Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 18.2

Advertisement

Admin

Admin
Member
இவள் என் பிழையை பண்ணிப்பாளா….கடவுளே என் குழந்தை பிறக்கும் போது இந்த சமுகத்தில் முன் நான் அந்த குழந்தையின் தந்தையாக தான் இருக்க வேண்டும். அதற்க்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று அவன் மனம் துடித்தது.

அவன் துடிப்பை கூட்டும் வகையில் அந்த கட்சியின் உறுப்பினரான மணி சத்யாவின் அருகில் அமர்ந்தவன் அவனிடம் “அன்னிக்கி அந்த வீட்டுக்கு போவதை பத்தி மகேஷ் கேட்கும் போது எனக்காக போக வில்லை தலைவருக்கு தான் போனேன் என்று சொல்ல வேண்டியது தானே….?” என்று கேட்டுக் கொண்ட ஆதித்யாவை பார்க்க.

ஆதித்யா தன் சிந்தனையிலேயே இருந்ததால் அவன் பேச்சை கவனியாது விட்டு விட்டான். அதை கேட்ட சத்யா அவன் சட்டையைய் பிடித்து “என்ன கேட்ட….? என்று அவனை அடிக்க போக.

அப்போது தான் தன் நினைவில் இருந்து மீண்ட ஆதித்யா .சத்யா எதற்க்கு மணியை அடிக்கிறான் என்று நினைத்து அவர்கள் இருவரையும் பிரித்து சத்யாவை பார்த்து “சத்யா என்ன இது கட்சி ஆபிசா சண்டை போடும் இடமா….? என்று கேட்டதுக்கு.

எதுவும் பேசாது தன்னை பார்த்த சத்யாவை பார்த்திருந்தவன். சத்யா காரணம் இல்லாமல் சண்டை போட மாட்டனே….அதுவும் நான் இருக்கும் போது என்று மற்றவர்களை பார்த்து.

“என்ன நடந்தது.” என்று கேட்க. மற்றவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாது ஆதித்யாவை பார்த்திருந்தனர்.

அனைவருக்கும் மணி பேசியது காதில் விழுந்தது. ஆனால் அதை ஆதித்யாவிடன் சொல்ல தைரியம் தான் இல்லை. மணி சொல்வது உண்மை தான் என்று அங்கு இருக்கும் அனைவருக்கும் இப்போது தெரிந்து தான் இருந்தது.

ஆனால் இதை ஆதித்யாவிடம் கேட்க தைரியம் இல்லாது அமைதி காத்தனர். ஆனால் மணி எதிர் கட்சியின் தூண்டுதலில் பெயரில் விஷயத்தை போட்டு உடைத்து விட்டான்.

அனைவரும் ஒன்றும் பேசாது ஒரு வித சங்கடத்துடன் தன்னை பார்ப்பதை பார்த்து மணியிடமே “என்ன மணி என்ன விசயம். எது என்றாலும் தைரியாம என்னிடமே சொல். நானும் உன்னை கொஞ்ச நாளா பார்த்துட்டு தான் வர்றேன். உன் போக்கு சரியில்லை.” என்றதற்க்கு.

“தலைவருக்கு என்னை பார்க்க எல்லாம் நேரம் இருக்கா என்ன….? கொஞ்ச நாளா உங்க பினாமி பெயரில் இருக்கும் வீட்டுக்கு போய் வரவே நேரம் சரியா இருக்கு. இதில் என்னை வேற பார்க்கிறிங்கனா உங்களை பாராட்டியே ஆகனும் தலைவா….” என்று அவன் பேச பேச ஆத்திரம் வந்தாலும் தன் கோபத்தை கட்டு படுத்தி நின்றான்.

இப்போது நான் ஏதாவது பேசினால் கண்டிப்பாக தாமரை பற்றி பேச்சி தான் எழும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அமைதி காப்பது தான் நல்லது என்று அவன் அமைதி காக்க.

ஆனால் சத்யா அதை எல்லாம் பார்க்காது எப்படி ஆதித்யாவின் முன் இவன் கைய் நீட்டி பேசுவான் என்று நினைத்து அவனை அடிக்கவே ஆராம்பித்து விட்டான். “தலைவரை பார்த்தா பேசுறே…? என்று அவன் ஒவ்வொரு அடிக்கும் சொல்லி சொல்லி அடிக்க.

