Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன் -அத்தியாயம் 8

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 8


மறுநாள் காலையில் அருண் குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்று தலைசீவும் போது தன் வெண்மையான தோள்களின் மேல் இளஞ்சிவப்பாய் அபியின் கைத்தடங்கள் பதிந்திருந்தை கண்டான். அவன் முகத்தில் தானாக புன்னகை அரும்பியது .அபியின் ஸ்பரிசம் இப்போதும் தோள் மீது ஒட்டிக்கொண்டிருப்பது போன்ற ஒரு மாயை தோன்றியது. முதலில் அவளது மென்மையான தொடுகை, பின்னர் அச்சத்தில் இறுகிய அழுத்தமான பிடி , அவளது அருகாமை, அணைப்பு , அவன் சித்தத்தை மயக்கும் அவளுக்கே உரித்தான வாசம் . இவை அனைத்தையும் மீண்டும் அதே வீரியத்துடன் உணர்ந்தது போன்ற பிரமையில் திகைத்துப்போனான் . ஒரு சிறு தலை சிலுப்பலில் அந்த மாயையிலிருந்து வெளிவந்தவன் ,
“என்ன இது நான் இப்படி ஆகிட்டேன் ?
டேய் அருண்… அவ்ளோ சீக்கிரம் விழுந்துடாதடா..” என்று தனக்குத் தானே அறிவுறுத்திக்கொண்டான்.
“அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க எல்லாம் ப்ரொபோஸ் பண்ணாங்க , அதை எல்லாம் அசால்ட்டா டீல் பண்ணிட்டு , இப்ப இந்த ஆங்கிரி பார்ட் கிட்ட வந்து சிக்கிட்டனே ..” என்று குழம்பினான் ..ஆனால் அந்த குழப்பமும் அவனுக்கு பிடித்திருந்தது தான் அவனை மேலும் அதிர்ச்சியடைய செய்தது..

அதே நேரம் அபி அவளது வீட்டில் கண்ணாடி முன் நின்று கண்களுக்கு மையிட்டு கொண்டிருந்தாள் .
“ஹே..அபி, என்ன இது அதிசயமா ..மேக் -அப் லாம் போட்டுட்டு இருக்க...?”என்று காவ்யா அவளை கேலி செய்தாள்.
“ஏன் நான் போடக்கூடாதா?” என்று சிணுங்கலாக குறைப்பட்டாள் அபி. காவ்யாவிடம் மாட்டிக்கொண்ட எரிச்சலும் சேர்ந்து ஒலித்தது அவளது குரலில் .
“அப்படிலாம் ஒன்னும் இல்லையே ...ஆனா இந்த மேக்அப் கொஞ்சம் ஓவரா தெரியுதே அதான் கேட்டேன்..” என்று சந்தேகமாக கேட்கவும் , அலட்சியமாக லேசாக உதட்டை சுளித்து விட்டு தன் வேலையை தொடந்தாள் அபி .
“சரி அது போகட்டும், நீ ஏன் அருண் உன்னோட ஆபீஸ்லதான் வேலை செய்யறான்னு என் கிட்ட சொல்லல?

“அது... வந்து ... நான் மறந்துட்டேன் ..”
என்று அபி தடுமாறவும் ..
அது எப்படி மறக்கும்? பொய் சொல்லாத.. உனக்கும் அவனுக்கும் சம்திங் சம்திங் அதான் சொல்லலை கரெக்டா?”

“லூசு மாதிரி பேசாத காவ்யா ,தேர் ஈஸ் நத்திங் பிட்வீன் அஸ் "
என்று அவசரமாக மறுத்தாள்.
“அப்போ நீ எதுக்கு அவனை பத்தி என்கிட்ட சொல்லவே இல்லை?” காவ்யா விடாப்பிடியாக அதிலேயே நின்றாள்.

