்கே சென்றார் மூர்த்தி.

அவர் செல்லவே, கௌதமை கண்ணசைவில் அவர் பின்னே செல்லும்படி பணிந்துவிட்டு விஸ்வநாதனிடம் “ஆரம்பிக்கலாமா?” என்றான் ராம்.

பயத்தில் குரல் எழும்பாமல் போக, உடலை தாறுமாறாய் ஆட்டியபடி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார் விஸ்வநாதன்.

“இப்படி கன்னாபின்னான்னு ஆடுன்னா கண்ட நரம்பும் கட் ஆகும். அசையாம இருங்க...” என்றான் ராம் கொஞ்சமும் இளகாமல்.

கெளதம் வரதனுடன் நின்று மூர்த்தியை கண்கானித்துக்கொண்டிருக்க, அந்த எந்திரத்தில் தலை எது? கால் எது? என்றே தெரியாமல் கைவைத்து தேடிக்கொண்டிருந்தார் மூர்த்தி.

ராம் திரும்பி சந்தோஷை பார்க்க, அவன் விழிமொழி அறிந்ததை போல, மெயின் சுவிட்சை ஆன் செய்த்தான் சந்தோஷ்.

புகைந்த அறுந்த வொயர்கள் நடுவே மின்சாரம் பாய, அதில் கைவைத்திருந்த மூர்த்தி உடலுக்குள் மின்சாரம் ஜெட் வேகத்தில் பாய்ந்தது. அவரது அலறல் கேட்டு விஸ்வநாதன் அங்கு பார்க்க, உண்மையிலேயே நெஞ்சு வலி வரும் போல இருந்தது.

மூர்த்தி துடிப்பதை பார்த்த கெளதம், “ஏன் வரதா!! எப்பவுமே சொல்லுவியே! டாக்டர்க்கு கொடுக்குறதவிட எனக்கு அதிகமா தான் வேணும்..வேணும்ன்னு.. இப்போ அவர் செம்மையா வாங்குறாரு... நீ சும்மா நிக்குற?” என சொல்லிக்கொண்டே அவர் எதிர்பாராத நேரத்தில் மூர்த்தியை நோக்கி வரதனை தள்ளிவிட்டான் கெளதம்.

இருவர் மீதும் மின்சாரம் பாய, பாட்டு போடாமலே ஆடிக்கொண்டிருந்தனர்.

“டேய் கெளதம்.. சாக்ஸ் போட்ருகியா இப்போ? அதை கலட்டி குடு” என ராம் சம்பந்தம் இல்லாமல் கேட்க, குழம்பியபடி அவன் கேட்டதை கொடுத்தான் கெளதம்.

கொடுத்த சாக்ஸ்சை சுருட்டி விஸ்வநாதன் வாயில் திணித்தான் ராம்.

“ஹாஹா... உலகத்துலேயே இதவிட பெரிய தண்டனை வேற ஏதும் இல்லடா சாமி...” என அந்த இக்கட்டான நேரத்திலும் சிரித்தான் சந்தோஷ்.

“அடப்பாவி... இப்படி ஒரு பிளான் இருக்குனு சொல்லிருந்தா அவசரப்பட்டு போன வாரம் துவைக்காம இருந்துருப்பேனே!!” என சலித்துக்கொண்டான் கெளதம்.

ராம், “நொவ் இட்ஸ் யுவர் டர்ன் மாமா....” என சொன்னவன் அவர் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி அவரை அசைய விடாமல் பிடித்தபடி, மீடியன் நெர்வ்வை கீறிவிட்டான். வலியில் அவர் துடிக்க, அடுத்த நரம்பை குரிப்பார்த்தவன் அவஸ்தையாய் உணர்ந்தான்.

அதற்குமேல் செய்ய விடாமல் ராமின் மனம் தடுக்க, தன்னையே நொந்தபடி அவரை விட்டு விலகி “கெளதம்? அவருக்கு பர்ஸ்ட் எய்ட் பண்ணு” என்றதோடு ஓய்ந்த உருவில் மைதிலி அருகில் அமர்ந்துக்கொண்டான்.
 
