Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 14

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
heyyyyyyyyyyyyy dearsssssssss...thanks much...:love::love::love::love::love::love::love:

---------------------------------------------------------------------------------
காதல் 14:

அடுத்த தினம் அழகாய் விடிய, ராஜாவுக்கு மிகவும் அழகாய் விடிந்தது. பின்னே இல்லையா… அவனுக்கென்று ஒருத்தி அவனுக்கானவள்.. அவனானவள்… அவனவள்… அவள் அருகாமை தந்த திருப்தி..! அவள் வாசம் தந்த சுவாசம்..! அதை ஆழ்ந்து அனுபவித்து என்று அவன் நிம்மதியாக உறங்கி எழுந்தான்.

குளித்து விட்டு பனியனும் ட்ராக் சூட்டுமாய் மனைவியைத் தேட
அவள் கிச்சனில் சமையல் செய்து கொண்டிருந்தாள். அவளைப் பின்னோடு அணைத்தவன் ,

“மதும்மா… என்னடா.. சீக்கிரமா எழுந்திட்ட…. பாவம்… நீ நைட்லாம் தூங்கல…. நானே சமைச்சிருப்பேன்ல… என்னை ஏன் எழுப்பல…” எனத் தாங்கலாகக் கேட்க

“நீங்களே நல்லா தூங்கினீங்க… எப்படி எழுப்பறதாம்..? டெய்லி நீங்களே சமைப்பீங்களா….என்ன..? நானும் நல்லாதான் சமைப்பேன்..” எனச் சொல்ல

அவளை மேலும் இறுக அணைத்தவன், “எஸ் மது நல்லா தூங்கினேன்… ரொம்ப நல்லா தூங்கினேன் நான்…. நீ எனக்காக இருக்க… எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குன்னு நிம்மதில தூங்கினேன்..” என்றான் குரலிலும் நிம்மதியும் அமைதியும் இழையோட.

“சரி..சரி…தள்ளுங்க…நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என நகரப் போக,

“என் ராணி இப்படி கஷ்டப்படக் கூடாது…. நீ உட்கார.. நான் செர்வ் செய்றேன்…” எனச் சொல்ல

அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ,
“என் ராஜாவுக்கு நான் செய்யக் கூடாதா என்ன..?” என மையலோடு கேட்க

“மது….. நைட் தான் தூங்கல.. பகல்ல நீ ரெஸ்ட் எடுக்கனும்னு நான் நினைக்கிறேன்…. நீங்க என்ன நினைக்கிறீங்க மேடம்..” எனப் புருவம் உயர்த்திக் கிண்டலாகக் கேட்க

“அய்யே..போதும் போங்க…” என அவள் நகர்ந்து விட

“பாடல் தீர்ந்த
போன பின்னும்
மௌனம் கூட தீர்ந்த பின்னும்
கோடி முத்தம் வைத்த பின்னும்
போதவில்லையே போதவில்லையே
உன்னைப் போல போதை ஏதுமில்லையே..”

என்று அவன் பாட

“பசிக்குதுப்பா.. வாங்க..” என்றதும் அவனும் வம்பு செய்யாமல் சாப்பிட அமர்ந்தான்.

அவள் செய்திருந்த காரச்சட்னியும் இட்லியும் சாப்பிட்டுப் பார்த்தவன் ,

“சூப்பர்டா மது… செம…. உன் கைப்பக்குவத்தை அடிச்சிக்க ஆளே இல்ல..” என வேகமாய் சொல்ல

“ஆஹான்…நிஜமாவா..?”

“ஹே..! நிஜமா தான் டி…. ம்ம்ம்.. உனக்குத் தெரியுமா மது…. ஆத்தா கூட சொல்வாங்க இப்ப உன் அம்மா சாப்பாட்டை சொல்ற.. நாளைக்கு உனக்கு ஒருத்தி வந்தா உங்கப்பன் மாதிரி மாத்திப் பேசுவேன்னு…ம்ம்..” என்று இயல்பாக பேசியவனின் முகம் ஒரு நொடி புன்னகையில் உறைந்தாலும் அடுத்த நொடியே சொன்ன செய்தி உரைத்து அமைதியானான். கடந்துச் சென்ற நாட்களும் காய்ந்துப் போன தழும்புகளும் ரணங்களும் நினைவில் வர அப்படியே உணவை வெறித்தான்.

இத்தனை நாள் அவன் தனிமனிதன். ரகுவிடம் கூட அவனால் அனைத்தையும் மனம் திறந்துப் பேச முடியாது. ஆனால் மதுரவசனி அவன் மனைவியாயிற்றே.. அவளிடம் அவனுக்கு மறைக்க என்னவிருக்கிறது..? இயல்பாக மிக மிக இயல்பாக உரையாடி விட்டு அதன்பிறகே அவனுக்கு அனைத்தும் புரிந்தது.

மதுவோ அவனின் தோளில் தொட்டு, “இம்புட்டு பாசம் இருக்கவருக்கு அப்படி என்ன வெட்டிப் பந்தா…. அம்மா அப்பா கிட்ட கௌரவம்லாம் பார்க்க கூடாது…”என்றாள்.

அவனோ அவளை இழுத்துத் தன் மடியில் அமரவைத்து ,
“மனைவியை நேசிக்கிறவங்க ப்ரஸ்டீஜ் எப்படி வேண்டாம்னு சொல்வாங்க..?” என அவள் காதில் உரச

அவனின் செயலில் கிறங்கி மயங்கினாலும், அவன் பேச்சை மாற்றுவதை உணர்ந்தவள் அப்படியே அந்த பேச்சை விட்டாள்.

அவன் அனுபவித்த வலிகள் அதிகம்.. அடையாளமாய் இருந்த அனைத்தும் ஒரு நாள் அடையாளமின்றிப் போவதும் அதை அனுபவித்தவனுக்குமே அடையாளம் என்பது அற்றுப்போனதும் கொடுமை தானே… உறவு போய் உரிமை போய் அனைத்தும் போய் நிர்கதியாய் அவன் நின்ற நிலையைக் கற்பனை செய்துப் பார்த்தாலுமே அவள் தேகம் சிலிர்க்கிறதே… அதை அனுபவித்தவனுக்கு எப்படி இருக்கும்.. காலம் மாற்றும் அவனை என்று நம்பினாள். அவனுக்குக் பாசமும் அதிகம் ரோஷமும் அதிகம்.. காலம் மாற்றாவிட்டாலும் அவள் காதல் மாற்ற வேண்டும் என்று முடிவுச் செய்து கொண்டாள்.

