Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக -20

Advertisement

கல்யாணம் நிக்க வாய்ப்பே இல்லன்னு தெரியும்... என்ன இருந்தஸ்க்கும் நம்ம நமக்கு பயப்படுறத்தை விட ஊரு உலகத்துக்கு தான் ரொம்ப பயப்படுவோம்... அப்படி இருக்க இது சரி தான்... ஆனா சிவா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தா உன் அத்தை கிட்டையும் சர்வா கிட்டையும் ஏன் உன் அண்ணன் சதா கிட்டையும் உனக்கான நியாயம் கிடைகிறவரை பல்லை காட்டாமா இரு....

கணேசன் என்ன இருந்தாலும் நீங்க ரொம்ப சுயநலவாதி தான்... atleast உன் மனைவி தங்கை கிட்டையாவது உண்மையை சொல்லி இருக்கலாம் தானே...
thanks for the reply sis
 
சிவா நீ கலங்கினது வரை போதும், இனி எதற்கும் அழாதே அதற்கு பதில் சுயநலம் கொண்ட குடும்பத்தை முக்கியமா வேணிக்கு இறங்கி போகாதே அவங்களை கதற விடு...
Writer ஜி இதையாவது சிவாவுக்கு செய்ங்க ????????.

எனக்கு உண்மையில் பார்கவி ஆருத்ரன் ஜோடி ரொம்ப பிடிச்சிருக்கு, எந்த சூழ்நிலையிலும் அவளுக்காக மனம் தளராமல் காதலுடன் காவலுடன் உடன் நின்று அவளுக்காக காத்திருக்கும் ருத்ரன் காதல் வேற வேற லெவல் ????????.
thank you sis:love:
 
ஜெய் ஸ்ரீ ராம்

அத்தியாயம் -20

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில்,சற்று முன்பு தான் சர்வேஸ்வரனால் தனது கழுத்தில் பூட்டப்பட்ட புது மஞ்சள் கயிறோடு,மேடை ஏறி வந்து வாழ்த்துபவர்களுக்கு, செயற்கையான புன்னகையோடு,கண்களில் ஜீவனே இல்லாமல் தலை அசைத்து கொண்டிருந்தாள் சிவன்யா ,

அருகில் சர்வேஸ்வரனும் அவ்வாறே நின்றிருந்தாலும். அவனின் மனதில் ஒரு இதம் இருக்க தான் செய்தது.அதனால் சிறு புன்னகையோடு மேடை ஏறி வரும் நண்பர்கள் படையை அறிமுகப்படுத்தி கொண்டிருந்தான்,அவனின் மனையாளுக்கு

தங்கையின் அருகிலேயே பார்கவியும் ,சரவணனின் மகளோடு நின்று கொண்டிருந்தாள்.சங்கர் மற்றும் சரவணன் இருவரும் பம்பரமாய் சுழன்று வருபவர்களை, பந்தி அனுப்பிக்கு கொண்டு இருந்தனர்,சதாவும் மணடபம் முழுவதும் சுழன்று அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டிருந்தான்.



சுகுணா கூட விடைபெறுபவர்களுக்கு தாம்பூல பையை கொடுத்து கொண்டிருந்தார்.ஆனால் வேணி மட்டும் எனக்கும் இந்த நிகழ்விற்கும் சம்மதம் இல்லை ,என்னும் ரீதியில் அமைதியாக ஒற்றை இருக்கையில் அமர்ந்திருந்தார்,

ஏன்?என்று வந்து விசாரிப்பவர்களிடம்," ஓயாமல் அலைஞ்சதால உடம்பு முடியலை,"என்று சாந்தமாக சொல்லி கொண்டிருந்தார்.

பின்னே "பேசாமல் இருந்தால் இரு ,இப்படி தான் பண்ணுவேன்னா,ஒன்னு நீ உன் பிறந்த வீட்டுக்கு கிளம்பு, இல்லையா, என் மகன், மருமகளோட நான் தனியா போய்டுவேன்."என்று மிரட்டி இருந்தார் சங்கர்.அரசல் புறசலாக நிஷாவின் செய்தியும் நெருங்கிய உறவுகளின் மத்தியில் பரவி கொண்டு தான் இருந்தது.

