மனைவி - 9
"ராதை... ஸ்ரீராம் வந்த பிறகும் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று தெரியாது. அம்மாவும் பொண்ணுங்களும் நிறைய பிளான் பண்ணிட்டு இருக்காங்க. உனக்காக இல்லேன்னாலும், இன்னும் ரெண்டு ஜீவன்களுக்காக நீ தைரியமாக வாழப் பழகிக்கணும். உனக்குத் தேவையான உதவியை ஒரு அண்ணனா நான் உனக்குச் செய்வேன். எந்த நிலைமையிலும் பிரபாகரன் ஒருத்தன் இருக்கறத நீ மறந்துடாத... உன் தியாகமும் உன் காத்திருப்பும் பலன் இல்லாம போச்சே... சாரிம்மா" என்றான்.
ராதை வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, தன் வலிகளை மறைத்துச் சிரித்தபடி,
"தேங்க்ஸ் அண்ணா..." என்றாள். அதைத் தாண்டி அவளால் எதுவும் பேச முடியவில்லை.
தொண்டைக்குழி அடைத்தது. டீயை மெல்ல மெல்லப் பருகினாள். மேற்கொண்டு அவளிடம் பேசவும் முடியாமல், அவள் முகம் பார்க்கவும் முடியாமல் பிரபாகரன் தான் வந்த பாதையில் நடந்தான்.
அதற்குள் குருவம்மா அங்கே வந்திருந்தார். ராதையை இவ்வளவு சீக்கிரம் அங்கே கண்டதும் அவர் கொஞ்சம் பயந்து போனார்.
"ராதா... என்னம்மா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?" என்று கேட்டார்.
தன் கையில் இருந்த காலி டீ காகிதக் கப்பை கசக்கித் தூரமாக எறிந்தவள், "அவர் வராரு அக்கா... நைட்டே என்னை மாமியார் வீட்ல இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எனக்கு வேற எங்க போக முடியும்? அதான் இங்க வந்துட்டேன்" என்றாள்.
குருவம்மா அந்தப் பேச்சைக் கேட்டு அப்படியே உறைந்து போய் நின்றாள்.
கட்டிய கணவன் பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு திரும்புகிறான். ஆனால் இவளோ, அவன் வந்தால் என்ன நடக்குமோ என்ற தவிப்பில் விடிந்தும் விடியாத பொழுதில் தெருவில் நிற்கிறாள்.
இங்கே வந்து யாரிடமும் சொல்லாமல் ஒளிந்து கொண்டிருக்கும் இவளைப் பார்த்து, "இவளைத் திட்டுவதா? இல்லை இவளை இங்கிருந்து துரத்திவிட்டு, அந்த மனுஷனைப் பிடித்து ஒரு வழி பண்ணுவதா?" என்று தெரியாமல் குருவம்மா திகைத்து நின்றாள்.
"அவங்க போகச் சொன்னா, நீ எதுக்குடா இங்கே வந்தே? 'என் புருஷனை நான் பார்ப்பேன்' என்று தைரியமா அங்கேயே இருக்க வேண்டியதுதானே?" என்று குருவம்மா ஆதங்கப்பட்டாள்.
அதற்கு ராதை, "நான் அப்படிச் சொல்லி இருந்தா அங்கே என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாதா அக்கா? அங்கே வந்து நிக்கிற அந்த மனுஷன் கூட எனக்காக ஒரு வார்த்தை பேச மாட்டார். எதுக்கு வந்த அன்னைக்கே அவரையும் கஷ்டப்படுத்தணும்? நாம கொஞ்சம் ஒதுங்கி போறதுனால ஒன்னும் குறைஞ்சு போயிடாது அக்கா... அதான் நான் இங்கே வந்துட்டேன்," என்று தன் இயலாமையை விளக்கினாள்.
குருவம்மாவின் மனம் பாரமானது.