“அது…உன்கிட்ட சொல்ற அளவுக்கு முக்கியமான விஷயமா எனக்கு தோணலை…”

“சோ.. அவன் உனக்கு முக்கியம் இல்லை..?அதனால தான் நாங்க பேசுறதை கதவுக்கு பின்னால நின்னு ஒட்டுகேட்டியா அபி? அதுமட்டும் இல்லாம வராத போன் காலை வரவச்சி என்னை அவசரமா கிளம்ப வச்சியா..?

அபி அதிர்ந்து விழித்தாள் ,"இவளுக்கு எப்படி தெரிந்தது ?
“இல்லைன்னு பொய் மட்டும் சொல்லாத… இந்த காவ்யாவுக்கு உடம்பெல்லாம் கண்ணு தெரிஞ்சிக்கோ..” என்று பெருமையடித்தாள்.

என்ன தில் சொல்வது என்று அபி தனது மரத்துப்போன மூளையை கசக்கி கொண்டிருக்கையில் காவ்யாவே தொடர்ந்து பேசினாள்.
"அபி, நீ என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட், என்கிட்ட சின்ன விஷயத்தை கூட ஷேர் பண்ற நீ..இவ்ளோ முக்கியமான விஷயத்தை சொல்லாம மறைக்கறேன்னா அது ஏன்னு நான் யோசிக்க மாட்டேனா?”
என்று அவளை தோளோடு அணைத்து கனிந்த குரலில் கேட்டாள்.
“அபி, அருண் ரொம்ப நல்ல பையனா தெரியறான் ,நீ அவனை உன்னோட வாழ்க்கை துணையா செலக்ட் பண்ணினா உனக்காக நான் உண்மையிலையே ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்ணுவேன்…”
என்ற காவ்யாவை இடை மறித்து

"போதும் காவ்யா, அதுக்குள்ள நீ எங்க போயிட்ட? நீ நினைக்கிற மாதிரி லாம் ஒன்னும் இல்லை, அவனை பார்த்ததும் எனக்கு நல்ல ஒப்பீனியன் வரலை ,அதான் உன்கிட்டசொல்லலை ,ஏன்னா..ஐ டோன்ட் வாண்ட் டு டாக் அபௌட் ஹிம் ,அவளோதான் ,அதனால நீ ரொம்ப கற்பனை பண்ணாத "என்று அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றாள்.
அபி.. சொன்னா கேளு ,கண்டதையும் நினைச்சி உன் வாழ்க்கையை வீணாக்காதா…ட்ரை டு மூவ் ஆன்… உன்னை இப்படி பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடீ.." என்று உணர்ச்சிகரமாக பேசவும் அந்த அன்பில் அபியின் கண்களும் லேசாக கலங்கின.

காவ்யா,எனக்கு தெரியும் நீ எப்பவும் என் நல்லதுக்காக மட்டும் தான் பேசுவேன்னு, பட் டோன்ட் ஒர்ரி ஐ அம் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட்,
நான் பழசு எதையும் நினைக்கறதே இல்லை ,இந்த புது லைஃப்ல நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் ,சோ நீ என்னை பத்தி ஃபீல் பண்ணாம உன்னோட பாய் ஃபிரெண்ட பத்தி மட்டும் கவலைபடு…ஓகே வா.. ?”

என்று விளையாட்டாக முடித்து சூழலை லேசாக்கினாள்.

காவ்யா அபியை ஒருமுறை ஆறுதலாக அணைத்து விட்டு சென்றாள்.

