Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வேய்ங்குழல் கானங்கள் 1

Advertisement

138

வேய்ங்குழல் கானங்கள் 1

மூஷிக வாகன மோதக ஹஸ்த
ச்சாமர கர்ண விளம்பித்த சூத்ர
வாமண ரூப மகேஸ்வரப் புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே!''



நந்த ஸ்ரீதரன் மனமுருக விநாயகர் துதி பாடிக்கொண்டு இருந்தார்.

சிவகங்கை மாவட்டம் ஆரவயல் ஊர்...

அந்த ஊரின் தேவகோட்டை செல்லும் சாலையிலிருந்து இரண்டாவது கிழக்கு வீதியில் நுழைந்தால் மூன்றாவது வீடு நந்த ஸ்ரீதரின் வீடு... அது வீடு என்று சொல்ல முடியாது. அந்த காலத்து செட்டிநாடு கட்டிட கலைக்கு எடுத்துகாட்டான மாளிகை என்று தான் சொல்ல வேண்டும்...

வீதியில் நின்று பார்த்தால் முக்கால் வீதியை அடைத்தது போல பிரம்மாண்டமாக தெரியும். இரண்டு கார் ஒன்றாக உள்ளே நுழையும் அளவு கொண்ட நுழைவாயில். உள்ளே சென்றால் முன்புற தோட்டம். அழகிய பல வண்ண பூஞ்செடிகள் அணிவகுத்து இருக்க சுற்று சுவர் ஓரங்களில் அடர்ந்த மலர்கள் பூக்கும் மரங்கள்.

சரக்கொன்றை, மருத மரம்,
செங்காந்தள் மரம் போன்ற மரங்கள் கொத்து கொத்தாக பூத்து அந்த தோட்டத்தை தன் நிறங்களால் அழகூட்டின. பன்னீர் மரம், செண்பக மரம், பவளமல்லி, மனோரஞ்சிதம் போன்ற மலர்கள் அந்த தோட்டம் முழுவதும் தன் சுகந்த மணத்தை பரப்பி நம்மை வேறு உலகத்துக்கு அழைத்து சென்றன.

இடையில் உள்ள இடங்களில் மல்லிகை, ஜாதி முல்லை, பன்னீர் ரோஜா என பல பூ செடிகள் சீரான இடைவெளியில் பாத்தி கட்டி நேர்த்தியாக இருந்தது பூந்தோட்டம்.

மாளிகையின் உள்ளே நுழையும் யாவரும் இந்த தோட்டத்தின் அழகையும், அதன் மகோன்னத நறுமணத்தையும் நின்று ஒரு நிமிடம் அனுபவித்துவிட்டுதான் செல்வார்கள்.

ஆங்காங்கே இருக்கும் கல் நற்காலிகளில் மேசைகளில் வீட்டினர் காலை மாலை வேளைகளில் அமர்ந்து அரட்டை அடிப்பர்...

இடது புறம் பத்து கார்கள் நிறுத்தும் அளவு தாராளமாக இடம் இருந்தது. தற்போழுது மூன்று கார்களும் மூன்று இருசக்கர வாகனங்களும் நின்று இருந்தது.

அடுத்து வீட்டின் முன் பகுதியான போர்ட்டிகோ விதானத்தை நான்கு பெரிய கலைநயம் மிக்க தூண்கள் தாங்கி நின்றன. வீட்டின் கம்பீரம் அதன் அமைப்பிலேயே தெரிந்தது. அங்கே நின்று நிமிர்ந்து தான் வீட்டின் வாயில் கதைவை காண முடியும். அத்தனை உயரம். கிட்ட தட்ட ஒரு ஆள் உயரத்தில் ஏற்றி கட்டி இருந்தார்கள். அங்கேயும் அலங்கார தூண்கள். பர்மா தேக்கில் செய்யபட்ட உறுதியான கதவுகளில் அன்றைய தச்சர்களின் கை வண்ணம் அழகோவியமாய் பூ வடிவங்கள். நிலையின் மேலே கடவுள் உருவங்கள். நடுநாயகமாக இருந்த லட்சுமி தேவி உருவம் சிந்தும் புன்னகை அவள் இந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்லியது.
முன்னே இறுபுறமும் வராண்டாவில் மர நாற்காலிகள் வரிசையாக இருந்தன.

