Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 25 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் இருபத்தி ஐந்து :

நினைத்தது போல ராஜராஜனை கதற தான் விட்டால் அங்கை. எப்படியும் தன்னை அன்று காலையிலேயே பார்க்க வருவான் என்று உள்ளுணர்வு சொல்ல அம்மாவை கூட்டிக் கொண்டு மனோவின் வீட்டிற்கு சென்று விட்டாள்.

அதற்கு தக்கார் போல, வீட்டில் இருந்து அம்மாவை கூட்டிக்கொண்டு மில்லுக்கு செல்லும்முன் அங்கே வர அவர்கள் அதற்கு முன்னேயே கிளம்பியிருந்தனர்.

வீடு பூட்டியிருக்க, உடனே அவளை அழைத்தான் இன்னம் அவளின் ஃபோன் சுவிட்ச் ஆஃப் தான். பின் ராஜலக்ஷ்மியை அழைத்தான், அவர் எடுக்கவும் “என்ன அத்தை வீடு பூட்டியிருக்கு” என்றான்.

“இங்க மனோவை பார்க்க வந்தோம்” என்றார் சங்கடமாக.

“ஓஹ்” என்றவன் “என்ன அச்சு அங்கை ஃபோன்க்கு”

“என்னடி ஆச்சு உன் மொபைல்க்கு” என்று அவர் கேட்பது இவன் காதில் விழுந்தது.

“அதுக்கென்ன நல்லா தான் இருக்கு, நான் அதை ஆன் பண்ணலை. எனக்கு யாரோடையும் பேசற மூட் இல்லை” என்று அவள் பதில் சொல்வதும் இவனின் காதில் விழுந்தது.

கேட்டிருந்தவன் ராஜலக்ஷ்மி பேசும்முன்னமே கை பேசியை அணைத்து விட்டான்.

“ஏன் அங்கை இப்படி பண்ற? பாரு அவன் போன் வெச்சிட்டான்”

“ப்ச், விடுங்கம்மா” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.

இதோ இரண்டு நாட்கள் ஆகிற்று, இன்னும் அவர்கள் வரவில்லை. அவளின் கைபேசியும் உயிர்பிக்கப்படவில்லை.

அவனும் விடாமல் அடித்தான், ஒரு நாளைக்கு நூறு முறையாவது அடித்திருப்பான்.

ம்கூம், அது சொன்னது “நீங்கள் அழைக்கும் நபரின் எண்ணானது தற்போது சுவிட்ச் ஆஃப் செய்யப் பட்டுள்ளது” என்று.

ராஜலக்ஷ்மிக்கோ மனோவிற்கோ அழைக்கவில்லை. அவனின் மனது துவண்டு போனது, அதனை யார் அங்கைக்கு சொல்வது.

தில்லை தமிழ்செல்வனுடன் தேவைக்கு அதிகமாய் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. பொதுவில் தில்லை நிறைய பேசும் பெண்மணி, இப்போது என்னவோ அமைதியாகி விட்டார்.

மூன்றாவது நாள் காலையில் உணவு உண்ணாமல் அவன் செல்ல, தில்லை “சாப்பிட்டு போடா” என்றார்.

“பசிக்கலைம்மா” என்று சொல்லி அவன் கிளம்ப,

நாச்சி தான் “என்னடா நானும் பார்க்கறேன், நீ சரியா சாப்பிடறதேயில்லை, ஏன் கல்யாணத்துக்கு முன்ன நீ சாப்பிடவேயில்லையா? இப்போ அவ இல்லைன்னா சாப்பிடமாட்டியா?” என்று பேசினார்.

அங்கே தான் சுவாமினாதனும் தமிழ்செல்வனும் இருந்தனர்.

சுவாமினாதனுமே அங்கே ஊரில் ராஜியும் அங்கையும் இருந்தால் சென்று அங்கையை வீட்டிற்கு வா என்று அழைத்து விடலாம் என்று தான் நினைத்தார்.

ராஜராஜன் அவ்வளவு பேசிய பின் அவருக்கு அது சரியோ, தவறோ, அழைத்து வர தான் நினைத்தார்.

ஆனால் அவர்கள் இல்லை.

