Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 34

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻





அத்தியாயம் 34

சிலிங்….

கட்டிலின் தலைமாட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த பூஞ்ஜாடி முரளியின் கோபத்திற்கு பலியாகி தன் ஆயுளை இழந்தது. படிக்கும் மேஜையில் கிடந்த புத்தகங்கள் பறக்கும் தட்டுகளாக பறந்து வந்து ராதாவை பதம் பார்த்தன.



அத்தனை அமர்க்களத்திலும் துளி கூட கலங்காமல் குனிந்து உடைந்த பூஞ்ஜாடியின் சில்லுகளை பொறுக்கி சுத்தம் செய்து கொண்டிருந்த ராதாவின் மெத்தனமான போக்கு முரளியை கோபப்படுத்தியது.



"என்னடி மனசுக்குள்ளே பெரிய பத்தினி தெய்வம் கண்ணகின்னு நெனப்பா?"



அவள் கூந்தலைப் பிடித்து உலுக்கி எழுப்பியவனை அயராமல் பார்த்தாள் ராதா.



"அந்த கண்ணகியோட புருஷன் மாதவி ஒருத்தி கிட்ட மட்டும் தாங்க போனார்.ஆனால் எனக்கு வாய்ச்ச புருஷன் கிருஷ்ணனாச்சே? நான் எப்படிங்க கண்ணகியாக முடியும்? "



"என்னடி வசனமா பேசறே? பார்டியில அத்தனை பேர் முன்னாடி என்னை அவமானப்படுத்தியது போறாதுனு இப்போ எதிர்த்து வேற பேசறியா?"



"ஷ்! புரியாமல் பேசாதிங்க.பார்டியில் என் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் தான் அப்படி நடந்துண்டேனே தவிர உங்களை அவமானப்படுத்த இல்லே.எங்கப்பா வயசிருக்கும் உங்க சேர்மனுக்கு.அந்த வயசுக்கு தகுந்த மாதிரியா அவர் நடந்துண்டார்? இல்லையே.அதான் கொடுத்தேன் நன்னா உறைக்கறா மாதிரி…."



"ஷட் அப்! இந்த மாடர்ன் சொசைட்டியில இதெல்லாம் சகஜம். அவர் எவ்வளவு பெரிய மனுஷர்? ஜஸ்ட் ஒரு பார்மாலிட்டிக்காக அவருடன் கம்பெனி கீப் அப் பண்ணினா என்ன? அவர் டான்ஸ் ஆடத் தானே கூப்பிட்டார்? என்னவோ படுக்கைக்கே கூப்பிட்ட மாதிரி ஓவரா சீன் க்ரியேட் பண்ணிட்டியே.இடியட்! "



"வாஸ்தவம் தாங்க. டான்ஸ் ஆடத் தான் கூப்பிட்டார்.அதுக்குத் தான் கன்னத்தில் அறைஞ்சேன்.நீங்க சொன்ன மாதிரி நடந்திருந்தால் கொலையே பண்ணியிருப்பேன்."



"அதையாவது பண்ணி தொலைச்சிருக்கலாம் நீ. என் பிரச்னையாவது தீர்ந்திருக்கும்."



"என்ன சொல்றிங்க நீங்க?"



திகைப்புடன் கணவனை ஏறிட்டாள் ராதா.



"ப்ச்சு! யாருனு தெரியல ஆனால் நிச்சயமா கம்பெனி ஆளாத்தானிருக்கனும் என் கேரக்டர் சரியில்லனு கம்பெனி ஹெட்டுக்கு கம்ப்ளெய்ன்ட் போயிருக்கு. அவங்க எப்படியும் சேர்மேன் கிட்ட ஒபீனியன் கேட்டுத் தான் எங்கிட்ட வருவாங்க.சேர்மேன் மனசு வெச்சா நான் இந்த சிக்கல்லருந்து ஈஸியா வெளிய வந்துடலாம்…"



"அதனால மனைவியை கூட்டிக் கொடுக்கறதுனு முடிவு பண்ணிட்டிங்க. ஏங்க இப்படி பண்ண உங்களுக்கு வெட்கமாயில்லை? நீங்க பார்க்கறது என்ன

மானேஜர் உத்தியோகமா இல்லே பெண்களை கூட்டிக் கொடுக்கற மாமா வேலையா?"



ராதாவிற்கு இரத்தம் கோதித்தது.

எப்படிப்பட்ட கீழ்த்தரமான எண்ணத்துடன் கணவன் தன்னை விருந்திற்கு அழைத்து சென்றிருக்கிறான் என்ற விவரம் புரிந்ததும் அவன் முகத்தில் காறித் துப்ப வேண்டும் போல் ஆத்திரம் வந்தது.



'சே! கேவலம் ஓரு ஐந்தறிவு மிருகம் கூட தன் இணையை யாரும் கவர்ந்து போனால் சிலிர்த்து சீறுமே! ஆனால் இவன்?'



