Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 2

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 2

கமலக்கண்ணனை விட ஆறு வயது சிறியவள் கஸ்தூரி. சிறு வயதில் இருந்து ஒன்றாய் பழகியதால், நீ வா போ என்பதுதான் வாயில் வரும். பள்ளிக்கூடம் விட்டு வந்தால், இருவரும் அவர்களின் தோழமைக் கூட்டத்தோடு தான் விளையாடி கும்மாளம் போடுவர். அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தது கூட கமலக்கண்ணன் தான்.

ஆனால் கஸ்தூரியின் அம்மா இப்படிச் செய்யவும், கண்ணன் அவர்களின் வீட்டுப்பக்கமே வராது போக, அதன்பின் ஒருநாள் அவனைப் பார்த்தவள் “டேய் கண்ணா...” என்க, அவனோ நிக்காது ஓடிவிட்டான்.

இவள் பத்து வயது பெண், அவன் பதினாறில் இருந்தான்.

அப்போதும் கூட அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. அதன்பின்னும் ஒருமுறை அவனைக் காண நேர்கையில் கஸ்தூரி அழைக்க, “இங்க பாரு கஸ்தூரி.. உங்கூட எங்கம்மா அப்பால்லாம் பேசக்கூடாது சொல்லிட்டாங்க..” என்று முகத்தை ஒருமாதிரி வைத்துச் சொல்ல, கஸ்தூரிக்கு பெரும் கவலையாய் ஆனது.

“என்னடா சொல்ற நீ...??!!” என, “ம்ம்ச் ஒருதடவ சொன்னா உனக்கு புரியாதா... உன்னோட எல்லாம் இனிமே நான் பேசமாட்டேன்...” என்றவனின் முகம், அப்போது அவளுள் பதிந்தது போனது.

என்னவோ அருவருப்பாய் அவன் முகம் காட்டிய பாவனை.. எப்போதும் அவளுக்கு மறக்குமோ என்னவோ??!!

கண்ணனுக்கு பெரிதாய் எதுவும் புரியவில்லை என்றாலும், வீட்டினில் அவனின் அம்மா அக்கம் பக்கத்தாரோடு பேசுவது அவன் காதிலும் விழத்தானே செய்தது. அதுவும், ஊருக்குள் அப்போது எங்கே பார்த்தாலும் இதே பேச்சாய் இருக்க, அவனுக்கு என்னவோ கஸ்தூரியின் குடும்பமே செய்யக்கூடாத தவறு செய்துவிட்டதாய் தோன்றியது.

போதாத குறைக்கு முருகேஸ்வரி வேறு “அவளோட அங்க இங்கன்னு பேசுன.. தொலைச்சிடுவேன்.. உன்னைத்தான் எல்லாம் அடுத்து இப்படி பேசுவாங்க..” என்று பேச்சுவாக்கில் சொல்லிச் செல்ல,

சந்திரபாண்டியும் “அப்பா பேரு.. நம்ம குடும்ப பேரு எல்லாம் நீதான் காப்பாத்தனும்.. இனி அவங்களுக்கும் நமக்கும் எதுவுமில்ல...” என்றிட, என்னவோ பெரிய பொறுப்பு தனக்கு கொடுத்திருப்பது போல் நினைத்துக்கொண்டான்.

அதன்பின் ஒருநாளும் கூட கமலக்கண்ணன் கஸ்தூரியிடம் பேசியதில்லை. அவளோ அவன் இருக்கும் பக்கம் கூட கழுத்தினை திருப்பிடமாட்டாள். அதிலும் முருகேஸ்வரி பேசும் பேச்செல்லாம் ‘அய்யோ...!! அப்பா..!!’ என்று சொல்ல வைத்துவிடும்.

நாள் செல்ல, விபரங்கள் புரிபட புரிபடத்தான் கஸ்தூரிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது புரிந்தது. படிப்பினை நிறுத்தினார்கள். ஆனால் அவள் முட்டாளாய் இருந்திடவில்லை. ஒன்றும் தெரியாதவளாய் இருந்திடவில்லை. கடைக்கு என்று வாங்கிப்போடும் செய்தித் தாள்களை எல்லாம் ஒன்றுவிடாது படிப்பாள்.