நந்தன் சீக்கிரமாக உண்டவன் மனைவியையும் சாப்பிட வைத்து,அடர் நீல நிற முழுக்கை சட்டையும் மெட்டாலிக் ப்ளூவில் ப்ளேசரும் அணிந்து வர அவனை மையல் கொண்ட விழிகளோடு அவள் நோக்க,அவனும் அவளை ஆழ்ந்து பார்க்க அதன் வீச்சு தாங்க முடியாவிட்டாலும் அவனை திமிராய்ப் பார்த்து வைக்க,

அருகில் வந்து அவள் முகம் நோக்கியவன்,

“என்ன பொண்டாட்டி நான் ஹேண்ட்சமா…? நீ ரொம்ப சாஃப்ட்னு நினைச்சா சைட் அடிக்கிற… கேடி தான் நீ..?” எனச் சொல்ல

“அய்யே அப்படியே அடிச்சிட்டாலும்.. அதெல்லாம் உங்களை நான் பார்க்கல… டெய்லி தான் பார்க்கிறேனே..” என்று கெத்தாகச் சொல்ல

“அப்ப நீ எங்கிட்ட மயங்கல…”

“மயங்கல..”

“நிஜமா..?”

“நிஜமா..”

“அப்போ நான் டெஸ்ட் பண்ணிக்கிறேன்..” என்ற ராஜா அவள் அருகில் வர,
அவன் அருகில் வரப் பின் வாங்கியவள்,

“என்னை டச் பண்ணக்கூடாது..” என்றாள் அழுத்தமாக.

“டச் பண்ண மாட்டேன்..” என்றான் அவளை விட அழுத்தமாய்.

அடுத்து அவன் செய்த செயலில் மூச்சைடைத்துப் போனது. அவளை நெருங்கி நின்றாலும் அவன் மேனி அவளை உரசவில்லை மாறாக அவன் மூச்சுக்காற்றை அவள் முகத்தில் ஊத அதைத் தாங்க முடியாதவள் அப்படியே சிலையென சமைந்து நிற்க,

அவன் மேலும் அவள் மேனியில் ஊத, அவன் மூச்சுக் காற்றில் சிலிர்த்தவள், அவனைக் கைவைத்துத் தள்ளி விட்டு,

“மயங்கிட்டேன் போதுமா…. இம்சை பண்ணாதீங்க…” என்றாள் நாணத்தோடு.

“அப்படி வா வழிக்கு…” என்றவன் சோபாவில் அமர்ந்து ஷூவைப் போட்டுக் கொண்டு ,

“மது.. இன்னிக்கு உன்னைத் தனியா விட்டுப் போக மனசில்ல.. ஆனா கொடுத்த வாக்கைக் காப்பாத்துனும் இல்ல.. ஏற்கனவே ஃபிக்ஸ் ஆன ரெகார்டிங்.. அதான் டா… நீ நல்லா ரெஸ்ட் எடும்மா… எப்படியும் நான் உன்னை தூங்க விட போறதில்லை….. போர் அடிக்காது… அப்படி அடிச்சா டீவி பாரு… முக்கியமா உன்னோட ஊர்க்காரங்க.. உறவுக்காரங்க எல்லாருக்கும் போன் செஞ்சிடு மதும்மா…” என

“அதெல்லாம் நான் செஞ்சிடுறேன்…. ஆனால் இப்படி நீங்க டெய்லி போகும்போது நான் தனியா இருந்து நான் என்ன செய்ய…? நான் பேசாம வேலைக்குப் போகவா?” என்றதும் தான் போதும் கணவனின் முகம் கனலைக் கக்க,

“அய்யோ.. நான் அந்த கம்பெனிக்குப் போகனும்னு சொல்லவே இல்ல.. புதுசா வேற எதாவது …?” என்றாள் மென்மையாய்..

“எந்த ஈர வெங்காயமும் வேண்டாம்.. கட்டின பொண்டாட்டியை வைச்சுக் காப்பாத்த முடியாம நான் இல்ல..” என்றான் சுள்ளென்று.

“எதுக்கு இப்படி எரிஞ்சு விழுறீங்க..? வேலைக்குப் போறது காசுக்காக இல்ல.. அது ஒரு சுதந்திரம்.. அவ்வளவு தான் எனக்கு.. எங்க வீட்ல ஏன் அனுப்புனாங்க.. காசு இல்லாமையா..? பொண்ணுப் போய் வெளி உலகத்தைத் தெரிஞ்சிக்கனும்னு தான்…” என்றாள் அவளும் அவனுக்குக் குறையாதக் கோபத்தோடு.

அவளின் கோபம் பார்த்து அவனும் கொஞ்சம் தணிந்தான்.

“சரி சரி… விடு.. ப்ளீஸ் மது… நீ இன்னொருத்தர்கிட்ட வேலைப் பார்க்கறது எனக்குப் பிடிக்கல… அது மட்டுமில்லாம என் வேலை ஒன்னும் இந்த நேரம்னு இல்ல… சில மணி நேரம் ரெகார்டிங்…. அவ்வளவு தான்.. எப்ப வேணும்னாலும் நான் வீட்டுக்கு வரலாம்..வரும்போது இத்தனை வருஷம் வெறும் கதவு தான் என்னை வரவேற்கும்….இனிமே நீ இருக்கனும் மதும்மா…ப்ளீஸ்..” என அவளை அணைத்துக் கொண்டே கேட்க

வார்த்தை ஜாலத்தில் அவனை மிஞ்ச முடியுமா..? அவன் பிடிவாதத்தை விஞ்ச முடியுமா..?அன்பால் அவளைக் கட்டுக்குள் வைத்தான் ராஜ் நந்தன்.

ஆனால் கட்டுப்பாடுகள் எல்லாம் கட்டவிழ்க்கும் நாள் வரும் தானே..!!