அங்கு இருக்கும் அத்தனை பேர் தடுத்தும் சத்யாவின் அடி மணிக்கு நிறைய தான் கிடைத்தது. அப்போதும் வாய் மூடாத மணி “நான் உள்ளதை தானே சொன்னேன். எங்கே உன் தலைவரை இல்லை என்று சொல்லு பார்க்கலாம்.” என்று கேட்க.

சத்யாவால் இப்போது ஒன்றும் பேச முடியாது நின்றான். ஆனால் ஆதித்யா “உண்மை தான். நீ சொல்வது உண்மை. ஆனால் எப்போ நீ என்னை சத்யாவிடன் உன் தலைவர் என்று சொன்னியோ….அப்போ உனக்கு இந்த கட்சியில் இடம் இல்லை.” என்று அவனை வெளியேற சொல்ல.

இப்போதும் பதவி ஆதித்யா கையில் இருப்பதால் அவன் சொல்லுக்கு கட்டு பட்டு வெளியேறினாலும் போகும் போது “உனக்கே இந்த கட்சி நிலைக்குமான்னு தெரியலே….” என்று கேட்டு விட்டு தான் வெளியேறினான்.

அவன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்று அனைவருக்கும் தெரியும். ஆதித்யாவுக்குமே தான். அதுவும் தான் தாமரையைய் ஊர் அறிய கல்யாணம் செய்துக் கொண்டால் கண்டிப்பாக மேல் இடம் தன்னை இக்கட்சியை விட்டு வெளியேற்றி விடும் என்று.

இருந்தும் தன் கெத்தை விடாது மற்றவர்களை பார்த்து “இப்போதும் நான் தான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ…மேல் இடம் இந்த பதவியை பறித்தாலும் எப்படி நான் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்று எனக்கு தெரியும். “

அங்கு இருக்கும் மூத்த உறுப்பினர்களை பார்த்து “என்னை உங்களுக்கு நன்கு தெரியும் நான் இந்த கட்சி ஆபிசில் என்னுடைய பன்னிரெண்டாவது வயதில் முதலில் வேலைக்கு தான் வந்தேன் என்பது. இப்போது என்னுடைய முப்பத்திரெண்டாவது வயதில் நான் இந்த நிலைக்கு இருக்கிறேன் என்றால் அதில் உள்ள என்னுடைய உழைப்பு உங்களுக்கு தெரியும்.

சிறுவயதிலேயே சாதித்த என்னால் இந்த வயதில் இந்த கட்சியை விட்டு வெளியேறி சாதிக்க முடியாதா என்ன…?” என்று கேட்க.

அந்த கட்சியின் மிக மூத்த உறுப்பினரான மாணிக்கம் “அப்போ எதிர் கட்சியிடம் சேர்ந்துடுவேன் என்று சொல்றிங்களா தம்பி .” என்று கேட்க.

“நான் எங்கே எதிர் கட்சியில் சேருவேன் என்று சொன்னேன்.”

“இப்போ தான் சொன்னிங்களே தம்பி நான் என் திறமைக்கு இந்த கட்சியை விட்டு போனாலும் இந்த தொகுதி எம்.எல்.ஏ ஆவேன்னு.”

“ஆமாம் இப்போவும் சொல்றேன் இந்த கட்சி என்னை அனுப்பினாலும் இந்த தொகுதி எம்.எல்.ஏ நான் தான். ஆனால் அதுக்காக எதிர் கட்சியில் சேரனும் என்ற எந்த அவசியமும் எனக்கு இல்லை.

சுயேச்சையில் நின்னு கண்டிப்பா என்னால் ஜெயிக்க முடியும். நான் ஒத்துக்குறேன் நான் இந்த தொகுதியில் ஜாதி ஓட்டு தான் எனக்கு அதிகம் கிடைத்ததுன்னு. ஆனால் அனைத்தும் ஜாதி ஓட்டு தான் என்று தப்பு கணக்கு போட்டுடாதிங்க.

ஜாதி ஓட்டிலும் என்னுடைய ஜாதிக்கு மட்டும் இல்லாது என்னுடைய பணியைய் பார்த்தும் ஓட்டு விழுந்து இருக்கு. இதை இல்லேன்னு உங்களாலே சொல்ல முடியாது. முதலில் நான் ஜெயித்தது எப்படியோ ஆனா அடுத்த முறையும் நானே வந்ததுக்கு காரணம் இந்த தொகுதிக்கு நான் அவ்வளவு நல்லது செய்து இருக்கேன்.

