Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.-22.1

Advertisement

TNWContestWriter028

Well-known member
Member
ஜெய் ஸ்ரீ ராம்


அத்தியாயம் 22


நிஷாவை தவிர ,அனைவருக்கும் நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. கனகா பெண்ணை தனியாக விடாமல், என்னேரமும் அவளை கண்காணித்தபடியே இருந்தார். அன்று வேணி வீட்டினரை அத்தனை பேச்சு பேசியபின்பும். இன்று வரை மனம் ஆறவில்லை அவருக்கு,


இதோ! பார்த்து பார்த்து வளர்த்த அவரின் மகள். இப்படி சுவற்றை வெறித்து கொண்டு அமர்ந்திருக்க ,இவளின் வாழ்வை அங்கு மகிழ்ச்சியாக, யாரோ! ஒருத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அல்லவா ,நினைத்த நேரம் எல்லாம் சிவாவை கரித்து கட்டி கொண்டிருந்தார்.


இப்படியே ஆறு மாதங்கள் கடந்திருக்க,அன்று நிஷாவை பார்க்க வந்திருந்த தனது அண்ணனிடம் புலம்பியபடி இருந்தார் கனகா,அவரின் அண்ணனாலும் தங்கை மகளை இவ்வாறு பார்க்க முடியாததால்,தனது மகன் அவினாசை அழைத்தவர்.


"நிஷாவை திருமணம் செய்து கொள்கிறாயா,"என்று கேட்கவும்.அவனும் சென்ற வாரம் தான் வந்து இவளை பார்த்து சென்றிருந்தான் ,இவளின் இந்த தோற்றம் அவனுக்கும் கஷ்டத்தை கொடுத்திருக்க,"சரி" என்று விட்டான்.அவனின் தாய்க்கு தான் சிறிது மனத்தாங்கல்.


பிறகென்ன அவர்களின் திருமண வேலைகள் பரபரப்பாக நடக்க துவங்கியது. இதற்கிடையில் நிஷா பல முறை அவினாசை அழைத்து.திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாள்.


காரணமே கேளாமல் சர்வாவினால் தான் திருமணத்தை தவிர்க்கிறாள். என நினைத்தவன். இவளின் மறுப்பை சட்டை செய்யவில்லை.


இங்கு சர்வாவிற்கும் ,சிவாவிற்கும் நாட்கள் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.கணவன் மனைவியாக வாழவில்லை எனினும் காதலர்கலாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.


சிவாவிற்கும் இறுதி வருடத்தின் முதல் செமஸ்டர் முடிந்திருந்தது.சேலத்திற்கும், அவர்களின் சொந்த ஊரில் உள்ள சின்ன தாத்தா வீட்டிற்கும் சென்று வந்தனர்.


இடையில் சதா கூட ஒரு தரம் வந்து சென்றிருந்தான்.இப்படியே நாட்கள் நகர,நிஷாவின் திருமண பத்திரிக்கையை எடுத்து கொண்டு, கனேசன் தம்பதியினர்,ஒரு விடுமுறை தினத்தன்று வந்திருந்தனர்.


கனகா மிக மிக மகிழ்ச்சியாகவே இருந்தார்.பின்னே மாப்பிள்ளை அண்ணன் மகனாயிற்றே!இங்கேயும் வந்து பெருமை பேசியபடி இருந்தவர்.தண்ணீர் கொடுத்த சிவாவிடம்,"ஏதாவது விசேஷமா" என்று கேட்க,முதலில் விழித்தாலும்,பின் இல்லை என்று அவள் தலை அசைக்க,


"ம்ஹும்,"என்று பெருமூச்செறிந்தவர்."குண்டா இருக்க இல்லை,சீக்கிரம் தங்காது கர்ப்பப்பையில் ஏதும் பிரச்சனையா இருக்க போகுது,ஹாஸ்பிடல் போய்ப்பாரு" என்று விட,


சங்கரின் முகம் இவரின் பேச்சில் சிறுத்து போனது.உண்மையில் முன்பே சங்கர் இவர்கள் தனி தனி அறையில் தங்கி இருந்ததை கண்டு ,சிவா காலேஜ் சென்றிருந்த நேரம் மகனை கண்டித்திருந்தார்.