மதுவும் அவன் உருகலில் உருகிக் கரைந்து, “சரி நான் வேலைக்குப் போகல… போதுமா…”எனச் சொல்ல

“தேங்க்ஸ்டா என் மதுன்னா என் மது தான்” என்றான்.

அவன் வேலைக்குச் சென்றப் பின் தனிமையில் யோசனைகள் பலமாய் இருந்தன மதுவுக்கு.

‘முன்னர் தான் வேலைக்குப் போக எவன் அனுமதி வேண்டும் என நினைத்தது எங்கே..? இன்று கணவனின் கையணைப்பில் அவனிடம் கட்டுண்டு கிடப்பது எங்கே..? வீட்டில் எதிர்த்து எதிர்த்துப் பேசியவள் இங்கே அவனிடம் அடங்கி கிடப்பது எதனால்..? யோசனைகள் தாக்க எண்ண சுழல்களில் சிக்கினாள். அவளை மேலும் யோசிக்க விடாமல் அவர்களின் வீட்டினர் அழைப்பேசி மூலமாய் அழைக்க, அவர்களோடு பேசுவதில் மூழ்கினாள்.

மாலையில் வீட்டிற்கு வந்த ராஜா உள்ளே நுழைந்ததுமே மனைவியைத் தேடி அவள் மடி சாய்ந்தான்.

“அப்புறம்… மது எப்படி போச்சு இன்னிக்கு…என்னை மிஸ் பண்ணியா…?”

“மிஸ் பண்ணாம தான் அத்தனை தடவ கால் பண்ணினேனா…. நீங்க இல்லாம செம போர்… எனக்குப் பிடிக்கவே இல்ல…”

“சாரிடாம்மா… போன் செஞ்சு உங்கிட்ட பேசினேன் வைச்சிக்கோ என்னால் அப்புறம் கன்ட்ரோலா இருக்க முடியாதே…. உன்னைப் பார்க்கனும்.. பேசனும்… இப்படி படுத்துக்கனும்… இப்படி அணைச்சிக்கனும்னு தோணும்.. அதான்… அது மட்டுமில்லாம பாடும்போது அந்த கேரக்டரை உள்வாங்கிப் பாடனும்.. சோ வேற டிஸ்ட்ராக்ஷன்ஸ் இருக்கக் கூடாது…”

“ம்ம்ம்..”

“அப்புறம் இன்னொன்னு தெரியுமா.. நான் இதுவரைக்கும் இவ்வளவு நல்லா பாடினதே இல்லையாம்..? டைரக்டர் சொல்றார்… இன்னிக்குக் கொடுத்த லவ் சாங்கை அப்படி பாடினேனாம்… உருகி உருகி…. எல்லாம் உன்னை நினைச்சான்னு கேட்டு ஒரே கிண்டல் தான்…. ஆனா அதான் உண்மையும் கூட…. நீ என்னை மாத்திட்டே இருக்க மது..” என அவன் சொல்ல, அவளுக்குமே அதே எண்ணம்.
 
‘அவளும் மாறுகிறாள்.. தன் சுயத்தை இழக்கிறோமோ..’ என்ற சிந்தனை அவளுள். ஆனால் அவன் அன்பில் சுகமாய் நனைவது சுகமாகத் தான் இருக்கிறது. அந்த அன்பு மாருதத்தில் நனைய நனைய போதையாய் உள்ளே இழுக்கத்தான் செய்கிறது.

அன்பின் அர்த்தம் அன்புதானே…!

இவ்வுணர்வு மதுரவசனிக்கு மிகவும் பிடித்தும் இருக்கிறது. காதலிக்கப்படுவதன் சுகம் அலாதியாய் அற்புதமாய் ஆனந்தப் பெருக்கை அவளுள் ஓட விட, அதில் நனைவது தான் நங்கைக்குப் பிடித்தமானதாய் இருக்கிறது..!

ஆனால் எத்தனை காலம்…? அதீதம் ஆபத்தானது அல்லவா…??

“சாப்பிட்டியா டா?” என்ற ராஜாவின் குரலில் கலைந்தவன்

“இல்ல.. நீங்க வாங்க… எடுத்து வைக்கிறேன்…” என்றவளின் பின்னே சென்றவன்,

“ம்ம்.. மது… பட் லைஃப் இவ்வளவு அழகா மாறும்னு நினைக்கவே இல்ல நான்… இத்தனை நாள் வீட்டுக்கு வரவே பிடிக்காது… வந்து என்ன செய்யப்போறோம்னு இருக்கும்.. ஆனா இப்போ வீட்டுக்கு எப்படா போவோம்.. உன்னை எப்பப் பார்ப்போம்னு என்னோட செல் எல்லாம் பரபரக்கிறது…. என்னை லூசாக்கிட்ட டி நீ..” என்றான் செல்லமாய்.

“பாருடா….ஓவர் ஐஸ் தான்…”

“ஐஸா..போடிங்க….” என்று அவளை இன்னும் இன்னும் இறுக்கினான்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு…

இல்லறம் இத்தனை இனிமையானதாய் இருக்குமென கனவிலும் நினைக்கவில்லை மதுரவசனி. திருமணத்துக்கு முன்பு பார்த்த கோபக்கார ராஜா இல்லை இப்போது அவள் கணவன். ஆனால் அதே பிடிவாதம் உண்டு. அது கூட இவள் மீது உள்ள அதீதப் பிடித்தம் காரணமாய் என்பதை பெண் அறிவாள்.

அன்பு..! அன்பு…அன்பு..! அது மட்டுமே அவன்பால் இவளிடம்…. அத்தனை பேர் கொட்டும் அன்பை அவன் ஒருவனே கொட்டினான்.

முதல் மாதம் அவளுக்கு மாதவிலக்கு வர, அவள் தரையில் படுத்திருந்ததைப் பார்த்தவன் ,

“ஹே…! ஏன் டி கீழப் படுத்திருக்க…?” எனப் பதட்டமாய்க் கேட்டவன் அப்படியே அவளை அலேக்காய் தூக்கவும்,

“அய்யோ….. எனக்கு…. நான் தூரம்…. ஏன் படுத்துறீங்க… கீழ இறக்கி விடுங்க..” என்றவளை மென்மையாய் மெத்தையில் இறக்கி விட்டான்.

