Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-28

Advertisement

kavipritha

Well-known member
Member
நன்றி! நன்றி! அனைவருக்கும் நன்றி!
மல்லி சிஸ்க்கு முதல் தேங்க்ஸ்...
அப்புறம், தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ்... முழுவதுமாக உங்களின் கரு்த்துகளை எதிர்பார்க்கிறேன் ப்பா.. எப்படி இருந்தது சொல்லுங்க.. ஒரு கம்ப்லிட் பீல் கொடுத்ததா சொல்லுங்க... எபிலாக் இருக்கு.. கண்டிப்பா ரெண்டுநாளில் தருகிறேன்.
வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் சொல்லுங்க...



:)
 
:love::love::love:

லிங்கு எங்க போவான்??? வீட்டுக்கு தானே வருவான்னு இருந்துட்டா போல சக்தி :p:p:p அதான் சொல்லலை.....

பொண்ணு மாப்பிள்ளை கெமிஸ்ட்ரி விட இந்த மாமா மருமகன் கெமிஸ்ட்ரி இருக்கே :p:p:p
லதாவும் உள்ளே வந்தாச்சு மாமனார் துணையோடு......
சக்தி படிச்சி முடிப்பாளா இல்லையாப்பா லிங்கா???

ஒரே பொண்ணு கல்யாணம்...... அண்ணன்களுக்கு சொல்லனுமா??? ஜமாய் தான்....
என்ன தான் பேசினாலும் வீட்டை பிரியும் போது வரும் கண்ணீர் இருக்கே :cry::cry::cry::p

பிங்க் saree yellow saree எல்லாம் ரசிக்கவே விடலை லிங்கு மாமாவை....
பாவம் ரொம்ப வேலை குடுத்துட்டீங்க......

நல்ல இருந்துச்சு கவி....
waiting for epilogue........

சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
நீ கேட்க வேண்டுமோ
பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ
பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
ஒரு ராகம் ஒரு தாளம் இணைகூடும்போது கானம்தான்
ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம்........
 
Last edited:
???

சும்மா சும்மா லீவ் எடுத்தா.. HOD கொஞ்சுவாரா.. தகிக்கத்தான் தொடங்குவார்.. ?? சக்தி, நீ ஒருதடவை லிங்காவை மாமான்னு கூப்பிட்டு இருந்தா.. அவன் கோவம் குறைஞ்சிருக்கும்.. ?? கொஞ்சம் கம்மியா வளர்ந்து இருக்கலாம் நீங்க .. ??

ரெண்டு அண்ணன்களும் சேர்ந்து, காவ்யா கல்யாணத்தை ஜமாய்ச்சுட்டாங்க..??

லதாவுக்கும் ஒரு பொறுப்பை கொடுத்தாச்சு.. அதை அவங்க சிறப்பாவே செய்வாங்க.. ??

லிங்கா, உனக்கு சக்தி மேல பைத்தியம் முத்தி போச்சு.. உன் மாமனாருக்கு உன் மேல பைத்தியம்.. ??

இங்கு பாதைகளும்.. சென்று சேர வேண்டிய இடமும்.. நம்முடைய விருப்பம்தான்.. நம்பியவர்களை ஏமாற்றி உடன் வருபவர்களிடம் விரோதம் கொண்டு பயணிப்பதை விட .. லிங்கா போல கைகோர்த்து செல்வது நன்றாகத்தான் இருக்கும் போல.... ??

அழகான, அருமையான கதை...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கவி.. ??
Eagerly waiting for Epilogue...

 
Last edited:
ஹாய் கவி,
"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"
இந்த பாடல் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தை உங்களின் கதையில் காட்டி அந்த குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களையும் உங்க மயக்கும் எழுத்தால் ரசிக்க வச்சிட்டீங்க கவி.

அதிலும் லிங்கா... எந்த கட்டுத்தளைகளும் இன்றி தன் காதல்'ரசகுல்லா' ஒன்றே வாழ்க்கை என்ற மாயையில் அலைந்தவன், தன் தமையனின் தொழில் சூழ்நிலையும் அதைத் தொடர்ந்த அண்ணனின் முடிவையும் கண்டு தமையனுக்கு தோள்குடுக்கும் லிங்கா "தம்பியுடையான் படைக்கு அஞ்சான் " என்று நிரூபித்து விட்டான். அதைத்தொடர்ந்த அவன் முடிவுகளே கதையின் முடிச்சு. அந்த முடிச்சில் சிக்கி சிதறப்போறான்னு நினைத்தால் அதையும் தன் நேர்மை யின் துணை கொண்டு அழகாகவே கையாளுகிறான் அந்த ஆள்மயக்கி....இதில் மாமனாரும் மருமகனிடம் மயங்கிப்போனார் என்பது தான் நகைச்சுவையின் உச்சம்...

