Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-23

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??


காலையில் அவள் எப்போதும் எழும் நேரம் விழிப்பு வந்து விட்டது...அவனை காண அவன் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்....இரவு நடந்தது நியாபகம் வர கூடவே வெட்கமும் வந்தது....எழுந்து குளித்து விட்டு வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்...

ஆறு மணிக்கு அவன் அலாராம் அடிக்க,விழித்த ஹர்சித் அதை அணைத்து விட்டு மகிழினியை பார்க்க அவளை காணவில்லை....

எழுந்து வந்தவன் சமையலறை வாசலில் நிற்பது தெரிந்தும் அவளால் அவன் முகத்தை பார்க்க முடியாமல் திரும்பி நின்றுக் கொண்டாள்....

அவனும் அவள் திரும்பும்படி இல்லாததால் அவளை அப்படியே பின்புறமாக அணைத்து காதில் ரகசியம் பேச அவள் முகம் இன்னமும் சிவந்தது..

"அச்சோ!!!!விடுங்க....காலைலேயே என்ன இப்படி பேசிக்கிட்டு????"

"அப்போ இராத்திரி மட்டும் தான் இப்படி பேசனும்னு சொல்றீயா இல்ல பேசுறத செய்யுனு சொல்றீயா???"

"அம்மாடி....ஆளவிடுங்க.....வேலை இருக்கு"...

"அப்போ வேலை இல்லனா ஓகேவா?"

"ஹையோ!!!போதும்...போங்க....போய் குழந்தைகள எழுப்பி விடுங்க...நான் வந்து குளிக்க வைக்கிறேன்"

"இது தப்பு.... குழந்தைகள மட்டும் குளிக்க வைக்கிற....என்னையும் குளிக்க வைக்கிறேனு சொல்லமாட்டிக்க....ஓஹோ..புரிஞ்சி போச்சி‌..நம்ம இரண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம்னு சொல்ல வர்ற...அப்படிதான???.....நான் ரெடி..."சொல்லி கண்ணத்தில் முத்தம் வைக்க

அவள் திரும்பி முறைப்பது போல் பாவனை செய்ய அதற்குள் குக்கர் விசிலில் நன்றாக அவனை விட்டு விலகினாள்....

"மீதி அப்புறம்"என்று சொல்லிக்கொண்டே அவன் குழந்தைகளை எழுப்பி சென்றான்....

"அப்பாடா!!!என்ன இது!!!காலையிலேயே இப்படி வம்பு பண்றாங்க!!!"சொல்லி விட்டு மீதி வேலைகளை பார்க்க தொடங்கினாள்....


அவன் குளித்து குழந்தைகளை எழுப்பி குளிக்க வைத்து கொண்டிருக்கும் போதே அவள் வர அவளை பார்த்து கண்ணடித்தான்....

அவள் அவனை பார்த்து விழிக்க அவளை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு அசத்துற என்று மெதுவாக சொன்னான்...

அவள் திரும்பி குழந்தைகளை பார்க்க அவர்கள் குளிப்பதில் ஆர்வமாக இருக்க அவள் அவர்களுக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்....

அங்கு வந்து திடிரென்று அவள் இதழ்களை சிறை செய்ய அவளுக்கோ அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள்...


"என்ன இது.?? குழந்தைகளை வைத்து கொண்டு....."

"இதுவும் ஒரு கிக்கா தான் இருக்குது.... யார்க்கும் தெரியாம கொஞ்சுறதும் ஒரு வகை சுகம் தான்"....

அவளை விடுவித்தவன் "மீதி அப்புறம்" என்று சொல்லிச் செல்ல அவள் அங்கேயே அமர்ந்தாள்....

குழந்தைகளை ரெடி செய்து அனைவரும் உணவருந்தியப்பின் மூவரும் கிளம்பினர்....