"எவ்வளவு நேரம் இப்படி இருக்கப் போற? நாள் முழுக்க இப்படியே ஒளிஞ்சுப்பியா? இல்லை வாரம் முழுக்க ஒளிஞ்சுப்பியா? இல்லை இந்த ஒரு வருஷம் முழுக்கத்தான் இப்படியே ஒளிஞ்சுப்பியா?" என்று கேட்டாள்.
ராதை கசப்பாகச் சிரித்தாள். "எத்தனை மணி நேரம் அக்கா என்னால இங்கே உட்கார்ந்து இருக்க முடியும்? மிஞ்சிப் போனா மதியம் 12 மணி வரைக்கும் உட்கார்ந்து இருக்க முடியும், அப்புறம் கோவில் நடையை மூடிடுவாங்களே!"
"அவர் வந்த உடனே எந்தப் பிரச்சனையும், மனக்கசப்பும் வேண்டாம்னு நினைச்சுதான் நான் இப்போ ஒதுங்கி இருக்கேன். கொஞ்ச நேரத்துல நான் கிளம்பிடுவேன் அக்கா. எப்பவா இருந்தாலும் நான் அவரைச் சந்திச்சுதானே ஆகணும்? அவருக்கு என்னைப் பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ, அவரும் என்னைச் சந்திச்சுதான் ஆகணும். இந்த ஓட்டம் எத்தனை நாளைக்குத் தொடர முடியும்? எனக்காக இல்லாட்டியும் நான் அவரைப் பார்த்துப் பேசி ஆகணும்," என்று உறுதியாகச் சொன்னாள்.
அதற்கு மேல் அவளிடம் பேச என்ன இருக்கிறது? அவளும் ஒன்றும் அறியாப் பிள்ளை இல்லையே.
"சரிம்மா, நீ உள்ளே போய் உட்கார்ந்துக்கோ. நான் எல்லா வேலையையும் முடிச்சிட்டு வரேன்," என்று குருவம்மா சொல்லிவிட்டுப் போனாள்.
ராதை அந்த அம்மன் சிலையையே பார்த்தபடி அமர்ந்திருக்க, குருவம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அவளைத் தேடி வந்தாள். அவளின் நிலையைக் கண்டு, அவளைத் தொந்தரவு செய்யாமல் மீண்டும் வெளியே வந்தாள்.
"இனி இந்தப் புள்ள வாழ்க்கையில என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே! வீட்டுக்குப் போனாலும் நிம்மதியா ஒரு வாய் சாப்பிட முடியாது. எதையாவது சாப்பிட வச்சு அனுப்புவோம். அவன் புருஷன் என்னவோ நல்லவனா எனக்குத் தெரியல. இவ கூட வாழ வந்த மாதிரி அவனைக் காணோம். இந்நேரம் வீட்டுக்கு வந்து பொண்டாட்டி எங்கன்னு தேடி இருக்க வேண்டாமா? என்ன மனுஷனுங்களோ இவங்க எல்லாம்! எதுக்குத்தான் கல்யாணம் பண்றாங்களோ? அவங்க சுகத்துக்காக மட்டும் தான் கல்யாணம் பண்றாங்க. இந்தப் பொம்பளப் பிள்ளைக்கும் பெத்த குடும்பத்துல ஏதாவது சப்போர்ட் இருந்திருந்தா, அந்த வீட்டுல இவ்வளவு அநியாயம் நடக்குமா? பொண்ணாப் பொறந்தது பாவமா இல்ல சஇவள் பொறந்தது பாவமான்னு தெரியலையே! அம்மா தாயே, நீதான் இந்தப் பிள்ளைக்கு ஒரு நல்ல வழியைக் காட்டணும்," என்று தனக்குள் குழம்பியபடி, பக்கத்துத் தெருவில் இருந்த இட்லிக் கடைக்குச் சென்று நாலு இட்லியை வாங்கி எடுத்துக்கொண்டு வந்தாள்.
"ராதை, இதைச் சாப்பிடு," என்று நீட்டினாள்.