அதனால் இனி ஒருவர் யாராவது என் தனிப்பட்ட வாழ்க்கை பத்தி ஏதாவது பேசினா….பேசினது தெரிந்தால் அவ்வளவு தான்.” என்று தன் ஒரு விரல் அசைவில் அங்கு இருப்பவர்களின் அனைவரின் வாயையும் மூடிய ஆதித்யா சத்யாவை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

சத்யாவுக்கு ஆதித்யா பேச பேச வியப்பாக தான் இருந்தது. ஆமாம் தலைவர் சொல்வது சரி தானே...ஏன் ஆதித்யா ஜாதி கட்சியில் மட்டும் தான் ஜெயிக்க முடியுமா….?சுயேச்சையாக அவரால் ஜெயிக்க முடியாதா….? கண்டிப்பாக ஜெயிப்பார் என்று நினைத்துக் கொண்டே ஆதித்யாவை பார்க்க.

ஆதித்யாவும் அப்போது சத்யாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். சத்யா தன்னை பார்ப்பதை பார்த்து “இந்த யோசனை ஏன்டா எனக்கு முதலிலேயே வரவில்லை….? என்று அவனிடம் கேள்வியும் கேட்டான்.

பின் அவனே “அவள் சொன்னது உண்மை தான்டா என் இரத்தம் என்பதால் இவ்வளவு யோசித்த நான் அப்போது அவளுக்காக நான் ஏன்டா யோசிக்க வில்லை. நோகாம நோம்பு கும்பிடனும் மாதிரி எனக்கு தாமரையும் வேண்டும் அதே சமயம் இந்த பதவியும் வேண்டும் என்று தான் யோசித்தேனே தவிர.

இந்த கட்சியை விட்டால் கூட நான் நான் தான். என்று ஏன் யோசிக்கவில்லை.அவளை விரும்பிய நான் எப்படி அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையைய் கொடுத்தேன் என்று என்னாலேயே நம்ப முடியலைடா….” என்று புலம்ப.

“தலைவா நான் தானே உங்களுக்கு இந்த ஐடியாவை கொடுத்தேன்….நீங்களே யோசித்து இருந்தால் நல்ல மாதிரி தான் யோசித்து இருப்பீங்க தலைவா….” என்றதற்க்கு.

“என்னை சமாதானம் படுத்த சொல்லாதே….நீ சொல்லி இருந்தாலும் நான் கேட்டு இருக்க கூடாது.” என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல.

அவனை அமைதி படுத்த பாட்டில் எடுத்தும் அதை தொடாது “வேண்டாம் சத்யா இதை குடித்து தான். நேரா யோசிக்காது கண்ட படி யோசித்து இந்த நிலமைக்கு கொண்டு வந்து இருக்கு .” என்று மறுத்தவன்.

பின் ஒரு முடிவு செய்தவனாய் தன் கட்சியின் மேல் இடத்துக்கு சென்று “நான் என் பதவியை ராஜனாமா செய்கிறேன். “ என்றதற்க்கு.

முதலிலேயே அனைத்து விஷயமும் கேள்வி பட்டு இருந்ததால் “கண்டிப்பா ரஜனாமா செய்து தான் ஆக வேண்டுமா ஆதித்யா….அந்த பெண் கழுத்தில் இன்னும் தாலி கட்டவில்லை என்று கேள்வி பட்டேன். அப்படியே….” என்று பேசியவரை மேலே பேச விடாது.

“பதவி ஆசையில் அவளுக்கு நான் செய்த தீங்கு போதும் இனி நான் அவள் ஏற்றால் அவளுக்கு ஒரு நல்ல கணவனாய் இருக்க ஆசைபடுக்கிறேன்.” என்று சொல்லி முதல் முறையாக ஆதித்யா சத்யா துணையில்லாது தனித்து தாமரை வீட்டுக்கு சென்றான்.
 
???

இந்த அக்கறை முதலிலேயே காட்டியிருக்கலாமே......
ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா???

நீங்க தாண்டா யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சீங்க......
இங்கே ஊருக்கே தெரியுது......

ஊர் வாய்க்கு உலைமூடி போடமுடியாது your honour......

நல்ல முடிவா எடுத்திருக்கிற......
தாமரை பதில்???
 
Last edited:
Top