அதேபோல் கதைமுழுதும் இயல்பாக நடைபோட்ட இளா-லதா தம்பதியினரும் நம்மை கவரத்தவறவில்லை....

தாமு...பணமும், பதவியும் படைத்த மனிதருக்கு பாரம்பரியம் மிகுந்த மூர்த்தி அவர்களின் மேல் ஒரு மரியாதை. சான்ஸ் கிடைத்த போது தன் மகளை அந்த குடும்பத்தின் மருமகளாக்கி விடமுயற்சிப்பது, சாதாரணமாக ஒரு தகப்பனின் ஆசையே. அதையும் கடைசியில் அவர் எந்த ஒளிவுமறைவுமின்றி ஒத்துக்கொள்வது சபாஷ்.

மூர்த்தி...ஒரு தகப்பனாக மனதில் நின்று போனார்...
காமாட்சி அழகான, அன்பான, அருமையான மாமியார். குடும்பம் என்றால் என்ன? அதன் நெளிவுசுழிவுகள் என்னவென்று அழகாக தன் மருமகள்களுக்கு கற்பிக்கும் குடும்ப அமைப்பின் ஆணி வேர்.
நிறைய இடங்களில் குட்டிப்பாப்பாவையும் ரசிக்க வச்சீங்க கவி...

மொத்தத்தில் "ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே" என்ற பாடலை அடிக்கடி முணுமுணுக்க வைத்த கதை....

அப்புறம் கவியின் எழுத்தில் குறைன்னு சொன்னா...எழுத்துப்பிழையும்,Punctuation marks ஐ சரியாக கையாளாமையுமே....இது உங்கள் முதல் கதை இல்லை கவி. ஏற்கனவே உங்களின் மதுர எழுத்தில் எங்களை மயக்கும் கதைகள் நிறைய தந்திருக்கீங்க. அப்படி இருந்தும் இந்த குறைகளை களையாதது உங்களின் வாசகியாக எனக்கு வருத்தமே...
அப்புறம் இன்னொரு மிகப்பெரிய குறை என்னன்னா இந்த புள்ள சக்தி எங்க லிங்கா எவ்ளோ கெஞ்சி கேட்ட பின்னும் இந்த "மாமா " ன்னு அவனை இன்னும் கூப்பிடலை. அந்த குறையை எப்பிலாக் ல் சரி செய்திடுவீங்கன்னு நம்புகிறேன்.

அழகான இந்த கதைக்கு நன்றிகளும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகளையும் கூறிக்கொள்கிறேன் கவி.
நன்றி.
 
Last edited:
நிறைவான அழகான பதிவுக்கு நன்றி ...
Super entertaining story....
From the beginning to end the you created much curiosity...
Lovely characters with lots of realistic features and descriptions...
Admiring the portrayal of beautiful family....
அம்மா வை பேர் சொல்லி கூப்பிட்டு கொஞ்சும் அழகியல்....
எல்லா அம்மா க்களும் ரசித்து இருப்பாரகள்....
அண்ணன் அண்ணி குழந்தைகள் ...தங்கை...பாச பிணைப்பு எங்குமே விட்டு கொடுக்காமல்....total lovely family maintenance....
அண்ணனை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்பும் தம்பி....

திருமண பேரம் பேசிய தவறை நினைத்து தவிப்பது ...பின்னர் சரி செய்வது எல்லாம் சிறப்பு....

நிச்சயதார்த்தத்தில்.. கல்யாணத்திலும் கையை பிடித்து காட்சி விவரிப்புகள்
மனதை கொள்ளை கொண்டவை....
விரல் பாயாசம் ஊட்டி...செம score....
Extraordinary Narration on
Cute transformation of husband to lover ...
A wonderful feel good story in all aspects...
ரொம்ப turns twists இல்லாமல் நல்ல emotions casual realistic conversation ல் fabulous ஆ கதை நகர்ந்தது..
மறுபடியும் படிக்க ஆரம்பித்தால் எந்த episode யும் skip பண்ணாமல் படிக்கிற மாதிரி ஆன கதை.....
இது மட்டுமல்ல உங்கள் எல்லா story யும் அப்படி தான் இருக்கு...
Wonderful ...
Keep rocking dear...
Thanks for the amazing story...
வாழ்க வளமுடன்...
 
Last edited:
Top