படிஏறி கதவு முன் நின்றால் கடைசி கட்டின் பின் பக்க வாசல் வரை நேர்கோடாக துள்ளியமாக தெரிந்தது. அதுபோக செட்டிநாடு வீட்டிற்க்கே உரித்தான பெரிய நடு முற்றம் வீட்டினுள் காற்றோட்டத்தையும் வெளிச்சத்தையும் வாரி தந்தது.

முற்றத்தை சுற்றி சென்ற அகலமான வராண்டாவில் தரையில் கருப்பும் வெள்ளையுமாக க்ரானைட் கற்கள் பதிக்கபட்டு இருந்தன. வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது என்பதை அறிவுறுத்த இந்த அமைப்பு.
வாசல் கதவின் வலது மற்றும் இடது பக்க சுவர்களில் குடும்பத்தின் முன்னோர்களின் கம்பீரமான புகைபடங்கள் ஒரே வடிவ தேக்கு மர சட்டத்தில் இணைக்கப்பட்டு சீராக பொருத்தபட்டு இருந்தது. அது போக தேக்கு மர சோஃபா செட்கள்

வலது கோடியில் தான் பூஜை அறையின் முன் ஸ்ரீ தரன் அமர்ந்து தன் கனீர் குரலில் பிசிரில்லாமல் பூஜைக்காக துதி பாடல்களை பாடிக்கொண்டு இருந்தார். அவரை சுற்றி வீட்டினர் அமர்ந்து இருந்தனர்.

நந்த ஸ்ரீதரன் நல்ல உயரம், மாநிறம், வயது நாற்பத்தேழு. ஒழுக்கமான வாழ்வும் நேர்கொண்ட பழக்கங்களும் உற்சாக மனமும் இன்னும் ஐந்து வயது இளமையாகத்தான் காட்டியது. மாறாத கடவுள் பக்தியும் மனைவி மீது கொண்ட உண்மையான அன்பும் அவரின் முகத்தில் தேஜஸை கூட்டி இருந்தது. இன்று புல்லாங்குழல் இசைப்பதில் தேர்ந்த வித்வான்.

காலை நான்கு மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து ஐந்து மணிக்கு பூஜைக்கு அமர்ந்து விடுவர் ஸ்ரீதரனும் அவர் மனைவி வசுந்தராதேவியும். மற்றவர்கள் அவர்கள் விருப்பம் போல கலந்து கொள்வார்கள்.

இந்த காலை நேர பூஜை அங்கே விஷேஷமானது. ஸ்ரீதரன் பாடுவது மட்டும் அல்லாது குழல் இசைப்பார். தினமும் கடவுளை துதித்து ஒரு பாடலாவது இசைப்பார். அதை கேட்க வீட்டின் வேலையாட்கள் கூட கூடியிருப்பர்.

இதோ விநாயகர் துதி, சரஸ்வதி தேவி துதி பாடி முடித்து தன் வேய்ங்குழலை கையில் எடுத்துக்கொண்டார். இன்று என்ன பாடல் இசைக்க போகிறார்.

பூஜை அறை முழுவதும் வெள்ளை மார்பிள் கற்கள் பதிக்கபட்டு இருந்தது. அழகிய மயில் மற்றும் பூக்கள் அமைப்பில் செதுக்கபட்ட நீளமான மர மேஜையில் சாமி படங்கள் அடுக்க பட்டு இருக்க. முன்னே அறையின் நடுநயமாக மயிலிறகு சூடி கண்கள் மூடி புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணின் சிலை. அவன் இசையில் மயங்கி அவனருகே நிற்க்கும் ஆயர்பாடி பசு....

விடியலின் கீற்றுகள் வீட்டின் சாளரங்ள் வழியாக பூஜை அறையை தொட...அருணன் கதிர்கள் பட்டதும் கிருஷ்ண விக்ரகம் தங்கமென ஜொலிக்க அதை பார்த்த ஸ்ரீதரன் கண்ணனின் புன் சிரிப்பின் அழகில் திளைத்து மதுராஷ்டகம் இசைக்க ஆரம்பித்தார்.


மகாகுரு வல்லபாச்சார்யார் அருளிய மதுராஷ்டகம் கண்ணனை அவன் இனிமைகளை நினைத்து பாடியது.

அதரம் மதுரம் வதனம்_ மதுரம் நயனம் _மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்_ மதுராதிபதே ரகிலம் மதுரம்...


