Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-65(2) இறுதி அத்தியாயம்

Advertisement

praveenraj

Well-known member
Member
இந்த இடைப்பட்ட வேளையில் ஹேமா-மௌனியின் திருமணம் நடைபெற மௌனியின் சார்பாக 'பயணங்கள் முடிவதில்லை' மற்றும் அனேஷியாவின் குழுவினர் அனைவரும் தங்கள் பெற்றோரோடு வந்து மௌனிக்கு உறவாய் நின்று அவளை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தினார்கள்.

மௌனியின் சார்பில் எல்லோரும் சேர்ந்து அவளுக்கு நிறைய சீர்வரிசை செய்து அவளுக்கு தாங்கள் அனைவரும் இருப்பதாய் ஒரு நம்பிக்கை தந்தனர். சீர்வரிசை என்பது நகை, பணம் என்று பொருள் சார்ந்ததில்லையே. உறவுகள் சார்ந்தது ஆச்சே? அதைத் தான் அவளுக்குக் கொடுத்தனர்.

எல்லோரும் எதிர்பார்த்த ஜிட்டுவின் திருமணம் வந்தது. நித்யாவை பத்திரமாக அழைத்து வந்திருந்தான் விவான்.பின்னே ஒன்பதாவது மாதம் தொடங்கியிருந்தது.அவனால் தானே அவர்கள் இன்று சந்தோசமாக இருக்கிறார்கள். அன்று மட்டும் ஜிட்டு பதிமூன்று இட்லிகளைச் சாப்பிடாமல் இருந்திருந்தால் விவான் நித்யாவிடம் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைத்திருக்காதே. என்னதான் விவான் அவளை ஏற்கனவே பார்த்திருந்தாலும் அவர்கள் இன்று வாழ்க்கையில் இணைய ஜிட்டு ஒரு முக்கியப் புள்ளி என்று அவர்கள் அறிவார்கள்.

எப்போதும் மற்ற கல்யாணத்தில் ஜிட்டுவை கலாய்த்து டைம் பாஸ் செய்பவர்களுக்கு இன்று ஜிட்டுவின் திருமணத்தில் எப்படி டைம் பாஸ் செய்வதென்று புரியாமல் விழித்தனர்.

மறுநாள் காலை திருமணத்தன்று ஜிட்டு மணவறைக்கு நுழையும் முன் அவனை நோக்கி ஓடி வந்தான் இளங்கோ.

"இந்தா ஜிட்டா" என்று ஒரு கவர் தர,

"டேய் என்னடா இது மொய்யெலாம் தரீங்க? நாம யாருக்குமே தரலையேடா?" என்றதும்,

"ஓ மொய்க் கொடுப்போம்னு எல்லாம் உனக்கு ஆசையிருக்கா? இதைப்பிடி"என்னும் போது இதியையும் அங்கே அழைத்துவந்தனர்.

பின்னாலே ஹேமாவும் கையில் ஒரு கவரோடு ஜிட்டுவை நெருங்க,'ஆஹா என்னமோ திட்டம் தீட்டிட்டானுங்க போல. உஷாருடா ஜிட்டா' என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.

தியாவும் கையில் ஒரு லெட்டரோடு வர,"என்ன இது எல்லோரும் லெட்டரோட வராங்க?" என்று அவன் காதைக் கடித்தாள் இதி.

"அதான் எனக்கும் தெரியலையே?" என்றான் அவன்.

விவானும் பின்னாலே கவரோடு வர இளவேனில் ஒரு கவரை இதியிடம் கொடுத்து, "ஆண்ட்டி இந்த லெட்டரை ஜிட்டு அங்கிள் கிட்டத் தரச் சொன்னாங்க" என்றாள்.