"எதுக்குக்கா? உங்களுக்கு எதுக்குத் தேவையில்லாத வேலை? நான் உங்ககிட்ட கேட்டேனா?" என்று ராதை சிணுங்கினாள்.
"இந்த ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! என்கிட்ட ரோஷப்பட்டு என்ன ஆகப்போகுது? முதல்ல சாப்பிடு. வீட்டுக்குப் போனா உன்னைச் சாப்பிடக் கூட விடமாட்டாங்க. அங்கே என்ன பிரச்சனையை இழுத்து வைக்கப் போறாங்களோ தெரியல. உனக்காக அங்கே பேசக்கூட ஆள் இல்லை. தெம்பா சாப்பிட்டுப் போனாதான், அங்கப் போய் மயக்கம் போட்டாவது விழாம இருப்பே," என்று அவளிடம் சண்டை போட்டுக் கொண்டே தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள்.
விடாப்பிடியாக அவளைச் சாப்பிட வைத்து, பிறகு அவளை எழச் செய்தாள்.
எட்டு மணி வரை அங்கேயே இருந்த ராதை, "அக்கா, நேரம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன்," என்றாள்.
"இரு இரு," என்று அவளைத் தடுத்த குருவம்மா, தன் புடவை முந்தானையில் முடிந்து வைத்திருந்த இரண்டு ரோஜாப் பூக்களை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.
"இதை அவங்க கிட்ட கொடுத்துடு. நான் கொடுத்தேன்னு சொல்லிக் கொடு, மறந்துடாதே. தைரியமா இரு. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். நீ ஒன்னும் படிக்காத முட்டாளோ இல்ல கோழையோ கிடையாது," என்று ஊக்கப்படுத்தினாள்.
"நான் தைரியமா தான் இருக்கேன் அக்கா, நான் பார்த்துக்கிறேன். மறக்காம இந்தப் பூவையும் கொடுத்துடுறேன்," என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கோவிலை விட்டு வெளியேறினாள்.
"என்னங்க, இன்னைக்கு ஸ்ரீராம் வர்றான். நீங்க வீட்டிலேயே இருங்க," என்று அலரும் மலரும் தங்கள் கணவன்மார்களிடம் சொல்லிக் கொண்டிருக்க,
பிரபாகரன் அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. குளித்து முடித்துத் தயாராகி வெளியே வந்தவன், ராதை மணக்க மணக்க தயார் செய்து வைத்திருந்த விருந்தை ஒரு தட்டு நிறைய போட்டுச் சாப்பிட்டு முடித்தான்.
"நான் வேலைக்குக் கிளம்புறேன்," என்று ஒரு தகவலாகச் சொல்லிவிட்டுத் தன் பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டான்.
"இவ்வளவு நேரமா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீங்க பாட்டுக்கு வேலைக்குக் கிளம்புறீங்களே, இது நல்லாவே இல்லை," என்று அலர் கத்த ஆரம்பிக்க,
"உன் தம்பி தானே வர்றான், ஒன்னும் பிரைம் மினிஸ்டர் வரல! சாயந்திரம் வந்து பார்த்துக்கிறேன். அவன் வர்றான் என்றதும் அவனைத் தூக்கி வச்சு கொண்டாடுவாங்க. பெத்த புள்ளைங்க வீட்ல இருக்காங்களா, சாப்பிட்டாங்களான்னு கூடக் கவலைப்படலை. நீயெல்லாம் ஒரு அம்மான்னு வெளியில சொல்லிக்காத, சாணியைக் கரைச்சு மூஞ்சிலேயே ஊத்திடுவாங்க," என்று தன் முழு பலத்தில் கத்திவிட்டு, அவள் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காமல் வெளியேறினான் பிரபாகரன்.
நாளுக்கு நாள் அலர் மீதான வெறுப்பு அவனுக்குக் கூடிக்கொண்டே இருந்தது. அந்த வெறுப்பு எந்த எல்லைக்குச் செல்லும் என்று அவனுக்கே தெரியவில்லை. அனைத்தையும் கணக்கு போட்டுத் திட்டமிடும் கலை கூட இதை கவனிக்கத் தவறிவிட்டார்.