“ப்ச்…. இதானா.. அதுக்கு ஏன் கீழப் படுக்கனும்.. ஒன்னுமில்ல.. நீ நல்லா கஷ்டமில்லாம மேல படு.. உனக்கு ஈசியா இல்லனா சொல்லு நான் கீழ படுத்துக்கிறேன்..” என்றவன் அந்த நாட்களில் அவளை அப்படி குழந்தையாகப் பார்த்துக் கொண்டான்.

ஆனால் அவள் வீட்டில் அதுவும் மிகுந்த ஆச்சாரம் பார்க்கும் அவள் ஆத்தாவிடம் அவள் பெரியம்மா சித்தி அம்மா கூடத் தனியாகத்தான் படுப்பர். குளிக்காமல் வீட்டுக்குள் சேர்க்க மாட்டார்.

‘அதைத் தொடாதே.. தீட்டு…. இங்கிட்டுப் போகாத….சாமிக்கு ஆகாது…’ என்பது போல் சொல்லி சொல்லி ‘அந்த’ நாட்கள் என்றாலே ஒரு விதப் பயத்தையும் ஒரு அசூசயையும் ஏற்படுத்தி இருந்தார். ஏற்கனவே பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் காரணமாய் எரிச்சல், மன உளைச்சல் போன்றவை ஏற்படும். அதிலும் இப்படி அவர் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பவளை மன ரீதியாகவும் தொல்லைச் செய்ய நொந்து தான் போவாள் மதுரவசனி.

அவள் கணவனிடமே கேட்க,

“ஹ்ம்ம்… கீர்த்திக்குட்டிப் பெரியவளானப்ப ரொம்ப அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சிட்டா….. என்னனு கேட்டதுக்கு அம்மா ஒன்னுமில்லடா அதெல்லாம் கேர்ள்ஸ் விஷயம்னு சொல்லிட்டாங்க… அப்புறம் நானே தேடிப் போய் நெட்ல தெரிஞ்சிக்கிட்டேன்… கீதுக்கிட்டயும் நான் அதெல்லாம் ஒன்னுமில்லன்னு சொல்லிப் புரியவைச்சேன்.. அவளை தனியா படுக்க நான் விட மாட்டேன்.. அம்மாவை கூடப் படுக்கச் சொல்வேன்…. எப்பவும் போல வீட்டுல இருக்கட்டும் அப்படின்னு தான் சொல்வேன்…. அதனால் எனக்கும் இதைப் பத்திக் கொஞ்சம் தெரியும் மது… “ என்றான்.

அக்கறையாய் அவன் நடக்கையில் அவளுக்கு ‘அந்த மூன்று நாட்களும்’ சொர்க்கமாகத்தான் தெரியும். கணவன் என்ற சொல்லே கரும்பெனத் தித்தித்தது காரிகைக்கு. அவனிடம் பிடிக்காத விஷயம் என்னவெனில் அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவனைத் தவிர வேறு சிந்தனைகளை அவளுக்கு வர விட மாட்டான்.

வீட்டாரிடம் பேச வேண்டுமானால் அவன் வருவதற்கு முன்னே பேசி விட வேண்டும். ஆனால் அவள் வீட்டு ஆண்கள் எல்லாரும் ஏழு மணிக்கு மேல் தான் வருவார்கள். அவர்களாக அழைத்தால் ஒரிரு நிமிடங்கள் பேச விடுவான்.. அவ்வளவே… திருமணமான மூன்று மாதத்தில் தாலிப் பிரித்துக் கோர்த்தப் பின் ஒரு முறை கூட அவள் ஊருக்குச் செல்லவில்லை. செல்ல விடவில்லை அவள் கணவன்.

இப்படி அவன் இல்லாத சமயங்களில் கூட அவனைப் பற்றியே நினைக்கும் அளவுக்கு அவன் மேல் பித்தாகிப் போனாள் மதுரவசனி.

திடீரென அறைக்குள் நுழைந்த ராஜா , அவளை அப்படியே அலேக்காகத் தூக்கிச் சுற்றினான்.

“அய்யோ…. தலை சுத்துது.. விடுங்க… விடுங்க.. நந்து” என அவள் அலற,

“எங்கடி போன… உன்னைத் தேட வைக்கிற…? விடனுமா..விட்டுடுறேன்…” என்றபடியே அவளோடு அப்படியே மெத்தையில் விழுந்தவன், அவள் கழுத்தில் முகம் புதைத்து அழுத்தமாய் முத்தம் வைத்து மென்மேலும் அவளிடம் புதைய,

“என்னங்க…. என்னாச்சு….. என்னைத் தேடற அளவுக்கு.. சொல்லுங்க…என்ன…?” எனப் பரபரக்க

அவள் காதுக்குள் ஸ்ருங்காரமாய் ஒலித்தது அவன் குரல்.

“எனக்கு நேஷனல் அவார்ட் கிடைச்சிருக்கு மதும்மா…” என்றவனின் குரலில் நெகிழ்ச்சி தெரிய,

பெண்ணவளுக்கோ பேருவகை… ஆனந்தத் துள்ளலோடு எழுந்தவள் மனதில் ஆரவார ஆழிப்பேரலை.

அப்படியே எழுந்தவள் கணவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து,

“சூப்பருங்க நீங்க….” என்றாள் முகம் கொள்ளா புன்னகையோடு.
“எவ்வளவு ஹாப்பியான்னா விஷயம் தெரியுமா…. எனக்கு … அப்படியே…” என அவனை அணைத்துக் கொள்ள, அதற்கு மேல் பொறுக்காமல் அங்கே ஸ்வர தாளமில்லா நாண ஓசையும் முத்தார கீதமுமாய் ஒரு இனிய சங்கமம் அரங்கேறியது.

அவர்களை அலைபேசி நிகழ்காலத்துக்குக் கொண்டு வர, மதுரவசனியின் வீட்டிலிருந்து ராஜாவுக்கு அத்தனை அழைப்புகள். அனைவருக்கும் அழைத்துப் பேச வாழ்த்துகளில் நனைந்தான் ராஜ் நந்தன்.