“ஏன் கிழவி சும்மா சவுண்ட் விடற. என் கல்யாணத்துக்கு அப்புறம் கூட எங்கம்மா தான் எனக்கு சாப்பாடு சமைச்சாங்க, போட்டாங்க. என்னவோ என் பொண்டாட்டி சமைச்சு போட்ட மாதிரி நீ பேசற, அவ பரிமாறினது கூட இல்லை”

“நிஜம்மா எனக்கு பசியில்லை” என்று அவன் சொல்ல,

“ஏன் பசி இல்லை?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. சும்மா நை நைங்காத என்னை பார்த்துக்க, எனக்கு தெரியும்” என்று எரிச்சல் மிகுதியில் கத்தினான்.

“உன் நல்லதுக்கு தாண்டா சொல்றேன்” என்று அவர் தணிவாய் பேச,

“என்ன நல்லது? சாகும் போது இப்படி தான் உன் புருஷன் எனக்கு நல்லது பண்றேன்னு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சு என்னை முடிச்சிட்டு போயிட்டார். இனி நீ கிளம்பாத”

“என்னை யாரும் பார்க்க வேண்டாம். என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்று அப்படி ஒரு கத்து கத்திவிட்டு செல்ல, வீடே அவனை கவலையாய் பார்த்தது.

உண்மையில் அவனுக்கு நிறைய பசித்தது, ஆனால் உண்ண முடியவில்லை மனதில் ஏதோ ஒரு பாரம்.

அங்கை அன்றி அவனை சரி செய்ய யாரால் முடியும்.

சுவாமிநாதன் ராஜலக்ஷ்மிக்கு அழைத்தார், “ஏன் அங்கை இன்னும் வீட்டுக்கு வரலை?” என்று கேட்க,

“தெரியலைண்ணா, அவளை ராஜன் கூப்பிடவேயில்லை. நான் கொண்டு வந்து விடறேன்னு கூட சொல்லிட்டேன் அவன் வேண்டாம்னு சொல்லிட்டான்”

“நானும் வாசுகியும் வந்து கூட்டிட்டு வரவான்னு அங்கை கிட்ட கேளு”

அவளோ “வேண்டாம், ராஜன் வந்தா மட்டும் தான் நான் வருவேன்னு சொல்லிடுங்க” என்று விட்டாள்.

பெரியவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

“மா, நீ போய் அங்கையை கூட்டிட்டு வரச் சொல்லு” என்று நாச்சியிடம் சொல்ல,

“ஏன் நீ சொல்ல மாட்டியா?”

“மா” என்று சுவாமிநாதன் கத்தி விட்டார், “இப்ப நாம வழக்காடறதா முக்கியம், சொல்றதை செய்” என்று அவர் வள்ளென்று விழ,

நாச்சி “சரி” என்பதை போல தலையசைத்து வைத்தார்.

தில்லை வேறு “ரதி என் கண்ணுக்குள்ளயே நிக்கறா அத்தை. என்ன தான் நான் வளர்த்தாலும், பாருங்களேன் என் கண்ல காமிக்காம கொள்ளாம எப்பவும் கூட்டிட்டு போயிடறா” என்று அவரும் கலங்க,

“போய் கூட்டிகிட்டு வாய்யா” என்றார் நாச்சி ராஜனிடம்.

“போ கிழவி, நான் போகலை” என்று விட்டான்.

“ஏன்யா?” என்றவரிடம்,

“போகலை விடு” என்று விட்டான்.

அதை அங்கையிடம் அப்படியே ஒலிபரப்பு செய்யப் பட,

இத்தனை நாட்களாய் அணைத்து வைக்கப்பட்டிருந்த அலைபேசி உயிர்பிக்கப்பட்டு அவனுக்கு அழைப்பை கொடுத்தது.

அழைப்பை பார்த்ததுமே எடுத்தவன் பேசாமல் அமைதியாய் இருக்க,

“என்ன என்னை வந்து கூப்பிடமாட்டீங்களோ?”

“எதுக்கு நீ எல்லார் முன்னமும் என்னை அசிங்கப் படுத்தவா?” என்றான் அப்படி ஒரு அழ்ந்த குரலில்.

“என்ன உன்னை அசிங்கப்படுத்தினேன்?”

“என்கிட்டே பேசாதடான்னு என்கிட்டே சண்டை போடலாம். ஆனா உங்கம்மாக்கிட்ட சொல்வியா நீ, ஃபோனை சுவிச் ஆஃப் பண்ணிட்டு”

இப்படியெல்லாம் அங்கை நினைக்கவில்லை.

“நீதான் என்னை கூப்பிடலை. நான் கூப்பிட்டாலும் கோபப்பட்ட” என்றாள் இறங்கிய குரலில்.

“உன் மனசுல எங்கோ ஒரு மூலையில இருக்கு இல்லையா நான் உனக்கு தோதில்லைன்னு. அப்படி தான் போல” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.