அப்படி இருந்தும் கணேசன் மட்டும் வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றார்.நீண்ட நேரமாக நிற்ப்பதால் அவளுக்கு ஏதுனும் வேண்டுமோ என நினைத்த பார்கவி ,"குடிக்க ஏதாவது கொண்டு வரவா சிவா" என்க

அவள் அக்காவின் புறம் பார்வையை திருப்பவே இல்லை ,பார்கவிக்கு புரிகிறது தங்கை தன் மேல் கோவமாக இருக்கிறாள் என்று ,அதற்காக எல்லாம் அவள் ஒன்றும் கவலை கொள்ளவில்லை,பின்னே கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று மறுத்தவளை மிரட்டி இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்தவள் பார்கவி தானே அதனால் தான் சிவா அக்காளை முறைத்து நின்றிருந்தாள்.

ஆம் சங்கர் அது போல வாய் விட்டு கதற சரவணன் தான் துடித்து போனார்,இதுவரை ஏன் இவர்கள் சிறை சென்று திரும்பி,பின் அடுத்த அடுத்த இழப்புகளை சந்தித்த பொழுது கூட இப்படி கதறியது இல்லையே!

சர்வாவிற்கும் மனம் நெருடலாகிவிட ,"அப்பா ஒன்னும் இல்லைப்பா பாத்துக்கலாம்" என்று அவரின் கையை பிடித்து கொண்டு அருகில் அமர்ந்து கொண்டான்.அத்தனை நேரம் சிவாவும் தனது போக்கில் பேசி கொண்டிருந்தவள். அப்பபோது தான் சற்று நிதானத்திற்கு வந்திருந்தாள்.

அடுத்து வாயை திறக்கவே பயமாய் இருக்க, அழுத்தமாய் நின்றிருந்தாள்."பாப்பாக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தா இப்படி பேசுவா," என்று சனகர் மகனிடம் சொல்ல,"புரியுதுப்பா ,அவ போகட்டும் விட்டுடலாம்,"என்று சிவாவின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவாறே சொல்லவும்,

சங்கருக்கு இந்து முடிவு கஷ்டமாக இருந்தாலும். "முடிவே முடியாது" என்று நிற்பவளை கையை காலை கட்டியா திருமணம் பண்ணி வைக்க முடியும். அவள் வேறு இத்தனை பேசி இருக்க, அவருக்கும் மனம் விட்டு போனது ,

சரவணனால் எதுவுமே பேச முடியவில்லை என்றாலும்,சிவாவின் தலையை வருடியவர்,கலங்கிய கண்களோடு அழுத்தி கொடுத்தார்.இந்த முறை மாமனின் கண்ணீரை பெண்ணுமே உணர்ந்து கொண்டாள்.

தன்னால் இரண்டு மாமனும் அழுக ,அவளுக்கும் தாள முடியவில்லை,"சாரி மாமா" என்று மெல்லிய குரலில் அவள் முணுமுணுக்க,

"ஸ்ஸ் சிவா பாப்பா,ஸாரிலாம் சொல்ல வேண்டாம்டா, உனக்கு ஒன்னு தெரியுமா,நீ குட்டி பிள்ளையா இருக்கும் பொழுது ,நம்ம தம்பியும்,பாப்பாவும் உனக்கு பின்னாடி ரொம்ப வருஷம் கழிச்சு தானே பொறந்தாங்க, நீதான் அப்போ நம்ம வீட்டுல கடை குட்டி"