மதுரவசனி பெருமையாக ஹம்சாவிடம் பேசுவதைக் கேட்டவனின் முகத்தில் அமைதியான ஆனால் ஆழமான புன்னகை குடியேறியது. அலைப்புறுதல் இல்லா ஆழ்ந்த அமைதியை அவனுக்கு வழங்கிய மனைவியை நேசத்தோடு பார்த்தான் ராஜா.

“ஹே….! ஹம்சா…. இவருக்கு நேஷனல் அவார்ட் கிடைச்சிருக்கு டி….. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா…” என்றாள் குதூகல குத்தாட்டத்தோடு.

சிறுபிள்ளைப் போல் அவள் துள்ளிக் கொண்டு சொல்ல அவனின் உள்ளத்திலும் உவகைத்துள்ளல்.

சுக ஜீவனாய் அவள் அவனோடு இருக்க… சுகசாந்தி அவனுள்..!!

யாவும் காதலாய் இருக்க யாதுமாகிப் போயிருந்தாள் மதுரவசனி.

அந்த மாதத்தின் இறுதியில் டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற சிறந்த பிண்ணனிப் பாடகருக்கான விருதைப் பெற்றான் ராஜ் நந்தன்.
அவன் விருதுப்பெற்ற அன்று வைரம் சுந்தரும் இருவரும் வாழ்த்துச் சொல்ல அலைப்பேசியில் அழைக்க,

“தேங்க்ஸ்” என்ற ஒற்றைச் சொல்லோடு நிறுத்தியிருந்தான் ராஜா.

அவர்களுக்கு அதில் வருத்தமென்றாலும் கூட அவனது சந்தோஷ மன நிலையைக் கெடுக்க விரும்பாது வைத்து விட்டனர்.

அன்றிரவு தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்து விட்டு ஹோட்டல் திரும்பியதும், மதுரவசனியிடம் ராஜா,
“என்ன இருந்தாலும் நம்ம சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க கூட ஒரு ஜீவன் வேணுமில்ல மது…. தனியா இருந்திடலாம்…. அப்படினு என்னதான் திமிரா சொன்னாலும் கூட ஒரு துணை இருக்காங்கன்ற பலமே தனி இல்ல…” என்றான்.

அவள் “ம்ம்” கொட்ட

“என்னடி ம்ம்…?

“நீங்க என்ன சொன்னாலும் இன்னிக்கு நோ அப்பீல்.. ம்ம் தான் போடுவேன்…. ஏன்னா என் நந்துக்கு இன்னிக்கு பெரிய அவார்ட் கிடைச்சிருக்கு… நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்….. ரொம்ப யோசிக்காது என் மூளை…. எது சொன்னாலும் ம்ம் தான்… சரியா..?” என்றாள் அவன் மேல் சாய்ந்துக் கொண்டு,

“சரிடி பொண்டாட்டி…. நானும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… எனக்குன்னு இன்னிக்கு ஒரு அடையாளம்.. விருதுங்கறது பெரிசில்ல.. ஆனால் இத்தனை நாள் இந்த துறையில் பாடினதுக்கு ஒரு அங்கீகாரம்… என் சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க என் பொண்டாட்டி.. வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கு மது….. இன்னும் ஒரு குழந்தை இருந்தா ரொம்ப அர்த்தமாயிடும்….”

“ம்ம்… எனக்கும் ரொம்ப ஆசை தான்…. இப்பவே வீட்ல எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க…”

“ஆசைப்பட்டாப் போதாது மது நிறைவேத்தனும்…” என்றவன் அதை செய்யத் துவங்கினான்.

அரங்கமே நிரம்பி வழிய, முதல் இருக்கையில் திருமதி.மதுரவசனி ராஜ் நந்தன் விஐபி இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் வைரம் சுந்தர்ராஜன் உட்கார்ந்திருந்தார். காரணம் நந்தனின் ‘கான்சர்ட்’.

“என்ன டா மது எப்படியிருக்க… வீட்டுக்கு வந்து எத்தனை நாளாச்சு.. ஒரு எட்டு வந்துட்டுப் போனா என்னடா..?” என்றார் வாஞ்சையாய்.

“நான் நல்லா இருக்கேன் அத்த…. நீங்க எப்படி இருக்கிங்க.... எப்பவும் என்னை வரச் சொல்றீங்க… நீங்க வரலாம் இல்லையா…?” என மது கேட்க

“எனக்கு வரனும்னு ஆசை இல்லையா..? அவன் நான் வந்தா கோபிக்க மாட்டானா மா…?” என வருத்தமாய் வைரம் சொல்லவும்,

“போங்க அத்த.. கீர்த்தி தான் வராளே அவர் ஒன்னுமே சொல்றது இல்ல… அவ வர அன்னிக்கு உங்கப் புள்ளை எக்ஸ்டரா சந்தோஷமா இருப்பாரு தெரியுமா..?”

“அவனுக்கு அவ தனி இஷ்டம்மா….” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே தொகுப்பாளர் வந்து பேசத் துவங்கி, நிகழ்ச்சி ஆரம்பிக்க நந்தனின் இசை மழையில் மக்கள் நனையத் துவங்கினர்.

அனைவரும் கைத்தட்டியும் குரல் எழுப்பியும் “நந்தன் நந்தன்” எனக் கத்தி உற்சாக ஆரவாரம் செய்தனர்.

ஒரு வழியாக இசைக்கச்சேரி முடிந்து நந்தன் தன் காரை எடுத்து வரவும், மதுரவசனி அப்போதும் வராமல் மாமியாரோடு பேசிக்கொண்டு இருக்க, ராஜா தான் போனில் அழைத்து,

“ஏய் வரியா இல்லையா நீ…? இப்ப தான் நான் ஆட்டோகிராஃப் எல்லாம் போட்டு எப்படியோ ஒரு வழியா காரை எடுத்துட்டு வந்து நிக்கிறேன்… நீ இன்னும் கதையளக்கிற…ம்ம்..” என அதட்ட,

“வந்துட்டேன்…” என்றவள் உடனே சென்று காரில் ஏறினாள்.