அவள் சென்றதும் அபிக்கு முன்பிருந்த உற்சாகம் ஏனோ இல்லை ,வேண்டாத பழைய நினைவுகள் யாவும் போட்டி போட்டு கொண்டு நினைவு வந்து அவளின் மன அமைதியை கெடுத்தது…கண்ணாடியில் அதுவரையில் அழகாக தெரிந்த தன் உருவம் ,இப்போது களையிழந்து தெரிந்தது அதற்குமேல் ஒப்பனை செய்யும் மனநிலையும் இல்லாமல் போகவே அப்படியே விட்டுவிட்டு ஆபீஸ்க்கு கிளம்பி வெளியே வரவும், அருண் தயாராகி வெளியே வரவும் சரியாக இருந்தது…
அருண் அபியின் தோற்றதை கண்டு ஒருகணம் திகைத்து சிலையாகி நின்றுவிட்டான், எப்போதுமே அவள் அழகு தான்,அதிலும் இன்று கவனத்துடன் தேர்ந்தேடுக்கப்பட்ட உடையிலும் , கச்சிதமான முக அலங்காரத்திலும் ஒரு தேவதையாகவே அவன் கண்களுக்கு தோன்றினாள்..
அவள் தனது அலங்காரத்தில் தனி கவனம் செலுத்தி இருப்பது கண்கூடாக தெரிந்தது ,
அருணின் ரசிக்கும் பார்வையில் அபி அவளையறியாமல் அழகாக முகம் சிவந்தாள்…
“யாருக்காக இந்த திடீர் மாற்றம்? எனக்காகவா..?” என்ற எண்ணமே அவனை இறெக்கையில்லாம் பறக்க செய்தது, இனம் புரியாத உவகையில் முட்டாள் தனமாக சிரிக்க தோன்றியது ,அவளுக்கு தன் அசட்டு சிரிப்பை காட்டமால் மறைப்பதற்காக முகத்தை திருப்பிக்கொண்டு பொங்கிவந்த சிரிப்பை அடக்கினான்..
“என்ன எதுவுமே சொல்லாம அந்த பக்கமா திரும்பிகிட்டான்? அவ்ளோ மோசமாகவே இருக்கோம்?”என்று ஐயுற்றாள்…
ஆனால் அருணின் மனதிலோ “இவ சும்மாவே அழகு ,இதுல இப்படி தேவதை மாதிரி முன்னாடி வந்து நின்னா பார்க்கறவன் செத்தான் ,இப்படியே எதிர்ல வந்து உக்கார போறாளா? இன்னிக்கு வேலை செஞ்ச மாதிரிதான்…” என்ற ரீதியில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

அதே சமயம் அபி, “காணாததை கண்டா மாதிரி பார்க்க மட்டும்தெரியுது அழகா இருக்குன்னு வாய தொறந்து சொன்னா கொறைஞ்சா போயிடுவான்?” என்று மனதிற்குள் குறைப்பட்டாள்.
ஒருவழியாக தன்னை சமனப்படுத்திக்கொண்டு அருண் அபியை ஏறிட்டான்,
“அபி, என்ன இன்னிக்கு மேக்அப் லாம் ரொம்ப அதி.. இல்லை அழகா இருக்கு ஏதாவது விசேஷமா ?”
அவன் அதிகமாக என்று சொல்ல தொடங்கி பிறகு அதை மாற்றி கூறியதை கண்டு கொண்ட அபி "நான் மேக் அப் அதிகமா போட்டிருக்கேனா ?” என்று உள்ளூர புகைந்தாள்,

“ஆமா என்னை இன்னிக்கு பொண்ணு பார்க்க வராங்க அதான் இவ்ளோ மேக் போட்டிருக்கேன்..” என்று எரிச்சலுடன் மொழிந்துவிட்டு வேகமாக கிளம்பிச்சென்றாள்

இன்போடெக் ஆபீஸ் கான்டீன்

அருணும், விக்கியும் லஞ்ச் பிரேக்கில் கான்டீன் வந்தனர் ,உள்ளே நுழைந்த உடன்
"டேய் மச்சான் அங்க பாருடா அபி..” என்று கத்தினான் விக்கி,
அவன் பார்வையை தொடர்ந்த அருணும் அதிர்ந்து விழித்தான்.

அபி அங்கே ஏதோ ஒரு அந்நிய ஆணுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள், அவர்களின் முகபானையில் அவர்கள் எதையோ பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருப்பது புரிந்தது..

“அப்போ காலைல சொன்னது உண்மை தானா? நிஜமாவே பொண்ணு பார்க்க தான் வந்திருக்கானா?”
அதிர்ச்சியில் இதயம் ஒரு கணம் நின்றது போல் உணர்ந்தவன்

, "ச்சா. ச்சா.. அப்படிலாம் இருக்காது..” என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான். இருப்பினும் ‘அது யாராக இருக்கும்’ என்று மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.