என புல்லாங்குழலில் ஸ்ரீதரன் வாசிக்க... பாடலின் இனிமையும் குழலின் இனிமையும் இணைந்து மதுராமாக நம் மனதினை நிறைத்து அந்த மதுரமான கண்ணனை நம் கண் முன் நிறுத்தியது.

எட்டு ஸ்லோகங்களை கொண்ட அந்த பாடலை வாசித்து ஸ்ரீதரன் வாசித்து முடித்ததும் கண் விழித்து கண்ணனை தரிசித்து விட்டு தன் மனைவி வசுந்த்ரா வை பார்த்தார். இன்றும் கானத்தின் தாக்கத்தால் லயத்து இருந்து வசுந்த்ரா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. பதறிய ஸ்ரீதர் மெதுவாக வசுந்த்ரா தோளை தொட்டு தன்னிலை திருப்பி என்ன என வினாவினர்

"ஒன்னும் இல்லைங்க. கடவுளை நேரில் காண முடியுமோ என்னமொ..ஆனால் தினமும் உங்கள் இசையால் என் மனக்கண் முன் நிறுத்தி விடுகிறீர்கள். இன்று கண்ணனை கண்ட ஆனந்தத்தில் கண்ணீர் வந்து விட்டது." என கூறி அழகாக புன்னகைத்தார் வசுந்த்ரா.

வசுந்திரா தேவி நாறுபதுகளின் ஆரம்பத்தில் இருந்தாள். ஐந்தரை அடி உயரம். வெளிர் கோதுமை நிறம். வட்ட முகம், பெரிய கண்கள். அழகான சாந்தமன முகம். ஸ்ரீதர் குடும்பத்தின் வீட்டையும் ஆஸ்திகளையும் கவனிப்பது வசுந்திரா தான். இத்தனை வருட அனுபவம் அவள் முகத்தில் கம்பீரத்தை கூட்டி இருந்தது. ஒருவரை பார்த்து வசுந்த்ரா இடும் கட்டளைகளை யாராலும் தட்ட முடியாது. கண்களில் கூர்மை கொண்டு பார்த்தாள் எதிரில் இருப்பவர் தானாக தவறை உளறிகொட்டி ஒப்புக்கொள்வார்கள்.

வசுந்த்ரா வின் பின் அமர்ந்து இருந்தாள் அவர்களது மூத்த புத்திரி சூர்ய ஹரிணி. வசுந்த்ரா வின் சிறு வயது பிரதிபலிப்பாக இருந்தாள்.இருபத்தி ஒரு வயது. அனைவரும் பூஜையில் ஆழ்ந்து இருக்க ஹரிணி மட்டும் அதில் கவனம் செலுத்தாமல் வாசலையே அடிக்கடி திரும்பி பார்த்துக்கொண்டு இருந்தாள். சற்று தூரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்த வடிவரசி... ஸ்ரீதரின் அம்மா...

"ஏன்டி, ஹரிணி சாமி கும்பிடாம எதுக்கு வாசலையே பாத்துட்டு இருக்க.... உன் தம்பிக வர இன்னும் நேரம் இருக்குடி..."

" ஆமா பாட்டி எப்பதான் வருவாங்க... சீக்கிரம் வரகூடாது..."

"மெதுவா வரட்டும் இப்ப என்ன அவசரம் உனக்கு. உன் தம்பிக வந்த பின்னாடி செய்ய ஏதோ திட்டம் போட்டு வச்சுருக்க போலயே."

ஹரிணி அழகாக குறும்பு கண்கள் மின்ன சிரித்தாள்.
ஆமாம் என தலைஅசைத்தாள்.

" சொன்னா கேட்க மாட்ட அம்மா மாதிரியே பிடிவாதம் அதிகம்... என்னவோ ஆனா பிரச்சனைய கூட்டாம செய்ங்க... வாலு கூட்டங்களா"
என வடிவரசி அமைதி ஆகிவிட்டார்.

ஹரிணிக்கு இரண்டு தம்பிகள் இரட்டையர்கள். ஹரிஹரசுதன் , ஹரி சுதர்சன்.

ஹரிஹரசுதன் மதுரை இசை கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கிறான். தந்தை போலவே இசையில் நாட்டம் கொண்டவன். ஹரிசுதர்சன் மதுரை தனியார் கல்லூரியில் இளங்கலை மேலான்மை படிப்பு மூன்றாம் வருடம் படிக்கிறான். இருவருமே ஸ்ரீதரனின் சாயல். அவரைபோலவே நல்ல உயரம். இருவருக்குமே இன்னும் ஆறு மாதத்தில் படிப்பு முடிய இருந்தது.