வீட்டுக்குச் சென்றதும் அவன் அவளிடம் , “எப்படி பாடினேன் ?” எனக் கேட்க

“சூப்பருங்க நீங்க…. அப்படியே உங்க பாட்டைக் கேட்டா இதயத்துல ஒரு அருவி ஊத்துற மாதிரி உடம்பெல்லாம் ஒரு பரவசம்.... பாடறதுலெல்லாம் ஒரு வரம்ங்க… கடவுள் உங்களுக்கு அதை கொடுத்திருக்கார்….”

“கடவுள் அதை மட்டும் கொடுக்கல… எனக்கு என் மது போல ஒரு நல்ல மனைவியை அனுப்பியிருக்காரு… பாடுறதுக்கு மனசு அமைதி வேணும்.. அப்படி ஒரு அமைதியை நிம்மதியை நீ எனக்குத் தந்திருக்க மது… அதனால தான் என்னால முன்னாடி விட நல்லா பாட முடியுது.. ஊரே பாராட்டினாக் கூட நீ சொல்ற சூப்பருக்கு ஈடாகாதும்மா..” என்றான் மன நிறைவோடு.

“நீங்க ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரர் அத்தை மாதிரி ஒரு அம்மா கிடைக்க…. நீங்க பாட பாட அத்தைக்குக் கண்ணுல தண்ணி…. எப்பவும் பாடிட்டு அவங்க கிட்ட எப்படி பாடினேன்மானு கேட்பீங்களாம்…. ரொம்ப வருத்தப்பட்டாங்க….” எனச் சொல்ல

“வருத்தம்லாம் அவங்களுக்கு மட்டும் தானா…எனக்கில்ல..?” என்றவனை அவள் யோசனையாகப் பார்க்க ,

“அம்மா பின்னாடி தான் நான் சுத்துவேன்… சாப்பாடு கூட அவங்க கையால தான் சாப்பிடுவேன்… சட்டை எடுக்கப் போனா கூட அவங்க வேணும் எனக்கு…. அப்படிப் பட்ட நான் எட்டு வருஷமா அவங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன். எனக்கு வலி வருத்தமெல்லாம் உண்டு தான்… சும்மா சொல்லி அழுதா அவங்களுக்கு மட்டும் தானா எல்லாம்…” என்றவன் அவன் மனதின் பாரத்தை இறக்க,

மதுவுக்கோ ஒன்று புரிந்து போனது. இவனது கோபம்,கடந்த கால வலி தான் இவனை விலக்கி வைக்கிறதே தவிர, இவனுக்கும் ஏக்கம் அதிகமாய் இருக்கிறது என உணர்ந்துக் கொண்டாள்.

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்க வேண்டும். அவனின் இழந்த மகிழ்ச்சி அனைத்தையும் தர வேண்டும் என நினைத்தவள், அடுத்த நாளே அவனின் மகிழ்ச்சி தொலைய , நிம்மதி இழக்கக் காரணமானாள்.

ஆட்டம் தொடரும்…!!!
 
heyyyyyyyyyyyyy dearsssssssss...thanks much...:love::love::love::love::love::love::love:

---------------------------------------------------------------------------------
காதல் 14:

அடுத்த தினம் அழகாய் விடிய, ராஜாவுக்கு மிகவும் அழகாய் விடிந்தது. பின்னே இல்லையா… அவனுக்கென்று ஒருத்தி அவனுக்கானவள்.. அவனானவள்… அவனவள்… அவள் அருகாமை தந்த திருப்தி..! அவள் வாசம் தந்த சுவாசம்..! அதை ஆழ்ந்து அனுபவித்து என்று அவன் நிம்மதியாக உறங்கி எழுந்தான்.

குளித்து விட்டு பனியனும் ட்ராக் சூட்டுமாய் மனைவியைத் தேட
அவள் கிச்சனில் சமையல் செய்து கொண்டிருந்தாள். அவளைப் பின்னோடு அணைத்தவன் ,

“மதும்மா… என்னடா.. சீக்கிரமா எழுந்திட்ட…. பாவம்… நீ நைட்லாம் தூங்கல…. நானே சமைச்சிருப்பேன்ல… என்னை ஏன் எழுப்பல…” எனத் தாங்கலாகக் கேட்க

“நீங்களே நல்லா தூங்கினீங்க… எப்படி எழுப்பறதாம்..? டெய்லி நீங்களே சமைப்பீங்களா….என்ன..? நானும் நல்லாதான் சமைப்பேன்..” எனச் சொல்ல

அவளை மேலும் இறுக அணைத்தவன், “எஸ் மது நல்லா தூங்கினேன்… ரொம்ப நல்லா தூங்கினேன் நான்…. நீ எனக்காக இருக்க… எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குன்னு நிம்மதில தூங்கினேன்..” என்றான் குரலிலும் நிம்மதியும் அமைதியும் இழையோட.

“சரி..சரி…தள்ளுங்க…நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என நகரப் போக,

“என் ராணி இப்படி கஷ்டப்படக் கூடாது…. நீ உட்கார.. நான் செர்வ் செய்றேன்…” எனச் சொல்ல

அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ,
“என் ராஜாவுக்கு நான் செய்யக் கூடாதா என்ன..?” என மையலோடு கேட்க

“மது….. நைட் தான் தூங்கல.. பகல்ல நீ ரெஸ்ட் எடுக்கனும்னு நான் நினைக்கிறேன்…. நீங்க என்ன நினைக்கிறீங்க மேடம்..” எனப் புருவம் உயர்த்திக் கிண்டலாகக் கேட்க

“அய்யே..போதும் போங்க…” என அவள் நகர்ந்து விட

“பாடல் தீர்ந்த
போன பின்னும்
மௌனம் கூட தீர்ந்த பின்னும்
கோடி முத்தம் வைத்த பின்னும்
போதவில்லையே போதவில்லையே
உன்னைப் போல போதை ஏதுமில்லையே..”

என்று அவன் பாட

“பசிக்குதுப்பா.. வாங்க..” என்றதும் அவனும் வம்பு செய்யாமல் சாப்பிட அமர்ந்தான்.