சிலநொடிகள் தன்னை சமன்படுத்தியபடி, “சந்தோஷ், மெயின் ஆப் பண்ணிட்டு, போன் பண்ணு” என்றான். நடப்பதை எல்லாம் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த மைதிலி, “எல்லாமே ப்ரீபிளான்டா நடக்குதுல்ல? நீ இப்போ குணமான மாதிரி எனக்கு தோனல! எதையுமே தெரிஞ்சுக்கமா இருந்துருக்கேன். உன்மேல ரொம்ப கோவமா இருக்கேன் ராம்.. யூ சீட்டடு மீ....” என வருத்தமாய் சொன்னாள் மையு.

அவளிடம் வெறும் புன்னகையை மட்டும் அவன் வீச, முகத்தை திருப்பிகொண்டாள் மையு.

“உன்னோட பெரிய வீக்னெஸ் நாந்தான் பேபி... இவ்ளோ நாள் நிதானமா இருந்த நீ எனக்கு ஒரு ஆபத்துன்னு வரப்போ சராசரி பொண்ண கலங்கி நின்ன.... நான் பார்த்தேன்...” என்றான் ராம். அவன் கைகளை இருக்க பற்றியபடி அவனின் தோள் சாய, அந்த நிலையை கெடுக்கவே அங்கு வந்தார் லக்ஷ்மி.

“ராம் தம்பி, கொஞ்சம் யோசிச்சு பாரு, இந்த அத்தே உன்னை சின்ன வயசுல இருந்து எப்படி எல்லாம் வளர்த்தேன்? உனக்கு அம்மா இல்லாத குறையே தெரியாம வச்சுருந்தேனே!! இடைப்பட்ட காலத்துல என் புருஷன்னு சொல்லிக்கிட்டு வந்த இந்த நாதாரி தான் என் மனச கெடுத்துடுச்சு... இல்லனா நான் ரொம்ப நல்லவ ராம். ரிஷிக்கு இனி ஒரு நல்லா அம்மாவா, நம்ம... இல்ல இல்ல உங்க வீட்ல ஒரு வேலைக்காரியா இருந்துட்டு போறேனே!!” என அவனை தாஜா செய்ய முயன்றார் லக்ஷ்மி.

ஒரு பெருமூச்சுடன் அவரை ஏறிட்டவன், “நீங்க சொல்றதும் சரிதான் அத்தே... இருந்தாலும் நீங்க பண்ணதெல்லாம் தப்பு தானே? என் அம்மாவை கொன்னுட்டீங்களே!” என்றான்.

“அதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன் தம்பி..” என அவசர உறுதி கொடுத்தார் லக்ஷ்மி.

“ஹ்ம்ம்.... என்ன இருந்தாலும் நீங்க என்னோட அத்தே... அதுக்காக தண்டனை குடுக்காமலும் இருக்க முடில...” என பலமாய் யோசித்தவனின் முகத்தையே நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் லக்ஷ்மி.

“சரிங்க அத்தே!! உங்களுக்கு ஈசியா தரேன்... இந்த மாடி இருக்குல்ல? அதை ஒரு நிமிஷத்துல இருபது முறை ஏறி இறங்கணும்... சரியா செஞ்சுட்டா விட்டுடுறேன்...” என அவன் சொன்னதும் குஷியாகிவிட, “ப்பூ... இவ்ளோதானா? ஒரே ஓட்டமா முடிச்சுடுறேன்...” என சொல்லிவிட்டு புடவையை இழுத்து சொருவிக்கொண்டு படிக்கட்டுகளை நோக்கி சென்றார் லக்ஷ்மி.

செல்லும் அவரையே வெறித்த ராமை கண்ட மைதிலி, “ராம்? வேணாம் ராம்... விட்டுடலாம்...” என்றாள்.

அவளை கொஞ்சமும் பொருட்படுத்தாது, அங்கு ஓரமாய் கிடந்த ஜல்லிகற்க்களை கையில் அள்ளினான் ராம்.

ஒரு நிமிடத்தில் இருபது முறை ஏறி இறங்க வேண்டும் என்ற முனைப்பில் வயதையும் மறந்து அவர் படிக்கட்டுகளில் துள்ளி ஓடிக்கொண்டிருக்க, படிக்கட்டுகளின் உச்சத்திற்கு சென்று, போன வேகத்தில் அவர் இறங்க எத்தனிக்க, அந்நேரம் சரியாய் தன் கைகளில் இருந்த கற்களை தூக்கி வீசினான் ராம் படிக்கட்டுகளில்.

