Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-12

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-12

சக்தி தன் அத்தை ரேனுகா மடியில் படுத்துக்கொண்டு டிவியில் வரும் நிகழ்ச்சியை பார்த்திருந்தாள்...

வீட்டின் உள்ளே நுழைந்த சிவா...மாம் ஏற்கனவே செல்லம் கொடுத்து அவளை கெடுத்து வச்சிருக்காங்க...நீங்களும் அவளை கொஞ்சிட்டு இருங்க...இந்நேரத்தில சமைக்க கத்துக் கொடுக்கலாமில்ல...ரேனுகாவை திட்டிவிட்டு ரூமிற்கு சென்றான்...

க்கும் அத்தை நீங்க மாமியாரா அவன் மாமியாரா எனக்கு...ஆமா அத்தை சிவாவை எப்படி கூப்பிடுறது...

நான் உங்க மாமாவ பாவா தான் கூப்பிடுவேன்..எங்க வீட்டு வழக்கப்படி..
ஐய்யா பாவா நல்லா தான் இருக்கு...

சரி நான் தேனு வீட்டுக்கு போனா அவ பிரசவம் முடிஞ்ச அப்பறம்தான் வருவேன்...நீ சிவாவ ஒழுங்கா பார்த்துக்கோடா...வெளியே சாப்பிட மாட்டான் சக்தி வீட்டுல சாப்பிடறது தான் பிடிக்கும்... அவனுக்கு பிடிச்சதா செய்...அவனுக்கு பார்த்து பரிமாறு சக்தி..

அத்த சிவா சின்னபிள்ளையா...என்ன இப்படி பழக்கபடுத்தி வச்சிருக்கீங்க...உங்களையே மிரட்டிட்டு போறான்...

அப்படியில்ல சக்தி அவனுக்கு என்மேல அவ்வளவு பாசம்...தன் கண்கள் கலங்க நான்தான் சின்ன வயசில அவன்மேல குடும்ப பாரத்தையே ஏத்திட்டேன்...

அய்யோ அத்தை எதுக்கு இப்படி ஃபீல் பண்ணிறீங்க...இந்த சக்தி பார்த்துப்பா போதுமா..சிரிங்க...

சக்தி...என சிவா கூப்பிட...போய் பாரு சக்தி...

என்ன சிவா...உங்க அம்மா வீட்டுக்கு போகலையா சக்தி ,கோதை அத்தை உன் ஞாபகமா இருக்கு சொன்னாங்க..இன்னைக்கு சனிக்கிழமை தானே காலேஜ் வேற லீவ்...

அது சிவா...அக்கா என்கிட்ட முகம் கொடுத்து பேச மாட்டுது..எப்படி போகறது யோசிக்கிறேன்...

அதுக்கு பேசா இருந்திடுவியா சக்தி...பிரச்சனை பார்த்து ஒதுங்கி போகாதே... அதற்கு தீர்வு என்ன யோசி...ப்ராபளம் எங்கியோ அங்கதான் அதை தீர்க வழியும் இருக்கு.. பேசு உங்க அக்காகிட்ட... தெளிவா பேசனும் புரியுதா...

தயா வேற அடிக்கடி கெஸ்ட் ஹவுஸ்லே இருக்கான்...மனோ சரிக்கிடையாது..தினமும் மது இப்ப மாதுவும்...புரியும் நினைக்கிறேன்...

ம்ம்ம் சரி நான் ரெடியாகுறேன் போகலாம் சிவா...

இருவரும் கருணா வீட்டுக்கு சென்றார்கள்...கோதையை கையில் பிடிக்க முடியல..மாப்பிள்ளை வந்திருக்காரு...அவர்களை வரவேற்று குடிக்க ஜூஸ் கொடுக்க...அத்தை எனக்கு வெளியே கொஞ்சம் வேலையிருக்கு...போயிட்டு வரேன்..சக்தியை பார்த்து தலையை அசைத்துவிட்டு சென்றான்...

என்னம்மா வீட்டை இப்படி வச்சிருக்க...என்ன செய்றாங்க காஞ்சனாக்கா.... கிச்சனும் கீளீனா இல்ல...எங்க வீடு எப்படி வச்சிருக்கோம் தெரியுமா...ஒண்ணும் சரியில்ல...

கருணாவும் வீட்டிற்குள் வர..வாம்மா சக்தி...அப்பா... அவரை அனைத்துக் கொண்டாள்...
என்ன சரியில்ல சக்தி..