அவள் செய்திருந்த காரச்சட்னியும் இட்லியும் சாப்பிட்டுப் பார்த்தவன் ,

“சூப்பர்டா மது… செம…. உன் கைப்பக்குவத்தை அடிச்சிக்க ஆளே இல்ல..” என வேகமாய் சொல்ல

“ஆஹான்…நிஜமாவா..?”

“ஹே..! நிஜமா தான் டி…. ம்ம்ம்.. உனக்குத் தெரியுமா மது…. ஆத்தா கூட சொல்வாங்க இப்ப உன் அம்மா சாப்பாட்டை சொல்ற.. நாளைக்கு உனக்கு ஒருத்தி வந்தா உங்கப்பன் மாதிரி மாத்திப் பேசுவேன்னு…ம்ம்..” என்று இயல்பாக பேசியவனின் முகம் ஒரு நொடி புன்னகையில் உறைந்தாலும் அடுத்த நொடியே சொன்ன செய்தி உரைத்து அமைதியானான். கடந்துச் சென்ற நாட்களும் காய்ந்துப் போன தழும்புகளும் ரணங்களும் நினைவில் வர அப்படியே உணவை வெறித்தான்.

இத்தனை நாள் அவன் தனிமனிதன். ரகுவிடம் கூட அவனால் அனைத்தையும் மனம் திறந்துப் பேச முடியாது. ஆனால் மதுரவசனி அவன் மனைவியாயிற்றே.. அவளிடம் அவனுக்கு மறைக்க என்னவிருக்கிறது..? இயல்பாக மிக மிக இயல்பாக உரையாடி விட்டு அதன்பிறகே அவனுக்கு அனைத்தும் புரிந்தது.

மதுவோ அவனின் தோளில் தொட்டு, “இம்புட்டு பாசம் இருக்கவருக்கு அப்படி என்ன வெட்டிப் பந்தா…. அம்மா அப்பா கிட்ட கௌரவம்லாம் பார்க்க கூடாது…”என்றாள்.

அவனோ அவளை இழுத்துத் தன் மடியில் அமரவைத்து ,
“மனைவியை நேசிக்கிறவங்க ப்ரஸ்டீஜ் எப்படி வேண்டாம்னு சொல்வாங்க..?” என அவள் காதில் உரச

அவனின் செயலில் கிறங்கி மயங்கினாலும், அவன் பேச்சை மாற்றுவதை உணர்ந்தவள் அப்படியே அந்த பேச்சை விட்டாள்.

அவன் அனுபவித்த வலிகள் அதிகம்.. அடையாளமாய் இருந்த அனைத்தும் ஒரு நாள் அடையாளமின்றிப் போவதும் அதை அனுபவித்தவனுக்குமே அடையாளம் என்பது அற்றுப்போனதும் கொடுமை தானே… உறவு போய் உரிமை போய் அனைத்தும் போய் நிர்கதியாய் அவன் நின்ற நிலையைக் கற்பனை செய்துப் பார்த்தாலுமே அவள் தேகம் சிலிர்க்கிறதே… அதை அனுபவித்தவனுக்கு எப்படி இருக்கும்.. காலம் மாற்றும் அவனை என்று நம்பினாள். அவனுக்குக் பாசமும் அதிகம் ரோஷமும் அதிகம்.. காலம் மாற்றாவிட்டாலும் அவள் காதல் மாற்ற வேண்டும் என்று முடிவுச் செய்து கொண்டாள்.

நந்தன் சீக்கிரமாக உண்டவன் மனைவியையும் சாப்பிட வைத்து,அடர் நீல நிற முழுக்கை சட்டையும் மெட்டாலிக் ப்ளூவில் ப்ளேசரும் அணிந்து வர அவனை மையல் கொண்ட விழிகளோடு அவள் நோக்க,அவனும் அவளை ஆழ்ந்து பார்க்க அதன் வீச்சு தாங்க முடியாவிட்டாலும் அவனை திமிராய்ப் பார்த்து வைக்க,

அருகில் வந்து அவள் முகம் நோக்கியவன்,

“என்ன பொண்டாட்டி நான் ஹேண்ட்சமா…? நீ ரொம்ப சாஃப்ட்னு நினைச்சா சைட் அடிக்கிற… கேடி தான் நீ..?” எனச் சொல்ல

“அய்யே அப்படியே அடிச்சிட்டாலும்.. அதெல்லாம் உங்களை நான் பார்க்கல… டெய்லி தான் பார்க்கிறேனே..” என்று கெத்தாகச் சொல்ல

“அப்ப நீ எங்கிட்ட மயங்கல…”

“மயங்கல..”

“நிஜமா..?”

“நிஜமா..”

“அப்போ நான் டெஸ்ட் பண்ணிக்கிறேன்..” என்ற ராஜா அவள் அருகில் வர,
அவன் அருகில் வரப் பின் வாங்கியவள்,

“என்னை டச் பண்ணக்கூடாது..” என்றாள் அழுத்தமாக.

“டச் பண்ண மாட்டேன்..” என்றான் அவளை விட அழுத்தமாய்.

அடுத்து அவன் செய்த செயலில் மூச்சைடைத்துப் போனது. அவளை நெருங்கி நின்றாலும் அவன் மேனி அவளை உரசவில்லை மாறாக அவன் மூச்சுக்காற்றை அவள் முகத்தில் ஊத அதைத் தாங்க முடியாதவள் அப்படியே சிலையென சமைந்து நிற்க,

அவன் மேலும் அவள் மேனியில் ஊத, அவன் மூச்சுக் காற்றில் சிலிர்த்தவள், அவனைக் கைவைத்துத் தள்ளி விட்டு,

“மயங்கிட்டேன் போதுமா…. இம்சை பண்ணாதீங்க…” என்றாள் நாணத்தோடு.