தன் தம்பிகளை எதிர்பார்த்து ஹரிணி இருக்க பூஜை முடிந்து அனைவரும் சாப்பிட செல்ல ஹரிணி வெளியே வந்து வராண்டாவில் அமர்ந்து கொண்டாள்.

அவளை அதிக நேரம் சோதிக்காமல் அவள் தம்பிகள் கல்லூரி விடுமுறையை கழிக்க வந்து சொந்த ஊருக்கு திரும்பினர். வந்ததும் தங்களுக்காக காத்திருக்கும் தமக்கயை கண்டதும் குதூகலமாக ஓடி வந்தனர். வந்த தம்பிகளை தலையில் குட்டி வரவேற்றாள்.

"எத்தனை நேரம் டா பாத்துட்டு இருக்கறது.போன் பண்ணாலும் எடுக்கலை. காலைல முதல் பஸ்ல கிளம்பி வரேன்னு சொன்னீங்கல்ல... என்ன பண்ணீங்க."

"பஸ்காரன் மெதுவா ஓட்டிட்டு வந்ததுக்கு எங்களை ஏதுக்கு மண்டைல கொட்டுற."

"சரி சரி பொழைச்சு போங்க.. சீக்கரம் சாப்பிட்டு ரெடி ஆகுங்க... நாம ஒரு இடத்திற்கு போகனும். "

" எங்க ஹரிணி... " இருவரும் கோரஸாக ஆவலுடன் கேட்க...

கண்கள் சிமிட்டி உதட்டில் கை வைத்து சஸ்பென்ஸ் என்றவள்... அதற்க்கு மேல் நிற்காமல் அவர்களை வீட்டிற்க்குள் தள்ளி கொண்டு சென்றாள். இவர்களுக்காக ஸ்ரீதரனும் வசுந்த்ராவும் கூட சாப்பிடாமல் காத்து இருந்தனர்.

மகன்களை கண்டதும் மகிழ்ச்சி பொங்க சிறிது நேரம் நலம் விசாரிப்புகள். சந்தோஷ கூச்சல் அங்கே. முடிந்ததும் சகோதரகர்கள் இருவரும் ஃப்ரெஸ் ஆகிவிட்டு சாப்பிட வர குடும்பமாக காலை சாப்பாடு முடித்தவர்களை கையோடு இழுத்துக்கொண்டு தங்களை வயல்புறம் இருக்கும் தோட்ட வீட்டிற்க்கு அழைத்து சென்றாள் ஹரிணி...

ஸ்ரீதரன் அன்றைக்கு புக் ஆகி இருந்த ஒரு கச்சேரிக்கு செல்ல வசுந்த்ரா தன் அலுவல்களை கவனிக்க சென்றார்.

தோட்ட வீடும் செழுமையுடனும் தேக்கு மர அலங்காரங்களுடன் இழைத்து இழைத்து இந்த காலத்திற்கு ஏற்ப கட்ட பட்டு இருந்தது. ஸ்ரீதரனின் கொள்ளு தாத்தா அந்த காலத்தில் கடல்கடந்து பர்மா சென்று வாணிபம் செய்தவர். அப்பொழுது கட்டியதுதான் மாளிகை வீடு. அந்த வீட்டில் வாரிசுகளுக்கு பங்கு இருந்த போதும் யாரும் பிரிக்கவில்லை. காலம் ஆக ஆக எல்லாரும் படிப்புக்கு ஏற்ற வேலை என வெளியூர் வெளிநாடு என புலம் பெயர்ந்து விட அங்கே தற்போது இருப்பது. ஸ்ரீதரனின் குடும்பம். அவரின் சித்தப்பா வாரிசுகள் இரண்டு பேர். மற்றும் ஒன்று விட்ட அத்தை குடும்பம் ஒன்று.
எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தாலும் நிலபுலன்கள் தொழில்கள் வேறு வேறு. அனைவருக்கும் அவர்அவர் வசதிக்கு ஏற்ப வேறு இடங்களில் இதுமாதிரி தனிவீடுகளும் உண்டு.

எல்லாரும் விஷேசம்கள் எல்லாம் பொதுவான மாளிகை வீட்டில்தான் நடத்துவார்கள்.