வீடுதான்ப்பா...அப்பறம் நம்ம தோட்டத்தில சில சேன்ச் செய்யனும்...

ஏன்டி நம்ம கிச்சன் இப்படிதான் இருக்கும்..உன் புருஷன் வீட்டுக்கு போனாலும் போன ரொம்பதான்...சரி நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்...

நீங்க உட்காருங்கம்மா...நான் எல்லோருக்கும் போட்டு வரேன்...

தயாவின் அத்தை வள்ளி வர...என்ன சக்தி பாவம் இங்க வேலை செஞ்சி பழக்கமில்ல இப்போ ரொம்ப வேலையோ உன் புருஷன் வீட்டில...சாப்பாடு ஒழுங்கா போடுறான்னா பால்காரன்...அதுவுமில்லையா...

அத்தை என் வீட்டை வந்துப் பாரு இந்த ஜில்லாவிலே அந்தமாதிரி பார்த்திருக்க மாட்டே...காலையிலே எங்க அத்தை தான் சாப்பாடே ஊட்டி விட்டாங்க...என் தோழி, எங்க அத்தை...ஒரு சிலர் மாதிரி குத்தி பேச தெரியாது...

உனக்கா பேச கத்து தரனும்...

ம்ம் இப்ப சிவா பொண்டாட்டி பார்த்து பேசு...இந்தா காபி...

நல்லா இருக்குடா காபி...சக்தியின் கண்ணத்தை தடவி.. என் செல்லம் நல்லாயிருப்படா...தன் பெண் பொறுப்பாக புகுந்தவீட்டை விட்டுக்கொடுக்காமல் பேசுவதை பார்த்து பூரித்து போனார் கருணா.

அக்கா எங்கம்மா... ரூமில் இருக்கா சக்தி...

கதவை தட்டி உள்ளே சென்றாள்...எதையோ நினைத்த படி பெட்டில் உட்கார்ந்திருந்தாள் தேவி...அக்கா என்று சக்தி அழைக்க...

வா சக்தி நல்லாயிருக்கியா...அவ்வளவுதான் அவ பேச்சு...

நான் பேசனும்க்கா..அவளை நிமிர்ந்து பார்த்தாள்..என்ன பேச இருக்கு எல்லாமே முடிஞ்சிடுச்சு...அவங்களுக்கு அவங்க சந்தோஷம்..

ஆமாம் அக்கா...ஒருத்தருடைய இன்பம் ,துன்பம் அவங்க கையில்தான் இருக்கும்...இன்னொருத்தருக்கு அள்ளிக் கொடுக்க முடியாது...
நீ நல்லாதான் பேசுவ...ஏன்னா உனக்கு பிடிச்சவனோடு கல்யாணம் செஞ்சிட்டே..
அதையே தான் நான் கேட்கிறேன்கா..உனக்கு பிடிச்சவனோட தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் குறுக்க வரலையே. இப்ப எப்படி அவரை விட்டுதர...
சரிக்கா...எனக்கும் குழந்தை பிறக்கலைன்னா..மாமா அப்ப ஸ்ரீயை மூனாவதா கட்டிக்க கேட்பாராக்கா...

சக்தி....

நான் பேசி முடிக்கிறேன் முதல்ல...இரண்டு பேரும் டாக்டர கன்சல்ட் பண்ணுங்க கவுன்சிலிங் போங்க...உனக்கு அப்பவும் குழந்தை வேணுமா..என் வயிற்றில் பிறக்கும் பிள்ளையை வளர்த்துக்கோ..எப்படியும் குழந்தையை வளர்க்கனும் நம்ம குடும்பத்து வாரிசு தான் வேணும் மாமா சொன்னாரு...சிவா குழந்தையை வளர்த்துக்கோ...

சக்தி...

அக்கா நீ படிச்சவ தானே..குடும்பத்துக்கு முதல் பொண்ணுக்கா நீ...நீதானே பார்த்துக்கனும்...இந்த உலகம் இப்படிதான் நம்மகிட்ட இல்லாததை பேசிட்டு... வருந்தப்பட்டதை பார்த்து ரசிப்பாங்க..விட்டுதள்ளுக்கா உனக்காக வாழ, மற்றவர்களுக்காக வாழாதே... அப்பா ஸ்கூல் நடத்த கஷ்டப்படுறாங்க...நீ போய் அங்க அட்மின் பண்ணுக்கா...அங்கிருக்க குழந்தைகளை பார்த்தா மனசு ஃப்ரீயாகும்...
தேவியின் முகத்தில் தெளிவு வர...போறேன் சக்தி நானும் வெளியே போனா தான் ரிலாக்ஸ் ஆக முடியும்...அக்கா அப்பறம் மாமா குடிக்கிறாரு...சில விஷியங்கள் பேச...