"அவள் படிச்சி முடிக்கட்டும்ப்பா" என்றிருந்தான் மகன்.





வேணி, கணேசன் இருவரும்,சங்கர் ஏதேனும் சொல்லி விடுவாரோ!என்று சற்று பதட்டமாக இருக்க,


பல நாட்கள் கழித்து வந்தவர்களை கடிய மனமில்லாமல் சங்கர் மிக மிக சாதாரணமாகவே!இருப்பது போல அமர்ந்திருந்தார்.





இங்கு சிவாவிற்கும்,அப்படி இருக்குமோ! என்ற பயம் வந்து ஒட்டி கொள்ள,இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க ,அதே வேகத்தில் கணவனை தேடி ,அவன் அறைக்குள் வந்தவள். கனகா சொன்னத்தை சொல்லி,


"எதுக்கும் ஒரு முறை ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்" என்க,


இவனுக்கு வந்ததே கோபம்,"அடிங்க,நடக்க வேண்டியது நடந்தா,மத்தது தானா நடக்கும்,எல்லாத்துக்கும் அவசரம்.போய் படிக்கிற வேலையை பாருடி,"என்று கடிந்து கொண்டான், உணர்வுகளை அடக்க பாடாத பாடு பட்டு கொண்டிருப்பவனிடம் வந்து பிள்ளை கேட்டால்,காண்டாகாமல் அவனும் என்ன செய்வானாம்.


"ம்ஹும்,அது எல்லாம் சரியா தான் படிக்கிறேன் "என்று உதட்டை சுளித்தவள்,"உங்க கிட்ட சொல்றது வேஸ்ட் நானே போய்ப்பாத்துக்குறேன்."என்றுவிட்டு நகர போக,


இந்த முறை அவளை இழுத்து அனைத்தவன் ,பல வருடமாய் தன்னை உசுப்பேற்றி கொண்டிருந்த அவளின் உதட்டிற்கு சுளுக்கெடுக்கும் வேலையை செவ்வனே செய்திருந்தான்.


"ஹா,"என்று சிவா உதட்டை அவனில் இருந்து பிரித்து ,நீவி விட்டவள்.மீண்டும் அவனை உசுப்பேற்றுகிறோம். என்று அறியாமலே!தனது இதழ்களை சுளிக்க,


"நான் சும்மா இருந்தாலும்,நீ சும்மா இருக்க விட மாட்டிங்குற,அநியாயத்துக்கு சோதிக்கறடி,ராட்சஷி" என்றவன்.மீண்டும் அவள் இதழ்களில் மூழ்கி விட்டான்.


அப்படியே விட்டிருந்தால்,பெண்ணை கொள்ளை அடித்திருப்பானோ! என்னவோ!அதற்குள் சங்கர். "சர்வா, இங்க வாப்பா" என்று அழைத்து விட்டார்.


தந்தையின் அழைப்பில் நிதானம் ஆனவன்.தலையை கோதிக்கொண்டே வெளியில் வர ,இங்கு பெண்ணுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.முதன் முதலாய் கிடைத்த ஆணவனின் ஸ்பரிசம் .பெண்ணை தடுமாற வைத்தது.கண் மூடி சுவற்றில் சாய்ந்து நின்று,ஆழ்ந்த பெருமூச்செடுத்து ,ஒரு வழியாய் ஆசுவாசமடைந்தவள்,


சொந்த வீட்டிலேயே !திருடியைப் போல பதுங்கி பதுங்கி வெளியில் செல்ல,


ஏதோ ஒரு வேகத்தில் முத்தமிட்டு விட்டோம் ,எங்கே தன்னை தவறாக நினைத்து விடுவாளோ!என்று தட தடக்கும் இதயத்தோடு, அங்கு மாமனின் முன்னே இருந்த இருக்கையில்,அமர்ந்திருந்த சர்வாவிற்கு பார்வை மொத்தமும்.