"எல்லார் கிட்டயும் ரொம்ப செல்லம், அதுவும் என்கிட்டயும், சர்வாகிட்டயும் எப்படி ஒட்டிக்குவ தெரியுமா,எங்க அம்மா மாதிரி இருக்கேன்னு, அப்பா கூட அடிக்கடி சொல்லுவாங்க,மாத்தி மாத்தி நெஞ்சுலையும், தோளுளையும் போட்டு வளர்த்தோம்டா, உன்னை.. நம்ம வீட்டு இளவரசிடா நீ ,"

"எப்படி, உன்னை பிடிக்காமல் போகும் சொல்லு,எல்லாம் அவ அவங்க வாழ்க்கையை பார்க்க வேண்டிய கட்டாயம் ,சூழ்நிலையால உங்களை விட்டு தள்ளி நின்னாலும் உங்க மேல அதே பாசத்தோட தாண்டா இருக்கோம்."

"இனி, அனாதை அப்படி இப்படின்னு சொல்ல கூடாது ,நாங்க இருக்க வரைக்கும். நீங்க எங்க பிள்ளைங்க தான்,இந்த வயசுல காதல் எல்லாம் சகஜம் தான் ,அதுவும் யாரையோ காதலிக்கலையே !சர்வா யாரு, உன்னோட மாமா பையன் ,உனக்கு அவனை பிடிச்சிருக்குன்னா,அதுல ஒரு தப்பும் இல்லை, அவனை கல்யாணம் பண்ணிக்க எல்லா உரிமையும் இருக்கு,"

"இதுல உன்மேல தப்பு என்ன இருக்குன்னு அழகுற ,அண்ணி, நிசா அப்படி பண்ணின ஆதங்கத்துல பேசிட்டாங்க,தப்பு தான். ஆனால் என்ன பண்ண முடியும் ,அவங்களை உனக்கு தெரியாதா,அந்த நேரம் பேசியிருந்தாலும். அடுத்து குட்டின்னு உன்கிட்ட தான் வருவாங்க ,உங்க அம்மா பேசினா,அந்த நேரம் கோபப்பட்டு திட்டிட்டு கடந்து போயிருப்ப தானே!"

"கஷ்டம் தான், கடந்து வந்துடு குட்டிமா,அங்கேயே நிக்காதா,இல்லை உன்னால முடியலையா,"

"கல்யாணம் வேண்டாமா, சரி விடு நிறுத்திடலாம்,உனக்கு இங்க இருக்க பிடிக்கலையா,சேலத்துக்கு போய்டலாம் ,அங்க வந்து படி ,சரியா ..." என்கவும்.

சிவா சம்மதமாய் தலை அசைக்கும் முன்பே! பார்கவி தங்கையின் கையை இறுக்கமாய் பிடித்தவள்."மாமா அவள் ..அம்மாவை பேசிட்டாங்களேன்னு தான் வேண்டாம்னு சொல்லி அடம் பிடிக்குறா,"

"அவகிட்ட நான் பேசுறேன் ,புரிஞ்சுப்பா, கல்யாணம் முடிவு பண்ண மாதிரியே பண்ணிடலாம்" என்றவள்.மற்றவர்கள் மறுத்து பேசும் முன்பே! தங்கையை அவளின் அறைக்கு இழுத்து வந்தவள்.கதவை தாளிட்டிருந்தாள்.

"அக்கா.... என்னடி பேசுற, அதான் மாமாவே வேணாம். சொல்லிட்டாங்க தானே!" என்று சிவா, கத்த... கத்த....

"ஸ்ஸ் சிவா, அமைதியா இறு கொஞ்ச நேரம்" என்றவள். வெளியில் சென்று தங்கைக்கு தண்ணீரை கொண்டு வந்து குடுத்து குடிக்க சொன்னவள்.

"அம்மாவை பேசிட்டாங்கன்னு நீ பீல் பண்ற ,எனக்கு புரியுது ,ஆனால் அம்மா இப்போ இல்லை,மாமாங்க இருகாங்க ,ஏற்கனவே நம்ம அப்பாவால ,அவங்க எவ்ளோ கஷடப்பட்டாங்கன்னு உனக்கு தெரியும் தானே!"