நாட்டு நடப்பு, ஊர் விஷயம் என்று எல்லாம் தெரிந்துகொள்வாள். தன்னை மதித்து, தன்னோடு யார் பேசினாலும் அவளும் அப்படியே திருப்பிச் செய்வாள். ஆனால் யாரேனும் ஒருவார்த்தை தவறாய் சொன்னால், அவ்வளோதான். ஜென்ம விரோதி நீ எனும் நிலையில் வைத்துவிடுவாள். அவர்களின் வயல் வேலை எல்லாம் அவளின் பொறுப்புத்தான்.

அதற்கெல்லாம் செல்லப்பாண்டி ஒன்றுமே சொன்னது இல்லை. மகளின் இயல்பு என்னவென்று அவருக்கும் புரிந்தே இருந்தது. ஆனாலும் ஓர் பயம். அது அவளின் அழகு கொடுத்த பயம்.. எங்கே தான் ஒரு பெண் என்று செல்லம் கொடுக்கப் போய், அதுவே அவளுக்கும், வீட்டிற்கும் கேடு இழைத்திடுமோ என்று ஒரு எல்லைக்குள் தன்னை நிறுத்திக்கொள்வார்.

அதற்காக மகளுக்கு ஒன்றும் செய்யாத மனிதர் அல்ல. மாதம் ஒருமுறை டவுனுக்கு அழைத்துச் செல்வார். வேண்டியது எல்லாம் வாங்கிக்கொடுப்பார். என்ன, அவர் சொல்வதை கேட்டு நடந்துகொண்டால் அவரும் அவர்பாட்டில் இருப்பார்.

அதனைப் புரிந்துகொண்டு இப்போது வரைக்கும் கஸ்தூரி அப்படித்தான் இருக்கிறாள். சில விசயங்களில் அப்பாவின் கருத்திற்கு மாற்று கருத்து அவளுக்குத் தோன்றும். இருந்தும் வாய் திறந்திட மாட்டாள். அழுத்தக்காரி தான். ஆனால் எக்காரணம் கொண்டும் தன்னை யாரும் அடிமை நிலைக்குத் தள்ளிட அவள் இடம் கொடுத்திட மாட்டாள்.

சரியாய் அவளின் பதினேழாவது வயதில், செல்லப்பாண்டியின் தூரத்து உறவுமுறை அக்காள் ஒருவர், “செல்லா.. பேசாமா இவள என்னோட அனுப்பி வை.. நீயும் கடைக்கு போனா ராத்திரி தான் வர.. என்னோட வந்து என்கூட இருக்கட்டும்.. வேலைக்கு வேலையும் செய்யட்டும். சாப்பிட்டு அவபாட்டுக்கு அங்க என்னோட இருக்கட்டும்.. அங்கனவே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து நான் பேசி முடிக்கிறேன்.. இங்கன்னா தானே ஏதாவது பேச்சு வரும்..” என்று பட்டினத்திற்கு அழைக்க,
செல்லப்பாண்டி கூட யோசித்தார் ‘மகளுக்கு இதன் மூலமாய் எதுவும் வாழ்வு அமையக்கூடுமோ..’ என்று.

ஆனால் கஸ்தூரி திடமாய் மறுத்துவிட்டாள்.

“இங்கியாருப்பா.. இங்கத்தான் இருப்பேன்.. உன்னோட.. நீ பார்த்து யாருக்குக் கட்டிக் குடுக்கிறியோ கட்டிப்பேன்.. அதைவிட்டு இப்படி அனுப்பனும் நினைச்சன்னா பார்த்துக்கோ..” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்ல,

எப்போதுமே தான் சொல்லும் அனைத்துக்கும் சரி என்று சொல்லும் மகள், இன்று இதற்கு இப்படிச் சொல்லவும் யோசித்தார்.
“ப்பா.. நீ யோசிச்சு முடிவுக்கு வர்றதுல்லாம் இருக்கட்டும்.. ஆனா இதான் என்னோட முடிவு... நான் போக மாட்டேன்.. வீட்டு வேலை இங்க செய்றேன்.. நம்ம தோட்டத்துல நானே நாலு பேர வேலை வாங்குறேன்.. நான் இவுங்க வீட்டுக்கு போகனுமா??!!” என, மகளின் கூற்று சரியாய் தான் இருந்தது செல்லப்பாண்டிக்கு.

அவரும் “இல்லக்கா அது தோது பாடாது.. நான் கடையும் பார்த்து வயலையும் பார்க்க முடியாது.. கஸ்தூரி இங்கவே இருக்கட்டும்..” என்றுவிட்டார்.

