நிழலாடும் நின் நினைவில் 03

Advertisement

என்னடா இது நாலு வருஷம் காதலித்தவள் மனதில் இருக்காள் ,எட்டு வருடம் ஒண்ணா வாழ்ந்தவள் மனதில் இல்லைலையே என ஒருநிமிடம் யோசிச்சேன் ,அப்புறமா பாத்தா ஹீரோ சார் !2000மாம் வருஷத்தில இல்ல இருக்கார் அப்போ ரம்யாவை சந்தித்தே இருக்க மாட்டானே!
இந்த இடத்தில் ஆத்தர் ஜீயை பாராட்டியே ஆகணும் எவ்வளவு நேக்கா கதையை நகர்த்தி நம்ம கிட்ட இருந்து தப்பி வந்து இருக்காங்க.
அவனே இப்போ தான் கண்ணு திறந்து இருக்கான் அவனுக்கு அதிர்ச்சியை கூட்டாதேம்மா ஷர்மிலா.
ரம்யாவின் புரிதல் செம தான் ஆனாலும் அதற்கு பின்னாடி இருக்கும் வலி....யப்பா முடியல,
எவ்வளவு பிரச்சனை இருக்கு அதையேல்லாம் தனியா கடந்து வந்துவிடுவாளா..?
தருணுக்கு ஷர்மிலா மேல் நம்பிக்கை வரமாட்டேன்குதே,என்னவோ பெரிதாக அடிவாங்கி இருக்கான் அதான் இந்த நம்பிக்கையின்மை போல.

ஆத்தர்ஜீ ..!அதான் எஸ்கேப் ஆகிட்டீங்களே ,எப்படி திட்டுறதாம் .
இனிவரும் அத்தியாயங்களில் பாத்துக்கலாம் என்று இருக்கேன் .
இதை என்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை தானே! For a change, கதையில் முதலில் பிரச்சனையை சொல்லிட்டு happy momentsஅ கதயின் போக்கில் சொல்லலாம்னு நெனச்சேன்.

தனி ஜிக்கு தருண் மேல எம்புட்டு ஆசை. எபிக்கு எபி பாசத்தை பொழியுறீங்க.

நண்பன் உடையான் நெருக்கடிகளுக்கு அஞ்சான். ரம்யா இதிலிருந்து மீண்டு வருவாள் ஜி!
 
கணவனின் நிலை தெரியாமல்
கலங்கி சென்றேன்...
கண்ணீரில் தத்தளித்து
காக்க மறந்தேன்
கையில் வரும் முன்
காணலையே கண்ணே...

காதலாக காத்திருந்து
காலம் மடி சேர்ந்து
கரு தங்கியது வரமாக
கண்ணில் நாங்க
காணும் முன்னே
களைந்து போனாயோ
கண்ணுகளா???
இரண்டு கவிதைகளும் கண்களில் கண்ணீர் வரவைத்து விட்டது கவிக்குயிலே. அதுவும், குழந்தைகளைப் பற்றிய ரம்யாவின் ஏக்கம் //கண்ணில் நாங்க....// எனத் தொடங்கும் வரிகள்....அத்தியாத்தை எந்தளவிற்கு உள்வாங்கி படிச்சிருக்கீங்கன்னு புரியுது.
 
ஏதும் அறியாத அந்த ட்வின்ஸ் பாவம். நான் இதை எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது ரம்யா அப்படி கிளம்பி இருக்க கூடாது என்று தோன்றியது.

He needs her support illaiya?

கதையின் போக்கு மெல்ல படிபடுகிறது. உங்கள் எழுத்து கதையினுள்ளே இழுக்கிறது.

Enjoying an ongoing story after a long time. Waiting for the next epi.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
கதையின் அழுத்தத்தைக் கூட்ட வேண்டுமென்றில்லை. பிள்ளைப்பேறு அடைவதில் பல சிக்கல்களை அனுபவிக்கும் வாசகர்களும் இருப்பார்கள் தானே. 'இப்படியும் வாழலாம்!' என அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கதையில் நற்சிந்தனைகளை எழுத வேண்டும் என்பது என் நோக்கம். முக்கியமாக, கணவன்-மனைவிக்குள் புரிதல் இருந்துவிட்டால், இந்த உலகத்தின் எப்பேர்ப்பட்ட இன்னல்களையும் கடந்து வந்து விடலாம் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

ரம்யா-தருண் சண்டையெல்லாம் அரை நிமிஷம் தாங்காது முகிலன் எழுத்தாளரே....
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top