"நாளைக்கு கல்யாணம் நின்னால் மாமாங்களை,மத்தவங்க என்ன என்ன சொல்லுவாங்க,ஏற்கனவே நிஷா பண்ணனினதுக்கு என்ன என்ன பேச போறாங்களோ, இதுல நீயும் இழுத்து விட போறியா,இப்போ நீ அவங்களுக்கு கஷ்டம் குடுக்குற சிவா உனக்கு புரியுதா,"

சிவா விழுக்கென நிமிர்ந்து அக்காவை பார்த்தாள்."அடுத்தவங்க பேசுறதுக்கு பயந்து நான் கல்யாணம் பண்ணணுமான்னு கேக்குற, எனக்கு புரியுது,நாம சாதரண மனுசங்க சிவா ,அடுத்தவங்களோடு சேர்ந்து தான் வாழ போறோம்,நாம மட்டும் தனியா ஒரு தீவுல வாழ போறது இல்லை."



"இந்த வீட்ல இத்தனை நாள் எவ்ளோ பாதுகாப்பாயிருந்துருப்ப ,வெளில எவ்ளவோ நடக்குது சிவா ,டெய்லி எவ்ளோ நியூஸ் பாக்குறோம் ,ரெண்டு பசங்க இந்த வீட்ல இருந்துருக்காங்க,அதுவும் உனக்கு சர்வாவை பிடிக்கும் , அவங்களுக்கும் உன்னை பிடிக்கும் ,அப்படி இருந்தும். என்னைக்காவது உன்னை தப்பா ஒரு பார்வை பாத்ருபாங்களா,"



"அவங்க படிக்க வச்சதுக்கு காசு குடுக்றேன்னு பேசுனியே!எத்தனை நாள் விடியற்காலை எழுந்து ,உன்கூட உட்காந்து சொல்லி குடுத்துருப்பாங்க,அதுக்கு என்ன பண்ண போற,இன்னைக்கு பணம் தான் எல்லாமே! உன்கிட்ட சொல்லலை நாளும், உனக்காக தானே! அந்த பணக்காரி நிஷாவை வேண்டாம்னு ஒதுக்கி இருக்காங்க,"

"இந்த கல்யாணத்துக்கு மட்டும் சர்வா அவங்க சேர்த்து வச்ச காசு இல்லாமல் அஞ்சு லட்சம் லோன் வாங்கிருக்காங்களாம், நமக்கு ஆளுக்கு பத்து லட்சம் கொடுத்துருக்காங்க ,காலேஜிக்கு கட்டின காசு கொடுக்கும் பொழுது ,இதையும் சேர்த்து கட்டிடு சிவா," என்று பார்கவி நக்கலாய் கூற,

"பாரு" சிவா வலியோடு அழைக்க ,"கஷ்டம் தான் கல்யாணம் பண்ணிக்கோ! சிவா இப்போ நடந்த எல்லாத்தையும் மறக்க முடியாது ,அப்படியே ஒதுக்கி தள்ளிட்டு வெளில வா,"

"நீ வேணி அத்தையை மட்டும் பார்க்காத,அவங்களை தாண்டி, உன் மேல உயிரையே வச்சி உனக்காக உறுகிட்டு இருக்குற சர்வாவை பாரு,காதலிக்கிற எல்லாருக்குமே அவங்க காதல் நிறைவேறுறது இல்லை சிவா,அது ஒரு வரம், அதை ஏன்? எட்டி உதைக்குற," என்று மேலும் மேலும் பேசி தங்கையை கரைத்திருக்க,சிவாவும் வேறு வழியின்றி தலை ஆட்டியிருந்தாள்.அதற்குள் நன்கு விடிந்திருந்தது.

விளைவு....... அடுத்தடுத்து அனைத்தும் எந்த இடையூறும் இன்றி நடந்தேற ,இதோ இருவரும் தம்பதியினறாக,மேடையில் நின்றிருந்தனர்.