"யாரு தந்தாங்க?" என்றவளுக்கு

"அங்க ரோஸ் கலர் சேரீ கட்டி ஒரு ஆண்ட்டி" என்றதும் இதி அதைப் பிரிக்க,

"அன்பு மன்னவா உங்க அழகில் நான் மயங்கிவிட்டேன். நீங்கள் ஊம் என்று சொன்னால் போதும் உங்களை மணமுடிக்க காத்திருக்கிறேன். உங்கள் சொட்டை மண்டையில் சறுக்கி விளையாட என் மனம் ஏங்குகிறது. உங்கள் தொந்தி வயிற்றில் குதித்து விளையாட என் மனம் ஆசைக்கொள்கிறது .இப்படிக்கு உங்கள் அழகில் மயங்கியவள்" என்று எழுதியிருக்க இதி ஜிட்டுவை முறைத்தாள். அதைப் படிக்கும் போதே அவளுக்கு சிரிப்பும் வந்தது கூடவே இதெல்லாம் இவர்களின் விளையாட்டு என்றும் அறிந்தவள் ஜிட்டுவை வெறுப்பேற்ற எண்ணி முறைத்தாள்.

அதை வாங்கிப் படித்தவன்,"டேய் ஏன்டா இப்படிப் பண்றீங்க? நான் உங்களுக்கு என்னடா பாவம் பண்ணேன்? உங்க எல்லோருடைய கால்ல விழுந்து கேட்குறேன்டா ப்ளீஸ்" என்றவன்,"குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்க" என்று ஹேமாவிடம் கேட்க,

"மாப்பிளைக்கு கூஜாவுல தண்ணீர் கொண்டு வா" என்றான் ஹேமா.

"மாப்பிள்ளைக்கு தங்க கூஜாவுல தான் தண்ணீர் வேண்டுமாம்" என்றான் தியா

"சுற்றி வைர வைடூரிய கற்களால் நிரம்பிய தங்க கூஜா கொடுத்தா தான் மாப்பிள்ளை தாலி காட்டுவாராம்" என்றான் செபா.

"டேய் டேய் டேய்... நீங்க ஏன்டா இங்க வந்தீங்க? உங்களை எல்லாம் நான் கல்யாணத்துக்கே கூப்பிட்டு இருக்கக் கூடாது. கல்யாணத்துல வேட்டு வெச்சிடாதீங்கடா ப்ளீஸ்" என்று மன்றாடினான் ஜிட்டு.

அப்போது மேடையேறிய விவான ,"மண்டபம் பூரா ஒரே பேச்சு தான். மாப்பிள்ளை அழகுக்குப் பொண்ணு சரியாய் ஜோடியில்லைனு சொல்றாங்க" என்றதும்

"டேய் முடியலடா என்னால முடியல. ப்ளீஸ்" என்று கெஞ்சினான். மணவறையில் அமர்ந்திருக்க திடீரென்று ஜிட்டுவுக்கு அந்த சந்தேகம் வந்தது. உடனே துவாராவை அழைத்தான்.

"அவன் கீழ இருக்கான். என்ன விஷயம் சொல்லு?" என்றான் ஹேமா. ஹேமாவைப் பார்த்தவன் "இல்ல இவன் கிட்டச் சொல்லக் கூடாது. இதுக்கு துவாரா தான் சரியான ஆளு" என்று எண்ணி அவனை அழைக்க இப்போது விவான், இளங்கோ, தியா மூவரும் அவனைச் சுற்றி வளைக்க வேறு வழியின்றி விவானை மட்டும் அழைத்து,"மச்சி ஒரு சின்ன சந்தேகம்"

"கேளு"

"ஷூ லேஸ் மாதிரி தானே கட்டணும்?"

:"எதை?"

சுற்றி முற்றிப் பார்த்தவன் விவானை கண்ணடித்து அழைத்து,"தாலிக்கு என்ன முடிச்சு போடணும்?" என்றதும் குபீரென சிரித்தவன் தியா, இளங்கோ, ஹேமா மூவரையும் அழைத்து அதைச் சொல்ல நால்வரும் சேர்ந்து அவனை முறைத்து சிரித்தனர்.

"எப்படிடா உனக்கு இப்படி எல்லாம் சந்தேகம் வருது?" என்று சிரிக்க,

"போங்கடா இதுக்கு தான் நான் துவாராவைத் தனியாகக் கூப்பிட்டேன். ப்ளீஸ் சொல்லுங்கடா" என்றான்.

"ஏன்டா இது கூடத் தெரியாதாடா?" என்ற இளங்கோவுக்கு

"ஆமா நான் வாரம் ஒரு கல்யாணம் செய்யுறேன் பாரு இதெல்லாம் தெரிஞ்சி வைக்க. இப்போ சொல்லுவீங்களா இல்லையா?" என்றான் ஜிட்டு.