அன்று சொன்னதுபோல் தான் கஸ்தூரி இன்றுவரைக்கும்..!!

வீட்டு வேலைகளும் சரி, வயல் வேலைகளும் சரி எல்லாம் அவளினது பொறுப்பு மட்டுமே. சிறப்பாகவே செய்தாள். அதெல்லாம் தாண்டி தன்னை கை நீட்டி யாரும் ஒருவார்த்தை சொல்லிட முடியாதபடி தான் இருக்கும் அவளின் நடவடிக்கைகள் எல்லாம்.

நாட்கள் அமைதியாகவே செல்ல, கமலக்கண்ணனும், அவனின் கல்லூரி படிப்புகள் எல்லாம் முடிந்து ஊர் வந்து சேர்ந்தான்.
ஊரே பேசியது “கண்ணே பார்க்கவே எம்புட்டு அம்சமா ராஜாவாட்டம் இருக்கான்..” என்று.

அது அவளின் காதிலும் விழுந்தது. ஒருவேளை இப்போதேனும் தன்னோடு வந்து பேசுவானோ என்று நினைத்தாள். ஆனால் அடுத்த நொடி அதை அவளே போக்கியும் கொண்டாள்.

‘இவன் பேசினா நான் பேசணுமா.. போறான்.. பெரிய இவன்...’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவளுக்கு, மனதினில் ஒரு நப்பாசையும் இருந்தது ஒரு ஓரத்தில்.

ஆனால் இறுதிவரைக்கும் கமலக்கண்ணன் வந்து அவளோடு பேசிடவும் இல்லை. ஒருநாள் நேருக்கு நேரே பார்த்ததுக்கு கூட, பார்க்காதது போல் சென்றுவிட்டான்.

‘போடா டேய் போடா...’ என்று இவளும் சொல்லிக்கொண்டாள். இருந்தும் மனதில் ஒரு வலி.

இதிலெல்லாம் விட, அப்போதுதான் கமலக்கண்ணனின் அக்கா கல்பனாவிற்குத் திருமணம் பேசியிருந்தார்கள். சிங்கப்பூர் மாப்பிள்ளை.. ஊரே பேசியது.. தடபுடலாய் திருமண ஏற்பாடுகள் நடக்க, அந்தத் திருமணத்திற்கு செல்லாதவர்கள் என்றால், கஸ்தூரி, அவளின் அப்பா, பின் அவர்களின் கடையினில் வடை போடும் பாட்டி.

அப்பாட்டியின் பெயர் எல்லாம் என்னவென்று தெரியாது. வடைப்பாட்டி.. எல்லாம் அப்படித்தான் சொல்வர். தனியே வடை சுட்டு விற்றது.. வயது கூட, அலைய முடியவில்லை. அதனைப் பார்த்த செல்லப்பாண்டி

“எங்கடையில வடை போடுறியா??” என, “சரி ராசா..” என்று சந்தோசமாய் சொல்லிவிட்டது.

கடையில் மட்டுமல்ல, வடைப்போட்டு முடித்து அப்படியே கஸ்தூரிக்கு துணை என்று அவர்களின் வீட்டிலும் இருந்துகொண்டது. அவர்களும் ஒன்றும் சொல்லிடவில்லை. கஸ்தூரிக்கு, இப்போது அம்மா, பாட்டி, தோழி எல்லாம் அந்த வடைக்கார பாட்டித்தான்.
செல்லப்பாண்டி கடைசி நிமிடம் வரைக்கும் எதிர்பார்த்தார், கல்பனாவின் திருமணத்திற்கு அழைப்பர் என்று. செய்யவேயில்லை. அதிலே அவருக்கு பெரிதும் விட்டுப்போனது.

இப்படியே நாட்கள் செல்ல, கமலக்கண்ணன் சிறிது நாள் சென்னையில் வேலையில் இருந்தான், பின் அக்கா அழைக்கிறாள் என்று சிங்கப்பூரில் வேலைக்குச் சென்றான். எதிலுமே அவனின் மனது ஒட்டவில்லை. ஊர் செல்லவேண்டும் என்ற உந்துதல்.
காரணமே இல்லாது அடிக்கடி கஸ்தூரியின் நினைவு வரத் தொடங்கியது. சிங்கப்பூர் செல்லுமுன்னே, அவளை ஒருமுறை அவளின் தக்காளி பாத்தியில் பார்த்தான். ஆட்களோடு ஆட்களாய் நின்று, தக்காளி எடுத்துக்கொண்டு இருந்தாள்.

