Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி ( காதல் வலம் வர ) 24 1

Advertisement

Admin

Admin
Member
இப்போ இது ஒரு சின்ன எபி தான், நீங்க காத்துட்டு இருக்குறதால் எடிட் பண்ணி போடறேன்.
இதோட அடுத்த பார்ட் முடிஞ்சா நாளைக்கு இல்லை நாளை மறுநாள் தான்.


அத்தியாயம் இருபத்தி நான்கு :

அம்மாவும் அத்தையும் வந்து தன்னை காட்சி பொருளாய் பார்க்கவும், அழுகையோடு முகத்தை புதைத்துக் கொண்டாள்.

“அத்தை தலைவலிக்கு மாத்திரை எதுவும் இருக்கா?”

“இல்லையே ராஜன்” என்றார் அவர்.

“இவளை பிடிங்க” என்று அவரிடம் ரதியை கொடுத்தவன் வெளியில் கிளம்பி சென்றான், மெயின் ரோட்டில் இருக்கும் மெடிக்கலில் மாத்திரை வாங்கி வர.

பத்தே நிமிடத்தில் மாத்திரையுடன் வந்தவன் படுத்திருந்த அவளை எழுப்பி தண்ணீருடன் கொடுக்க,

அந்த வலியிலும் “என்ன மாத்திரை இது? பேரே இல்லை!” என்றாள்

“ஒரு மாத்திரை கட் பண்ணும் போது பேர் எப்படி வரும், வலி நிவாரணி தான்”

அப்போதும் அவள் மாத்திரையை பார்க்க, “என்னை நம்பவே மாட்டடி நீ, முழுங்கு முதல்ல” என்று அதட்டினான்.

அதன் பின்னரே வேகமாய் விழுங்கினாள்.

பின் கண் மூடி படுக்க, மெதுவாய் எட்டி பார்த்தான், அம்மாவும் அத்தையும் ரதிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்க, அப்படியே சத்தம் வராமல் கதவை சாத்தி தாளிட்டவன், அவளின் அருகில் வந்து, வாங்கி வந்திருந்த தலைவலி தைலத்தை எடுத்து மெதுவாய் தேய்த்தான்.

அவன் நின்று கொண்டே தேய்க்க, அவன் கை எட்டாத தூரம் படுக்கையில் நகர்ந்து படுத்தாள். வேண்டாம் போல என்று நினைத்தவன் நகரப் போக,

“டேய் உட்காருடா” என்றாள் கடுப்பாக.

அவன் அமரவும் அவன் மடியில் தலை வைத்துக் கொண்டு அவனின் கையை எடுத்து அவளின் நெற்றியில் வைக்க, மெதுவாய் பிடித்து விட ஆரம்பித்தான்.

வெகு சில நிமிடங்களில் அவள் உறங்கி விட, மெதுவாய் அவளின் தலையை தலையணைக்கு மாற்றி கதவை திறந்து வெளியில் வந்தான்.

அங்கே அவளின் மகளை இரண்டு பாட்டிகளும் உறங்க வைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் ஒரு கனமான மௌனம் அங்கே, “அம்மா வீட்டுக்கு போவோமா?” என்றான்.

“உன் பொண்டாட்டியை என்ன பண்ண போற ராஜன்” என்றார் ராஜலக்ஷ்மி பளிச்சென்று.

“எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க அத்தை” என்றான்.

“எதுக்கு?” என்றார் புரியாதவராக.

“வீட்டுக்கு கூட்டிட்டு போக அத்தை”

“ஏன் ராஜன் என்ன ஆச்சு? நான் கொண்டு வந்து விடட்டுமா? அவளை என்னால சமாளிக்க முடியும்னு தோணலை, நீ நல்லா இருந்தா தான் அவ நல்லா இருப்பா, உன்னை இப்படி பார்த்த பிறகு அவளால தள்ளி இருக்க முடியாது ராஜன். அவளை உன்னோட கூட்டிட்டு போயிடு” என்றார் தெளிவாக.