பிறகு சிரித்து கலாய்த்து அன்றைய திருமணத்தை அழகாய்க் கொண்டாடினர்.

ஒருவழியாக இவங்க கேங்கில் எல்லோருக்கும் திருமணம் முடிய அனைத்து ஜோடிகளும் ஒன்றாக நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

எல்லா ஜோடிகளும் அருகருகே அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்க,"நாம எல்லோரும் திரும்ப ஒரு ட்ரிப் போலாமா?"என்றாள் மௌனி.

அப்போது நித்யா, ஜெஸ்ஸி ப்ரெக்னெண்டாக இருப்பதைப் பார்த்து,"இப்போ முடியாதுப்பா" என்றாள் சரித்திரா.

"அட இப்போயிருந்து போட ஆரமிச்சா தான் அடுத்த ரெண்டு மூணு வருஷத்திலாவது எக்சிகியூட் செய்ய முடியும்" என்றான் ஹேமா.

"இது வேணுனா கரெக்ட்" என்று அனைவரும் ஆமோதித்தனர்.

இன்னும் அனேஷியா-திவே மற்றும் யாழ் -பிரவின் ஆகியோரின் திருமணம் பாக்கியிருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் இஸ்மாயில் பெனாசிரின் வீட்டிற்குச் சென்று பேசியிருந்தான். சித்தாராவை சமாதானம் செய்ய முடியாமல் விவியனைப் பற்றி அனைத்தும் தெரிந்துகொண்டவர்கள் அதை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.

"டேய் செபா இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?"- ஹேமா

"ஜிட்டு கல்யாண நாள்"

"அப்புறோம்?"- இளங்கோ

"அப்புறமென்ன?"

"சபதம் முறியடிக்கும் நாள்" என்றான் தியா. அதில் அங்கிருந்தவர்கள் எல்லோரும் சிரித்தனர்.

"ஃபர்ஸ்ட் நைட்டை போஸ்ட் பார்ன் பண்ண வெக்கலாமா?" என்றான் செபா.

"டேய் செத்துடுவான்டா . ஏற்கனவே அவனை இன்னைக்கு ரொம்ப டார்ச்சர் பண்ணியாச்சு" என்றான் விவான்.

"மச்சி இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு" என்றான் இளங்கோ.

"எதுக்கு?"

"நம்ம அசாம் டூரோட ஃபர்ஸ்ட் அன்னிவெர்சரி கொண்டாட" என்றான் ஹேமா.

"ஒரு வருஷம் ஆகிடுச்சில்ல?" என்றாள் மிரு.

"போனதே தெரியல" என்றாள் அனேஷியா.

"ரேஷு வி மிஸ் யூ சோ மச் டி"- ஜெஸ்ஸி.

"லோகேஷ் என்ன ஆனான்?"

"அவனும் வேற கம்பெனி மாறிட்டான். பெங்களூர்ல இருக்கான் ஐ திங்க் சோ" என்றாள் ஜெஸ்ஸி.

"இந்த ஒரு வருஷத்துல எவ்வளவு மாற்றங்கள் நம்ம வாழ்க்கையில. எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி அந்த ட்ரெயின் ட்ராவல் தான்" என்றாள் சரித்திரா.

"எஸ். எல்லாமே அங்க இருந்து தான் தொடங்குச்சி" என்றான் செபா.

"இளா குட்டி ஸ்கூல் சேர்ந்துட்டா. தெரியுமா?" என்றான் துவாரா.

எல்லோரும் அங்கிருந்த இளாவைக் கேள்விக்கேட்டு நச்சரித்துவிட்டனர்.

பிறகு எல்லோரும் அங்கிருந்து விடைபெற வேண்டியிருந்தது.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சித்தாராவின் வீட்டில் திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல, அவளுக்கு உண்மையில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. விவி பற்றித் தீர்க்கமாக விசாரித்து அவனுக்கு யாருமில்லை என்று அறிந்து அவனின் படிப்பு வேலை என்று எல்லாம் விசாரித்து இருவரையும் அழைத்து சில பல அட்வைஸ் மழையைப் பொழிந்து இறுதியாகவே சம்மதம் சொன்னார்கள். அவன் துவாராவிடம் மட்டும் விஷயத்தைத் தெரியப்படுத்தினான். மற்றவர்களுக்குப் பிறகு சொல்லாம் என்று முடிவெடுத்திருந்தான்.