“டேய் , யாருடா அது… அபியோட பாய் ஃபிரண்டா இருக்குமோ?” என்று விக்கி சாதாரணமாக வினவ.

"வாய கழுவுடா,ரெண்டு பேர் பேசினா உடனே லவ்வர்ஸா? ஏன் அண்ணன் தங்கச்சியா இருக்க கூடாதா?” என்று அடிக்குரலில் சீறினான்..
இந்த திடீர் பாய்ச்சலை சற்றும் எதிர்பார்க்காத விக்கி ஒருகணம் திகைத்துப் போனான் மறுகணம் குறும்பு கூத்தாடும் குரலில்

"டேய் அவங்க பாடி லாங்குவேஜ்ஜ பார்த்தா ப்ரோ சிஸ் மாதிரி இல்லை டா… அது மட்டும் இல்லாம ஃபேஸ் கட்டும் மேட்ச் ஆகலையே" என்று சீண்டவும் ,பதிலுக்கு அருண் அவனை பார்வையிலேயே சுட்டெரித்தான்.

“ சரி மொறைக்காத போய் அது யாருன்னு கேளு…” என்றான் விக்கி...

“நான் எப்படி டா கேக்குறது….”
என்று அருண் தயங்கவும்,

“நீ கேக்காம வேற யாரு கேக்கறது ?லவ் பண்றவன் தாண்டா கேக்கணும்..” என்று கூறி கண்ணடித்தான் விக்கி…

“லவ் லாம் ஒன்னும் இல்லை
..” என்று பலவீனமான குரலில் மறுத்தான் அருண்..
"நம்பிட்டேன் மச்சி… அதான் உன் முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கே"
என்று விக்கி சிரிக்கவும் ,அருண்அவனை முறைத்தான்.

"டேய் ,இந்த முறைப்பையெல்லாம் உனக்கு போட்டியா வந்திருக்கானே அவன் கிட்ட காட்டு ,என் கிட்ட காட்டி எனெர்ஜியை வேஸ்ட் பண்ணாத.." என்று கிண்டலடித்தான்
“டேய் விக்கி.. நீ போய் கேளுடா..” என்று நயமாக வினவினான் அருண்..

“ஆமாண்டா உனக்கு மாமா வேலை பார்க்கத்தான் நான் பிஇ ஐ டி படிச்சேன் ..”
“டேய் மாமா.. போய் கேளுடா..”
“ஓஹ் நீ அதை கன்பார்ம் வேற பண்றியா..? இது நல்லா இருக்கே பக்கோடா சாப்பிடுறது ஒருத்தன் பல்லு குத்துறது இன்னொருத்தனா? போடா உனக்கு வேணும்னா நீ போய் கேளுடா…”

“டேய்.. நீ தான் டா அபியோட பிரண்டு ..”

“இப்படி உசுப்பேத்தி விட்டு அபிகிட்ட அடிவாங்கி வைக்க பிளான் பண்ற போடா நான் போகமாட்டேன்..”

“இப்போ போனா உனக்கு நல்லது…” என்றான் மிரட்டல் தொனியில்
“இதுல எனக்கு என்னடா நல்லது இருக்கு?”

“கை, கால் உடையாம முழுசா இருக்கறது உனக்கு நல்லது தானே டா ?”

“சரி டா போறேன்,
உன்னோட மிரட்டலுக்கு பயந்துலாம் இல்லை ,உன்னோட தொந்தரவு தாங்காம, போலன்னா தான் நீ விடமாட்டியே..” என்று வேண்டாவெறுப்பாக சென்றான்…

“ஹாய் அபி…”
என்று உற்சாக குரலில் அழைத்துக்கொண்டு அபியின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான் விக்கி,
பிறகு மெதுவாக அந்த புதியவனின் பக்கம் திரும்பி அப்போது தான் அவனை பார்ப்பது போன்ற பாவனையுடன்,
"ஓஹ் சாரி ,நீங்க ஏதோ முக்கியமா பேசிட்டு இருந்தீங்க போல நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா ?”
என்று மன்னிப்பு கேக்கும் தொனியில் கூறி விட்டு அவன் எழுந்து செல்ல எத்தனித்த போது
அவனை அவசரமாக தடுத்த அபி,” நோ ப்ரோப்லம் விக்கி ,நீங்க உக்காருங்க ,இது என்னோட கசின் சுரேஷ் ,சுரேஷ் இது என்னோட கொலீக் விக்கி…” என்று இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தாள்..