நிஜமாகவே காறி துப்பி விட்டாள் ராதா.கோபம் தலைக்கேறிய முரளி அவள் அருகில் வந்து கன்னத்தில் அறைந்தான்.



"என்னடி! ரொம்ப ஓவரா போறே?"



"யாரு நானா ஓவரா போறேன்? சே! வெட்கமாயில்ல உங்களுக்கு? இந்த மாதிரி கூட்டிக் கொடுக்கறதுக்குனே சில பொம்பளைங்க இருப்பாங்கல்ல. அந்த மாதிரி சிறுக்கிகளையும் உங்களுக்கு நல்லா தெரியும் தானே? அப்படி ஒருத்தியை உங்க சேர்மேனுக்கு ஏற்பாடு பண்ணுங்களேன்.யார் வேண்டாம்னா?"



"அந்த மாதிரி ஐட்டம் பொண்ணெல்லாம் சேர்மெனுக்கு பிடிக்காது. குடும்ப பெண்கள் தான் அவருக்கு பிடிக்கும்."



அவ்வளவு தான். பத்ரகாளியாய் வெடித்தாள் ராதா.



"தூ! உங்களுக்கு வெட்கமாயில்ல இப்படி சொல்ல? உங்க சேர்மென் ஒரு மனுஷன்? அவன் பலகீனத்தை உங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கற நீங்களும் ஒரு மனுஷன்? நான் தப்பு பண்ணிட்டேங்க. அந்த சண்டாளனை அறைஞ்சதோட விட்ருக்கக் கூடாது. அங்கேயே கழுத்தை நெறிச்சு கொன்னு போட்ருக்கனும்."



'என்ன இவள்? ஒண்ணுமேயில்லாத விஷயத்திற்கு ஊரைக் கூட்டி லெக்சர் கொடுக்கிறாள்?'



முரளி சுருசுருவென்று மண்டைக்கேறிய கோபத்தை சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டான்.

இப்பொழுது சேர்மெனை சமாதானப்படுத்த ராதாவின் ஒத்துழைப்பு அவசியம் தேவை.



"ராதா ப்ளீஸ்! எனக்காக அவர் கிட்ட வந்து சாரினு ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடு. நீ வேற எதுவும் செய்ய வேண்டாம் ."



ராதாவின் கை பற்றி அவன் கிட்டதட்ட கெஞ்ச, ராதாவோ அவன் கைகளை வேகமாக தீச்சுட்டாற் போல உதறிவிட்டாள்.



"உங்களுக்காக நான் சுலபமா சாரினு சொல்லிடலாம்.ஆனால் அதையே அட்வான்டேஜா எடுத்துண்டு அவர் அத்து மீறினால் என்ன பண்றது? இன்னும உண்மையிலேயே அவர் நடந்துண்ட விதத்துக்கு அவர் தான் என்னிடம் மன்னிப்பு கேட்கனும் .அது தான் முறை."



'என்ன திமிர் இவளுக்கு? போனால் போகிறதென்று பார்த்து கொஞ்சம் தழைந்து போனால் இவள் ரொம்பவும் மிஞ்சுகிறாளே.மயிலே மயிலே இறகு போடு என்று இவளிடம் கெஞ்சுவது மடத்தனம்.'



ஆத்திரத்துடன் எதிரிலிருந்த டீபாயை எட்டி உதைத்தான்.



"ப்ளடி ஷிட்! என்னவோ பெரிய பத்திளி மாதிரி பேசற? நம்ம கல்யாணத்துக்கு முன்னால இன்னொருத்தனை காதலிச்சவ தானே நீ? உங்காத்து மாடியில குடியிருக்க அந்த டாக்டர் பயலை நீ காதலிச்ச விவரம் எனக்கு தெரியாதுன்னா நெனச்சே.? புருஷனைத் தவிர வேறொருவனை காதலிச்சப்போ கெடாத உன் கற்பு, இப்போ எங்க சேர்மெனை சந்தோஷப்படுத்தினால் மட்டும் கெட்டுப் போய்டுமா? நம்ம முதலிரவு அன்னிக்கு நீ கன்னியாத் தான் இருந்தேன்றதுக்கு என்ன ஆதாரம்?"



தேள் கொட்டினாற் போல துடித்துப் போய் நிமிர்ந்தாள் ராதா.கண்களில் கண்ணீர் அருவியாய் பொழிந்து கண்ணாடிக் கன்னங்களில் இறங்கியது.கணவனுக்கு தான் காதலித்த விவரம் தெரிந்து விட்டதே என்று அழவில்லை அவள்.ஆனால் அதையே காரணமாய் காட்டி தன் காரியத்தை சாதிக்க நினைக்கும் அவன் கயவாளித்தனம் தான் மனசை கலக்கியது.



"நானும டாக்டரும் காதலிச்சதென்னவோ வாஸ்தவம் தான்.ஆனால் நாங்க எந்த தப்பும் பண்ணல."



"இதை நான் நம்பனுமா?"

ஏளனமாக சிரித்தான் முரளி.