சரி நான் பார்த்துக் கிறேன் எப்படி இருக்கிறாரு உன் மாமா சிவா...

என்னுடைய சுயநலத்துக்காக ஒருத்தனுடைய வாழ்க்கையே பலியாகிட்டேன்.
என்னடி சொல்லுற...

ம்ம்...அக்கா நான் சிவாவ லவ் பண்ணுல..அன்னிக்கு நம்ம பிரச்சனையால..அவன் வாழ்க்கையை தான் நரகமாகிட்டேன்...தனக்கு பொண்டாட்டியா வரவ எப்படியிருக்குனும் கணவு கண்டுயிருப்பான்... அன்னிக்கு எல்லாத்தையும் நான் கலைச்சிட்டேன். எனக்கே தெரியுது நான் அவனுக்கு பொருத்தமில்ல.. இப்பக்கூட உன் வாழ்க்கை வீட்டிலே முடங்க கூடாதுன்னு சிவாதான் பேச சொன்னான். சரி நீ ஃபீல் செய்யாத அவனுக்கு என்னைய எப்படி சமாளிக்கிறது தெரியும்... சாப்பிட போலாம் வாக்கா...

கீழே தன் அப்பாவிடம் தேவி... நான் ஸ்கூலை பார்த்துக்கிறேன்ப்பா...

வள்ளி,என்ன தேவி இப்படி சொல்லுற...குழந்தை பெத்துக்க வழியை பாரு அதவிட்டு வேலையெல்லாம் வேணாம், அதான் தயா பார்க்கிறானில்ல...

குழந்தை எப்ப பெத்துக்கனும் எனக்கு தெரியும் உங்களுக்கு அவசரமன்னா... அப்பா மாமாவுக்கு நான் டைவர்ஸ் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க...தேவி சொல்லுவதை கேட்டு சக்தியை முறைத்தாள் வள்ளி..இந்த பிசாசு ஏதாவது சொல்லி கொடுத்திருக்கும்...

கருணாவிற்கு மகிழ்ச்சியே தன் பெரிய பெண் தெளிவா பேசுவதை கேட்டு...

சிவா வந்திருக்க அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்...சக்தி கிளம்பலாமா சிவா கேட்க...இன்னிக்கு நைட் இங்க தங்கிங்கோங்க மாப்பிள்ளை என்றாள் கோதை...
அத்தை வீட்டில வேலையிருக்கு....

சக்தியாவது இங்க தங்கட்டுமே...

அது..அது இன்னொருநாள் வந்து இருக்கோம்...

பொண்டாட்டி விட்டு இருக்க முடியல சிவாவால- தேவி

கோயில் சுற்றத நிறுத்திட்டு கொஞ்சம் தயாவா சுற்றுங்க அண்ணி...

எல்லோருக்கும் பொருந்தும் தானே சிவா...

அண்ணி உங்க தங்கச்சி என்னை சுற்ற நாள் இருக்கு...

வா சக்தி கையை பிடித்து காரில் ஏற்றினான்...

ஏய் சிவா இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்ன பண்ண போறே...

ஒண்ணு கிடையாதுல்ல...அப்பறம் என்ன பில்டப்பூ...

இங்க பாரு நைட்ல புருஷன்ன விட்டு தூங்க கூடாது, இனிமேல் இதையும் பாலோ பண்ணு...

அடுத்த நாள்... லாங் மிடி மினி ஷர்ட் போட்டு ரெடியானால் டூ வீலர் கற்றுக்கொள்ள...
ரெடியா சக்தி...ம்ம்...

உட்காரு...இது ஆக்ஸலெட்டர்...ஆட்டோ ஸ்டார்ட்...இது பிரேக்...சைக்கிள் ஒட்ட தெரியுமா...
எல்லாம் தெரியும்..

சரி உட்காரு...சாவி போட்டு ஸ்டார்ட் செய்..சொல்லி அவள் பின்னாடி உட்கார்ந்தான்...