தலையில் ஒரு துண்டு கட்டி, அதை பின்னே முடிந்திருந்தாள். ஆண்கள் அணியும் மேற்சட்டை. அப்போது பாவாடை தாவணி தான் போலும், அதனை தூக்கிச் செருகியிருக்க, வேலையை முடித்தவள், சற்று தள்ளியிருந்த, தொட்டியில் வந்து நீர் மொண்டு கை கால் கழுவ, இவன் அவர்களின் சோளக்காட்டில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

பக்கத்து பக்கத்து பூமி தான். நடுவே ஒரு கம்பி வேலி மட்டுமே. மரங்கள் இருந்தது இடையில். கிணறு கூட இருவருக்கும் பொது தான். பிரச்னைகள் ஆனபின்னே தனி தனி மோட்டார் போட்டுக்கொண்டனர்.

கமலக்கண்ணன் அங்கே கிணற்று மேட்டில் தான் அமர்ந்து இருந்தான். இந்தப்பக்கம் இருந்து பார்த்தால், அங்கே அவன் இருப்பது கஸ்தூரிக்குத் தெரியாது. தெரிந்திருந்தால், அங்கே நின்றிருக்க மாட்டாள். தொட்டி நிறைய நீர் இருக்கவும், தலையில் கட்டியிருந்த துண்டு, போட்டிருந்த மேற்சட்டை எல்லாம் கலட்டி வைத்துவிட்டு, நீர் எடுத்து அடித்துக் கழுவ, கமலக்கண்ணன் எழுந்து போய்விட வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியவில்லை.

எப்போதும் அப்படியான எண்ணமெல்லாம் அவள்மீது தோன்றியதே இல்லை. சொல்லப்போனால் அவளை மறந்து போனான் என்றுதான் சொல்ல வேண்டும். படிக்கப் போன இடத்திலும், வேலையில் இருந்த இடத்திலும் எத்தனை பெண்களை, அதிலும் நாகரீக மங்கைகளைப் பார்த்திருக்க மாட்டான்.

ஆனால் இப்போதோ கஸ்தூரியை விட்டு பார்வையை நகர்த்திட முடியவேயில்லை. ஒருத்தி முகம் கழுவவதில் இத்தனை பாந்தமா??!! முகத்தில் அடிக்கும் நீர் எல்லாம், வழுக்கிச் செல்ல, எதுவோ காணாததை கண்டது போல் தான் பார்த்திருந்தான் கமலக்கண்ணன்.

முகம், கை, கால் என்று கஸ்தூரி கழுவ அவனின் பார்வையும் மாறிக்கொண்டே தான் இருந்தது.. காலில் கொலுசு எல்லாம் இல்லவே இல்லை. மாறாக, இடதுகாலில் ஒரு கருப்பு கயிறு கட்டியிருந்தாள்.

‘கோவில்ல மந்திருச்சு குடுத்திருப்பாங்க..’ என்று அவனாகவே சொல்லிக்கொள்ள, அவளின் பாத விரல்கள் கூட அழகாய் தெரிந்தது அவனுக்கு. கால் சுட்டு விரல் கூட சுண்டி இழுப்பதாய் இருக்க,

‘எம்புட்டு அழகா இருக்கா...!!’ என்றுதான் எண்ணியது அவனின் மனம்.

அதே எண்ணம் தான் சிங்கப்பூர் சென்றபின்னும் கூட. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வந்தது.
அவளின் அழகு என்பதனைத் தாண்டி, சிறுவயதில் அவள் தன்னோடு பேசியது பழகியது, விளையாடியது எல்லாம் நினைவு கூர்ந்து கூர்ந்து பார்ப்பான். எப்போதாவது கல்பனாவும் இவனோடு சேர்ந்து ஊர் விஷயம் பேசுகையில்

‘நம்ம அப்பாம்மா என்ன இருந்தாலும் இப்படி செய்யக் கூடாது டா..’ என்பாள்.

அவனுக்குமே வெளிப் பழக்கம், விபரங்கள் எல்லாம் வரவும்தான், கஸ்தூரியின் அம்மா செய்த தவறுக்கு, அவளையும் அவளின் அப்பாவையும் ஒதுக்கியது தவறோ என்று பட்டது.