அதன்பிறகு இவள் பூஜையறையில் இருந்தாள்....இந்த வாழ்க்கை கிடைத்ததற்கு என்றும் போல் இன்றும் இறைவனுக்கு நன்றி சொல்லி பூஜை செய்தாள்....

அவன் வரும் போது துணி காய வைத்து விட்டு வந்தாள்......கதவை பூட்டி விட்டு அவளை தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்கு வந்தான்....அவளை இறக்கி விட்டு அணைக்க அவளோ நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று விலகினாள்....


"இப்படி உட்கார்ந்து பேசும் மா.....இது தான் எனக்கு வசதியாக உள்ளது..."

"இனி குழந்தைகள் இருக்கும் போது இப்படி செய்யாதீங்க.... அவங்களுக்கு தெரிந்தால் நமக்கு தான் அவமானம்......அவங்க பார்த்துட்டா என்ன செய்றது??"...அவள் கலவரத்துடன் கேட்டாள்.....

"அடப்பாவி...நானும் இளவயது வாலிபன் தான்....எனக்கும் என் பொண்டாட்டி
ய கொஞ்சனும் சீண்டனும் என்று ஆசை இருக்குறது நியாயம் தான..... கல்யாணம் ஆகி நாளு வருஷம் கழிச்சு இப்ப தான் பர்ஸ்ட் நைட் கொண்டாடிருக்கேன்....அதுவும் ஒருநாள் கூட ஆகல.... அதுனால கொஞ்சம் அப்பப்போ கொஞ்சினேன்....இது குத்தமா?"

"ஐயோ!!!கோவமா???நான் சொல்ல வந்தது வேற.... நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டீங்களோ??"


"இல்லம்மா.....நீ சொல்ல வர்ரது புரியுது.....நான் சும்மா தான் வம்பிழுத்தேன்ம்மா...... அப்புறம் கோவம்லா இல்ல.... உண்மைய சொல்லனும்னா உன்ன மாதிரி ஒரு அம்மா கிடைக்க அவங்க இரண்டு பேரும் குடுத்து வைச்சிருக்கனும்.....இனி கவனமாக இருக்கேன்"

"ம்ம்...ஆபிஸ் போகலையா?"

"இல்லை....ஏய்...இப்போ நான் ஆபிஸ் போகனும்னா ஆசைப் படுற??"

"உங்க இஷ்டம்....வேலை இருக்கும்ல"

"வேலை இருக்கு....ஆனால் வீட்ல தான்..."
அவளை படுக்க வைக்க அவளோ திமிறினாள்‌‌....

"குழந்தைகள் தான் இப்ப வீட்ல இல்லையே???அப்புறம் என்ன?"...


"அது...இன்னொரு விஷயமும் பேசணும்..."


"அது அப்புறம் பேசலாம்....ப்ளீஸ்ம்மா..."

--------------------

இரவு குழந்தைகள் உறங்கிய தும் அவள் கீழே வர அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்தான்......

"வேலையெல்லாம் முடிச்சிட்டியா?"

"ம்ம்ம்"

"கேட்கனும்னு நினைத்தேன்....அப்புறம் மறந்துட்டேன்....சொல்லு என்ன விஷயம்?"

அவனருகே அமர ஏதோ பெரியதாக வரப் போது என்று யூகித்தான்....

அது வந்து‌....வந்து...

சொல்லு....

நம்ம....நமக்கு...நமக்கு...

"ஏன் இவ்வளவு பதற்றம்?"அவள் கைகளை தன் கைக்குள் வைத்து கொண்டு" இப்ப சொல்லும்மா"...

"நமக்குன்னு இன்னொரு குழந்தை வேண்டாம்ங்க.....அதுனால நாம் கவனமாக இருக்கனும்ல..எப்பவும் ஒரே மாதிரி இருக்காது.... அதுனால பெர்மணன்ட் சொலியுசனா.(permanent soution)...."இழுத்தாள்....