அக்கா குடுத்த குளிர்பானத்தை கூட வாங்காமல், அவள் நின்றிருக்க,வேணி அப்போதுதான் அவரின் நெருங்கிய உறவினரோடு மேடைக்கு வந்து நிற்க, வேணி அங்கு இருக்கிறார். என்று தெரிந்தே! பார்கவி "சர்வா மாமா" என்று அழுத்தமாக அழைத்தவள் ,

"பாருங்க உங்க வீட்டம்மா,எதை குடுத்தாலும் குடிக்க மாட்டிங்குறாங்க ,நேத்து நைட் நீங்க ஊட்டி விட்ட போது சாப்பிட்டதாம்,ஒரு வேளை இப்பவும் நீங்க ஊட்டி விடணும்னு நினைக்குறாளோ!"என்று அப்பாவியாய் சொல்ல,

சர்வாவோ!"ஏன்? பக்கி,உனக்கு இந்த வேண்டாத வேலை," என்று பார்கவியிடம் முணுமுணுத்தவன்.சிவாவை நிமிர்ந்து பார்க்க,அவள் முறைத்த முறைப்பில் கப்பென்று வாயை மூடிக்கொண்டு, முன்னால் திரும்பி கொண்டான்.

சிவா மிகவும் மகிழ்வாக எதிர்பார்த்த அவளின் திருமணம்,அவள் நினைத்தது போல தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கான மகிழ்ச்சி தான் அவளுக்கு இல்லவே இல்லை.

'எந்த தருணத்தையும் உணர்ந்து,மகிழ்ந்து.. அனுபவிக்க கூடாதுன்னு கடவுள் நினைச்சிட்டார் போல,' என்று விரக்தியாக எண்ணி கொண்டாள்.

அத்தனை நேரம் இலகுவாய் இருந்த பார்கவி தங்கையின் கையை இறுக்கமாய் பற்றவும்."ஹா" என்ற சிவண்யா,"என்னடி" என்று அக்காவிடம் கேட்க ,

பார்கவி அமைதியாக தனது அலைபேசியை காட்டினாள்,கடந்த இரண்டு மணி நேரத்திலேயே ருத்ரனிடமிருந்து இருபது தவற விட்ட அழைப்புகள் இருக்க, தனது கையை தடவியபடியே! "எடுத்து பேசுடி, அதுக்கே! ஏன்? இப்படி நடுங்குற," என்றிருக்க,

பார்கவி அவளின் வாட்ஸப் சேட்டை திறந்து சிவாவிடம் காட்ட வர,"டீ அக்கா ... ஏற்கனவே பக்கத்துல இருக்கவன், என்னை தெளிய வச்சி, தெளிய வச்சி அடிச்சிருக்கான். இதுல நீ வேற, என்னோட வயித்தெரிச்சலை கிளப்பாமல்,சுருக்கமா சொல்லு" என்க

"சிவா, நேத்து காதல் தப்புன்னு நீ அழுதியா , இதுல மாமாங்களும் பீல் பண்ணாங்களா,அதை பார்த்து எனக்கு கஷ்டமாகிடுச்சி,அதுனால இவங்க எனக்கு மெசேஜ் பண்ணதுக்கு, நான் எந்த பதிலும் அனுப்பலை"

"அதுக்கு ,அதுக்கு அவங்க இப்போ வெளில இருக்காங்களாம் ,நா..நான் போகலைனா,உள்ள வருவாங்களாம்,நேத்து தான் உங்க மாமா அவ்ளோ டென்ஷன் ஆகி இப்போ கொஞ்சம் ரிலெக்ஸ் ஆகிருப்பாரு,"

"திரும்பவும் என்னை பார்த்து, அவருக்கு புதுசா வேற ஏதாவது ஆச்சுன்னா,நான் பொறுப்பில்லைன்னு அனுப்புறாங்க," என்று பயந்தபடி கூற....