அன்று காலை வழக்கம் போல் விவான் எஸ்டேட் செல்ல ரெடியாக நித்யாவுக்கு லேபர் வந்ததும் துரிதமாய் அழைத்துச் சென்றான். ஆனால் இளாவைப் போல் சுலபமாக அல்லாமல் சிறிய காம்ப்ளிகேஷன்ஸ் எல்லாம் கொடுத்து தான் அவதரித்தான் அவர்களின் தவப்புதல்வன். எல்லோரைக் காட்டிலும் விவான் அதிகம் பயந்துவிட்டான். இளா எவ்வித சிரமமும் கொடுக்காமல் பிறந்திருந்ததால் இதையும் அவன் ஈசியாக நிகழும் என்று எண்ண நித்யா பட்ட சில சிரமங்களை கண்கூடப் பார்த்து உண்மையில் பரிதவித்தான் விவான்.

குழந்தை பிறந்தும் நித்யா நினைவு திரும்பும் வரை விவானுக்கு ஒரு வித பயம் ஆட்கொண்டது உண்மை. பிறகு தான் நிம்மதியடைந்தவன் உள்ளே செல்ல, அவனின் சோர்வைக் கண்டு அவனை இலகுவாக்க,"ஆமா நான் தானே இங்க குழந்தை பெத்தேன். நானே நார்மலா இருக்கேன் நீ என்னவோ இப்படி இருக்க?"என்று அவனை வாரினாள்.

"சாரி நித்யா. எக்ஸ்ட்ரீமிலி சாரி" என்றவனை எவ்வாறு சமாதானம் செய்வது என்று போராடினாள் நித்யா. பிறகு இளவேனில் வந்து குழந்தையைப் பார்த்து அவள் கொடுக்கும் கமெண்ட்ஸ் எல்லாம் கேட்டு ரசித்தனர். ராஜசேகருக்கும் லலிதாம்மாவுக்கும் ஆனந்தம் கூடியது. இங்கே பெரும்பாலானோர் ஆணொன்றும் பெண்ணொன்றும் வேண்டுமென்று தான்விரும்புகிறார்கள். அதே போல் தான் அவர்களும் ஆசைப்பட அது நிகழ்ந்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சியே. நித்யா வீட்டிலிருந்தும் எல்லோரும் வந்து பார்த்தனர். எல்லோருக்கும் பொதுவாக குரூப்பில் விவான் செய்தியைப் பகிர்ந்தான். அன்று சனிக்கிழமை என்பதால் துவாராவும் சரித்திராவும் அன்றே அவர்களைப் பார்க்க வந்தார்கள்.

அவர்களைக் கண்டு மகிழ்ந்தவர்கள் சரித்திராவின் ப்ரெக்னென்சி செய்தியில் இன்னும் அதிகம் மகிழ்ந்தனர்.

அடுத்ததாக நிகழவிருக்கும் அனேஷியா திவேஷின் திருமணத்திற்கு எல்லோரும் செல்ல முடிவெடுத்தனர். கூடவே விவி மற்றும் சித்தாராவின் திருமணமும் நாள் குறிக்கப்பட்டிருந்தது.

பெனாசிரின் விருப்பமறிந்து இஸ்மாயில் அவர்கள் வீட்டில் பெண்கேட்க சில காரணங்களால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. காதலுக்காகப் போராடும் நிலையில் இஸ்மாயில் இல்லை. அதேநேரம் இஸ்மாயில் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் நிலையிலும் பெனாசிர் இல்லை. இஸ்மாயில் கன்செர்வேட்டிவ் குடும்பம். பெனாசிர் லிபெரல் குடும்பம். இரண்டிற்கும் ஒத்துவராமல் போகவும் கொஞ்ச நாளிலே இஸ்மாயில் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியிருந்தான்.