‘ச்சே நம்மளும் எப்படி பீகேவ் பண்ணிருக்கோம்...’ என்று நொந்துகொண்டான்.

அந்தநொடி முதல், அவனால் அவனின் அப்பாவோடு சரியாய் பேசிட முடியவில்லை. முருகேஸ்வரிக்கு கூட சொந்தம் என்றவகையில் மட்டுமே. ஆனால் சந்திரபாண்டிக்கு தங்கையின் குடும்பம் அல்லவா. ஒன்றுவிட்ட அண்ணனே என்றாலும் கஸ்தூரியின் அம்மா சந்திரபாண்டி மீது மிகுந்த பாசமாகவே இருப்பார். அவர் அப்படி செய்ததால், அவர்களின் குடும்பத்தினை ஒதுக்கிட வேண்டுமா. இதை அவரிடம் எடுத்துச் சொல்லவும் முடியவில்லை.

அம்மாவிடம் பேசினால் ஆடித் தீர்த்துவிடுவார் என்று அமைதியாகவே இருந்தான். இருந்தும் அங்கே வேலையில் அப்படி இப்படியென்று தாக்குப் பிடித்து ஒருவருடம் இருந்தவன்

“இதுக்கு மேல முடியலக்கா...” என்று சொல்லி, தோப்புப்பட்டி வந்துவிட, அடுத்த சில தினங்களிலேயே அவனுக்கு பக்கத்து டவுனில் மில்லில் வேலையும் கிடைத்துவிட்டது.

வெளிநாடு சென்று வந்திருக்கிறான் என்றதுமே, எடுத்ததுமே மேனேஜர் பதவியில் அமர வைத்துவிட்டனர். அப்போதென பார்த்து கஸ்தூரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்துகொண்டு இருந்தது. உள்ளூரில் ஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும், யாரும் சம்பந்தம் பேசவில்லை. ஆக, செல்லப்பாண்டி மகளுக்கு வெளியூரில் தான் வரன் பார்த்தார். அதிலும், படித்து, அவளுக்கும் பொருத்தமாய் இருக்கும் மாப்பிள்ளையை.

‘எங்கிட்ட இருக்கிறது எல்லாம் எம் பொண்ணுக்குத்தான்... இனி சம்பாரிக்கப் போறதும் எம்பொண்ணுக்குத்தான்.. அவள் அழகுக்கு ஏத்தமாதிரி ஜோடிப் பொருத்தமா இருக்கணும்..’

இதுதான் அவரின் ஒரே ஒரு கண்டிசன். எக்காரணம் கொண்டும், தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட நிலை, மகளின் வாழ்வில் வந்திடக் கூடாது. வெளியூரில் இருந்து நிறைய வரன்கள் வந்ததுதான். சிலர் எல்லாம் சினிமா ஆட்கள் போல் இருந்தார்கள் தான். ஆனால் ஊருக்கு வந்து விசாரிக்கையில், கஸ்தூரி அம்மாவின் விஷயம் கேள்விப் படுகையில், பின்வாங்கினர்.

அப்படியே சரி என்று வந்தாலும் கூட, ஏதாவது ஒன்று ஆகி தட்டிப்போனது.

‘கஸ்தூரிக்கு பரிசம் போடப் போறாங்க...’ என்று செய்தி பரவ, ‘எவன்டா அவன் ...’ என்று பார்க்கும் எண்ணம் கண்ணனுக்கு.

மாப்பிள்ளையாக வந்தவனோ கஸ்தூரி அருகினில் என்ன, நூறடியில் தள்ளிக் கூட நிற்க முடியாது என்று நினைத்தான் கமலக்கண்ணன். நன்றாகத்தான் இருந்தான். ஆனால் கமலக்கண்ணனுக்கு அப்படித் தோன்றியது.

‘இவனெல்லாம் ஒரு ஆளா...’ என்று தோன்ற, முருகேஸ்வரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன், இவனுக்கு ஒருவகையில் மாமன் முறை, சின்ன வயது என்பதால் தோழர்கள் போல் பழகுவர்.