அவனை திருடியவளின் மேல் தான்,வெட்கத்தில் சிவந்திருந்த அவளின் முகத்தை கண்ட பின்பு தான் அவனுக்கு மூச்சே இலகுவாக வந்தது.


அங்கு கணேசனும் .....பத்திரிகையையும் ,அவர்களுக்காக கொண்டு வந்த உடையையும் பெரியவர்களிடம் கொடுத்தவர்.சர்வாவிடம் "அத்தை பேசினதை மனசுல வச்சிக்காத, கல்யாணத்துக்கு கட்டாயம் வந்துடு ,"என்றவர் சிவாவிடமும் வர சொல்ல,


எப்போதும் புன்னகையோடு அவரிடம் பேசும் பெண். இன்று எதுவுமே சொல்லாமல் சிறு தலை அசைப்பை மட்டுமே கொடுத்திருந்தாள்,சர்வா அதை கூட செய்யாமல் மாமாமனை மட்டுமே தீர்க்கமாக பார்த்திருந்தான்.


அன்று கனகா பேசிய வார்த்தைகள்.அவனை எத்தனை தூரம் வருந்த வைத்தது என்பதை அவன் மட்டுமே அறிவான்.


காலத்திற்கும் அனைவரின் முன்பும். ஒரு பெண்ணுக்கு ஆசை காட்டி ஏமாற்றி,தற்கொலைக்கு தூண்டி விட்டான். என்ற பழியை தன்மேல் சுமத்தி விட்டு,அந்த வார்த்தைகளை மறக்க சொல்லி, எத்தனை இலகுவாய் சொல்லி விட்டார்.


கனகாவுக்கு நடந்தவைகள் தெரியாது ,இவருக்கு தெரியும் தானே! அன்று நிசா ஒன்றும் தற்கொலைக்கு முயற்சி செய்ய வில்லை ,அவளின் காதலியை மறக்க முடியாமல் ,போதை மருந்தை சற்று அதிகமாய் உட்கொண்டுவிட்டிருந்தாள் .


இவளின் அணைத்து பழக்கங்களும் ,சர்வாவிற்கு அவன் சென்னையில் இருந்த பொழுதே தெரியும்.அவனால் முடிந்தவரை தடுத்து பார்த்தான்."மாமாவிடம் சொல்லி விடுவேன்" என்று மிரட்டினான்.


"ட்ரக்ஸ் எப்போதாவது தான் எடுக்கிறேன்,இனி அதை எடுக்கவே மாட்டேன்." என்று சத்தியம் செய்தவள்.கோமலை காதலிப்பதாகவும், அவளின் வழியிலிருந்து விலகி நிற்குமாறும் கூறியவள்.


காதல் விடயத்தை தந்தையிடமும் கூறிவிட்டாள். அதன் பின் சர்வா அவளை கண்டு கொள்ளவில்லை .முதலில் ஸ்தம்பித்த கணேசன் மகளை பல வகையில் சமாதானம் செய்து பார்த்தார்.


பெண் செவி சாய்க்கவில்லை.கணேசன் தந்தை ஸ்தானத்தில் இருந்து தள்ளி நின்று பிஸ்னஸ்மேனாக யோசித்தவர்.கோமலின் தந்தையிடம், உண்மையை சொல்லிவிட்டவர்.


அடுத்து என்ன செய்யலாம் என்றும் சொல்லிவிட்டிருக்க, அதன் படி கோமலின் தந்தை அவளின் அன்னைக்கு உடல் சரியில்லையென்று,பெண்ணை பொய் சொல்லி வரவழைத்தவர்.