வாழ்க்கையும் இதுபோல் தானே? சிலருக்கு பிடித்ததைப் போராடி அடையும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு இதைவிட வேறு சில பிரியாரிட்டிஸ் வந்து இதைத் தடுக்கும். சிலரோ எவ்வளவு போராடினாலும் நூலிழையில் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலர் இதை லக் என்கிறார்கள். சிலரோ இதை டைம் என்கிறார்கள். சிலரோ இதைத் தலையெழுத்து என்கிறார்கள். சிலர் இது இறைவனின் விளையாட்டு என்கிறார்கள்.துவாராவைத் திருமணம் செய்ய எண்ணியவள் திவேஷை திருமணம் செய்யப்போகிறாள்.யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்றிருந்தவன் சரித்திராவைப் பார்த்ததும் காதல் வயப்பட்டான். விவானுடனான காதல் நடப்பில் சாத்தியமில்லை என்று ஒதுக்கிப்போனவளுக்கு தேடிவந்தது வாழ்வு. ஒருமுறை பட்ட ரணமே போதும் என்று அந்த வடு ஆறாமல் இருக்கும் போதே அவளுக்குக் கிடைத்தான் விவி. தன்னைச் சிறைபிடிக்க வழியேயில்லை என்று சுதந்திரமாகத் திரிந்த யாழும் சிறைபிடிக்கப்பட்டாள். யாரை செபா தன் வாழ்வின் சாபம் என்று எண்ணினானோ அவளே அவன் வாழ்வின் வரமாகிப் போனாள்.திவேஷிற்கு அவனுடைய பலவருட காதல் மரணத்தின் இறுதி நுனி வரைச் சென்று உயிர்ப்பித்தது. யாரை ஹேமா தன் வாழ்வில் அதிகம் வெறுத்தானோ அவளே பின்னாளில் உயிரென மாறிப்போனாள். ஜிட்டு யார் முன்னால் காமெடியனாகத் தோன்றினானோ அவனே அவளின் நாயகனானன். தான் விரும்பியப் பெண்ணையே வீட்டில் பார்த்தும் தவறான புரிந்ததால் தவித்த துஷியின் காதல் அழகாய்க் கை சேர்ந்தது.யாரைச் சந்தேகப்பட்டு அவமானப் படுத்தினானோ அவளின் அருமை புரிந்து அவளை தன் வசப்படுத்தினான் தியா. பல வருட குடும்ப பகையை தன் காதலில் ஒன்று சேர்த்தான் இளங்கோ.எல்லோரும் ஆசைப்படலாம். அத்தனைக்கும் ஆசைப்படு என்றும் ஒருவர் சொல்கிறார். ஆசையே துன்பத்தின் திறவுகோல் என்றார் புத்தர். இங்கே one size fits all செல்லுபடியாகாது.

சிலருக்குச் சரியெனப் படுவது நிச்சயம் மற்றவர்களுக்குத் தவறாகத் தெரியும். அனேஷியா துவாராவிற்குச் செய்ததை துவாராவே மன்னித்து விட்டாலும் விவானால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தியாவை மிரு மன்னித்தது துவாராவிற்குச் சரியெனப் படவில்லை. இருந்தும் இதை அவர்கள் காட்டிக்கொள்ளாமல் இருகின்றனர். சிலரை நாம் மன்னித்தாலும் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை நாம் கொடுக்கமாட்டோம். சரித்திராவின் தந்தைக்கு நிகழ்ந்தது இது. சொந்த மகனின் வாழ்க்கையிலே சூழ்ச்சி செய்ய நினைத்தார் தியாவின் அன்னை. நண்பனின் மகளை தன்னுடைய மகளாய் எண்ணி அவரோடு தொடங்கிய அந்தத் தொழிலில் இன்னும் அவர்களைக் கூட்டாக வைத்துக்கொண்டு இருக்கிறார் துஷியின் தந்தை.

மகன் சிரமப்படக்கூடாது என்று அவனுக்காக இன்னமும் எல்லாம் பார்த்துப்பார்த்து செய்துக்கொண்டு தான் இருக்கிறார் செபாவின் தந்தை. அனைத்தையும் மகனின் பொறுப்பில் விட்டு ஓய்வெடுக்கிறார் விவானின் தந்தை. மகனுக்கு தன்னால் முடிந்த ஆலோசனைகளை தந்து அவனோடு சேர்ந்து தொழில் செய்கிறார் துஷியின் தந்தை. மூன்றும் பாசம் தான். மூன்றும் மூன்று விதம்.