அவனிடம் போய் ‘ஏன்டா மரிக்கொழுந்து... நம்ம ஊருக்கு மாப்பிள்ளையாகவும் ஒரு தகுதி வேணாமாடா..’ என,

‘இப்போ என்னத்துக்கு நீ இங்குட்டு வர...’ என்றான் சுதாரித்து, மணிவாசகம் என்ற மரிக்கொழுந்து.

அவர்களின் வயலில் மரிக்கொழுந்து தான் வெள்ளாமை செய்வர். அதனால் அவனுக்கு அப்பெயர். கஸ்தூரியின் வீட்டிற்குப் பக்கத்து வீடு. மாப்பிள்ளை வீட்டினார் அங்கேதான் இருந்தனர். நல்ல நேரம் ஆரம்பிக்கவும், பெண் வீடு செல்லவேண்டும் என்று.

“அதுக்கில்லடா மரிக்கொழுந்து.. கஸ்தூரி அழகென்ன, நிறமென்ன.. இதென்னடா இவனெல்லாம் ஒரு ஆளா...” என்று வேண்டுமென்றே சத்தமாய் பேச, அது அந்த மாப்பிள்ளையின் காதிலும் விழுந்தது.

தெரியாதது போல் பேசவேண்டும் என்று தெரிந்தே பேசினான்.

“டேய் வேணாம்டா கண்ணா.. வீணா வம்பக் கிளப்பாத...” என,

“அட போடா.. பேன்ட் சட்டை போட்டவனெல்லாம் மாப்பிள்ளையா.. அதுக்கெல்லாம் ஒரு அம்சம் வேணும்டா. அதுவும் கஸ்தூரிக்கு புருசன்னா அதுக்கெல்லாம் ஒரு அழகு வேணும்டா..” என்று இன்னும் என்னென்னவோ சொல்லிச் செல்ல, விளைவு, அந்த மாப்பிள்ளை ‘இந்த பெண் வேண்டவே வேணாம்...’ என்றதுதான்.

செய்யவேண்டும் என்று வீம்பாய் செய்யவில்லை. கமலக்கண்ணனுக்கு கஸ்தூரியை இப்படி ஒருவனின் கையில் கொடுப்பது பிடிக்கவில்லை.

அடுத்தடுத்து என்ன தேடியும், சரியாய் ஒன்றும் அமையாது போக, “ப்பா.. கொஞ்ச நாள் போகட்டும்பா..” என்றுவிட்டாள் கஸ்தூரி.
வடைப்பாட்டியும் “கொஞ்சம் ஆறப்போடு செல்லாப்பாண்டி..” என, அவரும் சரி என்றுவிட்டார்.

அதன்பின்னே தான் கமலக்கண்ணனுக்கு நிம்மதியானது. அவனும் இங்கே வந்ததில் இருந்து எப்படியேனும் கஸ்தூரியோடு பேசிடவேண்டும் என்று முயற்சிக்கிறான், நாட்கள் ஓடியது தான் மிச்சம். என்ன முயற்சித்தும் அது அவனால் முடியவே இல்லை.
இன்றும் அவனின் முயற்சியைத் தொடர, “ஏய் கஸ்தூரி.. நில்லுங்கறேன்ல..” என, அவள் நிற்காது போக,

“இப்போ நீ நிக்கல, வண்டிய உன் மேல ஏத்துவேன்...” என்று மிரட்ட, அவள் பட்டென்று நின்றாள்.

‘நின்னுட்டா...’ என்று பார்க்க, திரும்பியவள் “வா.. ஏத்து.. என்ன பாக்குற.. வாடா.. வண்டிய ஒரு இன்ச் நீ முன்ன நகர்த்திடு பார்த்துக்கலாம்..” என்று அவனை நோக்கி வர,

‘ஐயோ..!! என்ன இப்படி பேசுறா...’ என்று பார்த்தான் கமலக்கண்ணன்.

“என்ன பாக்குற... வண்டியை ஏத்து...” என்று கஸ்தூரி சத்தம் விட, “ஷ்..!! கஸ்தூரி.. சொல்றத கேளு..” என்று இறங்கி வர,

“என்ன??!!” என்று கேட்டவளின் கண்களோ அவனைக் கொன்று விடுவது போல் பார்த்தது.

“நானும் அன்னிக்கு இருந்து பேசணும் சொல்றேன்..” எனும்போதே,

“சரி வா.. ரெண்டு பேரும் கோவிலுக்குப் போவோம்.. உங்கம்மா எப்படியும் அங்க இருப்பாங்க தானே.. அவங்க முன்னாடி பேசு..” என்றாள் வீம்பாய்.