இருவரும் ஒரு சம்பிரதாய “ஹாய்”உடன் அமைதியாக,

விக்கி அந்த மவுனத்தை கலைத்து "நீங்க ஏதோ பெர்சனலா பேசுவீங்க நான் அப்புறமா வரேன்..” என்று இழுக்கவும்,
அதெல்லாம் ஒன்னும் இல்லை விக்கி ,சுரேஷ் இப்போ கெளம்பிட்டு தான் இருந்தாரு..” என்றாள்.
ஏனோ அவளும் விக்கி அங்கே இருப்பதையே விரும்புவதாக தோன்றியது.

“சோ அபி, நாம வீக்கெண்ட் மீட் பண்ணலாமா?” என்றான் சுரேஷ் இருக்கையில் இருந்து எழுந்தவாறு,
“நான் அப்புறமா கால் பண்றேன் சுரேஷ்..” என்றாள் அரை மனதாக
சுரேஷ் ஏமாற்றத்துடன் கிளம்பிச்சென்றான்.

“டேய்.. அவன் அபியோட கசினாமாண்டா..”என்று விவரம் அறிந்து வந்து விக்கி கூறவும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டான் அருண், விக்கி அறியாமல்…
“கசின்னா யாருடா?” என்றான் விக்கி யோசனையாக …
"மடையா இதுகூட தெரியாதா? பெரியப்பா பையன் சித்தப்பா பையன் இவங்களதான் கசின்னு சொல்லுவாங்க..” என்றான் ஏளனமாக

“ஆமாண்டா நான் மடையன் தான்.. உலக அறிவாளியே நீங்க சொல்லுங்க, மாமா பையன் அத்தை பையன் இவங்கள இங்கிலீஷிலே எப்படி சொல்லுவாங்க?” என்றான் அவனை விட ஏளனமாக …

"டேய் சும்மா இருடா, வந்துட்டான் மூளையை தூக்கி கையில வச்சிக்கிட்டு, கேக்குறான் பாரு டீடைலு…” என்று எரிச்சலுடன் மொழிந்துவிட்டு சென்றான் ..

“லவ் கூட பண்ணிடலாம், ஆனா இந்த லவ் பண்றவங்களோட ஃபிரண்டா மட்டும் இருக்கவே கூடாது, ஒரு விஞ்ஞானியா இவன் படுத்துற பாடு இருக்கே.. " என்று மைண்ட் வாய்ஸ்ஸில் புலம்பினான் விக்கி..

அன்று முழுவதும் அபி ஏதோ சஞ்சலத்தில் இருப்பது போல் தெரிந்தது.. வழக்கமான உற்சாகம் துளியும் இல்லாமல் சோர்ந்து காணப்பட்டாள். அதன் காரணம் அந்த சுரேஷ் ஆக இருக்குமோ என்ற எண்ணமே அவனுள் பற்றி எரிவது போன்ற உணர்வை தந்தது. அருண் சிறுவயதில் இருந்தே யாரையும் பார்த்து பொறாமை கொண்டதில்லை, ஆனால் இன்று அபி யாரோ ஒருவனின் நினைவில் பாதிப்படைகிறாள் என்ற எண்ணமே அவனுக்கு கசப்பாக இருந்தது, அதற்கு காரணமானவன் மீது ஆத்திரம் பொங்கியது. முதன் முறையாக மனதில் பொறாமை கனல் மூண்டது அதுவும் முன்பின் பார்த்தறியாத ஏதோ ஒரு அந்நியனிடம்….
தொடரும்
 
Top