வேகமாய் இறங்கிய அவர் காலில் கற்கள் பட, நிலைதடுமாறியவர் சிமெண்ட் பூசப்படாத அப்படிக்கட்டுகளில் உருண்டு விழத்தொடங்கினார்.

அவர் அவ்வாறு விழுவதை கண்ட ராமிற்கு, நிறைமாத கர்பிணியாய் தன் அன்னை அன்று விழுந்தது காட்சியாய் தோன்றியது.

விழுந்த வேகத்தில் அவர் இடுப்பு பகுதி பலமாகவும், தலையில் சிறிதும் அடிபட, மயங்கி சரிந்தார்.

சுற்றிலும் பார்த்த ராமிற்கு, மனது வலித்தது. விஸ்வநாதன் வலியில் அலட்ற, லக்ஷ்மி, மூர்த்தி, வரதன் அங்கங்கே மயக்கத்தில் கிடந்தனர். நானா இப்படி? செய்தது சரிதானா இல்லையா? என தெரியாமல் வேதனையில் முகம் சுருங்கியது.

“ஹே என்னடா...” என கெளதம் அவன் தோள் தொட்டதும், “தப்பு பண்ணிட்டேனாடா?” என மனம் சுணங்கினான் ராம்.

“உன் மனசாட்சிபடி செஞ்சுருக்க, இதுல சரி தப்புன்னு ஒன்னும் இல்லை. திருந்துன ஜென்மமா இருந்தா கூட பரவல்ல... இதுங்க பிறவி குணம் எப்பவும் போகாது... இப்போ நீ மன்னிச்சு விட்டுருந்தாலும் அடுத்து நம்மள எப்படி கொல்லலாம்ன்னுதான் திட்டம் போடுங்க. விடுடா...” என கெளதம் சமாதானம் செய்துகொண்டிருந்த போது, அந்த இடத்தின் பின்பக்கமாக புதியதாய் போட்டிருந்த இரும்பு ஷட்டரின் பூட்டு துப்பாக்கி குண்டால் உடைப்பட, சட்டென திறந்தது.

அந்த நடுநிசி நேரத்தில் திடிரென கேட்ட அச்சத்தம் தூக்கிவாரி போட, சத்தம் வந்த இடத்தை பார்த்தனர். அங்கு கிளம்பிய தூசி புகைக்கு நடுவே இடப்பக்க வானை வெறித்தபடி, அந்த இரவு நேரத்திலும் கூலர்ஸ் போட்டுக்கொண்டு இடுப்பில் ஸ்டைலாய் கைவைத்துக்கொண்டு நின்றான் ஒருவன்.

அவனை கண்டு ராம் ‘இவனா’ என அமைதியாய் சென்று அமர்ந்துவிட, மைதிலி குழப்பத்துடனும், கெளதம் எரிச்சலுடனும் இருந்தனர்.

அப்போது முன்பக்கத்திலிருந்து உள்ளே வந்த சந்தோஷ், அந்த புதியவனை நோக்கி, “நீங்க இப்டி வந்துடீங்களா? நான் வெளில தேடிட்டு இருந்தேன்” என்றான்.

ஒன்றும் புரியாத கெளதம், “யாருடா இது புது கோமாளி?” என்றான் சந்தோஷிடம்.

“உஸ்ஸ்.. அப்படீல்லாம் பேசக்கூடாது....” என சொல்லிவிட்டு ராமிடம், “எல்லாம் ரெடி ராம்..” என்றான்.

வந்த புதியவனோ நிற்கும் போஸில் இருந்து மாறாமல் அப்படியே இருக்க, “யோவ்..!! முன்வாசல், சைடுவாசல்ன்னு எல்லாம் தொறந்து தானே இருக்கு. பின்ன என்ன இதுக்கு நீ இருந்த ஒரு ஷட்டர்ரையும் உடச்சுட்டு வர??” என என அவனை நோக்கி கத்தினான், கோவமாய்.

அவன் அப்படி கேட்டதும் அங்கிருந்து அடி மேல் அடி வைத்து பொறுமையாய் உள்ளே நுழைந்தவனின் முழு உருவமும் அப்போது தான் தெளிவாய் தெரிய வாயை மூடிக்கொண்டான் கௌதம். காக்கி சீருடையில் தோள்பட்டையில் இரண்டு நட்சத்திரங்களை தாங்கி நிற்பனை இனி எதிர்த்து பேச முடியுமா?