அவள் கைகளை விட்டுவிட்டு "சொல்லு....நீ நினைக்கிறது சொல்லிமுடி"என்றான்...

"அதான் பெர்மணன்ட் சொலியுசனா பேமிலி பிளானிங்(family planning) பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்....நம்ம கல்யாணம் முடிந்து கொஞ்சம் நாட்கள்ல காவ்யா கார்த்திக்கு தடுப்பூசி போட போனப்போ இதபத்தி டாக்டர்ஸ்ட்ட விசாரித்தேன்...உங்கட்ட கையெழுத்து வாங்கி உங்க சம்மதத்தோடு தான் பண்ண முடியும்னு சொன்னாங்க.....அது பண்ணுன பிறகு ஒரு வாரம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தா போதும் என்று சொன்னாங்க....அதபற்றி உங்கட்ட பேச முடியல... அதுக்கு அவசியமும் வர்ல....அதான் அப்படியே விட்டுவிட்டேன்...ஆனால் இப்போ அதுக்கான அவசியம் வந்தாச்சில....அதனால இப்ப பண்ணிருவோமா????அத்தைய இங்க வரவைத்து ஒரு வாரம் சமாளிச்சிரலாம்....நீங்க கொஞ்சம் உங்க வேலைய ஃப்ரீ பண்ணிக் கொண்டா போதும்....."சொல்லி அவன் முகம் பார்க்க அவன் முகமாற்றத்தில் நடுங்கினாள்....

அவள் நிறுத்தி சில நிமிடங்களில்,அவன் கையிலிருந்த ரிமோட் அங்கிருந்த சுவற்றில் வீசப்பட்டு சுக்கு சுக்கான் நொறுங்கி உயிரிழந்தது.....

அவள் பயத்தில் எழுந்து நிற்க அவனோ அவளை திரும்பியும் பாராமல் மேலேயறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டு குழந்தைகளுடன் படுத்து கொண்டான்.....

அவள் ஸ்தம்பித்து நின்று விட்டாள்....பின் அப்படியே அந்த சோஃபாவில் அமர்ந்து "நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் என்று இப்போ இவ்வளவு கோவம் ?"என்று யோசித்தாள்....

படுத்தவனுக்கோ உறக்கம் துளியுமில்லை... அப்படி ஒரு ஆத்திரம்....தான் அங்கே நின்றால் அவளை அடித்திருவோம்னு தான் வந்ததே!!இவள் ஏன் இப்படி இருக்கிறாள்?? இவளுக்கு ஏன் இப்படி எல்லாம் தோன்றுகிறது?....அப்போ முதல்லே இப்படி யோசிச்சிருக்கா?அதான் எல்லாத்தையும் விசாரிச்சு தெரிஞ்சு வச்சிருக்கா....என் கையெழுத்து மட்டும் தேவையில்லனா இவளே எல்லாத்தையும் செய்திருப்பாள்.....இவ ஏன் இப்படி யோசிக்கிறாள்?முதல்ல இவ ஏன் இவ்வளவு நல்லவளா இருக்காள்?ஒவ்வொரு பொண்ணுக்கும் தான் தாயாகுறது தான் இவ்வுலகத்தில் மிகப் பெரிய சந்தோசம் என்று அம்மா சொல்லுவாங்க..ஆனால் இவ மட்டும் இப்படி யோசிக்காள்?இவ இப்படி இவ வாழ்க்கையையே தியாகம் செய்ற அளவுக்கு நானோ இந்த குடும்பமோ என்ன செய்தோம் அவளுக்கு??? இரண்டாம் மனைவி,டுத்தவளின் குழந்தைகளுக்கு தாய் என்றுதானே பெயரும் இருக்குது....நானே ஒரு பெண் வாழ்க்கையை வீணாக்கி விட்டேனோ என்று எத்தனை முயற்சி செய்து என்னை மாற்றி சராசரி வாழ்க்கையை வாழ முயற்சித்தேன்...அதையும் நேற்றுதான் செயல்படுத்த தொடங்கினேன்....அதற்கு காரணம் என்ன?அவள் என் மீதும் குழந்தைகள் மீதும் வைத்திருக்கும் அன்பு தானே என்னை மாற்றியது.... இவளுக்கு இதுலாம் புரியாதா?இல்லை தான்தான் அவளுக்கு புரியவைக்க வில்லையோ?நேற்றைய இரவை எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்வித்தாளோ அவ்வளவுக்கவ்வளவு இன்று குற்றவுணர்ச்சி மில் தவிக்க விடுறாளே.....சே....எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இனிமையாக இல்லை....ஏதாவது என்னுள் ஓடிக்கொண்டேயுள்ளது‌...நான் ஏன் இப்படி தவிக்கிறேன்?நானே இப்படி தவிக்கிறேன் என்றால் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்????இப்படி தனியே யோசிப்பதற்கு பதில் அவளிடமே மனம் விட்டு பேசிவிடலாமே....இறங்கி போய் பார்த்தால் அவளோ சோபாவிலே உறங்கியிருந்தாள்....