“பேசமாட்டேன்னு நினைச்சிடாத.. அதுக்கு முன்ன நம்ம பேசணும்..” என்றான், அவளை நேருக்கு நேர் பார்த்து.

“தேவையில்ல...” என்றவள், சாலை வழியே செல்லாது, பக்கத்தில் இருந்த வயல் வரப்பில் இறங்கி நடக்கத் தொடங்க,

“கஸ்தூரி....” என்ற கமலக்கண்ணனின் அழைப்பை அவள் கண்டுகொண்டாள் இல்லை.

விடுவிடுவென நடந்திட, கோவிலும் வந்துவிட்டது. கூட்டம் அத்தனை ஒன்றுமில்லை. கூட்டம் இந்நேரத்தில் இருக்காது என்பதால் தான் கஸ்தூரி இந்த நேரத்தில் வருவாள். சரியாய் முருகேஸ்வரியும் அங்குதான் இருந்தார்.

கஸ்தூரி வழக்கம் போல், அங்கிருக்கும் வேப்ப மரத்திற்கு மஞ்சள் தடவி, குங்குமம் இட்டு, பின் சற்று தள்ளி வந்து விளக்கும் போட்டு, உள்ளே போக,

“ம்ம்ஹும்... சாமி கும்பிட வர்றது மாதிரியா வர்றாளுங்க.. மினுக்கிக்கிட்டு...” என்று முருகேஸ்வரி யாரிடமோ சொல்ல, அது கஸ்தூரியின் காதிலும் விழுந்து வைத்தது.

“அத்தே.. பேசாம இரு.. எதையாவது சொல்லிட போறா...” என்று அருகில் இருந்தவள் முணுமுணுக்க,

“சொல்லிடுவாளா.. சொல்லிட்டு இங்க இருந்து போயிடுவாளா..” என்று முருகேஸ்வரி ஆரம்பிக்க,

கஸ்தூரியோ அவள் வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். மாரியம்மனுக்கு மஞ்சளும், பாலும் கொடுத்து, பின் சிறிது பிரசாதமாய் கொண்டு போன தூக்குப் பாத்திரத்தில் வேறு வாங்கியும் கொண்டாள். மனதை ஒருநிலை படுத்தி மாரியம்மனை வேண்டியவள், சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வீட்டிற்குக் கிளம்ப, அதுவரைக்கும் கூட முருகேஸ்வரி கிளம்பிடவில்லை.

அப்போதும் எதுவோ சொல்லிக்கொண்டு இருக்க, அருகில் இருப்பவள் முருகேஸ்வரியை அடக்க முற்பட, நேராய் கஸ்தூரி அப்பெண்ணிடம் சென்று நிற்க, சுற்றி இருந்தவர்கள் எல்லாம் என்னவோ நடக்கப் போகிறது என்று பார்க்க,

“சீட்டுப் பணம் கேட்டு இம்சை பண்றாங்க, அடுத்த வாரக் கூலிய இப்பவே முன்பணமா கொடுன்னு சொன்னியே மதினி.. வீட்ல வந்து வாங்கிக்கோ..” என்றவள், முருகேஸ்வரியை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டுச் செல்ல,

“ஏன்டி.. நீ அப்படி சொன்னியா..??!!” என்று அருகில் இருந்த பெண்ணிடம் சண்டைக்கு ஆரம்பித்துவிட்டார் முருகேஸ்வரி.

:love: :love: :love:

அம்மா அப்பா பேச்சு கேட்டு ஓவரா பயந்து ஓடினவனுக்கு இப்போ என்னவாம்?
இவன் வேண்டாம் கஸ்தூரி......
இப்போ மட்டும் அவங்கம்மா பொண்ணு இல்லையா?
போடா டோய்.....

என்னம்மா இப்படி ஒரு பிட்?
பாவம் அந்த பொண்ணு......
என்ன பாடுபட போகுதோ???
 
Last edited:
su

super sis semaiya iruku episode
 
கஸ்தூரி சொல்வதும்
நியாயம்தானே, சரயு டியர்
அம்மாதான் இல்லை
இவர்களை விட்டுட்டு ஓடிட்டாள்
அப்பாவையும் பிரிந்து தனியே
போக கஸ்தூரிக்கு பிடிக்கலை
 
Top