அவர்கள் முன் வந்து நின்ற புதியவன், கூலர்ஸ்சை கழட்டிவிட்டு, “அவங்க ஆட்டையபோட்டது ராம் சொத்து; போலீஸ் இப்படி வந்தாதான் கெத்து...” என்றான் ராகமாய்.

அவன் திடீர் அடுக்குமொழியில், “ஹான்?” என முழித்தனர்.

அவர்களை பொருட்படுத்தாது, “திருச்சில இருக்கு கல்லணை; இங்க என்னதாண்டா பிரச்சனை?” என்றான் மீண்டும்.

‘ட்ராமா போலீஸ்சோ?’ என நினைத்து, சந்தோஷும் கௌதமும் நிற்க, அவர்கள் பதில் சொல்லாததை கண்டு, கண்ணை சுழற்றியவன், ராம் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அங்கே சென்றான் ஆர்வமாய்.

“கீழ கடக்குது நைஃப்பு(knife); இதுதானா உன்னோட வைஃப்பு....” என்றான்.

மைதிலி விளங்காத பாவத்துடன் ராமை பார்க்க, “பயப்படாத!! இவன் என் ஸ்கூல் பிரண்டு. இப்போ அசிஸ்டென்ட் கமிஷனர்ரா இருக்கான். விஸ்வநாதனை பார்க்க நீ ஹாஸ்பிடல் போனபோ சந்தோஷ, இவனை பார்த்து நம்ம ப்ரோப்ளம் எல்லாத்தையும் சொல்லி, நான் கேக்குறப்போ ஹெல்ப் பண்ணனும்னு சொல்ல சொன்னேன். இப்போ இவனை நாந்தான் போன் செஞ்சு வர வச்சேன்...! அண்ட் அவனுக்கு எதுவா இருந்தாலும் அதை பஞ்ச்-சா சொல்லிதான் பழக்கம்!” என அவன் சொன்னதும் ராமை முறைத்தாள் மைதிலி.

“நம்ம பேசி தீர்க்க வேண்டியது நிறைய இருக்கு...” என ஒரு மார்க்கமாய் சொன்னவள், “இதெல்லாம் முதல்ல முடி..” என்றதோடு திரும்பிக்கொண்டாள்.

“மச்சி அன்னைக்கு நான் போன்ல சொன்னது தான்டா... இவங்களுக்கு எதிரா எல்லா ஆதாரமும் டாகுமென்ட்டா இருக்கு... நாளைக்கு சந்தோஷ் ஸ்டேஷனுக்கு வந்து கொடுப்பான். அப்பறம் இவங்க வாய்வழி வாக்குமூலம் வேணும்ன்னு கேட்டியே...? ஒரு நிமிஷம் இரு...” என சொல்லிவிட்டு, “மையு பேபி....? உன் செயின் கலட்டி குடு...” என்றான்.

“இது பாமிலி செயின் தானே!! இது எதுக்கு??” என்றாள் மைதிலி.

“செயின் டாலர்ல ஸ்பை காம் வச்சுருக்கேன். இவ்ளோ நேரம் நடந்ததெல்லாம் ரெகார்ட் ஆகிருக்கும். ப்ரூப் கொடுக்கணும்ல? அதுக்கு தான் கேக்குறேன்...” என்றான் ராம்.

“அடப்பாவி!!! இது எப்போ?” என வாயை பிளந்தான் கெளதம்.

ராமை முந்திக்கொண்டு, “டீக்கடைல இருக்கும் போண்டா..; இந்த ஐடியாவ கொடுத்தது நான்டா..” என்றான் புதியவன்.

“உன் பிரண்ட்ஸ் எல்லாருமே லூசு தானா?” என ராமின் காது கடித்தாள் மைதிலி.

“ஆஆஆ....!!” என பொறுமையின்றி கெளதம் கத்த, “உன்னையே மிஞ்ச ஒருத்தன் வந்துட்டாண்டா....” என சொல்லிவிட்டு வாய்பொத்தி சிரித்தான் சந்தோஷ்.