"மாம்ஸ்" என்று பல்லை கடித்த சிவாவோ ....அவனிடம் பேசலாம் என நினைத்தாலும் இப்போது முடியாது அல்லவா,

ஆழ மூச்செடுத்தவள்,"அஞ்சு நிமிஷம் தள்ளி நின்னே! உன் மூஞ்சை காட்டிட்டு, வந்து சேரு "என்று எரிச்சலாய் கூற,

பார்கவி "சிவா பயமா இருக்கு, நீயும் வரியா" என்று இருக்கும் சூழல் மறந்து கேட்க,

"ஏற்கனவே! அதையும் இதையும் பேசி ,இவங்களை என் தலைல கட்டிட்டேன்னு, உன் மேல கொலை காண்டுல இருக்கேன். தேவை இல்லாமல் கடுப்பை கிளப்பாதடிக்கா, இவ்ளோ பயம் இருக்கவ அப்போவே! ஒரு செல்பி எடுத்து அனுப்பிருக்கணும்,இப்போ வந்து குத்துது குடையுதுன்னு புலம்பாதே!" என்க,

வாயில் கை வைத்த பார்கவியோ!"போட்டோ கேட்டாங்கன்னு சொல்லவே இல்லையே! உனக்கு எப்படி தெரியும்." என்று அதிர்ந்து கேட்க,

"ஹா ஹா" என்றவளோ!"இது என்ன பரம ரகசியம். பாம்பின் கால் பாம்பறியும் போ போ. யாரு கண்ணுலயும் மாட்டி தொலையாமல் ,சீக்கிரம் வா" என்று அனுப்ப,

அக்காவும் தங்கையும் ஏதோ ரகசியம் பேசுகிறார்கள். என தள்ளி நின்றிருந்த சர்வேஸ்வரன்.இப்போது மனைவியை நெருங்கி நிற்கவும்,அக்காவிடம் பேசியதால் சாதாரண மனநிலையில் இருந்த சிவாவும் , "ம்ம்ஹும்" என்று கழுத்தை வெட்டுவது போல ,திருப்பி கொள்ள,

சர்வாவுமே சற்று இலகுவாக இருந்தவன் "அடியேய்,என் பொண்டாட்டி,பாத்து திரும்புடி கழுத்து சுளுக்கிக்க போகுது,"என்க,

பொண்டாட்டி என்ற அழைப்பிலேயே ! சிவா சீரியஸ் மோடிற்கு மாறிவிட்டிருந்தாள். "ம்ம், இப்போ மட்டும் பேசுற ,இந்த வாய் நேத்து உங்க அம்மா பேசும் பொழுது, எங்க போச்சு,"அவள் கடுப்பாய் கேட்க ,

"அம்மாடி மறுபடியும் முதல்ல இருந்தாடி,"அவன் பாவமாய் கேட்க ,

"கேட்பேன், எனக்கு எப்போ எப்போ எல்லாம் நியாபகம் வருதோ! அப்போ எல்லாம் கேட்பேன்."அவள் ஆக்ரோஷமாய் சொல்ல ,"சரிம்மா கேளு,காலம் முழுசும் டைம் இருக்கு,இப்போ போட்டோ எடுக்குறாங்க பாரு, கொஞ்சம் சாதரணமாக நில்லேன்" அவன் கெஞ்சி கேட்கவும்,

உதட்டை சுளித்து விட்டு, அவள் முன்னால் திரும்பி கொள்ள ,சுளித்த உதட்டை நீவி சுளுக்கெடுத்துவிட ஆசை தான்,இப்போதைக்கு முடியாதே! கிட்ட போனால் கொலைகாரி ஆகிவிடுவாள்.என்பது தான் அவன் அறிந்த விடயமாகிற்றே !அதனால் ஒரு ஏக்க பெரு மூச்சு அவனிடம்.....