அவளை பார்த்து சிரிப்புதான் வந்தது....அவளிடம் கோபப்பட்டு வந்துவிட்டோமே.....அவள் என்ன செய்வாள் என்று பார்த்தால் அவளோ சுகமாக தூங்கி கொண்டிருக்காளே....சரி அவளை கட்டிலில் படுக்க வைத்து விடுவோம் என்று அவளை தூக்க முளித்து விட்டாள்....

அவன் கைகளில் இருப்பது கூட தெரியாமல் அவனையே பார்க்க அவன் நடப்பதை வைத்து தான் தன்னை தூக்கி இருப்பதே உறைக்க பதற்றத்தில் அவன் சட்டையை பிடித்து கொண்டாள்...அவன் கட்டிலில் இறக்கிவிட்டு அவளருகே அமர்ந்தான்.....

அவள் அவனை கேள்வியாக பார்க்க,"தூங்கும்மா...."என்றான்...

இவனா சிறிது நேரத்திற்கு முன் அவ்வளவு கோவமாக போனான் என்று யோசித்துக் கொண்டே "தூக்கம் போய்விட்டது"என்றாள்...


"ஓ.....சரி...அப்போ கொஞ்சம் பேசுவோம்...
நீ சொன்ன லாஜிக் எதுவும் சரியில்லை....ஏன் இன்னொரு குழந்தை பெற்று கொள்ள வேண்டாம் என்றாய்?'
உன்னை யாரும் தவறாக பேசிவிடுவார்கள் என்றா???"

பதிலில்லை....

"ஆக அப்படிதான் நினைத்துள்ளாய்....அடுத்தவங்களுக்காக நாம் வாழக் கூடாது....அடுத்தவங்கனா ஏதாவது சொல்லத்தான் செய்வாங்க.....ஏன் இப்ப கூட நீ கார்த்திக் மற்றும் காவ்யா வை கொடுமை செய்வதாகத்தான் பேசுவார்கள்....அதற்காக இந்த குழந்தைகள விட்டு போய்ருவியா?"


"இல்லை....என்னால் முடியாது...."

"அப்புறம் என்ன???
ஒவ்வொரு பொண்ணுக்கும் தான் தாயாகுறது தான் இவ்வுலகத்தில் மிகப் பெரிய சந்தோசம் என்று அம்மா சொல்லுவாங்க......உனக்கு அந்த ஆசையில்லை யா?"

"இருக்கு"

"அவ்வளவு தான்....விடு.... இன்னொன்றும் தெரிஞ்சிக்கோ.....இன்னும் ஒரு குழந்தையோடலாம் விட்றமாட்டேன்...‌இன்னும் பத்து வேணும்....ஆக மொத்தம் பன்னிரெண்டு அதாவது ஒரு டஜன்"சொல்லி சிரித்தான்....

