இதை என்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை தானே! For a change, கதையில் முதலில் பிரச்சனையை சொல்லிட்டு happy momentsஅ கதயின் போக்கில் சொல்லலாம்னு நெனச்சேன்.என்னடா இது நாலு வருஷம் காதலித்தவள் மனதில் இருக்காள் ,எட்டு வருடம் ஒண்ணா வாழ்ந்தவள் மனதில் இல்லைலையே என ஒருநிமிடம் யோசிச்சேன் ,அப்புறமா பாத்தா ஹீரோ சார் !2000மாம் வருஷத்தில இல்ல இருக்கார் அப்போ ரம்யாவை சந்தித்தே இருக்க மாட்டானே!
இந்த இடத்தில் ஆத்தர் ஜீயை பாராட்டியே ஆகணும் எவ்வளவு நேக்கா கதையை நகர்த்தி நம்ம கிட்ட இருந்து தப்பி வந்து இருக்காங்க.
அவனே இப்போ தான் கண்ணு திறந்து இருக்கான் அவனுக்கு அதிர்ச்சியை கூட்டாதேம்மா ஷர்மிலா.
ரம்யாவின் புரிதல் செம தான் ஆனாலும் அதற்கு பின்னாடி இருக்கும் வலி....யப்பா முடியல,
எவ்வளவு பிரச்சனை இருக்கு அதையேல்லாம் தனியா கடந்து வந்துவிடுவாளா..?
தருணுக்கு ஷர்மிலா மேல் நம்பிக்கை வரமாட்டேன்குதே,என்னவோ பெரிதாக அடிவாங்கி இருக்கான் அதான் இந்த நம்பிக்கையின்மை போல.
ஆத்தர்ஜீ ..!அதான் எஸ்கேப் ஆகிட்டீங்களே ,எப்படி திட்டுறதாம் .
இனிவரும் அத்தியாயங்களில் பாத்துக்கலாம் என்று இருக்கேன் .
தனி ஜிக்கு தருண் மேல எம்புட்டு ஆசை. எபிக்கு எபி பாசத்தை பொழியுறீங்க.
நண்பன் உடையான் நெருக்கடிகளுக்கு அஞ்சான். ரம்யா இதிலிருந்து மீண்டு வருவாள் ஜி!