“கொஞ்சம் எனக்கு டைம் குடுங்க அத்தை”

“தாங்க மாட்டா ராஜன் அவ, உன் மேல கோபம் தான் அதிகமாகும், எல்லோர் முன்னமும் சண்டை போடுவா?”

“நான் அவ கிட்ட பேசறேன் அத்தை”

“என்னவோ போ ராஜன், எனக்கு மனசுக்கு சரியா படலை” என்று வெளியில் திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டார்.

உறங்காது விளையாடிக் கொண்டிருந்த மகளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுக்க, ஐந்தே நிமிடத்தில் அவளும் உறங்கி விட, ரதியை கொண்டு போய் அங்கையின் பக்கத்தில் படுக்க வைத்து வெளியே வந்தவன்,

“கிளம்பும்மா” என்றான்.

அவர் அமைதியாய் அவனின் பின்னே வந்தார், வேறு என்ன தான் செய்வார்.

ராஜியிடம் இருவரும் சொல்லிக் கொண்டு கிளம்ப அவர் தலையை கூட அசைக்கவில்லை.

“அத்தை ப்ளீஸ், நீங்க இப்படி உட்கார்ந்து இருக்காதீங்க. உங்க முகம் இப்படி இருந்தது தேடி வந்து சண்டை போடுவா , எங்களுக்குள்ள இன்னும் தான் முட்டிக்கும்” என்று சொல்லி சென்று விட்டான்.

அவன் சொல்வதில் இருந்த உண்மை புரிய, அங்கை கண்விழித்த போது, முயன்று முகத்தை சீர் படுத்தினார்.

நல்ல உறக்கம், கூட மருந்து, மாத்திரை என ஐந்து மணி நேரம் கழித்து அங்கை கண் விழித்த போது மாலை மங்கி இருக்க,

பாட்டியும் பேத்தியும் வீட்டின் முன் இருந்த காலி இடத்தில் பந்தை போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

“மா பசிக்குது” என்று அங்கை வர, அவளுக்கு உணவை எடுத்து வைத்தவர் “தலைவலி பரவாயில்லையா” என்றார்.

“ம்ம், இப்போ இல்லைம்மா” என்றவள், “அத்தை எப்போ போனாங்க” என்றாள்.

“நீ தூங்கின கொஞ்சம் நேரத்துக்கு எல்லாம்”

“ம்ம்” என்றவள், “ராஜன் எதுவும் சொன்னானா?” என்றாள்.

“ஒன்னும் சொல்லலை” என்று அவர் சொல்ல,

அதற்கு பதிலும் சொல்லவில்லை, வேறு எதுவும் கேட்கவுமில்லை.

பின்பு நேரத்தை பார்க்க ஏழு மணி காண்பிக்க, “மா, ராஜன்க்கு ஃபோன் பண்ணி வீட்ல என் லேப்டாப் இருக்கும் எடுத்துட்டு வரச் சொல்லுங்க” என்றாள்.

“நீயே அங்க போயிடுவா, எதுக்கு இப்போ அது?”

“மா, சொன்னதை செய்ங்க. இல்லை, நான் மனோண்ணா கிட்ட சொல்லி புதுசு வாங்கவா?”

மறு பேச்சு பேசாமல் அவர் அதை ராஜனிடம் தெரிவிக்க, “நான் இங்க வேலையா டவுன் வரை வந்தேன் அத்தை, வர லேட் ஆகும். நாளைக்கு காலையில கொண்டு வர்றேன்” என்றான்.

“எவ்வளவு நேரமானாலும் எனக்கு வேணும்னு சொல்லுங்கம்மா?” என்றாள் பதிலுக்கு.

ராஜியை ஸ்பீக்கரில் பேச சொல்லயிருக்க, ராஜன் சொல்லியது அங்கைக்கு கேட்டிருக்க, அவள் பேசுவதும் ராஜனுக்கு கேட்டது.