“ஆனா ராம், இதுல நீ செஞ்சது கூட ரெகார்ட் ஆகிருக்கும்ல?” என மைதிலி சந்தேகிக்க, “அட ஆமா பேபி...” என யோசித்தவன், “சரிடா.. நான் எல்லா ப்ரூப்-ம் நாளைக்கு காலைல ஸ்டேஷன் வந்து கம்ப்ளைன்ட் கொடுகுறப்போ சேர்த்து கொடுக்குறேன்...” என்றான் ராம்.

அதற்க்கு அவன் தலை ஆட்டிவிட்டு, “நைட்ல சாப்புடாத பரோட்டா..; என் வேலை முடிஞ்சுது வரட்டா!!” என்றான்.

“டேய் இவங்களை எல்லாம் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணுடா... நாங்க கிளம்புறோம்...” என்றான் ராம்.

“வீட்ல இருக்கும் டைன்னிங் டேபிள்... இவங்களை அள்ளிகிட்டு போவாங்க கான்ஸ்டபில்” என அவன் சொல்ல தொடங்கியதுமே, “ ராம்? போலாம் எந்திரி ராம்.... ப்ளீஸ் ப்ளீஸ்...” என்றாள் மைதிலி.

“ஹாஹா... டேய்.. எல்லாம் பார்த்துக்கோ. நான் சொன்னமாறி கேஸ் எழுது. காலைல ஸ்டேஷன் வரேன்... சரியா?” என்று ராம் கிளம்ப, மைதிலி எழுந்துக்கொள்லாமல் இருப்பதை கண்டு, புருவம் தூக்கினான் அவன்.

“நீ சொல்றவரைக்கும் எழுந்துக்க கூடாதுன்னு சொன்னியே ராம்?” என்றாள் அப்பாவியாய்.

“அடஅடஅட... இப்போ எழுந்துரிங்க பொண்டாட்டி.. போலாம்...!!!” என அவளை அழைத்துக்கொண்டு சென்றான் ராம்.

சென்றவன் ஒரு நொடி நின்று, தன் முன்னாள் சொந்தங்களை வலியுடன் பார்த்துவிட்டு, “சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ...” என்று சொல்லி நகர்ந்தான்.

அவர்கள் பின்னோடு சந்தோஷ் செல்ல, கெளதம் மட்டும் சற்று பின்தங்கி, விரைப்பாய் நின்ற அந்த புதியவனிடம், “இவ்ளோ வசனம் பேசுனியே!! உன் பேரு என்னனு சொன்னியா??” என்றான்.

“காதல் பட நடிகை சந்தியா; என்னோட பேரு.......” அவன் சொல்லிமுடிப்பதற்குள்

“யப்பா டேய்.. ஆள விடு... எனக்கே விபூதி அடிச்சுடுவ போல...” என கும்புடுபோட்டபடி தெறித்து ஓடினான் கெளதம்.

ரிஷி காரில் உறங்கி இருக்க, ராம் காரை ஓட்டிக்கொண்டு தங்கள் வீட்டிற்க்கு சென்றான்.

சூரியன் உதிக்க சில நிமிடங்களே எஞ்சி இருக்க, இருந்த களைப்பில் அறைக்கு கூட செல்லாது சோபாவிலேயே படுத்து உறங்கினர் சந்தோஷும் கௌதமும்.

“உன்கிட்ட பேசணும்.. ரூம்க்கு வா...” என மைதிலி சொல்ல, “ரிஷி தனியா இருப்பான்.. நம்ம நாளைக்கு பேசுவோம்... ஹீஹீ... நல்லா தூங்கு பேபி.....” என சொல்லிவிட்டு அவளிடம் மாட்டாமல் ரிஷி அறையில் அடைக்கலமானான் ராம்.

“நாளைக்கு மாட்டாமையா போவ!!! அப்போ இருக்கு... இவ்ளோ நாளா என்னை ஏமாத்தி....?? கூட்டு களவாணித்தனம் வேற...!!!” என மைதிலி நடு ஹாலில் நின்று கத்த, அவள் குரல் கேட்டாலும் அசையாது உறங்குவதை போல நடித்தனர் அனைவரும்.

-தொடரும்...
 
சூப்பர் சூப்பர்
ரொம்ப ரொம்ப ஜாலியான
அப்டேட்
நான் நல்லா சிரிச்சு சிரிச்சு
படிச்சேன், பிரியா டியர்
 
Last edited:

Super sis semA
 
Advertisement

Top