உறவில் உள்ள ஓர் பையனுக்கு நிச்சயம் செய்து வைத்து, பெண்ணை வீட்டோடு அடைத்து வைத்து விட்டார்.விஷயம் அறிந்து நிஷாவும் நேரில் சென்று பார்த்தாள்.கோமல் வீட்டினர் தற்கொலை செய்து கொள்வோம். என்று மிரட்டவும் கோமல் அடங்கி அமர்ந்துவிட்டிருந்தாள்,








நிஷாவிற்க்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை ,இங்கு கணேசனும்,நிஷாவை சர்வாவிற்கு திருமணம் செய்து வைக்க வேகமாய் காய் நகர்த்தி கொண்டிருந்த சமயம் தான்,வேணியின் அக்கா இடையில் புகுந்து ஆட்டத்தை களைத்து விட்டிருந்தார்.சர்வா அப்படியே அமர்ந்திருக்க......


அவரும் இவன் பார்வையை உணர்ந்தவர்.அவனின் தோள் மீது கைபோட்டு தனியாக அழைத்து வந்தார்."உங்க குடும்பத்தை குறை சொன்னது தப்பு தான்,ஆனால் எனக்கும் வேற வழியில்லை,நிஷாவோட பக்கம் சரியா தப்பான்னும் தெரியல"











"இதை என்னால் வெளில சொல்ல முடியாது. இது என் பொண்ணோட வாழ்கை,புரிஞ்சிக்கோ சர்வா, "என்று மனிதர் உடைந்து போய்ச்சொல்ல,


"மாமா" என்று அவரை அழுத்தமாக அழைத்தவன்."உங்க நிலமை எனக்கு புரியுது,நாம நிஷாவையும் பார்க்கணுமே!இப்போ இதெல்லாம் சகஜம் மாமா ,"அவன், அவள் தரப்பை சொல்ல வர ,


"என்ன அவள் பக்கம் நான் பார்க்கலை.அவள் யாரைக்காட்டி பிடிச்சிருக்குன்னு சொல்லி இருந்தாலும் ,நான் கட்டி வச்சிருப்பேன்.இவள் என்ன பண்ணி வச்சிருக்கான்னு உனக்கு தான் தெரியுமே!என்னை என்ன பண்ண சொல்ற,அவங்களை புரிஞ்சி சேர்த்து வைக்ற அளவுக்கு ,நான் பிராட் மைண்ட் பர்சன் கிடையாது," அவர் இயலாமையோடு சொல்ல,


சர்வாவிற்கும் அடுத்து என்ன சொல்ல என்று தெரியவில்லை.அமைதியாகி விட்டான்,அவனின் கையைப்பிடித்து கொண்டவர்."சொந்தத்துக்குள்ள உன்னை பேசுவாங்கன்னு எனக்கு தெரியும்,ப்ளீஸ், கொஞ்ச நாள் பொறுத்துக்கோ! நிசா கல்யாணம் முடிஞ்சதும். இந்த பேச்சு எல்லாம் தானா அடங்கிடும்," அவர் ஒரு இறைஞ்சிதலோடு கேட்க ,


இவனுக்கும் வேறுவழியில்லாததால் மண்டையை ஆட்டி விட்டு உள்ளே வந்து விட்டான்.அன்றைய இரவு சிவாவை வைத்து கொண்டே தான் நிசாவிற்கு அழைத்தான்.


"உனக்கு ஓகேவா நிஷா,"இவன் கேட்க,அங்கே அவளோ!

"தெரியல மாமா ,நானா தேடின லைப், இப்போ இல்லை. மத்தவங்க பார்வையில் இது எல்லாம் தப்பாம். முடியாதுன்னா,செத்து போயிடுவேன்னு மிரட்டுறாங்க"


"இவங்களா ஒன்னை அமைச்சு கொடுக்குறாங்க,அதுல ஒன்றி வாழ முடியுமான்னு தெரியல ,ஒரு முயற்சி பண்ணி பாக்குறேன்,"அவள் இப்படி சொன்னதும்.


இப்படி சொல்லும் பெண்ணிடம் அவனும் என்ன சொல்லுவான்."கங்கிராட்ஸ் நிஷா,நல்லா இருப்ப"என்று நம்பிக்கையாய் சொன்னான்.