"நீ செகண்ட் ஹாண்டுனு தெரிஞ்சும் நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிட்டேன்?

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் உன்னை உபயோகப்படுத்திக்கலாம்ன்ற எண்ணத்துல தான்."



அசால்டாக அலட்சியமாக அவன் சொன்ன வார்த்தைகள் ராதாவின் மென்மனசை மேலும் ரணமாக்க, உதட்டை அழுந்த கடித்துக் கொண்டு நின்றாள் ராதா.



"இப்ப சொல்லு வந்து அவர்கிட்ட மன்னிப்பு கேட்கறயா?"

"முடியாது.."

இன்னும் அழுத்தம்திருத்தமாக பதில் சொன்னாள் ராதா.

"கடமைக்காக தான் உங்களையே கல்யாணம் பண்ணிண்டேன்.ஆனால் அதுக்காக நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுவேன்னு எதிர்பார்க்காதிங்க."



"_டாமிட்! சொன்னதையே திருப்பி திருப்பி சொல்றே? லுக் ஹியர்.இப்போ நீ மன்னிப்பு கேட்க வரலேன்னா நானே உன்னை தள்ளிட்டு போய் சேர்மென் கிட்ட சேர்ப்பேன்.என் பிரச்னையும் தீரும். உனக்கு நடத்தை சரியில்லனு சொல்லி விவாகரத்தும் பண்ணிடலாம்.எப்படி வசதி? ம்…"



இவன் மனிதன் தானா?



விஷமத்துடன் விழிகளில் கேலி கூத்தாட சொன்ன கணவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் ராதா.



"நான் சொன்னபடி கேட்டு நடந்துண்டேனா உனக்கு நல்லது.இல்ல நீ வருத்தப்படற அளவிற்கு விபரீதங்களை சந்திக்க வேண்டி வரும்."



அருகில் நெருங்கி பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லாதவனாக அவள் மேனி தீண்டி முத்தங்களை பதித்து விட்டு அவன் போக, ராதா நெருப்பில் நின்றார் போல தகித்துக் கொண்டிருந்தாள்.



இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி அடிமையிலும் கேவலமான வாழ்க்கை வாழ வேண்டுமோ என்று தன்னிரக்கத்தில் நெஞ்சம் கனத்துப் போனது.



போடா நீயும் வேணாம் நீ கட்டிய தாலியும் வேணாம்னு வீசி எறிந்து விட்டு போக அவள் அடித்தட்டையோ இல்லை மேல்குடியையோ சேர்ந்த பெண்ணில்லை.

பாழாய் போன நடுத்தரவர்க்கத்தில் அல்லவா பிறந்து விட்டாள்?



அவள் எடுக்கும் எந்தவொரு முடிவும் அவள் பெற்றோரை குடும்பத்தை அல்லவா பாதிக்கும்? அதுவும் திருமண வயதில் அடுத்து சந்தியா இருக்கும் பொழுது அதுவும் கலாச்சாரம் பாரம்பரியம் என்று பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் ராதாவா விவாகரத்து போன்ற பெரிய முடிவுகளை எடுக்கப் போகிறாள்?



என்னதான் உதட்டில் ஒட்ட வைத்த ரெடிமேட் புன்னகையுடன் வலம் வந்தாலும் ராதா உள்ளுக்குள் சிறுக சிறுக செத்துக் கொண்டிருந்தாள். காலம் செல்ல செல்ல தான் ஒரு மனிதனுக்கு வாழ்க்கைப்படவில்லை மனைவியின் அழுகையில் மகிழ்ச்சி அடையும் ஒரு சேடிஸ்டுக்கு வாழ்க்கைபட்டிருக்கிறோம் என்ற உண்மை புரிந்தாலும் ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில் தான் அவள் இருந்தாள்.



தம்பதியரிடையே வரும் விரிசல்கள் சிதம்பர ரகசியமாய் நாலு சுவற்றுக்குள் பூட்டி வைத்து சமாளிக்கப்படவேண்டியவை வெளி மனிதர்களுக்கு தெரிந்து சந்தி சிரித்துப் போகக்கூடாது என்ற மிக பழைய சித்தாந்தத்தை ராதா உறுதியாக நம்பியதாலோ என்னவோ, வெங்கட்ராமன் மகன் திருந்தி வருகிறான் சின்னஞ்சிறுசுகள் கௌரியின் தொந்தரவு இல்லாமல் கொஞ்ச நாளாவது தனிமையின் இனிமையை அனுபவிக்கட்டும் என்று எண்ணி மனைவி கௌரியுடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை கிளம்பினார்.



சில நாட்களாவது கௌரியின் நிந்தனைக்கு ஆளாகாமல் ராதா நிம்மதியாக இருக்கட்டும் என்று உளமாற நினைத்து தான் அவர் யாத்திரைக்கு சென்றார்.ஆனால் அவர் சென்ற அந்த காலகட்டத்தில் தான் முரளியின் காட்டில் அடைமழை பெய்தது.
 
Top