நேரா உட்காரு..ரோட பாரு...ம்ம் என்று தலையை ஆட்டினாள் அவள் பக்கத்தில் நெருங்கி உட்காரும் வரை...

பின்னாடியிருந்து கையை விட்டு அவள் கைமேல் வைத்து இப்படிதான் லைட்டா ரைஸ் செய்...

நேரா உட்காரு ஏன் இடுப்ப வளைக்கிற...சிவா பேச பேச அவள் காதோரம் மீசை தீண்ட..அவன் மூச்சு காற்று முதுகில் பட...நெளிய ஆரம்பித்தாள்...

பாவா...ம்ம்..என்ன சொன்ன சக்தி...

பாவா...கூச்சம்மா இருக்கு கிசுகிசுக்க..

ஏய் வண்டியோட்டும் போது கவனம் முக்கியம்...இவன் சொல்லும் போது சிவாவின் உதடு அவளின் கண்ணம் தீண்ட கண்ணை மூடி தன்னை மறந்தாள்.

ஏய் கண்னை மூடிட்டு வண்டி ஓட்டாதேடி...நாய் கிராஸ் ஆகுதுடி...பிரேக்க பிடி..அவள் பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்த எங்கே பிடிப்பது தெரியாமல் இடுப்பை பிடித்தான்...
பாவா...என்று சக்தி திரும்பி சிவாவை பார்க்க...சிவாவின் முகம் தீப்போல் சிவக்க...ஐய்யோ கோவம் வந்துடுச்சு..சக்தி சுதாரிச்சிகோ

ஏய் என்று சிவா வாயை திறக்க...என்ன சிவா நீ டச் பண்ணுற..நான் கன்ட்ரோலு சொல்லிட்டு இதோ என் காதுல மூக்க தேய்கிற..என் கண்ணத்தில உன் லிப்ஸ் படுது..என்ன நினைச்சிருக்க. வண்டியோட்ட மட்டும் கத்துக்கொடு...சும்மா அங்க அங்க கையை வைக்கிறது..இப்ப பாரு என் இடுப்புல கையை வைக்கிற...

நான் அந்த மாதிரி பொண்ணுல்ல தெரியுமா...

அடிப்பாவி...அப்படியா மகாராணி... வண்டிய தள்ளிட்டே வீட்டுக்கு வா...நான் போறேன்...யாருகிட்ட உன் நடிப்பு...

பாவா..சிவா பாவா...

என்னடி புதுசா பாவா...

ம்ம்...அது அத்தை சொன்னாங்க மாமாவ பாவா கூப்பிடுவாங்களாம்...

இதுக்கு சிவாவே பரவாயில்ல...சரி தள்ளிட்டு வா...

சிவா..இங்க பாரேன் எனக்கு கூச்சமா இருந்துச்சா அதான் கண்ணை இறுக்கி முடிக்கிட்டேன்...இனிமே அப்படி செய்ய மாட்டேன் ப்ராமிஸ்...

சரி ஒழுங்கா கத்துக்கனும்..சரி சிவா நீ சீரியஸா கத்துக்கொடு...நான் ரொமன்ஸா தெரிஞ்சிக்கிறேன்... சில கொட்டு, முதுகில் சில அடிகள் வாங்கி ,எப்படியோ ஒரு வாரத்தில் வண்டியை கற்றுக்கொண்டாள் சக்தி..

என்ன பாப்பா வண்டியை ஒட்ட தெரிஞ்ச பிறகு..வண்டியிலே பறக்கிற இவ்வளவு பாஸ்ட்டா வேற ஒட்டற...

டேய் சித்தப்பூ, நான் உன் மச்சான்கிட்ட பட்டபாடு வண்டியே அழுதுடுச்சி...அடுத்த வாரம் கார் ஒட்ட கற்றுதரேன் சொன்னான்... நான் அவன் கால்லே விழுந்துட்டேன்..என்னைய விட்டுட்டு சிவா...

எப்படியிருந்த எங்க பாப்பா இப்படி ஆயிடுச்சே... சரி ஒரு நல்ல விஷயம் பாப்பா....பக்கத்து ஊர்ல கேரளா மாந்திரிகன் வந்திருக்காராம்...அவர் வசிய மை கொடுக்கிறாராம்...

ஹய்யா... செம எப்போ வாங்கிட்டு வர சித்தப்பூ...

-தெறிக்க விடுவான்...
 
Top