"உங்க வாழ்த்தை அங்க வந்து சொல்லுங்க ,அத்தான் ....,நான் உங்களை எதிர்பார்ப்பேன்,கூட சிவண்யாவையும் கூட்டிட்டு வாங்க,"அவள் ஆசையாய் சொல்ல,


"ம்ம்ம்"என்று விட்டு வைத்தவனுக்கு யோசனை தான்,நிஷா அழைக்கிறாள், என்பதற்காகவெல்லாம். அங்கு செல்ல விருப்பம் இல்லை.தன்னை கண்டால் உறவுகளின் வாய் சும்மா இராதே!அதனால் அமைதியாகி விட்டான்.


முன்பாவது அவன் நிஷாவோடு பேசுவதை வெறித்து பார்க்கும் சிவண்யா,இன்று கண்டு கொள்ளவே இல்லை.அவள் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையில் உதடு பிதுக்கியவன்.


அவளை தன்னருகே இழுத்து தனது முத்திரையை அவளில் ஆழமாக பதித்து விட்டு தான் விலகி இருந்தான். இங்கு ஒன்றும் அறியாத சிவாவிற்கு உறக்கம் வந்திருந்தாலும்.தன்னவளை முத்தமிட்டவனுக்கு மொத்தமும் வேண்டும் என்ற உணர்வு எழுந்து பேயாட்டம் போட,


அன்றய இரவை கடந்து வருவதற்குள் ,சர்வா படாத பாடு பட்டு போனான்.பல வருடமாய் பெண்ணை விருப்பினாலும்,தள்ளி நின்று கண்ணியம் காத்திருந்தவனால்.அவனின் வணி, அவனின் உடமை ஆன பின்பும் ,எட்டி நிற்க சிரமமாக தான் இருந்தது.








இங்கு வேணிக்கு தான் மிக்க மகிழ்ச்சி, நிஷாவை நினைத்து அவர் ஒரு வித குற்ற உணர்ச்சியில் இருந்தார்.அவளின் திருமணத்திற்கு அண்ணனே வந்து அழைத்திருக்க,என்ன சீர் செய்யலாம் என்ற ஆலோசனையில் இருந்தார்.


நாட்கள் நகர்ந்தது.கோவையில் உள்ள மண்டபத்தில் திருமணம்.இவர்களதை போலவே சனி கிழமை இரவு நிச்சயம் ,அடுத்த நாள் திருமணம்.


சனிக்கிழமை வரை சர்வா சாதாரணமாகவே இருக்க,பரபரப்பாக இருந்த வேணி தானே வழிய வந்து, மகனையும் மருமகளையும் அழைத்தார்.சிவாவிற்கு செல்ல விருப்பமும் இல்லை,அதே சமயம் மறுப்பும் இல்லை.


சர்வா தான்" நீங்களும் அப்பாவும் போயிட்டுவாங்க,"என்ற பின்னும்."நிஷா ஹாஸ்பிடல்ல இருந்த நேரம் கூட அண்ணா, முகுர்த்தத்துக்கு வந்தாங்க,நாமளும் போகனும் இல்லை" அவர் சொல்ல ,


சங்கர் மனைவியை ஆமோதித்தவர்."கிளம்புப்பா" என்க,சர்வாவும்,"நைட் அங்க வந்துட்டு உடனே நாங்க வீட்டுக்கு வந்துடுவோம்,காலைல வரமாட்டோம்"என்று விட்டு தாய்,தந்தையோடு மனைவியை வாடகை காரில் அனுப்பி விட்டவன்.தனது இருசக்கரவாகனத்தில் அவர்களை பின் தொடர்ந்து சென்றிருந்தான்.


to be continued
 
Last edited:
நிஷாவோட மன எண்ணங்கள் புரியுது. இன்னும் நம்ம சமூகம் அந்த அளவுக்கு விசாலமான திங்கிங்கோட இல்லைங்கிறதுதான் உண்மை.
 
Top