இங்கு பயந்து பயந்து வெளியில் வந்த பார்கவியோ,சுற்றும் முற்றும் அவனை தேடியவாறே!வர,அவளை அழைத்தவன். "பார்க்கிங்கில் இருக்கேன்" என்க

அமைதியாக அவனின் bmw அருகே வந்து அவள் நிற்க,இவளை கண்டதும் அவன் காரை திறந்து கொண்டு வெளியில் வர முனைய,அவன் வெளியில் வராதவாறு இரு கைகளாலும், டோரை அழுத்தமாக பிடித்து கொண்டு நின்று கொண்டாள்.பார்கவி

ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு ,அவளை முறைத்து பார்த்தவனோ!

"என்னடி உன் தங்கச்சி சொல்லி அனுப்புனாளா"அவன் எரிச்சலாய் கேட்க. இருந்த பதட்டத்தில் "ஆம்" என்று தலை ஆட்டிவிட்டாள்,பார்கவி

"எது" என்று குரல் உயர்த்தியவன்,"அவள் மட்டும் கல்யாணம் பண்ணிட்டு குஜாலா இருப்பாள்,அடுத்தவன் மட்டும் அப்படியே இருக்கணும். பொறாமை பிடிச்சவள்" என்று சிவாவை திட்ட ,பார்கவி அவனை முறைக்கவும்.

"சரி, சரி திட்டலை ,இப்போ எப்படி இருக்கா,ஓகேவா,"என்க

அதற்கும் பெண் தலையாட்ட ,"எதை கேட்டாலும், தலையை மட்டும் ஆட்டு,"என்று சலித்து கொண்டவனோ!

"டீச்சரம்மா நாமளும், சீக்கிரம் கல்யாணம் பணிக்கலாம்டி, தனியா இருக்க கஷ்டமா இருக்கு,"அவன் ஏக்கமாய் கூற

இவ்வளவு நேரம் பதட்டமாக இருந்தாலும், சாந்தமாக இருந்த பெண்ணவளின் முகம்.'இன்னும் சிவா பிரச்சனையே அடங்கலை ,அதுக்குள்ள என்னோடதா,'என்று ஒரு கலவரத்தை காட்ட,அதற்கே ருத்ரன் மனம் வாடி போக,

"சரி, சரி.... நீ படிச்சு முடிக்குற, வரைக்கும் வெயிட் பண்றேன்." என்றவனோ !

பக்கத்து சீட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து நீட்டியவன்,"இந்தா வாயாடிக்கு, என்னோட கல்யாண பரிசு" என்க,சாதாரண பரிசு என நினைத்து கையை நீட்டியவள். அவன் நீட்டிய கவரில் இருந்த புடவை கடையின் பெயரை பார்த்து, வாயில் கை வைத்து "வேண்டாம்" என்று அவள் மறுக்க

அவனிடம் ஒரு முறைப்பு,பின்னே அது கடை இல்லை ,காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பட்டு மாளிகை,அங்கு ஒரு சாதாரண புடவையே இருப்பதாயிரத்துக்கும் மேலே இருக்கும். என்று சுகுணா சொல்லி கேட்டிருக்கிறாள் அல்லவா,

அவனின் முறைப்பை கண்டு எச்சிலை கூட்டி விழுங்கியவளோ,"இவ்ளோ காஸ்ட்லீ எல்லாம் வேண்டாம்" என்று மறுக்கவும்,அவன் மீண்டும் சற்று அதிகமாய் முறைக்க,நேற்று அவளின் அம்மாவையும் ,தங்கையையும். வேணி பேசியதை உடைத்து சொல்லிவிட்டு ,பெண் கதறி விட ,

"ம்ம்ப்ச் ,ஏய்? கவி அழாதடி,நீ என்னை மயக்கலடி ,நானே வழிய வந்து தான் உன் காலடில மயங்கி கிடக்குறேன்.உன்னை அந்த அம்மா ஏதாவது சொல்லுச்சுன்னா சொல்லு ,அது கதையவே முடிச்சிவிட்டுறேன்" என்று அவன் சொல்லவும்

"அச்சச்சோ! அப்படிலாம் பண்ண வேண்டாம்," அவள் பதற ,

அவளின் பயத்தை உணர்ந்து ,சாதாரணமானவன்,"ம்ஹும் எனக்கு அந்த வாயாடிய பிடிக்கும்டி,எனக்கு தங்கச்சி இருந்தா, அவளை மாதிரி தான் இருந்திருப்பா"அவன் புன்னகையோடு கூற,

பார்கவியின் இதழ்களிலும் புன்னகை,"அவளை எல்லாருக்குமே பிடிக்கும்" பெருமையாய் சொல்ல,ருத்ரனின் விழிகள் தன்னவளை ரசனையோடு வருடியது.