"கைஸ் மண்டபம் அட்ரஸ் கரெக்ட்டா சொல்லுங்கப்பா" என்றான் இளங்கோ.

"லொகேஷன் ஷேர் செஞ்சியிருக்கேன் பாரு" என்றான் ஹேமா.

மண்டபத்தில் வழக்கம் போல் துவாரா, துஷி, விவான், யாழ் ஆகியோர் அவரவர் துணைகளோடு அமர்ந்திருக்க மணவறையில் இருந்த திவே அவர்களை அங்கே அழைத்தான்.

"என்னடா ஒருவேளை இவனும் தாலி எப்படிக் கட்டுறதுனு கேட்பானோ?" என்றான் விவான்.

"ச்சே ச்சே அவ்வளவு தத்தியாவெல்லாம் இருக்க மாட்டான் கலெக்டர்" என்றான் துவாரா.

"யாருடா கேட்டது அப்படி?" என்றாள் யாழ்.

விவான் துவாரா இருவரும் ஒருவர் மற்றவரைப் பார்த்துச் சிரித்தார்கள். அப்போது தான் ஹேமா, இளங்கோ, ஜிட்டு, விவி, தியா, செபா ஆகியோர் தங்கள் இணையோடு அங்கே நுழைந்தனர்.

"ஹே கைஸ் வந்துட்டேனு சொல்லு, திரும்ப வந்துட்டேனு சொல்லு..." என்று அலப்பறையோடு நுழைந்தான் ஜிட்டு.

அப்போது...

இதோடு போதும் என்று நினைக்கிறேன். நிறைய கதை சொல்லியாச்சு. நிறைய கல்யாணம் பார்த்தாச்சு. அதேபோல் அனேஷியா -திவேஷ், யாழ் -பிரவின், விவி -சித்தாரா ஆகியோரின் திருமணம் நடைபெறும் என்றும் இவர்களின் இந்த நட்பு இந்தத் தலைமுறையோடு முடியாமல் வாழையடி வாழையாக இளா, அக்ஷய் (இளங்கோவின் பையன் ) மற்றும் ஏனைய நபர்களின் வாரிசுகளிடமும் தொடரும் என்று கூறி 'நட்பென்னும் முடிவிலியில்' என்ற இந்த முடிவிலியின் பயணத்தை அந்ததோடு நிறைவுசெய்கிறேன். ஆனால் இந்த அந்தமான நட்பென்னும் முடிவிலி என்றும் அடுத்த தலைமுறையை ஆதியாக்கி முடிவிலா முடிவிலியாய்த் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். like two parallel lines always meet at an infinity their friendship will end at nowhere...அதான் நட்பென்னும் முடிவிலியில்...

பதினோரு மாதங்களாக இந்தக் கதையை எழுதினாலும் முதல் நான்கு மாதங்களில் வெறும் பதினேழு அத்தியாயங்களே பதிவிட்டேன். அந்த காலகட்டத்தில் இந்த கதையை தொடரவும் முடியாமல் நிறுத்தவும் முடியாமல் நான் திரிசங்கு நிலையில் தவித்தேன். பிறகு ஒரே மூச்சியாய் எழுத துவங்கி இன்று நிறைவும் செய்துவிட்டேன். நிறைய கதைகள் இருந்தாலும் யாராவது இந்தக் கதையை பற்றி சினாப்ஸிஸ் கேட்டால் என்னாலே தர முடியாது. அதனால் தான் முகப்பில் ஒரு பயணத்தின் கதை என்று மட்டும் போட்டிருப்பேன். என்னுடைய வித்தியாசமான பரீட்சையை முயற்சியில் இதுவும் ஒன்று. இந்தக் கதையை நான் தொடர்ந்து எழுத காரணமாக இருந்த அந்த குறிப்பிட்ட வாசகர்களுக்கு நான் நிறைய நன்றிகளைச் சொல்ல கடமை பட்டிருக்கிறேன். இது வேறு தளத்தில் எழுதிய அனுபவம்.