“நான் எப்போ அப்படி சொன்னேன்” என்றாள் இறங்கிய குரலில்.

“நீ சொல்ல வேண்டாம் அங்கை, ஆனா எனக்கு அப்படி தோணுது”

“சரி உனக்கு தோணுது, அதுக்கு என்ன பண்ணலாம்? நீ அங்க நான் இங்கன்னு இருந்துடலாமா? இல்லை பிரிஞ்சிடலாமா? இதுக்கு என்ன தான் சொல்யுஷன்!”

“நான் போக சொல்லலை, நீ தான் போன”

“போனா விட்டுடுவியா நீ, ஏன் போனேன்? இருந்தா சண்டை வரும்னு போனேன். நீ என்னை தேடறன்னு போனேன், உன் விரதம் கெட்டுடக் கூடாதுன்னு போனேன், கிளம்பும் போது திரும்பவும் உனக்கும் எனக்கும் சண்டை வந்துடுச்சு. இது தான் சாக்குன்னு நீ எனக்கு ஃபோன் கூட பண்ணலை, தொலைஞ்சது சனியன்னு என்னை விட்டுட்டீங்க” என்றாள் ஆவேசமாய்.

“ஏய் சனியன் அது இதுன்ன தொலைச்சிடுவேன்?”

“என்ன ஃபோன்ல மிரட்டுற, தைரியமிருந்தா நேர்ல வா?”

“எனக்கு உன்னை பார்க்க பிடிக்கலை” என்றான் கடுப்பில்.

“அதை நேர்ல வந்து சொல்லிட்டு போடா, சும்மா முகத்தை பார்க்காம டைலாக் அடிக்க கூடாது”

“பார்த்தா சொல்ல மாட்டேன்னு நினைப்போ உனக்கு”

“சும்மா பேசாத நேர்ல வந்து சொல்லிட்டு போ?”

“எங்க வரணும்”

“மனோ வீட்ல இருக்கேன்” என்று அவள் சொல்ல,

“நீ எங்க இருக்கன்னு கேட்கலை, எங்க வரணும்னு கேட்டேன்”

“ம்ம், திருச்சி கலக்டர் பங்களாக்கு வா” என்றாள் திமிராக.

இவர்கள் பேசியது மதிய நேரம், உடனே செல்ல முடியாதபடி அவனுக்கு நிறைய வேலைகள்.

அவன் கிளம்பும் போது மாலை ஆறு மணி ஆகிவிட , வீடு வந்து குளித்து உடை மாற்றி அவன் கிளம்ப, தில்லை “எங்கே” என்று கேட்காமல், “அங்கையை பார்க்கவா?” என்றார்.

ஆம்! என்பது போல அவன் தலையசைக்க, “ரதி கண்ணுக்குள்ளயே நிக்கறாடா. டெஹ்ராடூன்ல இருந்தா தூரமா இருக்கான்னு விட்டுடறேன். இப்போ இங்க தானே பார்க்கணும் போல இருக்கு” என்றார்.

“நானும் வருகிறேன்” என்று சொல்லாமல், “நானும் வரவா” என்ற ஒன்று.
 
:love::love::love:

எம்மோவ் அவங்களே இழுத்துக்கோ புடிச்சுக்கோன்னு இருக்காங்க......... நீங்க வேற........ நீங்க போய் தமிழ் என்ன பண்ணுறாருன்னு பாருங்க...... அப்புறம் பேத்தியை பார்க்கலாம்.........

ஸ்வாமிநாதன் மலை இறங்கிட்டாரு......... தமிழ் எப்போ???
பாவம் நாச்சி பாட்டி......... மகன்கள் பேரன் பேத்திகளுக்கிடையில் நான்முனை தாக்குதல்.......
பையன்கள்....... பொண்ணு......... பேரன்......... பேத்தி.......
யாருக்கு நியாயம் சொல்றது........

கலெக்டர் பங்களாக்கு டீக்கா டிரஸ் பண்ணிட்டு போறானே........
பார்த்ததும் சண்டை போடுவானா இல்லை சமாதானமா???

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பாக்காவிட்டால் நானும் பாக்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் :p:p:p
 
Last edited:
உனக்கான என் தேடலை
தொலைவு சென்றால் நீயும் அறியவில்லை
அனைத்து வைத்த தொலைபேசியும் அறியவில்லை!!
மீண்டும் மீண்டும் முயன்று தோற்ற
என் அலைபேசி அறியும்
 
Last edited:
Top