“இப்போ எதுக்கு அவ்வளவு அவசரமாம்” என்றான்.

“என்னவோ அவசரம் அதை தெரிஞ்சி இவர் என்ன பண்ண போறாராம்?” என்று பேச,

இவர்கள் சண்டை முடியவே முடியாதா என்று ராஜியின் மனது வெகுவாக விட்டு போனது.

இரவு ராஜன் வந்த போது பதினோரு மணி, அப்படி ஒரு களைப்பு, அவனின் முகத்தில். ராஜியும் ரதியும் உறங்கியிருந்தனர்.

திண்ணையில் அந்த இருட்டில் அங்கை அமர்ந்திருந்தாள்.

“எதுக்கு இப்படி வெளில தனியா உட்கார்ந்திருக்க?”

“பின்ன என்ன பண்ண? என் புருஷன் அவனோட வீட்டுக்கு என்னை கூட்டிட்டுப் போகலை, அப்போ இப்படி தனியா தானே உட்காரணும்” என்று சொல்ல,

“ப்ளீஸ் அங்கை, என்னால சண்டை போட முடியாது. என்னை விட்டுடு” என்றான் சலிப்பாக.

அங்கையின் முகம் அப்படியே மாறி விட,

அதனை உணர்ந்து, “பாரு, நான் இன்னும் சாப்பிடக் கூட இல்லை. அப்படி என்ன பிடிவாதம் உனக்கு, நாளைக்கு காலையில கொண்டு வந்து குடுப்பேன் தானே” என்றான் இருந்த களைப்பில்.

“சாப்பிடறீங்களா?” என்றாள்.

“இல்லை, அம்மா முழிச்சிட்டு இருப்பாங்க”

“சரி, கிளம்புங்க” என்று வாய் வார்த்தையாய் சொல்லாமல் தலை அசைக்க,

“ரதி என்ன பண்றா?” என்றான்.

“தூங்கிட்டா?”

“சரி, நீ உள்ள போ, நான் கிளம்பறேன்”

“கேட் பூட்டணும் நீங்க கிளம்புங்க”

ராஜன் முன்னே செல்ல, அங்கை பின்னே தான் நடந்து வந்தாள். நடையை மெதுவாக்கினான், அவள் அருகில் வர, அவன் மெதுவாக, அவளும் மெதுவாகினாள்.

அதனை உணர்ந்தவன் திரும்பி அவளை பார்த்தான்..

அந்த இரவில் வனமோகினியோ எனும் தோற்றம். மதியம் அவன் வந்த போது தலைவலியில் துடித்திருந்தவள் போலவே இல்லை.

மதியம் பார்த்த போது சல்வாரில் இருந்தவள், இப்போது எழுமிச்சை நிற புடவையில் இருந்தாள். அது மேனியை பாந்தமாய் தழுவி இருந்தது. அவளின் மேனிக்கும் புடவைக்கும் வித்தியாசமே தெரியவில்லை.

இருவரும் நிற்க, ஊதக் காற்று வீச, அதில் அவளின் மேனி சிலிர்க்க, அதை பார்த்து தான் அவனின் மேனி சிலிர்த்தது. அந்த காற்று அவனை அசைக்கவில்லை.

“தூங்கி எழுந்து குளிச்சியா?” என்றான்.

“ஆம்” என்று அவள் தலையசைக்க, கிளிப்பிற்குள் முடியை தூக்கி கட்டி இருந்தாள்.

அருகில் வந்தவன் “தலைக்கு தண்ணி ஊத்தினியா” என்று சொல்லி அவளின் கிளிப்பை எடுத்து விட,

வேகமாய் அந்த முடி அவளின் முதுகினில் பரவ, தொட்டு பார்த்தான் ஈரமாய் இருக்கிறதா என்று.