மலரும் அவளது கணவனும் ஶ்ரீராம் வருகைக்காகத் தங்களை அலங்காரம் செய்துகொண்டு காத்திருந்தனர்.
கலை, தன் மகனை எதிர்பார்த்து வாசலில் பூனை போல குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது.
கார் நின்ற வேகத்தில், கலை தன் வயதையும் மறந்து துள்ளிக் குதித்து ஓடினார். மலரும் அலரும் ஆரத்தியுடன் தம்பிக்காகக் காத்திருக்க, ஸ்ரீராம் காரில் இருந்து புன்னகையுடன் இறங்கினான்.
அவன் விழிகள் வாசலை நோக்கியது. அங்கே அம்மா, தங்கைகள், தங்கை கணவன்மார் என அனைவரும் நின்றிருக்க, அவன் விழிகளில் மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு ஏமாற்றம் படர்ந்தது.
"ராமு!" என்று கலை கண்ணீர் மல்க மகனை அணைத்துக் கொண்டார்.
தன் தாயைத் தேற்றியவன், "அம்மா, சின்ன பிள்ளை மாதிரி அழாதீங்க. இனிமேல் உங்களை விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்," என்றான்.
கலையின் நெற்றி சுருங்கியது. "எங்கேயும் போக மாட்டேன்னா? புரியலையேப்பா..." என்றார்.
"இனிமேல் நான் இங்கிருந்தே வேலை செய்யப் போறேன். துபாய்க்குத் திரும்பிப் போகப் போறது இல்லை," என்று ஒரு மிகப்பெரிய குண்டைத் தூக்கி மொத்தக் குடும்பத்தின் தலையிலும் போட்டான்.
மலர், அலர் இருவரின் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது. கலை தன் அதிர்ச்சியை ஒரு நொடியில் மறைத்துக் கொண்டு, சிரித்த முகத்துடன், "சரி உள்ளே வாப்பா, தங்கச்சிங்க ரெண்டு பேரும் உனக்காக ஆரத்தியோடு காத்திருக்காங்க," என்று மகனைப் பிடித்து அழைத்து வந்து வாசலில் நிற்க வைத்தார்.
இருவரும் சேர்ந்து அவனுக்கு ஆரத்தி எடுத்தனர்.
"ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்களா?" என்று சுருக்கமாகக் கேட்டான்.
"நாங்க நல்லா இருக்கோம். நீங்க நல்லா இருக்கீங்களா? டிராவல் ரொம்பக் கஷ்டமா இருந்ததா? சாப்பிட்டு வந்தீங்களா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை இரு தங்கைகளும் மாற்றி மாற்றி வைத்தனர்.
"நல்லா இருக்கேன்," என்ற சுருக்கமான பதிலோடு முடித்துக் கொண்டு, ஆரத்தி எடுப்பதற்குத் தயாராகக் காத்திருந்தான். கலை ஜாடை காட்ட, இருவரும் ஆரத்தி சுற்றி அவனை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அவன் விழிகளின் தேடல் உள்ளேயும் தொடர்ந்தது. வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அவன் கண்கள் அலசி ஆராய்ந்தன.
"ராமு உட்காரு, ஏன் நின்னுகிட்டே இருக்க?"
"அம்மா இருங்க, இந்தப் பையை வச்சுட்டு வந்துடுறேன்," என்று அவன் அறைக்குள் செல்ல முயல, மூவர் முகமும் மாறிப்போனது.
அவன் அறையாக இருந்தது இப்போது அவனுக்குச் சொந்தமில்லாமல் இருக்கிறதல்லவா? உள்ளே சென்றவன், அங்கே தன் தங்கையின் திருமணப் புகைப் படத்தைக் கண்டு அதிர்ந்து அப்படியே கதவோரம் நின்றுவிட்டான்.
தொடரும்.....