அவளோ வாயில் கைவைத்து வெட்கத்தில் கண்களை விரித்து பார்த்தாள்....

அவளை அணைத்துக் கொண்டே "உனக்கு ஓகே தானே?"என்றான்....

பதில் சொல்லாமல் அவனை அணைத்து கொண்டாள்....

----------------
அடுத்த நாள் காலையில் அனைவரும் உணவருந்தி விட்டு கிளம்பினர்... இருவரும் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு பெரிய வீட்டிற்கு சென்றனர்....
அவளை விட்டு விட்டு மதியம் வருவதாக கூறிக் கிளம்பினான்....

கிளம்பும் முன் அவளை அழைத்து"நேற்று இரவு நீ பேசியது எதுவும் அம்மாக்கு தெரியாது...உன்னோட ஆசை ப்படி பேமிலி பிளானிங் பற்றி அம்மாட்ட சம்மதம் வாங்கு... அதன்பிறகு உன் ஆசையை நிறைவேற்றிருவோம்" என்று கூறினான்...


"ம்ஹும்ம்....வேண்டாங்க....அத்தை ஒத்துக்க மாட்டாங்க..எனக்கும் இப்ப அந்த பிளான்லாம் இல்ல என்று வெட்கப்பட"அடப்பாவி...இப்படி வெட்கப்பட்டு இந்த சின்னப்பையன் மனசு கலைக்கிறீயே...நியாயமா....இதே இப்போ நம்ம தனியா இருந்திருந்தா.....என்ன கூறிருப்பானோ டக்கென்று அவன் வாயை தன் கையால் மூட அவனோ இதுதான் வாய்ப்பு என்று அவள் உள்ளங்கையிலே முத்தமிட அவள் முகமோ வெட்கத்தால் மேலும் சிவக்க அவனோ கண்ணடித்து விட்டு "இரவு பார்த்துக் கொள்கிறேன்" என்றுக்கூறி கிளம்பினான்‌...

அவள் உள்ளே வந்து இன்பத்தின் யுகே அமர்ந்தாள்....இதனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் பேசுவது கேட்காமலே இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டனர் என்பதை அனுபவசாலியாக புரிந்து கொண்டார்.....அவளை எதுவும் கேட்காமலே எழுந்து போய் எடுத்து வந்து அவளுக்கு இனிப்பூட்டினார்...‌

ஏன்னென்று பார்த்தவளுக்கு சும்மா என்று கூறி சமாளித்தார்.....

பாதி வழியில் சென்று பிறகே பழைய பைலின் (file)நியாபகம் வர அவன் வீட்டிற்கு சென்று அதை தேடும் போது தான் ஒரு டைரியை க் கண்டான்....அதை எடுத்து திறந்து பார்த்தவன் அதிர்ந்தான்....


உள்ளம் வசமாகுமா????

தங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன் ???....
 
Nice epi dear.
Nijama ithu unga first story thana? Nalla ezhuthureengo. Heavy part ellam touch pannureenga, kaithertha writers pola anayasama kodukuringo. Nalla nithanama, yosichu, ezhuthurathu theriyuthu. Super ippadithan valaranum. Entha karanam kondum vittudama niraya,niraya katha kodungo. All the best.
 
Nice epi dear.
Nijama ithu unga first story thana? Nalla ezhuthureengo. Heavy part ellam touch pannureenga, kaithertha writers pola anayasama kodukuringo. Nalla nithanama, yosichu, ezhuthurathu theriyuthu. Super ippadithan valaranum. Entha karanam kondum vittudama niraya,niraya katha kodungo. All the best.
மிக்க நன்றி சகோதரி ?...

இது முதல் கதை தான்.....
இறைவனின் அருளும் உங்க எல்லாரின் சப்போர்ட்டும் தான் காரணம்..... நன்றி.....
 
Top