“அப்படி வா வழிக்கு…” என்றவன் சோபாவில் அமர்ந்து ஷூவைப் போட்டுக் கொண்டு ,

“மது.. இன்னிக்கு உன்னைத் தனியா விட்டுப் போக மனசில்ல.. ஆனா கொடுத்த வாக்கைக் காப்பாத்துனும் இல்ல.. ஏற்கனவே ஃபிக்ஸ் ஆன ரெகார்டிங்.. அதான் டா… நீ நல்லா ரெஸ்ட் எடும்மா… எப்படியும் நான் உன்னை தூங்க விட போறதில்லை….. போர் அடிக்காது… அப்படி அடிச்சா டீவி பாரு… முக்கியமா உன்னோட ஊர்க்காரங்க.. உறவுக்காரங்க எல்லாருக்கும் போன் செஞ்சிடு மதும்மா…” என

“அதெல்லாம் நான் செஞ்சிடுறேன்…. ஆனால் இப்படி நீங்க டெய்லி போகும்போது நான் தனியா இருந்து நான் என்ன செய்ய…? நான் பேசாம வேலைக்குப் போகவா?” என்றதும் தான் போதும் கணவனின் முகம் கனலைக் கக்க,

“அய்யோ.. நான் அந்த கம்பெனிக்குப் போகனும்னு சொல்லவே இல்ல.. புதுசா வேற எதாவது …?” என்றாள் மென்மையாய்..

“எந்த ஈர வெங்காயமும் வேண்டாம்.. கட்டின பொண்டாட்டியை வைச்சுக் காப்பாத்த முடியாம நான் இல்ல..” என்றான் சுள்ளென்று.

“எதுக்கு இப்படி எரிஞ்சு விழுறீங்க..? வேலைக்குப் போறது காசுக்காக இல்ல.. அது ஒரு சுதந்திரம்.. அவ்வளவு தான் எனக்கு.. எங்க வீட்ல ஏன் அனுப்புனாங்க.. காசு இல்லாமையா..? பொண்ணுப் போய் வெளி உலகத்தைத் தெரிஞ்சிக்கனும்னு தான்…” என்றாள் அவளும் அவனுக்குக் குறையாதக் கோபத்தோடு.

அவளின் கோபம் பார்த்து அவனும் கொஞ்சம் தணிந்தான்.

“சரி சரி… விடு.. ப்ளீஸ் மது… நீ இன்னொருத்தர்கிட்ட வேலைப் பார்க்கறது எனக்குப் பிடிக்கல… அது மட்டுமில்லாம என் வேலை ஒன்னும் இந்த நேரம்னு இல்ல… சில மணி நேரம் ரெகார்டிங்…. அவ்வளவு தான்.. எப்ப வேணும்னாலும் நான் வீட்டுக்கு வரலாம்..வரும்போது இத்தனை வருஷம் வெறும் கதவு தான் என்னை வரவேற்கும்….இனிமே நீ இருக்கனும் மதும்மா…ப்ளீஸ்..” என அவளை அணைத்துக் கொண்டே கேட்க

வார்த்தை ஜாலத்தில் அவனை மிஞ்ச முடியுமா..? அவன் பிடிவாதத்தை விஞ்ச முடியுமா..?அன்பால் அவளைக் கட்டுக்குள் வைத்தான் ராஜ் நந்தன்.

ஆனால் கட்டுப்பாடுகள் எல்லாம் கட்டவிழ்க்கும் நாள் வரும் தானே..!!

மதுவும் அவன் உருகலில் உருகிக் கரைந்து, “சரி நான் வேலைக்குப் போகல… போதுமா…”எனச் சொல்ல

“தேங்க்ஸ்டா என் மதுன்னா என் மது தான்” என்றான்.

அவன் வேலைக்குச் சென்றப் பின் தனிமையில் யோசனைகள் பலமாய் இருந்தன மதுவுக்கு.

‘முன்னர் தான் வேலைக்குப் போக எவன் அனுமதி வேண்டும் என நினைத்தது எங்கே..? இன்று கணவனின் கையணைப்பில் அவனிடம் கட்டுண்டு கிடப்பது எங்கே..? வீட்டில் எதிர்த்து எதிர்த்துப் பேசியவள் இங்கே அவனிடம் அடங்கி கிடப்பது எதனால்..? யோசனைகள் தாக்க எண்ண சுழல்களில் சிக்கினாள். அவளை மேலும் யோசிக்க விடாமல் அவர்களின் வீட்டினர் அழைப்பேசி மூலமாய் அழைக்க, அவர்களோடு பேசுவதில் மூழ்கினாள்.

மாலையில் வீட்டிற்கு வந்த ராஜா உள்ளே நுழைந்ததுமே மனைவியைத் தேடி அவள் மடி சாய்ந்தான்.

“அப்புறம்… மது எப்படி போச்சு இன்னிக்கு…என்னை மிஸ் பண்ணியா…?”

“மிஸ் பண்ணாம தான் அத்தனை தடவ கால் பண்ணினேனா…. நீங்க இல்லாம செம போர்… எனக்குப் பிடிக்கவே இல்ல…”

“சாரிடாம்மா… போன் செஞ்சு உங்கிட்ட பேசினேன் வைச்சிக்கோ என்னால் அப்புறம் கன்ட்ரோலா இருக்க முடியாதே…. உன்னைப் பார்க்கனும்.. பேசனும்… இப்படி படுத்துக்கனும்… இப்படி அணைச்சிக்கனும்னு தோணும்.. அதான்… அது மட்டுமில்லாம பாடும்போது அந்த கேரக்டரை உள்வாங்கிப் பாடனும்.. சோ வேற டிஸ்ட்ராக்ஷன்ஸ் இருக்கக் கூடாது…”

“ம்ம்ம்..”

“அப்புறம் இன்னொன்னு தெரியுமா.. நான் இதுவரைக்கும் இவ்வளவு நல்லா பாடினதே இல்லையாம்..? டைரக்டர் சொல்றார்… இன்னிக்குக் கொடுத்த லவ் சாங்கை அப்படி பாடினேனாம்… உருகி உருகி…. எல்லாம் உன்னை நினைச்சான்னு கேட்டு ஒரே கிண்டல் தான்…. ஆனா அதான் உண்மையும் கூட…. நீ என்னை மாத்திட்டே இருக்க மது..” என அவன் சொல்ல, அவளுக்குமே அதே எண்ணம்.
super irunthuchu but small episode mam
 
Top