ஈரம் இல்லை, பின்பு இன்னும் நெருங்கி, அந்த கூந்தலில் கைகளை அலைய விட்டவன், “கொல்றடி என்னை” என்ற வார்த்தையை அவன் முடித்த நேரம்,

“உன்னை விடவா” என்றவள் அவனை இன்னுமே உரசி நிற்க, அதுவே தப்பாகிப் போனது.

“நீ என்னை முதலில் தொடுவாயா, இல்லை நான் உன்னை முதலில் தொடுவேனா” என்று அவர்களின் வார்த்தைகளை விட உதடுகள் சண்டையிட காத்திருக்க,

“நீயா, நானா?” என்று கண்களும் பார்த்திருக்க,

கூந்தலில் அலைந்திருந்த கைகள் அதை இறுக்க ஆரம்பித்தது. அது ஒரு வலியை கொடுக்க, “கையை எடு வலிக்குது” என்றாள் உதடு துடிக்க,

“அந்த வலியை நீ எனக்கு குடு, கையை எடுக்கிறேன்” என்றான் அவனுமே.

“முடியாது” என்பது போல அவள் நிற்க,

இன்னுமே கூந்தலை இறுக்கி பிடித்தான்.

“ரொம்ப வலிக்குது” என்றவள் அவனின் கையை எடுத்து விடப் போக, ஒரு கையால் அவளின் கூந்தலை பற்றி இருந்தவன், மறு கையால் அவளின் இடையை சுற்றி தன்னோடு இறுக்க, இரு கைகளிலும் அவனின் பிடி இறுகியது.

வேறு வழியில்லாமல் அந்த வலியை அவனின் உதடுகளுக்கு கொடுத்தாள், அவளின் உதடுகளால். அதன் பிறகே அவனின் பிடி தளர, இருவரின் உதடுகளின் இறுக்கமும் கூடியது. வலிக்க வலிக்க ஒரு முத்தம்!

அவளின் உதடுகள் தடித்து ஓயும்வரை ஒரு முத்தம்!


ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்

 
:love: :love: :love:

அதான் சாப்பிடுறீங்களா னு கேட்டாளே...... போய் சாப்பிடவேண்டியது தானே........
அம்மா வெயிட் பண்ணுவாங்களாம்.......
அம்மா கிட்ட சொல்ல வேண்டியது தானே.......
உனக்கு எல்லாம் வேணும்....... ஆனால் அது தானா வரணும்னு நினைக்கிற ராஜன்.......

லேப்டாப் கொண்டுவான்னு சொன்னதுக்கு ஆயிரம் கேள்வி கேட்டுட்டு இப்போ மட்டும் வெட்டவெளியில் எதுக்கு இந்த முத்தம்??? அதுக்கு முன்னாடி என்ன விசாரணை???
இது ராத்தூக்கத்தை தொலைக்கவா??? இல்லை கேட் பூட்டிட்டு நீயும் உள்ளே வரப்போறியா???

மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே ;););)
 
Last edited:
:love: :love: :love:

இவங்க ரெண்டு பேரும் முட்டிக்கிறதுல ஆகட்டும்,
கட்டிக்கிறதுல ஆகட்டும் Extreme தான்...

அங்கையின் தலைவலி போக
வலிநிவாரணி மாத்திரை வடிவில்..
ராஜனின் மனவலி போக
வலிநிவாரணி முத்தம் வடிவில்...
வலி கொடுப்பவளே
வலிநிவாரணியாவது அதிசயமே...

இன்ப வாழ்வானது இங்கு வீணாகுது
பின்பு வாராது இள வயது
மெல்ல சீராட்டவும் அள்ளித் தாலாட்டவும்
இது தோதான ஏகாந்த இரவு

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
 
Last edited:
மெல்லிய பெண்ணே!! இத்தனை சத்து
எப்படி வந்தது உனக்கு..
இருதயம் மேலே மூளை கீழே பௌதிக
மாற்றம் எனக்குள்..

உன் முத்தம் ஒரு மூர்க்கம்
அதில் செத்தாலும் செத்து போவேன்...
 
Last edited:
Top