"நான் போகவா," அவள் அமைதியாய் கேட்க ,"வாங்கமாட்டியா" அவன் சோகமாய் கேட்க,"ப்ளீஸ்" அவள் விழி சுருக்கி சொல்ல,அவளின் பாவனையில் கவரப்பட்டவன்.

"நம்ம கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க, அவ வீட்டுக்கு போவேன், இல்லை. அப்போ உரிமையா குடுத்துட்டு வரேண்டி ,அப்போ யாரு, என்ன சொல்றங்கன்னு பார்க்கிறேன்." அவன் சபதம் போல சொல்ல

"தாராளமா குடுங்க,"அவளும் தீர்க்கமாய் அவனை பார்த்தபடியே சொல்லவும் அவனின் மனதில் மகிழ்ச்சி ஊற்று பொங்கி எழ,"டீச்சரம்மா உன் கையை அஞ்சு நிமிஷம் பிடிச்சிக்கவா,"அவன் ஆசையாய் எதிர்பார்ப்போடு கேட்க ,

என்னமோ! பெண்ணவளால் அந்த கணம் மறுக்க முடியவில்லை.அவளும் நீட்ட அமைதியாய் பற்றி கொண்டான். எதுவும் பேசவில்லை, மௌனமாய் சில நிமிடங்கள்,அவர்களுக்கானதாய் நகர ,

சிவண்யா அழைத்து விட்டாள் அக்காவை,"ஏண்டி கல்யாண பொண்ணா, மணமேடையில் இருந்தாலும்,உன் தங்கச்சிக்கு மூக்கு வேர்த்துடுமே!" அவன் புலம்ப

புன்னகையோடு அவனுக்கு தலை அசைத்து விடை கொடுத்தவள் .தனது கையை உருவி கொண்டு உள்ளே செல்ல,உதட்டில் உறையும் மென்னகையோடு அவள் சென்ற திசையை பார்த்திருந்த ருத்ரன்.

"டீச்சரம்மா ,ரொம்ப காக்க வைக்காதடி,நான் சின்ன பையனா இருக்கும் போது,பெரிவங்களுக்கு கல்யாணம் ஆச்சு ,இப்போ பெரியவன் ஆகிட்டேன். என்னை விட சின்ன பசங்களுக்கு கல்யாணம் ஆகுது ,நான் மட்டும் அப்படியே இருக்கேன்" என்ற புலம்பலோடு, இடத்தை காலி பண்ணியிருந்தான்.

சிவந்த முகத்தோடு தனக்கருகில் வந்து நிற தமக்கையை பார்த்த பின்பு தான் சிவாவிற்கு உயிர் வர ....அதன் பின் தன்போக்கில் அவள் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்,

அதுதாங்க மேடைக்கு வாழ்த்த வரவங்களுக்கு தலை ஆட்டுறது .....



வருவாள் ..........















இந்த கல்யாணத்தை சிலரால் என்ன, பலரால் ஏத்துக்க முடியாது தான் ,என்ன பண்ண,கற்பனை கதைனாலும் கொஞ்சம் ரியாலிட்டியா இருக்கணும்னு பாக்குறேன்,நம்ம வீட்டுல மண்டபம் வரை வந்த கல்யாணத்தை, நாம நிறுத்த விடாமல், நடத்தி தானே முடிப்போம்,அப்படி நினைச்சி ,என்னையும் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சு ........

உங்க எல்லாரோட ஆதரவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்,














Super ?
 
Top