ஸ்ரீதரன் குடும்பத்தினரும் இந்த மாதிரி விடுமுறை தினங்கள், கேளிக்கை பொழுதுகள் என இங்கே தனிவீட்டிற்க்கு வந்து போவதும் உண்டு. மிக முக்கியாமான விஷயங்கள் பேசும் போதும் தனிமை வேண்டி இங்கே வருவதும் உண்டு.

தன் சகோதரர்களை தோட்ட வீட்டிற்க்கு அழைத்து வந்த ஹரிணி இருவருக்கும் கண்ணை கட்டி உள்ளே அழைத்து சென்றாள். கீழே ஒரு அறையில் சென்று ஹரிசுதர்சன் கண் கட்டை அவிழ்த்தவள் அறையை காட்டினாள். சகல வசதிகளும் கூடிய அலுவலக அறைக்கு ஏற்றதாக அது இருந்தது. அதில் மேஜையில் அவன் படிப்பு முடித்து தொழில் ஆரம்பிக்க ஏதுவாக செய்பட்ட மில்லின் திட்ட மாதிரிகள் அதற்கான அவன்பெயரில் ஏற்பாடு தயார்செய்யபட்ட பத்திரதாள்கள் இருந்தன்.

சுதர்சன் முகபாவனை இதை சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை காட்டியது. மகிழ்ச்சியில் வாயடைத்து நின்றான்.

இன்னு கண்கட்டபட்ட நிலையில் இருந்த ஹரியோ அமைதியில் என்ன நடக்கறது புரியாமல் தன் சகோதரனிடம் வினவினான்.

"டேய் என்னடா பண்ற.. கண்ணை கட்டி காட்டில விட்ட மாதிரி இருக்கு. யாராவது பேசுங்க"

அவன் பேசுவதை உணரும் நிலையில் கூட இல்லாமல் சுதர்சன் அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

இவனுக்கு அதிர்ச்சி தீரட்டும் என மற்றவனை கை பிடித்து மாடி அறைக்கு அழைத்து சென்றாள் ஹரிணி. அங்கே சென்று ஹரியின் கண்கட்டினை அவிழ்த்து விட்டாள். அவனுக்கும் இன்ப அதிர்ச்சி.

பெரிய சவுண்ட் ப்ரூஃப் ரூமில் அவன் ம்யூசிக் ப்ராக்டீஸ் செய்ய தேவையான அனைத்து உபகரணங்களுடன்.

ஹரியை தனியே விட்டுவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். சிறிது நேரத்தில் தமக்கயை அடைந்ந இருவரும் சந்தோஷத்தின் உச்சத்தில் என்ன செய்வது என தெரியாமல் இருபுறமும் இருவரும் கட்டிகொண்டு முத்தமழை பொழிந்தனர்.


"அடேய் அடேய் போதும் விடுங்கடா... விட்ட கன்னத்தை தனியா பிச்சுடுவீங்க போல"

ஹரி" இதை எல்லாம் எப்ப ப்ளான் பண்ண ஹரிணி. நிஜமா எதிர்பாக்கலை... நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா. சுதர்சா உனக்கு என்ன சர்ப்ரைஸ்..."

சுதர்சன் " டேய் எனக்கு இன்னுமே நம்ப முடியல. உன்னை ஒருமுறை கிள்ளி பாத்துக்கறேன்.". என ஹரியை பிடித்து கிள்ள அவன் ஆஆஆ வென கத்தி கொண்டே அவன் அறைக்கு சென்று பார்க்க வியந்தான்.

இருவரும் நன்றி பெருக்குடன் தன் அக்காவை பார்க்க...

" ஹரி இதெல்லாம் அம்மா அப்பா ஏற்பாடுதான். நான் சும்மா ரெடி பண்ணேன் அவ்ளொதான். உங்க எதிர்காலத்துல எப்பவும் எந்த சிக்கலும் இருக்க கூடாது." என பாசகார அக்காவாக தம்பிகள் தலையில் கை வைத்து வாழ்த்தினாள்.

தன் வாழ்க்கையிலேயே ஒரு பெரிய புயல் வீச போவது அறியாமல்...
 
Last edited:
உங்களுடைய "வேய்ங்குழல்
கானங்கள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நாகரத்ன கிருத்திகா டியர்
 
Last edited:

Advertisement

Top