ஏற்கனவே முடித்தால் இத்தளத்தில் இதை நான் அதிக சிரமமேதும் இல்லாமலே எழுதினேன். இந்தக் கதையைப் படித்து முடித்தவர்கள் இந்தக் கதை பற்றியும் என் எழுத்தைப் பற்றியும் குறை நிறைகளைத் தெரியப்படுத்துங்கள். நான் எழுத்துலகத்திற்கு புதியவன். கடந்த இருபது மாதங்களாகத் தான் நான் எழுதுகிறேன். அதில் இதை ஐந்தாவதாக எழுத ஆரமித்து ஏழாவதாக முடித்தேன். நான் எழுதிய எட்டுக் கதைகளில் மிகப் பெரியதும் அதிக கதாபாத்திரங்கள் கொண்டதும் இதுவே! சில நாட்களுக்குப் பிறகு 'ஆஹா என்ன ருசியில் சந்திப்போம்' நன்றி!
பயணங்கள் முடிவதில்லை...!
 
பயணத்தில் ஆரம்பித்து...
திருமணங்களில் முடிந்தது....
இனி, கல்யாண சாப்பாடை,” ஆஹா, என்ன ருசியில்” ருசிக்க
வெயிட்டீங்.....
நீண்டப் பயணமா இருந்தாலும், சலிப்புத் தட்டாமல் இருந்தது..
பிளாஷ் பேக்குகள், drag பண்ணாமல், சின்னதா, கிரிஸ்பா கொடுத்து இருந்தீங்க..
குறைன்னு ஒண்ணும் எனக்குத் தோணலை...
All the best....
 
பயணத்தில் ஆரம்பித்து...
திருமணங்களில் முடிந்தது....
இனி, கல்யாண சாப்பாடை,” ஆஹா, என்ன ருசியில்” ருசிக்க
வெயிட்டீங்.....
நீண்டப் பயணமா இருந்தாலும், சலிப்புத் தட்டாமல் இருந்தது..
பிளாஷ் பேக்குகள், drag பண்ணாமல், சின்னதா, கிரிஸ்பா கொடுத்து இருந்தீங்க..
குறைன்னு ஒண்ணும் எனக்குத் தோணலை...
All the best....
உங்களுடைய தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி சகி ??நன்றி. விரைவில் ஆஹா என்ன ருசியில் சந்திப்போம். நன்றி
 
Fantastic story.

Romba azhagaana, ivvalavu nanbargal serthu, avangalukku thunaiyum serthu soloist irukkeenga.

emotion, azhugai, nagaichuvai, kaadhal, vanmam, kaathiruppu ivattrudan koodiya friendshipai romba azhagaana, boradikkama soloist irukkeenga sago. Romb, romba enjoy panini padichen.

innum 2 dhadavaiyaavadhu padikkanum Indha storyl ai. Avvalavu pidichirukku
 
நிறைய கதாப்பாத்திரங்கள்.....
பலதரப்பட்ட வெவ்வேறு வகையான குடும்ப, வேலை, சந்தர்ப்ப சூழ்நிலைகள்......
எல்லாவற்றையும் சேர்த்து ,சுவாரஸ்யம் (ஜிட்டு) குறையாமல் , தெரியாத விசயங்களை சொல்லி எங்களையும் ஒரு நீண்ட பயணம் செய்த திருப்தி படுத்திய ஓர் அழகான பதிவு.....
நிறைய இடங்களில் ,படிக்கும் போதே சிரித்து , ஒரு சில தவிர மற்ற நேரங்களில் புன்னகையுடன் படிக்க வைத்த உங்கள் எழுத்து நடை அருமை...
மென்மேலும் நிறைய எழுத,பேர் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி...... ? ? ? ? (y)(y)(y)(y)
 
Fantastic story.

Romba azhagaana, ivvalavu nanbargal serthu, avangalukku thunaiyum serthu soloist irukkeenga.

emotion, azhugai, nagaichuvai, kaadhal, vanmam, kaathiruppu ivattrudan koodiya friendshipai romba azhagaana, boradikkama soloist irukkeenga sago. Romb, romba enjoy panini padichen.

innum 2 dhadavaiyaavadhu padikkanum Indha storyl ai. Avvalavu pidichirukku
மிக்க நன்றி சகி! தொடர்ந்து ஆதரவளித்தவர்களில் நீங்களும் ஒருவர்! என் கதை உங்களுக்குப் பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே! நன்றி... ??
 
Top